கார் விபத்தில் இருவர் பலத்த காயம்!!

கார் விபத்தில்..

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று இன்று மாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி செல்லும் போது ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் இருவர் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!!

காலநிலை தொடர்பில்..

இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணத்திலும் அனுராரபுரத்திலும் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

அடைமழை பெய்யும் போது இடி, மின்னலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையின் போது மணிக்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னலினால் ஏற்பட கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : சாரதி தப்பியோட்டம்!!

வவுனியா வைரவப்புளியங்குளம்..

வவுனியா வைரவப்புளியங்குளம் – புகையிரத நிலைய வீதியில் இன்று (05.10.2019) மாலை 5.25 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகேயிருந்து பாதையின் மறுபக்கம் மாற முற்பட்ட துவிச்சக்கரவண்டியினை குருமன்காட்டு சந்தியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டியினை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 42 வயதுடை பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் வண்டியின் சாரதியான 20 வயதுடைய இளைஞன் மோட்டார் சைக்கிலினை எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பரவும் ஆபத்தான நோய் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார சங்கத்தின் செயலாளர் மஹேந்திரன் பலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து பொமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த வருடத்தில் மாத்திரம் எலிக் காய்ச்சலால் 3317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும் காலியில் 321 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா கனகராயன்குளத்தில் நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் மீட்பு!!

வவுனியா கனகராயன்குளத்தில்..

கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம் குளத்து வேலை செய்பவர்கள் அங்கு சென்ற போது குளத்து அலகரையில் மருந்து குடித்த நிலையில் 65வயது மதிக்கத்தக்க ஒருவர் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் வழங்கிய தகவலையடுத்து கனகராயன்குளம் இளைஞர்களால் குறித்த நபர் காப்பாற்றப்பட்டு 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நபரை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் புதிதாக இராணுவ சோதனைச் சாவடிகள்!!

சோதனைச் சாவடிகள்

வவுனியா – பூந்தோட்டம், மதீனாநகர் சந்தி மற்றும் ஈச்சங்குளம் பகுதியில் புதிதாக இ ராணுவ சோ தனைச் சாவடிகள் அமைக்கபட்டுள்ளன. நேற்று முன்தினம் மதீனாநகர் பகுதியில் சில வீடுகளில் இராணுவத்தினர் சோ தனைகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த சோ தனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குறித்த சோ தனைச் சாவடிகளில் அவ்வீதியால் பயணிக்கும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற கு ண்டு வெ டிப்பு சம்பவத்தின் போது குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோ தனைச் சாவடிகள் சில வாரங்களுக்கு முன்னர் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த சோ தனை சாவடிகள் மீண்டும் அமைக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் அ ச்சத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரமும் பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் சோ தனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பொலிஸாரினால் காதல் ஜோடிக்கு நேர்ந்த கதி!!

காதல் ஜோடி

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் காதல் ஜோடியை மி ரட்டி கப்பம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் ஜோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் 30,000 ரூபாய் வழங்குமாறு கூறி கப்பம் பெற்றுள்ளார்.

இதனுடன் தொடர்புடைய கல்கிஸ்ஸ பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தெற்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி 100,000 ரூபாய் பணம் கேட்ட பின்னர் இந்த ஜோடி 30,000 ரூபாய் பணம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கப்பம் பெற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

புதையலில் சிக்கிய பெருந்தொகை தங்க நாணயங்கள் : கிரிக்கெட் நட்சத்திரத்திற்கு நேர்ந்த கதி!!

தங்க நாணயங்கள்..

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஒருவரை சூட்சுமான முறையில் ஏமாற்றி 40 இலட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டமை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. புதையலில் தோண்டி எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் இரண்டு கிலோ தருவதாக கூறி வர்த்தகர்கள் குழுவொன்று மோ சடியில் ஈடுபட்டுள்ளது.

களனி கு ற்ற விசாரணை பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய தங்க நாணயம் என கூறி போலி நாணயங்களை விற்பனை செய்ய இருவர் இந்தத் தகவலை வழங்கியுள்ளனர்.

அனுராதபுரத்தில் புதையல் தோண்டியதில் கிடைத்த தங்க காசு ஒரு கிலோ 25 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் கிரிக்கெட் நட்சத்திரத்திற்கு வழங்குவதாக இந்த மோ சடி கும்பல் கூறியுள்ளது. பின்னர் இரண்டு கிலோ தங்க நாணயத்திற்கு 40 லட்சம் ரூபாய் வழங்க கிரிக்கெட் வீரர் இணங்கியுள்ளார்.

