வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு : 8 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 2 பேருக்கு பிடியாணை!!

டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் அண்மைய காலங்களாக அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை துப்பரவுப்பணிகள் செய்யத்தவறிய 8 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக இன்று நுளம்பு பெருக்கத்தடுப்புச்சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு தங்கும் விடுதிகள் உட்பட எட்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது இரண்டு வர்த்தகர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத்தவறியதால் அவர்களுக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்,

ஒரு வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டு 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 5பேருக்கு வர்த்தக நிலையங்களில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக்கட்டுப்படுத்தி துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவறுத்தல் வழங்கப்பட்டு,

ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையல் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் இவ்வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகர் சி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா நகர்ப்புறப் பகுதிகளான தர்மலிங்கம் வீதி, மில் வீதி, பஜார் வீதி போன்ற பகுதிகளிலுள்ள வியாபார வர்த்தக நிலையங்களில் கடந்த சில தினங்களாக பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை நடவடிக்கையில் சுமார் 24பேருக்கு டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைய பெற்று வருகின்றனர்.

இதையடுத்து டெங்கு நுளம்பு பெருகும் வியாபார வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மழை நீர் தேங்கும் இடங்கள் அவதானிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் மொட்டை மாடிகள், தண்ணீத் தாங்கிகள், கூரைகளில் காணப்பட்ட வெற்றுப் போத்தல்கள் போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளமை கண்டறியப்பட்டு அப்பகுதிகளை துப்பரவுப் பணி மேற்கொள்வதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது கால அவகாசத்தை உதாசீனம் செய்து வர்த்தக நிலையங்களை துப்பரவு செய்யத் தவறிய இரண்டு தங்குவிடுகள் உட்பட எட்டு வர்த்தகர்களுக்கு எதிராக நுளம்பு பெருக்கத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணகள் இடம்பெற்றபோது நீதிமன்றில் தோன்றத் தவறிய இரு வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றப்பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்.

ஒரு வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டப்பணமாக 25ஆயிரம் ரூபாவினைச் செலுத்தியுள்ளார். மேலும் 5 வர்த்தகர்களுக்கு தமது வர்த்தக நிலையங்களை துப்பரவுப் பணிகள் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காக ஐம்பதினாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதேவேளை அடுத்த தவணை எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக வியாபார நிலையங்களுக்கு பொதுமக்கள் வருகை தரவுள்ளனர். இந்நிலையில் தமது வியாபார நிலையங்களில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது!!

சர்வதேச முதியோர் தினம்

வவுனியா வைரவபுளியங்குளம் முதியோர் சங்கத்தால் சர்வதேச முதியோர் தினநிகழ்வு இன்று (15.10) இடம்பெற்றது.

வரைவபுளியங்குளம் முதியோர் சங்கத்தின் தலைவர் ம.தேவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதிகளாக பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், கிராம உத்தியோகத்தர் க.விஜயகுமார், தமிழருவி த.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் முதியவர்கள் கௌரவிக்கபட்டதுடன் அவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று, வெற்றிபெற்றவர்களிற்கு பரிசில்களும் வழங்கிவைக்கபட்டது.

நிகழ்வில் விசேடமாக ‘வடிவுறு மூப்பு’ எனும் தலைப்பில் தமிழருவி சிவகுமாரனால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டிருந்ததுடன், சிதம்பரேஸ்வரர் நடனாலயத்தின் ஏற்பட்டில் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நடனமாடியவர்களுக்கும் போன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வின் இறுதியில் சுயாதீன இளைஞர் அமைப்பினரால் ஐந்நூறு பனம் விதைகள் விதைப்பதற்காக முதியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மன்னாரில் கடும் மழை : சில கிராமங்கள் நீரில் மூழ்கின!!

மன்னாரில் கடும் மழை

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக சில கிராமங்கள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பகல் 2 மணியளவில் கடும் மழை பெய்துள்ளது.

