வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்!!

மோட்டார் சைக்கிள் விபத்து

வவுனியா, தவசிகுளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கந்தபுரம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தவசிகுளம், வைரவர் கோவிலடிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மதகு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

திருடன் என்று கட்டிவைத்து அ டித்து கொ ல்லப்பட்ட இளைஞர் : அவரின் இளம் மனைவி போட்ட அ திரடி சபதம்!!

அ திரடி சபதம்

இந்தியாவில் இளைஞர் ஒருவர் கு ம்பலால் தா க்கப்பட்டு கொ ல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தூ க்கில் ஏ ற்றாவிட்டால் த ற்கொ லை செய்துகொள்வேன் என இ றந்தவரின் மனைவி சபதம் போட்டுள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தப்ரெஸ் அன்சாரி என்ற இளைஞர் கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி நண்பர்களுடன் சென்ற போது இருசக்கர வாகனத்தை தி ருடியதாக கூறி ஒரு கு ம்பல் அவரை மரத்தில் க ட்டி வைத்தது.

பின்னர் அவர் 7 மணி நேரம் கொ டூரமாக தா க்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அன்சாரியை ஜெய் ஸ்ரீ ராம் என கூறும்படி அந்த கு ம்பல் வற்புறுத்தியது.

பின்னர் படுகா யங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அ திர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையில் அன்சாரி பைக்கை திருடவில்லை என அவர் குடும்பத்தார் தொடர்ந்து கூறி வந்தனர். இதில் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்தனர், அவர்கள் மீது கொ லை வழக்கு பதியப்பட்ட நிலையில், அதை திரும்ப பெறப்பட்டது.

இது அன்சாரியின் மனைவி சைஸ்டா பர்வீன் மற்றும் குடும்பத்தாரை அ திர்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து சைஸ்டா அளித்துள்ள பேட்டியில், என் கணவரை கொ லை செய்தவர்கள் மீது கொ லை வழக்குப்பதிவு செய்து தூ க்கிலிட வேண்டும்.

இதை செய்யவில்லை என்றால் நான் த ற்கொ லை செய்து கொள்வேன் என கூறி அ திரவைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், என் கணவர் எப்படி இ றந்தார் என உலகத்துகே தெரியும்.

கு ற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு என்ன ஆனது தெரியுமா?

74 வயதில் இரட்டை குழந்தைகள்

இந்தியாவில் 74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரக்ஷாராமம் பகுதியை சேர்ந்தவர் மங்காயம்மா.

இவருக்கு ராஜா ராவ் என்பவருக்கும் 1962ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த இவர்கள் குழந்தை பெற்ற முடிவு செய்தனர். அதன்படி மாதவிடாய் காலம் முடிந்த மங்காயம்மாவுக்கு செயற்கை முறையில் மாதவிடாயை வரவழைக்க மருத்துவர்கள் முயல ஒரே மாதத்தில் மாதவிடாய் வந்தது.

இதன் பின்னர் ஜனவரி மாதத்தில் மங்காயம்மாவிற்கு செயற்கை கருத்தரிப்பு செய்யப்பட்டது. சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த மங்காயம்மாவுக்கு செப்டம்பர் 5ம் திகதி இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் மங்காயாம்மாவின் கணவர் ராஜா ராவுக்கு குழந்தை பிறந்த சில வாரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ராஜாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, நுரையீரல் தொற்று பிரச்னை காரணமாக அவர் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அதே போல தொற்று நோய் பிரச்னை வரக்கூடாது என மங்காயம்மாவும் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார். இருவருமே நலமாக உள்ளனர். ஆனால் மங்காயம்மா மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார். இருவரும் ஞாயிறு அன்று தங்கள் குழந்தைகளுடன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இரட்டை குழந்தைகளை தம்பதியின் உறவினர்கள் கவனித்து கொள்வார்கள் என கூறியுள்ளனர்.

மாயமான இளம்பெண் : பனிமூட்டத்தில் 90 மணி நேர தேடுதல் : கடைசியில் கிடைத்த சோகம்!!