கொழும்பில் இதற்கான கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கமைய தங்க நிறம் பூசப்பட்ட செப்பு காசுகளை தங்க காசுகள் என கூறி கிரிக்கெட் வீரரை ஏமாற்றியுள்ளனர். இந்த மோ சடியாளர்களிடம் தான் சிக்கிய விடயம் வெளியே வந்தால் தனக்கு வெட்கம் என எண்ணிய கிரிக்கெட் நட்சத்திரம் இந்த விடயம் தொடர்பில் எந்த ஒரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவில்லை என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பற்றி எறிந்த விமானம் : 41 பேர் உடல் கருகி ப லியான விவகாரம் : விமானிக்கு என்ன தண்டனை தெரியுமா?

பற்றி எறிந்த விமானம்

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 41 பேர் உடல் கருகி ப லியான விவகாரத்தில் அதன் விமானி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து மே மாதம் 5 ஆம் திகதி Sukhoi Superjet 100 பயணிகள் விமானம் ஒன்று Murmansk விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானமானது கடுமையான மின்னல் தாக்குதலுக்கு இரையானது.

இதில் நிலைகுலைந்த விமானத்தை அதன் விமானி டெனிஸ் எவ்டோகிமோவ் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். அனுமதி கிடைத்த நிலையில், தரையிறக்கப்பட்ட விமானமானது, துரதிர்ஷ்டவசமாக ஓடுதளத்தில் மோதி நெருப்பு கோளமாக மாறியது.

விமான ஊழியர்களும் மீட்பு குழுவினரும் பயணிகள் பலரையும் உயிருடன் மீட்டிருந்தாலும் அந்த விபத்தில் சிக்கி 41 பேர் உடல் கருகி ப லியாகினர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய அதிகாரிகள் தற்போது அந்த விமானி மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

விமானியின் பொறுப்பற்ற செயலே இந்த விபத்துக்கு காரணம் எனவும், அவர் அவசர அவசரமாக தரையிறங்க முயற்சித்ததாலையே விமானம் தரையில் மோதியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மிகவும் அனுபவசாலியும் 41 வயதானவருமான விமானி டெனிஸ் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதே 41 பேரின் மர ணத்திற்கும் 10 பேர் படுகாயமடைய காரணம் எனவும் வாதிட்டுள்ளனர்.

இதனையடுத்து தற்போது விமானி டெனிஸ் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாவார் என கூறப்படுகிறது. ஆனால் விமானி டெனிஸ் இந்த குற்றச்சாட்டுகளை கண்டிப்பாக மறுப்பார் என்றே அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

வேலைக்கு சென்று ஒரு வருடமாகியும் வீடு திரும்பாத அம்மா : நடந்தது தெரியாமல் காத்திருக்கும் 2 வயது மகள்!!

காத்திருக்கும் 2 வயது மகள்

பிரித்தானியாவில் விபத்தில் கொ ல்லப்பட்ட அம்மாவிற்காக, 2 வயது மகள் ஓர் ஆண்டாக காத்திருக்கும் சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Wakefield, Denby Dale சாலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 33 வயதான Kate Jaworski-Green, இரண்டு நாள் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் உ யிரிழந்தார்.

Kate கார் மீது மோதி விபத்தை ஏற்படத்திய 24 வயது Jordan Howlett-க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சம்பவத்தன்று ம துபோதையில் இருந்த Howlett, த ற்கொ லை செய்துக்கொள்ளும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்தியதாக நீதி மன்ற விசாரணையில் தெரியவந்தது.

வேலைக்கு சென்ற அம்மா இறந்தது அறியாத Kate-ன் 2 வயது மகள் Lydia , அம்மா எங்கே, எப்போ வருவார்கள் என தன்னிடம் தினமும் கேட்பதாக Kate-ன் கணவர் Paul Jaworski நீதிமன்றத்தில் கூறினார்.

Lydia தாயை இழந்தது மிகவும் துயரமானது, அம்மா எப்படி தன்னை தனியாக விட்டுச் சென்றுவிட்டார் என அவர் தினமும் சிந்தித்துக்கொண்டிருப்பதை நாங்கள் உணருகிறோம். அம்மா கண்டிப்பாக ஒருநாள் வீடு திரும்புவார் என Lydia நம்பிக்கொண்டிருப்பதாக Paul நீதிமன்றத்தில் கூறியது அனைவரையும் கலங்க வைத்தது.

நள்ளிரவில் கனடா குடியுரிமை பெற்ற இளம்பெண் செய்த மோசமான செயல்!!

கனடா குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வரும் இளம் பெண்ணொருவர் மும்பையில் தேர்தல் பறக்கும் படையினரை கீழே தள்ளிவிட்டதோடு அவர்களின் கமெராவை உடைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மராட்டியத்தில் வருகிற 21ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மும்பையில் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அதை வீடியோவாக பதிவு செய்தனர். அப்போது அங்கு வந்த காரை பொலிசார் நிறுத்திய போது ஷீனா லகானி என்ற இளம் பெண் உள்ளிருந்தார்.

