பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
துளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் அஷ்ரிதா ஷெட்டி(26). இவர் தற்போது ‘நான் தான் சிவா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அஷ்ரிதாவும் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க போராடி வரும் பிரபல வீரரான மனிஷ் பாண்டேவும் காதலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. மனிஷ் பாண்டே, தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடக அணியை வழிநடத்தி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதியன்று மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் டி20 போட்டி டிசம்பர் 6ம் திகதியன்று துவங்க உள்ளது. இதனால் போட்டியில் விளையாட உள்ள சில வீரர்கள் திருமணத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்த பெண் நீதிமன்றத்துக்கு எந்தவித பதட்டமும் இன்றி வந்த நிலையில் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47) என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளில் தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்துள்ளார். தனது முதல் கணவர், பெற்றோர்கள், இரண்டாம் கணவரின் முதல் மனைவி, குழந்தை உள்ளிட்ட ஆறு பேரை தான் அவர் கடந்த 2002லிருந்து 2014ஆம் ஆண்டுக்குள் கொ லை செய்தார்.
ஜோலியின் வழக்கு கேரளாவை உலுக்கியுள்ள நிலையில் அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கைதான இரண்டு பேரையும் 6 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஜோலி நேற்று கோழிக்கோடு நீதிமன்றத்துக்கு பலத்த பா துகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
அப்போது பிங்க் நிற உடையில் தலையில் முக்காடு போட்டபடி வந்த ஜோலி தனது முகத்தை மூடவில்லை. அவர் எந்தவித பதட்டமும் இன்றி சாதாரணமாகவே காணப்பட்டார். ஜோலியின் செயல் குறித்து தான் கேரளாவில் தற்போது எல்லா இடங்களிலும் பேசப்படும் நிலையில் அவரை காண பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் நீதிமன்றம் உள்ள பகுதியில் குவிந்தனர்.
இதோடு ஜோலி வசிக்கும் பகுதியை சேர்ந்த பலரும் அங்கு வந்திருந்தனர், நம்முடன் நன்றாக பேசி பழகிய ஜோலி இவ்வளவு கொ டூரமானவரா என அதிர்ச்சி விலகாமல் அவரை பார்த்தபடி அவர்கள் இருந்தனர்.
இந்தியாவில் ஏழு தலையுடன் பாம்பு இருப்பதாக கூறி, அதன் தோல் ஏழு தலையுடன் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவிலிருந்து சுமார் 60 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றில், பாம்பு ஒன்று ஏழு தலையுடன் இருப்பதாகவும், அதன் தோல் தான் இது என்று கூறி, அதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
அதுமட்டுமின்றி இந்த தோல் இருக்கும் இடம் சக்தி வாய்ந்த இடம் என்று அங்கிருக்கும் கிராம மக்கள் அதை தெய்வீகமாக பார்த்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் இந்த தோல் 6 மாதங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகில் பார்த்தது என்று கூறி வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் அப்படி இருக்க சாத்தியமே இல்லை எனவும், இரண்டு தலை கொண்ட பாம்பு மட்டுமே இருப்பதற்கு சாத்தியம், என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் அந்த வீடியோ ஏழு தலை கொண்ட பாம்பின் தோல் என்று இணையவாசிகள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
கேரளாவில் இளம்பெண் ஒருவரை ஒருதலைப்பட்சமாய் காதலித்த இளைஞன் நள்ளிரவில் பெ ட்ரோல் ஊற்றி எ ரித்த சம்பவம் கடும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நிதின், இவர் காக்கநாடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை பலமுறை கூறியும் அப்பெண் நி ராகரித்ததாக தெரிகிறது.
இதனால் கடும் கோ பத்தில் இருந்த நிதின் அப்பெண்ணை கொ லை செய்ய முடிவெடுத்தார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிதின், வெளியே வருமாறு கூறியுள்ளார்.
நடக்கப்போகும் விபரீதம் பற்றி அறியாமல் வெளியே வந்த இளம்பெண்ணின் மீது மறைத்து வைத்திருந்த பெ ட்ரோலை ஊ ற்றி தீ வைத்துள்ளார். அத்துடன் தன் மீது பெ ட்ரோலை ஊ ற்றிக் கொண்டு த ற்கொ லை செய்து கொண்டார்.
