வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் இரத்ததான முகாம்!!

இ ரத்ததான முகாம்

இ ரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா மன்னார் வீதி நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இ ரத்ததான முகாம் இன்று (17.10.2019) சிறப்பாக இடம்பெற்றது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள் : இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பா ல்வினை நோய் மற்றும் எ ய்ட்ஸ் கி ருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்ததானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கும் மேம்படுவதற்கும் உதவும். இரத்ததானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. ம யக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.

ம யக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

வவுனியா மன்னார் வீதியில் ஒரு மணிநேரமாக அச்சத்துடன் பயணித்த வாகனங்கள்!!

அ ச்சத்துடன் பயணித்த வாகனங்கள்

வவுனியா – மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்ட ஒளிச் சமிக்ஞை இன்று (17.10.2019) மதியம் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்திற்கு மேலாக சிவப்பு நிற ஒளி விட்டு விட்டு ஒளிர்ந்ததனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அ ச்சத்தில் பயணத்தினை மேற்கொண்டிருந்தன.

புகையிரதக் கடவையில் தன்னிச்சையாக சிவப்பு சமிக்கை ஒளிர்ந்தமையினால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைக்குச் செல்வோர் , மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்து எனக் கருதி அவ்விடத்தில் காவல் நின்றதுடன் அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

வடக்கில் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவை ஒளிச் சமிக்ஞைகள் இந்தியாவில் பாவனையில் இருந்து நீக்கப்பட்டவை என வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொ லை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல்

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொ லை தொடர்பில் வவுனியா முருகனூர் பகுதியினைச் சேர்ந்த 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்கச்சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் என்பவற்றுக்காகவே கொ லை செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வவுனியாவில் கடந்த 9 ஆம் திகதி சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ் என்ற முச்சக்கரவண்டி சாரதி க டத்தப்பட்டு கொ லை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது உ டல் தீயில் எ ரிந்த நிலையில் கள்ளிக்குளம் பகுதியில் மீட்க்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மற்றும் பிராந்திய தீர்க்கப்படாத கு ற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பல தரப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் ம ரணித்தவரின் தொலைபேசியின் ஜீ.பி.எஸ் (GPS) மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொ லையாளி என சந்தேகிக்கும் நபர் ஒருவர் நேற்று (16.10.2019) காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் தானே தனி நபராக கொ லை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் என்பவற்றுக்காகவே கொ லை செய்ததாகவும் ஏற்கனவே கடந்த 07.10.2019 அன்று கொ லை செய்ய திட்டம் தீட்டி நெடுங்கேணிக்கு அழைத்து சென்றதாகவும்,

எனினும் அன்றைய தினம் கொ லை செய்ய முடியாமல் போனதால் மீண்டும் கடந்த 9 ஆம் திகதி அன்று ஒமந்தை கள்ளிக்குளம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று தனது திட்டத்தின் படி இரவு 8 மணியளவில் முச்சக்கர வண்டி சாரதியின் க ழுத்தினை க த்தியால் வெ ட்டியபோது கத்தி இரண்டாக மு றிந்துள்ளது.

அதன் பின்னர் சாரதி தப்பித்துச் சென்ற போது அவரை விரட்டிச் சென்று க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ததுடன் எனது கைரேகை அவரின் உடலில் பதிந்தமையினால் முச்சக்கரவண்டியின் எரிபொருளை போத்தல் ஒன்றில் எடுத்து அவர் மீது ஊற்றி எ ரித்த பின்னர் அங்கிருந்து தப்பித்து காலி , அம்பாறை , நுவரெலியா, மாத்தறை போன்ற பல பகுதிகளுக்கு சென்று தலைமறைவாக இருந்ததாகவும் தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் என்பன மாத்தறை பகுதியில் மறைத்து வைத்துள்ளதாகவும் தனது வாக்குமூலத்தில் கொலை சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கொ லை செய்யப்பட்டவரின் ஆறு கடனட்டை மற்றும் விசா அட்டை, அடையாள அட்டை , பேஷ், முச்சக்கரவண்டி ஆவணங்கள், இரு தொலைபேசிகள், கொ லை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி , இடுப்புப் பட்டி என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் இன்றையதினம் (17.10.2019) சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட வவுனியா முருகனூர் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபரை ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி : குவியும் பாராட்டுகள்!!

ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி

இலங்கையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துணிச்சலான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் 50 கோடி பெறுமதியான போ தைப் பொருள் மூடையை கண்டுபிடித்து அவற்றை மீட்க வழி செய்துள்ளார்.

அத்துகிரிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பாரிய போ தைப் பொருள் மூட்டைகளை கண்டுபிடித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்யாதிருக்க 50 இலட்சம் ரூபா ல ஞ்சம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது.

எனினும் அதனை நிராகரித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, அது குறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்திற்குரிய நபரை பின்தொடர்ந்து போக்குவரத்துக்கடமையை விட்டுச்சென்று அவர் சென்ற ர கசிய வீட்டை தனியாக சென்று கண்காணித்துள்ளார்.

இதன்போது அங்கு பாரிய போ தைப்பொ ருள் மூட்டைகள் அடுக்கு வைத்திருப்பது தொடர்பில் தகவல் வழங்கி, அதன் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பாரிய தொகைக்கு பேரம் பேசப்பட்ட போதும் அதனை நிராகரித்து நோ்மையான முறையில் தனது கடமைகளை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அனைத்து தரப்பினராலும் பாராட்டு குவித்து வருகிறது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் : ஒன்றுகூடிய மக்கள்!!

முல்லைத்தீவு கடற்பரப்பில்..

நீர்த்தாரைகள் எனப்படும் அரிதாக நிகழக்கூடிய அதிசய நிகழ்வு நேற்று முல்லைத்தீவின் ஆழ்கடலில் நிகழ்ந்துள்ளது. குறித்த மாவட்டத்தில் தற்பொழுது கடும் வறட்சியான, வெப்பமான காலநிலை மாற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட இந்த அதிசய நிகழ்வின் போது கடல் நீர் அதிக வேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறியதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரிதாக நிகழக்கூடிய இந்நிகழ்வை கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் , மீனவர்கள் , கடலில் பயணம் செல்வோர், வானியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அதிகம் காண வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிரயோகம் செய்தவருக்கு நேர்ந்த கதி!!

மாணவியை..

வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து வழக்கு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் என்பன மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபரது வயது, உடல் நலன் தொடர்பாக சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பம் தொடுத்த போதிலும் நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்துள்ளார்.

கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) என்பவருக்கே இவ்வாறு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடுமையாக மா ணவனை தா க்கிய ஆசிரியர் : பெற்றோர் முறைப்பாடு!!

பெற்றோர் முறைப்பாடு

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட ஹட்டன் சென் போஸ்கோ கல்லூரியின் சிங்கள மொழியில் தரம் 03ல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவரை க டுமையாக ஆசிரியர் ஒருவர் தா க்கியமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ப லத்த கா யங்களுக்குள்ளான  டிக்கோயா, கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மா ணவனின் வகுப்பாசிரியர் பென்சில் ஒன்றினை க ளவாடிய சம்பவம் தொடர்பில் குறித்த மாணவனை த டியால் க டுமையாக தா க்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மா ணவனின் ஆ டையினை அ கற்றி சோ தனையிட்ட போது மாணவனின் உ டம்பு பகுதி, கை மற்றும் கால் பகுதிகளில் கா யங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் 15.10.2019 இரவு ஆசிரியருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஆர்.தர்ஷன் என்ற தரம் 03ல் கல்வி பயிலும் மா ணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மரணத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான தலைக்கவசத்தை கண்டுபிடித்த மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை!!

மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை

சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் (வயது 17) சர்வதேச ரீதியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவன் முகேஷ் ராமினை வரவேற்கும் நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அதிகரித்து வரும் வீதி விபத்தினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக இக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் வேளை ஆள் நடமாற்றமற்ற , இரவு வேளைகளில் ஏற்படும் விபத்தின் போது போதிய முதலுதவி இன்றி ஏற்படும் மரணத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான தலைக்கவசத்தை (safety helmad ) ஐ கண்டுபிடித்ததற்காகவே மாணவன் முகேஷ்ராம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இவ்வாண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தா நகரில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட சர்வதேச புத்தாக்குனர் போட்டி கடந்த 9ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெற்றுள்ளது.

