வவுனியாவில் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு!!

பத்து இலட்சம் மரக்கன்றுகள்

வவுனியா சிதம்பரபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று (22.11.2019) காலை அலியன்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் வவுனியா கிளை முகாமையாளர் தலைமையில் பசுமைப் போர்வையை மீண்டும் புத்தாக்கம் செய்வதற்கும் எதிர்காலச் சந்ததியினருக்குச் சிறந்த ஒரு சூழலை உருவாக்கும் மரம் நாட்டும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் முக்கோட்பாட்டுத் தத்தவத்திற்கு அமைவாக பசுமைச் சூழலைப் பாதுகாப்பதற்கும் புவியின் தட்பவெப்ப நிலையை நிலையான தன்மையில்பேணிப் பாதுகாக்கவும் இன மத மொழி என்பனவற்றைக் கடந்து ஒற்றுமையை நிலைநாட்டும் நோக்குடன் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாடாளாவிய ரீதியில் முப்படையினருடன் இணைந்து நாட்டுவதற்கான செயற்திட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இதன் முதற்கட்டம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் சர்வ மதத்தளங்களில் உத்தியோகபூர்வமாக நாட்டிவைக்கப்பட்டது.

குறித்த நிறுவனத்தினால் இரண்டாவது தடவையாகவும் இவ்வருடத்தில் மரநடுகை மாதத்தை முன்னிட்டு பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டிவைக்கும் இந்நிகழ்வில் நிறுவனத்தின் ஊழியர்கள், ஆலய மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் : கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு!!

மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்கீழ் விரைவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தாம் கலந்தாலோசித்து வருவதாக அவர் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சத்திய பிரமாணத்தின்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று இடம்பெற்ற அமைச்சரவை பதவிபிரமாணத்தின்போது பா துகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குத்துறைக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தா க்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தெரிவித்திருந்தது.

எனினும் புதிய ஜனாதிபதியின் சமூக செலவீனங்கள் மற்றும் அரச பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் அது இலங்கையின் பொது நிதியை பாதிக்கும் என்று பிட்ச் ரேட்டிங் நேற்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

திடீரென வீசிய காற்றினால் ஒருவர் ப லி!!

வீசிய காற்றினால்..

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் இன்று அதிகாலை வீசிய சுழல் காற்றினால் ஒருவர் ம ரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

இதன்போது, கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும் பாடசாலை வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பரே உ யிரிழந்துள்ளார்.

கடைத் தொகுதியை பராமரிக்கும் குறித்த நபருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீசிய சுழல் காற்றினால் வீட்டின் சுவர் பகுதி குறித்த நபரின் தலையில் இடிந்து விழுந்தமையால் ஸ்தலத்திலேயே அவர் உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்த நபரின் ச டலம் மட்டக்களப்பு மாவட்ட கு ற்றத் த டுப்பு பிரிவினரின் விசாரணையின் பின்னர் இன்று மாலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பி ரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் 305 பேருக்கு டெங்கு நோய் : அதிகரிக்கும் டெங்கு தாக்கம் : மக்களே அவதானம்!!

அதிகரிக்கும் டெங்கு

வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். டெங்கு நோயின் தாக்கம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த 3 மாத காலப்பகுதியில் 305 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா நகரம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், ராணி மில் வீதி, வைரவபுளியங்குளம், கற்குழி, தேக்கவத்தை, உள்வட்ட வீதி, சந்தை சுற்றுவட்டம் போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அவதானிக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டெங்கு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கனவில் வந்து சொன்ன வார்த்தை : 10 அடி ஆழத்தில் சாமியார் செய்யும் ஆச்சரிய செயல்!!

சாமியார் செய்யும் ஆச்சரிய செயல்

தமிழகத்தில் கனவில் தோன்றிய மகான் சொன்ன வார்த்தைக்காக, சாமியார் ஒருவர் 10 அடி ஆழ குழிக்குள் பிரார்த்தனை செய்து வரும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு திருமணம் ஆன நிலையில், குடும்பத்தை பிரிந்து கடந்த 25 ஆண்டுகளாக துறவறம் மேற்கொண்டுள்ளார்.

