தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் : உடலை வீட்டு வாசலில் வீசிவிட்டு போன் பார்த்த கொடூரம்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் KVB புரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய யஷ்வந்த். இவரது தாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் சொந்த ஊரிலேயே பள்ளி படித்த யஷ்வந்த் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார்.

படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் பெற்ற அவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிடைத்த வேலைகளை நிராகரித்துள்ளார். மேலும் படிப்பு முடிந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அறை எடுத்து தங்கிய யஷ்வந்த் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்ததாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த யஷ்வந்த் செலவிற்கான பணத்தை அவரது தாயிடமிருந்து வாங்கியுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த நிலையில் யஷ்வந்திடம் அவரது தாய் “படித்த வேலைக்கு செல்லாமல் ஏன் இப்படி செய்கிறாய்” என கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து யஷ்வந்த் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு மகன் வீட்டிற்கு வந்ததால் லட்சுமி அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது சமையலறைக்கு சென்ற யஷ்வந்த் அங்கு இருந்த கத்தியை எடுத்து அவரது தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் உடலை வீட்டிற்கு வெளியில் வாசலில் கொண்டு சென்று வீசிவிட்டு மீண்டும் சாதாரணமாக அமர்ந்து போன் பார்த்து கொண்டு இருந்துள்ளார்.

லட்சுமியின் உடலை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி யஷ்வந்த்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் யஷ்வந்த் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வதால் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது கொலையில் இருந்து தப்பிக்க நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ் ஆலயத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட குழந்தை!!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை ஆலயங்களுக்கு நேர்ந்து விற்றுவாங்கும் பழக்கம் காலங்காலமாக நம்மவர்களிடையே வழக்கத்தில் உள்ளது. திருமணமாகியும் நீணட நட்கள் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இவ்வாறு நேர்ந்திக்கடன்களை வைப்பது வழமையாகும்.

நேர்ந்திக்கடன்

குழந்தை பிறந்ததும் அதனை ஆலயத்தில் விற்று வாங்குவார்கள். பழங்கள், பொருட்கள் , தன்னை , கமுகு மரங்களும் குழந்தை விற்று வாங்கும்போது ஆலயத்திற்கு அன்பளைப்பாக வழங்குவார்கள்.

இவ்வாறு குழந்தையை ஆலையத்தில் விற்று வாங்குவதனால் நோய்நொடியின்றி குழந்தை ஆரோக்கியமாகவும் சகலசௌபாக்கியங்களும் பெற்று வாழ்ம் என்பது ஐதீகம். அந்தவகையில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள விக்ஷ்ணு ஆயங்களில் பிசித்தம் பெற்று விளங்கும் வல்லிபுரஆழ்வார் ஆலயத்தின் மகோற்சப பெருவிழா அண்மையில் நடந்து முடிந்திருந்தது. வல்லிபுரஆழ்வார் ஆலயத்தில் சமுத்திர தீர்த்தம் வெகு பிரபலமானது.

எல்லா ஆலயங்களிலும் ஆலய திருவிழாவிலும் ஆலய கேணியில் தீர்த்தம் இடம்பெறுவது வழமை. ஆனால் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் மட்டுமே கடலுக்கு சென்று பெருமாள் தீர்த்தமாடுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்!!

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா டல்வின் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடந்த போட்டியின் போது இலங்கை தொடர்பில் அவர் வெளியிட்ட தகவல்கள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய முக்கிய கருவியாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், நாட்டின் அடையாளமாக உள்ளன. அதன் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக வேர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு மேடையாகவும் வளர்ந்து வருகின்றன.

இலங்கையின் இயற்கை அழகு, கலாசார பன்மை மற்றும் மக்களின் நட்புறவு மிகவும் சிறப்பாக உள்ளது. இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை உயர்த்தும் வகையில் உள்ளது.

இலங்கையிற்கு வெளிநாட்டு அணிகள் வருகை தரும் போதெல்லாம், விளையாட்டு நிர்வாகிகள் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு செழுமையை வெளிநாட்டு அணிகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விமர்சனங்கள் இருந்தாலும், நாட்டின் பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்தும் ஒரு வகையான முயற்சியாக பார்ப்பதாக சமாரா டல்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையை உலுக்கிய தம்பதிகள் கொலையில் மேலதிக தகவல் : பெண்ணின் உடலில் தோட்டா!!

நேற்றையதினம் (07.10.2025) அதிகாலை அம்பாந்தோட்டை ஹங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர் 28 வயதான பசிந்து ஹெஷான் அல்லது போ பசிந்து என்பவரும் பெண் 26 வயதான திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இக் கொலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயரிழந்தவர், 2024 மார்ச் மாதத்தில் கஹந்தமோதரவில் படகு ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும், கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேக நபர் 35 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 12 ரக உள்நாட்டுத் துப்பாக்கி, 02 கத்திகள், 12 ரக வெடிமருந்துகள் மற்றும் 12 ரக வெற்று வெடிமருந்துகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு வரத் தடை – இது தான் காரணம்!!

பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 25 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட யூடியூப் நிகழ்வுக்காக கொழும்புக்கு வருகை தர அனுமதி கோரிய அவரது கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.

60 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், மும்பை பொலிஸ் பொருளாதார குற்றப்பிரிவால் பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஷெட்டியின் வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே, நிலுவையில் உள்ள பணத் தொகையை அவர் முதலில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மும்பை பொலிஸ் பொருளாதார குற்றப் பிரிவு (EOW) தலைமையிலான பாரிய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) இன்னும் செயல்பாட்டில் உள்ளது எனவும், இது நீதிமன்றத்தின் அல்லது விசாரணை அமைப்பின் வெளிப்படையான அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்வதை சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது எனவும் நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டது.

