வவுனியாவில் அதிகரிக்கும் மழை, இடிமின்னல் தாக்கம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இடிமின்னல் தாக்கம்

வவுனியாவில் கடந்த ஆறு நாட்களாக 128.6மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது கடந்த நான்கு நாட்களாக மாலை வேளையில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகின்றது.

மாலை வேளைகளில் மழை மேலும் பெய்யக்கூடும், இடி மின்னல் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்காம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஐந்தாம் திகதி காலை 8.30 மணிவரையும் 7.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன் ஆறாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஏழாம் திகதி காலை 8.30 மணிவரையும் 45.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன் ஏழாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து எட்டாம் திகதி காலை 8.30 மணிவரையும் 3.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன்,

எட்டாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஒன்பதாம் திகதி காலை 8.30 மணிவரையும் 26.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. ஒன்பதாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து பத்தாம் திகதி காலை 8.30 மணிவரையும் 45.6மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் கடந்த ஆறு நாட்களாக 128.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளது.

மழையுடனான காலநிலை நீடிப்பதுடன் மாலை வேளைகளில் பெய்துவரும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை : வேகமாக பரவும் ஆபத்தான நோய்!!

ஆபத்தான நோய்

வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் தெரிவித்தனர்.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. இங்கு 24 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் க டத்திச் செல்லப்பட்டு அ டித்துக் கொ ன்ற பின் பெற்றோல் ஊற்றி எ ரிக்கப்பட்ட குடும்பஸ்தர்?

வவுனியாவில்..

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் ஒன்று எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இவர் கா ணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவரின் ச டலம் வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்காத பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்குளம் சந்தியில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து அவர் வவுனியா நகருக்கு ஒருவரை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 6.30 மணியளவில் சென்றுள்ளார். பின்னர் அவர் கா ணாமல் போயுள்ளார்.

அவரது தொலைபேசி தரவின் அடிப்படையில் இறுதியாக கள்ளிக்குளத்தில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு நடத்திய தேடுதலில் ச டலம் எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அவர் க டத்திச் செல்லப்பட்டு கொ ல்லப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியிலிருந்த பெற்றோலை ஊற்றி எ ரிக்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகந்தன் எனத் தெரியவருகின்றது.

நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு சென்ற வேளை கா ணாமல் போயுள்ளதாக உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் 7 வயது சிறுவன் ம ரணம் : உறவினர்கள் கு ழப்பம்!!

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவர் ம ரணமடைந்துள்ளார். வைத்தியசாலையின் அசமந்த போக்கே ம ரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலையில் கூடியமையால் ப தற்றநிலை ஏற்பட்டது. இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒ ருவன் நேற்று மாலை உடல்நிலை இயலாமல் இருப்பதாக வீட்டில் தெரிவித்துள்ளார். எனினும், மகன் விளையாட்டாக சொல்வதாக கருதி தந்தை அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

தொடர்ந்தும் சிறுவன் உடல்நிலை சரியில்லாத நிலையில் சத்தமிட்டதை அடுத்து தாயார் அதிகாலை 3 மணியளவில் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் காலை 8.30 மணியளவில் வைத்தியசாலையில் சிறுவன் ம ரணமடைந்துள்ளான்.

இந்நிலையில் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாடே சிறுவனின் ம ரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலை வைத்தியர்களுடன் மு ரண்பட்டுள்ளனர். பொலிசார் தலையிட்டு நிலமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

வவுனியா, கற்குழியைச் சேர்ந்த எஸ்.டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு ம ரணமடைந்தவராவார். இதேவேளை, ம ரண விசாரணை அறிக்கையின் பின்னரே ம ரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் எ ரிந்த நிலையில் மீட்பு!!

இளம் குடும்பஸ்தரின் ச டலம்

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் ஒன்று எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இவர் கா ணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவரின் ச டலம் இன்று முற்பகல் மீ ட்கப்பட்டுள்ளது. இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகந்தன் எனத் தெரியவருகின்றது.

நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு சென்ற வேளை கா ணாமற்போயுள்ளதாக உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா கொந்தகாரன் குளத்தில்  முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்!

 

வவுனியா ஓமந்தை மருதமடு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட  கொந்தகாரன்குளத்தில்  PSDG-2019 திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த  07.10.2019 திங்கட்கிழமையன்று இடம்பெற்றது.

