குழந்தை சுர்ஜித் உயிரை காவு வாங்கிய ஆழ்துளை கிணறு தற்போது எப்படியுள்ளது தெரியுமா?

குழந்தை சுர்ஜித்

குழந்தை சுர்ஜித்தின் உயிரை காவு வாங்கிய ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து சுர்ஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

தற்போது அனைவரும் சுர்ஜித் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தை சுஜித் விழுந்த 600 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது.

அருகாமையில் தோண்டப்பட்ட சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுர்ஜித்தின் உடல் பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!!

சுர்ஜித்தின் உடல்

மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சுர்ஜித்தின் உடல் நேரடியாக கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான போ ராட்டம் 80 மணிநேரமாக நடந்தும் தோல்வியில் முடிந்தது.

குழந்தையின் உடலை அழுகிய நிலையில் தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்டனர், அங்கிருந்து நேரடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்தத பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கிருந்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வராம போயிட்டியேடா தம்பி.. சோகத்தில் மூழ்கிய சுஜித்தின் அண்ணன் தாயுடன் கதறும் சோகம்!!

வராம போயிட்டியேடா தம்பி..

தனது தம்பி சுஜித் கடைசி வரை மீளாமலேயே போய் விட்ட சோகத்தில் குழந்தை சுஜித்தின் அண்ணன் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளான்.

பிரிட்டோ ஆரோக்கியதாஸ் – கலாமேரி தம்பதிக்கு 2 மகன்கள். இதில் இளையவன்தான் நாமெல்லாம் நம் முன்பே வாரிக் கொடுத்துள்ள குழந்தை சுஜித். எப்படியாவது வந்து விடுவான் என்ற பெரும் நம்பிக்கையில்தான் அத்தனை பேரும் நேற்று இரவு தூங்கப் போனார்கள். ஆனால் காலையில் துயரச் செய்தியுடன் அத்தனை பேரையும் அழ வைத்து விட்டது குழந்தை.


என்னை மீட்க முடியாத உங்களை விட்டுப் போகிறேன் என்று போய்விட்டான் குழந்தை சுஜித். மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கிறது தமிழகம். அடி அடியாக மண்ணுக்குள் புதைந்து போன அந்த சின்னக் குழந்தையை மீட்க முடியாத கையலாகாத நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.

குழந்தை சுஜித்தின் ம ரணச் செய்தி அவனது அண்ணனை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தம்பி திரும்பி வருவான் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். ஆனால் கடைசி வரை தம்பி மீளவேயில்லை என்பது அண்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

அதிர்ச்சிகளை சந்திக்கக் கூடிய வயதில் அவன் இல்லை. எனவே அவனால் தனது உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது என்று கூட தெரியவில்லை. தம்பியைக் காண முடியாத ஏக்கம் அந்த சிறுவனின் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது.

தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவலை தோய்ந்த விழிகளுடன் தனது தந்தையின் பிடியில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் அண்ணன்.. ஒரு பக்கம் கண்ணில் நீரே வற்றிப் போய் கதறிக் கொண்டிருக்கும் தாய்.. உற்றார் உறவினர்களின் சோக அழுகை.. சின்ன பெட்டிக்குள் தம்பியின் உடல்.. யாரும் பார்க்கக் கூடாத காட்சி.

சவப்பெட்டியில் குழந்தை சுஜித் உடல் : ஊரோடு சேர்ந்து வானமும் அழுகின்றது!!

குழந்தை சுஜித் உடல்

ஆள்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பான விவரம் ஏதும் வெளியிடவில்லை.

சுமார் ஒன்றை மணி நேரத்தில் சிறுவன் சுஜித்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆள்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது சிறுவன் சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அதிவேகமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எந்தவித காலதாமதமும் ஏற்படாமல் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனையை விரைந்து நடத்தினர்.

சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டவுடன் அவனுடைய உடலை வைப்பதற்கான சவப்பெட்டியை மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்தது. சிலுவை வரையப்பட்ட சவப்பெட்டி உடனடியாக தயார் செய்யப்பட்டு அது உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து சவப்பெட்டி இறக்கப்பட்டு அதில் சுஜித் உடல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்களை கண்கலங்கச் செய்தது.

சிறுவன் சுஜித் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சென்று உடலை நடுக்காட்டுபட்டிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சிறுவன் சுர்ஜித் உ டலுக்கு உடற்கூராய்வு நிறைவு : கண்ணீரில் தத்தளிக்கும் தமிழர்கள்!!

