வவுனியா ஓமந்தை காட்டு விநாயகர் ஆலய விவகாரம் : கைதானவர்கள் அபராதத்துடன் விடுதலை!!

காட்டு விநாயகர் ஆலய விவகாரம்

வவுனியா ஓமந்தை மாளிகை பகுதியில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் ஆலய காணியில் உள்ள புராதன சின்னங்களை சேதப்படுத்தியதாக தெரிவித்து ஓமந்தை பொலிசாரால் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டிருந்தனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள காட்டு விநாயகர் ஆலயம் அப்பகுதி மக்களால் நீண்ட காலமாக வழிபடப்பட்டு வருகின்றது. ஆலயத்திற்கான கட்டடம் நீண்டகாலமாக அமைக்கப்படாத நிலையில் பல வருடங்களிற்கு முன்னர் வைக்கப்பட்ட கற்சிலை ஒன்றினை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்ரெம்பர் மாதமளவில் குறித்த ஆலய வளாகப்பகுதியில் அப்பகுதி மக்களால் டோசர்மூலம் துப்புரவுப் பணி மேற்கொள்ளபட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் தொல்பொருள் எச்சங்கள் இருப்பதாகவும், புரதான சின்னங்களை அழிக்கும் வகையில் துப்புரவுப்பணி மேற்கொள்ளபட்டதாகவும் ஓமந்தை பொலிசாருக்கு, தொல்பொருள் திணைக்களத்தால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி அவர்களை விசாரணைக்கு அழைத்த ஓமந்தை பொலிசார் ஆலயத்தின் நிர்வாகம் சார்ந்த ஒருவரை கைது செய்துள்ளதுடன், ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள காணியின் உரிமையாளர், மற்றும் டோசர் சாரதி ஆகியோரை கைது செய்து வவுனியா நீதி மன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது புராதன சின்னங்களை சேதப்படுத்திய கு ற்றத்தை ஒப்புக்கொண்டமைக்காக கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் தலா 50ஆயிரம் வீதம் 1,50,000 ஆயிரம் ரூபாய் த ண்டப்பணம் விதிக்கப்பட்டு அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

வவுனியாவில் சுகாதார பரிசோதகரின் நடவடிக்கைக்கு இடையூறு : உணவக உரிமையாளருக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில்..

வவுனியா புளியங்குளத்தில் சுகாதார பரிசோதகரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

சகோதரருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வவுனியா வடக்கு பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா, புளியங்குளம் வடக்கு சுகாதார பரிசோதகர் நிசாந்தன் ஆகியோர் சுகாதார பரிசோதனைக்காக சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சுகாதார சீர்கேடு காணப்பட்டதாக சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலுக்கு எ திராக சட்ட நடவடிக்கைக்காக பதிவு செய்த போது அவ் உணவகத்தில் நின்ற அதன் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் சகோதரர் ஆகிய இருவரும் சுகாதார பரிசோதகர்களுடன் மு ரண்பட்டு அவர்களது நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் புளியங்குளம் பொலிசில் செய்த அரச உத்தியோகத்தரான தமது செயற்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியதாக செய்த முறைப்பாட்டையடுத்து ஹோட்டல் உரிமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், ஹோட்டல் உரிமையாளரின் சகோதரனுக்கு நீதிமன்றால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளனர்.

என் காதலியை யாரும் பார்க்கக்கூடாது : காதலனின் அதிரடி குறும்பு!!

காதலனின் குறும்பு

நீச்சல் உடையை அதிகம் விரும்பும் தனது காதலியை யாரும் பார்க்கக்கூடாது என முடிவு செய்த ஒரு காதலன் வித்தியாசமான ஒரு முடிவு செய்தார். Pedro Cuccovillo Vitolaவின் காதலி Pattyக்கு நீசல் உடையும் ரொம்ப பிடிக்கும்,

இன்ஸ்டாகிராமில் வகை வகையாக படங்களை பதிவேற்றுவதும் பிடிக்கும். ஆனால் தனது காதலியை மற்றவர்கள் பார்ப்பதோ, டேட்டிங் அழைப்பதோ Pedroவுக்கு பிடிக்கவில்லை. எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடிவு செய்தார் Pedro.

வெளியாகியுள்ள வீடியோவில், தனது காதலிக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறும் Pedro, அதை Patty தனது கண்களைக் கட்டிய வண்ணம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். அதன்படி Patty அதை அணிந்துகொள்ள, கண்ணாடியைப் பார்த்தபடி, கண்ணில் கட்டியிருக்கும் கட்டை அவிழ்க்கச் சொல்கிறார் Pedro.

