நாளை மறுதினம் அரச விடுமுறையா? அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

நாளை மறுதினம் அரச விடுமுறையா?

எதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் அறிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி அரசாங்க விடுமுறை வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகி உள்ளது.

வவுனியா கோவில்குளத்தில் 108 சிவதாண்டவ திருவுருவ சிற்பங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவிலில் அண்மையில் #பாலஸ்தாபனம் செய்யப்பட்டு #புனருத்தாரண திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் வெளிப்புறத்தில் சிவனுடைய #108 #சிவதாண்டவ #திருவுருவ சிற்பங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைபெறுகின்றது.

ஒவ்வொன்றும் #இரண்டரை அடி உயரமான சிவதாண்டவ சிற்பங்களாக அமையவுள்ளன.
சிற்பமொன்றை அமைப்பதற்கு #ரூபாய் 20,000 (#இருபதாயிரம்) செலவாகுமென மதிப்பீடு செய்யபட்டுள்ளது.
மேற்படி திருப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளமுடியம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
ஆலயம் 024-2222651
அருளகம் 024-2221685
Whats app/Viber : 0094776567827

திருப்பணி வேலைகளுக்கான #வங்கி கணக்கு இலக்கங்கள்

இலங்கை வங்கி வவுனியா -0002364425
கொமர்சியல் வங்கி வவுனியா -161008220

“நம் கடன் பணி செய்து கிடப்பதே”

நிர்வாக சபை

[images type=”carousel” cols=”three” auto_duration=”1000″ auto_slide=”true” lightbox=”true”]
[image link=”241433″ image=”241433″]
[image link=”241432″ image=”241432″]
[image link=”241431″ image=”241431″]
[image link=”241430″ image=”241430″]
[image link=”241429″ image=”241429″]
[image link=”241428″ image=”241428″]
[image link=”241427″ image=”241427″]
[image link=”241426″ image=”241426″]
[image link=”241425″ image=”241425″]
[image link=”241424″ image=”241424″]
[image link=”241423″ image=”241423″]
[image link=”241422″ image=”241422″]
[image link=”241421″ image=”241421″]
[image link=”241420″ image=”241420″]
[image link=”241419″ image=”241419″]
[image link=”241414″ image=”241414″]
[/images]

வவுனியாவில் சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை மத்திய கல்லூரி, மாணிக்கஇலுப்பைக்குளம் ஆரம்ப பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு சர்வதேச சிறுவர் தினமான இன்று ஓமந்தை பொலிசாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் பாடசாலைக்கு மின்விசிறிகள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன்,

மாணிக்கஇலுப்பைக்குளம் ஆரம்ப பாடசாலையில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலையில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வகுப்பறைகளுக்கு மூன்று மின்விசிறிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி சுரேஸ்த சில்வா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓமந்தைப் பகுதியிலுள்ள 15விஷேட தேவைக்குட்பட்ட வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பனவும் இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால் த சில்வா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.எம்.மல்வலகே, வவுனியா வடக்கு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் இறுதியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சிற்றுண்டிகளும் பொலிசாரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கடும் வெள்ளத்திற்கு நடுவே போட்டோஷூட் நடத்திய மாணவி : திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!!

போட்டோஷூட்

பீகார் மாநிலத்தில் கடும் வெள்ளத்திற்கு நடுவே போட்டோஷூட் நடத்திய மாணவியை இணையதளவாசிகள் வி மர்சனம் செய்து வருகின்றனர்.

பீகாரில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அனைவரும் பெரும் பா திப்பிற்குள்ளாகியிருக்கின்றனர்.

வெள்ளத்தில் சி க்கித்த விக்கும் மக்களுக்கு உணவு பொருட்களும் கொண்டு செல்ல முடியாமல் நாளுக்குநாள் நிலைமை மோ சமடைந்து வருகிறது.

வெள்ளம் காரணமாக ஏற்கனவே 29 பேர் உ யிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வரும் மாதங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்திற்கு நடுவே பாட்னாவில் சாலைகள் மற்றும் தெருக்களின் நிலைமைகள் குறித்து கவனத்தை ஈர்க்க, அதிதி சிங் என்கிற மாணவி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் சிலர் தி ட்டினாலும், இதன்மூலம் நிலைமையை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தி பா திக்கப்பட்ட மக்களுக்கு உதவி பெற முடியும் எனவும் பாராட்டி வருகின்றனர்.

