பா லியல் புகாரால் உ யிருடன் எ ரித்துக் கொ ல்லப்பட்ட மா ணவி வழக்கில் 16 பேருக்கு ம ரண த ண்டனை!!

வங்கதேசத்தில்..

வங்கதேசத்தில் ப ள்ளி மா ணவியை உயிருடன் எ ரித்துக் கொ லை செய்த 16 பேருக்கு ம ரண த ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்கதேசம் நாட்டை சேர்ந்த நுஸ்ரத் ஜஹான் என்கிற 19 வயது மாணவி, தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இவர் கடந்த மார்ச் 27ம் திகதியன்று பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிடம் பா லியல் அ த்துமீற லில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் புகார் தெரிவித்தார். அதனை வழக்காக பதிவு செய்த பொலிஸார், “இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை” என நுஸ்ரத்தை அ தட்டி மு கத்தில் வைத்திருந்த கையை எடுக்குமாறு கூறி வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அப்போது சில பள்ளி மாணவர்கள், நுஸ்ரத் மீது தான் த வறு உள்ளது எனவும், தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் போ ராட்டம் நடத்தினர்.

இதனால் மாணவி, பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே மு டங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இறுதி தேர்வு நடந்த சமயத்தில் தன்னுடைய சகோதரனை துணைக்கு அழைத்துக்கொண்டு நுஸ்ரத் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு நுஸ்ரத் மட்டும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, அவருடைய சகோதரன் வெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளே சென்ற நுஸ்ரத்தை திடீரென சூழ்ந்துகொண்ட சிலர், க டுமையாக தா க்கி மாடிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நின்றுகொண்டிருந்த சில மாணவிகள் அவருடைய கைகளை க ட்டி, உ டலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவை த்துள்ளனர்.

80 சதவிகித கா யங்களுடன் அங்கிருந்து தப்பிய மாணவி, இ றந்துவிடுவதற்குள் தன்னுடைய சகோதரனின் செல்போனில் ம ரண வா க்குமூலம் கொடுத்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஏப்ரல் 10ம் திகதியன்று ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இதற்கிடையில் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பா திக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் கு ற்றவாளிகளுக்கு க டுமையான த ண்டனை வாங்கி கொடுப்பதாகவும் உறுதி கொடுத்தார். இந்த நிலையில் வழக்கின் மீதான இறுதிக்கட்ட வி சாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கு ற்றவாளிகள் 16 பேருக்கு ம ரண த ண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

வீதியில் ச டலமாக கிடந்த 9 மாத கர்ப்பிணி : கதறி அழுத கணவன்.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

அதிர்ச்சி உண்மை

தமிழகத்தில் சாலையோரத்தில் ச டலமாக கிடந்த 9 மாத கர்ப்பிணி பெண் வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக கணவரே அவரை கொ லை செய்தது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மாத கர்ப்பிணி ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் சாலையோரமாக ச டலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில் இ றந்து கிடந்தவர் தினேஷ் குமார் என்பவரின் மனைவி சுஷ்மிதா (20) என்பது தெரியவந்தது.

சுஷ்மிதாவின் உ டலில் உ யிர் பிரிந்து 5 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதால் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் சுஷ்மிதா கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதால் அவர் நகைக்காக கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதினார்கள்.

ஆனால் இந்த வழக்கில் அ திரடி திருப்பமாக கணவர் தினேஷ்குமாரே மனைவி சுஷ்மிதாவை கொ லை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், தினேஷ்குமாரும், சுஷ்மிதாவும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தனது மாமியார் வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார். மருமகனுக்காக அவரது மாமனார் கனகராஜ் டாடா ஏஸ் வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து மனைவியை நன்றாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணமான வேறு பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது, இதை கண்டுபிடித்த சுஷ்மிதா கணவரை கண்டித்தார். இதையடுத்து காதலியின் அறிவுரையின்படி மனைவியை கொ ல்ல தினேஷ்குமார் திட்டமிட்டார்.

அதன்படி மனைவியை தனிமையான இடத்துக்கு அழைத்து சென்ற தினேஷ்குமார் அவர் க ழுத்தை நாய் பெல்ட்டால் நெ ரித்து கொ லை செய்துள்ளார். பின்னர் இது கொ ள்ளைக்காக நடந்த கொ லை என்பது போல காட்ட அவர் க ழுத்தில் இருந்த நகைகளை எடுத்து சென்றுள்ளார்.

இதன்பிறகு தனது வீட்டுக்கு வந்து சுஷ்மிதா இங்கு வந்தாரா என கூடி நாடகம் ஆடியதோடு அவர் ச டலம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை கட்டி பிடித்து அழுத்து புரண்டு தினேஷ்குமார் நடித்துள்ளார்.

