வவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா!!

வடமாகாண பண்பாட்டு விழா

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று 12.10.2019 (சனிக்கிழமை) நடைபெற்றது.

கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பண்பாட்டுப் பெருவிழாவின் இறுதி நாளான இன்று, சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம், பண்பாட்டு ஊர்வலம் கலை நிகழ்வுகள் சிறந்த நூற்பரிசு வழங்கள், விருதுவழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் பண்பாட்டு அம்சங்கள் தாங்கிய ஊர்வலம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டு புகையிரத நிலைய வீதி ஊடாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரோன் ராகவன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உதவிப்பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ், முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கம், கலைஞர் வேல் ஆனந்தன், ஓய்வு நிலை சிரேஸ்ட விரிவுரையாளர், மு.கௌரிகாந்தன் என பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ம ரணம் : விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோட்டம்!!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ம ரணமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. இன்று மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் சந்தியில் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றை அதே வழியில் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியது.

இவ் விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த புளியங்குளம், முத்துமாரி நகரைச் சேர்ந்த கறுப்பையா சத்தியநாதன் என்பவர் கா யமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாது தப்பிச் சென்றுள்ள நிலையில், விபத்து குறித்து கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூன்று கால்கள் இரண்டு பாலுறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை : மருத்துவர்கள் தெரிவித்துள்ள முக்கிய தகவல்!!

அதிசய குழந்தை

ரஷ்யாவில் குழந்தை ஒன்று மூன்று கால்கள் மற்றும் இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்தது, ஆனால் அதற்கு ஆசனவாய் இல்லை.

அந்த குழந்தை இரட்டைக் குழந்தையாக உருவாகியிருக்க வேண்டும், அதன் மூன்றாவது கால் அந்த குழந்தையுடன் உருவான இன்னொரு குழந்தையின் காலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

என்றாலும், அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த குழந்தையால் மற்றவர்களைப்போல சாதாரண வாழ்வை மேற்கொள்ள முடியும் என உறுதியளித்தனர். பின்னர் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உபரி உறுப்புகள் அகற்றப்பட்டன.

கர்ப்பத்திலிருக்கும்போதே அந்த குழந்தைக்கு மூன்றாவது கால் இருப்பது தெரியவந்தாலும், அதை கருக்கலைப்பு செய்ய அதன் தாய் மறுத்துவிட்டதோடு, அந்த குழந்தையை சுகப்பிரசவத்திலும் பெற்றெடுத்தார் அவர்.

குழந்தை பிறந்த உடனே, அதற்கு ஒரு ஆசன வாய் ஏற்படுத்தப்பட்டு அதன் கழிவுகள் அகற்றப்பட உதவி செய்தனர் மருத்துவர்கள்.

2018ஆம் ஆண்டு யூலை மாதம் பிறந்த அந்த சிறுவன் இப்போது நன்றாக இருப்பதாகவும், நடப்பதாகவும் தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவன் மற்ற குழந்தைகளைப்போலவே சாதாரணமாக வாழ்வான் என்று தெரிவித்துள்ளார்கள்.

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலும் வவுனியாவும் கலந்துரையாடல்!!

ஜனாதிபதித் தேர்தலும் வவுனியாவும்

வவுனியா அறிவுசார் மன்றத்தின் ஏற்பாட்டில் “ஜனாதிபதி தேர்தலும் வவுனியாவும்” எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (12.10.2019) மாலை இடம்பெற்றது.

வவுனியாவின் புத்திஜுவிகள் மற்றும் தொழில்சார் சமூகம் தேர்தலில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தேர்தலின் தமிழ் மக்களின் பங்களிப்பு, யாருக்கு வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பும் வவுனியா மாவட்டமும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அறிவிப்பாளரான விமலச்சந்திரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவகுமார்,

தமிழ் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் மதன், தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜனகன், பொறியலாளர் தயாபரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் மதுரகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன்,

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முதல் முறையாக சந்தித்து கொண்ட 4 மணி நேரத்திற்குள் திருமணம் செய்து கொண்ட ஜோடி!!