இளம்பெண்

ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் மஹாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதியில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த அலிஜா ராணா (24) என்கிற இளம்பெண் புனேவில் உள்ள ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த வியாழக்கிழமையன்று தன்னுடைய வாட்ஸ் அப்பில் “போய் வருகிறேன்” என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனை பார்த்த அவருடைய பெற்றோர் மகளுக்கு போன் செய்து பார்த்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால், பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து செல்போன் சிக்னலை வைத்து கடைசியாக அவர் சென்ற இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு சென்றனர். வியாழக்கிழமை மாலை லோனாவாலா பகுதியில் அவரது பணப்பையும், மொபைலும் கண்டுபிடிக்கப்பட்டன. அதனடிப்படையில் ஷிவ்தர்க் மித்ரா என்ற மலையேற்றக் குழுவைச் சேர்ந்த 32 மலையேற்றக்காரர்களுடன் உள்ளுர் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

தொடர்மழை மற்றும் பனிமூட்டத்தால் அவரை கண்டுபிடிப்பதற்கு அந்த குழுவினர் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேடுதல் பணி ஆரம்பமானது. வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து தேடிக்கொண்டிருந்த குழுவினர் வாக்கி டாக்கீ மூலம் தங்களுடன் தொடர்பிலே இருந்தனர்.

மதியம் மூன்று மணியளவில் ராகுல் என்பவர், அலிஜாவின் உடலை கண்டுபிடித்து விட்டதாக மற்றவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அங்கு விரைந்த மற்ற மூன்று பேர், 300 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலிஜாவின் உடலை மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அவருடைய உ டலை பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், த ற்கொ லைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

250 பேர மற்றும் பூட்டப் பிள்ளைகளுடன் வாழும் 108 வயதான பாட்டி!!

இலங்கையில் அதிக வயது கொண்ட மூதாட்டி மொனராகலை மாவட்டத்தின் சியம்பலான்டுவ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.

1912ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 4ஆம் திகதி மஹராவ பிரதேசத்தில் பிறந்த 108 வயதுடைய சுது ஹாமி என்ற 8 பிள்ளைகளின் தாயாராவர்.

தற்போதுஅவருக்கு 250 பேர மற்றும் பூட்டப் பிள்ளைகள் உள்ளனர் என பேத்தி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் விவசாயம் செய்து, சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களாகும். சுது ஹாமி தற்போது மூன்றாவது மகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரது மூன்றாவது மகளுக்கு தற்போது 67 வயதாகின்றது.

“என்னை போன்று புண்ணியம் செய்தவர்கள் இந்த உலகில் இருக்க மாட்டார்கள். 11 முறை சிவனொளிபாத மலைக்கு சென்று வந்துள்ளேன். அந்த காலங்களில் தென்னை மரத்தில் ஏறி ஒரே நேரத்தில் 16 தேங்காய்களை பறிப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தற்போது 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றார். எனினும் அதிக மண் சரிவு ஏற்படும் இடத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். உறங்கும் அறையில் மண் மேடு தொடர்ந்து சரிந்து விழுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாங்கள் வாழ சிறிய வீடு ஒன்றை அமைக்க உதவினால் புண்ணியமான இருக்கும் என 108 வயதான மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சிகை அலங்கார போட்டிக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ் பெண்!!

தமிழ் பெண்

சர்வதேச சிகை அலங்கார போட்டி தற்போது பாரிஸில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் கலந்துக்கொண்டுள்ளனர்.

குறித்த மூவரில் இலங்கை தமிழ் பெண்ணொருவரும் கலந்துகொண்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கயல்விழி ஜெயபிரகாஷ் என்பவரே இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இவர், கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் பல விருதுகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்தான நோய்!!

ஆபத்தான நோய்

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 5 மலேரிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள 5 நோயாளியும் தம்பதிவ யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் இருந்து மலேரியா நோய்த் தொற்று இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் நாடு முழுவதும் மலேரியா நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும்.

இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 28 பேர் மலேரியா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் அண்மையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள். அவர்கள் ஒரே காலப்பகுதியில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பக்தர்களாகும்.

இதனால் மலேரியா நோய்த் தொற்று பரவுவதனை கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

பறவை மோதியதால் ஏற்பட்ட கோளாறு : 146 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!

ஸ்ரீலங்கன் விமானம்

இலங்கையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பறவை மோதியதால் ஏற்படவிருந்த விபத்து தவிரக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் 146 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை குறித்த விமானம் திருச்சி நோக்கி சென்றுள்ளது.

காலை 8.40 மணிக்கு தரையிறங்க வேண்டிய குறித்த விமானத்தின் இடதுபக்க இயந்திரத்தில் பறவை மோதி பழுது ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் 146 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த விமானம் சீர் செய்யப்பட்டு மீண்டும் 40 பயணிகளுடன், இலங்கை திரும்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் திருச்சி சென்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை இரவோடு இரவாக சரி செய்த நிலையில், அந்த விமானம் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்பாக குவிந்த சுகாதாரத் தொண்டர்கள்!!

சுகாதாரத் தொண்டர்கள்

சுகாதார தொண்டர்களிற்கான நேர்முக தேர்வுகள் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இன்று (2019.09.16) வழங்கப்பட்டது.

