ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொ லை முயற்சி : 4 பேர் பரிதாப பலி!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்..

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வி ஷம் கு டித்து தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (68). இவரது மனைவி சுப்பம்மாள்(60). இவர்களுக்கு நாகராஜ்(35), ரவி(30) என்கிற இரண்டு மகன்களும், கல்யாணி (28) என்கிற மகளும் உள்ளனர்.

கல்யாணிக்கு திருமணம் முடிந்து சர்வேஷ்வரி (8), யோகேஷ்வரி (6) என இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடன் பிரச்னை காரணமாக குடும்பத்தை சேர்ந்த 7 பேருமே பூ ச்சிம ருந்து கு டித்து தற்கொ லைக்கு முயன்றுள்ளனர்.

இதில் கோவிந்தசாமி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார். கல்யாணி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் மட்டும் உயிருக்கு ஆ பத்தான நிலையில் மீ ட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆன ஒரு மாதத்திலே அழுகிய நிலையில் ச டலமாக மிதந்த பள்ளி ஆசிரியை!!

பள்ளி ஆசிரியை

ஆறு நாட்களாக மா யமாகியிருந்த பள்ளி ஆசிரியையின் ச டலம் அ ழுகிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமாரி அங்கிதா (25), கடந்த மாதம் 7ம் திகதியன்று தனியார் வங்கியில் வேலை செய்து வரும் வேத பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

மனைவிக்கு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை வேலை கிடைத்ததால், இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

7ம் திகதியன்று பொலிஸ் நிலையம் வந்த பிரகாஷ் தன்னுடைய மனைவியை கா ணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை தலைநகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ரயில்நிலைய குளத்தில் ஆசிரியையின் ச டலம் மிதந்துள்ளது.

அந்த வழியாக சென்ற ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குமாரியின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், மா யமான ஆசிரியை கொ லை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொ லை செய்துகொண்டாரா? என்கிற கோணத்தில் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து நூற்றுக்கும் அதிகமான மக்கள் கூடியதால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.

க வர்ச்சியால் இளைஞர்களை மயக்கிய அழகிகள் : சோதனை செய்ததில் உண்மை வெளியானது!!

தமிழகத்தில் அழகிகள் போல அச்சு அசலாக வேடமணிந்து பணம் பறித்த இளம் இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் பிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).இவர் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்தார். மாற்றுச்சான்றிதழ் தொலைந்துவிட்டதால் அதன் நகலை வாங்க கோவை பீளமேட்டில் உள்ள கல்லூரிக்கு வந்தார்.

பின்னர் சாலையில் அவர் நடந்து வந்தபோது க வர்ச்சியாக உடையணிந்து வந்த 2 அழகிகள் அவரிடம் பணம் கேட்டனர். அவர் ரூ.10 கொடுத்தார். இதை வாங்க மறுத்த அழகிகள் திடீரென்று விக்னேசை மி ரட்டி ரூ.3 ஆயிரம் பறித்தனர்.

இதனால் அவர் அழகிகளுடன் வா க்குவாதம் செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பொலிசார் அழகிகளை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் தங்களின் பெயர் கனி, ஆனந்தி என்று கூறினர். ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில், விக்னேஷிடம் பணம் பறித்தது அழகிகள் அல்ல. அழகிகள் போல் வேடம் அணிந்து புதுவிதமான வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில், அவர்கள் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர்கள் என்பதும், மணி என்பவர் கனி என்றும், ஆனந்தன் என்பவர் ஆனந்தி என்றும் தங்களது பெயரை மாற்றி, அழகிகள் போல் சேலை மற்றும் நவநாகரிக உடை அணிந்து வாலிபரிடம் பணம் பறித்தது தெரியவந்தது.

இதே போல கேரளாவை சேர்ந்த சவுகத் அலி என்பவர் கோவை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 அழகிகள் திடீரென்று, சவுகத் அலியை இடித்து தள்ளினர். பின்னர் அவர்கள் 5 பேரும், சவுகத்அலி தங்களிடம் செய்ததாக கூறி பணம் ப றிக்க முயன்றனர்.

