துர்க்கை அம்மன் சிலையை கரைக்கச் சென்றபோது 11 பக்தர்கள் பலி!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகள் அனைத்தும் முடித்து சிலைகள் ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றிருந்தனர்.

அதன் படி டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர்.

ஆனால் 11 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வேறு யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா? என தீவிரமாக சிகிச்சைக்காக தேடபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூஜைக்கான பொருட்களை வாங்கியபின் மீதி பணத்தில் குடித்த கணவன் : குடத்தால் அடித்தே கொன்ற மனைவி!!

ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிய பின்னர் மீதமிருந்த பணத்தில் மது குடித்த தொழிலாளியை அவரது மனைவி குடத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் கடலூர் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(36). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு அய்யனார்(11),

வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வேல்முருகனிடம் ரூ.1,000யை வள்ளி கொடுத்தார்.

அதன்படி வேல்முருகனும் கடைக்கு சென்று பூஜை பொருட்களை வாங்கினார். அதில் மீதம் இருந்த பணத்துக்கு அவர், டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார்.

பின்னர் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், தனது மனைவியிடம் பூஜை பொருட்களை கொடுத்தார். பொருட்கள் வாங்கியது போக மீதமுள்ள பணத்தை தருமாறு வள்ளி கேட்டார்.

அதற்கு அவர் செலவாகி விட்டதாக கூறினார். அந்த பணத்தில்தான், தனது கணவர் மதுகுடித்து விட்டு வந்ததை அறிந்து கொண்ட வள்ளி அவருடன் வாக்குவாதம் செய்தார்.

மேலும் வேல்முருகனுக்கு சாப்பாடு கொடுக்காமல், அவரை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு வள்ளி இரவில் தூங்கி விட்டார். வேல்முருகன் வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கினார்.

நேற்று காலையில் எழுந்த வள்ளி, பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். இதை கண்ட வேல்முருகன், உடனடியாக வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டார்.

இதனிடையே பால் வாங்கிவிட்டு வந்த வள்ளி, கணவரிடம் ஏன் வீட்டுக்குள் வந்தாய் என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வள்ளி, அங்கிருந்த எவர்சில்வர் குடத்தை எடுத்து வேல்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் அவர் சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

3 வயது மகளை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர் : அதிர்ச்சி வாக்குமூலம்!!

இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் .

34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான பெனலோப் சந்திரீயுடன் வசித்து வந்தனர். இந்த குழந்தை 2023ல் டிசம்பர் 17ம் தேதி மாலையில் வீட்டிலேயே உயிரிழந்து உள்ளது.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல மாதங்களாக பெனலோப்பை அந்த தம்பதி பட்டினியாக போட்டிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தன.

பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவில், ஜாதனா மற்றும் உப்பல் தம்பதியை போலீசார் கைது செய்து குற்றச்சாட்டு அறிக்கையையும் பதிவு செய்தனர்.

3 வயது மகளை அவர்கள் பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அடுத்த கட்ட விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி லின் டெய்டன் பிறப்பித்து உள்ளார்.

தரையிலேயே அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி : மருத்துவமனையில் அவலம்!!

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் வந்திருந்தார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் கூட வந்ததாக தெரிகிறது.

பிரசவம் பார்க்க மருத்துவமனையில் செலுத்த அவர்களிடம் பணம் எதுவுமில்லை. அவர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர்கள். இதனால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி மேலும் அதிகமாகிக் கொண்டே வந்தது. மருத்துவ பணியாளர்கள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.

குறைந்தபட்சமாக ஒரு மறைவான இடத்தைக் கூட அவர்கள் ஒதுக்கி தரவில்லை. கர்ப்பிணியால் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியாததால் அவர் அங்கேயே தரையில் அமர்ந்து, அந்த இடத்திலேயே குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்.

அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், “என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று நக்கலாக பேசி கிண்டலும், கேலியும் செய்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் தரையில் அமர்ந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், 2 நர்சுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்த மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்போதும் இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் குர்ரே தனது மனைவி சிமாதேவி (35) மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் என குடும்பத்தினருடன் தங்கிருந்து அதே எஸ்டேட்டில் கடந்த 1½ மாதமாக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையே சிமாதேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் இது குறித்து ஜெகதீஸ் குர்ரே கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் குடியிருப்புக்கு அருகே காயங்களுடன் சிமாதேவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், கழுத்தை துணியால் இறுக்கி சிமாதேவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் ஜெகதீஷ் குர்ரேக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. வீட்டில் சிமாதேவி எப்போதும் செல்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 27ம் தேதி இரவு இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வேண்டாம் என மனைவியை ஜெகதீஷ் குர்ரே கண்டித்து உள்ளார்.

ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் குர்ரே தனது மனைவி அணிந்திருந்த துப்பட்டாவை வைத்து, கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

பின்னர் வீட்டுக்கு பின்புறம் உள்ள இடத்தில் உடலை வீசி விட்டு, அதன் மீது துப்பட்டாவால் மூடி வைத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து எதுவும் நடக்காதது போல ஜெகதீஷ் குர்ரே வீட்டிற்கு வந்து தூங்கினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக ஜெகதீஷ் குர்ரேவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர் தினத்தை கொண்டாடி பரிசுகளுடன் வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (01.10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 04 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இந்த சிறுவன் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ள நிலையில், பெற்றொரின் அவதானத்தை கடந்து வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளார்.

இதன்போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மர்மமான முறையில் தீக்கிரையான படகு!!

வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. நேற்று (01.10) மதியம் 1:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தீயில் மீன்பிடி படகு மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் முழுமையாக எரிந்துள்ளன. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது தற்செயலாக இடம்பெற்றதா? அல்லது எவரேனும் தீ வைத்தனரா என்பது கண்டறிய வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச் சம்பவத்தின் போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளமை தெரிய வருகிறது

 

நடிகை ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!!

தவெக தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சாரத்தில் , திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரட்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டார்.

முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்

இந்த பதிவானது இணையத்தில் வேகமாக பரவி விஜய்யை கைது செய்யணும் ஓவியாவின் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பதிவை ஓவியா டெலிட் செய்துவிட்டாலும், இது விஜய் ரசிகர்களை கோபமூட்டியிருக்கிறது நீ குடிச்சிட்டு காரை ஏற்றி பல பேரை கொலை செய்ய பாத்தியே உன்னை ஏன் கைது செய்யகூடாது?

இதுக்கு முன்னாடி கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்தபோது, நீ ஏதாவது பேசினாயா? முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்” என்பது உள்பட ஓவியாவுக்கு எதிராக சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை : 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்!!

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர்.

குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வங்கி கணக்குகளில் சிக்கிய பெருந்தொகை பணம் : திடீரென தலைமறைவான பெண்!!

போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவருக்கு சொந்தமான ரூ.5.73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், நிலம், நான்கு கடைவீடுகள் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவை அடங்கும் என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் ஈட்டியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரான பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

பெண் ஒருவரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்!!

தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய ரக்வானை பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி, ரக்வானை பொலிஸ் பிரிவின் கலஹிட்டிய, பெலவத்த வீதி, கொடகவெல பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,

தன்னிடமிருந்து 364,000 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ரக்வானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த பெண் இந்தத் திருட்டை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 071-8591394 அல்லது 071-8593808 என்ற தொலைபேசி ஊடாக அழைக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டெல்லியில் பரவும் புதியவகை வைரஸ் தொற்று உன்னிப்பாகக் கண்காணிக்கும் இலங்கை!!

இந்தியாவில், டெல்லி பெருநகரப் பகுதி உட்பட வடக்குப் பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா H3N2 திரிபு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில், 46 மில்லியன் மக்கள் வசிக்கும் டெல்லி நகரத்தில் இந்த இலையுதிர்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

உள்ளூர் வட்டாரங்களின் தற்போதைய கணக்கெடுப்பின்படி, இப்பகுதியில் உள்ள 69 சதவீத வீடுகளில் தற்போது ஒருவருக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளது.

