இன்று அதிகாலை தவிர்க்கப்பட்ட பாரிய அனர்த்தம் : விரைந்து செயற்பட்ட பேருந்து சாரதி!!

விரைந்து செயற்பட்ட பேருந்து சாரதி

மன்னார் – மதவாச்சி பிரான வீதியின் உயிலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பசு ஒன்று உ யிரிழந்துள்ள போதும் சாரதியின் சாதுரியத்தினால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் மன்னார் வந்த தனியார் சொகுசு பேருந்தொன்று மதவாச்சி – மன்னார் பிரதான வீதியின் உயிலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சொகுசு பேருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த வீதியை திடீரென மாடுகள் கடக்க முற்பட்டுள்ளன.

இதன்போது பசுவொன்று பேருந்துடன் மோதியுள்ள நிலையில் பேருந்தின் சாரதி விரைந்து செயற்பட்டு உடனடியாக பேருந்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பேருந்திலிருந்த பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளதுடன், பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை உரிய முறையில் அடைத்து பராமறிக்காமையினால் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், எனவே கால்நடைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுமி க டத்தப்பட்டு து ஸ்பிரயோகம் : இலங்கை தமிழர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை!!

10 ஆண்டுகள் சிறை

சி றுமியை க டத்தி, பா லியல் ப லாத்காரம் செய்த வழக்கில், இலங்கை தமிழர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே, அழியா நிலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த நபர், 2016ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, திருமயம் பகுதிக்கு கடத்திச் சென்று, பா லியல் ப லாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் போக்சோ சட்டத்தில் சந்தேகநபரை கைது செய்தனர்.

இது குறித்து வழக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது, வழக்கினை விசாரணை செய்தி நீதிபதி ராஜலட்சுமி, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையினை செலுத்த தவறியதால், மேலும், மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் விளையாட்டு சாதனையாளர்கள் கௌரவிப்பு!!

சாதனையாளர்கள் கௌரவிப்பு

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு சாதனையாளர்களை கௌரவித்தல் – 2019 நிகழ்வு பாடசாலையின் மைதானத்தில் இன்று (04.10.2019) காலை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் க.சிவநாதன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதிக்கல்விப் பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன்,

பாடசாலையின் அதிபர் க.சிவநாதன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதிக்கல்விப் பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கி.யூட்பரதமாறன் மற்றும்,

கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க செயலாளர் சி.சுவேந்திரன் , நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஸ்ரீ திசநாயக்க மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

உடற்கல்வி ஆசிரியர்களான ஜெ.சுதாத்தரன், அ.ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 16 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் கே.காவியா தங்கப்பதக்கத்தினை பெற்றதுடன் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் 4 X 100 மீற்றர் அஞ்சல் ஒட்டத்தில் அரிச்சந்திரகுமார், டனுசன், கரிகரசுதன், சரன்ராஜ் , விஸ்வா, கபிஸ்கரன் ஆகிய ஆறு மாணவர்கள் தங்கப்பதங்கத்தினை பெற்றுள்ளனர்.

அத்துடன் ஒட்டநிகழ்ச்சியில் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் 200 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் மற்றும் 100 மீற்றரில் வெண்கலப்பதக்கம் ஆகியவற்றை பி.அரிச்சந்திரகுமார் தனதாக்கி கொண்டதுடன்

1500 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கத்தினை ச.டனுசன் தனதாக்கி கொண்டார். மேலும் 200 மீற்றர் மற்றும் 100 மீற்றரில் வை.கரிகரசுதன் 4வது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் நீளம் பாய்தலில் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் எஸ்.கரிகரன் 4வது இடத்தினையும் 18 வயதின் கீழ் உயரம் பாய்தல் ஆண்கள் பிரிவில் கே.சரன்ராஜ் வெண்கலப்பதக்கத்தினையும் , 4x400m அஞ்சல் ஓட்டத்தில் பி.அரிச்சந்திரகுமார், ச.டனுசன், வை.கரிகரசுதன், கே.சரன்ராஜ், எஸ்.விஸ்வா, வி.கபிஸ்கரன்
ஆகியோர் தங்கப்பதக்கத்தினையும் பெற்றுள்ளனர்.

