யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் ம ரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, புளியங்குளம், பரிசங்குளம் புகையிரதக் கடவையில் பயணித்த போது புகையிரதத்தில் மோதுண்டு பரிசங்குளம் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் விக்கினன் என்பவர் ம ரணமடைந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
டென்மார்க்கில் இருந்து பிரான்ஸ் சென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ப டுகொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 33 வயதான றொனால்ட்டன் என்பவரே இவ்வாறு ப டுகொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பெரிய தாயாரின் இறு திச் ச டங்கிற்காக பிரான்ஸ் சென்ற நிலையிலேயே குறித்த நபர் கொ லை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
டென்மார்க்கில் வசிக்கும் குறித்த நபர், தனது பெரிய தாயாரின் இறு திச் சடங்கிற்காக குடும்பத்துடன் பிரான்ஸ் செற்றிருந்த நிலையில், அ டையாளம் தெ ரியாத ந பர்களினால் தா க்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 11ம் திகதி இடம்பெற்றுள்ளது. தா க்குதலுக்கு இலக்கான ந பர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சி கிச்சை ப லனின்றி உ யிரிழந் துள்ளார்.
குறித்த நபர் ப டுகொ லை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியாத நிலையில், பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து வீடியோ கால் மூலம் மனைவியிடம் பேசிய கணவன் அவரிடம் மிக மோசமாக நடந்து கொண்ட நிலையில் ஊருக்கு திரும்பிய அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜர்னைல் சிங். இவருக்கு ரமன்தீப் கவுர் என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் சில நாட்கள் கழித்து கணவர் குடும்பத்தார் புதுப்பெண் கவுரை வரதட்சணை கேட்டு கொ டுமைப்படுத்த தொடங்கினார்கள். இந்நிலையில் இந்தாண்டு கவுரின் கணவர் ஜர்னைல், போர்ச்சுகல் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கிருந்து தினமும் அவர் மனைவியுடன் வீடியோ காலில் பேசி வந்தார்.
கடந்த வாரம் வீடியோ காலில் பேசிய போது மனைவி கவுரின் உடைகளை க ழட்ட சொன்னார். ஆனால் அதற்கு அவர் மறுத்தும் ஜர்னைல் வலிறுத்தினார். இதையடுத்து வேண்டா வெறுப்பாக உடைகளை கவுர் களைந்த போது அதை கணவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொண்டார்.
பின்னர் அந்த புகைப்படத்தை மனைவியிடம் காட்டி கூடுதல் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் இதை எல்லோரும் அனுப்பிவிடுவேன் என மி ரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த கவுர் நடந்ததை தனது தந்தையிடம் கண்ணீருடன் கூற அவர் பொலிசில் புகார் அளித்தார்.
இந்த சூழலில் ஜர்னைல் வெளிநாட்டிலிருந்து நேற்று ஊருக்கு திரும்பிய நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். இதோடு அவர் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்க பெண் ஒருவர் இரவு உறங்கும்போது, தனது தனது 18 மாத குழந்தையின் அருகில், ஒரு ’ஆவிக்குழந்தை’ படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இல்லினாய்சைச் சேர்ந்த Maritza Cibuls (32), தனது குழந்தையின் தொட்டிலில், குழந்தைக்கு அருகில் ஆவிக்குழந்தை ஒன்று படுத்திருப்பதை, அதன் அறையில் பொருத்தப்பட்ட கமெரா மூலம் தனது அறையிலிருந்த கணினியின் திரையில் கண்டுள்ளார்.
தூக்கக்கலக்கத்தில் தனக்கு அவ்வாறு தோன்றுவதாக எண்ணிய Maritzaவை அந்த உருவம் தூங்கவிடாமல் தொ ந்தரவு செய்ய, டார்ச் லைட் ஒன்றுடன் அந்த அறைக்கே துணிந்து சென்றிருக்கிறார் அவர். அங்கு சென்று பார்த்தால், வித்தியாசமாக எதுவும் இல்லை. அறைக்கு திரும்பி வந்தால், மீண்டும் திரையில் அதே உருவம்.
