பகலில் பள்ளிக்கூடம் : மாலையில் தொழிலதிபர் : அசத்தும் மாணவன்!!

அசத்தும் மாணவன்

பள்ளியில் படித்துக் கொண்டே சொந்தமாக தொழில் தொடங்கி கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டி சாதித்துள்ளார் 14 வயதான பொன் வெங்கடாஜலபதி. திருப்பூரின் காங்கேயத்தை சேர்ந்த தம்பதி நாச்சிமுத்து- ஜெயலெட்சுமி, இவர்களது மகன் பொன் வெங்கடாஜலபதி, 14 வயதான இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

பகலில் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்கும் வெங்கடாஜலபதி, மாலை வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய தொழிலை கவனிக்க சென்று விடுகிறார். வெறும் 10 கோழிக்குஞ்சில் தொடங்கிய தொழில், இன்று 150 கோழிகளுடன் வளர்ந்து நிற்கிறது, கடந்தாண்டு மட்டும் ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அம்மா- அப்பா இருவருமே வேலைக்கு செல்வதால் விடுமுறை நாட்களில் தாத்தா வீட்டில் தான் வளர்வேன், விவசாயம் செய்து கொண்டே கோழிப்பண்ணை வைத்திருக்கிறார் தாத்தா. அங்கிருக்கும் போது கோழிகளை பராமரித்ததில் எனக்கும் கோழிப்பண்ணை வைக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

இதை பெற்றோரிடம் கூறியதும் அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் ரூ.10,000 செலவில் வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். முதலில் தாத்தா, அப்பாவிடம் அறிவுரைகள் கேட்டுக் கொண்டு யூடியூப் பார்த்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்வேன்.

காலையில் 6 மணிக்கு எழுந்ததும் சுமார் ஒரு மணிநேரம் பண்ணையை பார்த்துக் கொண்ட பின்னர் பள்ளிக்கு கிளம்பி விடுவேன். மாலை வீடு திரும்பியதும் மீண்டும் பண்ணை வேலையை தொடர்வேன், தேர்வுகள் இருக்கும் சமயங்களில் அப்பா பார்த்துக் கொள்வார்.

தாய் கோழி ரூ.400க்கும், மாதத்திற்கு 20 கிலோ சிக்கனும் விற்பனை செய்வதால் நல்ல லாபம். தற்போது 2 ஆட்டுக்குட்டியும், 2 வாத்து வளர்த்து வருவதுடன் எதிர்காலத்தில் வேளாண்கல்வி கற்று ஒருங்கிணைந்த பண்ணை வைக்க வேண்டும் என்பதை தன்னுடைய ஆசை என நெகிழ்கிறார் வெங்கடாஜலபதி.

இறந்த பின்னரும் கொ ல்லப்படும் தர்ஷிகா ஜெகன்னாதன் : ஒரு பத்திரிகையாளரின் உள்ளக்குமுறல்!!

ஒரு பத்திரிகையாளரின் உள்ளக்குமுறல்

க த்தியால் வெ ட்டப்பட்டு கொ ல்லப்பட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் கொ ல்லப்படுகிறார் தர்ஷிகா ஜெகன்னாதன் என்கிறார், பிரபல கனேடிய பத்திரிகையாளர் ஒருவர். ரொரன்றோவில் பிரபல கனேடிய பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் பத்திரிகையாளரான Shree Paradkar என்பவரின் கருத்துக்கள் இவை.

இலங்கை வ ன்முறைக்கு தப்பி கனடாவுக்கு வருகிறார்கள் இலங்கை தமிழர்கள் பலர். ஆனால் ம ரணத்தை சந்திப்பதற்காக இலங்கைக்கு வந்திருக்கிறார் தர்ஷிகா… பல்வேறு வகையில் விதி தர்ஷிகாவின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறது. முதலில் அவரது வாழ்க்கைச்சூழல்: போ ரால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தது.

அடுத்தது அவர் ரொரன்றோவில் சந்தித்த விரும்பத்தகாத அனுபவங்கள்: உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவனின் கைகளால் அவர் அனுபவித்த வேதனை. குடும்பத்தை தொடர்பு கொள்வதற்கு மொபைல் போன் கொடுக்கப்படாதது, தலையணையில் முகம் அழுத்தப்பட்டது, உடல் ரீதியாக தா க்கப்பட்டது என சில விடயங்களை அவர் நீதிமன்றத்தில் கோடிட்டுக் காட்டினார்.