பெருவிளையாட்டுக்களில் 16 வயதின் கீழ் பெண்கள் வலைப்பந்தாட்டம் 2ம் இடத்தினையும் 18 வயதின் கீழ் பெண்கள் கொக்கி 3ம் இடத்தினையும் வ/நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் தனதாக்கி கொண்டுள்ளது.

2019ம் ஆண்டிற்கான வடமாகாணப் பாடசாலைகளிற்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 18 வயது ஆண்கள் பிரிவு மெய்வல்லுனர் சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டதுடன் வடமாகாணப் பாடசாலைகள் தரப்படுத்தலில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 8ம் இடத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் தெற்கு கல்விவலயத்திற்கும் பெருமை தேடித்தந்துள்னர்.

போட்டிகளில் பங்குபற்றிய சாதனையாளர்களுக்கு பிரதம , சிறப்பு , கௌரவ விருந்தினர்களினால் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

வவுனியா நெடுங்கேணி செல்வ விநாயகர் வித்தியாலயத்தில் சிறுவர் தினம்!!

சிறுவர் தினம்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நெடுங்கேணி கோட்டத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (03.10) அதிபர் வே.பெரியசாமி தலைமையில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.

பாடசாலையில் முதியோர் கௌரவிப்பும் சிறுவர் உளமகிழ்வு நிகழ்வுகளும் நடைபெற்றன. நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன் சிறுவர் நிகழ்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை அதிபரினால் மாணவர்களுக்கு விசேட தொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கண்காட்சி!!

கண்காட்சி

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலத்தில் கண்காட்சி ஓன்று இன்று(03.10) இடம்பெற்றது. மனைப் பொருளியல், உயிரியல், விவசாயம் ஆகிய துறை சார்ந்த வகையில் இடம்பெற்ற இக் கண்காட்சியினை வவுனியா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது.

குறித்த கண்காட்சியினை பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத், கல்வியற் கல்லுரி விரிவுரையாளர் திருமதி பத்மாவதி ஜெயசந்திரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த கண்காட்சியில் உயிரினங்களின் தொகுதி, மூலிகைத் தாவரங்கள், மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகள், அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.

இதனை உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டு விளக்கங்களைப் பெற்றிருந்தனர்.

வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தில் அரசநிதி வீண்விரயம் : வெளியானது அறிக்கை!!

அரசநிதி வீண்விரயம்

வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் கற்றாளை உறிஞ்சி கொள்வனவின் போது ரூபா 1,66,750.00 மேலதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமாகாண விவசாய பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் (காற்றாளை உறிஞ்சி) கன்று ஒன்றின் நியம விலை ரூபா 35.00 எனவும் கொள்வனவு செய்யவதற்கான இடமும் தெரிவிக்கப்பட்டிருந்தும் வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபாணுவின் காலப்பகுதியில் இதனை பெறுகைக்குழு கவனத்தில் கொள்ளானது வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் நாற்று மேடை விற்பனை நிலையத்தில் ரூபா 150.00 வீதம் 1200க்கு மேற்பட்ட கற்றாளை உறிஞ்சிகளை கொள்வனவு செய்து ரூபா 1,66,750.00 அரச நிதியினை வீண் விரயம் செய்துள்ளமை கணக்காய்வு அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்பட்ட 1250 (காற்றாளை உறிஞ்சி) கன்றுகளும் பைகளில் இடப்படாமலேயே கொள்வனவு செய்து விவசாய பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 2019.01.23ம் திகதி மாகாண கணக்காய்வின் போது 263 (காற்றாளை உறிஞ்சி) கன்று மாத்திரமே காணப்பட்டதுடன் 987 (காற்றாளை உறிஞ்சி) கன்றுகள் அழிவடைந்து காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன்,

வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபாணு வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு இவ்வாறு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட (காற்றாளை உறிஞ்சி) கன்றுகளில் 80 வீதத்திற்கு அதிகமானவை அழிவடைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக விவசாயிகளின் வயல்களை பார்வையிட்ட மாகாண கணக்காய்வு குழு அறிக்கையிட்டுள்ளது.