தூங்கவும் முடியாமல், விழித்திருக்கவும் முடியாமல் ஒரு வழியாக இரவைக் கடத்தியிருக்கிறார் Maritza. மறு நாள் காலையில் எழுந்ததும், முதல் வேலையாக குழந்தையின் அறைக்கு சென்ற Maritza, குழந்தையை தூக்கிவிட்டு தொட்டிலை சோதித்திருக்கிறார்.
பிறகு, தான் பார்த்த ஆவி என்ன என்பது தெரியவர, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் Maritza.
உண்மை என்னவென்றால், குழந்தையின் தொட்டிலில் விரித்திருந்த துணியை எடுத்துப்பார்த்தால், அதற்கு அடியில் இருந்த மெத்தையில், ஒரு குழந்தையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
அதைத்தான் கமெரா படம் பிடித்து, ஆவிக்குழந்தையாக காட்டியிருக்கிறது. தான் எப்போதுமே மெத்தைக்கு ஒரு உறை போட்டுவிடுவதால், அந்த படத்தை நினைவில் வைக்கவில்லை என்றும், அன்று தனது கணவர் அந்த உறையை போட மறந்ததால், அந்த படம் கமெராவில் சிக்க, தான் அதை ஆவி என்று எண்ணி பயந்துவிட்டதாகவும் சிரிப்புடன் தெரிவிக்கிறார் Maritza.
கேரளாவில் ஹேமர் த்ரோ போட்டியாளரால் வீசப்பட்ட இரும்பு கு ண்டு தலையில் தாக்கி பள்ளி மாணவர் உ யிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அபீல் ஜான்சன் (17). இவர் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கேரள மாநில ஜூனியர் தடகளப் போட்டியில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார்.
கடந்த 4-ம் திகதி நடைபெற்ற தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் `ஹேமர் த்ரோ’ பிரிவில் தன்னார்வப் பணியில் ஈடுபட்டிருந்த அபீல், போட்டியாளர்களால் வீசப்பட்ட ஈட்டிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது `ஹேமர் த்ரோ’ போட்டியாளரால் வீசப்பட்ட 3 கிலோ எடையுள்ள இரும்புக் கு ண்டு அபீலின் தலையில் பலத்த வேகத்துடன் மோ தியது. இதனால் அவருக்கு மூளையில் கா யம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் உ யிருக்குப் போ ராடி வந்த அபீல் பரிதாபமாக உ யிரிழந்தார். இச்சம்பவம் அவரின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இ றந்த செய்தியை கேட்டு உடன் படித்த நண்பர்கள் க தறி அ ழுதனர்.
அபீல் ம ரணம் தொடர்பாக பேசிய பொலிசார், இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் மீது சட்டப் பிரிவு 338-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் திருமணம் முடிந்து கணவருடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட்ட பின்னர் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அவரின் உறவுக்கார இளைஞருக்கும் கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் மணமகனும், மணப்பெண்ணும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சிக்காக தனது உடையை மாற்றி வருவதாக அங்குள்ள அறைக்குள் சென்ற மணப்பெண் வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை.
இதையடுத்து அங்கிருந்த எல்லோரும் அவரை தேடியும் கிடைக்காததால் அங்குள்ள சிசிடிவி காட்சியை மணமகன் உள்ளிட்ட குடும்பத்தார் ஆய்வு செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் புதுப்பெண் இளைஞர் ஒருவருடன் காரில் ஏறி அந்த இடத்திலிருந்து தப்பி சென்றது அதில் தெரிந்தது. இதையடுத்தே புதுப்பெண் தனது காதலருடன் ஓட்டம் பிடித்தார் என தெரியவந்தது.
இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாயமான புதுப்பெண்ணை பொலிசார் தேடி வருகிறார்கள்.
தன்னைபோல் உருவம் கொண்ட 8 போலிகளை ஏற்பாடு செய்து தேர்வெழுத வைத்த ஆளும் கட்சி பெண் எம்.பி பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமன்னா நுஸ்ரத், குறைந்தது 13 தேர்வுகளில் எட்டு ஆள்மாறாட்டம் செய்பவர்களைப் பயன்படுத்தியதாகக் கூறி பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 18, வெள்ளிக்கிழமையன்று தேர்வு எழுதும் அறைக்குள் நுழைந்த உள்ளூர் ஊடகமான நாகோரிக் தொலைக்காட்சி, நுஸ்ரத்திற்கு பதிலாக தேர்வு எழுதிய நபரை வீடியோ எடுத்து வெளியிட்டது.
