திருமணமான சில மாதத்தில் மாயமான கணவன் : மறுமணம் செய்த மனைவி : 8 ஆண்டுக்கு பின்னர் அதிரடி திருப்பம்!!

அதிரடி திருப்பம்

இந்தியாவில் எட்டு வருடங்களுக்கு முன்னர் கா ணாமல் போன நபர் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி தான் கொ லையாளி என்றும் தெரியவந்துள்ளது. புது டெல்லியை சேர்ந்தவர் ஜெய் பகவான்.

இவர் மகன் ரவிக்கு 2011-ல் சகுந்தலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் ரவியை கா ணவில்லை என அவர் தந்தை ஜெய் பகவான் அப்போது பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசாரின் விசாரணையில் இந்த தகவலும் கிடைக்காததால் வேதனையடைந்த ஜெய் பகவான் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் இந்த வழக்கை குற்றப்பிரிவு பொலிசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன் பின்னர் விசாரணை சூடு பிடித்த நிலையில் ரவி கா ணாமல் போனதும் அவர் மனைவி சகுந்தலா வேறு திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சகுந்தலா மற்றும் அவர் கணவர் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதனிடையில் சகுந்தலாவின் விருப்பத்தை மீறி அவர் ரவிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது பொலிசாருக்கு தெரிந்தது. மேலும் திருமணத்துக்கு முன்னர் கமல் என்பவரை சகுந்தலா காதலித்து வந்துள்ளார்.

திருமணமான ஒரு வாரத்தில் சகோதரி வீட்டுக்கு செல்ல வேண்டும் என ரவியை சகுந்தலா அழைத்து சென்ற நிலையிலேயே அவர் மா யமானார். இதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சகுந்தலா, அவரது காதலன் கமல் மற்றும் நண்பர் ஒருவர் மூவரும் ரவியைக் கொ லை செய்யத் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

பொலிசார் கூறுகையில், 2012-ம் ஆண்டு, சகுந்தலா வேறொருவரை மணந்தார். சகுந்தலா, அவரது இரண்டாம் கணவர் கமல் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தச் சோதனையில் மூவரும் சிக்கவில்லை.

ஆனால் பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் கமல் சிக்கி கொண்டார், ஆனால் மாட்டி கொள்வதை தவிர்க்க அவர் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி கமலை கைது செய்த போது திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்தார்.

அதாவது ரவியை கொ லை செய்தால் கமலுடன் சேர்ந்து வாழ முடியும் என சகுந்தலா நினைத்தார். அதன்படி சகோதரி வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறிய சகுந்தலா ரவியுடன் கமலையும் காரில் அழைத்து சென்றார்.

அப்போது கமல், தான் வைத்திருந்த கயிற்றால் ரவியின் க ழுத்தை நெ ரித்துக் கொ லை செய்துள்ளார். கமலின் கார் ஓட்டுநர் கணேஷ் இந்தக் கொ லைக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ 70,000 பணம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ரவியின் உடல் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைக்கப்பட்டது. தற்போது ரவியின் சடலத்தின் எலும்புகளை துண்டு துண்டாக கைப்பற்றியுள்ளோம். கமல் மற்றும் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கர்ப்பமாக இருக்கும் சகுந்தலாவை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் : துண்டிக்கப்பட்ட பாதி உடல் : கண்ணீர் புகைப்படம்!!

சென்னையில் கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை மீட்க மீனவர்கள் போ ராடினார்கள்.

சென்னை எண்ணூரில் இறந்த நிலையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதனை மீட்க முடியாமல் அவதியுற்றனர்.

கிரேன் மூலம் கட்டி இழுக்க முயன்றதால் அதன் உடல் சிதைவடைந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடலில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிறு கட்டி ஜேசிபி வாகனம் மூலம் கரைக்கு இழுத்தனர்.

அதன் பிறகு கடற்கரையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு  – கொக்குதொடுவாய், பாடசாலைக்கு முன்பாக இன்று(08.10) முற்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது வாகனமொன்று மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்தனர். பொலிஸார் இவ்விபத்தை ஏற்படுத்திய நபருக்கு சாதகமாக செயற்படுவதாக அம்மக்கள் தெரிவித்ததுடன், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் 11 வயதுடைய செல்வரத்தினம் கேதீஸ் எனத் தெரியவருகின்றது.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் 26 மாணவர்கள் சித்தி!!

பி.ஐதுர்ஷி

வெளியான புலமைப் பரீட்சையில் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் 26 மாணவர்கள்சித்தியடைந்துள்ளனர்.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் பி.ஐதுர்ஷி 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதல்நிலையை வகிப்பதுடன் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

119 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் வெட்டுப்புள்ளிக்கும் 100க்கும் இடைப்பட்ட புள்ளிகளை 72 மாணவர்களும் 70-100க்கு இடைப்பட்ட புள்ளிகளை 17 மாணவர்களும் 70க்கு கீழ் புள்ளிகளை 04 மாணவர்களும் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

பாடசாலை பஸ் விபத்து : 31 பேர் படுங்காயம்!!

