வெளிநாட்டில் கணவனுடன் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு நடந்தது என்ன? பெற்றோர் வேதனையுடன் சொன்ன தகவல்!!

பெற்றோர் வேதனையுடன்..

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் தன்னுடைய வீட்டில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம், கொ லையா? த ற்கொ லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கஜம் வனிதா(38). இவர் தன்னுடைய கணவர் ரசகொண்டா சிவக்குமார்(40) உடன் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சிவக்குமார் அங்கு சாப்ட்வேர் இஞ்ஜினியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வீட்டில் வனிதா சந்தேகத்திற்கிடமான வகையில் உ யிரிழந்தார். வனிதா உ யிரிழந்த தகவல் உறவினர்கள் மூலமாக அவரது பெற்றோருக்கு தெரியவந்ததால், மகளின் ம ரணம் குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர்.

அதில், தங்கள் மகள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு கணவருடன் சென்றார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அமெரிக்கா சென்றது முதல் அவர் எங்களை தொடர்பு கொண்டு பேசவில்லை.

தன்னுடைய மகள் அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம். வனிதாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடல் இங்கு வந்தபிறகு தான் எங்களால் எதனையும் உறுதியாக சொல்ல முடியும் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வனிதாவின் ம ரணம் தொடர்பாக அவரது கணவர் சிவக்குமாரிடம் காவலில் வைத்து அமெரிக்க பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் மாயம் : கதறும் உறவினர்கள்!!

கதறும் உறவினர்கள்

மட்டக்களப்பு – களுதாவளை கடற்பகுதியில் நேற்று மாலை குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் கா ணாமல்போயுள்ளார்.

தனது 5 நண்பர்களுடன் கடற்கறைக்கு சென்று விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ள குறித்த இளைஞன் கடல் அலையில் சி க்குண்டுள்ளார்.

இதனை அவருடைய சக நண்பர்கள் கடற்படையினரிடம் அறிவித்துள்ளதையடுத்து, மீனவர்களும், கடற்படையினரும் தே டுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்த இளைஞனின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கழிவறைக்குள் இருந்து திடீரென கருப்பாக வந்த தலை : தன் வாழ்நாளில் அடைந்திடாத பயத்தில் உறைந்த இளம்பெண்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் கழிவறைக்குள் சென்ற பெண், அதற்குள் கருப்பாக உருவம் ஒன்று நெளிவதை கண்டு மிகவும் பயந்துள்ளார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட Cairns பகுதியை சேர்ந்த Nicole Errey கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்து கழிவறைக்கு சென்றேன்.

என் கழிப்பறையின் மூடி திறந்திருந்தது, அதற்குள் பார்த்த போது கருப்பாக எதே ஒன்று நெளிந்துக் கொண்டிருந்தது, அதை கண்டு நான் மிகவும் பயந்துவிட்டேன். திடீரென பாம்பின் தலை வெளியே வந்தது. உடனே Cairns பகுதியல் பாம்பு பிடிக்கும் Dave Walton-னை அழைத்தேன், அவர் உடனே வந்து பாம்பை பிடித்து சென்றார்.

மறுநாள் இரவு வெளியே செல்ல கிளம்பி, வீட்டின் அனைத்து ஜன்னல்களும் மூடி இருக்கிறதா என பார்க்க சென்றேன், அப்போது, மற்றொரு குளியலறையில் தண்ணீர் மலைப்பாம்பு இருந்தது. மீண்டும் Dave Walton-னை அழைக்க அவர் பாம்பை பிடித்து சென்றார். நாட்டில் வெப்பமான வெப்பநிலை காரணமாக, பாம்புகள் தலைமறைவாக வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பாம்புகள் வெப்பத்திலிருந்து விலகி இருக்க குளிர்ந்த இடங்களில் ஒளிந்து கொள்ள விரும்பும். எனவே நீங்கள் மோசமான பாம்பால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என Walton கூறியுள்ளார்.

மனைவி கொடுத்த உணவில் இருந்த தலைமுடி : கோபத்தில் கொ டூரமான த ண்டனையை கொடுத்த கணவன்!!

உணவில் இருந்த தலைமுடி..

வங்கதேசத்தில் மனைவி கொடுத்த உணவில் தலை முடி தென்பட்டதால் அவர் தலையை மொட்டையடித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்காவின் ஜோய்புரட் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்ளு மொண்டல் (35). இவர் தனது 23 வயது மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பப்ளுவுக்கு அவர் மனைவி இரு தினங்களுக்கு முன்னர் உணவு மற்றும் பால் கொடுத்தார். இரண்டிலும் தலைமுடி இருந்தது. இதை பார்த்து ஆ த்திரமடைந்த பப்ளு பிளேடை எடுத்து மனைவியின் தலையை வலுகட்டாயமாக மொட்டையடித்தார்.

பப்ளுவின் இரக்கமற்ற கொடூர செயல் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பப்ளுவை கைது செய்தனர்.