இந்த விவகாரமானது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னன், ‘தமன்னா நுஸ்ரத் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இனிமேல், பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெறும் எந்த தேர்வுகளுக்கு அவர் அனுமதிக்கப்படமாட்டார்’ என்று அறிவித்தார்.
இதுகுறித்து பெயரிடப்படாத கல்லூரி அதிகாரி ஒருவர் கூறுகையில், நுஸ்ரத் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வறையில் அவருடைய அடியாட்களால் போலி பாதுகாக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
செல்வாக்கு மிக்க குடும்பம் என்பதால் யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை எனக்கூறியுள்ளார்.
மின்னேரியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 43பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரச பேருந்தும் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3.30 இல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன் 43பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
களத்திற்கு விரைந்த மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
16 வயதான இளம் யுவதியை மூன்று வருடங்களாக வ ல்லு றவுக்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த யுவதி கீழே விழுந்து விட்டதாக கூறி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த யுவதி கடும் உ ளவியல் பா திப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிந்து அது குறித்து மொரொன்துடுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது யுவதியை இரண்டு பேரும் நீண்டகாலமாக வ ல்லுற வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 31 மற்றும் 45 வயதானவர்கள் எனவும், இவர்களில் ஒருவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் அங்கவீனமடைந்த நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து மொரொன்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பியகம பிரதேசத்தில் தனது நண்பியை அவமதிப்பதற்காக போலி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் தனது நண்பியின் புகைப்படங்களை ஆ பாசமாக மாற்றம் செய்து அவற்றினை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
பா லியல் ரீதியில் விருப்பம் உள்ளவர்கள் அவரை அழைக்குமாறு தொலைபேசி இலக்கத்தையும் பதிவிட்டுள்ளார். சந்தே நபரான பெண் கடந்த 18ஆம் திகதி மாலை பொலிஸாரால் கைது செய்யயப்பட்டுள்ளார்.
மேலும் அந்த பெண்ணின் போலி பேஸ்புக் கணக்கை பயன்படுத்திய தொலைபேசியையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சந்தேக நபரான பெண் ஆகிய இருவரும் பியகம பிரதேசத்தில் உள்ள நிறுவனத்தில் தொழில் செய்கின்றார். தொழில் ரீதியாக இருவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவ்வாறு புகைப்படங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பெண் 26 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட பெண் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
அவுஸ்திரேலியர்களை தன் ருசியான உணவால் கட்டிப் போட்டுள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயந்தி பாலகிருஷ்ணன். பொறியியல் படித்துள்ள ஜெயந்தி பாலகிருஷ்ணனுக்கு, தோசை கடை வைக்க வேண்டும் என்பது ஆசை.
திருமணத்திற்கு முன்பு இதை தன் தந்தையிடம் கூற அவரோ மறுத்துவிட்டார், திருமணத்திற்கு பின் கணவனின் வேலையால் அவுஸ்திரேலியா சென்று குடியேற நேர்ந்தது. அங்கு தனது கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜெயந்தி, ஆம் வியாழன் அன்று மார்க்கெட்டில் பலரும் உணவு ஸ்டால்கள் அமைப்பதை பார்த்து தானும் அப்படி தொடங்க முன்பதிவு செய்தார்.
பலரும் காத்திருப்பு பட்டியலில் இருக்க, சில மாதங்களில் ஜெயந்திக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெயந்தி வாரந்தோறும் ஸ்டால் அமைத்து சுவையான ருசியான தோசை வகைகளை சமைத்துக் கொடுத்தார்.
இவரது கைப்பக்குவத்துக்கு பலரும் அடிமையாகி போனார்களாம், விரைவில் சிறிய உணவகம் தொடங்குங்கள் என பலரும் அன்புக்கட்டயையும் போடத் தொடங்கினார்களாம். பல ஆண்டு முயற்சிக்கு பின்னர் 2008ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸில் Dosa House என்ற உணவத்தை தொடங்கினார்.