என்றாலும் சசிகரன் விடுவிக்கப்பட்டார். 18 மாதங்களுக்குப்பிறகு தர்ஷிகா கொ லை செய்யப்பட்டார், கையில் க த்தியுடன் சசிகரன் அவரை து ரத்துவதை கண்ணால் கண்டவர்கள் சாட்சியமளித்தார்கள், சசிகரன் கைது செய்யப்பட்டார். அத்துடன் எதுவும் முடியவில்லை.

இப்போது ஒரு புது விடயம் தொடங்கியுள்ளது. அதை ஆங்கிலத்தில் victim-blaming என்கிறார்கள். அதாவது, யார் பாதிக்கப்பட்டாரோ, அவரையே கு ற்றம் சொல்வது, அவர் மீதே பழி போடுவது, அவர் என்ன செய்தாரோ யாருக்கு தெரியும்? என க ழுத்தை வெ ட்டிப் பேசுவது.

ஆம், அதுதான் கடந்த சில வாரங்களாக தர்ஷிகாவுக்கும் நடந்து வருகிறது. இணையத்தில் உலவும் சில புகைப்படங்கள் தர்ஷிகாவின் ஒழுக்கத்தை கேள்வி கேட்கின்றன. திருமணம் ஒன்றில் புடவையில் தர்ஷிகா நடனமாடும் ஒரு வீடியோ, கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் தர்ஷிகா நிற்கும், அவருக்கு அந்த ஆண் கேக் ஊட்டும் ஒரு புகைப்படம் என வரிசையாக சில விடயங்கள்…

அந்த படங்களின் கீழ், அவளை கொ லை செய்தவர் பைத்தியக்காரரா அல்லது அவளால் பைத்தியக்காரராக்கப்பட்டாரா என்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. அவர் தாமாகவே கனடாவுக்கு வந்தாரா அல்லது தனது ரகசிய காதலனை தனக்கு ஸ்பான்சர் செய்ய சொல்லி வந்தாரா?

என்னுடைய சகோதரனுக்கு ஏதோ ஆகிவிட்டது, அந்த மோசமான பெண் என் சகோதரனைக் கொ ன்றுவிட்டாள் என்று ஒருவர் எழுதுகிறார். பாவம் அந்த பெண், என்னைப் பொருத்தவரை இவர்கள் சொல்வது போலவே, தர்ஷிகாவுக்கு ஒரு காதலன் இருந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், அப்படியாவது அவர் நன்றாக வாழ்ந்திருக்கமாட்டாரா என எனது மனது தவிக்கிறது என்கிறார் Shree Paradkar.

யாழில் இருந்து திருச்சி, மதுரைக்கு நேரடி விமான சேவை!!

நேரடி விமான சேவை

யாழ்ப்பாணத்திலிருந்து மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

யாழ். பலாலி ராணுவ விமான நிலையம், அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக எதிர்வரும் 17ம் திகதி முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.

இந்நிலையில், பலாலியிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதா‌க” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் முதன்முறையாக நீரேந்து பிரதேசங்களில் மருதமர நடுகை ஆரம்பம்![?]

வனபாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஐப்பசி மாதம் அளவில் மேற்கொள்ளப்படுகின்ற ”வன ரோபா”  நிகழ்வானது  வவுனியா மாவட்ட நெடுங்கேணி  வட்டார வனஅலுவலகத்தினால் இந்த வருடம்  முதன்முறையாக நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்திற்குட்பட்ட மருதங்குளத்தில் நீரேந்து பிரதேசத்தில் 04.10 2019 அன்று மரநடுகை நிகழ்வானது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது  மருத மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  நெடுங்கேணி உதவி பிரதேச செயலாளர்,வவுனியா மாவட்ட கமநல சேவைகள் பிரதி பணிப்பாளர், நெடுங்கேணி வட்டார வன அதிகாரி,வவுனியா வடக்கு பிரதேச சபையின்  தவிசாளர், வவுனியா வடக்கு பிரதேச சபையின்  செயலாளர், நெடுங்கேணி கிராமசேவையாளர்,   கமநல சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர் .

இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வன மூடுகையினை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

 

வவுனியா உட்பட வடமாகாணம் முழுவதும் இன்று மின்தடை!!

மின்தடை


வவுனியா உட்பட வடமாகாணம் முழுவதும் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. திருத்த வேலைகளிற்காக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயண்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு மின்சார சபை கேட்டுக்கொள்கின்றது.

வவுனியா நகரில் மின்குமிழ்கள் பொருத்தும் நடவடிக்கை!!

மின்குமிழ்கள் பொருத்தும் நடவடிக்கை

வவுனியா நகரப்பகுதியில் மின்குமிழ்கள் பொருத்தும் நடவடிக்கை நகரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள பல பகுதிகளில் உள்ள வீதிகள் இரவு நேரங்களில் மின் குமிழ்களின்றி இருட்டாக காட்சியளித்தது.

இந்நிலையில் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா நகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பகுதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது.

அந்தவகையில், வைரவபுளியங்குளம் கதிரேசு வீதி, குருமன்காடு காளிகோவில் வீதி, புகையிரதநிலைய வீதி, குட்செட் வீதி, மன்னார் வீதி, பண்டாரிக்குளம் குளக்கட்டு வீதி என்பவற்றில் இவ்வாறு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது.

வவுனியாவில் இலஞ்ச ஊழல் தொடர்பில் தெளிவூட்டல்!!

தெளிவூட்டல்

இலஞ்ச ஊழல் சட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CqFFE) இணைந்து வவுனியாவில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி வவுனியாவின், நெடுங்கேணி, புளியங்குளம், ஓமந்தை, தாண்டிக்குளம், குருமன்காடு மற்றும் பழைய, புதிய பஸ் நிலையம், செட்டிகுளம் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் (02.10) தொடக்கம் இன்று (04.10) வரை மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் காணொளிகள், துண்டுபிரசுரங்கள், ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

இதில் கபே அமைப்பில் வவுனியா மாவட்ட ஆலோசகர் மோகனராசா ராஜ்மோகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து மக்களுக்கு ஊழல் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வுகளை வழங்கினர்.

வீரர்கள் தவறு செய்தால் மனைவிகள் தான் காரணமா? கொந்தளித்த சானியா மிர்சா!!

கொந்தளித்த சானியா மிர்சா

கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்யும் போது அவர்களுடைய மனைவிகளை குற்றம் சுமத்துவது முட்டாள்தனம் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், திசைதிருப்பும் ஆதாரமாக மனைவிகளையும், பெண்களையும் பொதுவாக பயன்படுத்துபவர்களை நோக்கி கடுமையான தா க்குதலை நடத்தினார். அதற்கு உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சோபிக்க தவறும் சமயங்களில் எல்லாம், அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டினார்.

விராட்கோஹ்லி ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறும் சமயங்களில் எல்லாம் அனுஷ்கா சர்மாவை குற்றம் சுமத்துகிறார்கள். எதற்கு எதனை சேர்த்து கூறுவது. இது ஒரு முட்டாள்தனம். பலமுறை எங்களுடைய கிரிக்கெட் அணி உட்பட மற்ற கிரிக்கெட் அணிகள், வீரர்களின் மனைவிகள் அல்லது தோழிகளை சுற்றுப்பயணத்தின் போது அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவர்களால் வீரர்களின் கவனம் திசைதிருப்ப படுகிறதாம்.

“அதற்கு என்ன பொருள்? ஆண்களை இவ்வளவு திசைதிருப்பப் போகிற அளவிற்கு பெண்கள் என்ன செய்கிறார்கள்?? ” என்று கேள்வி எழுப்பினார். மேலும், பெண்களை வீரர்களின் ஊக்கம், பலமாக கருதாமல், ஏன் ஆழ்ந்த பிரச்னையாக பார்க்கிறீர்கள். வாழ்க்கை துணை உடன் இருக்கும் சமயத்தில், விளையாடி விட்டு தனது அறைக்கு திரும்பும் அந்த வீரர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை பாருங்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயப் மாலிக் இந்திய அணிக்கெதிரான போட்டியில் சரியாக விளையாடாததால், அவருடைய மனைவி சானியா மிர்சாவை பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் ப லி!!