பஸ் விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 31 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பாடசாலை சேவை பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே குறித்த பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 31 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமமைந்தவர்களில் 28 பேர் மாணவ, மாணவிகள் எனவும், 3 பேர் பெரியவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, ஹைலவல் பாடசாலை, வெப்ஸ்டார் பாடசாலை, பொஸ்கோ பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவ, மாணவிகளே இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட விபரீதம்!!

நாடாளுமன்றத்தில்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து, தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் பிரசன்னமாகும் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்திலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.கடந்த ஒரு வாரமாகப் பெய்யும் பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் மண்சரிவிற்கான அபாயம் நிலவியுள்ளது.

தற்போது குறித்த பகுதிக்கு சென்றுள்ள புவிசரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன்!!

சிவராம் யோகேஸ்வரன்

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டனில் வெளியியில் சென்ற இலங்கை தமிழ் இளைஞனே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வயதான சிவராம் யோகேஸ்வரன் என்ற இலங்கை இளைஞன் இறுதியாக கடந்த மாதம் 5ஆம் திகதி Kensingtonனின் Brompton வீதியோரத்தில் காணப்பட்டுள்ளார். Kensingtonனில் இருந்து காணாமல் போனவர் பெரிய உடல், இருண்ட கண்கள், கறுப்பு கண்ணாடி மற்றும் கறுப்பு நிற முடி கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ஆட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன நபரை தீவிரமாக தேடி வரும் பொலிஸார், அவரை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தி!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் (06.10.2019)  வெளியாகியுள்ள நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் 20  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் டேனுஷா சுதாகரன் என்னும் மாணவி 187 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

பாடசாலையில் 108 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 70  புள்ளிகளுக்கு மேல் பெற்று  94% வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் : மாத்தறை நோக்கி பயணத்தினை தொடர்ந்தது ரஜட்ட ரஜனி!!

சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள்

இரண்டு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றையதினம் (08.10.2019) வவுனியா புகையிரத நிலையத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதனையடுத்து 25ம் திகதி தொடக்கம் வவுனியாவில் தரித்து நின்ற ரஜட்ட ரஜனி புகையிரதம் அதிகாலை 3.35 மணியளவில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.

அதிகாலையிலேயே ரயில்வே உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்ததுடன் பணிப்புறக்கணிப்பு காலப்பகுதியில் ஆசன முற்பதிவுகளை மேற்கொண்டிருந்தவர்கள் அவர்களது முற்பதிவுகளுக்கான பதிவுகளை இரத்து செய்ய சமூகமளித்திருத்தமையினையும் காணக்கூடியதாகவிருந்தது.

எனினும் இதுவரை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து எவ்வித புகையிரதங்களும் வவுனியாவிற்கு வருகை தரவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்தே ரயில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம் பாடசாலை மாணவர்களின் சாதனை!!

செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம்

கடந்த ஆகஸ்ட் 04ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வவுனியா சின்ன சிப்பிக்குளம் தாருல் உலூம் பாடசாலை மாணவர்கள் நால்வர் மாவட்ட வெட்டுப்புள்ளியான 152 க்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

வாரித் அப்ரித் 179, முஹாஜிரீன் ஆயிஷா நதா 169, ஸஹ்ரான் சஹான் 167, உபைதுல்லா நுஹாத் 155 புள்ளிகளை பெற்று சித்திபெற்றுள்ளனர்.

மாணவர்களின் இவ்வெற்றியின் மூலம் செட்டிகுளம் கோட்டமட்ட பாடசாலைகளிடையேயும், வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளிடையேயும் எமது பாடசாலை முதல் நிலை பாடசாலையாக மிளிர்வற்கு அயராது உழைத்த அதிபர், ஆசிரியை திருமதி நஜ்முன்னிசாஜமீன் மற்றும் ஆசிரியர் திரு.நாகூர்கனி றயிஸ் ஆகியோருக்கும், பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குள கோட்டமட்ட ரீதியில் தமது பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அபிவிருத்தி சங்க செய்தியாளர் உவைஸ் முகம்மட்.பாரிஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் பொலிசாரால் கிழித்தெறியப்பட்ட சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்!!

சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியாவில் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.

‘புதிய இலங்கைக்கு சஜித்’ எனும் பெயரில் குறிப்பிட்டு பரவலாக வவுனியா நகர், மன்னார் வீதி, குருமன்காட்டு சந்தி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

இச்சுவரொட்டிகளை இன்று (07.10.2019) மாலை வவுனியா பொலிஸார் நடமாடும் பொலிஸாரின் வாகனத்தில் சென்று கிழித்தெறிந்தனர். இவ்விடயம் தொடர்பாக சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாரிடம் வினவிய போது ,

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவிடம் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலின் பிரகாரம் இதனை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

வவுனியா மதியாமடு வித்தியாலயம் 62 வருட பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வரலாற்று சாதனை!!

வவுனியா வடக்கு வலய பாடசாலையில் ஒன்றான வவுனியா மதியாமடு வித்தியாலயத்தில் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் 4 மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்.

குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சையில் இதுவே முதல் வரலாற்றுச் சாதனையாகும். இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு 16 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் சிவகுமார் ஜிபிகா -179 புள்ளிகளையும் சிறிஸ்கந்தராசா சாம்பவி -168 புள்ளிகளையும் தர்மகுலசிங்கம் டிலக்சிகா 165 புள்ளிகளையும் விமலதாஸ் திவ்யா – 159 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் ஏனைய மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பேறுபெற்றினை பெற்றுள்ளனர்.

இச் சாதனையினை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாகவிருந்த பாடசாலை அதிபர் சி.சிவராசா மற்றும் ஆசிரியர்களான கிரிசாந்தினி சந்திரன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்..

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் தரம் 5 மாணவர்களின் சித்தி வீதம் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 30 வீதமாக காணப்பட்ட சித்தி வீகிதமானது 38 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருட அனுபவத்தினை கொண்டு நாங்கள் சில திட்டமிட்ட ரீதியான செயற்பாடுகளை எங்களுடைய ஆசிரியர் குழாம் அற்பணிப்புடன் ஆற்றியதன் விளைவாக இந்த வெற்றிக்கனியானது எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.

அந்த வகையில் எமது மாணவ செல்வங்களை பாராட்டுகின்றேன். அவர்கள் ஆசிரியர்களோடு ஒத்துழைத்து அவர்களினால் கற்பிக்கப்படும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் கற்கு இந்த வெற்றிக்கனியினை பறித்துள்ளனர்.

அதற்காக அந்த மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் பாராட்டி நிற்கின்றேன். அந்த வகையில் 2019ம் ஆண்டு எங்களுடைய பாடசாலையில் 195 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி அவர்களில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் 70க்கும் வெட்டுப்புள்ளிக்கும் இடையில் 110 மாணவர்களும் , 70க்கு கீழ் 10 மாணவர்களும் பெறுபெற்றினை பெற்றுள்ளனர்.

எங்களுடைய பாடசாலை மாணவர்கள் மிக திறமையானவர்கள். பல்வேறு வகையான திறமைகளை கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களான பா.லெக்ஸ் , கி.உதயராஜன், வி.தவராஜன், ம.திலீபன், கோ.ஸ்ரீதரன் மற்றும் பகுதி தலைவர் ஜெ.அருள்செல்வம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது மாடியிலிருந்து இளம் குடும்பஸ்தர் த ற்கொ லை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் க ழுத்தை அ றுத்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே கு தித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளார். இன்று (07.10.2019) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட த கராறு காரணமாக மனைவி தீ யில் எ ரிந்த நிலையிலும், கணவன் த லையில் ப லமாக தா க்கப்பட்ட நிலையிலும் பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த இருவருக்கும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதுடன்,

கணவன் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட இந்நிலையில் சிகிச்சை பெற்ற கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உ டைத்து அதன் ஊடாக நிலத்தில் கு தித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளதுடன் சிறிய க த்தியால் க ழுத்தையும் அ றுக்க முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிசார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று கு திக்க முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர்.

க ழுத்தில் கா யமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தால் வைத்தியசாலையில் சுமார் அரை மணிநேரம் ப ரபரப்பான நிலை காணப்பட்டதுடன் இந் நிலையில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணும், 27 வயது ஆணுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருவறையில் இருக்கும்போதே செல்வீச்சில் தந்தையை இழந்து, புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த முல்லை மாணவன்!!

இ ராணுவத்தின் செல் வீச்சில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று மாணவன் கோபிநாத் கோபிதன் சாதனை படைத்துள்ளார்.

இராணுவத்தின் செல் வீச்சில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று சாதித்த மாணவன் கோபிநாத் கோபிதன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போ ரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார்.

2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யு த்தத்தின்போது இராணுவத்தினரின் செல் வீச்சு தா க்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின் முகத்தை கூட தெரியாது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சிறப்பாக கல்வி கற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் கோபிநாத் கோபிதன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மேற்கு பகுதியில் வசித்து வருகின்ற கோபிநாத் கோபிதன் கடந்த 2009ஆம் ஆண்டு தாயின் கருவறையில் இருந்த வேளையிலேயே மாத்தளன் பகுதியில் இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்தார்.

இந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வளர்ந்து விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி நேற்று வெளியாகியாகிய பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் இரண்டாம் நிலையில் சித்தியடைந்த மாணவனாக சாதித்திருக்கிறார்

தனது கணவனை 2009ல் பறிகொடுத்த கோபிநாத் கோபிதன் அவர்களுடைய தாயாரான கோபிநாத் சாரதா அவர்கள் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவனை பறிகொடுத்த நிலையில் குறித்த மகனை பிரசவித்து சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் கூலித்தொழில் செய்து தனது மகனை கற்பித்த நிலையில் தனது மகன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையினை இட்டு மனமகிழ்வு அடைவதோடு அவனது எதிர்கால இலட்சியம் நிறைவேற தனது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.

அதேபோன்று குறித்த மாணவன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போ ரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார்.

முச்சக்கரவண்டி – பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று மாணவிகள் படுகாயம்!!

விபத்து

லிந்துலை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் உள்ளிட்ட சாரதி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை, நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், லிந்துலையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதில் சாரதி மட்டும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பேருந்து சாரதியை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.