காதல் ஜோடி

இந்தியாவில் ஒரு ஆணும், பெண்ணும் தாங்கள் முதல் முறையாக சந்தித்து கொண்ட 4 மணி நேரத்துக்குள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த சுதிப் கோஷல் என்ற இளைஞரும், பிரித்மா பானர்ஜி என்ற இளம்பெண்ணும் பேஸ்புக் மூலம் நட்பானார்கள். இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்த போதிலும் அவர்கள் வெளிகாட்டவில்லை.

அதே போல இருவரும் நேரில் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று அங்குள்ள ஒரு கோவிலில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.

அங்கு சுதிப்பும், பிரித்மாவும் எதேர்சையாக வந்த போது ஒருவரையொருவர் முதல் முறையாக சந்தித்து கொண்டனர். பின்னர் இருவரும் மனம் விட்டு பேசிய போது சுதிப், பிரித்மாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இருவரும் வீடியோ அழைப்பு மூலம் சில மணி நேரம் தனித்தனி இடத்துக்கு சென்று பேசினார்கள். சுதிப்பும், பிரித்மாவும் சந்தித்து நான்கு மணி நேரம் கூட ஆகாத நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி கோவிலில் வைத்தே பிரித்மா நெற்றியில் குங்குமம் வைத்து சுதிப் மனைவியாக ஏற்று கொண்டார்.

இவர்களின் திருமணத்தை இருவீட்டாரும் ஏற்று கொண்டுள்ளனர். இது குறித்து சுதிப் கூறுகையில், எனக்கு சம்பிரதாயத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, எனக்கு பிடித்த கடவுள் முன்னிலையில் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்று கொண்டதே எனக்கு திருப்தியளிக்கிறது என கூறியுள்ளார்.

பிரித்மா கூறுகையில், நாங்கள் கோவிலில் சந்தித்து கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை, இது தற்செயலாக நடந்ததா அல்லது தெய்வத்தின் விருப்பமா என தெரியவில்லை என கூறியுள்ளார். தற்போது இந்த தம்பதிகள் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த லட்சக்கணக்கில் மதிப்பிலான தங்கம் சிக்கியது எப்படி?

தங்கம் சிக்கியது எப்படி?

கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு க டத்தி வரப்பட்ட ரூ.36¾ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக இலங்கை பெண் உள்ளிட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்து இறங்கிய இலங்கையை சேர்ந்த சிவக்குமார் பழனியாண்டி (38) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் தங்க நகைகளை மறைத்து வைத்து க டத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அதே போல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சகாய மேரி (35) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, துணிகளுக்கு இடையில் தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்க கட்டிகளையும் சேர்த்து ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 448 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில், 2 பேரிடமும் இருந்து ரூ.36 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 973 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பொது நூலகத்தில் முன்பள்ளி சிறுவர்களுக்கான நிறந்தீட்டல் போட்டி!!

நிறந்தீட்டல் போட்டி

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு “வாசிப்பும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி சிறுவர்களுக்காக நிறந்தீட்டல் போட்டி வவுனியா நகரசபை பொது நூலகத்தில் நேற்று (11.10.2019) காலை இடம்பெற்றது.

நகரசபை எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கிடையே இப் போட்டி இடம்பெற்றிருந்தது.

பிரதம நூலகர் பாமினி உருச்சந்திரன் தலமையில் இடம்பெற்ற இச் செயற்றிட்டத்தில் பிரதம அதிதியாக நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் தர்சனா சுகுமார் கலந்து சிறப்பித்திருந்ததுடன் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நூலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு..

எதிர்வரும் வருடம் டிசம்பர் மாதம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக ஆட்பதிவு திணைக்களம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அடையாள அட்டை இல்லாத மாணவர்கள் 0115 226 115 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதனை பெறுவதற்கான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்!!

