வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதிக்கு குடும்பப் பெண் ஒருவரை சிறைச்சாலை காவலர் அழைத்துச் சென்றமையால் சிறைச்சாலை காவலருக்கும், இளைஞர்களுக்குமிடையில் மோ தல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (22.10.2019) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு ஈரட்டைப் பகுதியில் இருந்து குடும்பபெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர் ஒருவர் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் செல்வதை அவதானித்த பெண்ணின் மகனும், கணவனும் குறித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கில் விடுதிக்குள் நுழைந்த போது அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது சிறைச்சாலை காவலர் எனக் தெரிவிக்கப்படும் குறித்த இளைஞனுக்கும் அவர்களுக்கும் (பெண்ணின் மகன் , கணவர்) இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சிறைச்சாலை காவலர் தொலைபேசியில் இவ்விடயத்தினை தெரியப்படுத்தியமையினையடுத்து மேலும் பல சிறைச்சாலை காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு நின்ற பெண்ணின் தந்தை மகன் மற்றும் இளைஞர்களுடன் மு ரண்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு கை கலப்பு ஏற்பட்டதுடன் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியின் போக்குவரத்தும் 30 நிமிடங்களுக்கு மேல் தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து 119 பொலிசாருக்கு தொலைபேசியூடாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இரு பகுதியினரையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் இது தொடர்பான விசாரணைகளையும் வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில், பேஸ்புக் பயன்படுத்துனர்களால் inbox ஊடாக பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் இலங்கைக்கான கொள்கை திட்ட முகாமையாளர் யசாஸ் அபேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “பேஸ்புக் நிறுவனம் முதல் முறையாக இலங்கையர் ஒருவரை, இந்தப் பதவிக்கு நியமித்துள்ளதாகவும்” கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் போலிச் செய்திகள், மற்றும் இனவாதக் கருத்துக்கள் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், சமூக ஊடகங்களின் மூலம் போலிச் செய்திகள், இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளம், கொழும்பு, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகமை கொடகம பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் பெண்ணொருவரை வ ல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரை மீகொட பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான மருத்துவரை , பெண்ணின் கணவர் தா க்கியதில் காயமடைந்துள்ளதுடன் அவர் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தா க்குதலுக்கு உள்ளான மருத்துவர் கொடகம பிரதேசத்தில் தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தை எதிர்நோக்கிய பெண், தனது மகனுடன் பாழடைந்த வீதி வழியாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது, காரில் வந்த சந்தேக நபரான மருத்துவர் வீதியில் காடான பகுதியில் வைத்து பெண்ணுக்கு தொ ந்தரவு கொடுத்துள்ளார்.
பெண் ச த்தமிட்டதை அடுத்து சந்தேக நபரான மருத்துவர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை கணவனிடம் கூறியுள்ளார். பெண்ணின் கணவன், மருத்துவரின் வீட்டை தேடி சென்ற போது, எதிரில் காரில் வந்த மருத்துவரை தா க்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச் சேர்ந்த இளைஞரொருவர் உலகமே வியந்து பார்க்கும் புதிய தொழில்நுட்பத்தில் புதிய வகையிலான சாதனமொன்றை உருவாக்கியுள்ளார்.
படுக்கையில் உள்ள நோயாளர்களின்,விசேட தேவையுடையவர்களின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யக்கூடிய தன்னியக்க நோயாளர் பராமரிப்பு இயந்திரம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.