பொலிசார் கூறுகையில் மனைவிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய பிரிவில் பப்ளு மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த குற்றத்துக்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறியுள்ளனர்.

வவுனியாவில் குடும்ப த கராறு காரணமாக தீயில் எ ரிந்த இளம் குடும்பப் பெண் ம ரணம்!!

குடும்பப் பெண்

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப த கராறு காரணமாக தீயில் எ ரிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ம.ரணமடைந்துள்ளார்.

கடந்த திங்கட் கிழமை (07.10) மாலை வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட த கராறு காரணமாக மனைவி தீயில் எ ரிந்த நிலையிலும், கணவன் தலையில் ப லமாக தா க்கப்பட்ட நிலையிலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதுடன், கணவன் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையில்,

சிகிச்சை பெற்ற கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உடைத்து அதன் ஊடாக நிலத்தில் கு தித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளதுடன் சிறிய க த்தியால் க ழுத்தையும் அ றுக்க முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிசார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று குதிக்க முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர். கழுத்தில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு சென்றபோது நடந்த கோர விபத்து : பரிதாபமாக ப லியான இளம்தம்பதி!!

இளம்தம்பதி

சென்னையில் திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்த போது நடந்த கோர விபத்தில் இளம்தம்பதி பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தமிழ்மாறன் (21) – சுவேதா (20) தம்பதி தங்களுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 7 பேருடன், திருமணம் ஒன்றிற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஜெனரேட்டர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தமிழ்மாறன் மற்றும் அவருடைய மனைவி சுவேதா சம்பவ இடத்திலேயே ப லியாகினர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 நாட்களில் 19பேர் ப லி : புதுப்பெண் உட்பட செல்பியால் நிகழ்ந்த சோகம்!!

13நாட்களில்..

13 நாட்களில், 19பேர் கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி ப லியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பாம்பாற்றின் அழகை காண பலர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக திருமணமான பிரபு மற்றும் நிவேதா தம்பத்தினர் வந்துள்ளனர். அவர்களுடன் நிவேதாவின் உறவினர்களான கனிதா, சினேகா, சந்தோஷ், மற்றும் யுவராணி ஆகியோரும் ஆற்றின் அழகில் மயங்கி செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிவேதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி ப ரிதாபமாக இ றந்தனர்.

இதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதவாறு கூச்சலிட்டார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து ஊத்தங்கரை பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உ டல்களை மீட்டுள்ளனர்.

அணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் ப லியான சம்பவம் ஊத்தங்கரை ஒட்டப்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 19 பேர் நீரில் மூழ்கி ப லியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலனுடன் வாழ்ந்து வந்த பிரபல பாடகிக்கு நேர்ந்த கதி!!

பிரபல பாடகி

இந்தியாவில் பிரபல பாடகி கொ லை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் நாட்டுபுறப் பாடகி சுஷ்மா(25). கடந்த 1ம் திகதி இவர் இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் சு ட்டு கொ ல்லப்பட்டார்.

இதனால் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொ லை வழக்கில் சுஷ்மாவின் காதலர் கஜேந்திர மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர் இந்த வழக்கு குறித்து கூறுகையில்,

சுஷ்மா தனது தாய், சகோதரி மற்றும் அவரது காதலன் கஜேந்திர பாட்டி ஆகியோருடன் வசித்து வந்தார். சுஷ்மாவும் அவரது காதலன் கஜேந்திர பாட்டியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

சுஷ்மாவிற்கும், காதலனுக்கும் இடையே சொத்து தொடர்பான பி ரச்னை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுஷ்மா நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாட்டுபுறப் பாடல்கள் பாடுவது, அவருடைய காதலனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிர ச்னை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கஜேந்திர காதலியை சுஷ்மாவை கொ லை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் சுஷ்மா சென்ற காரை விபத்து ஏற்படுத்தி கொ லை செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அதில் சுஷ்மா அதிர்ஷ்டவசமாக தப்பிவிடவே, சம்பவ தினத்தன்று சுஷ்மாவை சு ட்டு கொ லை செய்துள்ளனர். சுஷ்மாவை சு ட்டுக் கொ லை செய்ய பிரமோத்,அஜப் சிங் மற்றும் டிரைவர் அமித் ஆகியோருடன் சேர்ந்து கஜேந்திரா திட்டமிட்டுள்ளார்.

இதன்படி கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொ லை செய்ய இருவருக்கும் 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இவர்கள் திட்டமிட்டபடி 1ம் திகதி இரவு சுஷ்மா தனது வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கிய உடனே அவரை இந்த நபர்கள் சு ட்டுக் கொ ன்றுள்ளதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தில் 6 பேரை கொ ன்ற பெண் : மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம்!!