இதனால் மன்னார் தீவு பகுதியில் உள்ள குளங்கள் , கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் மழை நீரில் நிறைந்து காணப்படுவதுடன், மக்கள் வசிக்கும் தாழ் நிலப்பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம் , ஜிம்றோன் நகர் , எமில் நகர் , உட்பட பல்வேறு கிராமங்கள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதுடன் பாதைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.

நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் வயல் நிலங்கள் மற்றும் தோட்டச் செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களில் மழை நீர் நிறைந்து காணப்படுகின்றது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சில கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் மண்ணுக்குள் கொட்டிக்கிடக்கும் புதையல் : ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்!!

புதையல்

திருகோணமலை, சேருவில பகுதியில் உள்ள இரும்பு, செம்பு கனிமங்கள் இருக்கும் இடத்தில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தங்க வளம் இருக்கும் இடத்திற்கு புதிய பொருளாதார பெறுமதியை ஏற்படுத்த தனியார் முதலீட்டாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம். இலங்கையில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

சேருவில பிரதேசத்தை சூழ இருக்கும் 100 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் சுமார் 5 கிலோ மீற்றர் பரப்பளவில் தங்கம் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அசேல இத்தவல குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் : கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!

ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண்

பார்வையற்ற நிலையிலும் ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற பெண்ணொருவர், திருவனந்தபுரம் துணை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில்(31). இவர் 6 வயதில் தனது கண்பார்வையை இழந்தார்.

எனினும் தன்னம்பிக்கையை இழக்காத பிரஞ்சால், பள்ளி கல்வியை வெற்றிகரமாக முடித்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப்பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய ஆட்சி பணி தொடர்பான பட்டம்பெற விரும்பி, அதற்குரிய பாடங்களை வாசித்து காட்டும் மென்பொருளின் உதவியுடன் கற்றறிந்தார். அடுத்த ஆண்டே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதிய பிரஞ்சால், தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.ஏ.எஸ் பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். இதற்காக அவர் தேசிய நிர்வாக இயல் கழகத்தில் பயிற்சி பெற்றிருந்தார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பிரஞ்சால் பட்டில் நேற்று பதவி ஏற்றார். ஏற்கனவே எர்னாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியதன் அனுபவத்தின் அடிப்படையில், பிரஞ்சாலுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ம் துவங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் நடிகராகவும் அறிமுகமாகிறார்.

இதேபோல ட்விட்டரின் வாயிலாக அடிக்கடி தமிழ் ரசிகர்களிடம் கலந்துரையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உலகளவிலான போட்டிகளில் 25 பதக்கங்கள் : புதிய வரலாறு படைத்த வீராங்கனை!!

வரலாறு படைத்த வீராங்கனை

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஜேர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கடைசி நாளான நேற்று, பெண்களுக்கான புளோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.

அதில், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்தார். இதன்மூலம் அவர் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதேபோல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் அவர் முதலிடம் பிடித்தார். இந்த தொடரில் அவர் கைப்பற்றும் 5வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

இதன்மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவர் 25 பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில், பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

இந்நிலையில் தான் அடுத்தடுத்து 2 பதக்கங்களை கைப்பற்றியதன் மூலம் சிமோன் பைல்ஸ் புதிய வரலாறு படைத்துள்ளார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்க பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், நள்ளிரவில் கடுமையான காது வ லி து டித்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது உள்ளே ஒரு கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்துள்ளார். பின்னர் எண்டோஸ்கோப்பி மூலம் அடுத்த சில நிமிடங்களில் கரப்பான் பூச்சி வெளியில் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், உள்ளே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இருப்பதை நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அந்தப் பெண்ணின் காதில் கீ றல் ஏற்பட்டிருந்தது. கீறல் கரப்பான் பூச்சியால் ஏற்பட்டதா அல்லது அதை அகற்றுவதில் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குணமடைய சில நாட்கள் ஆகலாம்.