இலங்கை பெண்ணை கொ லை செய்ததற்காக பிரித்தானியாவுக்கு நாடு க டத்தப்பட இருக்கும் நபர் : சூ டுபிடிக்கும் வ ழக்கு!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைப்பெண் ஒருவரை கொ லை செய்ததாக கை து செய்யப்பட்டு இந்தியாவில் சி றை யில் இருக்கும் ஒருவர் பிரித்தானியாவுக்கு நா டு க டத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aman Vyas (34) என்ற இந்தியர் 2009ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்ணான Michelle Samaraweera (35) என்பவரை கொ லை செய்ததாக 2011ஆம் ஆண்டு கை து செய்யப்பட்டார். அப்போது Aman Vyas, மாணவர் விசாவில் பிரித்தானியாவில் தங்கி இருந்தார்.

 

2009ஆம் ஆண்டு, மே மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கிழக்கு லண்டனின் Walthamstow என்ற பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் ஒரு இளம்பெண் உ டல் அரை நி ர்வா ணமாக கிடந்ததைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

பொலிசார் வந்து பார்க்கும்போது அந்த பெண் ஏ ற்கனவே உ யிரிழந்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட Michelle Samaraweera என்னும் இளம் விதவைப்பெண் என்பது தெரியவந்தது.

உ டற்கூறு ஆ ய்வில், அவர் வ ன்பு ண ர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப்பின் May 5, 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி Aman Vyas கை து செய்யப்பட்டார். சுமார் பத்து ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இந்த வழக்கு, தற்போது திடீரென சூ டுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Aman Vyas பிரித்தானியாவிற்கு நா டு க டத்தப்படும் அ பாயத்திலிருப்பதாக தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி, புதிதாக ஒரு விடயத்தை போட்டு உ டைத்துள்ளார். அதாவது பிரித்தானியாவிலிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நா டு க டத்துவதற்காக தனது கட்சிக்காரர் Aman Vyas ப லிக்கடா ஆக்கப்பட்டுள்ளார் என்கிறார் அவர்.

அதற்கு அவர் பல வா தங்களை முன்வைக்கிறார். அதாவது Michelle Samaraweera கொ லை செய்யப்பட்டது 2009ஆம் ஆண்டு. வழக்கு வி சாரணை நடந்துகொண்டிருக்கும்போதே 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி சொந்த காரணங்களுக்காக நியூசிலாந்து செல்வதற்கு Aman Vyas விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, லண்டன் பொலிசார் அவருக்கு த டையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

அந்த சான்றிதழில் Aman Vyas எந்த வ ழக்கிலும் சி க்கவில்லை என்றும், அவர்மீது எந்த எ திர்மறையான அறிக்கைகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் நிலையில், 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி DNA ஆ தாரங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் Aman Vyasக்கு எ திராக லண்டன் நீதிமன்றம் ஒன்று கை து வா ரண்ட் பிறப்பித்துள்ளது. பின்னர் இந்தியாவிலுள்ள தனது உறவினர்களுடன் வாழ்வதற்காக இந்தியா திரும்பினார் Aman Vyas.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி டெல்லி நீதிமன்றம் Aman Vyasஐ பிரித்தானியாவுக்கு நா டு க டத்த உத்தரவிட, அவர் கை து செய்யப்பட்டு சி றையில் அடைக்கப்பட்டார்.

தற்போது தி டீரென அவர் பிரித்தானியாவுக்கு நா டு க டத்தப்படலாம் என்ற நிலையில், விஜய் மல்லையாவை நா டு க டத்தும் பி ரச்னையில், தனது கட்சிக்காரர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ப லிக்கடா ஆக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி கு ற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு ஆண்டுகள் முன் அவுஸ்திரேலியாவில் இற க்கிவிடப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் : இன்னும் தீராத சோ கம்!!

இலங்கை தமிழ் குடும்பம்

2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு ஒன்றில் வந்த ஒரு இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று, தங்களை அவுஸ்திரேலியா அகதிகளாக ஏற்றுக்கொள்வதற்காக ஆறு ஆண்டுகளாக காத்திருக்கிறது. 1998ஆம் ஆண்டு தனது குழந்தைகளுடன் இலங்கையிலிருந்து த ப்ப முடிவு செய்த புஷ்பராணி குமரவேல், காடுகளில் சில காலம் ம றைந்து வாழ்ந்தபின், படகு ஒன்றில் இந்தியாவுக்கு த ப்பினார்.

குழந்தை அ ழுது, அதனால் தாங்கள் சி க்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, குழந்தைக்கு பாலூட்டியபடியே வந்ததை நினைவுகூறுகிறார் தற்போது 52 வயதாகும் புஷ்பராணி. 15 ஆண்டுகள் இந்தியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் வாழ்ந்த புஷ்பராணி குடும்பம், பின்னர் தங்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறிய ம க்களை க டத்தும் ஒருவரின் பேச்சை நம்பி அவுஸ்திரேலியா எங்கிருக்கிறது என்பதே தெரியாமல் புறப்பட்டது.