இது குறித்து சவுகத்அலி கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் 5 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் ப றிக்க முயன்றது ஆண்களான விஜய் (21), ரத்தீஷ் (22), மணி (28), சச்சின் (21), கிரியா பியான்ஸ் (25) என்பது தெரிய வந்தது.

பணம் ப றிப்பதற்காக அவர்கள் 5 பேரும் அழகிகள் போல் வேடம் அணிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பூமிக்கடியில் பல கிலோ தங்கத்தை புதைத்து வைத்த நபர் : தெரியாமல் இருக்க அங்கு மலம் கழித்ததாக பகீர் வாக்குமூலம்!!

தங்கத்தை புதைத்து வைத்த நபர்

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொ ள்ளை சம்பவத்தில் முளையாக செயல்பட்ட முருகனிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த இரண்டாம் திகதி நள்ளிரவில் ரூ 13 கோடி மதிப்பிலான நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டது.

திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் தான் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் என்பது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையில் சிக்கிய மணிகண்டன் மூலம் அம்பலமானது.

இந்த வழக்கில் சுரேஷ் சில தினங்களுக்கு முன்னர் சரணடைந்த நிலையில் நேற்று முன் தினம் பெங்களூர் நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தான்.

இந்நிலையில் திருவெறும்பூரில் பூமிக்கடியில் நகைகளை முருகன் புதைத்து வைத்ததாக வாக்குமூலம் அளித்தான். இதையடுத்து கர்நாடக பொலிசார் அங்கு சென்று சுமார் 12 கிலோ நகைகளை தோண்டி எடுத்தனர்.

அப்போது நகைகள் புதைக்கப்பட்ட இடம் தெரியாமல் இருக்க அங்கு மலம் கழித்து வைத்திருந்ததாக முருகன் கூறியுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையில் இந்த விடயத்தில் புதிய ச ர்ச்சை வெ டித்துள்ளது.

அதாவது, கர்நாடக பொலிசார் உள்ளூர் பொலிசார் அனுமதி மற்றும் பூமிக்கு அடியில் புதைத்த பொருளை எடுக்க உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் எடுப்பது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் முருகனை திருச்சி அழைத்து வந்த கர்நாடக பொலிசார் நகைகளைத் தோண்டி எடுத்த விவகாரம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நகைகள் பெங்களுரூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் பெங்களூரு பொலிசார் பிடியில் இருந்த முருகனை தமிழக பொலிசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு கணவர் சென்ற போது அங்கு அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தம்பதி கோவிந்தசாமி(65)-குப்பம்மாள்(60). இந்த தம்பதிக்கு நாகராஜன்(35), ரவி(30) என்ற மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளார்.

கல்யாணியை ஆறுமுகம் என்பவருக்கும் கோவிந்தசாமி திருமணம் செய்து வைத்துள்ளார். கோவிந்தசாமி கான்ட்ராக்டராக அப்பகுதியில் 10 பேரை வைத்து சாலை போடும் பணி மற்றும் வீடு கட்டும் பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை ஆறுமுகம், தன் மனைவி கல்யாணியை பார்ப்பதற்காக மாமனார் கோவிந்தசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த மாமனார் மனைவி மற்றும் குழந்தைகள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போ ராடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்க, வீட்டில் இருந்த நால்வர் உ யிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கல்யாணி, குழந்தைகள் சர்வேஸ்வரி (8) ,யோகப்பிரியா (6) ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த சம்பவம் அதன் பின் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து தொழிலுக்காக 80 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

அது மகளுக்கு கல்யாணம் முடித்த பின், இந்தக் கடனுக்கு வட்டி மேல் வட்டியாக அதிகரித்ததால், கடன் தொல்லை தாங்க முடியாமல், வேறு வழியின்றி குடும்பத்துடன் த ற்கொ லை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.

கோவிந்தசாமி, மனைவி குப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உ யிரிழத்தனர். மற்ற 3 பேரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

திடீரென ரம்யாகிருஷ்ணன் உ யிரிழந்தாக கூறிய மருத்துவர்கள் : அ திர்ச்சியில் உறைந்த கணவர்!!

