யாழ்ப்பாணத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் நேர்ந்துள்ள வி பரீதம்!!

யாழ்ப்பாணம் பிரதான வீதியின் மடத்தடி சந்திக்கு அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நபரொருவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்சைக்கிள் திடீரென தீ பற்றிய நிலையில் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைக்கும் கராஜ் பகுதியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையினர் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சத்திரசிகிச்சை!!

கட்டாக்காலி நாய்களின்..

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் வவுனியா நகரசபையினருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று (30.09.2019) வவுனியா நகரப்பகுதியில் திரியும் கட்டாக்காலி நாய்களை வாகனம் ஒன்றின் மூலம் ஏற்றி வவுனியா நகரசபையின் வாகனத்தரிப்பிடத்தில் நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் சிவராமலிங்கம் கிரிதரனின் மேற்பார்வையின் கீழ் இச் செயற்றிட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது இருபதுக்கு மேற்பட்ட கட்டாக்காலி நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வித்தியா படுகொ லை வழக்கின் குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொ லை வழக்கில் தூ க்குத் த ண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும், மற்றொரு நபருக்கும் இன்றையதினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறிதொரு வழக்கிற்காக தூ க்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொ லை செய்தமைக்காகவே இருவருக்கும் இன்று யாழ். மேல் நீதிமன்றம் தூ க்குத்தண்டனை வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தூ க்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கு ற்றவாளிகள் இருவரும் இணைந்து சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையில் இருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் க டூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல்நீதிமன்றம்,

இருவரும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தவும் அதனைச் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டது.

யாழ். தீவகம் புங்குடுதீவில் 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவர் கொ லை செய்யப்பட்டார். ம து அருந்துவதற்காக பிற்பகல் சென்றவர் மாலை ச டலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் செர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2011ஆம் ஆண்டு சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொ லை செய்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை 296ஆம் பிரிவின் கீழ் முதலாவது குற்றச்சாட்டும் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையிலிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை கொ ள்ளையடித்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை 380ஆம் பிரிவின் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் தொடர் விளக்கமாக கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார். முதலாவது சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி பி.அபிதனும் இரண்டாவது சந்தேகநபர சார்பில் விஸ்வலிங்கம் திருக்குமரனும் முன்னிலையாகினர்.

இந்த நிலையில் வழக்கில் எதிரிகள் இருவரையும் கு ற்றவாளிகளாகக் கண்டு தீர்ப்பளித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அவர்கள் இருவருக்கும் தூ க்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொ லை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு : கண்ணீருடன் உறவினர்கள்!!

வவுனியாவில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பா லியல் வ ல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொ லை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவியின் (வயது 14) வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (30.09) வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவிக்கும் போது, கடந்த 2016 ஆம் ஆண்டு பா லியல் வ ன்பு ணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொ லை செய்யப்பட்டுள்ள ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டு செல்லப்படுகின்றதே தவிர, வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் காலதாமதம் ஏற்படுகின்றதே தவிர கு ற்றவாளிகள் த ண்டிக்கப்படவில்லை. இன்று (30.09) இடம்பெற்ற விசாரணைகளின் போதும் சட்டமா அதிபரிடம் இருந்து குற்றப்பத்திரம் வராமையால் வழக்கு ஜனவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வழக்கு விசாரணைகளின் போதும் குற்றப்பத்திரத்தை விரைவில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றங்களும் எற்படவில்லை.

இந்நிலையில் கடந்த 3 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

பா லியல் வ ன்பு ணர்வு செய்யப்பட்டு படுகொ லை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை குற்றவாளி சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கின்றார் என்று கண்ணீருடன் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவி ஹரிஸ்ணவி சார்பில் மனிதவுரிமை அபிவிருத்திக்கான நிலையத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அனிஸ் மன்றில் முன்னிலையாகி வழக்கை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வறட்சியை போக்க பொதுமக்கள் செய்த செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

பொதுமக்கள் செய்த செயல்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குறிசுட்டகுளம் இன்று பொதுமக்களின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டது.