சர்வதேச ரீதியில் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது ஆக்கங்களுடன் பங்குபற்றினர். இலங்கையிலிருந்து 12 இளம் கண்டுபிடிப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே ஒரு மாணவன் முகேஷ் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக பாடசாலையில் வெடிகு ண்டு இருப்பதாக பரப்பப்பட்ட புரளியால் ஐவர் காயம்!!

மலையக பாடசாலையில்..

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவில் வெடிகு ண்டு இருப்பதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கல்லூரியில் கல்வி நடவடிக்கை இடம்பெற்று கொண்டிருந்த போது பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸாரினால் ஆரம்ப பிரிவை சேர்ந்த தரம் ஒன்று தொடக்கம் ஆறு வரையான மாணவர்கள் முதற்கட்டமாக பொலிஸாரின் பாதுகாப்போடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கல்லூரியின் வளாகத்தை சோதனையிடுவதற்காக மஸ்கெலியா முகாமில் இருந்து விஷேட அதிரடி படையினர் மற்றும் மோப்பநாய் என்பன வரவழைக்கபட்டு சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

சோதனை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் கல்லூரியின் வளாக பகுதியில் சந்தேகத்திற்கு இடமான எவ்வித பொதிகளும் தென்படவில்லையென தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாடசாலையை விட்டு மாணவர்களை வெளியேற்றும் போது நிலவிய பதற்றம் காரணமாக மூன்று மாணவர்களும், இரண்டு பெற்றோர்களும் காயங்களுக்கு உள்ளாகி நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கல்லூரியில் வெடிகு ண்டு இருப்பதாக கூறப்பட்ட தகவலை யார் ஊடாக வழங்கபட்டது என்ற விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மத்தளையில் தரையிறங்கியது உலகின் 2வது மிகப்பெரிய சரக்கு விமானம்!!

சரக்கு விமானம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-124 என்ற விமானம் இன்று ஒன்பதாவது முறையாகவும் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. துர்க்மினிஸ்தானின் அஷ்கபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த மேற்படி விமானமானது நேற்று காலை 10.07 மணியளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் இன்று இரவு 10.15 மணிக்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லேண்ட் விமான நிலையத்தை நோக்கி புறப்படவுள்ளதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விமானமானது எரிபொருள் நிரப்புவதற்காகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 109,000 லீட்டர் எரிபொருள் விமானத்திற்கு தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானத்தில் இருந்த 19 பணியாளர்களும் தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்!!

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. இன்றைய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

சகோதரி தற்கொ லை செய்துகொண்ட ஆ த்திரத்தில் மைத்துனரின் க ழுத்தை அ றுத்துக்கொ ன்ற தம்பி!!

ஆ த்திரத்தில்..

சகோதரி தற்கொ லை செய்துகொண்ட ஆ த்திரத்தில் அவருடைய கணவரை, சொந்த தம்பியே க ழுத்த றுத்து கொ லை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் கோலேகர் (25) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோமல் (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருமே வீட்டிற்கு பிடிக்காமல் தான் திருமணம் செய்திருக்கின்றனர்.

ஆனால் அடுத்த சில நாட்களிலே இருவருக்குள்ளும் க ருத்து வே றுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ம னமுடைந்த கோமல் சனிக்கிழமை இரவு தூக்குபோட்டு தற்கொ லை செய்துகொண்டு இ.றந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்துள்ளனர். அந்த சமயம் கோமல் குடும்பத்தினரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வந்தடைந்துள்ளனர்.

அப்போது ஆகாஷிடம் தனியாக பேச வேண்டும் என கோமலின் சகோதரன் ரவீந்திர காலேட் (25) அனுமதி கேட்டுள்ளார். அதற்கு பொலிஸாரும் அனுமதி கொடுத்த சமயத்தில், அவர்களின் கண்முன்னே ஆகாஷின் க ழுத்தை ரவீந்திர காலேட் அ றுத்து கொ லை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த பொலிஸார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ரவீந்திர காலேட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த சில மணி நேரத்தில் நபர் ஒருவர் கார் விபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து உ யிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசன் முகமது (50). இவரது மனைவி சபிதா கனி (45). தம்பதியின் மகள் அமிதா பானு(13).