வடக்கு மாகாண பண்பாட்டு விழா

வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று இரு அமர்வுகளாக நடைபெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றது. இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.

மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடைபெற்றது. இதன்போது ஊடகம், புகைப்படம், நாட்டுக்கூத்து. நடனம், இசை, கலை உள்ளிட்ட 13 துறைகளுக்கான இளம் கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

இவ்விருதில் கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர் பரமசிவம் (சிவா) அவர்களுக்கு சிறந்த புகைப்பட துறைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் மாலை அமர்வில் புத்தாக்க நடனம், பரதநாட்டியம், மங்கள இசை, றபான் நடனம், கிராமிய நடனம், முல்லைமோடி நாட்டுக் கூத்து உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம் கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகள்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு..

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக IANS வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ம் திகதி நடக்கவுள்ளது. இந்நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலையன்ஸ் எயர் நிறுவனம் இலங்கைக்கான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகளுக்கு அலையன்ஸ் எயர் நிறுவனம், ATR 72-600 விமானங்களைப் பயன்படுத்தவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தக நிலையங்களில் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கை!!

டெங்கு நுளம்பு பரிசோதனை..

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் அண்மைய காலமாக டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்துக்காணப்படுகின்றது. இதனால் 24 டெங்கு நோயர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து வியாபார, வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா மில் வீதி, பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி போன்ற வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் இன்று பரிசோதனை நடவடிக்கை பொது சுகதாதரப் பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வியாபார நிலையத்தின் மேல் தளங்களில் காணப்படும் மொட்டை மாடிகள், தண்ணீர்த் தாங்கிகள், கூரைகள், வெற்றுப் போத்தல்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டுள்ள இடங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விழிப்புணர்வு துண்டறிக்கைகள் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டு தற்போது அப்பகுதிகள் சீரமைப்பதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் குறைபாடுகளை திருத்த தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமது வியாபார, வர்த்தக நிலையங்களில் காணப்படும் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக்கட்டுப்படுத்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படும் இடங்களை அவதானித்து அதனைத் தடுப்பதற்கும் மழை நீர் வழிந்து செல்வதற்கான பூரண நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இதன்போது பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு ஆதரவாக வர்த்தக சங்க உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா!!

வடக்கு மாகாண பண்பாட்டு விழா

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(11.10.2019) (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் சண்முகலிங்கன் தலைமையில் ஆரம்பமான முதல் நாள் நிகழ்வில் கலைநிகழ்வுகள், சிறப்பு ஆய்வரங்கு மற்றும் இளம் கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வில், பட்டிமன்றம், கவியரங்கம், பண்பாட்டு ஊர்வலம், சிறந்த நூற்பரிசு வழங்கல் மற்றும் விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

குறித்த நிகழ்ச்சியில், மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம் கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் குளத்தில் இருந்து பெண்ணின் ச டலம் மீட்பு!!

குளத்தில் இருந்து..

வவுனியா, பேயாடிகூழாங்குளம் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (11.10.2019) மீட்க்கப்பட்டுள்ளது.

வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் கா ணாமல் போயிருந்தார். இது தொடர்பில் மடுகந்தை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேயாடிகூழாங்குளம் குளப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் ச டலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு சென்ற மடுகந்தை பொலிசாரும், இராணுவத்தினரும் குளத்தில் இருந்த ச டலத்தினை மீட்டுள்ளனர்.

குறித்த ச டலமானது கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கா ணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட எஸ்.விஜயலக்சுமி (வயது 56) என்பவருடையது என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து மடுகந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தண்ணீறூற்று முள்ளியவளை  ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பத்மகுமாரக்குருக்கள் நினைவாக உருவச்சிலை அமைப்பு!