அவர் தான் கனடா பிரஜை எனவும் மொடலாக இருப்பதாகவும் கூறியதோடு தன்னை வீடியோ எடுக்க வேண்டாம் என கூறினார், மேலும் தான் கனடாவை சேர்ந்தவள் என்பதால் இந்த தேர்தலுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் அவரை சோதனை செய்த பொலிசார் திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால் மீண்டும் அடுத்த 1 மணி நேரத்தில் பைக்கில் தனது நண்பர்களுடன் அங்கு வந்த ஷீனா தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தன்னை வீடியோ எடுத்த காட்சிகளை அழிக்குமாறு கூறி அதிகாரியை கீழே தள்ளிவிட்டதோடு கமெராவையும் உடைத்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்து ஷீனாவை கைது செய்தனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், ஷீனாவிடம் விசாரித்து வருகிறோம், சம்பவத்தின் போது ஷீனா ம து அருந்தவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எனினும் அவர் போ தைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என கூறியுள்ளனர்.

தூங்கும் கணவனை அழுது தொ ந்தரவு செய்த குழந்தை : இந்திய வம்சாவளிப்பெண் செய்த மோசமான செயல்!!

பெண் செய்த மோ சமான செயல்

இரவுப்பணி முடித்துவிட்டு வந்து தூங்கிய கணவனை அழுது தொ ந்தரவு செய்ததாக ஒரு வம்சாவளிப்பெண் தனது ஆறு மாத குழந்தையை பிடித்து உ லுக்கியதில் அந்த குழந்தை ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது.

Aylesburyயில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி, தனது மனைவியாகிய Ravinder Deol (35) தன்னை தொலைபேசியில் அழைத்ததாக தெரிவித்த அவரது கணவர், தான் வீடு வந்து பார்க்கும்போது தங்கள் குழந்தை Ravneet கண்கள் மேலே சொ ருகிய நிலையில் உடல் நிறம் மாறி இருப்பதையும், தன் மனைவி குழந்தையை அணைத்து வைத்திருப்பதைக் கண்டு ஏதோ பிரச்னை என்று எண்ணி ஆம்புலன்சை அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மருத்துவ உதவிக் குழுவினர் வந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவளை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், Ravinder Deolஇன் கணவர் கூறியதற்கு மாறாக உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் வேறொரு தகவலைக் கூறின.

அதாவது குழந்தையின் தலையின் இருபக்கங்களிலும் தா க்கியதால் ஏற்பட்ட கா யங்கள் இருந்ததாகவும், குழந்தையை ப யங்கரமாக உ லுக்கியதால் அதன் மூளை, தண்டு வடம் எல்லாம் பா திக்கப்பட்டு, குழந்தைக்கு சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் குழந்தை உ யிரிழந்ததாக உடற்கூறு பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.

அப்போதும் குழந்தை மூச்சு பே ச்சின்றி கிடந்ததாகவும், அதை சரி செய்வதற்காகத்தான் தான் குழந்தையை உ லுக்கியதாகவும் தெரிவித்தார் Ravinder Deol. குழந்தையின் உ யிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக Ravinder Deolஐக் கைது செய்த பொலிசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 2ஆம் திகதிதான் குழந்தையின் ம ரணம் தொடர்பான மருத்துவர்களின் கருத்துக்கள் கிடைக்கப்பெற, செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டார் Ravinder Deol.

இதற்கிடையில் நேற்று நீதிபதி முன்பு, Ravinder Deolஇன் கணவர் இரவு ஷிஃப்டில் இருந்ததாகவும், தொடர்ந்து அவரை சில நாட்களாக துங்கவிடாமல் குழந்தை தொ ந்தரவு செய்ததாகவும், அதனால்தான் தான் Ravinder Deol குழந்தையை உ லுக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது என்னும் விடயம் வாதத்தில் முன்வைக்கப்பட்டது. எனவே குழந்தையை உ லுக்கியது அதற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்காது என்றும் வேறு காரணங்களால் குழந்தை உயி ரிழந்திருக்கலாம் என்றும் வாதிடப்பட்டது. தன் மீதான கொ லைக் கு ற்றத்தை Ravinder Deol மறுத்துள்ள நிலையில் வழக்கு தொடர்கிறது.

துண்டான கையை ஏந்தியபடியே மருத்துவமனைக்கு விரைந்த தாய்!!

துண்டான கையை..

இலேசான இலகுரக வண்டியில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் பிரித்தானிய தாய் தன்னுடைய வலது கையை இழந்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த செல்சியா வெல்லா என்கிற 26 வயது தாய் கடந்த மாதம் மெக்சிகோவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்துள்ளார்.

அங்கு தன்னுடைய நண்பருடன் இலேசான இலகுரக வண்டியான buggy-ல் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ஈரப்பதமான புற்கள் நிறைந்த பகுதியில் வேகமாக சுழன்று செல்சியாவின் கையில் விழுந்துள்ளது.