அசன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு சென்று ஓராண்டுக்கு மேல் ஆனதால் தனது மனைவி மற்றும் இதர குடும்பத்தினரை பார்க்க அவருக்கு ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று காலை சவுதியில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அசனின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் வந்த நிலையில் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை சிவா என்பவர் ஓட்டினார். காரானது உளுந்தூர்பேட்டை அடுத்த ஒலையனூர் அருகே சென்றபோது, திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதில் சிவாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் அசன் உ டல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

மேலும் சபிதா கனி, அமிதா பானு, உறவினர்கள் சர்புதீன் மகள் ஷலா உதயன் (24), ரகமத்துல்லா மனைவி பாத்திமா பீவி (29), இவரது மகள் ஷாகிராபானு (9), சிவா ஆகியோர் ப டுகாயத்துடன் உ யிருக்கு போ ராடிக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபிதா கனி பரிதாபமாக இ றந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி : பணத்துக்காக விற்கப்பட்ட அவலம்!!

10 வயது சிறுமி

இந்தியாவில் 10 வயது சிறுமி ஒருவர் தந்தையால் திருமணத்துக்காக ஒன்றரை லட்சத்துக்கு விலை பேசப்பட்டு, அவருக்கு 35 வயதான நபருடன் திருமணம் நடந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் மாநிலத் பனஸ்கந்தாவைச் சேர்ந்த பத்து வயது பழங்குடி சிறுமியை அசர்வாவைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் அந்த சிறுமி ரூ.50 ஆயிரத்துக்கு அந்த இளைஞரிடம் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், திருமணம் செய்த இளைஞரின் உறவினர் வீட்டில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இதில் கொடுமையான விடயம் என்ன வென்றால், 10 வயது சிறுமியை திருமணம் செய்தவர், அந்த சிறுமியின் தந்தையைவிட வயது மூத்தவர். இது குறித்து பேசிய பொலிசார், திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீ ட்கப்பட்டு, காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அந்த சிறுமியின் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்தே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வீடியோவை பார்த்த பாலன்பூர் அலுவலகத்தில் பணி புரியும் சமூக நீதித்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,

சிறுமியை திருமணம் செய்தவர் பெயர், கோவிந்த் தாகூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு 35 வயதாகிறது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள், அந்த சிறுமியின் சொந்த கிராமமான பனஸ்கந்தாவில் உள்ள தாந்தா தாலுகாவின் கெர்மல் கிராமத்துக்கு சென்று அந்த சிறுமியின் தந்தையை அடையாளம் கண்டதாகவும்,

அவரும் சிறுமியின் திருமணத்தை உறுதிப்படுத்தியதுடன், சிறுமியை தாகூர் ரூ .50,000 க்கு வாங்கிக்கொண்டார் என்றும், அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில், அந்த சிறுமிக்கு ஒன்றரை லட்சம் விலை பேசி தரகர் மூலம், விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் செலுத்தி திருமணம் செய்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1 லட்சம் திருமணத்திற்குப் பிறகு செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சிறுமியை திருமணம் செய்த தாகூர், ஒப்பந்தப்படி மீதமுள்ள ரூ.1 லட்சம் தர மறுத்தால், ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தாக்கரை மி ரட்டடும் வகையில், தரகர் கமார் என்பர் வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் தரகர் உள்ளிட்ட மூன்று பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒரு பிரித்தானிய சிறுவனை சாதனையாளனாக்கிய இலங்கைப் பயணம்!!

பிரித்தானிய சிறுவன் ஒருவனின் இலங்கை பயணம், உயரிய ஒரு நோக்கத்திற்காக சாதனை படைப்பவனாக அவனை மாற்றியுள்ளது.

பத்து வயது சிறுவனான Oscar Walker, இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கைக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறான்.

அங்கு கடல் ஆமைகள் காப்பகம் ஒன்றிற்கு சென்றபோது, ஆமைகள் கடலுக்கும் கடலின் சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவு அவசியமானவை என்பதை அறிந்து கொண்டிருக்கிறான் Oscar.