ஈரமான நேரத்தில் பூச்சிகள் தங்குவதற்கு உயர்ந்த இடங்களுக்கு செல்லும். அந்த வகையில் காதுப்பகுதியை குகை என நினைத்து கரப்பான் பூச்சி புகுந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

பாரிஸின் பிரபல தேவாலயத்தை வெ டிகுண் டால் தகர்க்க முயன்ற 5 பெண்கள் : நீதிமன்றம் அதிரடி தண்டனை!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பிரபல தேவாலயத்தை கார் வெ டிகு ண்டு வைத்து தகர்க்க முயன்ற ஐந்து பேர் அடங்கிய பெண் ஐ.எஸ் தீ விரவாத குழுவினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அ திரடி தண்டனை வழங்கியுள்ளது.

பாரிஸில் உள்ள புகழ்பெற்ற Notre-Dame தேவாலயத்திற்கு வெளியே கார் வெ டிகு ண்டு வைத்து தா க்குதல் நடத்த முயன்ற பெண் தீ விரவாத குழுவினர்களுக்கு ஐந்து முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது.

பிரான்சில் தா க்குதல் நடத்த முயற்சிக்கும் பெண்கள் குழு சம்பந்தப்பட்ட முதல் வழக்கு இதுவாகும், நவம்பர் 4, 2016 அன்று தலைநகரின் மையத்தில் உள்ள தேவாலயத்திற்கு முன்நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 22 முதல் 42 வயது வரையிலான ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு முக்கிய குற்றவாளிகளான Ines Madani மற்றும் Ornella Gilligmann ஆகியோர் நள்ளிரவில் காரை டீசலுடன் நிரப்பி வெ டிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இருவருக்கும் முறையே 30 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பிரான்ஸ் ஐ.எஸ் ப யங்கரவாதி ரச்சிட் காசிமின் உத்தரவின் பேரில் பெண்கள் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது, 2016 ஜூன் மாதம் பிரான்ஸ் பொலிஸ் தம்பதியினரை அவர்களது வீட்டில் கொடூரமாக கொ லை செய்ய ரச்சிட் காசிமி உத்தரவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

பிப்ரவரி 2017 ஈராக் நகரமான மொசூல் அருகே நடந்த வான்வழித் தா க்குதலில் காசிம் கொ ல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

பாரிஸ் புறநகரில் தோல்வியடைந்த தா க்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு 22 வயதான Madani கைது செய்யப்பட்டார், மேலும், கைது செய்யப்பட்ட இரண்டு கு ற்றவாளிகளான Sarah Hervouet மற்றும் Amel Sakaou ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Gilligmann தெற்கு பிரான்சில் கைது செய்யப்பட்டார். ஐந்தாவது பெண், Samia Chalel, Madani தப்பிக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இணையதளம் மூலம் ஐ.எஸ் இயக்கத்திற்கு பெண்களை நியமிக்கும் முயற்சியில் Madani ஈடுபட்டு வந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது நடவடிக்கைக்கு வருந்துவதாக Madani நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்பாவின் பேச்சை மீற முடியவில்லை… எங்களால் அவருக்கு இந்த நிலை வந்தது : உயிர் தப்பிய மகள் கண்ணீர்!!

அப்பாவின் பேச்சை மீற முடியவில்லை…

தமிழகத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வி.ஷம் கு டித்து உ யிரிழந்த நிலையில், அதில் தப்பிய பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் கண்கலங்க வைத்துள்ளது. சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தம்பதி கோவிந்தசாமி(65)-குப்பம்மாள்(60). இந்த தம்பதிக்கு நாகராஜன்(35), ரவி(30) என்ற மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளார்.

