மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் மழை : மணல் மூட்டைகளை அடுக்கும் வீரர்கள்!!

மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் மழை

திருச்சியில் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணல்மூட்டைகளை அடுக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மணைப்பறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி, 49 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகிறது.

பக்கவாட்டில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பனி 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 40 அடி ஆழம் வரை பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணி இரவு 11 மணியை நெருங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீட்பு பணி நடைபெற்று வரும் இடத்தில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மழை தண்ணீர் உள்ளே செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை மீட்புப் படை வீரர்கள் அடுக்கி வருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கேதாரகௌரி விரத நிறைவு!!

கேதாரகௌரி விரத நிறைவு

இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதார கௌரி விரதத்தின் கௌரி காப்பு கட்டும் நிகழ்வும் தீபாவளி விசேட பூஜை வழிபாடும் வவுனியாவின் பல ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.

அந்தவகையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு பிரபாகர குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதார கௌரி விரதம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி 21 நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு தீபாவளி தினமான இன்று கௌரிகாப்பு கட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

வரன் வேண்டியும், கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் குறித்த விரதம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

தீபாவளி தினமான இன்றைய தினம் கௌரிகாப்பு கட்டுவதற்காக பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருதை தந்து விசேட அபிடேகம், ஆராதனைகள், பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் காப்பினையும் கட்டி அம்பாளின் அருட்காடாற்சங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் பேஸ்புக் ஊடாக கசியும் அ ந்தரங்க தகவல்கள் : பயனர்களுக்கு எச்சரிக்கை!!

பேஸ்புக் ஊடாக

இலங்கையில் பேஸ்புக் ஊடாக பலரின் தனிப்பட்ட தகவல்கள் கசியும் ஆ  பத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் மோ சடி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கணிப்பு என கூறி அடையாளம் தெரியாத தரப்பினால் இணையத்தளங்களில் பேஸ்புக் ஊடாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றது. அத்துடன் பயனாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் www.votesl.com என்ற இணையத்தளத்தின் கீழ் நடத்தப்படும் கண்கானிப்பின் ஊடாக, பொது மக்களின் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படும் இணையத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் தொடர்பிலும் பொறுப்பு கூறும் தரப்பினர் தொடர்பிலும், எந்தவொரு தகவலும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையத்தளங்களின் பெயர்கள் பேஸ்புக் பக்கங்களும் இயங்குகின்றது. இந்த பேஸ்புக் பக்கம் இயங்கும் நாடு மற்றும் அந்த பேஸ்புக் பக்கத்தை கட்டுப்படுத்துபவர்கள் தொடர்பிலும் தகவல் வெளியிடுவதற்கு பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே தனிப்பட்ட தகவல்களை எவரிடமும் வழங்க வேண்டாம் என இலங்கையர்களிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

சோளம், உள்ளிட்ட விவசாய பொருட்கள் பயிரிட்டோம்…. ஆனால் இன்று : சுர்ஜித் தந்தை கண்ணீர்!!

சுர்ஜித் தந்தை கண்ணீர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை சந்தித்து ஆறுதல் கூறியபோது அவர் வருத்தத்துடன் சிலவற்றை தெரிவித்துள்ளார்.

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரிட்டோ கூறியதாக சிலவற்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.

அதில், அந்த இடத்தில் 6 வருடங்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பின் அதை மூடிவிட்டு சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்ததாகவும், ஆனால், அது ஆபத்தான துளையாக இருக்கின்றது என்று அப்போது நினைக்கவில்லை.

எப்படியாவது என்குழந்தையை மீட்டுக்கொடுங்கள் என்று வேதனையுடன் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய திருமாவளவன், தமிழக அரசு வேகமாக செயல்படுகிறது என்பதை நாம் அறிவோம், மாவட்ட கண்காணிப்பாளர்கள், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் இங்கு உள்ளனர்.

