மலம் கழித்ததற்காக கொ ல்லப்பட்ட சி றுமிக்கு நடந்த பா லியல் து ன்புறுத்தல் : நாட்டை உலுக்கிய சம்பவத்தில் அ திரடி திருப்பம்!!

மலம் கழித்ததற்காக..

இந்தியாவில் பொதுவெளியில் மலம் கழித்ததற்காக அ டித்து கொ ல்லப்பட்ட 12 வயது சி றுமிக்கு பா லியல் து ன்புறு த்தல் நடைபெற்றதாக கு ற்றஞ்சாட்டப்பட்டுள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்த ரோஷானி (12) என்ற சிறுமியும் அவினாஷ் (10) என்ற சிறுவனும் சில தினங்களுக்கு முன்னர் கிராம பஞ்சாயத்துக்கு அலுவலகத்துக்கு அருகில் மலம் கழித்துள்ளனர்.

அதனால், அவர்கள் இருவரையும் ஒரு கு ம்பல் சேர்ந்து க டுமையாகத் தா க்கியது. ம யங்கி வி ழுந்த அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு உ யிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட ராமேஸ்வர், ஹகிம் யாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொ லை செய்யப்பட்ட ரோஷானியின் உறவினர்கள், சிறுமி கொ ல்லப்படுவதற்கு முன்னர் பா லியல் து ன்புறு த்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று கு ற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பேசிய சிறுமியின் அண்ணன், சி றுமி தா க்கப்பட்ட இடத்துக்கு நான் சென்றபோது, சிறுமியின் ஆ டைகள் கி ழிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.

அவளுடைய பேண்ட்டின் (கீழாடை) கயிறு அவிழ்க்கப்பட்டு இருந்தது. மலம் கழித்ததற்காக மட்டும் சிறுமி தா க்கப்படவில்லை. அவளுக்கு பா லியல் து ன்புறுத்தலும் நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சிறுமியின் அண்ணி, ஒரு மாதத்துக்கு முன்னர், ரோஷானி அழுது கொண்டே என்னிடம் வந்து ஹகிம் யாதவ் பா லியல் வ ன்கொ டுமை செய்ய முயற்சி செய்ததோடு இதை வெளியில் சொன்னால் கொ லை செய்துவிடுவேன் என்றும் மி ரட்டியதாக தெரிவித்தாள். நான் தான் பிரச்னையாகிவிடும் என்று எனது கணவரிடம் கூறவில்லை என்று தெரிவித்தார்.

பொலிசார் கூறுகையில் பா லியல் வ ன்முறை செய்ததாக இதுவரையில் புகார் வரவில்லை. ஆனால், அப்படி நடந்திருந்தால் அது விசாரணையில் தெரிந்துவிடும் என கூறியுள்ளனர்.

மா யமான கணவனை 36 வருடங்களுக்கு பின் முதியோர் இல்லத்தில் சந்தித்த மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!

வேலை தேடி சென்ற போது மா யமான கணவனை, 36 வருடங்களுக்கு பின்னர் அவருடைய மனைவி சந்தித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் 90 வயதான சைடு என்பவர், கேரளா மாநிலம் திருச்சூர் கொடுங்கல்லூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கவனிப்பாளரான அப்துல் கரீம் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அறையில் இருந்து வெளியில் வந்த ஒரு பலவீனமான வயதான பெண் பெருமூச்சுடன் சைடுவைக் கண்டதும் உறைந்துபோய் நின்றிருக்கிறார்.

அதேசமயம் சைடுவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இருவரின் முக வெளிப்பாடுகளைப் பார்த்த கரீம், ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்களா என்று கேட்டார்.

அப்போது அந்த பெண், “எனக்கு அவரை தெரியும், அவர் என் கணவர்! ” என உணர்ச்சியுடன் கூற, அதற்கு அவருடைய கணவர் சைடு,“ நான் அவளை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன்! ” என கூறியுள்ளார்.

