போர்வெல் மூலம் மூன்று துளைகள் : எட்டியது 60 முதல் 70 அடி ஆழம் : தொடரும் சுர்ஜித் மீட்புப் பணி!!

தொடரும் சுர்ஜித் மீட்புப் பணி

ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகளில் முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது போர்வெல் கருவி மூலம் துழையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

நெடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுர்ஜித்தை மீட்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதில், முன்தாக பல முறைகள் கையளப்பட்டாலும் அனைத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக குழந்தை விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீற்றர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டது.

ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாக துளையிட முடியாமலும் இருந்தது.

இந்நிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தை கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையில் மூன்று துளைகளாக பிரித்து அதை அகலப்படுத்த தற்போது பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதல் துளையில் 60 முதல் 70அடி ஆழம் எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 35 மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், குழந்தை துளையில் சிக்கி தற்போது 69 மணி நேரம் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள் வழங்கிய கெடு முடிய இன்னும் குறுகிய நேரம்? சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் சோகம்!!

சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் சோகம்

குழந்தை சுர்ஜித் துளையில் சிக்கி தற்போது 67 மணி நேரம் கடந்துவிட்டது. மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 2வயது குழந்தை சுர்ஜித் கடந்த 25ஆம் திகதி மாலை நேரம் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்தான்.

அவனை மீட்க அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீ விரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுர்ஜித் குழியில் விழுந்து தற்போது 67 மணி நேரம் கடந்துவிட்டது.

முன்னதாக மருத்துவர்கள் தரப்பில் 75மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டுக்கொடுத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 5 மணி நேரத்திற்குள் குழந்தை மீட்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.

துழையிடும் பணி நேற்று காலை 7:05க்கு துவங்கிய நிலையில், 30 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், சென்னையில் இருந்து புதிய துளையிடும் கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. சுர்ஜித் விரைவில் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் காத்திருக்கிறனர்.

மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் பிரார்த்தனையில் பிரபல நடிகர்!!

பிரார்த்தனையில் பிரபல நடிகர்

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நடிகர் தாமு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சியின் நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

குழந்தையை மீட்க கடந்த 63 மணிநேரமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகமே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகரான தாமு மீட்புப்பணி நடைபெறும் இடத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்.

தற்போது வரை ரிக் இயந்திரத்தின் மூலம் 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 45அடி : அடிக்கடி பழுதாகும் ரிக் இயந்திரம் : இ டையூறு செய்யும் பொதுமக்கள் : மீட்புப் பணியில் சி க்கல்கள்!!

அடிக்கடி பழுதாகும் ரிக் இயந்திரம்

சுர்ஜித்தை மீட்கும் பணியில் இயந்திரம் அடிக்கடி பழுதாகி சரி செய்யப்பட்டு வருகின்றது. சுர்ஜித்தை மீட்க இரண்டு ரிக் இயந்திரங்கள் கொண்டுவந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்து.

ஆனால், இயந்திரம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், அடிக்கடி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து பணிகள் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 45அடிகள் மட்டுமே தற்போது வரை துளையிடப்பட்டுள்ளது. 66 மணி நேரம் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் வந்து கூடி நின்று புகைப்படம் எடுப்பது அருகில் செல்ல முற்படுவது போன்ற, இ டையூறு ஏற்படுத்துவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  

100 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றுவதில் சிக்கல் : போ ராடும் மீட்புப் பணியாளர்கள்!!

குழந்தை காப்பாற்றுவதில் சிக்கல்

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயதான குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 60 மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையில் 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் போ ராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணற்றுப் பகுதியில் கற்பாறைகள் நிறைந்துள்ளமையினால் துரிதமாக மீட்பு பணியை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட போதும் கடினமாக பாறைதான் இருப்பதாக தெரிகிறது.

அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு 38 அடி ஆழம் தோண்டியதாக தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு இரண்டாவது ரிக் இயந்திரம் வந்ததிலிருந்து ஆறு மணி நேரம் துளை போடும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது.

தற்போது 40 அடி ஆழத்தை கடந்திருந்தாலும்கூட தொடர்ந்து அந்த பகுதியில் கடினமான பாறைதான் இருக்கிறது. தற்போது பாறையை தகர்க்க முடியாமல் ஊழியர்கள் துளையிடும் பகுதியில் தண்ணீரை ஊற்றி வரும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வகையான ட்ரில்லிங் டூல்களை அங்கே வைத்திருக்கிறார்கள். அவைகளை கொண்டு மாற்றி மாற்றி அந்தப் பாறையை ஓரளவு தகர்த்து அங்கிருந்து துகள்களாக வெளியே எடுத்து வர முயற்சி செய்துவருகிறார்கள்.

உள்ளே செல்வதற்கும் ஒவ்வொரு அடியும் தோண்டுவதற்கும் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அடி வரை பள்ளம் தோண்டி இருக்கிறது.

