லண்டனில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை ப யங்கரவாத தடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். இந்த குழு ப யங்கரவாத சட்டம் 2000 இன் கீழ் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பொலிஸ் மற்றும் கு ற்றவியல் சான்றுகள் சட்டம் 1984 இன் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 39 வயது, 35 வயது மற்றும் 41 வயதுடைய சந்தேக நபர்கள் தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண், பிணையில் விடுக்கப்பட்ட போதிலும் அவரிடமும் காவலில் உள்ளவர்களிடமும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் லொறி ஒன்றை க டத்திய ஒருவர், சிக்னலில் நின்று கொண்டிருந்த எட்டு வாகனங்கள் மீது மோ தியதில், எட்டு பேர் கா யமடைந்தனர்.
அவர்களில் ஏழு பேருக்கு மருத்துவமனையில் சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது. Limburgஇல் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, சிரியாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 2015ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தீ விரவாத தா க்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிராங்க்பர்ட்டுக்கு தெற்கிலுள்ள Langenஇலுள்ள வீடு ஒன்றில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
லொறியை பறிகொடுத்த நபர், தனது லொறியின் கதவை திறந்த ஒருவர், தன்னை வெளியே இழுத்ததாகவும், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, பதிலேதும் கூறாமல் தன்னை இழுத்துப்போட்டுவிட்டு அந்த நபர் லொறியுடன் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த நபருடன் பேசிய மற்றொரு பெண், அவரது மூக்கிலிருந்து இ ரத்தம் வடிந்துகொண்டிருந்ததாகவும், அவரது உடைகள் கி ழிந்தும், அவரது கைகளில் இ ரத்தத்துடனும் அவர் காணப்பட்டதாகவும், தனது பெயர் முகமது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் பிற ஜேர்மன் பத்திரிகைகள் அவரது பெயர் ஓமர் என்று குறிப்பிட்டுள்ளன.
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி ஆயிலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி எழுபரிதி திலகேஸ்வரன் 93 வருடகால பாடசாலை வரலாற்றை மாற்றியமைத்துள்ளார். இது குறித்து குறித்த பாடசாலையின் அதிபர் ச.சௌந்தரலிங்கம் தெரிவித்ததாவது,
எமது பாடசாலையில் இருந்து ஒரேயொரு மாணவி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தார். புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த எழுபரிதி திலகேஸ்வரன் என்ற மாணவி 178 புள்ளிகளைப் பெற்று இப் பாடசாலையில் முதன் முதலாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
எமது பாடசாலை 1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யு த்த பாதிப்புக்களை எதிர் கொண்டு 93 வருடங்களுக்கு பின்னர் முதன் முதலாக மாணவி ஒருவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றை மாற்றியமைத்துள்ளார் எனத் தெரிவித்தார்.
பசுமையான பாடசாலையினை உருவாக்கும் நோக்கில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு நேற்று காலை 150 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் செயற்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் வேலைத்திட்டத்தை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 1997ஆம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முதற் கட்டமாக தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடுவதற்காக 150 மரக்கன்றுகள் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை 2009ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் பாடசாலை இலட்சினை அமைக்கப்பட்டு சம்பிரதாய பூர்வமாக பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாவற்குளம் படிவம் 06 புதிய குடியிருப்புப் பகுதிக்குள் உள்ள கற்குவாரி பகுதியில் கற்களை உடைக்க வைக்கப்பட்ட வெ டியினால் குடியிருப்பு வீடுகளின் மேல் விழுந்த கற்களால் ம யிரிழையில் சிறுமி ஒருவர் உ யிர்தப்பியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக இன்று (08.10) பிற்பகல் கிராம அபிவிருத்திச் சங்கம், பிரதேச சபை உறுப்பினரிடம் தெரிவித்ததை அடுத்து பிரதேச சபை உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளர், பிரேதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் ..
கிராம சேவகர் ஆகியோருக்கும் மக்கள் தெரியப்படுத்தியுள்ளார்.
