இ ரத்தவெள்ளத்தில் ச டலமாக கிடந்த இளம்தம்பதி : கு ற்றவாளி கைது!!

இளம்தம்பதி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொ லை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால் (35). தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வரும் இவர், தனது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர்கள் மூவரும் கடந்த 8ஆம் திகதி தங்களின் வீட்டில் இ ரத்த வெள்ளத்தில் ச டலமாக கிடந்தனர். இந்த மூவரின் உ டலையும் கைப்பற்றிய பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கொ லை செய்யப்பட்ட கோபால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் மத ரீதியான காரணங்களுக்காக கொ லை செய்யப்பட்டார் என முதலில் தகவல் பரவிய நிலையில் அது பொய் என தெரியவந்தது.

மேற்குவங்க மாநிலத்தையே உலுக்கிய இந்த கொ லைச் சம்பவம், தனிப்பட்ட பகை காரணமாகவே நடந்ததாக பொலிசார் கூறினர். இந்நிலையில் கோபால் பகுதி நேரமாக இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றிய சூழலில் அது தொடர்பிலேயே இந்த கொ லை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கொ லையாளியை பிடித்துவிட்டோம். அவர் முர்ஷிதபாத் பகுதியை சேர்ந்த கொத்தனார் உத்பால் பெஹ்ரா.

இவர் கோபாலிடம் இரண்டு ஆயுள் காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளார். அவை இரண்டிற்கு தவணைகளையும் கட்டியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கோபால், ஒரு இன்சூரன்ஸிற்கான ரசீதை கொடுத்துவிட்டு, மற்றொன்றிற்கான ரசீதை கொடுக்கவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே பி ரச்னை ஏற்பட்டுள்ளது. தனது பணத்தை கோபால் ஏமாற்றிவிட்டதாக உத்பால் ஆ த்திரத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கோபால் மற்றும் அவர் குடும்பத்தினரை கொ லை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் ச டலத்தை அணைத்தபடி படுத்திருந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த சோகமான தகவல்!!

சோகமான தகவல்

தமிழகத்தின் சென்னையில் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட மனைவியின் சடலத்துடன் ம யக்க நிலையில் இருந்த இளைஞனை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த தகவல் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் சரண்யா தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தைகள் இல்லை என்ற வருத்தம் இருந்து வந்துள்ளது.

இதனால் இருவருக்கு இடையே அடிக்கடி த கராறும் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று குறித்த தம்பதி குடியிருந்த வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காத நிலையில், அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த குடியிருப்பின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்துள்ளனர். அப்போது படுக்கையறையில் ரஞ்சித்தும் சரண்யாவும் அணைத்தபடி படுத்திருந்தனர்.

உள்ளே சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சரண்யா தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. ரஞ்சித் ம யக்க நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்ட பொலிசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லாததால் ரஞ்சித் கு டிப்பழக்கத்துக்கு அ டிமையாகியுள்ளார்.

தினமும் கு டித்துவிட்டு வந்து மனைவியுடன் த கராறில் ஈடுபட்டுவந்துள்ளார் இதனால் மனவேதனையடைந்த சரண்யா, தற்கொ லை செய்ய முடிவு செய்தார். கடந்த 13 ஆம் திகதி இரவு வழக்கம்போல கணவன் மனைவிக்கு இடையே த கராறு ஏற்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலையில் ரஞ்சித் வெளியில் சென்றுள்ள நிலையில் சரண்யா, தூ க்குப்போட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

குடியிருப்புக்கு திரும்பிவந்த ரஞ்சித், மனைவி தூ க்கில் தொ ங்குவதைப் பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் மனைவியின் ச டலத்தை மீட்டு அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் ம துபானம் வாங்கிவந்த அவர், வீட்டிலிருந்த டீசலை அதில் கலந்துள்ளார். அதனைக் கு டித்துவிட்டு மனைவியின் சடலத்தோடு ரஞ்சித் படுத்துக்கொண்டார்.