சிறுவன் சுர்ஜித்

ஆழ்துளை கிணற்றில் இருந்து 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன் சுர்ஜித்தின் உ டல் பிரேத பரிசோதனை நிறைவடைந்தது.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1மணி நேரம் இந்த உடற்கூராய்வு நடைபெற்றது. தொடர்ந்து குழந்தை சுஜித்தின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறுவன் சுர்ஜித்தின் உ டலை வைக்க சிறிய அளவிலான சவப்பெட்டி பிணவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

காலை 6மணி அளவில் சவப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிதைந்த நிலையில் சிறுவன் சுர்ஜித்தின் உடல் மீட்பு : கண்ணீரில் தமிழகம்!!

சிறுவன் சுர்ஜித்

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தின் உ டல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தற்போது ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு, சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான், குழந்தை உ யிரிழந்த நேரம் குறித்த தகவல் தெரியவரும்.

முதல் இணைப்பு : மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் ம ரணமடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

உடல் சிதைந்து தற்போது துர்நாற்றம் வரத்துடங்கியுள்ளதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார். 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கையில் சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் தற்போது காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், குழிக்குள் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் இருந்து சிறுவன் உ டல் அ ழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் குழந்தை சுர்ஜித் ம ரணமடைந்து விட்டதாகவும், குழந்தையின் உ டல் மீட்பது குறித்து மீட்புபடையினரின் தகவல் குறித்து அடுத்து அறிவிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான இறுதியான அறிவிப்பை மருத்துவர்களின் இறுதி அறிக்கைக்கு பின்னர் தெரிவிப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார்.

தடையாக இருந்த பாறை அகற்றப்பட்டது : சுர்ஜித் விரைவாக மீட்கப்படுவாரா?

சுர்ஜித் விரைவாக மீட்கப்படுவாரா?

திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது வரையிலும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 25ம் திகதி மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் அருகில் மற்றுமொரு கிணறு தோண்டி, பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, ரிக் இயந்திரம் கொண்டு மற்றுமொரு கிணறு தோண்டிய போதிலும், அந்த பகுதி கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக இருந்தது.

இதனால், 76 மணி நேரம் கடந்துள்ள நிலையில், சிறுவனின் நிலை குறித்து அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது, மீட்பு பணிக்காக தோண்டப்படும் குழிக்குள் இடையூராக இருந்த பெரிய பாறை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் சில மணி நேரங்களில் சிறுவன் சுர்ஜித் மீட்கப்படலாம் என இந்திய ஊடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பொய்யான வாக்குறுதி தர விரும்பவில்லை : சுர்ஜித்தின் தற்போதைய நிலை குறித்து நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!!

சுர்ஜித்தின் தற்போதைய நிலை

திருச்சி மாவட்டத்தில் ஆள்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை குறித்து பொய்யான வாக்குறுதி தர விரும்பவில்லை என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆள்துளை கிணற்றில் சிக்கிய 70 மணி நேரத்தில் மீட்டெடுத்தால் சிறுவனை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தரப்பு ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில்,

தற்போது பல தடங்கல்களை கடந்து மீட்கும் பணி 4வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில் சிறுவன் சுஜித்தின் தற்போதைய நிலை குறித்து களத்தில் இருக்கும் நிபுணர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தங்களால் பொய்யான வாக்குறுதிகளை தர விரும்பவில்லை என கூறும் நிபுணர்கள் தரப்பு, இருப்பினும் நம்பிக்கை கைவிடவில்லை எனவும் கண்டிப்பாக மீட்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த அந்த நாள் காலை, சிறுவன் சுர்ஜித் வெறும் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டதாகவும், மதியம் உணவருந்தாமல் விளையாட்டில் நேரத்தை செலவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில்,

குழியில் சிக்கி நான்கு நாட்களாக 2 வயது சிறுவனால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மட்டுமின்றி, அதுபோன்ற ஆழ்துளை கிணற்றுக்குள் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் எனவும், வெறும் நாலரை அங்குலம் கொண்ட இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுவனின் நிலை உண்மையில் கவலை தரும் வகையிலேயே இருக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீபாவளி தினத்தன்று கிளிநொச்சியில் ஒருவர் அ டித்துக் கொ லை!!

இயக்கச்சி பகுதியில்..