40 மணி நேரத்திற்கு மேல் மீட்கப்படாமல் இருக்கும் இந்த சுழல் குழந்தையின் உயிர் குறித்து அச்சம் ஏற்படுத்துவதாக தெரிவித்தார். தொடர்ந்து, இன்னும் பலமணி நேரம்மாகும் என்பது வேதனையளிக்கிறது.

விண்வெளியில் வளர்சியடைந்த நாம், ஆழ்துளைகிணறிலிருந்து குழந்தையை மீட்க கருவி கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. இது தமிழக அரசிற்கு மட்டுமல்ல, இந்திய அரசிற்கே சவால். இதுபோன்ற துளை போடும் ஒவ்வொருவரும், பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

துளையிட இரண்டாவது இயந்திரம் வந்தடைந்தது : வேகமெடுக்கும் சுர்ஜித்தை மீட்கும் பணிகள்!!

வேகமெடுக்கும் சுர்ஜித்தை மீட்கும் பணிகள்

சுர்ஜித்தை மீட்க இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து நெடுகாட்டுபட்டிக்கு வந்தடைந்துள்ளது.

சுர்ஜித்தை மீட்க அதிகரிகள், மற்றும் பல்வேறு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 7.05 மணியளவில் இருந்து ரிக் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஆழமாகவும் வேகமாகவும் துளையிட போர்வெல் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது நல்லபலன் தரவில்லை என்று மீண்டு ரிக் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு வருகின்றது.

ஆனால், தற்போது அந்த இடத்தில், லேசான மழை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து தற்போது துளையிடும் இரண்டாவது கருவி நெடுகாட்டுபட்டிக்கு வந்தடைந்துள்ளது.

இது 3மடங்கு அதிகம் திறன் கொண்ட கருவி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் இன்னும் வேகமாக இந்த பணிகள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதை குழிகளாக மாறும் ஆழ்துளை கிணறுகள் : தமிழக மக்களை கலங்க வைக்கும் சுர்ஜித் மீட்பு நடவடிக்கை!!

சுர்ஜித் மீட்பு நடவடிக்கை

தீபத் திருநாள் இம்முறை கலக்கத்தோடும் ஏக்கத்தோடும் ஆரம்பித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 இற்கு ஆழ் துளை கிணற்றுக்குள் வீழ்ந்து உ யிருக்குப் போ ராடிக் கொண்டிருக்கிறான் சிறுவன் சுர்ஜித்.

அவனை பாதுகாப்பாக மீட்பதற்காக மீட்புப் படையினர் போ ராடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களோ பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திருச்சி – மணப்பாறையில், நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் சுமார் 45 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பில் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த மீட்புப் படையினர் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது குழந்தையை மீட்பதற்காக கயிறு மூலம் அவரின் கையில் சுருக்கு போடப்பட்டது. ஒரு கையில் சுருக்கு போட முடிந்த போதும் மற்றைய கையில் போட முடியவில்லை என தெரியவருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை மீட்பதற்காக பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தடையின்றி ஒட்சிசன் வழங்கப்பட்டு வந்ததால் அனைவரும் நிம்மதியாக இருந்து வந்தனர். இரவு நேரத்தில் குழந்தை பயந்துவிட கூடாது என்பதற்காக அவரின் அம்மா மேரி குழந்தையுடன் பேசிய போது, “அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே” என அவர் கூற குழந்தை “உம்” என்று பதிலளித்துள்ளார்.

எனினும் நேரம் செல்லச்செல்ல குழந்தை சோர்வாகி விட பெற்றோர் ப தற்றமடைந்துள்ளனர். ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 45 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே குழி அமைக்கப்பட்டு பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி, குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித் தோண்டப்பட உள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.

குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்துள்ளதுடன் குழி தோண்டும் நடவடிக்கைகள் பரபரப்புடன் இடம்பெற்று வருகின்றன. புதிதாக தோண்டப்படும் குழியில், தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர்.