ரம்யாகிருஷ்ணன்

தமிழகத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட ரம்யாகிருஷ்ணன் என்ற இளம்பெண் உ யிரிழந்த நிலையில் த வறான சிகிச்சையால் தான் அவர் இ றந்தார் என தந்தை புகார் அளித்துள்ளார். மதுரையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ரம்யாகிருஷ்ணன் (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் ரம்யாகிருஷ்ணன் கர்ப்பமானார்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ரம்யாகிருஷ்ணன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்த ரம்யாகிருஷ்ணனுக்கு நேற்றுமுன்தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில், ரம்யாகிருஷ்ணனுக்கு உடல்நலக்கு றைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இ றந்துபோனதாக கணவரிடமும் உறவினர்களிடமும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அ திர்ச்சி அடைந்த அவர்கள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ரம்யாகிருஷ்ணனின் தந்தை மாரியப்பன், தனது மகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்களின் தவறான சி கிச்சையால் தான் இ றந்துபோனார். இது சம்மந்தமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக் விருந்து : இளைஞர்கள் அட்டகாசம் : 25 பேர் கைது!!

பேஸ்புக் விருந்து

அவிசாவளை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் போ தைப்பொருட்களுடன் 25 இளைஞர், யுவதிகளை கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞர், யுவதிகள் சிலர் அவிசாவளை – தெம்பிலியான பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது 21 இளைஞர்கள் மற்றும் 4 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 1315 மில்லிகிராம் ஹெ ரோயின், 525 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் க ஞ்சா என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் எம்பிலிப்பிட்டிய, தெய்வோவிட்ட, கொஸ்கொட, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

வேலை செய்யும் இடத்தில் மகனை தாய் கண்ட காட்சி : 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் கா ணாமல் போன மகனை தாய் கண்டுபிடித்து தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலுார் மாவட்டம், திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர், இந்திரா. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள், இந்திராவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இ றந்துவிட்டார்.

இந்நிலையில் இவரின் மகன் மணிகண்டன் தன்னுடைய 6 வயது வயல்காட்டிற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது வழி தவறி சென்றுவிட்டார்.

இதனால் இந்திரா அவரை பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தியடைந்த அவர், பெங்களூருக்கு கட்டட வேலைக்கு சென்றுவிட்டார்.

அவர் மகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்திரா, தற்போது, சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அருகிலுள்ள தொழுதுாருக்கு கட்டட வேலைக்கு இந்திரா சென்றபோது, அங்கு தன் கணவரின் சாயலில் இருந்த இளைஞரும், உடன் வேலை செய்வதைக் கண்டு, ஆச்சரியமடைந்தார்.

அப்போது அவர், சிறு வயதில் கா ணாமல் போன மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த இளைஞரிடம் விசாரித்தார். அவர், தான் இம்ரான் எனவும், தந்தை அபிபுல்லா, ராமநத்தத்தில் வசிப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், இம்ரான் தன் மகன்தான் என உறுதியாக நம்பிய இந்திரா, ராமநத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பொலிசார் அவரை விசாரித்த போது, பல ஆண்டுகளுக்கு முன், சாலையோரத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அபிபுல்லா என்பவர் மகன் போல வளர்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின், இந்திரா கூறிய அங்க அடையாளங்களை வைத்து, அந்த வாலிபரை பொலிசார் பரிசோதித்த போது, அவர் இந்திராவின் மகன் மணிகண்டன் என்பது உறுதியானது.

இதையடுத்து, மணிகண்டன் சம்மதத்துடன், தாய் இந்திராவோடு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

திட்டக்குடி தாலுகாவில், கிராம உதவியாளராக பணிபுரியும் அபிபுல்லா கூறுகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு சாலையோரத்தில் அழுது கொண்டிருந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

யாரும் தேடி வராததால், இம்ரான் என பெயர் வைத்து, என் மூத்த மகன் போல வளர்த்து வந்தேன். எனக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். இம்ரானை பிரிவது வேதனையாக உள்ளது.