சில நாட்களாக இக் கற்குவாரி இயங்காமல் இருந்த போதும் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. இதனால் இதனை சூழவுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இக் கற்குவாரிக்கு அருகே பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வவுனியாவில் உள்ள சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் சித்தி பதிவாகியுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 159 புள்ளிகளை பெற்று மாணவி ஒருவர் சித்தி பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் குணநீதன் வித்தியா என்ற மாணவியே சித்தியடைந்துள்ளார். மாணவியை கற்பித்த எஸ்.சாந்தமூர்த்தி ஆசிரியையை பாடசாலை சமூகம் பாராட்டியுள்ளது.
திருகோணமலை – மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை உ யிரிழந்துள்ளார். குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியையும், மகளையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ரயில் தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோதியுள்ளது. இவ்வாறு உ யிரிழந்தவர் திருகோணமலை – அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என்.ஜோஹான் ஜோசப் எனத் தெரியவருகின்றது.
உ யிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா, மும்பையில் ரயில் அ டிபட்டு இ றந்த பிச்சைக்காரன் குடிசையில் சோதனை செய்த பொலிசார் வியப்படைந்துள்ளனர். மும்பை ரயில் பிச்சை எடுத்து வந்த Biradichand Pannaramji Azad என்ற 82 வயது முதியவர் ரயில் அ டிப்பட்டு இ றந்துள்ளார். இதனையடுத்து, Azad-ன் குடும்பத்தை கண்டறியும் விசாரணையில் ரயில்வே பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில் மூலம் Azad ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே இருந்த குடிசையில் தங்கியிருந்ததை கண்டறிந்த பொலிசார், அங்கு சோதனை செய்துள்ளனர். சம்பவம் குறித்து காவல் அதிகாரி Pravin Kamble கூறியதாவது, அந்த குடிசையில் நடந்த சோதனையில் நான்கு பெட்டிகளை கண்டெடுத்தோம். அதை திறந்து பார்த்த போது பல நாணயங்கள் இருந்தன.
அதை எண்ணியதில் சுமார் 1.75 லட்ச ரூபாய் இருந்தது. பின்னர், குடிசையின் மூலையில் இருந்த பெட்டியில் Azad-ன் ஆதார், பான் கார்டு இந்தது. அதன் மூலம் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ம் திகதி பிறந்த Azad, முன்னதாக Baiganwadi பகுதியில் வசித்து வந்துள்ளார் என தெரியவந்தது.
அந்த பெட்டியில் மற்ற ஆவணங்களும் இருந்தன, அதில் நிலையான வைப்பு தொகையாக ரூ .8.77 லட்சம், இரண்டு வெவ்வேறு வங்கிகளில், சேமிப்புக் கணக்குகளின் பாஸ்புக்குகளும் இருந்தன.
மேலும், அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், அவருக்கு Sukhdev என்ற மகன் இருப்பதும் தெரியவந்தது. Azad தான் வைத்திருக்கு அனைக்கு பணத்திற்கும் தனது மகன் Sukhdev-வின் பெயரை நாமினியாக குறிப்பிட்டுள்ளார். தற்போது, ராஜஸ்தானில் உள்ள Azad-ன் மகன் Sukhdev-ஐ தொடர்புக்கொள்ள முயற்சி செய்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து த ற்கொ லைக்கு முயன்ற தாயார் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் கணவரின் மறைவுக்கு பின்னர் தமது மூன்று பெண் பிள்ளைகளை வளர்க்க கடுமையாக போ ராடி வந்துள்ளார் லட்சுமி. இவருக்கு ஆதரவாக இருந்த அண்ணன் அவ்வப்போது பண உதவி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்த லட்சுமி கடந்த 3 ஆம் திகதி காலையில் தூக்கத்தில் இருந்த தமது மகள்களான அனுசியா(19), ஐஸ்வர்யா(16) மற்றும் அக்க்ஷயா(7) ஆகியோரை எழுப்பி தேநீர் குடிக்கக் கொடுத்துள்ளார்.