இந்திய வைத்தியர்கள் H3N2 தற்போது இப்பகுதியில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா வகைகளில் முதன்மையானது என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

இலங்கை எந்தவொரு வைரஸ் தொற்று பரவலுக்கும் தயாராக இருப்பதோடு, தற்போதைய நிலைமை ஆபத்தானது அல்ல என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்த வைரஸ் தொடர்பில் அச்சம் அடைய தேவை இல்லை. பருவகால இன்ஃப்ளூயன்ஸா, பொதுவாக காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது. எமது சுகாதார அமைப்பு விழிப்புடன் உள்ளது. கவலைப்பட தேவையில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வகையான இன்ஃப்ளூயன்ஸா பரவல்கள் பிராந்தியத்தில் பருவகாலமாக மீண்டும் நிகழும் எனவும், இலங்கையில் நோயாளர்கள் கண்டறிப்பட்டால் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வைரஸின் விரிவான சுழற்சியை எடுத்துக்காட்டுகிறது என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.

டெல்லியைத் கடந்து பிற மாநிலங்களிலும் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஆசிய கோப்பையை திரும்பப் பெறுமா இந்தியா : UAEயிடம் கோப்பையை ஒப்படைத்த மோஷின் நக்வி!!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அரசு அமீரக நிர்வாகத்திடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் பேரவை தலைவருமான மோஷின் நக்வி ஒப்படைத்துள்ளார்.

தற்போது துபாயில் உள்ள ஆசியக் கிரிக்கெட் பேரவை மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோப்பை, விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி, இந்தியாவுக்கு கோப்பை வழங்கத் தயாரான நிலையில் இந்திய அணியினர் அதனை வாங்த மறுத்துள்ளனர்.

ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரின் கைகளில் இருந்து கோப்பையை பெற மாட்டோம் என்று இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மற்ற நிர்வாகிகள் மூலம் கோப்பையை இந்தியாவுக்கு வழங்க நக்வி ஒப்புக் கொள்ளாமல், கோப்பையைக் கையுடன் எடுத்துக் கொண்டு மைதானத்தைவிட்டு வெளியேறியமை அன்றைய தினத்தில் பேசுபொரளாக மாறியிருந்தது.

தொடர்ந்து, இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெற்ற ஆசியக் கிரிக்கெட் பேரவை பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ”ஆசியக் கோப்பை என்பது தனிநபர் சொத்துக் கிடையாது, வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை ஒப்படைக்க வேண்டும்” என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஆனால், கோப்பையை வழங்க மறுப்பு தெரிவித்த நக்வி, மீண்டும் பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்தால், அதில் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ முறைபாடு அளிக்க தயாரான சூழலில், ஆசியக் கோப்பை தொடரை நடத்திய ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோப்பையை நக்வி ஒப்படைத்துள்ளார்.

விரைவில் துபாயில் உள்ள பிசிசிஐ நிர்வாகத்தினரிடம் ஆசியக் கோப்பை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை!!

தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ரூ.1800 முதல் 2000 வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

எலுமிச்சம் பழத்தின் அறுவடை குறைந்து, தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை ரூ.30 முதல் 60 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.230, ஒரு கிலோ பீட்ரூட் ரூ.50-60 வரை, ஒரு கிலோ தக்காளி ரூ.110, ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.160 என விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பு Swimming Clubஇல் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததில் 8 வயது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக சென்றிருந்த நிலையில் ​​நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

முறைப்பாட்டு அளிக்கும் போது, ​​சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிக்கன் கேட்ட மகனை பூரிக்கட்டையால் அடித்தே கொலை செய்த தாய்!!

மகாராஷ்டிராவில் பால்கரில் வசித்து வருபவர் பல்லவி. 40 வயதாகும் இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்மயி கணேஷ், 7, என்ற மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.

விடுமுறை நாளான நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிள்ளைகள் இருவரும், தன் தாயிடம் சிக்கன் உணவு வகைகளை சமைத்து தரும்படி வற்புறுத்தினர்.

ஆத்திரம்அடைந்த பல்லவி, சமையலறையில் இருந்த சப்பாத்தி கட்டையை எடுத்து, பிள்ளைகளை சராமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் அவரது மகனும், மகளும் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தனர்.

பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு போலீசில் புகார் அளித்தனர். இதன்படி அங்கு வந்த போலீசார், மயங்கி விழுந்த இரு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், சிறுவன் சின்மயி கணேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான அவரது தாய் பல்லவியை, போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.