மின்சாரம் தாக்கி..

அம்பாறை-மஹாஓய வாகஸ்பிடிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உ யிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் இருவரும் நேற்று மாலை கால்நடைகளை அழைத்து வர சென்றபோதே இவ்வாறு மின்சாரம் தா க்கியுள்ளது.

இந்த பிரதேசத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோள சாகுபடியை பாதுகாப்பதற்காக, அங்கு பொருத்தப்பட்டுள்ள மின்சார வேலிகளிலுள்ள மின்சாரம் தா க்கியே குறித்த நபர்கள் உ யிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உ யிரிழந்த நபர்கள் வாகஸ்பிடிய பிரதேசத்தில் வசித்து வருபவர்களென்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹாஓய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

வட்ஸ் அப் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை : இதை மாத்திரம் செய்யாதீர்கள்!!

அவசர எச்சரிக்கை

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வட்ஸ் அப் செயலியின் ஊடாக ஹேக்கர்கள் கைவரிசை காட்டுவது தொடர்ந்துவருகின்றது. தற்போதும் GIF எனப்படும் அனிமேஷன் கோப்புக்கள் வட்ஸ் அப் ஊடாக பகிரப்பட்டுவருகின்றது.

இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் அனுப்பப்படும் GIF கோப்புக்களை திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோப்புடன் மல்வேர்கள் சேர்த்து பரப்பப்படுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Double-Free எனப்படும் இந்த மல்வேர் ஆனது மொபைல் சாதனங்களின் நினைவகத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும், அப்பிளிக்கேஷன்களில் குளறுபடிகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்மார்ட் கைப்பேசிகளை கையாள்வதற்கு ஹேக்கர்கள் இதன் ஊடாக முயற்சிப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்காக இரு கண்களையும் இழந்தவரின் தற்போதைய நிலை!!

இராமையா புஷ்பரெட்ணம்

2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யு த்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும், ஒரு காலையும் இழந்த நிலையில் என்ன செய்வது என அறியாது வாழ்ந்து வருகின்றார் முன்னாள் போ ராளியான இராமையா புஷ்பரெட்ணம்.

வெள்ளாங்குளம் கணேசபுரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் மனைவியின் துணையோடு வாழ்ந்து வரும் இராமையா புஷ்பரெட்ணம் கண் மற்றும் காலை இழந்த நிலையில் யு த்தம் நிறைவடைந்த பின்னர் கணேசபுரம் வெள்ளாங்குளம் பகுதியில் மீள் குடியேறி வசித்து வருகின்றார்.

தொடர்ச்சியாக மீள் குடியேறி பல்வேறு பட்ட சிரமங்கள் மற்றும் பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் போராட்ட நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்கையை கொண்டு செல்கின்றார். பல நேரங்களில் ஒரு வேளை உணவுடனே தமது நாளை கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் இராமையா புஷ்பரெட்ணம் வாழ்வாதரத்திற்கு பிரதேச செயலகம் ஊடாக கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனாலும், பார்வை உள்ளவர்களே ஒழுங்காக பராமரிக்க முடியாத கோழிக் குஞ்சுகளை பராமரித்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்லலாம் என்று நம்பி ஏமாற்றமே மிஞ்சியது. நோய் காரணமாகவும் சீரற்ற காலநிலை காரணமாகவும் கோழி வளர்ப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மனைவி பசிக்கு வறுமை தெரியாது என்பதால் எனோ ஒருவேளை உணவுக்காகவாவது உழைக்க வேண்டும் என தற்போது தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

தற்போது மருத்துவச் செலவும் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என்று அறியாமல் திண்டாடும் புஷ்பரெட்ணம் பார்வையற்றவர்கள் செய்யக்கூடிய ஏதவது தொழில் வாய்ப்பை செய்வதற்கான உதவியை கோருகின்றார்.