அதேபோல் இந்த இயந்திரம் அதிக திறன் கொண்டது என்றாலும் பாறை தன்மை மிகவும் கடினமாக இருப்பதுதான் இந்த இயந்திரம் அவ்வளவு எளிதாக துளையைப் போட முடியவில்லை. ஆனால் முயற்சி கைவிடப்படாமல் தொடர்ந்து மீட்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மூச்சை அடைத்து உள்ளே செல்ல காத்திருந்த 3பேர் : இன்று 12 பேர் : சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் தாமதம்!!

சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் தாமதம்

சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல தற்போது 12பேர் தயாராக உள்ளனர். நெடுக்காட்டுப்பட்டியில், சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில், ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல நேற்று முதலில் மூன்று பேர் தயாராக இருந்தனர்.

பின் 7 பேர் தயார் நிலையில் இருந்தனர். தற்போது மொத்தம் 12பேர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 12 பேரும் இரண்டு இரண்டு பேராக உள்ளே சென்று பக்கவாட்டில் துழையிடும் பணியில் ஈடுபடுவார்கள். இருவர் வெளியில் வந்ததும், மற்ற இருவர் உள்ளே செல்வார்கள்.

இவ்வாறு உள்ளே செல்லும் அனைவருக்கும் மூச்சை அடக்கி பணி செய்யும் அளவிற்கு திறன் படைத்தவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அளவில் மனவலிமை மற்றும் உடல் வலிமை உள்ளதா என்று சோதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுர்ஜித் நடனம் ஆடுகிறான் : கலங்க வைத்த வீடியோ!!

சுர்ஜித் நடனம்

4வது நாளாக சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தையின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

சுர்ஜித் மீட்கும் பணி நெடுக்காட்டுப்பட்டியில் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பல பகுதிகளில் இருந்து குழந்தைக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரத்தேக பிரார்தனைகள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், பலர் சமூக வலை தளங்களில் #prayforsurjith #savesurjith ஹாஷ்டாக் வைரலாகி வருகின்றது. மேலும், சுர்ஜித் வீடியோ என்று ஒன்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ trend செய்யப்பட்டுள்ளது.

பாதியில் கைவிடமாட்டோம்….. தொடரும் மழை : சுர்ஜித் மீட்பு பணியில் தொடரும் சோகம்!!

சுர்ஜித் மீட்பு

மழை பொழிந்தாலும், மீட்புப் பணியை பாதியில் கைவிடமாட்டோம் என்று வருவாய் நிவாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது நடுக்காட்டுப்பட்டியில் வேகமாக மழை பெய்து வருகின்றது. இது குறித்து பேசிய அவர், குழந்தை மீட்பு பணியில் பல சிக்கல்கள் இருந்தாலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

குழந்தையின் பெற்றோரிடம் ம னநல நிபுணர்கள் மூலம் சில ஆலோசனைகள் வழங்கி வருகின்றோம். இந்த பணிகளை எக்காரணம் கொண்டும் பாதியில் கைவிடமாட்டோம்.

குழந்தையை மீட்க இன்னும் 12 மணி நேரம் ஆகும். எனவே யார் இந்த பணியை முன்னெடுக்க வந்தாலும் அவர்களுக்கு வாய்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், முயற்சியை பாதியில் கைவிடமாட்டோம் என்று ராதாகிருணன் தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களின் மூலம் த வறான தகவல்கள் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்.

இதுவரை 40 அடி தான் : துளையிடும் பணி இனி சரிவருமா? சுர்ஜித் மீட்பு பணி குறித்து அமைச்சர் வேதனை!!

அமைச்சர் வேதனை

சுர்ஜித் மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் குறிப்பிட்டது, இவ்வளாவு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மண் பரிசோதனைக்கு பின்பு மட்டுமே இந்த பணிகள் துவங்கப்பட்டது.

தற்போது இந்த பணிகள் பயனளிக்குமா என்ற கேள்விகுறியாகவே உள்ளது. பாறைகள் உ டைக்கும் பணிகள் இயந்திரங்களுக்கே சவாலாக உள்ளது. தற்போது வரை 40 அடி மட்டுமே எட்ட முடிந்துள்ளது. ஆனால் அதற்கு பின் தாண்ட மிகவும் சிரமமாக உள்ளது.

தற்போது மற்ற முறைகள் கையாண்ட குழுவினர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் மற்றும் மருத்துவர்களிடம் முறையாக ஆலோசனை நடத்தி வேறு திட்டம் உள்ளதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

மேலும், இது குறித்து குழந்தையின் பெற்றோரிடமும் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

என் குழந்தையை காப்பாத்துங்க… கண்ணீருடன் கதறும் சுர்ஜித்தின் அம்மா!!

கண்ணீருடன் சுர்ஜித்தின் அம்மா

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. நேரம் செல்ல செல்லமருத்துவர்களும் கலக்கமடைந்துள்ளனர், எனினும் குழந்தையை பத்திரமாக மீட்டுவிடலாம் எனநம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின்அம்மாவை கரூர் எம்.பி ஜோதிமணிநேரில் சந்தித்து பேசினார். குழந்தையை நினைத்து படுத்தபடுக்கையாய் வீட்டில் மயங்கி கிடந்தவரைஆறுதல் படுத்தினார்.