எரிபொருள்,மின்சார செலவுகள் இன்றி நீரை மட்டுமே மூலதனமாக கொண்டு நோய் தொற்றுக்கள் ஏற்படாத வகையில் குறித்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரத்தில் நோயாளி நிமிர்ந்து அமரக்கூடிய வகையில் படுக்கை அமைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்டுபிடிப்பிற்கு ஆதரவளித்து நிறுவனங்கள் முன்வந்து குறித்த இயந்திரத்தை உருவாக்கி சந்தைக்கு விடுவதன் மூலம் பல நோயாளர்கள் பலன் பெற முடியும் என குறித்த இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான டேமியன் சூரி நேற்று நாட்டுக்கூத்து அரங்காற்றுகையொன்றின் போது உ யிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான Aubervilliers என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக “தங்கத் தமிழ் வேந்தன்” என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உ யிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது தமிழ் கலையுலகினர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – குருநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், குருநகர் இளைஞர் கலைக்கழகத்தின் மூலம் 1960களின் இறுதியில் கலையுலகிற்கு அறிமுகமாகியிருந்தார். அதன் பின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 1980களில் தயாரிக்கப்பட்ட பலிக்களம்” என்ற திரைப்படத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உ யிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து கலைஞர்கள் மற்றும் பொது மக்களுடன் இயல்பாக பலகி அவர்களின் பாராட்டுக்களைப் பெற்ற இவரின் இழப்பு குறித்து ஈழத்து கலையுலகத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதமொன்று தடம்புரண்டுள்ளதாக கலாவெவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் அவுக்கன – கலாவெவ பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது புகையிரதத்தின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் மரத்தினாலான சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன. எனினும் இந்த சம்பவத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தெரியவருகிறது.
புகையிரத என்ஜின் பாலத்தை கடந்து செல்ல முன் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதால் பாரிய விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த புகையிரதத்தில் 250 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தூ க்கிட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இந்த இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை பிரிவில் தங்கி நின்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வைத்தியசாலையின் மலசலகூடத்திற்குள் சேலைன் ஏற்றுவதற்கு பயன்படும் வயரின் மூலம் தூ க்கில் தொ ங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
குறித்த நபர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சம்பவத்தில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சி.நிரோஜன் என்ற 33 வயது இளைஞரே ம ரணமடைந்தவராவார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னையில் திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்ணுக்கு குழந்தை பிறக்க வழி செய்வதாக கூறி மோ சடி செய்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள். தியாகராயநகரை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் வித்யாவுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வியின் உறவினர் மாலதி என்பவர் அவருக்கு சாமியார் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது அந்த சாமியார் வித்யாவிற்கு செய்வினை இருப்பதாகவும், அதை நீக்கினால் உடனடியாக குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சாமியார் கேட்ட ரூ 1 லட்சத்தை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வியும், வித்யாவும் வந்தனர். அங்கு வந்த சாமியார், செல்வியிடம் ஒரு லட்ச ரூபாயினை வாங்கிய பின்னர் செய்வினை நீக்க, பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய பொருள்கள் மற்றும் கோழி ஆகியவற்றை வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
ஆனால் வெகுநேரம் ஆகியும் சாமியார் திரும்பி வராததால் ஏமாற்றம் அடைந்த செல்வி இது குறித்து பொலிசில் புகாரளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதோடு மோசடி சாமியாரை தேடி வருகிறார்கள்.
வவுனியா – பம்பைமடு, பெரியகட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.
குறித்த உழவு இயந்திரத்தை பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் திரும்ப முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி முற்றாக குடைசாய்ந்துள்ளது.
உழவு இயந்திரத்தில் பயணம் செய்த கணவன் தூக்கி வீசப்பட்டதுடன், மனைவி உழவு இயந்திரத்தின் கீழ் பகுதியில் சிக்கியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் ம ரணமடைந்துள்ளதாகவும், கணவன் சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரியவருகிறது. விபத்தில் பெரியகட்டுபகுதியை சேர்ந்த தனுசா (வயது 21) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணே உழவு இயந்திரத்தை செலுத்தியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களை கைவிட்ட பிள்ளைகளை, இ றப்பதற்குள் ஒருமுறை பார்க்க வேண்டும் என தவிக்கும் வயதான பெற்றோரின் பின்னணி மனதை கலங்கடிக்கும் விதத்தில் உள்ளது. தமிழகத்தின் நாகர்கோவிலில் உள்ள காலி இடத்தில் குடிசையில் வசித்து வந்தனர் கணேசன் (70) மற்றும் சரசு (65) தம்பதி. முன்னர் பட்டா நிலத்தில் வீடு கட்டி கணேசனின் பெற்றோர் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், ரயில் பாதை அமைக்கும் போது நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்து தற்போது மார்த்தாண்டத்தில் உள்ள பாலத்துக்கு அடியில் தான் கணேசன் மற்றும் சரசு ஆகியோர் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.