அதோடு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு யோகா மற்றும் ஆன்மிக விஷயங்களையும் கற்று கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டார். அங்கு இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று அவருடைய கனவில் தேன்றிய மகான் ஒருவர்,

உலக நன்மைக்காக நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்துள்ளார்.

இதையடுத்து அமர்நாத் புனித யாத்திரை முடிந்து சில வாரங்களுக்கு முன்பு நல்லிக்கவுண்டன்புதூர்க்கு வந்த விஸ்வநாதன் நீளமாக தாடி வளர்த்த படி ஆளே அடையாளம் தெரியாமல் வித்தியாசமாக காணப்பட்டுள்ளார்.

அவர் தன்னுடைய பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சாமி எனவும் மாற்றிக்கொண்டார். இதையடுத்து 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக அங்கிருக்கும் கிராம வாசிகளிடம் கூற, ஒரு சிலர் இவர் ஏதோ நடிக்கிறார் மறுத்துள்ளனர்.

அதன் பின் திடீரென இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் 50-க்கும் மேற்பட்டோர் கார்களில் நல்லிக்கவுண்டன்புதூர் வர, அவர்கள் உதவியுடன் 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலிங்கத்தை விஸ்வநாதன் பிரதிஷ்டை செய்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 17-ஆம் திகதி இரவு முதல் அவர் அந்த குழிக்குள் இறங்கி சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்து வருகிறார்.

பின்னர் தியானம் இருந்தபடி தனது மவுன விரதத்தை தொடங்கினார். சாமியார் மவுன விரதம் இருப்பதால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் ஒரு வெள்ளைத்தாளில் பதில் எழுதி கொடுத்து வருகிறார்.

தொடர்ந்து 48 நாட்கள் குழிக்குள் விரதம் இருந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். குழிக்குள் இருந்த படி அவர் சிவலிங்கத்தை வழிபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக, பலரும் அவரை காண்பத்தற்கு செல்கின்றனர்.

வவுனியாவில் பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : மீள இடம்பெறவுள்ள பரீட்சை!!

மீள இடம்பெறவுள்ள பரீட்சை

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 10 மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆண்டிறுதிப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை வினாத்தாள் வெளியாகியமையால், அப்பரீட்சை மீள நடைபெறவுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்கள வலயக்கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 11, தரம் 10, தரம் 9 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆண்டிறுதிப் பரீட்சை நடத்தப்பட்டு வருகின்றது.

இதில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற தரம் 10 மாணவர்களுக்கான ஆங்கில பாட பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஊடாக வவுனியாவில் வெளியாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பரீட்சையானது எதிர்வரும் செவ்வாய் கிழமை மீள நடைபெறும் என வடமாகாண கல்வித் திணைக்கள வலயக்கல்விப் பணிமனை ஊடாக பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வினாத்தாள் வெளியாகியமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதிக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை!!

ரணில் விடுத்துள்ள கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் பா துகாப்பை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் வ ன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு தேர்தலின் போது மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் மக்களின் ஜனநாயக உ ரிமைகள் பா துகாக்கப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் ரணில் விக்ரமசிங்க அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

எந்தவொரு அமைச்சரும் கு ற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். இதன்போது அமைச்சர்களை வாழ்த்தி உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நியமிக்கப்படவுள்ள புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு, அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு வழங்க வேண்டும். இராஜாங்க அமைச்சர்கள் கையொப்பமிட மாத்திரமே பழக்கப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறான குற்றச்சாட்களில் சிக்காமல் சிறந்த முறையில் ஒத்துழைப்புடன் பணியாற்றுங்கள்.

இளம் உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய சிறிய அமைச்சரவை ஒன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் கொள்கைக்கமைய பணி செய்யுங்கள். நட்டம் அடைந்த நிறுவனங்களை இலாபம் அடையும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பிரதேசங்ளிலும் உள்ள கு றைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் அறிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பார்கள். எனக்கும் பிரதமருக்கும் ஆதரவு வழங்கி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

நட்பு காதலாக மாறிய அழகிய தருணம் : மைனா நந்தினியின் காதல் – கல்யாண சுவாரஸ்ய கதை!!

மைனா நந்தினி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் ‘மைனா’ என்ற கேரக்டர் மூலம் பிரபலமானவர் தான் நந்தினி.