ஜோதிமணியை பார்த்ததும் கண்ணீர் விட்டழுத சுர்ஜித்தின் அம்மா, என்குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தந்துவிடுங்கள் என கதறினார்.

அவரை தேற்றிய ஜோதிமணி, கனத்த இதயத்துடன் நின்று கொண்டு இருக்கிறோம்,எப்படியும் குழந்தையை மீட்டு தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடந்து செல்வதால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விடுகிறது.

தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பிரத்யேக கருவியை வடிவமைக்க மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

சிறுவன் சுர்ஜித்தை மீட்பது மேலும் தாமதமாகலாம் : வெளியாகும் தகவலால் சோகத்தில் தமிழகம்!!

சோகத்தில் தமிழகம்

கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 60 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. சரியாக இன்று அதிகாலை 12 மணி முதல் இரண்டாவது இயந்திரம் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் நான்கு மணி நேரத்தில் 10 அடி துளையிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துளையிடும் இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் வேகமாக துளையிட முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, மீட்பு நடவடிக்கை நீண்ட 60 மணி நேரமாக தொடர்வதால், 2 வயதேயான சிறுவனின் உடல்நலன் குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன், மருத்துவர்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுயநினைவை இழந்த நிலையில் குழந்தை சுர்ஜித் : மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 3வது நாளாக போ ராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தையின் உடல்நலன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

திருசுச்சியில் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தற்போதுவரை இங்கேயே தொடர்ந்து இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் குழந்தை சுர்ஜித்தின் உடல்நிலை தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், குழந்தை உயிரோடு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தங்களுக்கு தெரிகிறது என்றார். குறிப்பாக அந்த குழந்தையினுடைய உடல் வெப்ப நிலையிலிருந்து குழந்தை உயிரோடு இருக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

தற்போது குழந்தை சுயநினைவை இழந்து இருந்தாலும், 75 மணி நேரம் சுய நினைவு இல்லாமல் இருந்தாலும்கூட மீட்டெடுத்துவிட்டால் குழந்தையை காப்பாற்றி விடுவதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு தயார் நிலையில் உள்ளது என்றார்.

மேலும், ஒரு மருத்துவமனையில் குழந்தையை காப்பாற்றுவதற்கு என்னென்ன வசதிகள் இருக்குமோ அத்தனையும் இங்கே ஐந்து அன்புலன்சில் கொண்டுவரப்பட்டுள்ளது என நம்பிக்கை அளித்துள்ளார்.

பல மணி நேரமாக உ யிருக்கு போ ராடும் சுர்ஜித் : ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் புகுவதை தடுக்க ஏற்பாடுகள்!!

மீட்புப் பணியில் சிறிய தாமதம்

திருச்சி – நடுக்காட்டுப்பட்டியில் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது 100 அடி ஆழத்தில் குழந்தை சி க்கியுள்ள நிலையில் மீட்கும் பணி, 50 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தாமதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்த மழையினால் குழிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வகையில், மீட்புப் படையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். அத்துடன் பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் முன்னாள் போராளி உ யிரிழப்பு!!

வவுனியாவில் இன்று முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

வவுனியா, பறனாட்டகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் இன்றையதினம் அதிகாலை 12 மணியளவில் தனது மனைவியுடன் உரையாடிவிட்டு உறங்குவதற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் உறங்கிய சில நிமிடங்களில் அவரிடம் மாற்றம் ஒன்றை உணர்ந்த மனைவி, அவரை வந்து எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை.

இந்நிலையில் குறித்தநபரின் மனைவி அயலவர்களை அழைத்துள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போ ராளியான 35 வயதுடைய பேரின்பநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உ யிரிழந்துள்ளார்.

சில நோய்கள் காரணமாக குறித்தநபர் மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது ச டலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

150 அடி பள்ளத்தில் பாய்ந்த அம்பியூலன்ஸ் வண்டி : இருவர் பலத்த காயம்!!

பள்ளத்தில் பாய்ந்த அம்பியூலன்ஸ்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று (27.10.2019) அதிகாலை 1.30 மணியளவில் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் டயகம பிரதேச வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற அரச அம்பியூலன்ஸ் வண்டி,

நோயாளியை வைத்தியசாலையில் இறக்கி விட்டு மீ்ண்டும் டயகம வைத்தியசாலையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையிலேயே வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக, பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தின் போது, அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும், உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வருகின்றனர்.

நானுஓயா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து பாரந்தூக்கி இயந்திர உதவியின் மூலம், விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியை இழுத்து பாதைக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி வேட்பாளர்!!

ஜனாதிபதி வேட்பாளர்

ஜனசெத முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்திரமுல்லை சீலரத்ன ஹிமி அவர்கள் வவுனியாவிற்கு விஜயம் செய்து இந்து ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு இன்று (27.10) விஜயம் செய்த அவர் அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தில் நின்ற மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது ஒரே குரலின் கீழ் பாதுகாப்பான நாட்டை உருவாக்க தனக்கு வாக்களிக்குமாறு கோரிய அவர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் தான் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

குறித்த வழிபாட்டு நிகழ்வில் அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.