அவுஸ்திரேலியர்கள் மட்டுமின்றி சீனா, மலேசியா என பல வெளிநாட்டவர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் என நெகிழ்கிறார் ஜெயந்தி. மாவு அரைப்பது முதல் தோசை சுடுவது வரை அனைத்து வேலைகளையும் தன் கையால் செய்யும் ஜெயந்தி உதவிக்கு மட்டும் பெண் ஒருவரை நியமித்துள்ளா
பெங்களுருவில் ராம்ப் வாக் பயிற்சியின் போது கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஷாலினி (21) என்கிற மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ஃப்ரெஷர்ஸ் தின கொண்டாட்டங்களுக்கான “ராம்ப் வாக்” நடைப்பயிற்சி, கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷாலினி திடீரென சரிந்து விழுந்து அசைவில்லாமல் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், பி ரேத பரிசோதனை அறிக்கை மற்றும் எஃப்எஸ்எல் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதில் தொண்டையில் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரின் மகள் 9 வயதான ராஜஸ்ரீ. குடியிருப்பின் அருகே அமைந்துள்ள தனியார் பாடசாலையில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜஸ்ரீக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி வந்துள்ளது. இதனை சரி செய்ய அரசு உதவிபெறும் மருத்துவமனையான அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனையை அணுகியுள்ளார் செல்வம். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராஜஸ்ரீக்கு, காதில் இருக்கும் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்காக ராஜஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த சிறுமியை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
வேறு ஒரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய ட்ரான்சில் கட்டி அறுவை சிகிச்சையை, சிறுமிக்கு செய்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். பெற்றோர் தரப்பு கூறும் போது, சிறுமிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ட்ரான்சில் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வருங்காலத்தில் சிறுமிக்கு தொண்டையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தங்களுக்கு உரிய நிதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
பசுவின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து சமூகத்துக்கு உருக்கமான செய்தியை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசு ஒன்று, சாணம் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து பசுவை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சென்று முனிரத்தினம் மருத்துவ பரிசோதனை செய்தார்.
அங்கு பசுவை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கழிவுப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பசுவின் வயிற்றை கிழித்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கூறுகையில், அன்பான மாணவர்களே, இளைஞர்களே, நமது அன்பான பசுவுக்கு நாம் செய்துள்ளதை பாருங்கள்.
இனியாவது, பிளாஸ்டிக் உபயோகிப்பதை நிறுத்தி நம்முடன் வாழும் உயிரினங்களை காப்பாற்றுவோம் என உருக்கமாக பதிவிட்டு தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு என்ற கவிஞர் கண்ணாதாசன் வரிகளை மேற்கோள் காட்டி பசுவின் பெருமை குறித்து பதிவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் ம ர்மமான முறையில் கொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (35) என்பவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சோபனா (29) என்கிற மனைவியும், தேவா (11), சச்சின் (4) என இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 19ம் திகதியன்று வேலைக்கு சென்ற சோபனா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கணவர் அக்கம்பக்கத்தில் மனைவியை தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.
அப்போது கணவருக்கு போன் செய்த சோபனா, தனது மகன் தேவாவின் பிறந்த நாளுக்காக துணி வாங்கிக் கொண்டு வருவதாகவும், ஊருக்கு வரும் கடைசி பஸ்சை விட்டு விட்டதால் தனக்கு தெரிந்த நண்பரின் காரில் வீட்டிற்கு வருவதாகவும் இரவு 9 மணிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால் நள்ளிரவை தாண்டியும் கூட அவர் வீடு வந்து சேராததால் சந்தேகமடைந்த செந்தில், உடனடியாக பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பொலிஸாரும் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், திருச்செங்கோடு பகுதியில் க ழுத்து இ றுக்கப்பட்ட நிலையில் சோபனா ச டலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உ டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், அங்கிருந்த தடயங்களை வைத்து நகைக்காக கொ லை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் அவருடைய ஆடைகள் கிழிந்தும், கொண்டு வந்த பொருட்கள் சிதறியும் கிடந்ததால் து ஸ்பிரயோகம் செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இதற்கிடையில் சோபனாவின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்த போது, கணேஷ்குமார் (35) என்பவருடன் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்த அவரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வடமாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.ஜி.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் நான்காயிரத்து 140 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைகேடுகளாக 6 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றன. அவை தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சிறிய முறைப்பாடுகள்.
இருப்பினும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமுகமாக தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.