அவரிடம் நாங்கள் விசாரித்த போது விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே என் மனைவியை நகைக்காக கொ லை செய்து விட்டனர் என வார்த்தைக்கு வார்த்தை கூறியதால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் உண்மையை ஒப்பு கொண்டார் என கூறியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராயைப் பார்த்து தான்.. பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சென்னைப் பெண்!!

அக்‌ஷரா ரெட்டி

‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்‌ஷரா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். துபாயில்‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. இதில் 22 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியாளராக பங்கேற்றனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த அக்‌ஷரா ரெட்டியும் கலந்துகொண்டார்.

இவர்கள் அனைவரும் ஒய்யார நடை, பொது அறிவு கேள்வி சுற்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் வாரியாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது ‘உலக தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய 16 வயது மாணவி யார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கிரெட்டா தன்பெர்க் என சென்னையைச் சேர்ந்த அக்‌ஷரா ரெட்டி சரியான பதிலளித்தார். இறுதியில் அவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் பேட்டியளித்த அக்‌ஷரா ரெட்டி, பிரஞ்ச அழகி பட்டம் வென்றது குறித்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘மொடலிங் என்பது சிறுவயதில் இருந்தே என்னுடைய உணர்வாக இருந்தது. விளையாட்டு துறையில் சாதிப்பவர்களை பார்த்து, நாமும் ஏதாவது சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அதே சமயத்தில் ‘மொடலிங்’ துறையில் இருக்கும் என்னால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.

இதற்காக நான் கடுமையாக உழைத்துக்கொண்டே இருந்தேன். ‘மிஸ் சூப்பர் குளோப்’ பட்டம் வென்றது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தாய்மை குறித்து நான் கூறிய பதில் எனக்கு புள்ளிகளை ஈட்டிக்கொடுத்தது. இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது, என்னுடைய குழந்தை பருவத்தை திருடிவிட்டீர்கள்.

என்னுடைய கனவை கலைத்துவிட்டீர்கள்’ என்று பள்ளி செல்லும் 16 வயது மாணவி உலக தலைவர்களை நோக்கி கூறினார், அவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி கேட்ட உடனே அனைவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் தான் கூறியிருப்பார் என்று நினைத்தார்கள்.

சுற்றுச்சூழலுக்காக போராடி வரும் சுவீடன் நாட்டு பெண்ணான கிரெட்டா தன்பெர்க் என்பதை அறிந்துகொண்டு, நான் அதனை விடையாக கூறினேன். இதற்கும் எனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. கடுமையாக உழைத்ததன் மூலம் ‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

தினந்தோறும் சராசரியாக 3 மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவிட்டேன். உலக அழகி பட்டம் வெல்லவேண்டும் என்பதை நினைத்து தூக்கம் இல்லாமல் தவித்தேன். பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. இந்த பட்டத்தை வெல்ல என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள்.

தமிழ் திரையுலகில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்ல நடிகர்கள் அனைவரோடும் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென் ஆகிய 2 பேரையும் பார்த்து தான் எனக்கு உலகி அழகி பட்டம் பெற வேண்டும் என்ற ஊக்கம் வந்தது’ என தெரிவித்துள்ளார்.

நகைகளை சாப்பிட்ட மாடு : எப்போது சாணம் போடும் என ஆவலாக காத்திருக்கும் குடும்பம்!!

நகைகளை சாப்பிட்ட மாடு எப்போது சாணம் போடும் என ஒரு குடும்பமே தினமும் உணவளித்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜனக் என்கிற தொழிலதிபரின் மனைவி மற்றும் மருமகள் கடந்த மூன்று தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை சமையலறையில் உள்ள ஒரு டப்பாவில் கழற்றி வைத்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் இதனை அறிந்திராத வீட்டில் இருந்த மூதாட்டி, எஞ்சிய காய்கறிகளை அந்த டப்பாவில் போட்டு வெளியில் இருந்த குப்பையில் வீசியுள்ளார்.

அப்போது அங்கு சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று காய்கறிகளை சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டது. இதற்கிடையில் நகைகள் காணாமல் போனதை அறிந்துகொண்ட ஜனக், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.

அப்போது காய்கறி கழிவுகளுடன் சேர்த்து காளை மாடு நகைகளையும் சாப்பிட்டிருப்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒருவழியாக மாட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் மாட்டை வீட்டின் அருகாமையிலே கட்டிவைத்து மூன்று நாட்களாக உணவு மற்றும் நீர் கொடுத்து சாணத்திற்காக காத்திருக்கின்றனர்.

பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீர் தற்கொ லை!!