வறட்சியை அதிகளவில் எதிர்நோக்கி கொண்டிருக்கும் இக் கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தின் வறட்சியை போக்கும் நோக்கோடு கிராம சேவையாளர் இராதாகிருஸ்ணன் வழிகாட்டலின் கீழ் கிராம அமைப்புக்கள், பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது முழு முயற்சியோடு இச் செயற்பாட்டினை வெற்றிகரமாக செயற்படுத்தி குளத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது கிராம மக்களின் உதவியினால் குறிசுட்டகுளம் நீர் தேக்கி வைக்குமளவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இக்குளம் பல வருடங்களாக அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினால் புனரமைக்கப்படாமலும் பாவனைக்குதவாமலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம்!!

போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (30.09.2019) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 3 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் மூன்று (03)சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் இருபத்தைந்து (25) சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம் , தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நான்கு நாட்களாக மாத்தறை செல்ல முடியாது தரித்து நிற்கும் ரஜட்ட ரஜனி!!

ரஜட்ட ரஜனி

நாடாளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் கடந்த 26.09.2019 தொடக்கம் இன்று வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புகையிரத சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதுடன், இராணுவத்தினர், பொலிசார் புகையிரத நிலையத்தில் பா துகாப்பு க டமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தினசரி அதிகாலை 3.35 இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி புகையிரதம் கடந்த நான்கு நாட்களாக (26.09.2019 – 30.09.2019) வவுனியாவிலேயே தரித்து நிற்கின்றது.

சம்பள மு ரண்பாடுகள், கடந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தாமை உட்பட பல்வேறு பி ரச்சனைகளை முன்னிறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா புகையிரத நிலைய அதிபர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

வவுனியாவில் கடும் பனிமூட்டம் : இயல்புநிலை பாதிப்பு!!

கடும் பனிமூட்டம்

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

இன்று அதிகாலையிலிருந்து வவுனியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்தது.

இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், அரச ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

கடலுக்குள் சென்ற நபருக்கு தேடி வந்த 50 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் : ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?

அயர்லாந்தில் சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பிலான டுனா மீன் பிடிபட்ட போது, அதை மீண்டும் கடலுக்குள் விட்ட நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டேவ் எட்வர்ட்ஸ் தலைமையிலான குழு, அட்லாண்டிக் கடலில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின், குறிப்பான மீன் வகைகளை உலகிற்கு காட்டவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கேட்ச் அண்ட் ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் இந்த நிகழ்ச்சியை, வரும் அக்டோபர் 15ஆம் திகதி வரை நடத்தவுள்ளனர். இதற்காக, அயர்லாந்து கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களது வலையில் பெரிய டுனா மீன் ஒன்று சிக்கியது. இதன் எடை 270 கிலோ ஆகும்.

இந்தாண்டில் பிடிபட்ட அதிக எடை கொண்ட மீன் இதுவாகும், அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 23 கோடி ரூபாய் ஆகும். ஆனால் டேவ் எட்வர்ட்ஸ் தலைமையிலான குழு, இந்த டுனா மீனை மீண்டும் கடலில் விட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வை ரலாகி வருவதால், இணையவாசிகள் பலரும் இப்படி தேடி வந்த அதிர்ஷ்டத்தை விட்டுவிட்டார் எனவும், ஒரு சிலர் அவரை பாராட்டியும் வருகின்றனர்.

இலங்கையை பெருமைபடுத்தி வீட்டீர்கள் தர்ஷன் : மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது : வாழ்த்திய நடிகைகள்!!

தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்ட தர்ஷன் இலங்கையை பெருமைபடுத்தி விட்டதாக பிரபல நடிகை ஆர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் 15 பிரபலங்கள் கலந்து கொள்ளும் 100 நாட்கள் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டிகளுக்கு நடுவே, வைல்ட் கார்ட் போட்டியாளராக சிலர் வருவர்.

இந்நிலையில் நேற்று இந்நிகழ்ச்சி 99வது நாளை எட்டியுள்ள நிலையில், சிறந்த போட்டியாளராக கருதப்பட்ட தர்ஷன் திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

இது பார்வையாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சிறந்த போட்டியாளர், மக்களால் விரும்பபடுபவர், பிக்பாஸ் விளையாட்டை மிகவும் அற்புதமாக விளையாடியவர் எப்படி வெளியேற முடியும் என்ற ரசிகர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான ஆர்த்தி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்…..மக்களால் போற்றப்படுபவர்கள் #BiggBossTamil ஆல் eliminate செய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சீரியல் நடிகையான நீலமனி நீங்கள் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர், உங்களுக்கான மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு காதலனை பார்க்க சென்ற இளம் பெண் எடுத்த முடிவு : பெற்றோருக்கு காத்திருந்த அ திர்ச்சி தகவல்!!