இதுகுறித்து கரீம் கூறுகையில், சுபத்ராவிற்கு சிறுவயதிலே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய கணவர் உ யிரிழந்துவிட்டார். அதன்பிறகு அவர் தந்தையின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ற தந்தையின் நண்பரான சைடுவை சுபத்ராவிற்கு மிகவும் பிடித்துள்ளது. இதுபற்றி தந்தையிடம் பேசியபோது, திருமணத்திற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் சாதி மறுப்பு முறையில் பதிவு திருமணம் செய்துகொண்டு ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். 54 வயதில், சுபத்ராவின் குழந்தைகள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்த பின்னர், ஒரு வேலை தேடி சைடு வடஇந்தியாவிற்கு சென்றுள்ளார்.

அங்கே கா ணாமல் போன அவரால் வீடு திரும்புவதற்கோ, யாரையும் தொடர்பு கொள்வதற்கோ முடியவில்லை. சைடுவிற்கு வேறு எந்த உறவினர்களும் இல்லாத காரணத்தாலும், தொலைபேசி இணைப்புகளும் இல்லாததால் இருவரும் அப்போதே பிரிந்துவிட்டனர்.

அந்த நேரத்தில் சுபத்ராவின் இரண்டு குழந்தைகளும் இ றந்துவிட்டதால், சிறு வணிக நிறுவனம் ஒன்றில் தங்கி இறால் விற்கும் வேலை செய்துவந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பின்னர் கோவில் மைதானமே வாழ்க்கை என இருந்தவர் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து தான் பொலிஸார் அவரை வெளிச்சம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுள்ளனர்.

அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் தான் சைடு, அப்பகுதியை வந்தடைந்து பல பகுதிகளிலும் தன்னுடைய மனைவியை தேடி திரிந்துள்ளார்.

கடை வாசல்களில் அடிக்கடி உறங்குவதை கண்ட பொலிஸார் அவரையும் அதே முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுள்ளனர்.

அப்போது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது என கரீம் கூறியுள்ளார். 88 வயதான சுபத்ராவும் சைடுவும் அந்த முதியோர் இல்லத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக கூறியுள்ளனர்.

நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு திரும்பிய மாணவர்கள் : நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த வி பரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், அதிவேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகினர்.

வண்டலூர் அருகே இயங்கிவரும் கல்லூரி ஒன்றில் படிக்கும் 7 மாணவர்கள், தங்களது நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்றுள்ளனர்.

சனிக்கிழமை இரவு அங்கு சென்ற மாணவர்கள், பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு காரில் திரும்பியுள்ளனர். காரை ஓட்டிய மாணவன் அதிவேகத்தில் செலுத்தியதாக தெரிகிறது. அதிகாலை 2 மணியளவில் ஈஞ்சம்பாக்கம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவர்களின் கார் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில், சில மீற்றர் தூரத்திற்கு உருண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே அகமது பாகிம், சபின் ஆகிய மாணவர்கள் ப லியாகினர்.

ஒரு மாணவர் உ யிருக்கு ஆ பத்தான நிலையிலும், 4 மாணவர்கள் ப டுகாய ங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டிய மாணவர் சீட்பெல்ட் அணிந்திருந்ததால் லேசான கா யங்களுடன் உ யிர் த ப்பியுள்ளார்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம், அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, காரை ஓட்டிய மாணவரை கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், விபத்து ஏற்படுத்தி ம ரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!!

நிகழ்ந்த அற்புதம்

வரலாற்று பிரசித்திப் பெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இதன்போது அங்குள்ள வேம்பு மரத்திற்கு கீழ் தீ மூட்டப்பட்ட வேளை அந்த மரத்தின் ஒரு இலை கூட கருகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வேம்பு மரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருந்தது அங்கிருந்த மக்களை ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது.

ஐநாவில் இருந்து வந்த அழைப்பு : தமிழ் சிறுமிக்கு கிடைத்த பெருமை!!

தமிழ் சிறுமிக்கு கிடைத்த பெருமை

ஐநா ம னித உ ரிமை கவுன்சிலில் கலந்துகொண்டு பேசுவதற்காக, தமிழகத்திலிருந்து ஆதி திராவிடர் பள்ளியில் படித்த மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த பிரேமலதா என்கிற மாணவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். 8ம் வகுப்பு படிக்கும்போதே தமிழக அரசின் மனித உரிமை கல்வி பயின்று மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் பங்குபெற்றிருந்தார்.