இதனை பார்த்ததும் அ லறித்துடித்துக் கொண்டு காப்பாற்ற சென்ற பெண்ணின் தந்தை பலத்த கா யங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் தந்தை இ றந்த 14 நாட்களுக்கு பின்னர் தாயை க ழுத்தை அ றுத்து கொ லை செய்துவிட்டு தானும் தற்கொ லைக்கு முயன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் சரஸ்வதி (72). இவருடைய கணவர் பாலகிருஷ்ணன் (78). கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இ றந்துவிட்டார். இதனால் தனது மகன் எத்திராஜ் என்ற ரமேஷ்(42) என்பவருடன் வசித்து வந்தார். எத்திராஜ், மனநிலை பாதிக் கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி, எத்திராஜை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.
தந்தை இ றந்துவிட்ட நிலையில் தாய் சரஸ்வதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மனம் உடைந்த எத்திராஜ், நாம் வாழ வேண்டாம். தற்கொ லை செய்து கொள்ளலாம் என்று தாயிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை எத்திராஜ், சரஸ்வதியின் க ழுத்தை க த்தியால் அ றுத்து கொ லை செய்தார். இதில் அவர், அதே இடத்தில் ர த்த வெள்ளத்தில் ச டலமானார். பின்னர் எத்திராஜ் தானும் தற்கொ லை செய்து கொள்வதற்காக க த்தியால் வ யிற்றில் கு த்திக்கொண்டார்.
ஆனால் கத்தி, வ யிற்றிலேயே மாட்டிக்கொண்டதால் வலியால் அலறி துடித்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சரஸ்வதி ச டலமாக கிடப்பதையும், வயிற்றில் க த்தி பாய்ந்த நிலையில் எத்திராஜ் அலறி துடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் எத்திராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொ லையான சரஸ்வதியின் உ டலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு கொ லைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் அருகே காருக்குள் இளம்காதல் ஜோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் வெள்ளி நகைப்பட்டறை நடத்தி வரும் கோபி என்பவருடைய மகன் சுரேஷ்.
இவரும் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் படித்துவரும் ஜோதிகா என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், பதற்றமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அப்போது சுரேஷுக்கு சொந்தமான கார் செட் லேசாக திறந்திருப்பதை பார்த்த நண்பர்கள் உள்ளே சென்ற போது, சுரேஷ் மற்றும் ஜோதிகா நி ர்வாணமாக இ றந்த நிலையில் காருக்குள் கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இருவரின் காதலுக்கு அவர்களுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மாற்றாந்தாய் மனபான்மையில் கணவரின் மகளை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய இளம்பெண்ணின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவருக்கு திருமணமாகி ராகவி (6) என்ற மகள் உள்ள நிலையில் இவர் மனைவி மூன்றாண்டுகளுக்கு முன்னர் இ றந்துவிட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணமான சூர்யகலா (29) என்ற பெண்ணை பார்த்திபன் மறுமணம் செய்தார். சூர்யகலாவுக்கு முதல் கணவர் மூலம் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்துக்கு பின் குழந்தைகள் பெற்றுகொள்ள வேண்டாம், நம் குழந்தைகளுடன் வாழ்வோம் என பார்த்திபன் கூறியதை சூர்யகலா ஏற்று கொண்டார்.
ஆனால் சூர்யகலாவுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை வெளிப்பட தொடங்கிய நிலையில் ராகவியை அ டித்து கொ டுமைப்படுத்த தொடங்கினார். மேலும் தனது மகனை மட்டுமே கவனித்து வந்தார், இந்நிலையில் அலுவலத்தில் இருந்த பார்த்திபனுக்கு நேற்று மாலை போன் செய்த சூர்யகலா ராகவியை கா ணவில்லை என கூறினார்.
இதனால் பதறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்த பார்த்திபனிடம், ராகவி இங்கு தான் விளையாடி கொண்டிருந்தாள், பின்னர் எங்கு சென்றார் என தெரியவில்லை என கூறினார்.