மணிகண்டன் பிரிந்து செல்வதை, தாங்க முடியாத அபிபுல்லா குடும்பத்தினர் கதறி அழுதனர். 20 ஆண்டுகளுக்கு முன் கா ணாமல் போன மகன், மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், தாய் இந்திராவும் ஆனந்த கண்ணீர் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொழிற்பயிற்சி கருத்தரங்கு : வேலைதேடும் இளைஞர் யுவதிளுக்கு அரிய வாய்ப்பு!!

வடமாகாண ஆளுநரின்  அறிவுறுத்தலுக்கமைவாக  வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களை தேசிய ஊழியர் படையணியில் இணைத்துக்கொள்வதற்கும், தொழிற்தகுதி மற்றும் தொழில்விருத்தி செயற்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்தகுதிச்சான்றிதழ்களை (NVQ) வழங்குவதற்கான குறுங்காலத் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம்மாதம் நடைபெறவுள்ளது.

ஆளுநர் செயலகம் , மாவட்டச் செயலகம் மற்றும் Hightec Lanka International    ஆகியன  இணைந்து வடமாகாணத்தை சேர்ந்த 5 மாவட்ட செயலகங்களிலும்  நடாத்தவுள்ள இந்த  கருத்தரங்கில் மின் இணைப்பாளர் , கனரகவாகன இயக்குனர், கட்டுமானப்பணியாளர், வாகனம்திருத்துநர், ACதிருத்துநர், தளமேற்பார்வையாளர், AutoMobile, AutoElectrical Technician போன்ற பயிற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

இது தொடர்பான பதிவுகளை பிரதேச செயலகங்களில் பதிவு செய்தவர்கள்  மற்றும் பதிவுகளை மேற்கொள்ள தவறியவர்களும் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இடம்பெறுகின்ற செயலமர்வுகளில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களாவன

மாவட்டம் இடம் திகதி நேரம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் 14/10/2019
திங்கட்கிழமை
9.30am- 12.30pm
கிளிநொச்சி மாவட்ட செயலகம் 14/10/2019
திங்கட்கிழமை
2.00pm – 4.00pm
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் 15/10/2019 செவ்வாய்க்கிழமை 9.30am – 12.30pm
வவுனியா மாவட்ட செயலகம் 16/10/2019
புதன்கிழமை
9.30am – 12.30pm
மன்னார் மாவட்ட செயலகம் 17/10/2019
வியாழக்கிழமை
9.30am – 12.30pm

வவுனியா பண்டாரிகுளத்தில் டெங்கு ஒழிப்பு விஷேட நடவடிக்கை!!

டெங்கு ஒழிப்பு..

வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து பண்டாரிகுளம் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

24 டெங்கு நோயாளர்கள் வவுனியாவில் இனங்காணப்பட்டதனையடுத்து வவுனியா முழுவதும் வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையினர் பல்வேறு தரப்பினருடன் இணைந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்றையதினம் (13.10.2019) உக்கிளாங்குளம் பகுதியில் டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்யப்பட்டதுடன் அவற்றை அழிக்கும் நடவடிக்கையும் முன்னெடுத்தனர்.

பதுளையில் ஏற்பட்ட விபரீதம் : தாயும் பிள்ளைகளும் உ யிரிழப்பு!!

ஏற்பட்ட விபரீதம்..

பதுளை வெலிமடையில் தற்காலிக குடியிருப்பு மீது மரம் வீழ்ந்ததால் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10, 14 மற்றும் 18 வயதான மூவரே உ யிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய ஆணொருவர் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக சுறேஜனி, பிரசாந்த குமரன், ராதா கிருஷ்ணா என்பவர்களே உ யிரிழந்துள்ளனர். நேற்றிரவு பெய்த அடைமழையின் காரணமாக வீட்டுக்கு அருகில் இருந்த மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தந்தை உயிரிழந்த போது தொலைகாட்சியில் பாடல் கேட்ட மகனால் சர்ச்சை!!

மகனால் சர்ச்சை..