இளம் பெண்

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலனை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்ற நிலையில், அவர் எடுத்த முடிவுவைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் Ciyani Benny. இவர் டெல்லியில் இருக்கும் Jesus and Mary College-ல் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய இவர், அதன் பின் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர் மகள் கா ணாமல் போய்விட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பின் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்க கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் விமானநிலையத்தில் இருக்கும் சிசிடிவி கமெராவை பார்த்த போது, அவர் விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தன்னுடைய காதலனை பார்ப்பதற்காக சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதோடு அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். கிறிஸ்டியனான இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதைக் கண்டு பெற்றோர் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட அவர், அபுதாபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எனக்கு இஸ்லாம் மதம் பிடித்திருக்கிறது, நான்காவே எனது விருப்பத்தின் பேரில் இதை செய்தேன், காதலுக்காகவே(காதலர் இஸ்லாமியர் கேரளாவை சேர்ந்தவர்) என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

மாணவிக்கும் 18 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால், அவர் தனாக எந்த முடிவும் எடுக்க உரிமை உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி Ciyani Benny-யின் அறையை பொலிசார் சோதித்து பார்த்த போது, அங்கு நிறைய இஸ்லாம் புக்குகள் இருந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பூட்டிய ஹோட்டல் அறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ச டலமாக மீட்பு!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஹோட்டல் அறையில் இருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில், அபிஷேக் சக்சேனா (44) என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் புதன்கிழமை அறை எடுத்து தங்கியுள்ளார்.

காலையில் விடிந்து நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து யாரும் உணவு சாப்பிட வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளிருந்த நான்கு பேருமே வாயில் நுரைதள்ளி ச டலமாக இ றந்து கிடந்துள்ளனர். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நான்கு பேரின் உ டலைகளையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அபிஷேக் சமீபத்தில் தன்னுடைய வேலையை இழந்துள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவருடைய மனைவி ப்ரீத்தி குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார்.

இந்த நிலையில் ஆன்லைனில் சோடியம் நைட்ரேட் ஆர்டர் செய்த தம்பதியினர், தங்களுடைய 14 வயது இரட்டையர்களாக மகன் அத்வைத் மற்றும் மகள் அனன்யா ஆகியோருக்கு வி ஷம் கொடுத்துவிட்டு த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகன் பிறந்தநாளில் தமிழ் தம்பதியர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

நெகிழ்ச்சி செயல்

தமிழகத்தில் தன்னுடைய மகனின் பிறந்தநாளில் பெற்றோர் ஆயிரம் மரக்கன்றுகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சு மாவட்டத்தின், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பளையகுஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். புகைப்பட கலைஞரான இவருக்கு நர்மதா என்ற மனைவி உள்ளார். நர்மதா பல்லகச்சேரி அரசு பட்டதாரி ஆசிரியை.

இந்நிலையில், இவர்கள் இருவரும் தனது பிள்ளையின் பிறந்தநாள் விழா கொண்டாட பணத்தை தேவையற்ற முறையில் செலவு செய்வதை விட மரக்கன்றுகள் நடலாம் என யோசித்துள்ளனர்.

இதனால் இருவரும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரிடமும் சந்தித்து கிராமத்தில் உள்ள பொது இடங்களில் வைக்க அனுமதி கேட்க, கிராமமே ஒன்றுகூடி இந்த மகிழ்ச்சியான விழாவை கொண்டாடுங்கள் என சந்தோஷமான செய்தியை சொன்னவுடன் அடுத்த நிமிடமே மரக்கன்றுகளுக்கு முன்பணம் கொடுத்து அதற்குண்டான ஏற்பாடுகளை வெங்கடேசன் செய்ய ஆரம்பித்தார்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாளை சுமார் 10 மணி அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுடன் அவருடைய மகன் ஆருத்ரனின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், பலரும் இந்த தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

60 பந்தில் சதம் : 6 சிக்சர்கள் விளாசல் : மி ரட்டிய இலங்கை வீராங்கனை!!