இதில் அவருடைய முழங்கை பகுதி தனியாக துண்டிக்கப்பட்டு இரத்தம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, செல்சியா துண்டான தன்னுடைய கையை மற்றொரு கையில் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த போதே, திடீரென செல்சியா மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார். இதனால் பதறிப்போன மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு கையை இணைக்க முடியாத கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் பிரித்தானிய திரும்பிய செல்சியாவிற்கு செயற்கை கை பொருத்துவதற்காக அவருடைய தங்கை ஆன்லைனில் நிதி திரட்டி வருகிறார். பெரும்பாலும் வலது கையை மட்டுமே பயன்படுத்தி வந்த செல்சியா, தற்போது இடது கை பழக்கத்தை கற்று வருவதாக அவருடைய சகோதரி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திடீரென மாயமான விமானம் : தீப்பிடித்து எரிந்து விபத்து!!

மாயமான விமானம்

உக்ரைன் நாட்டில் திடீரென ரேடாரில் இருந்து மாயமான விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் கொ ல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சோவியத் வடிவமைத்த நான்கு என்ஜின் கொண்ட உக்ரேனிய அன்டோனோவ் -12 சரக்கு விமானம், மேற்கு விமான நிலையமான எல்விவ் அருகே வந்து கொண்டிருந்த போது, 13.7 கிமீ (8.5 மைல்) தொலைவில் காலை 7:10 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.

ஸ்பெயினிலிருந்து பறந்து வந்து கொண்டிருந்த சமயத்தில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்போது விமானத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு ஊழியர்கள் கொ ல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தைக்கு துயரம் நடந்த அதே இடத்தில் பரிதாபமாக ப லியான மனைவி, குழந்தை : கதறி துடிக்கும் கணவன்!!

தந்தைக்கு துயரம் நடந்த அதே இடத்தில்..

தந்தைக்கு விபத்து நடந்த அதே இடத்திலே மனைவி, மகளை லொறி விபத்தில் பறிகொடுத்த தந்தை கதறி அழுது வருகிறார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் (37) மின் வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சித்ராவும் இதே துறையில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு யஷ்வந்த் என்ற 9 வயது மகனும், இன்சிகா என்ற 7 வயது மகளும் உள்ளனர். சித்ரா தினமும் தன்னுடைய மகனை முதலில் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதன்பிறகு மகளை பள்ளி வேனில் ஏற்றிவிடுவார்.

அதேபோன்று நேற்று காலை மகனை முதலில் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, மகளை பள்ளி வேனில் ஏற்றிவிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த லொறி இருவரின் மீது ஏறி இறங்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே உடன் நசுங்கி ப லியாகினர். இதே இடத்தில் கடந்த வாரம் நடந்த விபத்தில் ஜெயக்குமாரின் தந்தை படுக்கையாமடைந்து மருத்துவனையில் கவலைக்கிடமாக இருந்து வருகிறார்.

அவரை அருமையை இருந்து கவனித்து வந்த ஜெயக்குமார், இன்று தன்னுடைய மனைவி, மகள் ப லியானதை கேள்விப்பட்டு கதறி துடித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரோடு இருக்கும் போதே உடலை அடக்கம் செய்த நபர்!!

இந்தியாவில் விவசாயி ஒருவர் உயிரோடு தன் உடலை அடக்கம் செய்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் Mahabubabad மாவட்டத்தின் Ramannagudem கிராமத்தைச் சேர்ந்தவர் Meka Prabhakar Reddy.

விவசாயியான இவருக்கு மூன்று சகோதரர்கள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு இவர்களுக்குள் 15 ஏக்கர் நிலம் பிரிக்கப்பட்டது.

ஆனால் 2010-ஆம் ஆண்டு இவரின் சகோதரர் ஒருவர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்வதை நிறுத்திவிட்டு, நிலம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் கூறினார். எங்களுக்குள் நிலம் பிரிப்பதில் ஒரு ஒப்பந்தம் இருந்தது. ஆனால் அதை எல்லாம் அவர் ஏற்று கொள்ளவில்லை.

எனது பெயரில் அந்த நிலத்திற்குரிய 5.26 ஏக்கருக்கு ஏற்கனவே பட்டா உள்ளது. அதைப் பற்றி நான் கிராம தாசில்தாரை அணுகிய போது, அவர் அதற்கு எந்த சரியான பதிலும் கொடுக்கவில்லை, அதே போன்று உள்ளூர் எம்.எல்.ஏ ஆதரவுடன் சகோதரன் ஆடுகிறான்.

இதனால் இதற்கு மேல் என்னால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கூறி, நிலத்தில் குழி தோண்டி உயிருருடன் தன் உடலை புதைக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இறுதியில் என்ன ஆனது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. தற்போது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.