வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (04.10.2019) வெள்ளிகிழமை 10.20மணியளவில் சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி 10 தினங்கள் இடம்பெறவுள்ள பிரம்மோற்சவத்தில்
11.10.2019 வெள்ளிகிழமை சப்பறத்திருவிழா இரவு 08.00மணி
12.10.2019 சனிக்கிழமை தேர்த்திருவிழா காலை 10.45 மணி
13..10.2019 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழா காலை 11.00 மணி
14.10.2019 திங்கட்கிழமை திருக்கல்யாணம் மாலை 06.00 மணிக்கும்
போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே பரந்துள்ளன. அந்த பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் என்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
மாற்றுவலுவுள்ளோருக்கான உணர்திறன் முறையுடனான செயற்கை கையினை உருவாக்கிய முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியை சேர்ந்த பத்மநாதன் துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பினை கௌரவிக்கும் முகமாக கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சின் செயலகத்தில் நேற்று (02.10) இடம்பெற்ற சந்திப்பில் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஆளுநர் மாணவனை பாராட்டி கௌரவித்ததோடு பாராட்டு பத்திரத்தினையும் வழங்கினார்.
மேலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டாம் வருட கல்வியினை தற்போது தொடர்வதனை கருத்தில் கொண்டு மாணவனின் பட்டப்படிப்பின் பின் கண்டுபிடிப்பினை விரிவாக்கும் பொருட்டு வடமாகாண ஆளுநரின் பணிப்புரையில் மாணவனுக்கு வெளிநாட்டில் மேற்படிப்பினை தொடர்வதற்காக புலமைப்பரிசில் மற்றும் குறித்த ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நிதிஉதவியும் வழங்கப்படவுள்ளது.
வடமாகாணத்தில் மாற்றுவலுவுள்ளோருக்கான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 25 உணர்திறன் கைகள் மாணவனின் மேற்பார்வையில் உருவாக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
இதன்போது வடமாகாண மக்களின் சார்பாகவும் ஆளுநர் மாணவனுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி முதல் 11ம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள தீர்வு குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வர எதிர்பார்ப்பதாக அசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஐந்து நாள் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று உ யிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது பிரசவம் நேற்று இடம்பெற்றிருந்த போது குழந்தை உ யிரிழந்த நிலையில் பிறந்துள்ளது. எனினும் குறித்த பெண்னை சுகப்பிரசவம் மூலமே குழந்தையினைப் பெற வேண்டும் என வைத்தியர்கள் கோரிய நிலையில், சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை வெளியில் எடுக்குமாறு உறவினர்களினால் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தை பிரசவிக்கப்பட்ட போதிலும் குழந்தையினை யாரிடமும் காட்டாமல் கழிவுகள் போடும் பெட்டியொன்றுக்குள் போட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் தலைப்பகுதியில் பலத்த கா யம் காணப்படுவதாகவும், சத்திர சிகிச்சையின் போது காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் குறித்த குழந்தை தொடர்பான தகவல்களை வழங்காமல் வைத்தியர்களும், தாதியர்களும் மறைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த தாய் தொடர்ச்சியாக மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் குழந்தை உ யிரிழந்துள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
இத் துயரச் சம்பவத்திற்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணமென குழந்தையின் பெற்றோர் கு ற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வைத்தியசாலையில் சிறுவன் ஒருவன் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதன் காரணமாக உ யிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியிருந்தது.
இதேவேளை தற்போது நிகழ்ந்துள்ள சிசுவின் ம ரணம் மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை உண்டுபண்ணியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 23 வைத்தியர்கள் கொண்டு இயங்கி வந்து போது, அன்று நேர்ந்திட சம்பவங்கள் தற்போது 2019ஆம் ஆண்டு 250 நிபுணர்கள் உள்ளடங்கலாக 300 வைத்தியர்கள் கொண்டு இயங்கி வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றது.
கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் வைத்தியர்களே கவனயீனமாக செயற்படுவது முறையானதா? இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் ஒட்டுமொத்த வைத்தியர்கள் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி விடும்.