தீபாவளி தினமான நேற்று கிளிநொச்சியில் இயக்கச்சி பகுதியில் ஒருவர் அ டித்துக் கொ லை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. பளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கா யமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சி கிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

இயக்கச்சியை சேர்ந்த 57 வயதுடைய தர்மலிங்கம் தங்கராசா என்பவரே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலையில் ஏற்பட்ட மோ தல் மாலையில் கொ லையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அ டித்து கொ லை செய்ததாக தெரிவிக்கப்படும் நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நபர்களையும் பொலிஸார் தேடிவருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுர்ஜித்தை மீட்க அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் தமிழகம் வருகை!!

சுர்ஜித்தை மீட்க..

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சுர்ஜித்தை மீட்க பஞ்சாபில் இருந்து விவசாய தொழில்நுட்ப நிபுணர்கள் இருவர் இன்று இரவு தமிழகம் வரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க 74 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தை 88 அடியில் சிக்கியுள்ள நிலையில், அதிநவீன போர்வெல் இயந்திரத்தால் 55 அடியை எட்டுவதே சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் குழந்தையை மீட்பதற்காக பஞ்சாபில் இருந்து வீரேந்திர சிங், குருஜிந்தர் சிங் என்கிற அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் 2 பேர் தமிழகம் வர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் இன்று இரவு 11 மணிக்கு விமானம் மூலமாக திருச்சி வருகின்றனர். ஏற்கெனவே, பஞ்சாபில் 3 குழந்தைகளை இதுபோன்று ஆழ்துளை கிணறுகளில் இருந்து மீட்ட அனுபவம் வாய்ந்தவர்கள்.

சுர்ஜித்தை மீட்க தமிழக அரசு சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவையும் அரசு ஏற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியாவில் பிரச்சாரக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச!!

கோத்தபாய ராஜபக்ச

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (28.10) மழைக்கு மத்தியில் அதிகளவான ஆதரவாளர்களுடன் இடம்பெற்றது.

வவுனியா, வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் மழைக்கு மத்தியில் 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூடத்திற்கு 11 மணியளவில் மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரவாளர்கள் கோசமெழுப்பி வரவேற்றிருந்தனர்.

இதனையடுத்து வடக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பாக கோத்தபாய கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, கே.கே.மஸ்தான் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் தங்கச் சங்கிலி அபகரிப்பு!!

தங்கச் சங்கிலி அபகரிப்பு

வவுனியா – பூந்தோடம், அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலிற்கு வழிபடச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சனிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலில் வழிபடச் சென்ற பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இரு இளைஞர்களையும் துரத்திச் சென்றபோதிலும் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவ்வழியாக வாகனம் ஒன்றில் வந்தவர்களிடம் சங்கிலி திருடப்பட்ட விடயங்களைத் தெரிவித்து தப்பிச்சென்ற இளைஞர்களின் அடையாளங்களையும் தெரிவித்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரின் தகவல்கள் தெரியும் என்று பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருடன் இணைந்து சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை இளைஞர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மற்றைய இளைஞனையும் கைது செய்துள்ள பொலிஸார் இருவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும்,

இவர்கள் வவுனியாவில் அண்மையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் வாகன விபத்து : உயிர் தப்பினார் சாரதி!!

வாகன விபத்து

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இன்று பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பயணித்த கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது வாகனத்தில் பயணித்த வாகன சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு

எழுந்து வா சுர்ஜித்… மீட்புப் பணி நடக்கும் இடத்தில் விண் அதிர கோஷமிடும் இளைஞர்கள்!!

கோஷமிடும் இளைஞர்கள்

மீட்புப் பணி நடக்கும் இடத்தில் எழுந்துவா சுர்ஜித் என்று கோஷமிட்டு இளைஞர்கள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுர்ஜித்தின் மீட்பு பணிகள் நெடுக்காட்டுப்பட்டியில், நடைபெற்று வருகின்றது. அங்கு மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

மேலும், அங்கு பல அரசியல் தலைவர்கள் வந்து கொண்டு இப்பதால், பொலிசார் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு குழுமியிருக்கும் மக்களில் சில இளைஞர்கள் சுர்ஜித் மீண்டுவா என்ற வாசகத்துடன் கோஷமிட்டனர்.

அவர்களை பொலிசார் அமைதியாக இருக்குபடி அறிவுறுதிய நேரத்தில், வா க்குவாதம் ஏற்பட்டது. பின் பொலிசார், கோஷம் எழுப்பினால் மக்கள் வேறுமாதிரி புரிந்து கொள்வார்கள் என்று விளக்கினர்.