வடமாகாணத்திற்கு சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டிருந்தார்.

அத்தோடு இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1,923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாறும் பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதன் பிரகாரம் விண்ணப்படிவங்களை பெற்றுகொள்வதற்காக நூற்றுக்கணக்கான தமிழ், சிங்கள சுகாதார தொண்டர்கள் இன்று காலை முதல் வவுனியா பிராந்தியசுகாதார சேவைகள் பணிமனை முன்பாக குவிந்தனர். குறித்த விண்ணப்படிவங்கள் பூர்த்திசெய்யபட்ட பின்னர் மீண்டும் திணைக்களத்திற்கு வழங்கபட்டு அவர்களிற்கான நேர்முக தேர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கல்வி தகமை, வயது எல்லை பாராது சேவைக்காலத்தின் அடிப்படையில் தங்களிற்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக சுகாதார தொண்டர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளத்தில் இளைஞர் யுவதிகளுக்கு சமூக பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு!!

செயலமர்வு

செட்டிகுளம் இளைஞர் கழக சம்மேளமும் செட்டிகுளம் இளைஞர் கழகங்கள் இணைந்து நடாத்தும் சமூக வலையத்தள பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை இடம்பெற்றது

செட்டிகுளம் இளைஞர் கழக பிரதேச சம்மேள தலைவர் என்.நவநீதன் தலமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் விரிவுரையாளராக ஷர்ஜூன் கலந்து கொண்டு செயலமர்வில் பங்கு பற்றி இளைஞர் யுவதிகளுக்கு இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தொடர்பான விளக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்.

இச் செயலமர்விற்கு அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் நிருஜன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ச.சசிக்குமார் ஆகியார் கலந்து கொண்டிருந்ததுடன் 60க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.

6 குழந்தைகள் உட்பட 134 பேரை தலை து ண்டித்து கொ டூரமாக கொ ன்ற சவுதி அரசு : அதிர்ந்த ஐ.நா!!

அதிர்ந்த ஐ.நா

சவுதி அரேபியாவில் 2019ம் ஆண்டு தற்போது வரை 6 குழந்தைகள் உட்பட சுமார் 134 பேர் தூக்கலிடப்பட்டும், தலை து ண்டிக்கப்பட்டும் ம ரண த ண்டனை நிறைவேற்றியுள்ளது. கொ ல்லப்பட்டவர்கள் கொ டூரமான முறைகளால் சி த்திரவதை செய்யப்பட்டு தூ க்கலிடப்பட்டும், தலை து ண்டிக்கப்பட்டும் ப டுகொ லை செய்யப்பட்டனர் என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ம ரண த ண்டனைகளை குறைப்பதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உறுதியளித்த போதிலும், நாட்டில் ம ரணத ண்டனைகள் அதிகரித்து வருகிறது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், சவுதியில் மேலும் 24 பேர் ம ரணத ண்டனை நிறைவேற்றுவதற்கான ஆபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதில் மூன்று குழந்தைகள், இளவரசரின் முக்கிய அரசியல் எதிரிகள், மதகுருமார்கள் மற்றும் மனித உரிமை பிரச்சாரகர்கள் அடங்குவர்.

2019 ஆம் ஆண்டு ம ரணத ண்டனை நிறைவேற்றப்பட்ட 6 இளைஞர்கள், குழந்தையாக இருக்கும் போது செய்த கு ற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ம ரண த ண்டனைத் திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட நிகழ்வில், சவுதி அரேபியாவில் நடந்த ச ட்டவிரோத மற்றும் தன்னிச்சையான ம ரணத ண்டனைகள், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மனித உ ரிமை மீ றல்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ம ரண த ண்டனை நிறைவேற்றப்பட்ட 3 பெண்கள் உட்பட 51 பேர், போ தை மருந்து தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உலகின் பல நாடுகளில் இது சிறிய கு ற்றமாகவே கருதப்படுகிறது.

சவுதியில் ம ரண த ண்டனை நிறைவேற்றி கொ ல்லப்பட்டவர்களில் குறைந்தது 58 பேர் வெளிநாட்டினர் மற்றும் பெரும்பாலானவர்கள் ஷியா இஸ்லாத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். 21 பாகிஸ்தானியர்கள், 15 ஏமன்கள், சிரியாவிலிருந்து 5 பேர் மற்றும் எகிப்திலிருந்து 4 பேர் கொ ல்லப்பட்டனர்.

மேலும், 2 ஜோர்டானியர்கள், 2 நைஜீரியர்கள், ஒரு சோமாலியன் மற்றும் அடையாளம் தெரியாத நாடுகளைச் சேர்ந்த இருவர் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22ம் திகதி தீவிரவாதம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 37 பேருக்கு ஒரே நேரத்தில் மர ணத ண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் 16 வயதுடைய Abdulkareem al-Hawaj, 17 வயதான Mujtaba al-Sweikat ஆகியோர் அடங்குவர்.