கல்யாணியை ஆறுமுகம் என்பவருக்கும் கோவிந்தசாமி திருமணம் செய்து வைத்துள்ளார்.கோவிந்தசாமி கான்ட்ராக்டராக அப்பகுதியில் 10 பேரை வைத்து சாலை போடும் பணி மற்றும் வீடு கட்டும் பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆறுமுகம், தன் மனைவி கல்யாணியை பார்ப்பதற்காக மாமனார் கோவிந்தசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த மாமனார் மனைவி மற்றும் குழந்தைகள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போ.ராடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் இருந்த நால்வர் உ யிரிழந்த நிலையில், உயிருக்குப் போ.ராடிக்கொண்டிருந்த கல்யாணி, குழந்தைகள் சர்வேஸ்வரி (8) ,யோகப்பிரியா (6) ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து தொழிலுக்காக 80 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அது வட்டிக்கு மேல் வட்டி சென்றதால், கடன் அடைக்க முடியால் இந்த முடிவை எடுத்தாக தகவல் வெளியானது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்யாணி, அம்மா, அப்பா மற்றும் உறவினர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட போது மிகுந்த வேதனையுடன் கண்ணீருடன் காணப்பட்டார். அப்போது கல்யாணி பொலிசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களின் திருமணச் செலவுகளுக்காகத்தான் அப்பா வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அப்பா மற்றும் அண்ணன்களுக்கு வேலை இல்லாததால், அவர்கள் வீட்டிலே இருந்தனர். அதுமட்டுமின்றி வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி சென்றது. கடன் தொகை அதிகமானது, அந்த கடன் தொகையை அடைக்க, அவர் மேலும் கடன் வாங்கினார். இப்படி கடன் கூடிக் கொண்டே போனதால், ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை, அப்பா எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். கடன் தொகையை கட்ட முடியாமல் அப்பா தவித்ததால், கடந்த 12-ஆம் திகதி அம்மா சமைத்த உணவில் வி ஷம் கலந்திருப்பதாக கூறினார்.

அப்போது அவர் இத்தனை காலம் நான் இங்கு மரியாதையோடு வாழ்ந்துவிட்டேன், இனி கடன்காரர்களால் நான் மரியாதை இழக்க விரும்பவில்லை, அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என் முடிவுக்கு சம்மதிப்பவர்கள் இதை சாப்பிடலாம் என்று கூறினார்.

அப்பா முதலில் சாப்பிட்டார். அதன் பின் அனைவரும் சாப்பிட்டோம், அனைவரும் மயங்கி விழுந்தோம். ஆனால் நான் கணவிழித்து பார்த்த போது, மருத்துவமனையில் இருந்தேன். நானும், என் குழந்தைகளும் எப்படி பிழைத்தோம் என்று தெரியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஹோட்டல் அறையில் உயிருக்கு போ ராடிய இளம் ஜோடி : மூன்று நாட்களுக்கு பின் பரிதாப ம ரணம்!!

இளம் ஜோடி

வீட்டில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வி ஷம் குடித்த இளம்காதல் ஜோடி மூன்று நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் இளம்காதல் ஜோடி வி ஷம் குடித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு டி (22), க்ரீஷ்மா (22) என்கிற இருவரும் மங்களூரில் இருவேறு கல்லூரிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

அப்போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்குள்ளும் காதலாக மாறியிருக்கிறது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பலத்த எ திர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் மனவேதனையடைந்த இருவரும் தற்கொ லை முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார்?

கொள்ளையன் முருகனுடன்..

திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முக்கிய கு ற்றவாளி முருகனுடன் பிரபல தமிழ் நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் திகதி சுவரை துளையிட்டு கொ.ள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பல கிலோவை பொலிசார் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகன் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் தனக்கு பிரித்த பங்கில் சிலவற்றை சினிமா தயாரிப்பில் பயன்படுத்தி வந்ததும், மேலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் பொலிசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாநகர பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் பிரபல இளம்வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. முருகனை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் குறித்த நடிகையின் பெயர் குறித்து தெரியவரும் என கூறியுள்ளார்.

இன்றைய காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

இன்றைய காலநிலை

தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பரீட்சையில் சித்தியடையாத மாணவன் த ற்கொ லைக்கு முயற்சி : பதறும் பெற்றோர்!!

பரீட்சையில் சித்தியடையாத மாணவன்..