முன்னதாக இதுபோன்று மக்கள் கூறுவது பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கைவிடப்பட்ட முயற்சிக்கு திரும்பிய மீட்புக் குழுவினர் : பரபரப்பாகும் இறுதி நிமிடங்கள்!!

பரபரப்பாகும் இறுதி நிமிடங்கள்

மணப்பாறையில் சுர்ஜித் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஏற்கனவே கைவிடப்பட்ட முயற்சியை அதிகாரிகள் மீண்டும் கையில் எடுக்க உள்ளனர்.

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து 72 மணி நேரங்களாக தொடர்ந்து போ ராட்டம் நடக்கிறது. பல தொழிநுட்ப உதவிகள் நாடினாலும் எதுவும் பயனளிக்கவில்லை.

தொடக்கத்தில் தனியார் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் இறுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் களமிறங்கினார்கள். இவர்கள் 26 அடியில் குழந்தை சிக்கி இருக்கும் போது உள்ள சிறு ஓட்டை வழியாக கீழே அவர்களின் கருவியை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்கும் படி தயாராக இருந்தனர்.

ஆனால் அதற்கு முன்பே குழந்தை 70 அடிக்கு கீழே இறங்கி மேலே மண் மூடியதால் அந்த மண்ணை அகற்ற கால அவகாசம் இல்லாமல் முயற்சியும் பயனளிக்கவில்லை.

ஆனால் வீரமணி குழுவினரின் கருவியும், முயற்சியும் பலனளிக்கும் என்பதை அதிகாரிகள் அறிந்து கொண்ட நிலையில், இன்று மதியம் திடீரென வீரமணியை தொடர்பு கொண்ட அதிகாரிகள் மீண்டும் அதை முயற்சிக்க அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வீரமணி உள்பட 7 பேர் கொண்ட குழு மீண்டும் மணப்பாறைக்கு விரைத்துள்ளது.

எலும்புக்கூடாக மீட்கப்பட்ட தங்கை : காதலியால் போ தைக்கு அடியாமையான அண்ணனின் வெறிச்செயல்!!

அண்ணனின் வெறிச்செயல்

பெங்களூரில் தங்கையை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மங்களூரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கடந்த 8ம் திகதியன்று, தன்னுடைய 16 வயது மகள் பியோனாவை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு பியோனாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பியோனா இ றந்த பின்னரும் கூட, அவருடைய செல்போனில் இருந்து ஒரு இளைஞருக்கு தொடர்ந்து மெசஜ் சென்றிருப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு விசாரணையில், பிரான்சிஸ்க்கு 18 வயதில் சாம்சன் என்கிற மகன் இருக்கிறார். அவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த இளம்பெண்ணை 2017ம் ஆண்டு ராஜேஷ் என்பவர் பா லியல் து ஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சாம்சன் அன்றிலிருந்து க ஞ்சா உள்ளிட்ட போ தைப்பொருட்களுக்கு அடிமையாகி வேலை எதற்கும் செல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளார்.

யாரிடமும் பேசாமல் செல்போன் பயன்படுத்துவது, க ஞ்சா பயன்படுத்துவதை மட்டுமே பொழுதுபோக்காக கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த பிரான்சிஸ், சாம்சனின் செல்போனை பறித்துச்சென்றுள்ளார். ஆனால் பியானோவிற்கு மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார்.

இது சாம்சனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸாரின் சந்தேகம் சாம்சன் பக்கம் திரும்பியது. அவரை பின் தொடர்ந்த போது சந்தேகத்திற்குரிய இடத்திற்கு அடிக்கடி சென்றுவருவதை கவனித்த பொலிஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொ லை குற்றத்தை சாம்சன் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடைபெற்ற அன்று பியானோவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் சுத்தியலால் அ டித்து கொ லை செய்துவிட்டு, வீட்டிற்கு பின்புறம் 25கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்தில் பு தைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பியானோவின் ஆண் நண்பருக்கு செல்போனில் தொடர்ந்து மெசேஜ் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறிய இடத்தில் பொலிஸார் தோண்டியபோது, பியானோவின் எ லும்பு எச்சங்கள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு பியானோவுடையதா என்பதை கண்டறிய அவருடைய உடல் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் க டத்தல் வழக்கை கொ லைக்கு மாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.