கட்டை அவிழ்த்து பார்க்கும் Patty ஒரே நேரத்தில் சந்தோஷத்திலும், வெட்கத்திலும் கத்துகிறார். காரணம் Pattyக்கு Pedro கொடுத்தது ஒரு நீச்சல் உடை. தனது முகத்தின் படத்தை அச்சிட்டு அந்த நீச்சல் உடையை வடிவமைத்திருந்தார் அவர்.

இனி என் காதலியை யாரும் பார்க்கவோ டேட்டிங்குக்கு அழைக்கவோ மாட்டார்கள் என்கிறார் Pedro குறும்பு கொப்புளிக்க.

பிரசவத்திற்காக மருத்துவமனை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை : X-ray-வில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

பெ ண்ணுக்கு ஏற்பட்ட நிலை

தமிழகத்தில் பிரசவத்திற்காக வந்த பெ ண்ணின் வ யிற்றில் ஊ சியை வை த்து தைத்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியை அடுத்த மரவெட்டி வலசை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கர்ப்பமான ரம்யா, அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்காக பதிவு செய்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19-ஆம் திகதியன்று பிரசவத்திற்கான திகதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அன்று ஊச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யா அனுமதிக்கபட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அ றுவை சி கிச்சை செய்ய வேண்டும் என்று கூற, இதையடுத்து, உறவினர்கள் அனுமதியுடன் அ றுவை சி கிச்சை நடைபெற்றது.

அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின், ரம்யாவுக்கு மி குதியான ர த்தப்போ க்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யாவை மருத்துவர்கள் மீண்டும் ப ரிசோதித்த போது, உடைந்து  ஊசி ஒன்று ரம்யாவின் அ டி வ யிற்று எ லும்பின் மேலே இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது.

அதனை அகற்றுவதற்கு போதிய அளவிலான எலும்பு சார்ந்த மருத்துவர்கள் அங்கு இல்லாததால், ரம்யாவை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைந்துள்ளனர்.

இதையடுத்து, ராமநாதரபுத்தில் அனுமதிக்கப்பட்ட ரம்யாவை ப ரிசோதித்த ம ருத்துவர்கள், அங்கு சிகிச்சை ஏதும் அளிக்காமல் மேல்சி கிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ரம்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அ லட்சியமாக செயல்பட்ட மருத்துவர்களை க ண்டித்து உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சற்று நேரம் ப ரபரப்பு நிலவியது.

அ சிட் வீ ச்சில் பா திக்கப்பட்ட பெண்ணை மணந்த இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்!!

குவியும் பாராட்டுக்கள்

அ சிட் வீ ச்சு தா க்குதலில் இருந்த மீண்ட இளம் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் அவரை பிரபல நடிகர் ஷாருக்கான் வாழ்த்தியுள்ளார்.

பிரபல நடிகர் ஷாருக்கான் அ சிட் வீ ச்சில் பா திக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள உதவும் மீர் பவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பு அ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்ட பலருக்கும் மருத்துவ சிகிச்சை செலவுகள், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான செலவுகளை செய்கிறது.

அப்படி அ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்ட அனுபமா மீரா பவுண்டேஷன் மூலம் உதவிகள் பெற்ற நிலையில் அவருக்கு சமீபத்தில் ஜக்தீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், நீ தான் ஜக்தீஷ் மனிதன். வாழ்க்கையில் புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் அனுபமாவுக்கு வாழ்த்துக்கள், இதில் மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்திருக்கும் என நம்புகிறேன் என வாழ்த்தியுள்ளார்.

இலங்கையில் இணையம் மூலமாக நிதி மோ சடிகள் : அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

நிதி மோ சடிகள்

இலங்கையில் இணையம் மூலமாக நிதி மோ சடிகள் இடம்பெற சாத்தியம் இருப்பது குறித்து மத்திய வங்கி பொதுமக்களுக்கு எ ச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்பாக செயற்படவேண்டும் என்று மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்போர் தமது கணக்கு இலக்கங்களை யாருடனும் பகிரவேண்டாம். அத்துடன் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்கள் தொடர்பிலும் கவனமாக செயற்படுமாறு மத்திய வங்கி கோரியுள்ளது.