கொந்தகாரன்குளம் அ.த.க.பாடசாலையின் அதிபர் திரு.ந.நவரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.ஞானமுத்து அகிலன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதி பிரதம செயலாளர் அலுவலகம்-திட்டமிடல் வடமாகாணம்) கலந்துகொண்டு அடிக்கல்லினை  நாட்டி வைத்தார். மேற்படி நிகழ்வில் மருதமடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், முன்பள்ளியின் ஆசிரியை,தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இளைஞர்களின் செயல் : மக்கள் பாராட்டு!!

இளைஞர்களின் செயல்

குப்பை கூழமாக கவனிக்கப்படாது கைவிடப்பட்டிருந்த பத்தினியார் மகிழங்குளமானது கடந்த 04.10.19 அன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணி வரை கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் “கனவுகள்” எனும் இளைஞர்கள் தன்னார்வு அமைப்புடன் இணைந்து துப்பரவாக்கும் பணி நடைபெற்றது.

இச் செயற்பாட்டில் தன்னிச்சையாக ஒன்றிணைந்த இளைஞர்களால் கைவிடப்பட்டு குப்பை கூழமாக காணப்பட்ட குளம் துப்பரவு செய்யப்பட்டது.

மற்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இச் செயலுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு!!

வீதிப் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு

வடக்கு ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீதி போக்குவரத்து தொடர்பில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண வீதி பாதுகாப்பு வாரம் அக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


வடமாகாண சாலை பாதுகாப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், வீதிகளில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத், பிரதி அதிபர் எம்.ராசிக், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்!!

வவுனியா வெளிக்குளத்தில்

வவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் தின மற்றும் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் 06.10.2019 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 02 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கி.வசந்தன் (சமுக சேவை உத்தியோகத்தர்) சிறப்பு விருந்தினராக திருமதி.வி.கிருபாநந்தசர்மா (சனசமூக உத்தியோகத்தர்) திருமதி.எஸ்.வவித்திரா (கிராமசேவையாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவர் மற்றும் முதியோர்களுக்கான போட்டிகளும் கௌரவிப்பு நிகழ்வுகள் இடமபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆபத்தான உயரத்தில் சிலையின் மீது நி ர்வாணமாக சிக்கிக்கொண்டிருந்த இளம்பெண்!!

இளம்பெண்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் செயிண்ட் பேட்ரிக் கதீட்ரல் வளாகத்தில் உள்ள சிலையின் மீது அமர்ந்திருந்த இளம்பெண்ணை நீண்ட நேர போ ராட்டத்திற்கு பின்னர் பொலிஸார் பத்திரமாக மீ ட்டுள்ளனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் செயிண்ட் பேட்ரிக் கதீட்ரல் வளாகத்தில் உள்ள செயிண்ட் இக்னேஷியஸ் சிலையின் மீது இளம்பெண் ஒருவர் ஆ டையில்லாமல் அமர்ந்திருப்பதாக உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளம்பெண்ணை மீட்க நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண் எந்த பதிலும் தெரிவிக்காமல் சிலை மீது நீண்ட நேரம் அமர்ந்திருந்துள்ளார்.

மதியம் 12:25 மணியளவில் அந்த பெண், சிலையிலிருந்து த டுமாறியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொலிஸார், கையை இ ழுத்து ப த்திரமாக மீ ட்டெடுத்தனர்.

இதுகுறித்து கூறிய பொலிஸார், சம்மந்தப்பட்ட பெண் பற்றிய தகவல் இன்னும் கண்டறியப்படவில்லை. ம னநிலை பாதிக்கப்பட்டவர் போல இருப்பதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சாதனை விலைக்கு ஏலம் போன சிறுமியின் ஓவியம் : எத்தனை கோடிகள் தெரியுமா?