சாமரி அத்தபத்து

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், இலங்கை வீராங்கனை சாமரி அத்தபத்து 66 பந்துகளில் 113 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.அவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் மகளிர் டி20 போட்டி, சிட்னியின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில், தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி 21 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த லன்னிங் ஒரு ரன்னில் அவுட் ஆக, பின் களமிறங்கிய கார்ட்னர் மற்றொரு தொடக்க வீராங்கனை பெத் மூனியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

பவுண்டரிகளாக விளாசிய மூனி, 61 பந்துகளில் 113 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். கார்ட்னர் 27 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.

எனினும், தொடக்க வீராங்கனை சமரி அதப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவர்களின் பந்துவீச்சை சிதறடித்த சமரி, 60 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 161 ஆக உயர்ந்தபோது சமரி அதப்பட்டு 66 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்கு பின்னால் வந்த வீராங்கனைகள் சொதப்பியதால், இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

வெளிநாடு ஒன்றில் இலங்கை குடும்பத்தின் பரிதாப நிலை : தாயையும் பிள்ளைகளையும் காப்பாற்றிய மக்கள்!!

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கடன் சுமையால் பல வருடங்கள் அறை ஒன்றுக்குள் முடங்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு விtமோசனம் கிடைத்துள்ளது.

டுபாயில் கடன் சுமையினால் அறை ஒன்றுக்குள் இருந்து வெளியேற முடியாமல் முடங்கிய இலங்கை குடும்பத்தினர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட் மக்களின் தாராள மனப்பான்மையினால் இந்த குடும்பத்திற்கு செய்தே உதவியே அவர்கள் நாடு திரும்ப காரணம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி இஷாரா விஜேதுங்க மற்றும் அவரது இரண்டு மகன்களும் மீண்டும் இலங்கை வந்துள்ளனர்.

இலங்கை குடும்பத்தின் டுபாய் விசா காலாவதி மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஒருபோதும் பாடசாலைக்கு செல்லாத இரண்டு மகன்களுக்கு இப்போது இலங்கையில் உள்ள ஒரு பாடசாலையில் இணைக்கப்படவுள்ளனர்.

“எங்களுக்கு போதுமான உதவி செய்த மக்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என தெரியவில்லை. என் மனைவியும் பிள்ளைகளும் நாட்டுக்கு திரும்பிச் செல்வதைப் பார்ப்பதற்கு நிம்மதியாக உள்ளது” என இஷாரா விஜேதுங்கவின் கணவர் Mohmmad Fehrat Sinkaya Abbas தெரிவித்துள்ளார்.

இன்னும் சில கடன்கள் தீர்க்க உள்ளமையினால் அதனை தீர்த்த பின்னர் கணவனும் விரைவில் இலங்கையிலுள்ள அவரது குடும்பத்தில் சேர வாய்ப்புள்ளதென கூறப்படுகின்றது.

Mohmmad Fehrat Sinkaya Abbas, 2008ஆம் ஆண்டில் இருந்து டுபாய் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்த நிலையில் 2016ஆம் ஆண்டு அவர் தனது தொழிலை இழந்துள்ளார்.

அவர் தனது மனைவியுடன் இணைந்து பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களால் இலாபத்தினை பெற முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் போயுள்ளமையினால் இலங்கைக்கு செல்ல அவர்களுக்கு எமீர் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இவர்கள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகிய நிலையில், இலங்கை உதவி நலச் சங்கம் மற்றும் அந்த நாட்டு மக்களின் உதவியுடன் அவர்களது பாரிய கடன் சுமை தீர்க்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயம் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

தேங்காய்கள் மாயம்

தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயமாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐயங்கேணியைச் சேர்ந்த சேகுமுஹம்மது செய்னம்பு (வயது 60) என்பவரால் இன்றைய தினம் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது முறைப்பாட்டில்,

ஏறாவூர் 3ஆம் குறிச்சியிலுள்ள எனது சகோதரனின் வீட்டையும், வீட்டு வளவிலுள்ள பயன்தரும் மரங்களையும் நானே பராமரித்து வருகின்றேன். அங்குள்ள 7 தென்னை மரங்கள் அதிகளவான தேங்காய்களுடன் காணப்பட்டன.

ஆனால் சனிக்கிழமை நான் வழமை போல் தென்னை மரங்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தபோது தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயமாகியுள்ளதை அவதானித்தேன்.

எனது பராமரிப்பிலிருந்த தேங்காய்கள் திருடப்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது. எனவே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரிடமிருந்து தகுந்த நஷ்டஈட்டை பெற்றுத் தர வேண்டும் என்பதுடன் சந்தேகநபரை பொலிஸார் எச்சரிக்கவும் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.