கனவுகளோடு சுவிஸ் சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

இலங்கையருக்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில், அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனால் அதிர்ச்சிக்குள்ளான திருமலை இளைஞர் பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில் உ யிருக்காகப் போராடி வருகின்றார்.

இலங்கையில் திருகோணமலை, கடற்கரை சேனையைச் சேர்ந்த இரட்ணசிங்கம் அருட்செல்வன்(33 வயது) என்பவர், கடந்த 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி தென்கிழக்காசிய நாடொன்றில் இயங்கி வரும் ஐ.நா அகதிகளுக்கான அலுவலகமொன்றில் தஞ்சமடைந்து இருந்தார்.

பின் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது அரசியல் தஞ்சக் கோரிக்கையை முன்வைத்தபோது, சுவிஸ் நாட்டு நடைமுறைகளின் படி, இவர் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையிலேயே இவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் அபாய நிலைமையை எண்ணி அச்சமடைந்த இவர் திடீரென கடும் சுகவீனமடைந்தார்.

உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரோ(Aargau) மாநிலத்தில் உள்ள மருத்துவமனையொன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவரது தலைப்பகுதியில் பாரிய சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போ ரின் போது, இவரின் உடன்பிறந்தவர் ஒருவரும் ம ரணித்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளாகி இருக்கும் இவரை இவரது தாயார் சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துமாறு சுவிஸ் நாட்டில் இயங்கக்கூடிய தமிழ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

முல்லைத்தீவில் அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்த மாணவி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. ஜெயராசசிங்கம் அகலிசை 2019 தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

போ ரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதியில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களும் மொத்தமாக ஆறு (06) மாணவர்களே கல்வி கற்று வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் கூட போதியளவு இல்லாமல் கிடைக்கப்பெற்ற வளங்களை வைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் இச் சாதனை நிலைநாட்டப்பட்டது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அம்மம்மாவினுடைய அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆளுனர் கேட்ட கேள்விகளால் தடுமாறிய விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்!!

பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்

வடமாகாண ஆளுனரினரின் கேள்விக்கு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு பதிலளிக்க முடியாது தடுமாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள கட்டிடடம் நேற்று (07.10) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த கட்டிடடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் உள்ளிட்ட விடயங்களையும், மக்கள் சந்திப்புக்கான ஒழுங்குகள் தொடர்பாகவும் வடக்கு ஆளுனர் விபரங்களை கோரினார்.

இதன்போது அதற்கு சரியான முறையில் பதிலளிக்க முடியாது தடுமாறியிருந்தார். இதனையடுத்து ஆளுனர் குறித்த உதவிப் பணிப்பாளருக்கு அறிவுரைகளை கூறியிருந்தார்.

அத்துடன், குறித்த கட்டிடம் முழுமை பெறாது திறக்கப்பட்டமை தொடர்பிலும் ஆளுனர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்காலிகமாக இயங்கும் கட்டிடத்தில் இருக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.

இதன்போது குறித்த கட்டிடடத்தில் உரிய இடங்களில் பெயர் பலகை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறித்திருந்தார்.

பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் தனது அலுவலகம் தொடர்பான தகவல்களையே வழங்க முடியாது தடுமாறியிருந்தமை அங்கு நின்றவர்களை முகம் சுழிக்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தை திறந்து வைத்த வடக்கு ஆளுனர்!!

கமக்கார ஒழுங்கமைப்புக்களின்..

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் கட்டிடம் இன்று வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் புனரமைக்கப்பட்ட குறித்த கட்டிடத்தை ஆளுனர் திறந்து வைத்தார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் 8 கமநல கேந்திர நிலையங்களும் அதன் கீழ் 256 கமக்கார அமைப்புக்கள் உள்ளன. அதனை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் குறித்த பகுதியில் இயங்கவுள்ளதுடன் மாவட்டமட்ட விவசாயிகளின் பொருளாதார மற்றும் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் செயற்படவுள்ளது.

மாவட்ட சம்மேளனத் தலைவர் திரு.சேதுகாவலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் சி.சத்தியசீலன், பிரதி கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் இ.விஜயகுமார், பிரதி விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், சம்மேளன உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம்!!

சிறுவர் தினம்

போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அவ்வகையில் வவுனியா சிறுவர் அபிவிருத்தி கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நகரசபை உறுப்பினர் க.செந்தில்ரூபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ப.சத்தியலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், ந.சோனாதிராஜா, நா.லக்சனா, ரி.கே.இராஜலிங்கம், த.பரதலிங்கம் மற்றும் மதத்தலைவர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சிறுவர்களுக்கு கௌரவிப்பு இடம்பெற்றதுடன் சிறுவர்களின் பாடல் , நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கணணி அறை திறப்பு!!

கணணி அறை திறப்பு

IMHO நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் Assist RR நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் திருத்தி அமைக்கப்பட்ட கணணி அறை பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருத்தி அமைக்கப்பட்ட குறித்த கணனி அறையில் புதிய கணணிகள் மற்றும் தளபாடங்கள் என்பனவும் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் Assist RR நிறுவனத்தின் செயற்றிட்டப் பணிப்பாளர் திரு.ஹென்றி அமல் ராஜ் அவர்களும் அந் நிறுவனத்தின் பொருளாளர் பொறியியலாளர் திரு.சிறீஸ்கந்தராஜா மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா!!

நவராத்திரி விழா

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நவராத்திரி விழா 2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் கமலேஸ்வரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

வர்த்தகர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சக்தி புஜையுடன் ஆரம்பமான நவராத்திரி விழாவில் சகலகலாவல்லி மாலை பாடப்பட்டதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், நிருத்தியாஞ்சலி, பேச்சு, தனிநடனம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், குழு நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமிகள்!!

