அச்சுவேலி, இராச வீதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.
நவகிரி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பீ.நிரோஜன் என்ற நபரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.
அச்சுவேலி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டாடர் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உ யிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொலம்பியாவின் பல்கலைக்கழகத்தில் தமிழக திருநங்கை ரேவதியின் சுயசரிதை இடம்பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழில் ஜூவா நடிப்பில் உருவான தெனாவட்டு திரைப்படம் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரேவதி.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருநங்கைகளின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை உணர்வும் உருவமும் என்ற தனது முதல் புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
திருநங்கைகளின் உரிமை குறித்து திருநங்கைகளின் பார்வையில் இருந்து பேசிய அந்த நூல் பல விருதுகளையும் பெற்றது. அதன் பின் தனது சுயசரிதையை, THE TRUTH ABOUT ME என்ற பெயரில் ரேவதி ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
பெங்குயின் பதிப்பகம் வெளியிட்ட ரேவதியின் இந்த சுயசரிதைப் புத்தகம், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே அதிக அளவில் இடம்பெற்றிருக்கும் இந்த நூலகத்தில் திருநங்கை எழுத்தாளர் ரேவதியின் புத்தகமும் இடம்பெற்றிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தா க்குதலால் ப லியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் ஜப்பானை ஹகிபிஸ் புயல் கடுமையாக தா க்கியது. இதனால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பலத்த மழை மற்றும் சூறைக்காற்றினால் பல வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் உடைமைகளை இழந்தனர். சுமார் 3 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், 14 ஆயிரம் வீடுகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக ஜப்பான் அரசு ராணுவ படைகளை அனுப்பி வைத்துள்ளது. நேற்றைய தகவலின்படி இந்த புயலுக்கு 19 பேர் ப லியானதாகவும், 12 பேர் கா ணாமல் போய்விட்டதாகவும் தெரிய வந்தது.
இந்நிலையில், தற்போது ப லியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாகவும், 17 பேர் கா ணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் குடும்ப த கராறில் மனைவியை க த்தியால் கு த்திக் கொ லை செய்த கணவனை பொலிசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் ம து பழ க்கத்திற்கு அ டிமையானவர் என்று கூறப்படுகிறது.
இதனால் தினம் வீட்டிற்கு கு டித்துவிட்டு வரும் வெள்ளையப்பன், தனது மனைவி பேச்சியம்மாளிடம் த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பேச்சியம்மாளுடன் த கராறில் ஈடுபட்டுள்ளார் வெள்ளையப்பன். அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் மொட்டனூத்து கிராமத்தில் உள்ள தமது தாய் வீட்டிற்கு பேச்சியம்மாள் சென்றுள்ளார்.
அங்கு சென்ற வெள்ளையப்பன் மீண்டும் மனைவியுடன் த கராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த க த்தியால், பேச்சியம்மாளின் க ழுத்தில் கு த்தியுள்ளார். இதனால் ர த்த வெள்ளத்தில் இருந்த பேச்சியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேனியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் வெள்ளையப்பனை கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தில் ம து அருந்த மறுப்பு தெரிவித்த மனைவிக்கு அவருடைய கணவன் தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நூரி பாத்திமா கடந்த 2015ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அடுத்த சில ஆண்டுகளில் இருவரும் டெல்லியில் குடியேறியுள்ளனர். அங்கிருக்கும் பெண்களை போல குறுகிய ஆடைகளை அணிந்து ம து அருந்த வேண்டும் என முஸ்தபா, மனைவி பாத்திமாவை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்ததால் நீண்ட வருடங்களாகவே தொடர் தா க்குதல் ந டத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறுமாறு, பாத்திமாவிடம் முஸ்தபா கூறியுள்ளார்.
இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்ததால் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் நிலையம் சென்ற பாத்திமா, நீண்ட வருடங்களாகவே தன்னுடைய கணவர் கொ டுமைபடுத்தி வருவதோடு,
இரண்டு முறை கட்டாயப்படுத்தி கருவை கலைத்ததாகவும், அவர் கூறியதை கேட்க மறுத்ததால் தலாக் கூறியிருப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதனப்பள்ளியை சேர்ந்த பாபஜான்- சபானா தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து . ர த்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்ததால் ஏற்பட்ட அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் பிறந்த சில நாட்களிலேயே இ றந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கும் அதே அபூர்வ நோ ய் ஏற்பட்டுள்ளது. அவர்கள், குழந்தைக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுவரை ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் பலன் அளிக்கவில்லை.
இந்தநிலையில் மதனப்பள்ளி நீதிமன்றத்தில், கூலித்தொழிலாளியான பாபஜான், மனைவி சபானா ஆகியோர் சேர்ந்து ஒரு மனு அளித்துள்ளனர்.
அதில், தினமும் கூலி வேலை பார்த்து ரூ.300 சம்பாதிக்கும் என்னால், எனது பெண் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக, அதிகளவில் பணம் செலவழிக்க முடியவில்லை.
எனவே அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட என்னுடைய மகளை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும். எனத் தெரிவித்திருந்தனர்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இது போன்ற மனுக்களை மாவட்ட நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதற்கு பாபஜான், சித்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்குச் செல்லகூட தன்னிடம் பணம் இல்லை. எனது குழந்தையை காப்பாற்ற யாராவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 75 வயது பெண் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 75 வயது பெண் குழந்தை இல்லாத காரணத்தால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.
ஆனாலும் கூட அவருக்கு சொந்தமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்ததால், தனியார் மருத்துவமனையை அணுகி செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார்.
தாயாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின், அதனை முயற்சித்து பார்த்துள்ளார்.
மருத்துவ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலவீனமாக இருந்ததால் 6.5 மாதங்களுக்கு பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு நுரையீரல் மட்டுமே இருந்ததால் மருத்துவக்குழுவிற்கு பெரும் சவாலாக இருந்தது.
இறுதியில் 600 கிராம் எடையில் அழகிய குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தை மட்டும் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தைகள் மருத்துவர் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொ ள்ளையடித்து சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிரோ வந்த இருச்சக்கர வாகனத்தில் வந்த 3பேர் திடீரென்று அஞ்சலியின் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில், அவர் அணிந்திருந்த 24 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனார். வழக்கு பதிவு செய்த பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், சென்னையிலிருந்து வரும் நபர்களிடம் இதே பகுதியில் அடிக்கடி தொடர் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சித்தூர் மாவட்டத்தின் குப்பம் ரெட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தனா, இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் க டுமையாக க ண்டித்துள்ளனர், எனினும் பலத்த எ திர்ப்பையும் மீறி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதுபற்றி தெரிந்ததும் இருவீட்டாரும் ஒருவருக்கொருவர் வா க்குவாதத்தில் ஈடுபட, ஊர் பெரியவர்களிடம் பஞ்சாயத்து சென்றுள்ளது. இவர்கள் சந்தனா, ஸ்ரீநிவாஸை பிரித்ததுடன் அவரவர் பெற்றோரிடம் இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு சந்தனா வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக கூறி இறுதிச்சடங்கு செய்து உ டலை எ ரித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ததுடன் சந்தனாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்ததால் பெற்றோரை சந்தனாவை கொ ன்று விட்டு நாடகமாடுகிறார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற சகோதரன் கொ லை செய்யப்பட்டு பு தைக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்சியரான இவருக்கு வசந்தமணி(47) என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு சரண்யா என்ற மகளும், பாஸ்கரன் என்ற மகனும் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணம் ஆகி, மதுரையில் வசிக்கிறார். பாஸ்கரன், சென்னையில் பைனான்ஸ் மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். சமீபத்தில், பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதனால் உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வந்த செல்வராஜ், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உத்தண்டிகுமாரவலசுவில் வசிக்கும் அக்கா கண்ணம்மாள் (54) வீட்டிற்கு பத்திரிக்கை கொடுக்க தன் மனைவியுடன் சென்றுள்ளார்.