குழந்தை சுர்ஜித்தின் நிலையையும் அவனின் பெற்றோர்களின் க தறல்களைம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் பொது மக்கள் மீண்டு வா மகனே… நீ இரண்டாவது முறை பூமித் தாயிடம் இருந்து வெளியே வரப்போகிறாய்.

நீ பாதுகாப்பாக வெளியே வந்தால் மட்டுமே எங்களுக்கு இது தீபாவளி என்று சோகத்தோடு பகிர்ந்து வருகின்றார்கள். குழந்தையை மீட்கப் போ ராடும் மீட்புப் படையினரின் சிரத்தையையும் பொது மக்கள் பாராட்டியுள்ளதுடன் அனைத்து தரப்பினரும் இறை வழிபாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை முறைகேடாக அமைக்கப்படும் ஆழ் துளைக் கிணறுகள் குழந்தைகளுக்கான பு தைகுழிகளாக மாறுவதாகவும் இது தொடர்பில் அரசு மௌனம் காக்காமல் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதுடன், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதலில் அறிவித்த ஒன்றரை மணி நேரம்… துழையிட 7 மணி நேரம் கடந்து தொடரும் பரிதாபம்!!

தொடரும் பரபரப்பு

சுர்ஜித்தை மீட்க பக்கவாட்டி போடப்படும் துழை ஒன்றரை மணி நேரத்தில் முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் துழையிடும் பணிகள் நிறைவடையவில்லை.

சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துழை கிணற்றில் விழுந்து 45மணி நேரங்கள் கடந்துவிட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முன்னதாக பல முயற்சிகள் கையாண்டு தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது பக்கவாட்டில் ரிங் இயந்திரம் கொண்டு துழையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் துவங்கும் முன் 1 1/2 மணி நேரத்தில் முடிக்கப்படும் என்று அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 7மணி நேரம் கடந்தும் இந்த பணிகள் நிடைவடையவில்லை. குறிப்பாக பாறைகள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால், துழையிடும் பகுதியில் பல சிக்கல்கள் நீடிப்பதாக அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப் படையினர்!!

விசேட ரோந்து நடவடிக்கையில்..

வவுனியாவில் பீலட் பைக்கிளில் விசேட ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அவ்வப்போது பீல்ட் பைக்கை நிறுத்தி சில பகுதிகளில் காவல் கடமைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி தினமான இன்று விசேட அதிரடிப்படையினரின் இத்தகைய செயற்பாட்டால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

சுர்ஜித்தை மீட்க மூச்சை அடக்கி குழியில் இறங்க தயாராகும் வீரர்கள்!!

சுர்ஜித்

குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் 7 வீரர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

குழந்தையை மீட்டும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தேசிய மீட்பு குழுவினர், மற்றும் 6 தனி நபர்கள் முயற்சித்தனர். இந்நிலையில், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ரிங் இயந்திரம் மூலம், பக்கவாட்டில் 110 அடி ஆழத்தில் குழி தோண்ட முடிவு செய்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும், அவ்வாறு குழி தோண்டப்படும் பொழுது குழியில் இறங்கி குழந்தையை மீட்க மூன்று தீயணப்பு வீரர்கள் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 7 பேர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், கண்ணதாசன், தீலீப் குமார்,மணிகண்டன் ஆகியோரும், ராஜராஜன் மற்றும் தனபால் ஆகிய இருவரும் மூச்சை அடக்கி குழியில் இங்கும் அளவிற்கு பயிற்சி பெற்ற இருவர் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெளிச்சத்திற்கு பேட்டரி, ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் கமெரா ஆகியவை அவர்கள் எடுத்து செல்ல உள்ளனர்.

43 மணி நேரம் கடந்த சுர்ஜித் மீட்புப் பணிகள் : அசைவின்றி கைகள் தெரிவதாக அமைச்சர் அதிர்ச்சிப் பேட்டி!!