இதையடுத்து பார்த்திபன் வீட்டு மொட்டைமாடிக்கு சென்று பார்த்தார். வீட்டின் பின்புறம் காலி மைதானம் புதர் மண்டி இருந்துள்ளது. சந்தேகத்தின்பேரில் அங்கு சென்று பார்த்தபோது உடலெங்கும் ர த்த கா யத்துடன் மகள் ராகவி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்திபன், மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் ராகவி ஏற்கெனவே உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ராகவி மாடியிலிருந்து தவறி விழுந்து இ றந்திருக்கலாம் என்கிற கோணத்தில் அக்குழந்தையின் உ டல் பி ரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் மாடியிலிருந்து ராகவி கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை என தெரிந்ததோடு பார்த்திபனுக்கு சூர்யகலா இரண்டாவது மனைவி என்பதால் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. ஆனால் அவர் அழுதபடி இருந்தார்.
இதையடுத்து சூர்யகலாவிடம் விசாரித்த போது என் குழந்தை அவள், அவளைப் போய் நானே கொ ல்வேனா? நானும் ஒரு குழந்தைக்கு தாய் என்றெல்லாம் சூர்யகலா பேசினார். ஆனால் ஒருகட்டத்தில் ராகவியை கொ ன்றதை ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ராகவியை எனக்குப் பிடிக்கவில்லை.
இந்நிலையில் நான் கர்ப்பமானேன். நமக்கு எதற்கு இன்னொரு குழந்தை நமக்குத் தான் 2 குழந்தைகள் உள்ளதே என க ருக்கலைப்பு செய்ய சொன்னார் . இதனால் என் கோ பம் ராகவி மீது திரும்பியது. அடுத்த குழந்தை பிறப்பதற்கு தடையாக இருப்பதாக நினைத்து ராகவியைக் கொ லை செய்தேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பாம்பர் அணையில் புதுமணத்தம்பதி உள்ளிட்ட குடும்பத்தார் செல்பி எடுத்த நிலையில் புதுப்பெண் உட்பட நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளனர். பெருமாள்சாமி (25) என்ற இளைஞருக்கும் நிவேதா (20) என்ற இளம்பெண்ணுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்நிலையில் புதுமணத்தம்பதி மற்றும் குடும்பத்தார் கிருஷ்ணகிரியில் உள்ள பாம்பர் அணைக்கு அருகில் வசிக்கும் உறவினர்களை பார்க்க சென்றனர். அப்போது பாம்பர் அணைக்கு சென்ற அவர்கள் அங்கு தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டு கைகோர்த்தப்படி செல்பி எடுத்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிவேதா மற்றும் அவரின் உறவினர்களான சினேகா, கனிகா மற்றும் சந்தோஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உ யிரிழந்தனர். ஆனால் பெருமாள்சாமி அதிர்ஷ்சடவசமாக உ யிர் தப்பிய நிலையில் தனது 15 வயது தங்கை யுவராணியையும் காப்பாற்றினார்.
இதையடுத்து மனைவி மற்றும் உ யிரிழந்தவர்களின் ச டலங்களை பார்த்து பெருமாள்சாமி கதறி அழுதது அருகில் இருந்தோரை கலங்க வைத்தது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் உலகிலேயே செல்பி எடுக்கும் போது உ யிரிழப்போரின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எதிவரும் 17ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
அத்துடன், சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் அனைத்து அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பா துகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பா துகாப்பு வார நடைபவனி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இன்று (11.10.2019) காலை 8.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக வவுனியா நகரசபையினை சென்றடைந்தது.
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த வீதி பா துகாப்பு வாரத்தின் போது வடக்கு முழுவதும் பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக வீதி நாடகங்கள் பாடசாலை ரீதியான பேச்சுபோட்டிகள்,
பாடசாலைகளில் மாணவ போக்குவரத்துப் பிரிவினை ஸ்தாபித்தல், குறுந்திரைப்படம் மற்றும் துணுக்குகள் உருவாக்கம், சிறந்த வாகன ஓட்டுனர்களை தெரிவு செய்து அவர்களை கௌரவித்தல், விபத்துக்கள் குறைந்த பொலிஸ் நிலையங்களை தெரிவு செய்தல்,
அரச அலுவலர்களுக்கான இலவச உடற்தகுதி மருத்துவ பரிசோதனை மற்றும் வடமாகாணத்தில் விபத்துக்கள் அதிகமான இடங்களை இனங்கண்டு அவ்விடங்களில் போக்குவரத்து பொலிசாரின் மாதிரிகளை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட பல விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ் நடைபவனியில் உதவி மாவட்ட செயலாளர் கமலேஸ்வரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நகரசபை முன்றலை சென்றடைந்த பேரணியின் பின்னர் அரசாங்க அதிபர் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் விழிப்புணர்வு பலூன் பறக்க விடப்பட்டது. அத்துடன் இறுதியில் அரசாங்க அதிபரின் உரையும் இடம்பெற்றிருந்தது.
கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடமாகாண வீதிபாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் இலுப்பைகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகியது.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பட்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த கந்தையா உதயகுமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உ யிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பான விழிப்பணர்வு கருத்தரங்கு மற்றும் இச் செயற்றிட்டத்தில் வர்த்தகர்களை உள்வாங்குதல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா சுகாதார சேவைகள் பணிமணை கேட்போர் கூடத்தில் நேற்று (09.10.2019) மாலை இடம்பெற்றது.
பொது சுகாதார பரிசோதகர்களின் ஆளணி பற்றக்குறையினை கவனத்தில் கொண்டு வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்க ஒவ்வொரு பிரிவுக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் மூன்று வர்த்தகர்கள் வீதம் இணைந்து பணியாற்ற இதன் போது சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இச் செயற்றிடம் தொடர்பான கலந்துரையாடலில் வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் எம்.மகேந்திரன், வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாகன் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச் செயற்றிடத்தினை அமுல்படுத்தும் கலந்துரையாடலின் போது வவுனியா நகரப்பகுதியில் 24 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக இணங்காணப்பட்டு அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஓன்று நேற்று (09.10.2019) மாலை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 963 நாட்களாக சுழற்சி முறையில் போ ராடி வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ ராட்ட தளத்திற்கு முன்னால் இந்த போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர்கள் தெரிவித்ததாவது, குழந்தை பிறந்து 14 நாட்களே ஆன நிலையில் சாப்பாடு வாங்குவதற்காக சென்ற காராத்தே பயிற்றிவிப்பாளரான தனுசன் கடந்த 7 ஆம் திகதி (நேற்று முன்தினம்) க டத்தப்பட்டுள்ளார். மனைவியும் 1 குழந்தையும் அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா அரசாங்கமும் மாறி மாறி க டத்தலை செய்கிறார்கள்.
தமிழ் மக்களுக்கு தீர்வை தர அவர்கள் தயாராகவில்லை. கா ணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு பதில் இல்லை. இதனால் யாருக்கு வாக்களித்தும் எந்த பயனும் இல்லை. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தலையிட்டு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரினார்கள்.
இப் போ ராட்டத்தில் கா ணாமல் போயுள்ள தனுசனின் மனைவி குழந்தை உட்பட கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் 144 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 55 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.அதில் விஜயசங்கர் நிருத்தனன், கஜேந்திரன் ஜஸ்விந் ஆகிய இருவரும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் கடந்த காலங்களை விட இம்முறை பெறுபேறு அதிகரித்துள்ளது. இவ் மாணவர்கள் திறமைச்சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் இப் பாடசாலை இரண்டாம் இடத்தினை பெறுவதற்கு ஆசிரியர் பிலோமினா பிறேமகுமார் அவர்களின் சேவை ஆழப்பெரியது.
அத்துடன் குறித்த ஆசிரியர் இப்பாடசாலையில் பல வருடங்களாக சேவையாற்றி வருவதுடன் ஆசிரியர் பணியிலிருந்து தற்போது ஒய்வு பெற்றுள்ளார். இவரது சேவைக்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் திறமைத்சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் சாந்தனி மீகொட முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 7 மாணவிகளும் சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இலங்கை பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் குருவிட்டகே விடுத்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது சமூக இணையத்தளங்களில் வைரலாகி வரும் #Stronggorgeouswoman தொடர்பான எச்சரிக்கையாகவே இது காணப்படுகிறது. அதன்படி, பெண்கள் தமது புகைப்படங்களை பதிவிட கூடியதான #Stronggorgeouswoman தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதனை இலங்கை பெண்கள் அதிலும் குறிப்பாக முகப்புத்தகங்களை பயன்படுத்தும் பெண்கள் உபயோகப்படுத்துகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இதில் பதிவிடப்படும் பெண்களின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் என குறித்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெண்கள் கூடுதலான அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ரஜீவ் குருவிட்டகே அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.