அந்த நபர், படகில் அவர்களை இந்தோனேஷியாவுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இந்தோனேஷிய ரா ணுவம் அவர்களைப் பி டித்து அகதிகள் முகாம் ஒன்றில் அடைத்தது.

என்றாலும், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. மீண்டும் ம க்களை க டத்திக்கொண்டு செல்லும் ஒருவர் அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயலும்போது பொலிசாரைக் கண்டு ப யந்து காடு ஒன்றிற்குள் நுழைந்துள்ளது புஷ்பராணி குடும்பம்.

ஒரே ஈரம், குளிர், சேறு, குழந்தைகளுக்கு உடல் ந லக்குறைவு, குடிக்க இலைகளிலிருந்து வடியும் நீர் என கடும் போ ராட்டத்துக்குப்பின் மீண்டும் மக்களை கடத்துவோர் புஷ்பராணி குடும்பத்தினரைக் கண்டுபிடித்து படகு ஒன்றில் ஏற்றிவிட, படகில் பயணித்த அவர்கள் அவுஸ்திரேலிய க டற்படையிடம் சிக்கியிருக்கிறார்கள்.

அவர்களை கை து செய்த க டற்படையினர் அவுஸ்திரேலியா நாட்டுக்குள் கொண்டு செல்வார்கள் என்று பார்த்தால், எந்த இந்தோனேஷியாவிலிருந்து த ப்பினார்களோ அதே இந்தோனேஷிய தலைநகருக்கு அருகிலிருக்கும் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அவர்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு இடமாக பந்தாடப்பட்ட புஷ்பராணி குடும்பத்தினர், தற்போது கிழக்கு விக்டோரியாவிலிருக்கும் Sale என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.

கா வலில் நீண்ட காலம் செலவிட்டோருக்காக வழங்கப்படும் bridging visa என்னும் விசாவில் வாழ்ந்துவரும் புஷ்பராணி குடும்பத்தினர், இனியாவது நிம்மதியாக ஒரு இடத்தில் குடியமர்ந்து வாழமுடியுமா என்ற ஏக்கத்துடன் அவுஸ்திரேலியாவின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்து காத்திருக்கிறார்கள்.

ஆனால் bridging விசாக்களை நம்பி வாழும் வாழ்க்கை பரமபதம் (snakes and ladders) விளையாட்டு போல, என்று கூறும் Gippsland அகதிகள் சட்டத்தரணியான Laurie Stewart, bridging விசாக்கள் விளையாட்டில் பாம்பு போல, சறுக்கிவிடும் என்கிறார்.

என்னிடம் பேசும் எனது கட்சிக்காரர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் நிலையற்ற தன்மைதான் தங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

தங்களால் எந்த திட்டமும் போட முடியாது என்கிறார்கள் அவர்கள், பிள்ளைகளுக்கு பள்ளிச் சீருடை புதிதாக வாங்க வேண்டுமா, ஏனென்றால் அடுத்த பள்ளியாண்டும் இதே ஊரில்தான் இருப்போமா என்பதே தெரியாத நிலையில் எப்படி சீருடை வாங்குவது? ஓரிடத்தில் ஓராண்டுக்கு வாழ்வோமா அல்லது ஆறு மாதங்கள்தானா என எதுவுமே உறுதியாக தெரியாத நிலையில் அடுத்து என்ன செய்வது என திட்டமிட முடியாத நிலையில் அவர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார் Stewart.

பு லம்பெயர்தல் துறை எல்லாரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறது, நடத்த முயல்கிறது, ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை என்கிறார் Stewart.

வவுனியா பகுதியில் மீண்டும் இ ராணுவ சோ தனைச் சாவடி!!

வவுனியா – மன்னார் வீதி, பம்பைமடு பகுதியில் இ ராணுவத்தினரால் இன்று காலை சோ தனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் இ டம்பெற்ற தொடர் கு ண்டுவெ டிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பா துகாப்பு ப லப்படுத்தப்பட்டு பின்னர் சோ தனைச் சாவடி அகற்றப்பட்டிருந்தது.

பம்பைமடு பகுதியில் மு காம் அமைத்து நிலை கொண்டுள்ள இ ராணுவத்தினரால் குறித்த சோ தனை சாவடி தற்போது அமைக்கபட்டுள்ளதுடன், அவ்வீதியால் பயணிக்கும் அநேகமான பயணிகள் மற்றும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியதுடன் விசனமும் தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை தேசிய பா துகாப்பு தொடர்பான விடயமாதலால் ஒளிப்பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என இ ராணுவத்தினர் இதன்போது தெரிவித்திருந்ததுடன், வேறு விடயங்களை கூறவும் மறுத்து விட்டனர்.