(காற்றாளை உறிஞ்சி) கன்று அழிவுகள் தொடர்பாக மாகாண கணக்காய்வு குழு வெளியிட்டுள்ள தகவல்…

பாவற்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 100 வீதம், செட்டிக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 81 வீதம் , நெடுங்கேனி விவசாய போதனாசிரியர் பிரிவில் 70 வீதம் , கோவிற்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 60வீதம் போன்று (காற்றாளை உறிஞ்சி) கன்றுகள் அழிவினை சந்தித்துள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பாக விவசாயிகளிடையே கணக்காய்வு குழு நடாத்திய விசாரணையின் போது வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட (காற்றாளை உறிஞ்சி) கன்றுகள் அழுகிய நிலையிலும் பழுப்பு நிறத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கணக்காய்வு குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.

பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபாணுவின் காலப்பகுதியில் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் மாகாண நிதிச்சுற்று நிரூபம் PF/06/2015 (1) இல் கூறப்பட்ட எவற்றையும் பின்பற்றுவது இல்லை எனவும் அத்துடன் சந்தை விலைகள்,

மற்றைய நியம விலைகளை விட கொள்வனவு விலை அதிகரித்து இருப்பதினால் பெறுகை குழுவோ, தொழிநுட்ப குழுவோ கவனத்தில் எடுக்காமையினால் அரச நிதி மேலதிகமாக வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கணக்காய்வு விசாரணைகளையின் போது தெரியவந்துள்ளதாக மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ச.சுரேஜினி தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறு அரச நிதி வீணடிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளுக்கு தரமான நாற்றுக்களை வழங்காதனால் விவசாயிகளுக்கான தாவர பரமாரிப்பு செலவுகள் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வருமானம் இழக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயிகளுக்கு தொழிநுட்ப அறிவூட்டலை வழங்க வேண்டிய விவசாய திணைக்களம் தரமான நாற்றுக்களை குறைந்த விலையில் வழங்க முடியாமையும் வழங்கிய நாற்றினை பாதுகாப்பதற்கான ஆலோசனையினை வழங்க முடியாமல் தொழிநுட்பம் சார்பான திணைக்களம் வவுனியாவில் இயங்குவது விவசாயிகளின் விசனத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.

13 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு : திடுக்கிட வைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி!!

நேற்றைய தினம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொ ள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போன சம்பவம் நீண்ட நாட்களாக நோட்டமிட்ட திருடப்பட்டது என்று அப்பகுதியை ஆய்வு செய்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதில் இந்த தி ருட்டு கும்பல் பாதுகாவலர்கள் யாரும் இல்லாத நேரத்திலும், நாய்கள் காவலுக்கு இல்லாத சமயம் பார்த்து கடையை ஒட்டி இருக்கும் பள்ளியின் வழியாக வந்து, லலிதா ஜூவல்லரி கட்டடத்தின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர்.

கொ ள்ளையர்கள் யாரேனும் அந்தப்பகுதியில் வருகிறார்களா, என்பதை கவனித்து, கயிறு மூலமாகவே சிக்னல் அனுப்பி திருடிய நகைகளை பைகளில் நிரப்பிக் கொண்டு, அந்த பைகளை கயிற்றில் கட்டி இழுத்து வெளியே கடத்தி இருக்கிறார்கள்.

பேசுவதை தவிற்கவே அவர்கள் கயிற்றால் இந்த திட்டத்தை செல்படுத்தியதாக பொலிசார் நம்புகின்றனர்.

