வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகமும, கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த கலாசார விழாவானது நேற்று(28.11) வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ்,
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஷ்ணானந்தன் ஆகியோருடன் துறைசார் கலைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் கலைஞர் கௌரவிப்பும் ‘வவுனியம்-3’ நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய ‘மனிதர் நேசிக்கும் சுகாதாரமிக்க சுற்றாடலை உருவாக்குவோம்’ எனும் கருப்பொருளில் வவுனியா நகரில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியா பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இச் சிரமதானப் பணியில் வவுனியா நகர வாழ் வர்த்தகர்கள், பொதுமக்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருடன் இணைந்து வர்த்தக சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கமும் முன்னெடுக்கும் இச் சிரமதானப் பணி நாளை (30.11.2019) சனிக்கிழமை 8 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலைய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.
வருகின்ற திங்கட்கிழமை (02.12.2019) முதல் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்புறச் சூழலை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு எவ்வித பொதுமன்னிப்புக்களுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இச் சிரமதானப் பணியில் வர்த்தகர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்ஸை வரை பயணத்தை மேற்கொண்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் கடந்த 27ம் திகதி குருநாகல் கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் 4 புகையிரத பெட்டிகள் சேதமடைந்தடைந்ததுடன் புகையிரத வீதியும் பாதிப்படைந்திருந்தது. இதன் காரணமாக இரு நாட்களாக (27,28) வடக்கிற்கான புகையிரத சேவையும் பாதிப்படைந்திருந்தது.
இந்நிலையில் புகையிரத வீதி புனரமைக்கப்பட்டு வடக்கிற்கான புகையிரத சேவை வழமைக்குத் திரும்பிய நிலையில் கொழும்பிலிருந்து இன்று (29.11) காலை 5.45 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் காலை 11.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்ததுடன் 11.35 மணியளவில் காங்கேசன்துறை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.
மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போ ராளி ஒருவர் மாவீரர் தினமான நேற்று முன்தினம் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு காளிகோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புற பகுதியில் இருந்தே குறித்த ச டலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பிரிவின் காணி பிரிவில் கடமையாற்றிய கானகன் என இயக்கத்தில் அழைக்கப்படும் சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் என்னும் 47வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இறுதிப் போ ர் வரையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வன்னியில் செயற்பட்ட இவர் பின்னர் குடும்ப வாழ்வில் இணைந்து இயல்பு வாழ்க்கையில் இருந்துவந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பி ரச்சினை காரணமாக ஆரையம்பதிக்கு வந்து உறவினர் வீட்டில் வசித்துவந்த அவர் வறுமை நிலை மற்றும் இறுதி யுத்தம் தொடர்பில் ம ன அ ழுத்தங்களுக்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு சிறு வயதில் இரண்டு பிள்ளைகளும் வறுமை நிலையில் வன்னியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை உடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து பேர் உ யிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 172 குடும்பங்களை சேர்ந்த 614 பேர் பா திக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், 61 குடும்பங்களை சேர்ந்த 203 பேர் பா துகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக 56 வீடுகள் பகுதியளவு சே தமடைந்துள்ள நிலையில், இரண்டு வீடுகள் முழுமையாக சே தமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உ யிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மன்னார் நகரில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இ டியுடன் கூடிய காலநிலையின் போது ஏற்படும் பா திப்புகளில் இருந்து பா துகாத்துகொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கனடாவில் தமிழ் பெண்ணொருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 28 வயதான தாஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே கா ணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லாண்ட் அவென்யூ மற்றும் எக்ளிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இனங்காணப்பட்டுள்ளார்.
இவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை ரொரன்றோ பொலிஸார் கேட்டுள்ளனர். 8 வயதான தாஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே கா ணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து க டத்தப்பட்டு ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து க டத்தப்பட்ட அவரது ச டலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போ டப்பட்டிருந்தது. சி த்ரவதை செய்யப்பட்ட கா யங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கொ லைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. இதேவேளை, இந்த ப டுகொ லை விவகாரம் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாததானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. இலங்கையில் முதலீடு செய்வதற்காக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பா ரிய அ ச்சத்தை இந்தப் ப டுகொ லை பற்றிய செய்தி தோற்றுவித்திருக்கின்றது.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது ஆட்சிகாலத்தில், நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட ஒரு மில்லியன் டொலர் பணத்தை தமது கணக்கில் வைப்பு செய்த சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரது ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் அபிவிருத்திக்காக தீவுகள் பலவற்றை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட்டதன் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை மோ சடி செய்துள்ளதாக தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து, ஐந்து பேரடங்கிய விசாரணை குழு, விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அப்துல்லா யமீன் இந்த பணத்தை பெற்றுக்கொண்டமை உறுதி செய்யப்பட்டது. இதற்கமைய அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனையும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் அ பராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைத்தளமான பேஸ்புக் இலங்கையில் மு டங்கியிருப்பதனால் அதன் பயனர்கள் கடும் அ திருப்தி அடைந்துள்ளனர். பராமரிப்பு வேலைகளுக்காக பேஸ்புக் சற்று நேரத்துக்கு முடங்கியிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வழமைக்குத் திரும்பும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவில் இவ்வாறு பேஸ்புக் இவ்வாறு மு டங்கியிருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக கைத் தொலைபேசிகளில் வழமை போன்று இயங்கும் பேஸ்புக் கணனிகளில் மு டங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் சிறிது நேரத்தில் இது வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மு டங்குவது தொடர்பில் பயனர்கள் தங்கள் அ திருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள்.