அனுராதபுரம் பிரதேசத்தில் புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடையாமையினால் அதிர்ச்சியடைந்த மாணவன் ஒருவர் த ற்கொ லை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார். தாயின் நோய்க்காக பயன்படுத்தும் மருந்து வகைகளை உட்கொண்டு தற்கொ லை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆறாம் திகதி புலமைப்பரில் பரீட்சை பெறுகள் வெளியாகியது. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் சிறப்பு சித்தி பெற்ற போதிலும், குறித்த மாணவனால் சித்தியடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாணவன் மருத்து அ ருந்தி தற்கொ லை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். புலமை பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்கள் கடுமையான ம ன ரீதியாக பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிலிண்டர் வெ டித்ததில் சரிந்து விழுந்த கட்டிடம் : 13 பேர் ப லி… 6 பேர் காயம்!!

சிலிண்டர் வெ டித்ததில்..

உத்திரபிரதேச மாநிலத்தில் சிலிண்டர் வெ டித்து, இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் ப.லியாகியிருப்பதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் முகமதாபாத்தில் இன்று இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கட்டிட இடர்பாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், இரண்டாவது மாடியில் எரிவாயு சிலிண்டர் வெ.டித்து சி தறியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இடர்பாடுகளில் சிக்கி 13 பேர் ப.லியாகியிருக்கின்றனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அருகாமையில் இருந்த மற்ற குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அம்மாநில முதல்வர் யோகி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்திருப்பதுடன், சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையிலிருந்து குழந்தையுடன் தனியாக கனடா வந்த பெண்: கிடைத்த நல்ல அனுபவங்கள்!!

இலங்கையிலிருந்து குழந்தையுடன்..

கணவரைப் பிரிந்து தனியாக குழந்தையுடன் கனடா வந்த ஒரு இலங்கைப் பெண், தனக்கென்று யாரும் இல்லை என வருந்திக்கொண்டிருந்தபோது, அவரது கண்களில் அந்த விளம்பரம் பட்டது.

இலங்கையைச் சேர்ந்த Amalee Danister கனடாவில் தனிமையில் தவித்த போது, பேருந்து ஒன்றில், 1up Single Parent Resource Centre என்ற இடத்தைக் குறித்த விளம்பரம் ஒன்றைக் கண்டார்.

விக்டோரியாவில், புதிதாக கணவரை பிரிந்த தாய்மார்களுக்கான பயிற்சி ஒன்று கொடுக்கப்படுவதை அறிந்த அவர், உடனடியாக தானும் அதில் பங்கேற்க முடிவு செய்தார்.

தனியாக ஒரு குழந்தையுடன் எப்படி வாழ்வது என தெரியாத பெண்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பிற்கு ஏராளமான பெண்கள் வந்திருந்ததாக தெரிவிக்கிறார் Amalee.

தன் குழந்தைக்கு தாய் போல் இருக்கும் ஒருவரையும் தாண்டி, தனக்கு தாய் போல் இருக்க யாராவது இருக்கிறார்களா என்று கேட்க, Lynn McCaughey என்பவர் அவரை சந்தித்திருக்கிறார்.

தன்னைப்போலவே பின்னணி கொண்ட Amaleeயை Lynnக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இரண்டாண்டுகள் அந்த பயிற்சி முடிந்த பின்னரும், இருவரும் நன்றாக ஒட்டிக்கொண்டார்கள்.

இப்போதும், எனக்கு ஒரு பிரச்சினை என்றால், என் தாயை அழைப்பதற்கு பதிலாக Lynnஐத்தான் அழைக்கிறேன் என்கிறார் Amalee. Lynn மட்டும் இல்லையென்றால், நான் எப்படி இருந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது என்கிறார் அவர்.

இதற்கிடையில் கனடாவுக்கு ஒருமுறை பிரித்தானிய இளவரசி கேட் வந்திருந்தபோது, அவர் Amaleeயையும் அவரது மகள் Netushaவையும் சந்தித்திருக்கிறார்.

அவருடன் கை குலுக்கிய Netusha, நீங்கள் ஒரு இளவரசியா என்று கேட்க, ஆம் என்று கூறிய இளவரசியிடம் உங்களுக்கு Frozen படத்தில் எந்த பாத்திரம் மிகவும் பிடிக்கும் என்று கேட்க, அவர் Elsa என்று சொன்னது Netushaவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.