பிரித்தானியாவில் க த்திக் கு த்துக்கு இலக்காகி உ யிரிழந்த இளைஞன் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வாரம் லண்டன் நகரில் கில்ட்கன் சுரங்க ரயில் நிலையத்தில் வைத்து இரு இளைஞர்களால் ஒருவர் மீது க த்தித் கு த்து தா க்குல் மேற்கொள்ளப்பட்டது.
ரயில் நிலையத்தில் இரண்டு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோ தலின் போது திடீரென வந்த நபர் இலங்கையரை கத்தியால் கு த்தியுள்ளார். இதில் தல்ஷான் டனியல் என்ற இலங்கை இளைஞன் உ யிரிழந்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து போட்டி ஒன்றை பார்ப்பதற்காக ரயிலில் பயணிப்பதற்கு வந்த போதே அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். மகனின் உ யிரிழப்பு காரணமாக அவரது பெற்றோர் மனமுடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இளைஞனை காப்பாற்ற முயன்றனர், ஆனாலும் முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் க த்தி ஒன்று மீட்கப்பட்டதாகவும், இந்த கொ லை தொடர்பில் தகவல் அறிந்தால் தங்களை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Connecticut-ல் இருக்கும் Bradley சர்வதேச விமானநிலையத்தில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட B-17 என்ற விமானம் தரையிரங்கியுள்ளது.
அப்போது எதிர்பார்தவிதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்கிருந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் விமானத்தில் பலர் படுகாயமடைந்திருக்கலாம் எனவும், ஆனால் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமானநிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை விபத்து நடந்தது உண்மை தான், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் பற்றி எரியும் விமானத்தை அணைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏழை ரிக்ஷா ஓட்டுனருக்கு லொட்டரில் விழுந்த பம்பர் பரிசின் மூலம் ஒரே இரவில் அவர் லட்சாதிபதியாகியுள்ளார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கவுர் தாஸ். ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கவுர் தாஸ் தனது தாய், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவர் ரிக்ஷா ஓட்டி சம்பாதிக்கும் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லாததால் அவரின் தாயும், மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிலிருந்து தாஸ் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது லொட்டரி சீட்டு விற்கும் நிலையம் வந்தது.
அதை நடத்தும் நபர் தாஸிடம் லொட்டரி சீட்டு வாங்கிகொள்ளும்படி கூறினார்.
ஆனால் தன்னிடம் வெறும் 70 ரூபாய் மட்டுமே இருப்பதாக தாஸ் கூறியும் அவர் விடவில்லை, இதையடுத்து ரூ 30 கொடுத்து லொட்டரி சீட்டு வாங்கினார் தாஸ்.
இந்நிலையில் தான் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு ஏதேனும் விழுந்ததா என பார்க்க கடைக்கு சென்ற தாஸுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது முதல் பரிசான ரூ 50 லட்சம் அவருக்கு லொட்டரியில் விழுந்ததை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தாஸ் உடனடியாக வீட்டுக்கு சென்று மனைவியிடம் அதை கூறினார்.
இதையடுத்து நேற்று வங்கியில் சென்று லொட்டரி சீட்டை ஒப்படைத்தார் தாஸ்.
அவர் கூறுகையில், லொட்டரியில் கிடைத்த பணத்தை வைத்து புதிய வீடு கட்டுவேன், தற்போது இருக்கும் சிறிய வீட்டில் எங்கள் ஆறு பேரால் வசிக்க முடியவில்லை.
இதோடு என் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
ஒக்டோபர் 2ம் திகதி காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளிலாவது 7 பேர் வி டுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொ லை வழக்கு தொடர்பில் கு ற்றம்சாட்டுப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 28 ஆண்டுகளாக சி றை த ண்டனை அனுபவித்து வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் தா க்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்து, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறபித்தது.
அதாவது, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, 2018 செப்டம்பர் 9ம் திகதியே தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 7 பேர் விடுதலையை பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இன்று வரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் ம ரண த ண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர் 150வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா? என பேரறிவாளனின் தாய் அற்புத்தம்மாள் ட்விட் செய்துள்ளார்.