சிறிது நேரத்தில் ரஞ்சித் மயங்கிவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் மனைவியின் ச டலத்தோடு ரஞ்சித் மயங்கிக் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி ரஞ்சித் மீட்கப்பட்டதாகவும் தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மயானத்தில் இறந்தவரின் உடலை புதைத்த போது காத்திருந்த ஆச்சரியம் : அலறியடித்து ஓடிய மக்கள்!!

இந்தியாவில் இ றந்த நபரை மயானத்தில் புதைத்த போது, திடீரென்று அவரது தலை அசைந்ததால், அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில், அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இருக்கும் பகல்லா கிராமத்தை சேர்ந்தவர் சிமானச் மாலிக். 55 வயதான இவர் ஆடு மேய்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்ற மாலிக் வீடு திரும்பவேயில்லை.

இதனால் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வழக்கமாக அவர் எங்கெல்லாம் ஆடு மேய்ப்பாரோ அங்கெல்லாம் சென்று தேடியுள்ளனர்.

அப்போது ஒரு இடத்தில் ம யங்கிய நிலையில் கிடைந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இறந்துவிட்டதாக கூறி, கதறி அழ துவங்கியுள்ளனர்.

அதன் பின் இது குறித்த அவர் வெளியூரில் இருக்கும் அவரின் உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இறுதிச்சடங்கிற்கான வேலை செய்யப்பட்டு, அவரின் உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

மயானத்தின் குழிக்குள் அவரது உடலை வைக்கும் போது, திடீரென்று தலை மட்டும் அசைந்துள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த சிலர் அலறி அடித்து ஓட, குடும்பத்தினர் உடனடியாக அவரின் உ டலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது, மாலிக் கடுமையான ஜுரத்தில் இருந்துள்ளார். இதனால் அவரின் உடல் பலவீனமாகி மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

மற்ற படி ஒன்றுமில்லை என்று கூற, குடும்பத்தினர் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இன்னும் கொஞ்ச நேரம் ஆகியிருந்தால், மாலிக்கை மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள்.

கடைசி நிமிடங்களில் தலை இங்குமங்கும் அசையவும்தான் அவரை காப்பாற்றி இருக்கிறார்கள் என்று அங்கிருக்கும் உள்ளூர் வாசிகள் பேசி வருகின்றனர்.

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்து!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்தலத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா புதுக்குளம் பகுதியில் மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்!!

விழிப்புணர்வு வீதி நாடகம்

வவுனியா – புதுக்குளம் பகுதியில் இன்று டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று நடைபெற்றுள்ளது. புதுக்குளம் கனிஷ்ட மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் நடிப்புத் திறன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீதி நாடகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான காரணம் மற்றும் நுளம்புகளை எவ்வாறு அழித்தொழிக்கலாம் என்ற விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன், டெங்கு நுளம்புகளை அழிப்போம் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

தாயும், மகளும் கொ டூரமாக படுகொ லை : கு ற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!!

நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

இரத்தினபுரி – கஹவத்தை – கொட்டகெத்தன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொ லை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு ம ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சியினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி இரத்தினபுரி, கொட்டகெதன பகுதியில் வைத்து நயனா நில்மினி என்ற 52 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய காவிந்யா சதுரங்கி செல்லஹேவா என்ற அவரது மகளும் கொ லை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு மற்றும் அவரது மனைவியான அசோக சந்தனி எனும் பட்டி என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபரான கு ற்றவாளியின் மனைவிக்கு எதிராக போதிய அளவான சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கு ற்றவாளிக்கு எதிரான கு ற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 200 பக்கங்கள் உள்ளடங்கிய வழக்கின் தீர்ப்பின் ஊடாக கு ற்றவாளிக்கு ம ரண த ண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவதானம் : நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாக காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10 – 30 கிலோமீற்றர் வரையாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய இயற்கை நிகழ்வு!!