தற்போது கல்லூரியில் பயின்று வரும் பிரமலதா அக்டோபரில் ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து பேசுவதற்காக ஐநா மனித உரிமை கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் முதன்முறையாக ஐநாவில் பேச இருப்பதால் அவருக்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இது தனக்கு உற்சாகத்தையும் பெருமையையும் சேர்த்திருப்பதாக பிரேமலதா கூறியுள்ளார்.

முன்னதாக ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கல்லுாரி மாணவி மகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் குழு தா க்குதல் : இருவர் காயம்!!

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில்..

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த இருவர் மீது தா க்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பாடசாலைக்கிடையிலான 12வயது பிரிவினருக்கான (ஆண், பெண்) இருபாலருக்குமான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்தில் இன்று (29.09.2019) இடம்பெற்றது.

இதன் போது குறித்த மைதானத்திற்கு வெளியே நின்ற இளைஞர் குழுக்கிடையே த கராறு ஏற்பட்டுள்ளது. த கராறின் பின்னர் அவற்றில் சில இளைஞர்கள் மைதானத்திற்குள் புகுந்து அங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை கு ழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மைதானத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்த நொச்சிமோட்டை கணேஸ் உயர்தர வித்தியாலய அதிபர் மற்றும் பெற்றோர் ஒருவர் மீது அவ் இளைஞர் குழு தா க்குதல் மேற்கொண்டுவிட்டு மைதானத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் சேவைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காயமடைந்துள்ள நபர்களிடமும் முறைப்பாட்டினை பெற்றுள்ளனர்.

வவுனியா பொலிஸாரின் டெங்கு நுளம்பிலிருந்து நகரை மீட்கும் சிரமதானம்!!

சிரமதானம்

வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் நடவடிக்கையின் சிரமதான பணிகள் இன்று (29.09.2019) முன்னெடுக்கப்பட்டது

குறித்த சிரமதான பணிகள் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வவுனியா – மன்னார் பிரதான வீதி, புகையிரத நிலைய வீதி, வைரவப்புளியங்குளம் போன்ற வீதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இச் செயற்றிடத்தில் 20க்கு மேற்பட்ட பொலிஸார் பங்குபற்றியிருந்தனர்.

அனுராதபுர காட்டுக்குள் மர்மமான முறையில் இ றந்து கிடக்கும் யானைகள்? பின்னணி குறித்து வெளியான தகவல்!!

அனுராதபுர காட்டுக்குள்..

அனுராதபுரத்திலுள்ள காட்டுப்பகுதியில் ம ர்மான முறையில் உ யிரிழந்த யானைகள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் சாந்தி பூஜைக்காக யானைகள் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஹபரன, துன்மிகுளம் காட்டுப் பகுதியில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த யானைகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. யானைகளின் ம ரணம் தொடர்பில் பி ரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் பல யானைகள் கொ ல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவத்தினரும் வனவிலங்கு அதிகாரிகளும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை கடும் போட்டியாளராக எண்ணும் மற்றைய போட்டியாளரின் நன்மைக்காக இந்த யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது குட்டி யானை ஒன்றை வீட்டில் வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கோத்தபாய ராஜபக்ஷ சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியா கள்ளிக்குளத்தில் சுயாதீன தமிழ் இளைஞர்களால் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம்!!

பனை விதைப்பு செயற்றிட்டம்

சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஒரு லட்சம் பனை விதைப்பு செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்டமாக பத்தாயிரம் பனை விதைப்பு இன்று (29.09.2019) கள்ளிக்குளம் கிராமத்தில் ஆரம்பமாகியது.

கள்ளிகுளம் கிராம அலுவலர் சர்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற பனை விதைப்பில் கள்ளிகுள கிராம அபிவிருத்தி, மாதர் அபிவிருத்தி, விளையாட்டு இளைஞர் கழக சங்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் சுயாதீன தமிழ் இளைஞர்அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பனை வளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தாடல்களும் இடம்பெற்றது. தொடர்ந்து வீதியோரங்கள், மைதானங்கள், குளக்கரைகள், காடுகளின் எல்லைகள் என்பவற்றில் பனைவிதைகள் நடப்பட்டன.

