இளம்பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் : மணமகனுக்கு பதிலாக தாலிகட்டிய வேறு மாப்பிள்ளை!!

நடக்கவிருந்த திருமணம்

சென்னையில் நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாதவரத்தை சேர்ந்த மகேஷ். இவர் மகள் மோனிகா (20). இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த உறவினரான மனோஜ் என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்த நிலையில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற மோனிகா இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. அவருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதையடுத்து மகேஷ் பொலிசில் இது குறித்து புகாரளித்தார்.

இந்நிலையில் நேற்று காலை மோனிகா, தந்தை மகேஷுக்கு போன் செய்து கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

விசாரணையில் கார்த்திக் (25) என்பவரும் மோனிகாவும் ஒரு வருடமாக காதலித்ததும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகேஷ் தனது உறவினரான மனோஜ் என்பவரை திருமணம் செய்ய பேசி முடித்ததும் தெரிந்தது.

இந்நிலையில் இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு பொலிசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்கள்.

வவுனியாவில் 898 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

தபால்மூல வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த நிலையில், 898 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.ஜி.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 333 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்த நிலையில், உரிய வகையில் விண்ணப்பத்தை பூரணப்படுத்தாமை மற்றும் தவறான தகவல்கள் வழங்கியமை காரணமாக 898 அரச உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி நான்காயிரத்து 140 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்கு எண்ணும் நடவடிக்கைக்காக 9 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்குகளும் வவுனியா மாவட்ட செயலகத்திலேயே எண்ணப்படும்.

அத்துடன், தற்போது தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தொரிவித்தார்.

வவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!!

தேர்தல் காரியாலயம்

வவுனியா ஈரற்பெரியகுளத்தில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் தலைமை காரியாலயம் நாமல் ராஜபக்சவினால் இன்று (18.10.2019) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா சிங்கள பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வசந்த ராஜ கருணா தலைமையில் பொதுஜன முன்னணியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பொதுஜன முன்னணியின் சார்பாக பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ச.உதயராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, முன்னாள் வடக்குமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, ஆகியோர் கலந்துகொண்டனர்.

வவுனியா நீதிமன்றத்தால் ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை!!

ஜே.ஸ்ரீரங்கா..

சிரேஷ்ட ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ப லியான விவகாரத்தில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா உட்பட 06 பேரை கைது செய்வதற்கான உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்திருந்தது.

இதற்கமைய வவுனியா நீதிமன்றத்தில் இன்று (18.10) காலை ச ரணடைந்த சந்தேக நபர்கள் பிணை கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கமையவே சந்தேக நபர்களுக்கான பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குடன் சம்மந்தப்பட்ட 6 பேரும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சந்தேக நபர்களின் கட்வுச் சீட்டுக்களும் நீதிமன்றத்தால் மு டக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்!!

மூவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோ தல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோ தல் சம்பவத்தின் போது மூன்று மோட்டார்வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இரு வீடுகளின் யன்னல் கண்ணாடிகள், வேலித்தகரம், வாயிற்கதவுகள் என்பனவும் உடைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையில் வவுனியா கு.ற்றத்தடுப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீதி விபத்தில் மூவர் காயம்!!

மூவர் கா யம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் மூன்று பேர் கா.யமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கா யமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் இருந்து குடாகம பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே அதிக வேகம் காரணமாக 25 அடி பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் வழிபாட்டின் போது ஆலயம் ஒன்றின் கூரை வீழ்ந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில்!!

வவுனியாவில் வழிபாட்டின் போது..

வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்தின் கூரைப் பகுதி விழுந்தமையால் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சாஸ்திரிகூழங்குளம் பகுதியில் உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதப் பூஜை மதியம் இடம்பெற்றது. குறித்த ஆலயத்தின் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வசந்த மண்டபத்தின் முன் கூரைப்பகுதி முறிந்து விழுந்தது.

இதனால் குறித்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் காயமடைந்திருந்தனர். காயமடைந்த நால்வரும் நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆலயத்தின் கூரைப்பகுதி கடந்த 15 வருடங்களாக எந்தவித திருத்தப்பணிகளும் இடம்பெறாமல் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

     

விஸ்வரூபம் எடுக்கும் Dark Web : நூற்றுக்கணக்கானவர்கள் கைது!!

நூற்றுக்கணக்கானவர்கள் கைது

சிறுவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆ பாச வீடியோக்களை இணையங்களில் பகிருவது தற்போது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானியா மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த வருடம் இணையத்தளம் ஒன்று முடக்கப்பட்டிருந்தது.

குறித்த இணையத்தளத்தில் சுமார் 200,000 வீடியோக்கள் காணப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மில்லியன் தடவைகள் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுமிருந்தன. தென்கொரியாவில் இருந்து குறித்த இணையத்தளம் இயக்கப்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 38 நாடுகளைச் சேர்ந்த 337 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றுள் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, அமெரிக்கா, தென்கொரியா, ஜேர்மனி, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம் என ஐக்கிய இராச்சியத்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறித்தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்!!

தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்

சென்னையில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த பொறியியல் படித்த பட்டதாரி பெண் வேலையை உதறிவிட்டு தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சபாபதி- தேன்மொழி தம்பதியினரின் ஒரே மகள் குறிஞ்சிமலர். கடந்த 2018-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்ற குறிஞ்சிமலர், பணியில் திருப்தி இல்லாததால் சொந்த ஊரில் தனது உறவினர் ஒருவரின் தரிசு நிலத்தை வளமாக மாற்ற முடிவு செய்தார்.

குறிஞ்சிமலரின் ஆர்வத்தை பார்த்த உறவினரும் இரண்டரை ஏக்கர் இடத்தை வழங்கினர். தற்போது இரண்டரை ஏக்கர் நிலத்தில் 1,500 தேக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேக்கு மரத்தில் மிளகு செடிகளை ஊடுபயிராக நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய குறிஞ்சி மலர், இனி நான் வேலைக்குப் போகமாட்டேன் விவசாயம் செய்யப் போகிறேன் என சொன்னதும், எல்லோரும் அ திர்ந்துவிட்டார்கள். பி.டெக் படிக்க 5 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளோம். இனி திருமணம் செய்ய வேண்டுமென்றால் நல்ல வேலை வேண்டும் எனக் கூறி முட்டுக்கட்டை போட்டனர்.

ஆனாலும் நான் அவர்களிடம் விவசாயத்தில் சாதிப்போம் எனவும் பாதுகாப்பான தொழில், விவசாயம்தான் என எடுத்துக்கூறி அனுமதி பெற்றேன். மேலும், அதற்குரிய பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். குமிழ் சந்திரசேகர் என்பவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். கிடைத்த அனுபவத்தை வைத்து வீட்டுக்கு அருகிலேயே அவரை, பாகற்காய், புடலை, பீர்க்கங்காய், புளிச்சக் கீரை உள்ளிட்டவைகளைப் பயிர் செய்தேன்.

இதன் விதைகளை நன்றாகக் காயவைத்து, கல்சியம் சத்து மிகுந்த சுவற்றிற்கு அடிக்கும் சுண்ணாம்பை விதைகளின் மீது லேசாகத் தெளித்து நிலத்தில் ஊன்றினேன். நன்கு வளர ஆரம்பித்த செடிகள், பின்னர் காய்த்துக் குலுங்கத் தொடங்கின. அன்றைக்கு என் மனம் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என்னுடைய உறவுக்காரர் ஒருவர், இரண்டரை ஏக்கர் நிலத்தை, தேக்கு மரக்கன்றுகள் ஊன்றிக் கொடுக்க வேண்டும் என என்னிடம் ஒப்படைத்தார். நிலத்தின் பரப்பை வைத்து 1,500 கன்றுகள் ஆகும் எனச் சொன்னேன். உடனே வாங்கிக் கொடுத்துவிட்டார். இந்த தேக்குமரக்கன்றுகளில் ஓராண்டு கழித்து ஊடுபயிராக மிளகு செடியை வளர்த்து பணப்பயிராக மாற்ற உள்ளோம்.

வரும் காலத்துல பெரிய பெண் விவசாயியாக இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என கூறியுள்ளார். குறிஞ்சிமலர் விவசாயத்தில் கலக்கி வருவதற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு!!

மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் மாவட்ட பிரதிநிதிகளின் மாநாடு வவுனியாவில் நேற்று (18.10) மாலை இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ண, முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவியின் சாதனை : குவியும் பாராட்டுகள்!!

நிறஞ்சன் துஸ்மிதாயினி

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (18.10.2019) இடம்பெற்றுள்ளது.

சைவபிரகாச மகளீர் கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு ஒன்றில் கா ணாமல் போன இலங்கைப் பெண்!!

சமிலா சமந்தி

சைப்பிரஸ் நாட்டில் இலங்கை பெண் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமை Nicosia என்ற பணியிடத்தில் வைத்து குறித்த பெண் கா ணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

45 வயதான சமிலா சமந்தி என்ற பெண் இவ்வாறு கா ணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 1.64 மீற்றர் உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு நீண்ட கறுப்பு முடி உள்ளதாகவும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

கா ணாமல் போன பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி!!

மினிசூறாவளி

இயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.

அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.

இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப் பிரதம குருக்கள் நாகேந்திர சர்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும், ஆலய அன்னதான மடத்தில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் இருக்கும் மாமுனை அ.த.க. பாடசாலையில் கல்வி பயின்ற மணவர்கள் மினி சூறாவளியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததனால் வீடு சேதம்!!

பலத்த காற்றினால்..

நுவரெலியா – லிந்துலை, இராணிவத்தை பேரம் தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால், அங்கிருந்த வீடு ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது.

இச் சம்பவத்தின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், மேற்படி மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் மக்களை சந்தித்த நாமல் ராஜபக்க்ஷ!!

நாமல் ராஜபக்க்ஷ

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மக்கள் சந்திப்பு வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (17.10.2019) இரவு இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை : இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்!!

பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு..

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.

தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு ஊடாக இலங்கை பேஸ்புக் அதிகாரிகளிடம் அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.