இந்தநிலையில், கரூர் மாவட்டம் சுக்காலியூர் திருச்சி அணுகுசாலையில் செல்வராஜின் கார் தனியாக நின்று கிடப்பதை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்ததால், பொலிசார் காரை பார்வையிட்டனர்.
அதன் பின், வெள்ளகோவிலில் உள்ள கண்ணம்மாள் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, கண்ணம்மாள், டீயில் ம யக்க மாத்திரை கலந்து கொடுத்து தம்பதியை கொன்று வீட்டு பக்கத்தில் பு தைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அதன் பின் அவரின் ச டலங்களை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கண்ணம்மாள், மருமகன் நாகேந்திரன், மகள் பூங்கொடி இவர்களது உறவினர் ஒருவர் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், செல்வராஜ் கடந்த மாதம் தனக்கு சொந்தமான தோட்டத்தை 45 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதில் அவர் தனது இரு சகோதரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கண்ணம்மாளோ என 50 ஆயிரம் ரூபாய் எல்லாம் வேண்டாம், 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன் கண்ணம்மாள் வீட்டிற்கு சென்ற இவர் 1 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு, நான் என் மகனின் திருமண பத்திரிக்கை கொண்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளார்.
5 லட்சம் ரூபாய் கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாயும், ஏற்கனவே கண்ம்மாளின் மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்கு அவர் எ திர்ப்பு தெரிவித்ததால், இந்த பண விஷயம், மகள் திருமணத்தில் எ திர்ப்பு தெரிவித்தது என்று கோபத்தில் இருந்த கண்ணம்மா அவரை கொ லை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, கடந்த 10-ஆம் திகதி செல்வராஜ் திருமண பத்திரிகை கொடுக்க மனைவியுடன் காரில் வந்துள்ளார். கண்ணம்மாளிடம் அழைப்பிதழ் தந்துவிட்டு, வீட்டில் சாப்பிட்ட பின், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
கண்ணம்மாள், தனது மருமகன் உங்களை பார்த்து பேச வேண்டும் என நினைக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள் வந்துவிடுவார் என கூறிவிட்டு, வீட்டிற்கு வெளியே சென்று குழி வெட்டியுள்ளார்.
சிறிதுநேரத்தில் 5 பேருடன் வந்த நாகேந்திரன், தம்பதியரை தா க்கி கொ ன்று குழிக்குள் புதைத்து விட்டு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க காரை அங்கு சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஹொக்கி போட்டியில் பங்கேற்க காரில் சென்ற வீரர்கள் 4 பேர் ப லியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஹோசன்காபாத்தில் ‘தியான் சந்திரா டிராபி’ ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க ஒரு காரில் ஹாக்கி வீரர்கள் சிலர் சென்றுகொண்டிருந்தனர்.
இடார்சி என்ற பகுதியில் இருந்து கிளம்பிய கார், ரைசல்பூர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் மரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ப லியாகினர்.
மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கிலில் சிவில் உடையுடன் வந்த பொலிஸார் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பித்துச்சென்ற சம்பவம் ஒன்று இன்று (14.10.2019) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் இரும்புவதற்கான சமிக்கையினை பிரயோகித்து வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கில் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் தேசமடைந்ததுடன் அதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிலின் சாரதி தான் ஒர் பொலிஸார் என தெரிவித்து விபத்துக்குள்ளான பெண்ணின் மோட்டார் சைக்கில் சாவியினை பறிக்க முற்பட்டுள்ளார்.
சாவியினை வழங்க பெண் மறுத்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிலின் சாரதி தான் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதாக தெரிவித்து அவரது மோட்டார் சைக்கிலினை அவ்விடத்திலிலேயே விட்டுச் சென்றாக விபத்தினை பார்வையிட்ட மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக விபத்துக்குள்ளான பெண் 119 அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு மோட்டார் சைக்கிள்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.
வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் கடந்த (12.10.2019 சனிக்கிழமை) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
காலை 7.00 மணியளவில் உற்சவம் ஆரம்பமாகி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டரை மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பத்து மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.
தொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார். அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் பகுதியில் நெற் பயிர்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்களுக்கு பூவரசன்குளம் பொலிசார் தடையை ஏற்படுத்தியமையால் பதற்றநிலை ஏற்பட்டது. இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 78 தமிழ் குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் விவசாயம் செய்து வந்த அரச நிலப்பகுதி யு த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தமையால் கைவிடப்பட்டிருந்தது.
மீண்டும் மக்கள் குடியேறிய நிலையில் அப்பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் நெற் செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அத்துடன் குறித்த காணியை தமது வாழ்வாதார பயிற்செய்கைக்காக வழங்குமாறு அம் மக்கள் பிரதேச செயலாளர், அரச அதிபர், மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண ஆளுனர் ஆகியோரிடம் கோரியும் இருந்தனர்.
இருப்பினும், அருகில் குடியேறியிருந்த சகோதர இனத்தவர்கள் குறித்த காணியை தாம் கையகப்படுத்த முயன்றமையால் அக்காணி அரசியல் தலையீடு காரணமாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் இன்று (13.10) அப்பகுதி தமிழ் மக்கள் தரணிக்குளத்தின் கீழான தாம் செய்கை செய்து வந்த குறித்த 40 ஏக்கர் நெற்செய்கை நிலத்தில் பயிற் செய்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு வந்த பூவரசன்குளம் பொலிசார் குறித்த காணியில் பயிர்செய்கை மேற்கொள்ள தடைவிதித்துடன், மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறும் கோரினர்.
ஆனாலும், மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறாது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், குறித்த காணிகள் அப்பகுதி தமிழ் மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் எனத் தெரிவித்து அவர்களை தொடர்ந்தும் பயிற்செய்கையில் ஈடுபடுமாறு தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிசார் அங்கிருந்து வெளியேறிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் மக்கள் நெற் செய்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன், தமது வாழ்வாதாரத்திற்காக குறித்த விவசாய காணியை பெற்றுத்தர உரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம் மக்கள் கோரினர்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொது மக்களுக்கு பொலிஸார் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். அதன்படி பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் கூறுகையில், தபால் பொது சேவையாளர் என தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் குறித்த மோசடி குழுக்கள் மக்கள் மத்தியில் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
அதன் பின்னர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்துள்ளதாகவோ அல்லது நம்பத்தகுந்த வேறு காரணங்களை கூறி அவற்றை பெற்றுக்கொள்ள தீர்வை செலுத்த வேண்டும் என கூறுகின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை தாம் வழங்கும் வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறு கூறி பணம் வைப்பிலிடப்பட்ட பின்னர் தொடர்பை துண்டிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடியால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் பலரும் கணிசமான அளவு பணத்தை இழந்துள்ளதாக மே்றகொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கட்டுமான பணியின் போது 18 மாடி கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததில், குறைந்தபட்சம் ஒருவர் ப லியானதோடு, 18 பேர் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள 18 மாடி ஹார்ட் ராக் ஹோட்டல் கட்டுமான பணியின் போது, இன்று காலை 9 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் ஒருவர் ப லியாகியிருப்பதாகவும், 18 பேர் கா யமடைந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மூன்று பேர் மா யமாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடம் சரிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையின் தலைவர் டிம் மெக்கானெல் கூறுகையில், கட்டிடத்தின் மேல் ஆறு முதல் எட்டு தளங்கள் இடிந்து விழுந்துள்ளன.
கட்டிடம் சீரற்ற நிலையில் இருப்பதால் இன்னும் சரிந்து விழ வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். இந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் அந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.