ஷில்பா ஷெட்டியின் சட்டதரணி கொழும்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி கோரியபோது, நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அழைப்பின் நகலை கேட்டது.

அழைப்பிதழ் தொலைபேசி மூலம் மட்டுமே கலந்துரையாடப்பட்டது எனவும், பயண அனுமதிக்குப் பின்னர் தான் எழுத்துப்பூர்வ ஆவணம் வழங்கப்படும் எனவும் சட்டதரணி விளக்கமளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம், தடையை விடுவிக்க மறுத்து, எந்தவொரு பயண அனுமதியையும் கோருவதற்கு முன்பு தம்பதியினர் முதலில் 60 கோடி ரூபா மோசடி குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என குறிப்பிட்டது. இந்த வழக்கு தற்போது அக்டோபர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொத்மலை ஆற்றில் சடலம் கண்டெடுப்பு!!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஆற்றில் இன்று புதன்கிழமை (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இரவு நேரத்தில் வாகனங்கள் மீது தீ வைப்பு!!

வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறி ஒன்றும் கார் ஒன்றுமே இவ்வாறு தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவரேனும் ஒருவர் இரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!!

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை ஆராய்ந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, நியூயோர்க்கில் தங்க எதிர்காலங்கள் 4,003 அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. நியூயோர்க் ஸ்போட் தங்கத்தின் தற்போதைய விலைப்பட்டியல், அவுன்ஸ் ஒன்றுக்கு 3,960.60 டொலர் ஆக உயர்ந்துள்ளது.

இது விலைமதிப்பற்ற உலோகங்களை அளவிடுவதற்கான தரநிலை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார் விபத்து : ஒருவர் பலி!!

ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (8) புதன்கிழமை ஓட்டமாவடி – நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் வயோதிபர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி – 1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரவில் பாம்பாக மாறும் மனைவி :;அழுது புலம்பி கணவன் முறைப்பாடு!!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி , தன்னை கடித்துக் கொல்ல முயற்சித்ததாக கணவன் முறைப்பாடு செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, ​​ தமது பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ​​மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீராஜ் என்பவர், “ஐயா, என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க என் பின்னால் ஓடுகிறாள்” என்று கூறி முறைப்பாடு அளித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால், ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள், நான் தூங்கும்போது என்னைக் கொல்லக்கூடும்” என்றும் அவர் புலம்பியுள்ளார்.

இந்நிலையில், அந்த முறைப்பாடு குறித்த விசாரணை செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். துணைப்பிரிவு நீதிபதி மற்றும் பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஒரு வேளை இது மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம் என்று கருதி, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை!!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னர், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து : சாரதிகள் இருவரும் காயம்!!

ஹட்டனில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் உந்துருளிகளின் சாரதிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கியும், ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கியும் பயணித்த இரண்டு உந்துருளிகளும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு உந்துருளிகளும் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் குறித்த விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்!!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவர், நேற்று (7 ஆம் திகதி) காலை அலுபோமுல்ல பகுதியில் இருந்து பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி செல்லும் பேருந்தில் ஏறி மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இதன்போது ரைகம பகுதியில், கருப்பு கால்சட்டை மற்றும் சிவப்பு டி-சர்ட் அணிந்த ஒருவர் முன்பக்க கதவின் ஊடாக பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்துநோய்வாய்ப்பட்ட மாணவர் இதனையடுத்து பாடசாலைக்கு சென்றவுடன் கண் பார்வை மங்கலாகி, தலைச்சுற்றல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டமையினால் உடனடியாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

 

கைபேசி விற்பனை என்று போலி விளம்பரம் : இலட்சக்கணக்கான பணத்தை இழந்த யாழ். இளைஞன்!!

விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழிவு விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகள் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்ட வேளை கைபேசியை வீட்டுக்கே அனுப்புவதாக கூறி முற்பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் பலர் அவரது கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்பு செய்துள்ளனர். பணத்தை வழங்கியவர்கள் அதன்பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இவ்வாறு ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்முனைப் பொலிஸார் ஊடாக குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது!!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல இருந்த நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (7) மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருமண நிகழ்வு ஒன்றுக்காக இந்தியா செல்ல யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணத்துக்கு புறப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் கடவுச்சீட்டு பரிசோதனை செய்த அதிகாரிகள் குறித்த நபரை தடுத்து வைத்து விமான நலைய பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகுமா?

 

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற கருத்து பலரிடையே இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது கட்டுக்கதை என கூறப்படுகின்றது.

உலகளவில் தக்காளி அதிக மக்களால் உண்ணப்படும்போது, அது மட்டுமே கற்களை உருவாக்கினால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வேண்டும்.

சிறுநீரக கற்கள் உருவாக ஆக்சலேட்டுகள் காரணமாக இருப்பதுதான். தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவே ஆக்சலேட்டுகள் உள்ளன. இந்த அளவு கற்களை உருவாக்கப் போதுமானதல்ல.

நீரிழப்பு (Dehydration) உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமையே சிறுநீரகக் கற்கள் உருவாக மிக முக்கியக் காரணம். தினமும் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அல்லது சில அரிய வளர்சிதை மாற்றக் கோளாறுகள் (Oxalosis) காரணமாகவும் கற்கள் உருவாகலாம்.

சிலருக்கு யூரிக் அமிலம் அதிகமாகச் சேர்வதால் கற்கள் உருவாகலாம். இவர்கள் மட்டுமே மீன், இறைச்சி போன்ற பியூரின் நிறைந்த உணவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சிறுநீரகக் கற்களைத் தடுக்க, தக்காளியைக் குறைப்பதை விட, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் அடிப்படை நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதுமே முக்கியம் ஆகும்.