இயற்கை நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் நேற்று டொனாடோ என்ற சுழல் சூறாவளி ஏற்பட்டுள்ளது. பண்ணை கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த சூறாவளி வானத்தில் தென்பட்டுள்ளது.

மிகவும் நீளமான டொனாடோ சூறாவளி யாழ்ப்பாண மக்களுக்கு புது அனுபவத்தை கொடுத்துள்ளது.

டொனாடோ புயலை பதிவு செய்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது.

வவுனியாவை உலுக்கிய கொ லை : ஒருவர் கைது!!

ஒருவர் கைது

வவுனியாவில் கடந்த 09.10.2019 அன்று முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் க டத்தப்பட்டு கொ லை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது உடல் தீயில் எ ரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் இக் கொ லையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் கொ லைக்கான காரணம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பொலிஸாரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாகன விபத்து ஒன்றில் நபர் ஒருவர் கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு ஸ்ரீரங்காவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்காவுடன், ஓய்வு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேரை நீதிமன்றிலை முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இடம்பெற்ற விபத்தில், ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொ.ல்லப்பட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த வேளையில் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொ.ல்லப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உ.யிரிழந்திருந்தார்.

உ யிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஸ்ரீரங்கவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்களை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து : யாழ். இளைஞன் பலி!!

இத்தாலியில் ஏற்பட்ட கோர விபத்தில்..

இத்தாலியில் ஏற்பட்ட கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். 26 வயதான ஷர்மிலன் பிரேம்நாத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் தடம் புரண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. உ யிரிழந்தவரின் பி ரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ச டலத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு உறவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சிக்கினார்!!

இரண்டு மாணவிகளை..

தமிழகத்தில் பள்ளி மா ணவிகள் இருவர் ஆற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட வழக்கில் பத்து மாதங்களுக்கு பின்னர் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த ஓவியா (14), சுகந்தி (16) என்ற இரண்டு பள்ளி மா ணவிகள் கடந்த ஜனவரி மாதம் மா யமானார்கள்.

3 நாட்கள் கழித்து அத்தானி அருகே பவானி ஆற்றில் அவர்களது ச டலங்கள் மி தந்தன. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாத சூழலில், சிபிசிஐடி விசாரணை கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில், மா ணவிகள் இருவரும் ஒன்றாக ஆற்றங்கரையோரம் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று அவர்களது செல்போன்களுக்கு வாட்ஸ்ஆப்பில் வந்து இருந்ததை பெற்றோர் கண்டனர்.

ஆற்றங்கரையோரம் இரண்டு மா ணவிகளையும் சேர்த்து புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பியது யார் என்ற கேள்வி எழவே விசாரணை மீண்டும் தீ விரம் அடைந்தது.

செல்போன் அழைப்புகளை வைத்து பொலிசார் ஆராய்ந்த போது, பவானியை அடுத்துள்ள கொட்டாய் பகுதியை சேர்ந்த லொறி ஓட்டுநர் நந்தகுமார் என்ற இளைஞரிடம் மாணவிகளுக்கு பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பள்ளி விடுமுறை நாள்களில் சுகந்தி, ஓவியா ஆகியோா் ஜவுளிக் கடைக்கு வேலைக்குச் சென்றதும், அங்கு நந்தகுமாருடன் (25) பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இவா், மா ணவிகளை அவர்கள் வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தன்று அத்தாணி சவுண்டப்பூா் பாலத்துக்கு கீழே அழைத்துச் சென்றதோடு, செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் நண்பா்களுக்கு அனுப்பியுள்ளாா்.

பின்னர் ஓவியா, சுகந்தி இருவரும் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அ டித்துச் செல்லப்பட்டு உ யிரிழந்துள்ளனா். மா ணவிகள் ஆ ற்றில் மூ ழ்கியதை அடுத்து நந்தகுமார் தப்பி ஓடியுள்ளார்.

