வவுனியாவில் தீபாவளியினை முன்னிட்டு 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகள்!!

தீபாவளியினை முன்னிட்டு..

தீபாவளி திருநாளை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தினரின் நலனை கருத்தில்கொண்டு தமிழ் விருட்சம் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க லண்டன் வாழ் சட்டத்தரணி இ.இரட்னசிங்கம் மற்றும் அவரது மகள் வைத்திய கலாநிதி திருமதி மு.தர்சினி,

அவரது மகன் குமரன் மருமகள் திருமதி கு.மாயா அவர்களின் நிதிப்பங்களிப்பில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 70 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26.10.2018) காலை வவுனியா பிரதேச கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா செட்டிக்குளம், புளியங்குளம், கனகராயன்குளம், நெடுங்கேணி , தாலிக்குளம், சிதம்பரபுரம் போன்ற பல்வேறு பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த பெண் தலைமைத்துவம், மற்றும் மாவீர, முன்னாள் போ ராளி, கணவன் கா ணாமல் போன வறுமைக்கோட்டிற்குட்பட்ட 70 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ மா என அத்தியாவசிய 10 பொருட்களடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கிப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், உறுப்பினர்களான இராமச்சந்திரன், விக்னா, மாதவன், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உலர்உணவுப் பொதியினை வழங்கி வைத்தனர்.

200 நகரங்களை அழிவிலிருந்து மீட்ட சிறுவன் : உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரே ஒரு புகைப்படத்தால் நேர்ந்த மாற்றம்!!

ஒரு புகைப்படத்தால் நேர்ந்த மாற்றம்

பிரேசிலில் இடுப்பு அளவு நீரில் கடற்கரையில் உடல் முழுவதும் எண்ணெய் உடன் நின்றுக்கொண்டிருந்த சிறுவனின் புகைப்படம் வைரலானதை அடுத்து 200 நகரங்கள் சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து மீட்க்கபட்டுள்ளது.

ஆகஸ்ட் 30-ம் திகதி வடகிழக்கு Paraiba மாநிலத்தின் கரையிலிருந்து எண்ணெய் கசிவு முதன்முதலில் காணப்பட்டது, இப்போது அது 2,250 கி.மீ கடற்கரையில் பரவியுள்ளது. ஏழை பிராந்தியத்தில் அழகான கடற்கரைகளை சுற்றுலாவை நம்பியுள்ள சுமார் 200 நகரங்கள் இதானல் பாதிக்கப்பட்டன.

அரசாங்கம் நெருக்கடிக்கு பதிலளிப்பதில் மெதுவாக இருப்பதாகவும், வடகிழக்கு பிரேசிலைத் தாக்கிய மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு என்று பல வல்லுநர்கள் கூறியதைக் கையாள்வதற்கு சரியான திட்டங்களை வழங்கத் தவறிவிட்டதாகவும் சுற்றுச்சூழல் குழுக்கள் புகார் தெரிவித்தன.

இந்நிலையில், பிரேசிலில் மாசுப்பட்ட இடுப்பு அளவு கடல் நீரில், உடல் முழுவதும் எண்ணெய் உடன் சிறுவன் ஒருவன் நடந்து செல்வதை புகைப்படக்காரர் ஒருவர் படம் எடுக்க அது வைரலானது.

அக்டோபர் 21-ம் திகதி, Pernambuco மாநிலத்தில் உள்ள Cabo de Santo Agostinh-ல் உள்ள Itapuama கடற்கரையில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வடகிழக்கு பிரேசில் கடற்கரையில் பரவி வரும் எண்ணெய் மாசுபாட்டை சிறுவன் சுத்தம் செய்யும் போது எடுத்த படம் அது.

அந்த படத்தில் இருந்த 13 வயதான Everton Miguel dos Anjos என்ற சிறுவன், நான்கு சகோதரர்கள் மற்றும் பல உறவினர்களுடன், அன்றைய தினம் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் கடற்கரையை சுத்தம் செய்யவும், கரையில் உள்ள பாறைகளில் இருந்து எண்ணெயைத் துடைக்கவும் முயன்றனர்.

சட்டை அழுக்காகும் என்பதால், குப்பையில் இருந்த பிளாஸ்டிக் பையை உடை போல வடிவமைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட படங்களை பார்த்தபோது அவரது தாயார் அவரை திட்டியதாக Anjos புகைப்படக்காரரிடம் கூறியுள்ளார்.