நடிகை ராகவி

பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீரென தூ க்கு போ ட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மரத்தில் ஆண் ச டலம் ஒன்று தூ க்கில் தொ ங்கிய நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ச டலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராகவி பொலிஸாரிடம் அளித்துள்ள புகாரில், சசிகுமார், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். கடன்சுமை காரணமாக, அவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, அடகு வைத்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், இன்று அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கும் சசிகுமாருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மகேஷ், சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை, ‘கேமரா திருடன்’ என வாட்ஸப்பில் பரப்பி வந்ததால் அவர் மனமுடைந்து தற்கொ லை செய்துகொண்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

முன்னதாக நடிகை ராகவி, தமிழ் சினிமாவில் ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, மருதுபாண்டி, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும் சின்னத்திரையில் திருமதி செல்வம், மகாலட்சுமி போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியையை து ஷ்பிரயோகம் செய்ய முயன்ற 16 வயது மாணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்

தமிழகத்தின் குமரி மாவட்டத்தில், டியூசன் ஆ சிரியையிடம் 11ஆம் வகுப்பு மாணவன் த காத முறையில் நடக்க முயற்சித்ததுடன், க த்தியால் கு த்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி(25). இவர் பி.எட் படித்துவிட்டு, தனது வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவரின் மகன் ஜெனிஸ்(16) என்ற 11ஆம் வகுப்பு மாணவனும், மெர்லினிடம் டியூசன் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் மெர்லினின் வீட்டிற்கு சென்ற ஜெனிஸ், திடீரென்று அவரிடம் த வறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனை எதிர்பார்க்காத மெர்லின் அ திர்ச்சியில் கூ ச்சலிட்டுள்ளார். இதனால் பதற்றமான மாணவன் ஜெனிஸ், தன் கையில் மறைத்து வைத்திருந்த க த்தியால் மெர்லினின் உ டலில் ச ரமாரியாக கு த்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

ஆசிரியையின் அ லறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ர த்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உ யிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தலைமறைவாகியுள்ள ஜெனிஸ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவரை தேடி வருகின்றனர். டியூசன் ஆசிரியையை மாணவன் க த்தியால் கு த்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி உலக வாழ் தமிழ் மக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

எனினும் குறித்த பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகின்ற நிலையில் அடுத்த நாளான (28ஆம் திகதி) திங்கட்கிழமை இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் தவிர அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

என்ற போதும் விடுமுறை வழங்கப்படும் குறித்த தினத்திற்கு பதிலாக மற்றுமொரு நாளில் கற்றல் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து : இருவர் காயம்!!

முச்சக்கரவண்டி விபத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (25.10.2019) மதியம் முச்சக்கரவண்டி ஒன்று வீதியினை விட்டு விலகி பாதசாரிகள் நடைபாதையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வாடி வீட்டிற்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு விலகி பாதசாரிகள் நடைபாதையுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

‘உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு’ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலில் சர்வமத தலைவர்களிடம் கோட்டாபய ராஜபக்க்ஷவினால் கையளிக்கப்பட்டது. பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவிடமும் கையளிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியபோது, நாடு பிரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே தனது கொள்கை என்றும், அதே சட்டம் முழு நாட்டிற்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாட்டினரை தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

தனது உடனடி முன்னுரிமை பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் காலாவதியான நிதிச் சட்டங்களைத் திருத்துவதும் ஆகும் என்று ராஜபக்ஷ கூறினார்.

உள்ளூர் வணிகங்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்துக்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்!!

யாழ்ப்பாணம் – கொழும்பு

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று பாரிய விபத்தில் இருந்து நொடிப்பொழுதில் தப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது போது சாரதிக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக நடத்துனரை இரண்டு முறை அழைத்துள்ளார். எனினும் நடத்துனருக்கு சத்தம் கேட்காத நிலையில் பேருந்தில் இருந்த பயணி ஒருவரை நடத்துனரை அழைத்துள்ளார். நடத்துனரிடம் தகவல் செல்வதற்கு முன்னர், பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த சாரதி “அண்ணா…” என கூறிக் கொண்டே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதன் போது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் யாராவது பேருந்தை நிறுத்துங்கள் என கூச்சலிட்டுள்ளார். உடனடியாக சில பயணிகள் இணைந்து ஓடிக் கொண்டிருந்த பேருந்தை நிறுத்தியுள்ளனர்.

பேருந்தை யாராவது நிறுத்தவில்லை என்றால் அதில் பயணித்த அனைவருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என சம்பவத்தின் போது பேருந்தில் பயணி ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மயங்கி விழுந்த சாரதியை, பயணிகள் இணைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட விபரீதம் : தந்தை, மகன் ஆபத்தான நிலையில்!!