வவுனியா நகரசபையுடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் வவுனியாவை பசுமையான நகராக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே மரங்களை நாட்டும் வைபவம் இன்று (28.11.2019) காலை இடம்பெற்றது.
நகரசபை தலைவர், செயலாளர், உறுப்பினர், பொலிஸ் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர் எனப் பலரும் இணைந்து நாட்டிவைத்த மரத்தின் நிலமை தற்போது க வலைக்கிடமாக மாறியுள்ளது.
வவுனியா வர்த்தக சங்கத்தினரின் முயற்சி வவுனியா நகரசபையினரின் அ சமந்தப் போக்கினால் நாசமாக்கிப் போகும் நிலமை ஏற்பட்டுள்ளது.
இன்று (28.11) இரவு 8.30 மணியளவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே நாட்டப்பட்ட மரங்களை கட்டாக்காலி மாடுகள் சே தமாக்கியுள்ளன.
வவுனியா நகரசபையினரே கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் உங்கள் பார்வை திரும்புமா? எப்போது வவுனியா நகர் அழகாக மாறும் நகரசபையின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் மக்கள்.
10க்கு மேற்பட்ட மாடுகள் குறித்த மரங்களின் இலைகளை பிடுக்கி சாப்பிடும் காட்சிகள் எமது கமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது. ஆதாரத்திற்காக புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கப்பட்ட பின்னர் மாடுகள் அங்கிருந்து ஊடகவியலாளர்களால் விரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், மத்திய பிரதேஷம் மாநிலம் போபாலை சேர்ந்த நபர் ஒருவர் தன் மனைவியின் காதலுக்காக திருமண வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்.
போபாலை சேர்ந்த மகேஷ் என்பவர் மென்பொருள் பொறியியலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். மகேஷ் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா கடந்த 7வருடங்களாக fashion designer பணிபுரிந்து வருகிறார்.
அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்த குடும்பத்தில் திடீரென்று மகேஷ்க்கு தெரிந்த உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சங்கீதா திருமணத்திற்கு முன் மற்றொருவருடன் காதலில் விழுந்துள்ளார்.
அதற்கு சங்கீதாவின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்ததால், மகேஷை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சங்கீதா தன்னிடம் திரும்ப வருவார் என்று எண்ணி அவரை காதலித்த நபர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துள்ளார்.
இதனை அறிந்த சங்கீதாவிற்கு அவருடன் இணைந்து வாழ ஆசை ஏற்பட்டுள்ளது. இதை அனைத்தையும் அறிந்து கொண்ட மகேஷ் இருவரின் புரிதலோடு பிரிய முடிவு செய்துள்ளார். அதன்படி நீதிமன்றத்தை நாடிய அவர்களுக்கு சில காலம் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சங்கீதா அவரது காதலரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால், தற்போது விவாகரத்து பெற இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி குழந்தைகளை மகேஷ் பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சங்கீதா குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்து செல்லலாம் என்றும் அவர் அனுமதி அளித்துள்ளார். இச்சம்பவம் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அனுராதபுரத்தில் ஹெ ரோயின் பக்கட் தயாரித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் சுற்றி வளைத்தமையினால் பெண்ணொருவர் அதனை விழுங்கியுள்ளார். அநுராதபுரம் மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தை மற்றும் அனுராதபுரம் – யாழ்ப்பாணம் வீதி சந்தி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தையில் தங்கியிருந்த பெண்ணே இவ்வாறான மோ சமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் குறித்த பெண் ஹெ ரோயின் பக்கட் தயாரிப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் நுட்பமாக பெண்ணின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
பெண்ணை கைது செய்ய பொலிஸார் சென்ற போது அவர் தயாரித்துக் கொண்டிருந்த ஹெ ரோயின் பக்கட்களை பாரியளவில் விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணால் பக்கட் தயாரிக்க முடியாமல் போன எஞ்சிய ஹெ ரோயியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபரான பெண் ஒரு காலை இழந்த ஊ னமான நபர் எனவும் அவரது கணவனுடன் இணைந்து ஹெ ரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 42 வயதுடைய பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அலங்கரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நகரங்களில் இருக்கும் சகல பிச்சைக்காரர்களையும் முகாம் ஒன்றுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே இதற்கு தேவையான ஆலோசனைகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நடமாடுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது நகரங்களில் அலங்காரத்திற்கு ஏற்படும் சிக்கலான நிலைமை தொடர்பாக கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது போக்குவரத்து சாதனங்களில் பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட காரணம் எனவும் பேசப்படுகிறது.
பிச்சைக்காரர்கள் ரிதியகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மகரகமை பொலிஸார் நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய இப்படியான யாசகரை ரிதியகம முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் வாழ்ந்த பிச்சைக்கார்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளின் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பொது அறிவு வினாடி வினாப்போட்டி இன்று (28.11.2019) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற பொதுஅறிவு வினாடி வினாப் போட்டியில் 15க்கு மேற்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இப் போட்டிகளின் பிரதான நடுவராக வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் நடுவர்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜனாத்தனி , கோமளா ஆகியோர் பங்குவகித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா பொலிஸாரினால் பல்வேறு செயற்றிடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வவுனியா கண்டி வீதி மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் வவுனியா பொலிஸாரினால் இன்று (28.11.2019) காலை 10.30 மணியளவில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னேடுக்கப்பட்டது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் பொலிஸாரினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை வளாகத்தினை டெங்கு அற்ற பகுதியாக மாற்றும் செயற்றிட்டத்தில் தொழிற்பயிற்சி மாணவர்களுடன் இணைந்து பொலிஸாரும் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.