அதில் ஒருபகுதியை தாமும் குடித்துள்ளார். இதனையடுத்து தாயார் உள்ளிட்ட நான்கு பேருமே வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து கிடந்தனர். அதைக்கண்டு ப தறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக லட்சுமியையும், மூன்று பிள்ளைகளையும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
லட்சுமி அந்த தேநீரில் விஷம் கலந்துள்ளது பின்னர் தெரியவந்தது. இதில் சிகிச்சை பலனின்றி அனுசியாவும், ஐஸ்வர்யாவும் பரிதாபமாக ம ரணமடைந்துள்ளனர். லட்சுமி மற்றும் அக்ஷையா உடல்நிலை மோசமடைந்து வருதைக்கண்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர் சிகிச்சையில் இருந்த லட்சுமியின் உடல்நலத்தில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாதிருந்த நிலையில் திடீரென லட்சுமியும் ம ரணமடைந்துள்ளார். ஒரே குடும்பத்தில் வறுமையின் காரணமாக தாய் உள்பட இரண்டு மகள்கள் இ றந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.
மும்பையில் காதலி அறையில் ச டலமாக கிடந்த வழக்கில் அவருடைய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த விஜயகுமார் (24) என்கிற இளைஞரும், அதேபகுதியை சேர்ந்த சந்தியா (22) என்கிற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சந்தியா தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒருநபருடன் பழகுவதாக சந்தேகப்பட விஜயகுமார், அவரை கொ லை செய்துவிட முடிவெடுத்துள்ளார்.
இதற்காக சனிக்கிழமையன்று ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது சந்தியாவின் க ழுத்தை கயிற்றால் நெ ரித்து கொ லை செய்துவிட்டு, விஜயகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார்.
மாலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கடப்பாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை தட்டிப்பார்த்துவிட்டு மாற்று சாவியை வைத்து கதவை திறந்துள்ளனர்.
உள்ளே சந்தியா ச டலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தியாவின் உ டலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேசமயத்தில் விஜயகுமார் த ற்கொ லை செய்துகொள்வதற்காக வேகமாக வந்த லொறியின் முன் பாய்ந்துள்ளார். ஆனால் கால் முறிவுடன் உ யிர் தப்பியுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவனையில் அனுமதித்த பொலிஸார், சிகிச்சை முடிந்ததும் கைது செய்தனர்.
வவுனியா சைவப்பிரசாச ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியர் தினம் இன்று (08.10) பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்வி பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக பாடசாலை மேம்பாட்டு பிரதிநிதி உதவிக்கல்வி பணிப்பாளர் (கணிதம்) பா.பாலச்சந்திரன் மற்றும் கௌரவ விருந்தினராக ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்களான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன் போது பாடசாலையின் வளர்ச்சிக்கு சேவையாற்றிக்கொண்டிருக்கும் அதிபர் , ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இதன்போது கலந்து கொண்ட அதிதிகளும் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சின்னம் என்பவற்றுடன் இளைஞன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (08.10.2019) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிசார் மேற்கொண்ட வழமையான திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இளைஞன் விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் இலச்சனை பொறிக்கப்பட்ட சின்னம் என்பவற்றை உடமையில் வைத்திருந்ததாக குறித்த இளைஞன் கைது செயயப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தொடர்பில் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞன் சுமார் 24 வயது மதிக்கத்தக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எட்டு வருடங்களுக்கு முன்னர் கா ணாமல் போன நபர் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி தான் கொ லையாளி என்றும் தெரியவந்துள்ளது. புது டெல்லியை சேர்ந்தவர் ஜெய் பகவான்.
இவர் மகன் ரவிக்கு 2011-ல் சகுந்தலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் ரவியை கா ணவில்லை என அவர் தந்தை ஜெய் பகவான் அப்போது பொலிசில் புகார் அளித்தார்.