புகைப்படம் எடுக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை இரா ணுவம் கையகப்படுத்தியது, மேலும் குழந்தைகளுக்கு உதவ அனுமதிக்கப்படவில்லை. இந்த கசிவின் தொடக்கத்திலிருந்து 1,000 டன்களுக்கும் அதிகமான எண்ணெய் மீட்கப்பட்டுள்ளதாக பிரேசில் க டற்படை தெரிவித்துள்ளது.

சிறுவன் சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றிப் பிடித்த சிறிய ரோபோ : பரபரப்பான இறுதி நிமிடங்கள்!!

பரபரப்பான இறுதி நிமிடங்கள்

அண்ணா பல்கலைகழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ, ஆழ்துளை கிணற்றுக்கு சிக்கியுள்ள சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில், அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனர்.

26 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில், மூன்றாவது முயற்சியாக அதிநவீன காமிரா, விளக்கு பொருத்தப்பட்ட ரோபோ அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ, 100 அடிக்கும் கீழே சிக்கிக்கொண்டிருக்கும் சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றிக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இன்னும் சில மணி நேரங்களில் சிறுவனை மீட்கும் பணிகள் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊருக்கு செல்ல முடியாமல் த வித்த இலங்கைத் தமிழர்கள் : விமானத்தில் பயணிக்க உதவிய பெண் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

இலங்கை தமிழர்களான இருவர் எ ல்லையை தா ண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பாஸ்போர்ட் பெற்று தந்து பெண் அதிகாரி தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த மீனவர்களான சக்திவேல் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் எ ல்லை  தாண்டி இந்திய பகுதிக்குள் மீன் பிடித்த பு காரில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்‍கப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் அ வதிப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்களை தயார் செய்தார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜ்குமார் மற்றும் சக்திவேலை விமானத்தில் ஏற்றி ஜெயந்தி இலங்கைக்கு வழியனுப்பி வைத்தார்.

இதற்கு முன்னர் இருவரும் அளித்த பேட்டியில், எங்கள் மீது சு மத்தப்பட்ட பு கார் பொய் என நாங்கள் நிரூபித்த பின்னரே வி டுதலை செய்யப்பட்டோம்.

ஆவணங்கள் இன்றி த வித்த எங்களுக்கு எல்லா உதவியும் செய்த ஜெயந்திக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நெகிழ்ச்சியோடு கூறினர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இது வரை மீட்கப்பட்ட குழந்தைகள் : புகைப்படங்களுடன் வெளியான தகவல்!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து..

திருச்சியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள நிலையில் இதுவரை ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகள் குறித்து தெரியவந்துள்ளது.

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் 26 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் ஆழ்துளை கிணறுகளிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான தகவல்களை காண்போம்.

ஜனவரி 2019 : மத்திய பிரதேச மாநிலம் சிங்ரவ்லி மாவட்டத்தில் 3 வயது குழந்தை ஒன்று 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.

பிப்ரவரி 2019 : மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 6 வயது குழந்தை ரவி பண்டிட் பில் 200 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இந்தக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்புக் குழு 16 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டது.

மார்ச் 2019 : கடந்த மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தின் ஹிசர் மாவட்டத்தில் 18 மாத குழந்தை ஒன்று 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இந்தக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்புக் குழு 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டது.

ஆகஸ்ட் 2018 : பீகார் மாநிலத்தில் சனா என்ற மூன்று வயது குழந்தை 110 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இந்தக் குழந்தையை 30 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்டது.

இதேவகையில், திருச்சியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுது கொண்டே கைகளை அசைக்கும் குழந்தை சுர்ஜித் : வீடியோ வெளியானது!!

சுர்ஜித்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் குழுவினர் வந்துள்ள நிலையில் சுர்ஜித் தனது கைகளை அசைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்து 2 வயது ஆண் குழந்தை சுர்ஜித் அக்கேடாபர் 25ம் திகதி மாலை 5.40 மணிக்கு ஆழதுணை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

கடந்த 17 மணி நேரத்துக்கு மேலாக அவனை மீட்க பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுர்ஜித்தை மீட்க 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தற்போது வந்துள்ளனர்.

மீட்புப் பணியில் மேலும் பின்னடைவு : 26 மணி நேரத்தை தாண்டிய போ ராட்டம் : 100 அடிக்கு கீழே நழுவிச் சென்ற குழந்தை!!

குழந்தை சுர்ஜித்

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் 24 மணி நேரத்தை தாண்டியுள்ள நிலையில், 80 அடியிலிருந்து 85 அடிக்கு நழுவி சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுர்ஜித் என்கிற 2 வயது குழந்தை, நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது, மழையால் பாதிக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு தவறி விழுந்தான்.