சிறுமியின் ஓவியம்

சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றதில் ஜப்பான் ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் 177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் நகரில் போ ராட்டக்காரர்கள் நெருப்பும் வைத்தும் பெட்ரோல் வெ டிகுண் டுகள் வீசியும் போ ராட்டத்தில் ஈடுபடவும்,

பொலிசார் கண்ணீர் கு ண்டுகளை வீசி போ ராட்டத்தை கட்டுப்படுத்தி வரும் நிலையில் நகரின் ஒருபகுதியில் ஆசியாவின் மேட்டுகுடி மக்கள் சிலர் ஓவியம் தொடர்பான ஏலம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

போ ராட்டம் நடைபெற்றுவரும் பகுதிக்கு மிக அருகாமையிலேயே இந்த ஏலம் நடைபெற்ற அரங்கமும் அமைந்துள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் சுமார் 336 மில்லியன் டொலர் திரட்ட முடியும் என நிர்வாகிகள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஞாயிறு நடந்த ஏலத்தில் ஜப்பானிய ஓவியர் Yoshitomo Nara வரைந்துள்ள ஒரு சிறுமியின் ஓவியமானது சாதனை விலைக்கு ஏலம் போயுள்ளது. இந்த ஓவியத்தின் சிறப்பு அம்சம் என்னெவென்றால் பெரிய கண்களுடன், முறைப்பது போல் நிற்கும் சிறுமியின் ஒரு கையை மறைத்து இருப்பது போல் இந்த ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கிறது.

குறித்த ஓவியத்தை சிலர் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தை உயர்த்தினர். முடிவில் 25 மில்லியன் டொலருக்கு இந்த ஓவியம் ஏலம் போனது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோஷிடோமாவின் ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் ம ர்மமாக கொ ல்லப்பட்ட இந்திய பெண் : விடை தெரியாமல் தவிக்கும் பொலிஸார்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் தனது மனைவி கொ ல்லப்பட்ட விவகாரத்தில் பொலிஸாரின் கூற்று “மிகவும் சாத்தியமற்றது” என அவருடைய கணவர் கூறியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பிரபா அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார். அவருடைய திறமையை பார்த்து நிறுவனமும் விசா காலத்தை நீட்டித்து கொடுத்திருந்தது.

மார்ச் 7, 2015 அன்று தன்னுடைய கணவர் குமார் உடன், பிரபா செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, மர்ம நபர் திடீரென க ழுத்தில் க த்தியால் கு த்தி கொ லை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவுஸ்திரேலிய பொலிஸார், கடந்த 4 வருடங்களாக தொடர் விசாரணை மேற்கொண்டும் கூட எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான் பிரபாவை கொ லை செய்திருக்க வேண்டும் அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதற்காக இந்தியா வந்த அவுஸ்திரேலிய பொலிஸார் தற்போது வரை 2000 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில், குமார் அவருடைய கல்லூரி காதலியும், குடும்ப நண்பருமான கிரண் ஷகோட்டியுடன் தனியாக வசித்து வந்ததாக சொந்த குடும்ப உறுப்பினர்களே கூறியுள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள குமார், மனைவி கொ லை செய்யப்படுவதற்கு முன் எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

அதற்காக அவரை கொ லை செய்வதற்கு இந்தியாவில் இருந்து ஒருவர் ஆள் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்கிற பொலிஸாரின் கூற்று சாத்தியமற்றது. எப்படியோ எனக்கு இறுதியில் நல்ல முடிவு கிடைத்தால் மகிழ்ச்சி தான் எனக்கூறியுள்ளார்.

19.5 கிலோ நிறையுடைய கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை!!

வைத்தியர்கள் சாதனை

இலங்கையில் அதிகூடிய நிறையுடைய க ட்டியை ச த்திரசிகிச்சை செய்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. சத்திரசிகிச்சை நிபுணர் ரவிந்திரன் தலைமையிலான வைத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் சுமார் 2 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சையினை மேற்கொண்டிருந்தனர்.

பெண் ஒருவரின் வ யிற்றிலிருந்த 19.5 கிலோ கிராம் நிறையுள்ள க ட்டியொன்றினை அகற்றி இந்த ச த்திரசிகிச்சையினை செய்துள்ளனர். இந்த சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்களான பீ.கே.இரவீன்திரன்,

மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, ம யக்க மருந்து வைத்திய நிபுணர் ருவான் குருப்பு, ம யக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திரசிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டங்களை தீட்டி வரும் 8 வயது சிறுமி : மனதை கலங்கடிக்கும் பின்னணி!!