ட்விட்டரில் அற்புத்தம்மாள் கணக்கில் அவரை பற்றி குறிப்பில், நான் ஒரு அப்பாவி சிறுவனின் தாய், 28ஆண்டுகளுக்கு முன்பு என்னிடமிருந்து ப றிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 19 வயது. நான் அவருக்கு பின்னால் ஓட ஆரம்பித்தேன், இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பெரு நாட்டில் மலை உச்சியில் இருந்து பயணிகள் பேருந்த க விழ்ந்து விபத்துக்குள்ளானதில் ப லி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Quispicanchi மாகாணத்தில் இவ்விபத்து நிகழ்ந்தள்ளது. அமேசான் மழைக்காடு நகரமான Puerto Maldonado-ல் இருந்து highland நகரமான Cusco-க்கு சென்று கொண்டிருந்த பேருந்து, செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சுமார் 48 பயணிகளுடன் பயணித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விபத்தில் 17 பேர் கொ ல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் ஏன் வாகனத்தை சாலையிலிருந்து இறக்கி 100 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் ஓட்டினார் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதேசமயம், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பா திக்கப்பட்டவர்கள் வி ழுந்து நொ றுங்கிய பேருந்திற்குள் சிக்கி இருப்பதாகவும், பேருந்து கவிழ்ந்த மிகவும் மோசமான பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை வெளியே எடுப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருவில் வேகம், மோசமான சாலை, அதிகாரிகளின் குறைந்தபட்ச மேற்பார்வை காரணமாக கொடிய சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஜூலை மாதம், கனேட் மாகாணத்தில் மலைப்பாதையில் பேருந்து மோ தியதில் 19 பேர் கொ ல்லப்பட்டனர், மேலும் 8 பேர் கா யமடைந்தனர்.
2018 ஆம் ஆண்டில், பெருவில் சாலை விபத்துக்களில் கிட்டத்தட்ட 3,250 பேர் இ றந்தனர், 2017ல் கிட்டத்தட்ட 2,830 ஆக இருந்தது என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மயானத்தில் ச வப்பெட்டியை இறக்கி வைத்த போது குழந்தைக்கு உ யிர் இருப்பது தெரிந்து பெற்றோர் அ திர்ச்சியில் உறைந்தனர். தஞ்சாவூரை சேர்ந்த பாஸ்கரன் – பிரித்தி தம்பதிக்கு கெவின் (1) என்ற மகன் உள்ளான். கெவினுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவனை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அப்போது கெவினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இ றந்துவிட்டான் என கூறினர். இதனால் அ திர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையின் ச டலத்தை எடுத்து கொண்டு போய் இறுதிச்சடங்கு செய்தனர்.
பின்னர் குழந்தையை சுடுகாட்டுக்கு எடுத்து கொண்டு போய் ச வப்பெட்டியில் வைத்த போது கெவினுக்கு அசைவு இருப்பதை பார்த்து அ திர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். பின்னர் கெவினை மீண்டும் அதே மருத்துவமனைக்கு தூக்கி சென்று, குழந்தைக்கு உ யிர் இருக்கு என்னவென்று பாருங்கள் என ப தறியுள்ளனர்.
அப்போது மருத்துவர்கள், இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன்னர் கெவினின் உ யிர் போயுள்ளது என கூற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அ திர்ச்சியடைந்து ஆ வேசமாகிவிட்டனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனை முன்னர் போ ராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 சகோதரர்கள் கொ ல்லப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாளூர் – மண்ணுத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரத்தக்காரா என்ற பகுதியிலேயே இந்த 4 சகோதரர்களும் விபத்தில் சிக்கி கொ ல்லப்பட்டுள்ளனர்.