பொலிசாரின் விசாரணையில் இந்த தகவலும் கிடைக்காததால் வேதனையடைந்த ஜெய் பகவான் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் இந்த வழக்கை குற்றப்பிரிவு பொலிசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதன் பின்னர் விசாரணை சூடு பிடித்த நிலையில் ரவி கா ணாமல் போனதும் அவர் மனைவி சகுந்தலா வேறு திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சகுந்தலா மற்றும் அவர் கணவர் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இதனிடையில் சகுந்தலாவின் விருப்பத்தை மீறி அவர் ரவிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது பொலிசாருக்கு தெரிந்தது. மேலும் திருமணத்துக்கு முன்னர் கமல் என்பவரை சகுந்தலா காதலித்து வந்துள்ளார்.
திருமணமான ஒரு வாரத்தில் சகோதரி வீட்டுக்கு செல்ல வேண்டும் என ரவியை சகுந்தலா அழைத்து சென்ற நிலையிலேயே அவர் மா யமானார். இதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சகுந்தலா, அவரது காதலன் கமல் மற்றும் நண்பர் ஒருவர் மூவரும் ரவியைக் கொ லை செய்யத் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
பொலிசார் கூறுகையில், 2012-ம் ஆண்டு, சகுந்தலா வேறொருவரை மணந்தார். சகுந்தலா, அவரது இரண்டாம் கணவர் கமல் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தச் சோதனையில் மூவரும் சிக்கவில்லை.
ஆனால் பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் கமல் சிக்கி கொண்டார், ஆனால் மாட்டி கொள்வதை தவிர்க்க அவர் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி கமலை கைது செய்த போது திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்தார்.
அதாவது ரவியை கொ லை செய்தால் கமலுடன் சேர்ந்து வாழ முடியும் என சகுந்தலா நினைத்தார். அதன்படி சகோதரி வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறிய சகுந்தலா ரவியுடன் கமலையும் காரில் அழைத்து சென்றார்.
அப்போது கமல், தான் வைத்திருந்த கயிற்றால் ரவியின் க ழுத்தை நெ ரித்துக் கொ லை செய்துள்ளார். கமலின் கார் ஓட்டுநர் கணேஷ் இந்தக் கொ லைக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ 70,000 பணம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ரவியின் உடல் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைக்கப்பட்டது. தற்போது ரவியின் சடலத்தின் எலும்புகளை துண்டு துண்டாக கைப்பற்றியுள்ளோம். கமல் மற்றும் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கர்ப்பமாக இருக்கும் சகுந்தலாவை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.
சென்னையில் கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை மீட்க மீனவர்கள் போ ராடினார்கள்.
சென்னை எண்ணூரில் இறந்த நிலையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதனை மீட்க முடியாமல் அவதியுற்றனர்.
கிரேன் மூலம் கட்டி இழுக்க முயன்றதால் அதன் உடல் சிதைவடைந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடலில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிறு கட்டி ஜேசிபி வாகனம் மூலம் கரைக்கு இழுத்தனர்.
அதன் பிறகு கடற்கரையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முல்லைத்தீவு – கொக்குதொடுவாய், பாடசாலைக்கு முன்பாக இன்று(08.10) முற்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது வாகனமொன்று மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்தனர். பொலிஸார் இவ்விபத்தை ஏற்படுத்திய நபருக்கு சாதகமாக செயற்படுவதாக அம்மக்கள் தெரிவித்ததுடன், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்த மாணவன் 11 வயதுடைய செல்வரத்தினம் கேதீஸ் எனத் தெரியவருகின்றது.
வெளியான புலமைப் பரீட்சையில் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் 26 மாணவர்கள்சித்தியடைந்துள்ளனர்.
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் பி.ஐதுர்ஷி 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதல்நிலையை வகிப்பதுடன் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
119 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் வெட்டுப்புள்ளிக்கும் 100க்கும் இடைப்பட்ட புள்ளிகளை 72 மாணவர்களும் 70-100க்கு இடைப்பட்ட புள்ளிகளை 17 மாணவர்களும் 70க்கு கீழ் புள்ளிகளை 04 மாணவர்களும் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.