-தமிழ்வின்-

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் இலத்திரனியல் நூலகப்பிரிவு திறந்து வைப்பு!!

இலத்திரனியல் நூலகப்பிரிவு

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் இலத்திரனியல் நூலகப்பிரிவு இன்று (01.10.2019) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இலத்திரனியல் நூலகப்பிரிவினை நகரசபை தவிசாளர், உபதவிசாளர், நகரசபை உறுப்பினர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.

இலத்திரனியல் நூலகப்பிரிவிற்கு நகரசபையின் ரூபா 8,50,000.00 நிதியொதுக்கிட்டில் கணணிகள் மற்றும் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தனது தனிப்பட்ட நிதியில் கணிணியொன்றும் கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.

வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நகரசபை தவிசாளர் இ.கௌதமன், நகரசபை உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி, நகரசபை உறுப்பினர்கள், நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்ச்சைக்குரிய அமெரிக்க விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம்!!

அமெரிக்க விமானம்

ச ர்ச்சைக்குரிய அமெரிக்காவின் Western Global Airlines நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பா துகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் விமான நிறுவனமாக இந்த விமான நிறுவனம் பெயரிப்பட்டுள்ளது.

பெல்ஜியம் லீஜ் நகரிலிருந்து கடந்த 28 ஆம் திகதி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது. Western Global அமெரிக்க விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக முன்னிற்கும் இருவரில் ஒருவர் அமெரிக்காவின் பு லனாய்வுப் பிரிவான CIA அமைப்பில் பணியாற்றிய முக்கியஸ்தராவார்.

இந்த விமானம் எதற்காக வந்துள்ளது? விமானத்தில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்ன? இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக நாட்டின் பல நிறுவனங்களை தொடர்புகொண்டு வினவியபோதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் Western Global நிறுவனத்தின் விமானங்கள் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பங்களில் இலங்கையில் சேவை வழங்குநர்களின் தேவைகளுக்காகவே வந்ததாக குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும், இந்த நிறுவனம் அமெரிக்காவின் பொருட்கள் விநியோக சேவைக்காக அனுமதி பெற்றுள்ள ஒரு சிவில் விமான சேவையாகும்.

சர்வதேச ரீதியாக வைரலாகும் இலங்கையர்கள் : பலரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்!!

கவனத்தை ஈர்த்த புகைப்படம்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு மகத்தான அதிதீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு, ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு கொடுக்கும் பாதுகாப்புக்கு சமமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இதற்காக இலங்கை அணி வீரர்கள் அழைத்து வரும் போது வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

வீரர்களை சுற்றிவளைத்து பாதுகாப்பாக அழைத்து செல்லும் விதம் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீ விரவாதிகள் தா க்குதல் நடத்தியிருந்தனர். அதன் பின்னர் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர் போ ராட்டம் : நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி!!

தொடர் போ ராட்டம்

சம்பள அதிகரிப்பு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டு வரும் ரயில் தொழிற்சங்கங்களின் போ ராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தொழிற்சங்கங்கள் நேற்று மாலை நடத்திய பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்ததால், பணிப்பகிஷ்கரிப்பு போ ராட்டம் இன்றும் நடைபெறும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகளவான மக்கள் ரயில் ஊடாக தமது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்நிலையில் தொடர் பகிஸ்கரிப்பு காரணமாக மக்கள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள நியாயமற்ற பகிஷ்கரிப்பிற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்த அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு அரசியல் ரீதியில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிடப்பட்டதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் அதனை நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 25ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாள்வெட்டு தா க்குதலுக்கு இலக்கானவர் 3 வாரங்களின் பின் உ யிரிழப்பு!!

கோண்டாவில் உப்புமடச் சந்தியில்

வாள்வெட்டுக் கும்பலின் தா க்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உ யிரிழந்துள்ளார்.

எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என உ யிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது 47) என்பவரே உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த செம்டெம்பர் மாதம் ஆறாம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தா க்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதனால் தலையில் படுகாயமடைந்த இரும்பக உரிமையாளர், நேற்று வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பில் உ யிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில், சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் உரிமையாளரைத் தா க்க கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர். எனினும் உரிமையாளர் உ யிரிழந்தவுடன் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கோர விபத்து : இலங்கை இளைஞன் பரிதாபமாக ப லி!!