முதலில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை நேரம் செல்லச்செல்ல, ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணங்களால் 30, 70, 75, 80, 85 என தற்போது 100 அடி ஆழத்திற்கு கீழே சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

26 மணி நேரத்தை கடந்த நிலையில் பெரும் சவாலுக்கு மத்தியில் மீட்பு படை வீரர்களும் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என தமிழக மக்களும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தை 48 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் விற்பனையாகும் திருமணமான இளம் பெண்கள் : ஹோட்டலை முற்றுகையிட்ட பொலிஸார்!!

திருமணமான இளம் பெண்கள்..

பாணந்துறையில் திருமணமான அழகிய இளம் பெண் பணத்திற்கு விற்பனை செய்யும் ஹோட்டலை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது அதன் முகாமையாளர் உட்பட பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 – 35 வயதுடைய களுத்துறை, ரனவல, மெதமுலன மற்றும் தொம்பே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு தினமும் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் வருவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமணமாக அழகிய பெண்களை இந்த செயற்பாட்டுக்காக குறித்த கும்பல் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் சுஜித்தை மீட்க புதிய முயற்சி : பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கை!!

சிறுவன் சுஜித்

தமிழ் நாடு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயதுடைய சிறுவன் சுஜித் விழுந்து 23 மணத்தியாலங்கள் ஆகின்ற நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் குழந்தையை மீட்க முடியாத காரணத்தினால் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி நாடப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கருவிகளுடன் மீட்பு படையினர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புப் படையும் மீட்பு பணி நடவடிக்கையில் இறங்கி உள்ளதால், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி மிக தீவிரமாக நடக்கிறது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை இணைந்து குழந்தையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குழந்தையை வெளியே கொண்டு வரும் அதிநவீன கருவிகள் உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுவார் என்ற நம்பிக்கை தகவல் கிடைத்துள்ளது.

தற்போதைய நிலையில் உறிஞ்சி எடுக்கும் புதிய முறையை தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

பல வழிகளில் முயன்றும் அது பலன் தராமல் போனதால் தற்போது சிறுவனை அப்படியே சக்ஷன் எனப்படும் உறிஞ்சி எடுக்கும் முறையில் மேலே தூக்கும் முயற்சிகளை செய்யவுள்ளனர்.

தேசிய பேரிடர் தங்களுடன் கொண்டு வந்திருந்த நவீன கருவிகளை கிணற்றுக்குள் செலுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குழந்தையின் தலையில் உள்ள மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இறுதிக் கட்ட முயற்சிகள் என்பதால் சுஜித் விரைவில் மீட்கப்படுவான் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய ஆர்வம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மீண்டு வா சுஜித் : கண்ணீருடன் முழு உலகமே காத்திருப்பு!!

சுஜித்

தமிழ் நாடு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 23 மணித்தியாலத்திற்கும் மேலாக தொடர்கிறது.

இந்த நிலையில் குழந்தை சுஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்க முயற்சி எடுக்கப்படுகிறது. இடுக்கி போன்ற கருவியால் மீட்க முடியாவிடில் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 10 பேர் கொண்ட பேராசிரியர் குழு மீட்பு குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கண்ணீர் மல்க “மீண்டு வா சுஜித்” என புகைப்படத்தை கையில் ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளனர்.

சிறுவன் சுஜித்தை மீட்க தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் துவா செய்ய இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்காக வந்தவாசியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் உணவகத்தில் இடியப்ப கொத்தினுள் இலையான் : நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!!

வவுனியாவில் உணவகத்தில்..

வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே காணப்படும் பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் இலையான் காணப்பட்டதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் இன்று மதியம் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் இடியப்பகொத்து வாங்கியுள்ளார். இதன்போது வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட இடியப்ப கொத்தினுள் இலையான் காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து குறித்த வாடிக்கையாளர் உணவை பரிமாறிய ஊழியரிடம் இவ்விடத்தினை தெரிவித்துள்ளார். இதன் போது அவ் உணவை மீள பெற்றுக்கொண்ட உணவகத்தின் ஊழியர் இலையானை எடுத்துவிட்டு மீண்டும் அதே உணவை வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளார்.

ஊழியரின் செயற்பாட்டினை அவதானித்த வாடிக்கையாளர் வவுனியா சுகாதார திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த உணவகத்திற்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் உணவகத்தினை பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன் போது அவ் உணவத்தில் சுகாதார சீர்கேடும் நிலவுவதாக தெரிவித்து அவ் உணவத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதர்களினால் நீதிமன்றத்தில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த உணவகம் மீதான வழக்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இம்மாதம் 29ம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வவுனியாவில் களைகட்டும் தீபாவளிப் பண்டிகை : நகரத்தில் குவிந்த மக்கள்!!