அங்கிருந்த ஆமைகளில் பெரும்பாலானவை மீனவர்கள் மீன் பிடிக்கும்போது வலைகளில் சிக்கி மீட்கப்பட்டவை.

அத்துடன் ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, ஆமைகளை கடத்துவோரிடமிருந்து தப்புவிப்பதற்காக பத்திரமாக பாதுகாக்கப்பட்டு, அவை குஞ்சு பொறித்ததும், அந்த சிறிய ஆமைகள் மீண்டும் கடலில் கொண்டு விடப்படுவதையும் கண்ட Oscar, தானும் ஆமைகளின் நலனுக்காக எதையாவது செய்யவேண்டும் என முடிவெடுத்ததாக தெரிவிக்கிறார் அவனது தாயாகிய Tara.

அதைத் தொடர்ந்து ஆமைகளின் நலனுக்காக நிதி திரட்டுவதற்காக மலையேற்றங்களில் ஈடு பட முடிவு செய்துள்ள Oscar, முதலாவதாக Mount Snowdon என்ற மலையில் ஏறியுள்ளான்.

தனது தாய் தந்தை, தாத்தா பாட்டி, மற்றும் அத்தையுடன் மலயேற்றத்தில் ஈடுபட்ட Oscarக்கு, 1,085 மீற்றர் உயரமுடைய அந்த சிகரத்தை அடைய மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது.

ஆரம்பத்தில் மலையேறும்போது சாதகமான சூழல் இருந்தாலும், பின்னர் வெப்ப நிலை குறைந்து 5 டிகிரியை அடைந்திருக்கிறது.

என்றாலும் நினைத்ததை சாதித்து, அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் மலையிலிருந்து இறங்கியிருக்கிறது Oscarஇன் குடும்பம்.

இப்போதைக்கு 420 பவுண்டுகள் சேகரித்துள்ள Oscar, அதை ஆமைகள் நலனுக்காக வழங்க முடிவு செய்துள்ளதோடு, அடுத்து Ben Nevis மற்றும் Scafell Pike ஆகிய சிகரங்களை தொடுவதென முடிவு செய்துள்ளான்.

பணத்துக்காக தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை மணக்கும் இளைஞர்!!

53 வயதான பெண்ணும், 31 வயதான கருப்பின இளைஞரும்..

53 வயதான பெண்ணும், 31 வயதான கருப்பின இளைஞரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ள நிலையில் பணத்துக்காக இளைஞர் இவ்வாறு செய்கிறாரா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா டீம் (53) என்ற பெண்ணும், நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் (31) என்ற ஆணும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் சந்தித்து கொண்ட நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

ஏஞ்சலா ஆறு குழந்தைகளுக்கு பாட்டியாகிவிட்ட நிலையில் அவரின் காதல் முதலில் விமர்சனத்துக்கு உள்ளானது. இதோடு நைஜீரியாவில் தனது வேலையை உதறிதள்ளிய மைக்கேலுக்கு அதிகளவு பணம் கொடுத்து ஏஞ்சலா உதவினார்.

மைக்கேலுக்கும் அமெரிக்காவுக்கு வந்து பெரிய தொழில்கள் செய்து கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என ஆசை ஏற்பட்டது. இதையடுத்து பணத்துக்காகவே தன்னை விட 22 வயது அதிகமான ஏஞ்சலாவை அவர் மணக்க போகிறாரா என பலரும் கேள்வியெழுப்பினர்.

இந்த சூழலில் மைக்கேல் தன்னிடம் நிறைய பொய் சொல்கிறார் எனவும், அவரை பிரிய நினைப்பதாகவும் ஏஞ்சலா கூறினார். ஆனால் இருவருக்குள்ளும் சமாதானம் ஆன நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதனிடையில் மைக்கேலுக்கு குழந்தை வேண்டும் என ஆசை ஏற்பட்டது, ஆனால் ஏஞ்சலாவின் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்காத நிலையில் தனது மகள் ஸ்கைலாவின் கருமுட்டை மூலம் செயற்கை முறையில் குழந்தை பெற நினைத்தார் ஏஞ்சலா.

ஆனால் ஸ்கைலா இதற்கு ஒப்பு கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. எப்படியிருந்தாலும் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர் என தெரிகிறது.