இவர்களுக்கு லட்சுமி என்ற மகளும் சத்யராஜ் என்ற மகனும் பிறந்தனர். குடை ரிப்பேர் செய்யும் வேலை பார்த்தும், செருப்பு தைத்தும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார் கணேசன். ஆனால் வளர்ந்து ஆளான பிறகு லட்சுமியும் சத்யராஜும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு ஆளுக்கு ஒரு திசைக்குச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து முதுமையில் வாடும் கணேசன் மற்றும் சரசுவை கவனித்து கொள்ளக் கூட ஆள் இல்லை. தற்போது தெருத்தெருவாக குடை ரிப்பேர் செய்வது, செருப்பு தைப்பது போன்ற வேலைகளை செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
பல சமயம் இவர்கள் பட்டினியாக தான் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என துடித்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், கல்யாணம் ஆகி கேரளத்துக்குப் போன பிள்ளைகள் எங்களைத் தேடி வராததால் அவர்களை தேடி நாங்கள் 7 ஆண்டுகளாக அலைந்தோம்.
ஆனால் தற்போது உடலில் தெம்பில்லாததால் அவர்களை தேட முடியவில்லை. நாங்கள் செ த்துப்போறதுக்கு முன்னாடி எங்கள் பிள்ளைகள் முகத்த ஒருமுறை பார்த்தா மட்டும் போதும் என்று தழுதழுத்த குரலில் கூறியுள்ளனர்.
ஏ9 வீதி முறுகண்டிக்கு அண்மையில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ம ரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 6.10 மணியளவில் கொக்காவில் சந்திக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் முன்னால் இடம்பெற்றது.
ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி நோக்கிச் சென்ற உழவு இயந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி அதே வீதி வழியாகச் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நெஞ்சுப்பகுதி பலமாக தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.
குறித்த முதியவரின் உடலம் நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து குறித்து மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.6549 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.9830 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொலருடன் ஒப்பிடும் போது, ரூபாயின் பெறுமதி இந்த வருடத்தில் நூற்றுக்கு 3.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது.
சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன. இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் என இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றது.
மன்னார் வளைகுடாவில் தற்போதுள்ள கடல்வாழ் உயிரினங்களின் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அந்த ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இனைதொடர்ந்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்டு வங்கி மேற்பார்வையில் ஆய்வை மேற்கொண்டனர்.
ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பு நடத்தினர்.
ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள்,16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்குப் பகுதியிலும் காணப்பட்டன. இவைகளை அடையாளம் காண சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயன்றுவருகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவுக்கு புதியவை. கடந்த 2003-2005-ல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கி.மீ. தூரம் உள்ள மன்னார் வளைகுடா பகுதி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2003 முதல் 2005 வரை மன்னார் வளைகுடா பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது தூத்துக்குடி முதல் பாம்பன் வரையிலான பகுதியில் பவளப்பாறைகளைப் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சில அடிப்படைத் தகவல்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பெரிதாக ஆய்வுகள் எதுவும் நடத்தபடாததால், இந்தப் பகுதிகளில் தற்போது விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது என்றார்.