தென்னிலங்கையில் தந்தை உயிரிழந்த போது தொலைகாட்சியில் பாடல் கேட்டு மகிழ்ந்த மகன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. தொலைகாட்சியில் இடம்பெற்ற பாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பேற்படுத்திய இளைஞன் ஒருவர் பாடல் ஒன்று வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதன்போது வீட்டில் துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறினார். துயர சம்பவம் குறித்து அறிவிப்பாளர் கேட்ட போது, தந்தை காலை உ யிரிழந்துவிட்டார் என இளைஞன் குறிப்பிட்டுள்ளார். இளைஞனின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைத்த அறிவிப்பாளர்,

தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதன் போது, குறித்த இளைஞன் அடுத்த பாடலுக்காக தனது நண்பர்கள் குழுவினரை இணைத்து கொள்வதாக கூறி அழைப்பை துண்டித்தார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் இளைஞனை பலரும் விமர்சித்துள்ளனர்.

புத்தளத்தில் இயங்கிய வடமாகாண பாடசாலைகள் வடமேல் மாகாணத்திடம் கையளிப்பு!

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்களிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் வலயத்தை சேர்ந்த மன் /புத் /றிஸ்வான் GMMS ,மன் /புத் /ஆப்தீன்  GMMS, மன் /புத் / அன்சரி  GMMS , மன் /புத் / ஹஸ்பன் GMMS,மன்/ புத் / அயூப் GMMS, மன் /புத் /ரிஷாத் பதியுதீன் மகாவித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலைகளும் தற்போது புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்பாடசாலைகளில் மொத்தமாக 2386 மாணவர்களும் 167 ஆசிரியர்களும் தற்போது கடமைபுரிந்துவருகின்றனர். 1990 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து இப்பாடசாலைகள் புத்தளத்தில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்து.

அத்துடன் இப்பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் என்பன வடமாகாணத்தின் நிதியிலிருந்தே இதுவரை ஒதுக்கப்பட்டன . இனிவரும் காலங்களில் இவற்றை வடமேல்மாகாணத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு இந்த கலந்துரையாடல் இரண்டு மாகாணங்களினது ஆளுநர்கள் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலை தொடர்ந்து வடமாகாணத்தை சேர்ந்த குறித்த ஆறு பாடசாலைகளையும் கௌரவ ஆளுநர் அவர்கள் வடமேல்மாகாண ஆளுநரிடம் கையளித்தார்.  இதன்போது வடமேல் மாகாண ஆளுநர் தனது அதிகாரிகளுக்கு குறித்த பாடசாலைகளை வடமேல் மாகாணத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.

காது வலியால் துடித்த இளைஞர் : உள்ளே பஞ்சு பட்ஸ் ஐ நுழைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி..

பிரித்தானியாவில் இளைஞர் காது வ லியால் து டித்த நிலையில் அவர் காதுக்குள் சிலந்தி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Kent-ஐ சேர்ந்தவர் லியம் கோமிஸ் (27). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கதவில் அதிகளவில் சிலந்திகள் கூடுக்கட்டி இருப்பதை பார்த்தார்.

பின்னர் துடைப்பத்தால் அதையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு தனது படுக்கைக்கு தூங்க சென்றார் லியம். காலை தூங்கி எழுந்த போது லியமின் காது முழுவதும் அடைத்து கொண்டதோடு அதிகளவில் வலியும் ஏற்பட்டது.

மேலும் காதுக்குள் ஏதோ சத்தம் கேட்டு கொண்டே இருந்ததோடு வாந்தி மற்றும் தலைசுற்றுவது போல உணர்வு ஏற்பட்டது. பின்னர் காது குடையும் பஞ்சால் செய்யப்பட்ட பட்ஸ் (cotton bud) மற்றும் குண்டூசியை காதுக்கு உள்ளே விட்டு வெளியில் எடுத்த போது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

காரணம் அதில் சிலந்தியின் கால் வந்தது, பின்னர் தான் சிலந்தி காதுக்குள் சென்றுவிட்டது என உணர்ந்த லியம் மீண்டும் அதை உள்ளே நுழைத்து சிலந்தியை முழுவதுமாக வெளியில் எடுத்தார். இதன்பின்னரும் மருத்துவரிடம் லியம் செல்லவில்லை என்பது தான் ஆச்சரியம்.