8 வயது சிறுமி

ஸ்காட்லாந்தில் 8 வயது சிறுமிக்கு புற்றுநோய் இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டங்களை வகுத்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டார்சி மெக்குயிர் (8) என்ற சிறுமிக்கு chordoma ரக புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்தனர்.

அவர் சில மாதங்களில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிய நிலையிலும் டார்சி நோயை எதிர்த்து போராடி வருகிறார். இது குறித்து பேசிய டார்சியின் தாய் கரோல் டொனால்டு, டார்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முதுகில் சிறிய கட்டி தோன்றியது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போது அது சாதாரண கட்டி தான் என கூறினார்கள். பின்னர் அடிக்கடி அவளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இந்நிலையில் கடந்தாண்டு மீண்டும் உடலில் கட்டிகள் வந்த போதும் பயப்பட எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தினமும் டார்சி வீட்டில் மயங்கிய நிலையில் அவளுக்கு எல்லா வித பரிசோதனைகளும் செய்யப்பட்டது. அப்போது தான் அவளுக்கு chordoma புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

நோயானது முற்றியதோடு அவளின் நுரையீரல், கைகள், காள்கள், எலும்புகளிலும் பரவியது. இதனால் அவர் விரைவில் உ யிரிழந்துவிடுவாள் என மருத்துவர்கள் கூறினர். அவளுக்கு இந்த நோய் வந்ததை முன்னரே கண்டுபிடித்திருந்தால் இதிலிருந்து மீட்டிருக்க முடியும்.

நான் அவளிடம் எதையும் மறைக்கவில்லை, அவள் விரைவில் இறந்துவிடுவாள் என அவளுக்கே தெரியும். இதையடுத்து தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டத்தை வகுத்து கொடுத்து வருகிறார் டார்சி. முதலிலேயே அவளுக்கு புற்றுநோய் இருப்பதை ஏன் அறியமுடியவில்லை என மருத்துவர்களுக்கே தெரியவில்லை என கூறியுள்ளார்.

டார்சி தனது நேரத்தை வீட்டிலும், மருத்துவமனையிலும் தொடர்ந்து செலவழித்து வருகிறார். அவளுக்கு குடும்பத்தார் தொடர்ந்து ஓன்லைன் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பில் கா ணாமல் போயுள்ள பிரபல தற்காப்புக்கலை ஆசிரியர்!!

தற்காப்புக்கலை ஆசிரியர்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல தற்காப்பு கலை ஆசிரியர் கா ணாமல் போயுள்ளார். குறித்த ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில், இன்றுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று பிற்பகல் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதி பகுதியில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் திடீரென வீடுகளிற்கு மேல் வந்து விழும் கற்கள் : அச்சத்தில் மக்கள்!!

வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில்..

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது.

வவுனியா சிங்கள பிரதேச சபைக்குட்பட்ட ரன்மித்கம என்ற பகுதியில் சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள் தோண்டபட்டு கற்கள் அகழப்பட்டுவருகின்றன.

பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெ டி ம ருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வெ டித்து சி தறும் கருங்கற்கள் அருகில் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வந்து விழுகின்றன.

தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று மாத்திரம் 10 பேரின் காணிகளிற்குள் பெரியளவிலான கற்கள் வந்து விழுந்துள்ளதுடன் நான்கு வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளது.

சிங்கள பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் கல் அகழ்வு இடம்பெற்ற போதிலும் அருகில் செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கலைமகள் கிராம மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இம் மக்கள் தமது பிரிவுக்குரிய பிரதேச சபையினரிடம் முறையிட்டுள்ளதுடன் அனைத்து அதிகாரிகளிற்கும் தெரியபடுத்திய நிலையில் தமக்கான நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் உ யிர் அ ச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் சஜித் பிரேமதாசாவால் குறித்த கலைமகள் கிராமமம் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டபோதிலும் குறித்த கிராமத்தில் தற்போது மக்கள் வசிப்பதற்கு பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றர்.

இவ்விடயம் தொடர்பாக பார்வையிடுவதற்காக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா உட்பட, செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் அந்தோனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சிறிரெலோ இளைஞரணியினரும் சென்றிருந்தனர்.

இதன்போது ப.உதயராசாவிடம் மக்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறியதும், உரிய தீர்வினை பெற்று தருவதாக ப.உதயராசா மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.