மேலும் ஒரு குடும்பத்துக்கு பத்து விதைகள் வீதம் வழங்கப்பட்டு அவர்கள் வீடுகளிலும் நாட்டப்பட்டன.

வவுனியாவில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற புதிய கட்சி உதயம்!!

புதிய கட்சி உதயம்

வவுனியாவில் ‘தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி’ என்ற புதிய கட்சி இன்று (29.09.2019) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்ட்டிருக்கும் இக்கட்சியின் தலைவராக எம்.ஆனந்தராஜா, செயலாளராக ஜெ.சந்திரப்பிரகாஸ், தேசிய அமைப்பாளராக ரி.ரஜனிகாந் ஆகியோர் செயற்படுகின்றனர்.

இக்கட்சியின் சின்னமாக இரட்டை மின்சாரக் கோபுரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்சியின் மூவர்ணக் கொடியும் கட்சியின் தலைவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இக்கட்சி அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவித்த தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் எம்.ஆனந்தராஜா,

எமது மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இன, மத வேறுபாடு இன்றியும், ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவாலாக்கலை வலியுறுத்தி எமது கட்சி செயல்படும்.

மூவின மக்களை சார்ந்த கட்சியாக சாதி மதங்களை கடந்து இக்கட்சி செயலாற்றும், பட்டதாரிகள் சங்கமானது இன்றிலிருந்து கட்சியாக செயல்படும்.

இப்போது வடமாகாணத்தை பிரதிபலித்து செயல்படும் இக்கட்சியானது எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விரிவு படுத்தப்படும்.தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியானது மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் சேர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் சந்திர பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் சில கட்சிகளுக்காக தேர்தல் காலங்களில் பேரம் பேசலுடன் செயற்பட்டிருந்தோம். ஆனால் தேர்தலின் பின் எமது கோரிக்கைகள் அக் கட்சிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது ஆகவே அதன் விளைவாக பட்டதாரிகள் சங்கம் புதிதாக இக்கட்சியை நிறுவியுள்ளது என தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியா – ஓமந்தையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். தனது வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிந்த இளைஞனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டையிழந்த அவர் வீதியின் அருகில் இருந்த மதகுடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போதும் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உ யிரிழந்தவர் 20 வயதுடைய பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் பிரிந்தன் எனத் தெரியவருகின்றது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணின் மோசமான செயல் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

பெண்ணின் மோசமான செயல்..

பிரேசில் நாட்டிலிருந்து கொ க்கைன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ஸ்கேன் சோதனை மேற்கொண்ட போது அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குறித்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது 52 கொ க்கைன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கை வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அகற்றும் நடவடிக்கையினை வைத்தியர்கள் மேற்கொண்டனர். 50 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கிறிஸ்துமஸ் தீவில் இருப்பது சி த்ரவதையாக உள்ளது : தமிழ் அகதி குடும்பத்தின் கு முறல்!!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ்க் குடும்பம் தொடர்பான வழக்கை முழுமையாக விசாரிக்க, அண்மையில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால், வழக்கு முடியும் வரை அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் வைத்திருக்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், இத்தீவில் இருப்பது ம னரீதியான து ன்புறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ள பிரியா – நடேசலிங்கம் இணையர், அவர்களது குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013ம் ஆண்டு தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுக டத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு. “முறையான கழிப்பறை வசதிக்கூட எங்களுக்கு இங்கு இல்லை. இது குழந்தைகள் இருக்கக்கூடிய இடமல்ல,” எனக் கூறியிருக்கிறார் பிரியா.

பிரியா, நடசேலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கைக்கான அத்தனை விதமான சட்ட வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு வயது குழந்தை தருணிகாவுக்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டால் இக்குடும்பம் அவுஸ்திரேலியாவில் வாழக்கூடிய சூழல் உருவாகும்.

இக்குடும்பத்தை க டுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “அவுஸ்திரேலியாவில் அவர்கள் வாழ முடியாது என்பதைத் தெரிந்தே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்கள்,” என விமர்சித்துள்ளார்.