தற்போது காது பிரச்னையில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள லியம் இரவில் தூங்கும் போதும் காதை மூடப்பயன்படும் Earmuff என்பதை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூவரசன்குளம் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெறும் தமிழ் பொலிசாரை சந்தித்த ஆளுநர்!!

பூவரசன்குளம் விமானப்படை கல்லூரி..

வவுனியா பூவரசங்குளம் விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (12.10.2019) பிற்பகல் சந்தித்தார்.

ஆளுநர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய முதன் முறையாக தமிழ் பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

இதன்போது அவர்களது பயிற்சி தொடர்பாகவும், நிறை குறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்ததுடன், தமிழ் பொலிஸ் பயிற்சியாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியில் முதற்கட்டமாக 153 பேர் இணைக்கப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்துப் பெண் ஒருவர் காட்டிய அடையாளங்கள்: புகாருக்கு பதினைந்தே நிமிடங்களில் தீர்ப்பளித்த நீதிமன்றம்!!

இந்துப் பெண் ஒருவர்..

இந்து பெண் ஒருவர் தங்களை நோக்கி மோ சமான விரல் அடையாளங்களை காட்டுவதாக, அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசில் புகாரளித்தனர். பொலிசார், ஷைலா ஜாக்குலின் (53) என்ற அந்த பெண்ணை நீதிமன்றத்துக்கு இழுத்தனர். பொலிசார் தங்கள் தரப்பு ஆதாரமாக நூற்றுக்கணக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

கிழக்கு எஸ்ஸெக்சை சேர்ந்த ஷைலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட, நீதிபதிகள் பதினைந்தே நிமிடங்களில் அந்த வழக்கை தள்ளுபடி செய்து அவரை அனுப்பிவிட்டனர். நடந்தது இதுதான், ஷைலா வீட்டுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், பழைய பிரச்னை ஒன்று உள்ளது.

Stephane Duckett என்ற அந்த பக்கத்துவீட்டுக்காரர், ஷைலா வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு வேர்க் ஷொப்பை வாங்கி, அதை வார இறுதியில் பார்ட்டி வைக்கும் இடமாக மாற்ற, கோபமடைந்த ஷைலா தம்பதி அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, ஷைலா அந்த வீட்டுப்பக்கம் போகக்கூடாது என தடையுத்தரவு ஒன்றை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

அந்த தடை உத்தரவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் காலவதியாக, கடற்கரையை நோக்கி மீண்டும் யோகா செய்யத் தொடங்கியுள்ளார் ஷைலா.

விரல்களால் அவர் செய்யும் யோகா முத்திரைகளைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள், ஷைலா தங்கள் வீட்டைப்பார்த்து விரலைக் காட்டி மோசமான அடையாளங்களைக் காட்டுவதாக மீண்டும் பொலிசாரிடம் புகாரளித்துள்ளனர்.

பொலிசார் ஷைலா தம்பதியரை நீதிமன்றத்துக்கு இழுத்து, அவர்கள் Duckett அல்லது அவரது மனைவியை தொடர்பு கொள்ளவும், ஷைலா வீட்டுக்கு வெளியே யோகா செய்வதை தடுக்கவும் தடை விதிக்குமாறு கோரினர்.

ஆனால் நீதிபதிகள் ஷைலாவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இது குறித்து பேசிய ஷைலா, ஏற்கனவே தான் பொலிசாரிடம் இது தனது இந்திய பாரம்பரியம் மற்றும் யோகா தொடர்பான விடயம் என விளக்கியும் அவர்கள் கேட்கவில்லை.

இந்த விடயம் நீதிமன்றத்துக்கு போயிருக்கவே கூடாது என்றார். இது என் மதம் மீதான தா க்குதல் என்று கூறியுள்ள ஷைலா, பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.