பேஸ்புக் பதிவால்..

வெல்லவாய பிரதேச சபையை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட தா க்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கித்துல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான தந்தை மற்றும் 13 வயதான மகன் ஒருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட செய்தி தொடர்பில் இடம்பெற்ற கருத்து வேறுப்பாடு நீண்ட தூரம் சென்றமையினால் அது வ ன்முறையாக மாறியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தா க்குதலில் காயமடைந்த மூவரும் நேற்று முன்தினம் இரவு தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஆபத்தான நிலைக்குள்ளான தந்தையும் மகனும், ஹம்பாந்தேட்டை வைத்தியசாலைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டனர். ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரை கைது செய்வதற்காக தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகப்புத்தகத்திற்கு இனி தடையில்லை : மஹிந்த!!

முகப்புத்தகத்திற்கு..

முகப்புத்தகத்தை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தடை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் என்பதால் பல்வேறு வகையிலும் முகப்புத்தகம் ஊடாக பிரசாரங்களும், கு ற்ற செயற்பாடுகளும் அதிகளவில் இடம்பெறுவதாக கு ற்றம் சுமத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ,இலங்கையில், பேஸ்புக் பயன்படுத்துனர்களால் inbox ஊடாக பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் கோர விபத்து : சிறுமி உட்பட மூவர் ப லி!!

கோர விபத்து

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட மூவர் உ.யிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் சிரம்பியடி பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாம் அமைந்துள்ள 4 ஆம் கட்டையில் அதிகாலை 12.20 மணிக்கு வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வானில் 11 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தின் போது 4 வயது சிறுமி உட்பட மூவர் உ யிரிழந்துள்ளனர். மடு தேவாலயத்துக்கு சென்று திரும்பிய வேளையே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போதே மூவர் உ யிரிழந்த நிலையில் ஏனைய 8 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த 8 பேரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு வயது சிறுமியான சத்துகி தினுஷா மற்றும் அவரது தயாரான 30 வயதுடைய அருணி மதுஷங்க மற்றும் 26 வயதான களுத்துறையைச் சேர்ந்த தினுக ஜயநாத் டயஸ் என்ற வேனின் சாரதியுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் : விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம்

வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை மலேரிய தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும், கால்வாய்களுக்குள்ளும், நகரையண்டிய பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் திடீர் பரம்பல் காணப்படுவதாகவும் வவுனியா பொது வைத்தியசாலையில் 46 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி!!

மாபெரும் கல்விக் கண்காட்சி

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி தொழிநுட்பக்கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தலைமையில் இன்று (24.10.2019) காலை 9.30 மணி தொடக்கம் 2.00 மணிவரை இடம்பெற்றது.

“நாளைய உலகம் நம் கையில் இன்றே இணைவோம் தொழிற்கல்வியுடன்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கல்விக் கண்காட்சியில் 12க்கு மேற்பட்ட பாடசாலைகளிலிருந்து கல்விப் பொது சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கண்காட்சியில் குழாய் இணைப்பு பொறியியல் பிரிவு , சுருக்கெழுத்து மற்றும் தட்டடெழுத்துப்பிரிவு , தகவல் தொழிநுட்பப்பிரிவு , வர்த்தகப்பிரிவு , எந்திரவியல் பிரிவு , வாகனம் திருத்தும் பிரிவு, இலத்திரனியல் பிரிவு, மின்னியலாளர் பிரிவு, குளிரூட்டல் மற்றும் வளிச்சீராக்கல் பிரிவு போன்ற பல்வேறு காட்சிக் கூடங்கள் தொழிநுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

இக் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு அகதி!!

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய வெளிநாட்டு அகதி ஒருவர் இராணுவம் மற்றும் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், மியன்மார், பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் 18 வயது இளைஞன் ஒருவர் காலை 4 மணியளவில் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி ஓடியிருந்தார்.

இதனையடுத்து காலை பொலிசாரும், இராணுவமும் இணைந்து புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள பகுதி மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள வீடுகள், வீதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது முகாமுக்கு முன்னால் உள்ள ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றின் கூரையின் பிளேற்றில் (மொட்டை மாடி) குறித்த இளைஞன் அவ் வீட்டாருக்கு தெரியாது மறைந்திருந்தமை பொலிசாரால் கண்டு பிடிக்கப்படடது.

பொலிசார் குறித்த இளைஞனை பிடிக்க முயன்ற போது வீட்டின் கூரையின் மேற்ப்பகுதியில் இருந்து குதித்து ஓட முயன்றுள்ளார்.

இருப்பினும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து மீண்டும் புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் காலை அப்பகுதியில் பரபரப்பான நிலையும், மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டிருந்தது.