இந்த ஆய்வு குறித்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளர் திரவியராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில் பறவைகள் மற்றும் விலங்குகளை ஆண்டு ஒன்றுக்கு கணக்கெடுப்பு நடத்துவது போல் கடல் வாழ் உயிரினங்களையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், காரணம் பருவநிலை மாற்றம்,புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் கடல் வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை குறித்து தெரிய வரும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணகெடுப்பில் 4,223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தாங்கள் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்த போது 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் மற்றும் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.மேலும் 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மன்னார் வளைகுடாவின் அனைத்து கடல் பகுதிகளிளும் கண்காணிக்க வேண்டும் அப்படி கண்காணித்தால் மட்டும்மே கடலில் என்ன மாற்றம், பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிய வரும், தற்போது நாங்கள் கடலுக்கு அடியில் நடத்திய கணக்கெடுப்பில் தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரை அடர்த்தியான கடல் புல் திட்டுகள்; இருப்பது தெரியவந்துள்ளது அதே போல் 13 கடல் புல் வகைகளும் முன்னதான கண்டறியப்பட்டுள்ளது என கடல் ஆராய்சியாளர் மேத்யூ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கடலுக்கு அடியில் ஆய்வு செய்வதற்க்கு மிகவும் முக்கியமான ஸ்கூபா டைவிங் குறித்து தினேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது: கடல் வள ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது ஸ்கூபா டைவிங்.
ஸ்கூபா டைவிங் என்பது ஒரு சாகச விளையாட்டு என்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் உறுதியாக இருத்தல் வேண்டும்.
கடலில் அதிக காற்று மற்றும் மழை காலங்களிலும் இந்த இந்த ஸ்கூபா டைவிங் செய்யலாம்.கடலுக்கு அடியில் நடத்தப்படும் ஆய்வுக்கு ஸ்கூபா டைவிங் அவசியமான ஒன்று என்றார்.
இராணுவ முகாமின் முட்கம்பி வேலியில் ஆலயத்தின் நேர்த்திக்கடன் செய்த தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இது வவுனியாவிலுள்ள பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள இராணுவ முகாமிலேயே தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.
வவுனியாவின் பெரிய முகாமான ஜோசெப் முகாமிற்கு எதிராக, ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆலயம் இது. ஏ9 வீதியால் பயணிக்கும் பௌத்த,இந்து மதத்தை சேர்ந்த பலர் இந்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டே செல்வார்கள்.
இதன்போது ஆலயத்தில் நேர்த்தி செய்யும் பக்தர்கள் , தேசிக்காய் உள்ளிட்டவற்றை தற்போது, ஜோசெப் முகாம் முள்வேலியிலேயே கட்டி தொங்க விடுகிறார்கள். இந்நிலையில் தெய்வக்குற்றமாகி விடும் என்ற அச்சத்திலேயோ என்னவோ, இராணுவத்தினரும் அவற்றை அகற்றவில்லை.
அதோடு தயவுசெய்து இந்த இடத்தில் எதையும் தொங்க விடாதீர்கள் என அறிவித்தல் பலகை ஒன்றை மட்டும் இராணுவத்தினர் நட்டுவைத்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜிதேஷ் மிஸ்ரா என்பவரின் மனைவி திவ்யா (27). அஜிதேஷ் மிஸ்ரா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 14ம் திகதியன்று வீட்டில் தனியாக இருந்த திவ்யா தலையில் பலத்த கா யங்களுடன் உ யிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அஜிதேஷ், மனைவியை கொ லை செய்ததை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், என்னுடன் பணிபுரியும் பாவ்னா ஆர்யா என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். சமீபத்தில் இதனை தெரிந்துகொண்ட திவ்யா அடிக்கடி என்னிடம் ச ண்டையிட்டு வந்தார்.
இதனால் அவரை கொ லை செய்துவிடலாம் என முடிவெடுத்து, என்னுடைய நண்பன் அகில் குமார் உதவியை நாடினேன். திவ்யாவிற்கு, அகில் குமாரை நன்றாக தெரியும். 14ம் திகதியன்று அகில் குமார் என்னை பார்க்க வருவது போல வீட்டிற்கு வந்திருந்தான்.
அவனிடம் எங்களுடைய திருமண புகைப்படங்களை திவ்யா காட்டிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கிருந்த பூச்சட்டியை எடுத்து தலையில் அடித்து கொ ன்றுவிட்டு அகில் வெளியேறிவிட்டான் எனக்கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அஜிதேஷ், அவருடைய காதலி பாவ்னா ஆர்யா மற்றும் நண்பன் அகில் குமார் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.