இங்குள்ள புல்லம்பள்ளம் சந்திப்பில் விபத்துகள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ம ரணமடைந்த குட்டன் என்பவரது 4 மகன்களும் கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று விட்டு, இரவில் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
புல்லம்பள்ளம் சந்திப்பைக் கடந்த போது, லொரி மோதியதில் குட்டனின் மூத்த மகன் சுதாகரன் சம்பவ இ டத்திலேயே ம ரணமடைந்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட விபத்தில், குட்டனின் மற்றொரு மகன் சீனிவாசன் ம ரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த நிலையில், குட்டனின் இன்னொரு மகனான ஆனந்தனும் புல்லம்பள்ளம் சந்திப்பில் இருந்து 300 அடி தொலைவில் பைக் மோ தி இ றந்துள்ளார். ஒரே வீட்டில் 3 பேர் ப லியான பிறகும், குட்டனின் குடும்பத்தினருக்கு விபத்துகளால் ஏற்பட்ட துயரம் நீங்கவில்லை. கடந்த சனிக்கிழமை இரவு குட்டனின் இன்னொரு மகன் உன்னி கிருஷ்ணன் புல்லம்பள்ளம் சந்திப்பில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக் மோதி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.
இவர்கள் 4 பேரும் இரவு நேரத்தில் நடந்த விபத்தில்தான் மரணமடைந்துள்ளனர். 15 மாதங்களுக்குள் ஒரே பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 4 சகோதரர்களும் ம ரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 9ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு த ற்கொ லை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்ட்லகம்மா நதி பாலம் அருகே நேற்றைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அந்த சமயம் பணிக்கு சென்றுகொண்டிருந்த சுப்ப ராஜு என்கிற பொலிஸார், அருகில் சென்று பார்த்துள்ளார்.
அந்த இடத்தில் தேவி என்கிற 15 வயது சிறுமி ஒருவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் மற்றும் அவருடைய பை இருந்துள்ளது. அந்த கடிதத்தில், “நீங்கள் என் சிறந்த நண்பர், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என எழுதியிருந்தார்.
அதனை கைப்பற்றிய சுப்ப ராஜு, உடனடியாக மற்ற பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், ஆற்றில் இறங்கி மூன்று மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர், மாணவியின் ச டலத்தை கைப்பற்றியுள்ளனர். அதனை பி ரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கெகிராவ-மான்கடவல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 09 பேர் கா யமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொரவபதான பிரதேசத்தின் ஒரு ம ரண வீடொன்றிற்காக, கம்பஹாவிலிருந்து சென்றுக்கொண்டிருந்த நபர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி கா யமடைந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கா யமடைந்த நபர்கள் அனுராதபுரம், தம்புள்ளை மற்றும் கெகிராவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புடையன் பாம்பு தீண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தாய் நேற்று சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த சுமன்ராஜ் சுதர்சினி (வயது 28) என்ற இளம் தாயொருவரே உ யிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு சுதர்சினி உணவு பரிமாறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் புடையன் பாம்பு தீண்டியுள்ளது.
பாம்பு தீண்டியதை கண்ட கணவன் உடனடியாக மனைவிக்கு முதலுதவி செய்த பின் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று மாலை உ யிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் இ றப்பு தொடர்பான விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைகப்பட்டுள்ளது. இதேவேளை உ யிரிழந்த பெண்ணின் ஐந்து குழந்தைகளில் ஒரு வயதான குழந்தை ஒன்றும் உள்ளதால் இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நவராத்திரி விரதத்தின் மூன்றாம் நாள் துர்க்கையின் பூஜை வழிபாடுகள் வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் தலைமையில் வவுனியா நகரசபை பொது நூலகத்தில் நேற்று (01.10.2019) சிறப்பாக இடம்பெற்றது.
நவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் 9 இரவு, 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையாகும். இத்திருவிழா மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை மையப்படுத்தி நவராத்திரி பூஜைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகியோருக்கு நவராத்திரி விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இவ் பூஜை வழிபாட்டில் நகரசபை உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி , நகரசபை உறுப்பினர்கள், நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் தற்போது, புகையிரதங்களில் பயணிகள் பயணிக்கும் விதம் பா ரிய அ ச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக புகையிரத ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புகையிரத சேவைகள் பல பா திக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக சில பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதங்களில் பயணிகள் செல்லும் விதம் தற்போது பா ரிய அ ச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
புகையிரத எஞ்சின்களுக்கு மேல் அமர்ந்தவாறு பயணிகள் பயணிக்கும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.