சுர்ஜித்

சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், அது குறித்த தவல்களை சம்பவ இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மணப்பாறை நெடுக்காப்பட்டியில், சுர்ஜித்தை மீட்கும் பணிகள் விரைத்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி தற்போது 43மணி நேரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், குழந்தைய மீ ட்கும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அ திர்வுகளால் துகள்கள் அதிகம் விழாமல் இருக்கும்படி பார்த்து கொண்டிருப்பதாகவும், கை லேசாக தெரிவதாகவும், ஆனால் கையில் அசைவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஒவ்வொரு அடி குழி தோண்டும்போதும் ப தற்றத்துடன் கமெரா காட்சியை பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின், பெற்றோரிடம் சரிவர தகவல்களை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தம்பி எழுந்துவா…. வாசகத்துடன் சுர்ஜித்திற்காக காத்திருக்கும் இளைஞர்!!

தம்பி எழுந்துவா…

சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள இடத்தில், இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நேற்று முந்தினம் மாலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 42 மணி நேரத்திற்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், பொதுமக்கள் பலர் தீபாவளி பண்டிகை என்றும் பாராமல், சிறுவன் சுர்ஜித்திற்காக வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைப்பெற்று வருகின்றது. மேலும், சுற்றுவட்டார கிராமமக்கள் திபாவளியை முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் நபர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது அவரது சட்டையில் எழுத்துவா தம்பி என்ற வாசகத்துடன் சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறார்.

மேலும், அவர் குழந்தை குழியில் விழுந்த அன்று மாலையில் இருந்து சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

   

சிறுவன் சுர்ஜித்தை மீட்க மூச்சை அடக்கி குழியில் இறங்க தயாராகும் வீரர்கள்!!

சிறுவன் சுர்ஜி

குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் 7 வீரர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

குழந்தையை மீட்டும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தேசிய மீட்பு குழுவினர், மற்றும் 6 தனி நபர்கள் முயற்சித்தனர். இந்நிலையில், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ரிங் இயந்திரம் மூலம், பக்கவாட்டில் 110 அடி ஆழத்தில் குழி தோண்ட முடிவு செய்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும், அவ்வாறு குழி தோண்டப்படும் பொழுது குழியில் இறங்கி குழந்தையை மீட்கள் மூன்று தீயணப்பு வீரர்கள் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 7பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், கண்ணதாசன், தீலீப் குமார், மணிகண்டன் ஆகியோரும், ராஜராஜன் மற்று தனபால் ஆகிய இருவரும் மூச்சை அடக்கி குழியில் இங்கும் அளவிற்கு பயிற்சி பெற்ற இருவர் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெளிச்சத்திற்கு பேட்டரி, ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் கமெரா ஆகியவை அவர்கள் எடுத்து செல்ல உள்ளனர்.

20 அடியை எட்டிய குழி : இடையில் ஏற்பட்ட இடையூறு : சிறுவனை மீட்பதில் தொடரும் சிக்கல்!!

20 அடியை எட்டிய குழி

சுர்ஜித்தை மீட்க தோண்டப்படும் குழி சுமார் இரண்டு மணி நேரத்தில் 20 அடியை எட்டியுள்ளது. மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டியில், சுர்ஜித் என்ற 3வயது குழந்தை ஆழ்துளை கிணற்றி தவறி விழுந்ததை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

தற்போது 110அடி ஆழத்தில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த பணிகள் துவங்கி இரண்டு மணி நேரம் ஆனநிலையில் 20அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

ரிங் இயந்திரம் மூலம் தோண்டப்படும் குழி இவ்வளவு தாமதாமாக துழையிட காரணம், 17அடி குழி எட்டியதும் சிறிய பாறைகள் இருந்ததால் அ திர்வுகளை தவிர்க மொதுவாக துறையிட்டு குழி தோண்டப்பட்டுவருகின்றது. குழந்தை கீழே இறங்காமல் இருக்க கையை பிடிக்கும் வகையில் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றரை மணிநேரத்தில் குழி தோண்டிவிடலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்று நான்கு மணி நேரம் தோண்டி முடிக்க நேரம் எடுக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை சுர்ஜித்தை மீட்க 3வது நாளாக நீடிக்கும் போ ராட்டம் : 110 அடி ஆழத்தில் துளையிடும் பணி தீவிரம்!!