தற்போது பொலிசார் நெ ருங்கியதையடுத்து அவராகவே வந்து ச ரணடைந்துள்ளார். இதையடுத்து நந்தகுமாரை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி!!

தோசை மாவில் தூக்க மாத்திரை

தமிழகத்தின் சென்னையில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து க ழுத்தை இ றுக்கி கொ லை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தைச் சேர்ந்த சுரேஷ், அதே பகுதியில் இறைச்சிக்கடையொன்றில் வேலை பார்த்து வந்தார்.

சுரேஷ், அனுசுயா தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த ஞாயிறன்று காலை வீட்டில் சுரேஷ் இ றந்து கிடப்பதாக அவரது மனைவி அனுசுயா தொலைபேசி மூலம் புழல் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்து சுரேஷின் உ டலை கைப்பற்றிய காவல்துறை, உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொ லை என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அளவுக்கு அதிகமான தூ க்க மா த்திரை சாப்பிட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

ஆனால், க ழுத்தில் காயம் இருந்ததால் க ழுத்தை இ றுக்கி கொ ன்றிருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி அனுசுயாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது, கணவர் சுரேஷை, கொ லை செய்ததை அனுசுயா ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனுசுயாவுக்கு அவரது உறவினர் முரசொலிமாறன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தெரியவர சுரேஷ், அடிக்கடி கு டித்துவிட்டு வந்து த கராறு செய்துள்ளார். இதனால் உறவினர் முரசொலிமாறன் என்பவரின் ஆலோசனையின் பேரில் கணவருக்கு தோசையில் தூ க்க மா த்திரை கலந்து கொடுத்ததாகவும் அனுசுயா கூறியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்தில் மயங்கிய கணவரை து ப்பட்டாவால் க ழுத்தை நெ ரித்ததாகவும், இதற்கும் உறவினர் உதவியதாகவும் அனுசுயா கூறியுள்ளார். இதையடுத்து தற்கொ லை வழக்கை கொ லை வழக்காக மாற்றிய காவல்துறையினர், அனுசுயாவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

கொ லைக்கு உதவிய முரசொலிமாறனை தேடி வருகிறார்கள். அக்காள் தம்பி உறவை சந்தேகப்பட்டு பேசியதாலையே தமது கணவரை கொ லை செய்ததாக அனுசுயா தெரிவித்துள்ளார்.

தென்னை மரத்தால் இளைஞருக்கு நேர்ந்த கதி!!

இளைஞருக்கு நேர்ந்த கதி

இளைஞர் ஒருவர் உந்துருளியில் பணிக்கு சென்றுக்கொண்டிருந்த போது, வீதியோரத்திலிருந்த தென்னை மரமொன்று குறித்த உந்துருளி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் மேற்படி இளைஞர் பரிதாபமாக ப லியாகியுள்ளார்.

திவுலபிடிய-கம்பஹா பிரதான வீதியின் வெடகெதர பகுதியில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பலத்த காயமடைந்த மேற்படி இளைஞர் திவுலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உ யிரிழந்த நபர் திவுலபிடியவை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்டப் போட்டி : சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணி வெற்றி!!

சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணி வெற்றி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சங்கம் நடாத்திய வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இதன் இறுதியாட்டம் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணியை எ திர்த்து கல்மடு வித்தியாலய ஆசிரியர் அணி மோ தியது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணி 18:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசக சங்க தலைவர் அ.அமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வவுனியா மாவட்டச் செயலர் நா.கமலதாசன் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட பயிற்றுநர் த.கமலன் மதிப்புறு விருந்தினராக எஸ்.ஜெ.ஆர்.கட்டுமான நிறுவன பணிப்பாளர் சி.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றிகரமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

இன்று மாலை இந்தியாவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வருகைதந்த எயார் இந்தியன் அல்லையன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.

இவ் விமானத்தில் வருகை தந்த அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை 17ம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.