இவருக்கு யோகேஷ்ற்கும் சில நாட்களுக்கு முன்பு தான் கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நந்தினி சீரியல்களில் பிஸியாக இருந்தபோதே, சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து க ருத்து வே றுபாடு உண்டாகி பிரிந்து வாழ்ந்த நிலையில் கார்த்திக் தி டீரென த ற்கொ லை செய்து கொண்டார்.

இதன் பிறகு நந்தினி சில மாதங்கள் டிவி, சினிமாவை விட்டு ஒ துங்கியிருந்த போது அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மறுபடியும் அவரை டிவி பக்கம் வரவழைத்தனர்.

தற்போது இவருக்கு இரண்டாவது முறையாக சென்னை சேப்பாக்கத்தில் கோயில் ஒன்றில் எளிமையான முறையில் நவம்பர் 11 திகதியன்று நந்தினிக்கும் யோகேஷ்வராம்க்கும் திருமணம் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து தனது காதல் டு கல்யாண வாழ்க்கையை பற்றி யோகேஷ் கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைப்பெற்ற ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிய போது தான் நந்தினிக்கு அறிமுகமானார்.

எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது, ஆரம்பத்தில் எங்களுக்குள் நட்பு மட்டுமே இருந்தது. போக போக அது காதலாக மாறியது. அந்த விருப்பத்தை நந்தினியிடம் சொல்லத் த யக்கமாக இந்த போது என்னுடைய விருப்பத்தை முதலில் என் வீட்டில் கூறினேன்.

கடந்த கால வாழ்க்கையிலிருந்து நந்தினி மீண்டு வந்துட்டாங்களா இல்லையா எனவும் நந்தினிக்கு சம்மதம் என்றால் மட்டும் திருமணத்தை பற்றி பேசுங்கள் என்றேன். அதே போல இரு வீட்டார் கலந்து பேசி எங்கள் கல்யாணத்தை முடிவு செய்தனர்.

மேலும் கடைசி வரை இந்த நட்பு வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்று நானும் எனது சம்மதத்தை தெரிவித்தேன் என்றார் நந்தினி. இப்படிதான் எங்கள் காதல் நட்பு ரீதியாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்துள்ளது என மைனா நெகிழ்சியுடன் கூறினார்.

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் : முழுமையான விபரம்!!

புதிய அமைச்சர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதற்கமைய நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராக ஜனக்க பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன் அ​மைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சராக விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சராக ரமேஸ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கணவரை பி ரிந்து தனியாக வசித்த பெண் மருத்துவர் ஊசி போட்டு த ற்கொ லை : தந்தை வெளியிட்ட அ திர்ச்சித் தகவல்!!

சோனம் மோட்டீஸ்

இந்தியாவில் பெண் மருத்துவர் தனக்கு தானே ஊ சி போ ட்டு கொண்டு த ற்கொ லை செய்த வழக்கில் அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஷிகர் மூர் என்ற மருத்துவருக்கும், சோனம் மோட்டீஸ் (29) என்ற பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட க ருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த சோனம் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் நேற்று காலை சோனம் தந்தை லால் மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை, இதையடுத்து சோனம் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

அவர் பொலிசார் உதவியுடன் உள்பக்கமாக பூட்டியிருந்த சோனம் வீட்டை உடைத்து உள்ளே பார்த்த போது படுக்கையில் சோனம் ச டலமாக கிடந்தார். அவர் அருகில் ஊ சி இருந்தது, விசாரணையில் அ ளவுக்கதிமான ம ருந்தை ஊசியில் ஏற்றி செலுத்தி கொண்டு சோனம் த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் சோனம் த ற்கொ லைக்கு அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் காரணம் என லால் பொலிசில் புகார் அளித்துள்ளதுடன் இது தொடர்பில் தி டுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். அவர் கூறுகையில், திருமணமான சில நாளிலேயே தனது கணவர் ஷிகர் போ தை ப ழக்கத்துக்கு அ டிமையானவர் என்பதை சோனம் தெரிந்து கொண்டார்.