 

அண்மையில் அகால மரணமடைந்து  இறைவனடி சேர்ந்த  முல்லைத்தீவு ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.பத்மகுமாரக் குருக்கள்( ஜெயந்திகுருக்கள்) ஞாபகார்த்தமாக அவரது உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று 10.10.2019  வியாழக்கிழமை இடம்பெற்றது.மேற்படி உருவச்சிலையை சிற்பி நிரஞ்சன் வடிமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அறை முழுவதும் இ ரத்தம் : வெவ்வேறு இடங்களில் ச டலமாக கிடந்த இளம்காதல் ஜோடி!!

இளம்காதல் ஜோடி..

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறையில் இளம்காதல் ஜோடி ர த்தவெள் ளத்தில் இ றந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த சாகர் பாபு (25) மற்றும் அவருடைய காதலி தேஜஸ்வி (23), கடந்த புதன்கிழமை காலை தெனாலி ரயில்வே நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

மாலை நேரமாகியும் அறை திறக்கப்படாததால் ச ந்தேகமடைந்த ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, கையில் ர த்தம் வ ழிந்தோடியபடியே தேஜஸ்வி இ றந்து கிடந்துள்ளார்.

அதே போல குளியறையில் சாகர் பாபு இ றந்து கி டந்துள்ளார். இருவரின் உ டலையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், அறையில் இருந்து பூ ச்சி ம ருந்தை கைப்பற்றினர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், 7ம் திகதியிலிருந்து தேஜஸ்வி மா யமாகியிருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏழை குடும்பத்தில் பிறந்து சோதனைகளை சாதனையாக்கிய மாபெரும் கலைஞன் வடிவேலு : சொல்லப்படாத கதை!!

மாபெரும் கலைஞன் வடிவேலு..

தமிழ்சினிமா அகராதியில் இருந்து தவிர்க்கவே முடியாத ஒரு மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு. மதுரையை சேர்ந்த வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இன்று அவரின் பிறந்தாள் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் தனக்கு செப்டம்பர் 12ஆம் திகதி தான் பிறந்தநாள் என வடிவேலு வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். சரி, வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு குறித்து காண்போம்,

இவரின் தந்தை பெயர் நடராசன், தாய் பெயர் சரோஜினி அம்மாள். வடிவேலு தனது சிறுவயதிலிருந்தே பள்ளிக்கூடம் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்துவாராம். இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக வடிவேலுவின் தந்தை ம ரணமடைய அவர் குடும்பம் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதன்பின்னர் மதுரையில் புகைப்படங்களுக்கு பிரேம் மாட்டும் கடையில் வடிவேலு வேலைக்கு சேர்ந்தார். இந்த சூழலில் வடிவேலு ஊருக்கு பிரபல நடிகரும், இயக்குனரான ராஜ்கிரண் சென்ற போது வடிவேலுக்கு அவர் அறிமுகம் கிடைத்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் வடிவேலு பணிபுரிந்த நிலையில் அவர் நடிப்பு திறமையை பார்த்து தனது என் ராசாவின் மனசிலே படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பளித்தார்.

அதன்பின்னர் கவுண்டமணி, செந்திலுடன் சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் நடித்த வடிவேலுவுக்கு பின்னர் தனியாக நகைச்சுவை நடிகராக படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

இதையடுத்து விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை காட்டிய வடிவேலு தமிழ் திரையுலகில் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக ஆனார். இவர் எழுதி நடித்த காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய திரைப்படங்கள் ஏராளம்.

கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் மீம்ஸ் வாயிலாக சமூக வலைதளங்களிலும் வடிவேலுவின் ராஜ்ஜியம் தான் தொடர்கிறது.

வடிவேலுவுக்கு விசாலாட்சி என்ற மனைவியும், கன்னிகாபரமேஷ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மூன்று மகள்களும், சுப்ரமணியன் என்ற மகனும் உள்ளனர்.

தனது ஆரம்பகால ஏழ்மையை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு கூரை வீட்டில் வசிக்கும் ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.