ஒரே குடும்பத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேரை விஷம் வைத்து கொ லை செய்த பெண், மேலும் இரு பிள்ளைகளை கொ ல்ல திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் தமது குடும்பத்தாரை மட்டுமின்றி இன்னொரு குடியிருப்பிலும் கொ லை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகவலானது தற்போது நடைபெறும் விசாரணையில் அம்பலமானதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியிட மறுத்துள்ளனர். இந்த காரணங்களாலையே குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோளி தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஜோளியின் முன்னாள் கணவர் ரோயி என்பவரின் வழக்கிலேயே ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அந்த வழக்கை தனியாக விரிவாக விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஜோளியின் இரண்டாம் கணவர் ஷாஜு இந்த விவகாரத்தில் தவறிழைத்திருந்ததாக தெரியவந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது காவலில் உள்ள ஜோளியை 24 மணி நேரமும் கண்காணிக்க குழுக்களை நியமித்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள டி.என்.ஏ மாதிரிகளை அமெரிக்காவில் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.

முல்லைத்தீவில் இளைஞனின் விபரீத முடிவு : கதறும் உறவுகள்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவன் ஒருவர் த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

18 வயதான யோகேஸ்வரன் கவிர்சன் என்ற மாணவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் மாணவன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் சற்று நேரத்தில் வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சிறு வயது முதல் தந்தை இ ன்றி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த மாணவன்
உ யிரை மா ய்ப்பதற்கு முன்பாக தாயாருக்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவனின் உ யிரிழப்பிற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

பேஸ்புக்..

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு, பயனாளர்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் per.itssl@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வலைத்தள பயனாளர்களின் கணக்குகளில் ஊடுருவலாம் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்த கூடும் என்பதனால் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் screenshots மற்றும் உரிய link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புமாறு இலங்கை பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் வசதியற்ற மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!!

வவுனியா ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதியில் வசித்துவரும் பெண் தலைமைக் குடும்பம் ஒன்றின் மாணவர்களுக்கு பாடசாலையில் கற்றல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தையிலுள்ள சமூக ஆர்வலர் சுரேஷன் நிதிப்பங்களிப்பில் புதிவேலர்சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஜெயசீலன் தலைமையில் பாடசாலையில் கல்வி கற்கும் பெண் தலைமைக் குடும்பத்தின் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஆசிரியர் தினத்தை முன்மாதிரியாக கொண்டாடிய பாடசாலை!!

ஆசிரியர் தினத்தை..

ஆசிரியர் தினத்தை முன்மாதிரியாக மரநடுகை மூலம் வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலயம் இன்று கொண்டாடியுள்ளது.

ஒக்டோபர் 6 ஆம் திகதி ஆசிரியர் தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மரநடுகை மூலம் அத் தினத்தை வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்களும், மாணவர்களும் கொண்டாடியுள்ளனர்.

மாணவர்களின் உதவியுடன் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலை சூழலில் 50 மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.

இதனை பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத், பிரதி அதிபர் எம்.ராசிக் மற்றும் ஆசிரியர்கள் நாட்டி வைத்தனர்.

வெறும் விழாக்கள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்குதல் என்பதற்கு அப்பால் இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த செயற்பாடு பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

வெளிநாட்டிலுள்ள இளைஞனை ஏமாற்றிய இலங்கைப் பெண் : IMO மூலம் இத்தனை மில்லியனா?

இலங்கைப் பெண்

IMO தொழில்நுட்பம் ஊடாக இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டி வெளிநாட்டில் வாழும் இளைஞனிடம் பெரும்தொகை பணமோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோ சடி மூலம் 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மோ சடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகேபொல பனாத பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், அவர் தனது கணவனை கைவிட்டு வேறு நபருடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கொலொன்ன கும்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு ஒன்றில் தொழில் செய்து வருகின்றார். அவருடன் imo தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மாத காலமாக இந்த பெண் பேசி வந்துள்ளார்.

இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அதில் இருப்பது தான் என கூறி இளைஞனை ஏமாற்றிய பெண், அவரிடம் 62 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் தான் யார் என்ற உண்மையை வெளிப்படுத்திய பெண் இளைஞனின் தொலைபேசி அழைப்பை ஏற்பதனை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய குறித்த பெண்ணின் வங்கி கணக்கை சோதனையிட்ட போது அதில் 2 இலட்சம் ரூபாய் பணம் மாத்திரமே மீதமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன ஆசிரியை ச டலமாக மீட்பு!!

ஆசிரியை

கம்பளை பகுதியில் கடந்த முதலாம் திகதி கா ணாமல் போன ஆசிரியையின் ச டலம் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் சூழியோடிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்றிரவு இந்த ச டலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பளை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். சடலம் ஆசிரியையின் பெற்றோரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ச டலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தலாத்துஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் ஒருவர் கைது!!

இளைஞர் ஒருவர் கைது

விடுதலை புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கபட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று கடைமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போ தை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவரிடமிருந்து விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கபட்ட தொப்பி, சீருடை ஒன்றும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யபட்டதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.