எமக்காக போராடி கண்பார்வை இழந்த புஷ்பரெட்ணம் போன்ற போ ராளிகளுக்கு கோடி கோடியாய் கொடுக்காவிட்டாலும் ஒரு வேளை உணவுக்காவது உதவி செய்ய வேண்டியது எமது கடமையாகும். இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் 0770569580 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

-தமிழ்வின்-

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!!

எரிவாயுவின் விலை

லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு முதல் 12.5 கிலோகிராம் லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 240 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

எனினும் லாப் எரிவாயுவின் விலைமாற்றம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், இன்று இரவு முதல் 12.5 கிலோகிராம் லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 240 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

பாடசாலை விட்டு வீடு சென்ற ஆசி­ரியை மாயம்!!

ஆசி­ரியை

பாடசாலை கடமை முடிந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த பட்­ட­தாரி ஆசி­ரியை ஒருவர் முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். கம்­பளை கீரப்­பனை பிர­தே­சத்தைச் சேர்ந்த சந்­திமா நிஸன்­சலா என்ற 27 வய­து­டைய ஆசி­ரியையே இவ்­வாறு காணாமல் போயுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அட்டன் ஸ்ரீபாத வித்­தி­யா­ல­யத்தில் ஆங்­கிலம் கற்­பிக்கும் ஆசி­ரி­யை­யாகக் கட­மை­யாற்றி வந்த குறித்த ஆசி­ரியை சம்­ப­வ ­தி­ன­மான செவ்வாய்­க்கி­ழமை இர­வா­கியும் வீட்­டுக்கு வரா­த­தை­ய­டுத்து ஆசிரியையின் தாய் மகள் கட­மை­யாற்றும் பாட­சாலை அதிபரை தொலை­பேசியூடாக தொடர்பு கொண்­டு விசாரித்துள்ளார்.

குறித்த ஆசி­ரியை வழ­மைபோல் அங்­கி­ருந்து புறப்­பட்டு விட்­ட­தாக அதிபர் கூறி­ய­தை­ய­டுத்து, பதற்­ற­ம­டைந்த தாய் இது குறித்து கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்­டுக்­க­மைய விசா­ர­ணை­களை மேற்கொண்டு வந்த பொலிஸார் மறுநாள் புதன்­கி­ழமை குறித்த ஆசி­ரி­யையின் வீட்­ட­ருகே நிதாஸ் மாவத்­தையில் அமைந்­துள்ள தனியார் கல்­வி­ய­கத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கெம­ரா­வினை பரீட்­சித்து பார்த்த பொழுது மாலை 4 மணி ஆறு நிமி­ட­ம­ளவில் ஆசிரியை வீடு நோக்கி செல்­வது பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது.

இதி­லி­ருந்து குறித்த ஆசி­ரியை தனது வீட்­டுக்கு 100 மீற்றர் இடைவெளிக்­குள்­ளேயே காணாமல் போயுள்­ளமை தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

மோட்டார் சைக்கில் விபத்தில்

மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை நெடுஞ்சாலையின் முதிரையடி ஏற்றம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் செங்கலடி, அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மனோராஜ் (வயது 26) என்பவரே உ யிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செங்கலடி அம்மன்புரத்திலிருந்து கார்மலையிலுள்ள தனது மாட்டு பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞர் சென்றவேளை கித்துள் கிராமத்திலிருந்து செங்கலடி நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம் முதிரையடி ஏற்றம் பகுதியில் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் உ யிரிழந்த இளைஞனின் ச டலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முரசுமோட்டையில் நள்ளிரவில் ஏற்பட்ட பரிதாபம் : முதியவரின் உ யிரைப் பறித்த காட்டு யானை!!

முரசுமோட்டையில்..

கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் காட்டு யானை தா க்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை காட்டு யானை தா க்கியதாகவும் இதனால் சம்பவ இடத்திலேயே அவர் ப லியானதாகவுகம் தெரிவிக்கப்படுகிறது.

உ யிரிழந்த முதியவரின் ச டலம் தற்போதும் அந்த வீட்டில் இருப்பதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

வவுனியாவில் இன்று இடியுடன் கூடிய மழை!!

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம் காணப்படுகின்றது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

“மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, அனுராதபுரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்” என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.