ஒருமுறை சோனமுக்கு வற்புறுத்தி க ஞ்சாவை ஷிகர் கொடுத்ததில் அவர் உ டல்நிலை பா திக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் சோனம் மாமியார், மாமனார் தொடர்ந்து அவரை கொ டுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஷிகர், சோனத்தை கடந்த ஜூலை மாதம் என் வீட்டுக்கு அனுப்பினார்.

பின்னர் செப்டம்பர் மாதம் கணவர் வீட்டுக்கு அவளை மீண்டும் அனுப்பினேன், ஆனால் ஷிகர் மற்றும் குடும்பத்தார் அவளை சேர்க்க மறுத்துவிட்டனர், இதையடுத்து தனியாக வீடு எடுத்து சோனம் தங்கிய நிலையிலேயே இம்முடிவை எடுத்துள்ளார்.

அவள் இ றப்புக்கு முழு காரணம் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் என கண்ணீருடன் கூறினார். இதை தொடர்ந்து ஷிகர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் போ தை ப ழக்கத்துக்கு அ டிமையாகி மனைவியின் மரணத்துக்கு காரணமாக இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெண்ணுக்கு இது மறுபிறவியா? சிலிர்க்க வைக்கும் ஆதாரம்!!

கிரெட்டா துன்பெர்க்

120 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பழமையான புகைப்படத்தில் கிரெட்டா துன்பெர்க் தோற்றம் இடம்பெற்றிருப்பதால் அவருக்கு இது மறுபிறவியாக இருக்கலாம் என இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் சுவீடனை சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்கிற 16 வயது சிறுமி உலக அளவில் பிரபலமடைந்துவிட்டார். அவருக்கு ஆதரவாக பல நாடுகளிலும் மக்கள் காலநிலை மாறுதலுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எழுத்தாளர் ஜாக் ஸ்ட்ரேஞ்ச் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 1898ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டொமினியன் க்ரீக், யூகோன் பிரதேசத்தில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் மூன்று சிறுமிகள் வேலை செய்வதை அந்த புகைப்படம் காட்டுகிறது. அதில் ஒரு சிறுமி மட்டும் கிரெட்டா துன்பெர்க் போன்ற தோற்றத்துடன் இருப்பதால், அவர் அ ழியாதவர் அல்லது மறுபிறவி எடுத்தவர் என்று இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்காலத்தை காப்பாற்ற கடந்த காலத்திலிருந்து திரும்பி வந்த ஒரு நேர பயணியாக கூட இருக்கலாம் என்றும் இணையதளவாசிகள் கூறி வருகின்றனர்.

சுவர் ஓரத்தில் இருந்த ஓட்டையில் கால் விட்ட சி றுமிக்கு நேர்ந்த கதி!!

சி றுமிக்கு நேர்ந்த கதி

கேரளாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் விளையாட்டாக துளை ஒன்றில் காலை விட்ட மாணவியை பாம்பு கடித்ததில் அவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

வயநாடு அருகே சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஷாஹலா ஷெரின் (8) என்ற சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

பிற்பகல் 3 மணியளவில் வகுப்பறைக்குள் மாணவி ஷெரின் அமர்ந்திருந்தார். அப்போது அறையின் சுவற்றில் உள்ள ஓரத்தில் இருந்த துளை ஒன்றில் விளையாட்டாக தனது காலை விட்டுள்ளார். அப்போது காலில் ஏதோ க டிப்பது போன்று உணர்ந்துள்ளார்.

உடனே காலை வெளியே எடுத்து பார்க்கையில் கா யம்பட்டு ர த்தம் வருவதைக் கண்டுள்ளார். இதுபற்றி சக மாணவிகளிடம் ஷெரின் கூறியுள்ளார். அவர்கள் வகுப்பாசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அறிவுரையின் பேரில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி ஷெரினை அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை ப லனின்றி மாணவி ஷெரின் உ யிரிழந்தார். இந்த சம்பவம் ஷெரின் பெற்றோர் மற்றும் அவர் படித்த பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப றிபோன இரண்டு உ யிர்கள்: பில்லி சூனிய நம்பிக்கையால் கைது செய்யப்பட்ட தாய்-மகள்!!

பில்லி சூனிய நம்பிக்கையால்..