இலகுவழி கடன் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு நிதி மோ சடிகள் இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

துணிக்கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிக்கிய இளம்பெண் : என்ன செய்தார் தெரியுமா?

சிக்கிய இளம்பெண்

துணிக்கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளம்பெண்ணை பிடித்த பா துகாவலர்கள் அவரிடம் எதுவும் இல்லாதது கண்டு வியந்துள்ளனர்.

பின்னர்தான் தெரியவந்துள்ளது அவர் திருடியது ஜீன்ஸ் பேண்ட்களை என்பது. அந்த பெண் எட்டு ஜீன்ஸ் பேண்ட்களை திருடி உடைமாற்றும் அறைக்கு கொண்டு சென்று அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அணிந்துகொண்டிருக்கிறார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அவர் ஒவ்வொரு ஜீனாக கழற்ற, பின்னணியில் ஒருவர் 1,2 என எண்ணும் சத்தம் கேட்கிறது. எட்டு பேண்ட்களை கழற்றிய அந்த இளம்பெண் அப்பாவியாக இதற்கு மேல் தன் உள்ளாடைதான் இருக்கிறது என்கிறார்.

இந்த சம்பவம் வெனிசுலாவில் நடந்துள்ள நிலையில், பெரு நாட்டில் இந்த வீடியோ வைரலாகி 2.5 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்த்த ஒருவர், இவளையெல்லாம் பிடித்து ஜெயில்ல போடணும் சார் என்கிற தோரணையில் கமெண்ட் செய்ய, மற்றொருவரோ, எட்டு பேண்ட் போட்ட பிறகும் அந்த பெண் குண்டாக தெரியவில்லை, அப்படி மெலிந்து போய் இருக்கிறார், அவருக்கு என்ன கஷ்டமோ பாவம் என்று கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

விபத்தில்..

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்றுறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஹெ ரோயினுடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது

வவுனியாவில் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான ஹெ ரோயின் போ தைப் பொருளுடன் ஒருவர் இன்று (21.11) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா பிடியாணை பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. திஸ்சலால்த சில்வாவின் உத்தரவுக்கமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.வெலிகல தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தேக்கவத்த பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரை ஹெ ரோயினுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கிராம் 970 மில்லிகிராம் ஹெ ரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா பிடியாணை பொலிஸ் பிரிவினர் சந்தேக நபரை இன்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

சஜித் பிரேமதாஸவின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத மற்றுமொரு இளைஞன் த ற்கொ லை!!

சஜித் பிரேமதாஸவின் தோல்வி..

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக்கொள்ள முடியாத இளைஞர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளார். புத்தல பகுதியை சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே வி ஷம ருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் மிகவும் ம னவரு த்தத்தில் இருந்த அவர் இனி வாழ்ந்து பிரயோசனம் இல்லை என கூறியுள்ளார். சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள வீதியில் தனது சைக்கிளை விற்பனை செய்துவிட்டு அதில் கிடைத்த பணத்தில் வி ஷப்போ த்தல் ஒன்றை கொள்வனவு செய்து பருகியுள்ளார்.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியாத நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9 மற்றும் ஒரு வயது பிள்ளைகளை கொண்ட இவரின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும்,

அவரின் மனைவிக்கு எந்தவித வருமானம் பெறும் தொழிலும் இல்லை என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை சஜித்தின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இருவர் உ யிரிழந்தனர். ஒருவர் த ற்கொ லை செய்தும் மற்றவர் மா ரடைப்பினால் உ யிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தையில் வெ டிபொருட்கள் மீட்பு!!

வவுனியா ஓமந்தையில்..

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர், மகிழங்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் வெ டிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியினை சுத்தம் செய்த காணியின் உரிமையாளர் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் பா துகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவினை பெற்று இன்றையதினம் அவற்றை அகற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து மூன்று மகசின்கள் மற்றும் ஒரு கைக்கு ண்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 வருட காதல் வாழ்க்கை : மனைவி சந்தேகப்படாமல் இருக்க இதுதான் ரகசியம் : நெகிழும் மாதவன்!!

மாதவன்

தென்னிந்திய சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் இன்றளவும் அது மாதவன் மட்டும் தான். அழகான தோற்றத்தாலும், மிரட்டலான நடிப்பாலும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கட்டிப்போட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

தமிழில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, இளைஞர்களின் ஆசை நாயகனாய் வலம் வந்த மாதவனது திருமணமும் காதல் திருமணம் தான்.

படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேர விரும்பிய மாதவனுக்கு வயது போதாததால், Personality Development வகுப்புகளை எடுத்து வந்துள்ளார்.

அங்கே தான் தன்னுடைய காதல் மனைவியான சரிதாவை சந்தித்துள்ளார், பார்த்தவுடன் பிடித்துப் போக நண்பர்களாக பழகியதில் காதல் துளிர்விட்டுள்ளது. 8 வருட காதல் வாழ்க்கைக்கு பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

தொடர்ந்து ஹிந்தியில் சீரியல்களில் சின்னசின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு, அலைபாயுதே ஹிட் அடிக்க படவாய்ப்புகள் வந்துள்ளன. குடும்பம், சினிமா என இரண்டையும் சந்தோஷமாக கொண்டு சென்றதில் தன் மனைவியின் பங்கு அதிகம் என்கிறார் மாதவன்.

பட ஷீட்டிங்குக்காக எங்கு சென்றாலும் மனைவி சரிதாவை அழைத்து கொண்டு செல்வாராம் மாதவன், அப்போது தான் தன்னுடைய தொழில் பற்றி சரிதாவுக்கு நல்ல புரிதல் இருக்குமாம்.

எங்கு வெளியில் சென்றாலும், படத்தில் பிஸியாக இருக்கும் போது தன்னுடைய மொபைல் போனை சரிதாவிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாம். தன்னை பற்றிய எந்த ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், நம்பிக்கை குறையக்கூடாது என்பதற்காகவும் இப்படி செய்கிறாராம்.

குடும்பத்தை நிர்வகிப்பதில் இருந்து நிதி ஆலோசனை, விடுமுறை என அனைத்தையும் சரியாக திட்டமிடுவது வரை சிறப்பாக செய்வதால் 20 காதல் வாழ்க்கை படுகுஷியாக சென்று கொண்டிருப்பதாக மகிழ்கிறார் மாதவன்.

உ யிருக்கு போ ராடிய தந்தை : கல்லீரலை தானமாக கொடுத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் உ யிருக்கு போ ராடிய தந்தைக்கு மகள் தன்னுடைய கல்லீரலை கொடுத்து கா ப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். 48 வயதான இவருக்கு கல்லீரல் செயல் இழந்தது. இதன் காரணமாக அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், மாற்று அறுவை சிகிச்சைக்காக மூ ளைசாவு அடைந்தவர்களிடமிருந்து கல்லீரல் பெறுவதற்காக காத்திருந்தார்.

ஆனால் முருகனின் உ டல்நிலை மிகவும் மோ சம் அடைந்ததால், அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்து பலர் காத்திருந்து வரும் நிலையில் அவருக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது.

இதனால் அவரது மகள் தன் அப்பாவை காப்பாற்றுவதற்காக தன்னுடைய கல்லீரை தானமாக கொடுக்க முன் வந்தார். இதையடுத்து மருத்துவ குழுவினர் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் மகளிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து முருகனுக்கு வெற்றிகரமாக பொறுத்தினர்.

தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இந்த அறுவை சிகிச்சை சென்னையில் முதல் முறையாக நடந்துள்ளது. சிகிச்சைக்காக 22 லட்சம் ரூபாய் ஆனதாகவும், அதிலிருந்து 25 சதவீதத்தை மருத்துவமனை குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உ யிருக்கு போ ராடிய தந்தைக்கு மகளே கல்லீரலை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது.

அவர் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனி வேலு, தலைமை செயல் அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் சாமிநாதன், விஜய் ஆனந்த், ஸ்ரீவத்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோரை தலைமை செயலகத்துக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

இவர்களுடன் நிவேதா, தாய் சாந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் திருமண பந்தல் அகற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்ட புதுமாப்பிள்ளையின் ச டலம்!!

புதுமாப்பிள்ளை

தேனிலவுக்கு சென்ற இடத்தில் உ யிரிழந்த புதுமாப்பிள்ளையின் உடல் சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தது.

சென்னை அமைந்தகரை சேர்ந்தவர்கள் அரவிந்த்-ப்ரீத்தி தம்பதி. இவர்களுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து தேனிலவு செல்ல திட்டமிட்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றிருந்தனர்.

அங்கு இருவரும் வானில் பாராகிளைடிங் சாகசம் செல்ல திட்டமிட்டனர். அதன்படி, முதலில் ப்ரீத்தி பாரா கிளைடரில் ஏறி, வானில் பறந்து இறங்கினார். அதைத் தொடர்ந்து அரவிந்த் வானில் பறக்க பாரா கிளைடரில் ஏறி வானில் பறந்தார்.