மேலும் கொ ள்ளையர்கள் உள்ளே வருவதற்கும், நகைகளை கொள்ளையடித்தபின் அங்கிருந்து வெளியே செல்வதற்கும் அவர்கள் எந்த சாலையை பயன்படுத்தினர் என்பது குறித்து பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கடையின் உரிமையாளர் இது குறித்து, 13 கோடிக்கும் மேலான மதிப்புள்ள நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இச்சம்வத்தின் சிசிடிவி காட்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மனைவி மகனை கொ லை செய்த நபர் : பிணையில் வெளிவந்து செய்த வி பரீதம்!!

பிணையில் வெளிவந்து..

தனது மனைவி மகனை கொ லை செய்துவிட்டு சி றை சென்ற நபர், பி ணையில் வெளிவந்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மாணிக்கவேலூரை சேர்ந்தவர் லொறி ஓட்டுநர் சுரேஷ் இவர் கவுரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு புகழ்வினை என்ற ஒன்றரை வயது மகன் இருந்த நிலையில், மனைவி மீது சந்தேகப்பட்டு த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 9ம் திகதி மனைவி மற்றும் மகனை அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, க ழுத்தை நெ ரித்து கொ லை செய்து விட்டு த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். அப்போது, அவரை மீட்ட அப்பகுதியினர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்ப இடத்திற்கு வந்த பொலிசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன் பிணையில் வெளிவந்துள்ளார்.

பின், மனைவி மற்றும் மகனை கொ லை செய்த தோட்டத்திற்கு சென்று, அங்கு த ன்னுடலில் மின்சாரத்தை பாய்ச்சி உ யிரை மாய்த்து கொள்ள முற்பட்டுள்ளார். அவரது அ லறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன்றி உ யிரிழந்தார்.

மனைவி, மகனை கொ ன்ற விரக்தியில் சுரேஷ் த ற்கொ லை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்று பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளை மு டக்கப் போவதாக எ ச்சரிக்கை!!

கட்டுநாயக்க விமான நிலைய..

விமான நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுக அதிகாரிகள் அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கனுகல தெரிவித்துள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் சேவை பி ரச்சினைகளை தீர்ப்பதற்கு தலையிடவில்லை என்றால் அனைத்து அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நீண்ட காலமாக குடிவரவு குடியகல்வு சேவையில் ஏற்பட்டுள்ள அநீதி மற்றும் தங்கள் சேவையில் ஏற்பட்டு சி க்கல்களை தீர்ப்பதற்கு பல முறை அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனினும் அதற்காக எந்தவொரு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக தாம் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கனுகல தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டினால் விமான நிலைய மற்றும் துறைமுக நடவடிக்கைகள் மு டங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பல்துறை துறைகளை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்கு எதிராக விழிப்புணர்வு!!

விழிப்புணர்வு

லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வு வவுனியாவில் இன்று (03.10) இடம்பெற்றது.

லஞ்சம் நாட்டையும், சமூகத்தையும் நாசமாக்கும் என்னும் தொனிப் பொருளில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

வவுனியா புதிய பேரூந்து நிலையம், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதுடன், ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.

லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 1954 என்கின்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

   

வவுனியாவில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த யானை தொடர்பில் விசாரணை!!

வவுனியாவில்..

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த நிலையில் யானையின் ச டலமொன்று காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் யானையின் ச டலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், யானை இ றந்தமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தனது நண்பனை பாடசாலைக்கு சுமந்து செல்லும் நட்பு : பலரையும் நெகிழ வைத்த செயல்!!

நெகிழ வைத்த செயல்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நேற்று முன்தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதுடன் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இரண்டு கால்களையும் இழந்த தனது நண்பனை மற்ற நண்பன் தோளில் சுமந்து செல்லும் புகைப்படங்களே இணையத்தில் வெளியாகியுள்ளன. சிறுவர் தினத்தன்று யாபஹூவ கல்வெட்டுகளை பார்வையிட சென்ற போது இந்த சம்பவத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

பிரபல ஊடகவியலாளர் ஒருவரினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. தனது நண்பனை சுமந்து செல்லும் நண்பனின் பாசத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

வவுனியாவில் புகையிரத ஊழியர்கள் அரசாங்க அறிவித்தலை மீறி தொடர்ந்தும் போராட்டம்!!