கோர விபத்து

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான லொரென்சோ ஜூரியன்ஸ் என்ற இளைஞனே உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொரென்சோ ஜூரியன்ஸ் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த இலங்கை இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

லொரென்சோ ஜுரியன்ஸ் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று குடியேறியுள்ளார் என தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் Hampton Park மேல்நிலைக் கல்லூரியில் அவர் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். அன்பான நண்பனை இழந்து விட்டோம் என பேஸ்புக்கில் அவரது நண்பர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா நகரில் மும்மத கடவுள்களும் ஓரே இடத்தில் : முச்சக்கர வண்டி சாரதிகளின் முன்னுதாரணம்!!

மும்மத கடவுள்களும் ஓரே இடத்தில்

வவுனியா புகையிரத நிலையம் முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்றினை முச்சக்கர வண்டி சாரதிகள் நேற்று (2019.09. 30) வைப்பு செய்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக சிறிய கட்டடம் ஒன்று அமைத்து அதில் பிள்ளையார், மாதாவின் சிலை, புத்தர் சிலை ஆகிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழிபாட்டுக்காக குறித்த வழிபாட்டு தலத்தை மத நல்லிணக்கம் என்னும் பெயரில் அமைத்துள்ளனர்.

வவுனியாவில் தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமைக்காகவும் புகையிரத நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் வழிபாட்டுக்காகவும், தமது வழிபாட்டுக்காகவும் விநாயகர் சிலை, மாதா சிலை, புத்தர் சிலை உள்ளிட்ட சிலைகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புகையிரத முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகளின் இச்செயலை வவுனியா முழுவதும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!!

வி ழிப்புணர்வு பே ரணி

வவுனியாவில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் “பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு” எனும் தொனிப்பொருளில் இன்று (01.10.2019) விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணி ஒன்று இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்களின் துவிச்சரக்கரவண்டி பேரணியினை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பாடசாலை மாணவர்களின் துவிச்சரக்கரவண்டி பேரணியானது ஏ9 வீதியுடாக சென்று மணிக்கூட்டு கோபுரம் வழியாக திரும்பி கந்தசுவாமி கோவில் வீதியூடாக வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் சென்று அங்கிருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு,

ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு அங்கிருந்து பாடசாலை மாணவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் ஏ9 வீதிக்கு சென்று மன்னார் வீதியூடாக வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் மன்னார் வீதியூடாக பயணித்து வவுனியா பட்டானீச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு சென்று அங்கிருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு,

மன்னார் வீதியூடாக பயணித்து பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு சென்று அங்கிருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு அங்கிருந்து சென்று மாணவர்களை அழைத்துக்கொண்டு ஏ9 வீதியூடாக மாணவர்களின் துவிச்சரக்கரவண்டி பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் ஜ.எம்.ஹனிபா அவர்களின் சிறுவர் தின ஆசியுரை இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் திறன் விருத்தி செயலமர்வும் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயகெனடி தலைமையில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி பேரணியில் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நா.கமலதாசன், ஓமேகா நிறுவனத்தின் அதிகாரிகள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2 வயது மகனை காப்பாற்ற உ யிரை பணயம் வைத்து போ ராடிய தாய்!!

குருணாகலில் 2 வயதான மகனை காப்பாற்ற உ யிரை பணயம் வைத்து போ ராடிய தாய் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பொல்பித்திகம பிரதேசத்தில் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து உ யிருக்கு போ ராடிய தனது மகனை காப்பாற்ற, தாயொருவர் கிணற்றில் குதித்துள்ளார்.

இரேஷா தமயந்தி என்ற பெண்ணே இந்த வீர செயலை செய்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடும் வரட்சி காரணமாக கிணற்றின் நீர் வற்றிப் போயுள்ளது. இதனால் சற்று தூரத்தில் நீர் உள்ள ஆழமான கிணற்றில் தாய் தனது இரண்டு மகன்களுடன் குளிக்க சென்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

முதலில் மகன்கள் இருவரும் குளித்த பின்னர் தாய் குளிக்க சென்றார். திடீரென மூத்த மகனின் கூச்சல் சத்தம் கேட்டு சென்ற போது, சிறிய மகன் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக தாய் கிணற்றில் குதித்து மகனை காப்பாற்றியுள்ளார். வேகமாக கிணற்றில் குதித்தமையினால் தாயின் கால்கள் உடைந்து நடக்க முடியாமல் படுக்கையில் முடங்கியுள்ளார்.

இந்த செய்தியை கேட்டு அங்கு சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாபஹுவ தொகுதி அமைப்பாளர் தாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், தேவையான உதவிகளை பெற்று தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.