இந்த முறையில் பாரா கிளைடிங்கில் பாரா கிளைடர் பைலெட் ஒருவருடன் நாம் ஏறிப் பறக்கலாம். இதற்குக் கட்டணமாக ரூ. ஆயிரத்து 500லிருந்து ரூ. 6 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில், பாரா கிளைடரிலிருந்த அரவிந்த் கீழே வி ழுந்தார். இந்த சம்பவம் ப்ரீத்தி கண்முன்னே, அரங்கேறியது. கீழே விழுந்த அரவிந்த் சம்பவ இடத்திலே ப ரிதாபமாக உ யிரிழந்தார், அவரது உ டலை பார்த்து மனைவி ப்ரீத்தி க தறி அ ழுதார்.

இதில் விமானி ஹரி ராமுக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்காக, அரவிந்த் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தல், நேற்று தான் அகற்றப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவரின் உ டல் பி ரேத பரிசோதனை முடிந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டது.

உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமண வீடாக காட்சியளித்த அரவிந்த் வீடு தற்போது அ ழுகை ஓ லமாக காட்சிளிப்பது அந்த பகுதி மக்களின் மனதை உ லுக்கியுள்ளது.

இது குறித்து பேசிய அரவிந்த் பெற்றோர், எவ்வளவு செல்லமாக நாங்கள் அரவிந்தை வளர்த்தோம், அவ்வளவு ஆசையுடன் ஆரம்பரமாக திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அவன் திருமண வாழ்க்கை 8 நாளில் முடிந்துவிட்டது. தேனிலவுக்கு மகிழ்ச்சியாக சென்ற அரவிந்த் தற்போது பி ணமாக வீட்டுக்கு வந்துள்ளான் என கண்ணீருடன் கூறியுள்ளனர்.

கனேடிய அமைச்சரவையில் முதலாவது தமிழ் அமைச்சராக அனிதா ஆனந்த்!!

அனிதா ஆனந்த்

தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் கனடாவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்.

வைத்தியர் சுந்தரம் விவேகானந்த் ஐயரின் புதல்வியான இவர் இந்தியாவின் தமிழ்நாடு வேலூரை குடும்பப் பின்னணியாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் உடன் கலைக்கப்படுமாயின் 69 எம்பிகளுக்கு ஏற்படும் நிலை!!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் உடனே கலைக்கப்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 69 பேர் தமது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2015ம் ஆண்டு ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் மைத்திரிபால சிறிசேன சடுதியாக நாடாளுமன்றத்தைக் கலைத்திருந்த சந்தர்ப்பத்திலும் இவ்விவகாரம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் க லக்கத்தை ஏற்படுத்தியிருந்து.

எனினும், நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து க லங்கிப் போயிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தற்போது அந்த விவகாரம் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. 2015ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான புதியவர்களில் 69 பேர் ஓய்வூதிய உரித்தை இழப்பார்கள்.

புதிய ஜனாதிபதியின் கீழ் கட்சித் தலைவர்களின் விருப்பப்படி நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படுமாயின் 69 பேரின் கதி அதோகதியாகி விடும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஜனாதிபதியின் அமோக வெற்றியுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக மாதாந்தம் 54 ஆயிரத்து 265 ரூபாய் வழங்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஓய்வூதியமாக அவர்களது அடிப்படைச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கான 18,095 ரூபாய் கிடைக்கும்.

அதேவேளை, சம்பளத்தை விட பல்வேறு சாதாரண, விசேட கொடுப்பனவுகளும், சலுகைகளும், சௌபாக்கியங்களும் நாடாமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

அவற்றைச் சேர்த்துக் கணக்கிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் 5 இலட்சத்துக்குக் குறையாமல் வருமானத்தை ஈட்டுவர் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். அரசியல் யாப்பின்படி நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நான்கரை வருடங்கள் முடிந்த பின்னர் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

அவ்வாறாயின் தற்போதைய நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்கள் கழித்து கலைக்கக் கூடிய அதிகாரபூர்வ காலம் 2020 பெப்ரவரி 17ம் திகதியாகும். அதேவேளை தற்போதைய நாடாளுமன்றத்தின் 5 வருடப் பதவிக் காலம் 2020 ஓகஸ்ட் 17ஆம் திகதியோடு நிறைவு பெறுகின்றது.