வவுனியாவில் புகையிரத ஊழியர்கள்..

அரசாங்க அறிவித்தலை மீறி தொடர்ந்தும் புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்வதால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த போ ராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவிலும் போ ராட்டம் தொடர்வதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

புகையிரத தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போ ராட்டம் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு போ ராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இன்றும் (03.10.2019) வவுனியா புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் அசௌகரியங்களையும் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினமும் அதிகாலை 3.35இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி புகையிரதம் வவுனியாவிலேயே தரித்து நிற்பதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா ம துபானசாலைகள் பூட்டு!!

ம துபானசாலைகள்..

சர்வதேச ம து ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று (03.10.2019) அனைத்து ம து விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

சர்வதேச ம து ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து ம துபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் இன்று (ஒக்டோபர் 3) மூடப்பட வேண்டுமென கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கு அமைவாக இன்றையதினம் (ஒக்டோபர் 3) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் பத்திர அனுமதியுடனான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் வவுனியாவிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பா லியல் வ ன்புண ர்வு : கு ற்றவாளி தலைமறைவு!!

பாடசாலை மா ணவி மீது..

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றையதினம் (02.10.2019) பாடசாலை மா ணவி ஒருவர் பா லியல் வ ன்புண ர்வுக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பாடசாலை மா ணவியுடன் (வயது 15) அதே பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய நபர் தொலைபேசி மூலம் சில தினங்களாக உரையாடியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நேற்றையதினம் காலை 10 மணியளவில் தொலைபேசி மூலம் பாடசாலை மாணவியை கற்குளம் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த மா ணவியும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். இதன் போது பாடசாலை மாணவி மீது குறித்த நபர் பா லியல் து ஸ்பிர யோகம் மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய பாடசாலை மாணவி இச்சம்பவம் தொடர்பில் தந்தையிடம் தெரிவித்தமையினையடுத்து, தந்தை மாணவியுடன் வவுனியா பொலிஸார் நிலையத்திற்கு வருகைதந்து இவ்விடயம் தொடர்பில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தலைமறைவானதை அடுத்தது அவரை கைது செய்யும் நடவடிக்கையில் வவுனியா பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக தனிமனிதனொருவர் போ ராட்டம்!!

பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக தெரிவித்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (03.10.2019) காலை தொடக்கம் மதவுவைத்தகுளம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மதவுவைத்தகுளம் பகுதி மக்களுக்கு நான் பல வருடகாலமாக நீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றேன். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் என் மீது பொய்யான காரணங்களை முன்வைத்து என்னை நீர்விநியோக பணியிலிருந்து நீக்கி வேறொரு நபருக்கு நீர்விநியோக பணியினை வழங்கியுள்ளார். தவிசாளரின் தன்னிச்சனையான முடிவுக்கு தீர்வு வேண்டுமென தெரிவித்தே போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

‘தெற்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான போ ராட்டம் எனக்கு நீதி வேண்டும்’ என்ற வசனத்தினை தாங்கிய பதாதையினை ஏந்தியவாறு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களை தொலைபேசியுடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

கடந்த ஐந்து நாட்களாக பொதுமக்களுக்கு நீரினை விநியோகம் செய்யாது நீர் விநியோக கட்டிடத்தின் சாவியினை குறித்த நபர் வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.

மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள நீர்வழங்கல் திட்டம் எமது பிரதேச சபைக்கு சொந்தமானது. எனவே தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் சாவினை பெற்று பிரிதொரு நபரிடம் வழங்கி மக்களுக்கான நீர் விநியோகத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.