குழந்தை சுர்ஜித்

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீ ட்க ரிக் இயந்திரம் மூலகமாக குழி தோண்டும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

குழந்தை குழுக்குள் விழுந்து 38 மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், 3வது நாளாக குழந்தையை மீ ட்க வீரர்கள் போ ராடி வருகின்றனர்.

2 வயதான சுர்ஜித் விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து 2மீ தொலைவில் மற்றொரு துளையிடப்பட்டு வருகிறது. 1 மீட்டர் அகலத்தில் 110அடி ஆழத்தில் குழுி தோண்டப்படவுள்ளது.

குழி தோண்டும் இடத்தில் பாறைகள் இருக்கும் என்பதால் சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமார் 2 மணிநேரம் முதல் 4 மணிநேரம் வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தீயணைப்பு வீரர்களை குழிக்குள் இறக்கி குழந்தையை மீட்க திட்டம். கண்ணதாசன், திலீப் குமார், மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்கவுள்ளனர்.

சுரங்கம் தோண்டும் போது ஏற்படும் அ திர்வில் குழந்தை மேலும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லாக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஒளி விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான கலாச்சார போட்டி!!

ஒளி விழாவை முன்னிட்டு..

ஒளி விழாவை முன்னிட்டு வவுனியாவில் பாடசாலைகளுக்கு இடையில் கலாச்சார போட்டிகள் நடைபெற்றது.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் ஒளி விழா கலாசார போட்டி நிகழ்வுகள் இன்று (26.10) நடைபெற்றது.

ஒளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்வில் நடனம், பேச்சு, நாடகம் மற்றும் குழு நடனம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகள் நடுவர்களால் பார்வையிடப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றிபெறும் பாடசாலைகளுக்கு ஒளி விழா அன்று பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட 25 பாடசாலைகள் குறித்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தன.

குழந்தை மீட்பு நடவடிக்கையில் கடும் பின்னடைவு : சுஜித்தை மீட்க அதிகாரிகளின் திட்டம் இதுதான்!!

குழந்தை மீட்பு நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க இதுவரையான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அதி நவீன கருவியான ரிக் இயந்திரத்தை வரவழைக்க அதிகாரிகள் தரப்பு முடிவு செய்துள்ளது.

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணறு ஒன்றில், விழுந்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 30 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த சுஜித் தற்போது 85 அடி ஆழத்திற்கு கீழே நழுவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து புதிய முயற்சியாக, குழந்தை சிக்கி உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு பள்ளம் தோண்டி சுரங்கம் அமைத்து, 3 தீயணைப்பு படை வீரர்களை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுமார் மூன்று மீற்றர் தூரத்தில் இந்த பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் எனப்படும் கருவி இதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அதி நவீன வசதிகள் கொண்ட இந்த கருவியானது எண்ணை கிணறுகள் உள்ள பகுதிகளில் எளிதாக துளையிட்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. செல்போன் டவர் போல மிக உயரமானது. ஆனால் இந்த கருவியை நிகழ்வு இடத்துக்கு வந்து சேர்வதற்கு குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகுமாம்.

அதன்பிறகு 90 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். எனவே நாளை அதிகாலையில் தான் குழந்தையை மீட்பதற்கான, வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அனைத்து உபகரணங்களுடன், சுரங்கத்தின் வழியே உள்ளே சென்று குழந்தையை மீட்பதற்காக, 3 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.