தீபாவளிப் பண்டிகை

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் புத்தாடைகள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தீபாவளி பண்டிகை நாளைய தினம் (27.10.2019) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக வவுனியா நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த வருடத்தினைவிட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி மீது தா க்குதல்!!

முச்சக்கர வண்டி சாரதி

வவுனியா பேருந்து நிலைய முச்சக்கர வண்டி சா ரதியை  தா க்கிய இ ளைஞன் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளதுடன் தா க்குத லுக்கு பயன்படுத்தப்பட்ட ஆ யுதங் களும் மீ ட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

இன்று அதிகாலை 1.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்த இளைஞன் ஒருவன் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் சென்று இறங்கியுள்ளார்.

முச்சக்கர வண்டிக்கான வாடகை பணத்தை 250 ரூபா என முச்சக்கர வண்டி ஓட்டுனர் கேட்கவும் பணத்தை தர முடியாது எனக் கூறி முச்சக்கர வண்டி சாரதியை ஆ யுத த்தால் தா க்கிய துடன் முச்சக்கர வ ண்டியையும் தா க்கி சே தமாக்கி யுள்ளார்.

இதில் கா யமடைந்த முச்சக்கர வண்டி சாரதியான 51 வயது குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சி கிச்சைக்காக அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸார் அ திரடியாக நடவடிக்கை மேற்கொண்டு குறித்த இ ளைஞனை கை து செய்ததுடன் அவ் இளைஞனிடம் இருந்த வா ள் மற்றும்  ஆ யுதங் களையும் மீ ட்டுள் ளனர். குறித்த இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம்!!

விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா அல் இக்பால் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று (25.10) முன்னெடுத்தனர்.

வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலய பிரதான வாயில் முன்பாக அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் ஆரம்பித்த குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் 3 கிலோ மீற்றர் தூரம் வரை இடம்பெற்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘ நேசிப்போம் நேசிப்போம் வாசிப்பை நேசிப்போம், வேண்டும் வேண்டும் ஊருக்கு ஒரு நூலகம், துப்பாக்கியை விட பெரிய ஆயுதம் புத்தகங்கள், வாசிப்போம் வாசிப்போம் நல்ல நூல்களை’ என கோசங்களை எழுப்பியிருந்ததுடன் சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது வாசிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் மாணவர்கள் ஊர்வலத்தின் போது கிராம மக்களுக்கு விநியோகித்தனர். குறித்த ஊர்வலத்தில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மாகாணமட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு!!

வடமாகாண மீலாத் விழாப் போட்டியில் முதலாமிடம் பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25.10) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வடமாகாண மீலாத் விழா போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு செல்லும் குறித்த பாடசாலையின் 7 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் சிரேஸ்ட ஆண்கள் பிரிவு பேச்சுப் போட்டியில் முதலாமிடம் பெற்ற ஜே.எம்.பஸால், கனிஸ்ட பெண்கள் பிரிவு கசிதா போட்டியில் முதலாமிடம் பெற்ற ஜே.தஸ்லிம்பானு, எஸ்.சஸ்னா, ஜே.எப்.ஜெனீரா, எவ்.நுசைரா, ஜே.எப்.சிப்லியா,  என்.எப்.அப்னான் ஆகிய மாணவர்கள் வெற்றிக் கிரீடம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம.ராசிக், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வீதியில் கணவன் கண்முன்னே துடி துடித்து இ றந்த மனைவி!!

வீதியில்..

தமிழகத்தில் சாலையில் இருந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் கணவன் முன்னே மனைவி துடிதுடிக்க இ றந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (40). அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வரும் இவருக்கு தேவி(35) என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதி சிப்பாய் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் ராமதாஸ் தன் மனைவியுடன் நசரதேபேட்டைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் இருந்த பள்ளம் மழைநீரால் நிரம்பியிருந்ததை அறியாமல், இருசக்கர வாகனத்தை பள்ளத்தில் இறக்கிவிட, இருசக்கர வாகனம் நிலைகுலைந்து, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியதால், இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் தேவியின் உடல் மீது கண்டெய்னர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக துடி துடித்து இ றந்தார். ராமதாஸ் லேசான காயங்களுடன் உ யிர் தப்பிய நிலையில், தன் மனைவி கண்முன்னே துடி து டிக்க இ றந்ததால் அதைக் கண்டு கதறினார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இ றந்து கிடந்த தேவியின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால், விபத்துகளில் சிக்கி இதுவரை மூன்று உ யிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த சாலையை சரி செய்யும் படி அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.