பில்லி, சூனியம் வைப்பதாக சந்தேகித்து இளைஞரை கொ லை செய்த தாய் – மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அருண் சந்தோஷ் வாக்மரே (35) என்கிற இளைஞர், ஞாயிற்றுக்கிழமை தாரோடி குர்த் பகுதியில் இ றந்து கி டந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு ரத்னமலா மனோஜ் கன்வீர் (40), அவரது மகள் சுபாங்கி (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், அருண் சந்தோஷின் தந்தை வழி அத்தை தான் கன்வீர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கன்வீரின் சகோதரன் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துள்ளார். அடுத்த சில தினங்களில் கன்வீரின் மற்றொரு மகளும் உ டல்நிலை சரியில்லாமல் ப டுக்கையாக கிடந்துள்ளார்.

அருண் மற்றும் அவருடைய தாய் தனது தன்னுடைய குடும்பத்திற்கு பில்லி, சூனியம் வைப்பதாலே இப்படி நடப்பதாக கருதிய கன்வீர் அவர்களை ப ழிக்குப்ப ழி வாங்க முடிவு செய்தார்.

இதற்கிடையில் கன்வீரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த கிசான் விஸ்வகர்மா, சுபாங்கியுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்துகொண்ட அருண், விஸ்வகர்மாவுடன் சுபாங்கியை பழக அனுமதிக்க வேண்டாம் என கன்வீரிடன் எ ச்சரித்து சென்றுள்ளார்.

அருண் குடும்பத்தார் சூனியம் வைப்பதோடு, தன்னுடைய குடும்ப விவகாரங்களில் மூக்கை நுழைப்பதால் ஆத்திரமடைந்த கன்வீர், கிசான் துணையுடன் அருணை கொ லை செய்ததாக கூறியுள்ளனர். மேலும் தப்பி ஓடிய விஸ்வகர்மாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இரு வீரப் பெண்மணிகள் : என்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?

வீரப் பெண்மணிகள்

ஆப்கானிஸ்தானில், கண்ணிவெ டிகளை அகற்றும் பணிகளில் இரு பெண்கள் ஈடுபடும் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தா லிபான் மற்றும் ஐஎஸ் ப யங்கரவாத அ மைப்புகள் இடையே பல ஆண்டுகளாக ச ண்டை நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது, அங்காங்கே பு தைக்கப்பட்டிருக்கும் வெடிகு ண்டுகளில் சி க்கி கு ழந்தைகள் பெண்கள் என்று பலரும் உ யிரிழந்து வருவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

அப்படி பாமியன் மாகாணத்தில் சோவியத் -ஆப்கான் போ ரின்போது தலிபான் ப யங்கரவாதிகளால் பு தைக்கப்பட்ட கண்ணிவெ டிகளை அகற்றும் பணியில் இரு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பெயர் ஃபாத்திமா அமிரி மற்றும் ஃபிசா.

இதுகுறித்து ஃபாத்திமா பேசுகையில், மலைப் பகுதியில் சென்ற இளைஞர் ஒருவர் வீடுதிரும்பவில்லை. அவர் கண்ணிவெ டியில் சிக்கி உ யிரிழந்ததாக நம்பபடுகின்றது. அவரை இ ழந்து அந்த குடும்பம் மிகவும் து யரத்தில் ஆ ழ்ந்தது. இந்நிகழ்வுதான் நான் இந்த பணியில் இணைய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ஃபிசா தெரிவிக்கையில், எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தொழிலுக்கு என் தாயரும், மாமியாரும் எ திர்ப்பு தெரிவித்தனர். சவாலான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பணியில் இணைந்தேன். ஆனாலும், குடும்பத்தினருடன் நேரம் செலவிட தவறியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரு பெண்களும் பாமியன் மாகாணத்தில் தினமும் இரண்டு மணிநேரத்தை கண்ணிவெ டிகளை அகற்றுவதில் செலவிடுகின்றனர். பாமியன் மாகாணத்தை கண்ணி வெ டிகளற்ற பகுதியாக மாற்றுவதே தங்களின் நோக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் : அமைச்சரவை இன்று நியமனம்!!

இடைக்கால அரசாங்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் இன்று தமக்கான அமைச்சரவை நியமனங்களை பெற்றுக்கொண்டு கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இதன்படி இன்று காலை 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சு நியமன நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் 15 உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர். அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு புதிய ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டமும் ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.