அத்துடன், குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் சொல்லை குறிப்பிட்டு இக்குடும்பம் குழந்தைகளை காரணம் காட்டி அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ நினைப்பதாக சாடியிருந்தார்.

2017ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தருணிகாவின் தாயார் பிரியாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போதே தருணிகாவுக்கான விசா வாய்ப்பு முடிந்துவிட்டது என நீதிமன்றத்தில் அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸ்டீபன் லாய்ட் தெரிவித்திருந்தார்.

“பீட்டர் டட்டன் குடிவரவுத்துறை அமைச்சராக இருந்த போது தருணிகா போன்ற குழந்தைகள் விசா பெற அனுமதித்துள்ளார்,” என்கிறார் பிரியா குடும்ப வழக்கறிஞர் ஏஞ்சல் அலேக்சோவ்.

இது வாழ்வா? சா வா? பிரச்னை என்பதால் நீதிமன்றம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடிய பிரியா குடும்ப வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்

இந்த நிலையில், பிரியா – நடசேலிங்கம் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வாழ வாய்ப்புள்ளதா என்பது நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே உள்ளது.

தொடர் மழையால் அசெளகரியங்குள்ளாகும் மக்கள் : இன்றும் கடும் மழை!!

இன்றும் கடும் மழை

தென்னிலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் அசெளகரியங்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வெ டித்து சி தறிய எண்ணெய் கப்பல் : தீயில் சிக்கி உ யிருக்கு போ ராடும் மாலுமிகள் : திகில் காட்சி!!

எண்ணெய் கப்பல்

தென் கொரியா துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் கப்பலில் வெ டி விபத்து ஏற்பட்டு தீப்ப ற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு துறைமுகமான உல்சானில் 25,000 டன் எடையுள்ள, Cayman தீவு-கொடியிடப்பட்ட கப்பலான Stolt Groenland-ல் வெ டி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 9 பேர் கா யமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலை 10.50 மணியளவில் வெ டி விபத்து நிகழ்ந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தீ மளமளவென அருகிலுள்ள மற்றொரு BOW DALIAN எண்ணெய் டேங்கருக்கும் பரவியுள்ளது.

Stolt Groenland கப்பலில் ரஷ்யர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட 25 மாலுமிகள் இருந்துள்ளனர். Stolt Groenland-ல் இருந்த மாலுமிகளில் அனைவரும் மற்றும் BOW DALIAN கப்பலில் இருந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாலுமிகள் எந்தக் கப்பலில் இருந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து கடலோர காவல்படை விசாரித்து வருகிறது, கப்பலில் பழுது சரிபார்த்துக்கொண்டிருந்த போது வெ டி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் வெ டி விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்.

பெண்களுக்கு அழகே தலைமுடி என்ற நிலையில் அதை தானம் அளித்த பெண்!!

பெண்களுக்கு அழகே தலைமுடி..

கேரளாவில் அழகாக தலைமுடியை பராமரித்து நீளமாக வளர்த்து வந்த பெண் புற்றுநோயாளிகளுக்கு அதை தானமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அபர்ணா லவகுமார். இவர் சிவில் காவல் அதிகாரி ஆவார். பொதுவாக, கேரள பெண்களுக்கு தலைமுடியே தனி அழகுதான். அந்த வகையில் அபர்ணாவுக்கும் தலைமுடி முழங்கால்வரை நீண்டு தொங்கும்.

இந்நிலையில், தன்னுடைய தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு காணிக்கையாக அவர் தந்துள்ளார். இது குறித்து அபர்ணா கூறுகையில், கீமோதெரபி சிகிச்சைக்கு பின் தலைமுடி இல்லாமல், வாடும் புற்றுநோயாளிகளை பார்த்து தான் இப்படி ஒரு உதவி செய்ய முடிவு செய்தேன்.

புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை, உடன் படிக்கும் பிள்ளைகள் கிண்டல், கேலி செய்கிறார்கள். இதனால் இந்த பிள்ளைகள் மனம் உடைந்து போகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த முடிவு என கூறியுள்ளார்.

அபர்ணாவின் இந்த செயலுக்கு காவல்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.