சாதித்த சிறுமிகள்

வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் முகுந்த குமார் தெரிவித்துள்ளார்

லோகேஸ்வரன் பிரியதாயினி 159 புள்ளிகளையும், விஜயகுமாரன் பிரியங்கா 153 புள்ளிகளையும் பெற்று பரீட்சையில் சித்தியடைந்ததுடன் பாடசாலைக்கு பெருமையும் சேர்த்துக்கொடுத்துள்ளனர்.

அத்துடன் வவனியா இராசேந்திரன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரா.கிருஷ் 164 புள்ளிகள் மற்றும் லக்சான் 159 புள்ளிகளை பெற்றுள்ளார்கள் பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாணவன் படைத்த சாதனை!!

யாழ். மாணவன் படைத்த சாதனை

இவ்வருடத்திற்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.

குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் அதில் 160 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடும் மழை : மக்கள் மகிழ்ச்சி!!

கடும் மழை

வவுனியாவில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (06.10.2019) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிக்கின்றது.

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பெய்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்.

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி 192 புள்ளிகள் : 32 மாணவர்கள் சித்தி!!

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையில் 32 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன், தனியார் கல்வி நிலையங்களை நாடாது பாடசாலை கல்வியை மட்டும் பெற்று குறித்த பாடசாலை மாணவர்கள் 56 பேரும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

குறித்த பாடசாலையில் அதிபர் திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் அவர்களின் வழிநடத்தலில் ஆசிரியர்களான திருமதி.ச.மங்களவதனா, செல்வி.குவேனி ஆகியோர் குறித்த மாணவர்களை வழிநடத்தியிருந்தனர்.

வவுனியா வடக்கு வலயத்தில் தொடர்ந்து ஆறாவது வருடமாக குறித்த பாடசாலை முதலிடத்தை தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தண்ணீர் வேண்டும் என கோரி வீதியில் இறங்கிய பொதுமக்கள்!!

வீதியில் இறங்கிய பொதுமக்கள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் குடிநீர் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வழங்கப்படும் குடிநீர் திட்டம் கடந்த நான்கு நாட்களாக சீரான முறையில் வழங்கப்படாமையினால் தாம் பல்வேறு சிரமக்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்து மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் அப்பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கிக்கு முன்பாக போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பல மாதங்களான குடிநீர் சிரானமுறையில் வழங்கப்பட்ட போதிலும் கடந்த வாரம் குடிநீர் வழங்கும் திட்டம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது.

இதன் பின்னரே குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் போ ராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

இக் குடிநீர் திட்டம் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டு பின்னர் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிநீர் திட்டத்தின் மூலம் வருமானத்தினை பெற்று அதனை பராமரிக்குமாறு அக்கிராமத்திலுள்ள பொது அமைப்பினரிடம் பிரதேச சபையினர் ஒப்படைத்தனர்.

குடிநீர் வழங்கப்படாமை தொடர்பில் குறித்த அமைப்பினரே இதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை.

முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அதனை பிரதேசசபையினர் கண்காணிப்பு மேற்கொள்ள முடியுமென தெரிவித்தார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக தெரிவித்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த (03.10.2019) அன்று மதவுவைத்தகுளம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலுள்ள தே வாலயங்களில் மோப்ப நாய் சகிதம் பொலிஸார் தீவிர சோ தனை!!

தீவிர சோ தனை

வவுனியாவில் உள்ள தே வாலயங்களுக்குள் இன்று (06.10.2019) காலை மோ ப்பநாய் சகீதம் பொலிஸார் திடீர் சோ தனைகளை மேற்கொண்டனர்.

உ யிர்த்த ஞா யிறு தா க்குதலின் பின் இலங்கையில் உள்ள தே வாலயங்களுக்கு ப லத்த பா துகாப்பு வழங்கப்பட்டிருந்தது எனினும் நாளடைவில் வழமைக்கு திரும்பிய நிலையில் அண்மையில் சில நாட்களாக மீண்டும் பா துகாப்பு சோ தனை சா வடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மோ ப்ப நாய் சகிதம் சென்ற பொலிஸார் ஆலய வளாகங்களை சோ தனை செய்திருந்தனர்.

இதேவேளை அண்மையில் யாழ் உட்பட பல பகுதிகளில் வெ டிமருந்துகள் ஆ யுதங்கள் பா துகாப்புப் பிரிவினரால் மீட்கப்பபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

இலங்கையர்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரும் பயனாளர்களின் கணக்குகள் அடையாளம் தெரியாத நபர்களின் கைகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத தரப்பினரால் போலியாக தயாரிக்கப்பட்ட சமூக வலைத்தளம் ஊடாக, பயனாளர்களை நுழைய வைத்து அதில் தங்கள் பெயர் மட்டும் கடவுச்சீட்டை பதிவிடுமாறு கோருகின்றனர்.

அதன் ஊடாக அந்த தரவுகளை திருடிக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ யசிரு குருவிட்டகே மெத்திவ் தெரிவித்துள்ளார். குறைந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்தும் பயனாளர்கள் மிக இலகுவாக அடையாளம் தெரியாதவர்களின் கைகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் two factor authentication என்ற வசதியை பயன்படுத்துமாறும் அல்லது Google authenticator என்றதனை பயன்படுத்துமாறு இலங்கை சமூகவலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியீடு!!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணைய தளத்தின் வழியாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கையால் மக்கள் அச்சம்!!

அதிரடிப் படையினரின் ரோந்து..

வவுனியாவில் இன்று இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளில் வீதியை மறித்து பரல்கள் அடுக்கி தீவிரமாக மக்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியா நகர்ப்புறங்களில் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் வண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றையதினம் பூந்தோட்டம் மதீனாநகர் பகுதியில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.