2018 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் பேசிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பிராந்தியத்தில் ஒரு சில பகுதிகளில் ம ரண த ண்டனையை குறைத்து ஆயுள் த ண்டனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

எனவே நாங்கள் அந்த பகுதியில் புதிய சட்டங்களை உருவாக்க அரசாங்கம் மற்றும் சவுதி நாடாளுமன்றம் மூலம் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.

மேலும், இது முடிவடைய ஒரு வருடத்திற்கு மேலாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், 100 சதவீதம் மாற்ற முடியாது, ஆனால் அதை பெரிய அளவில் குறைப்போம் என தெரிவித்திருந்தார்.

அவருடன் சென்று வா என 15 வயது மகளை ஏமாற்றி அனுப்பிய தாய் : நம்பி சென்ற சிறுமி கண்ட காட்சி!!

சிறுமி கண்ட காட்சி

இந்தியாவில் பெண்ணொருவர் தனது 15 வயது மகளை 1 லட்சத்துக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமியை அவர் தாய் பதார்பூரில் உள்ள அவரது சித்தியின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

ஆனால், அங்கு செல்வதற்கு பதிலாக நிசாமுதீன் பகுதியில் ஒரு ஹொட்டலுக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், உன்னை ஒருவர் வந்து அழைத்துச் செல்வார். அவரே உன்னை வீட்டிற்கு திரும்ப கொண்டு வந்து விட்டுவிடுவார் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி தாய் கூறிய நபருடன் சென்றார்.

அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சில பெண்கள் நகைகள், திருமண உடைகளுடன் இருப்பதை சிறுமி கண்டார். அதை சிறுமியிடம் கொடுத்த பெண்கள் அணிந்து கொண்டு தயாராக இருக்கும்படி கூறியுள்ளனர்.

பின்னர் அச்சிறுமியிடம், உன்னை ரூ.1 லட்சம் கொடுத்து உன் தாயிடம் இருந்து வாங்கிவிட்டோம் என கூறியுள்ளனர். இதையடுத்து பயந்து போன சிறுமி எப்படியோ தப்பித்து சொந்த ஊருக்கு வந்து நடந்ததை அங்கிருருந்தவர்களிடம் கூறிய நிலையில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் சிறுமியிடம் விசாரித்த போது தாய், வளர்ப்பு தந்தை மற்றும் மூன்று சகோதரர்களுடன் தான் வசித்து வந்ததாகவும், தாய்க்கு கடன் உள்ளதால் தன்னை விற்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்த பொலிசார் அவள் தாய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஒரு முத்தத்தால் வேலையை இழந்த ஆசிரியர் : சமையல் வேலை பார்க்கும் பரிதாபம்!!

வேலையை இழந்த ஆசிரியர்..

தனது உதவியாளரான ஒரு இளம்பெண்ணுக்கு பணியின்போது முத்தம் கொடுத்த ஒரு ஆசிரியர் தனது வேலையையே இழந்துள்ளார். Powysஐச் சேர்ந்த John Lawrence (35) பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவந்தார். ஒருநாள் ஆறு வயதுடைய மாணவிகளை வெளியே அழைத்துச் சென்றபோது, அவருடன் உதவியாளரான 18 வயது இளம்பெண் ஒருவரும் சென்றுள்ளார்.

மாணவிகளை கவனிக்காமல் விட்டுவிட்டு தனது உதவியாளருக்கு முத்தமிட்டுள்ளார் Lawrence.
மாணவிகளை கவனிக்காமல் விட்டதாகவும், பணியின்போது முறைதவறி நடந்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த இளம்பெண்ணோ, Lawrenceதான் தன்னை முத்தமிட்டதாகவும், தான் அவரை பிடித்து தள்ளிவிட்டதாகவும் கூறிவிட்டார். பின்னர் விசாரணையில் இருவருக்கும் கொஞ்ச காலமாகவே பழக்கம் இருந்து வந்ததும்,

அந்த பெண் 18 வயதை அடைந்ததும் இருவரும் தங்களுக்குள் நி ர்வாண படங்களை பகிர்ந்து கொண்டதும் தெரியவந்தது. Lawrenceஐ பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழு ஓராண்டுக்கு பணியிடைநீக்கம் செய்தது. ஆனால் அவமானம் காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார் Lawrence.

முட்டாள்தனமாக ஒரு முத்தத்தால் வேலையையே இழந்துவிட்டேன் என்று கூறும் Lawrence தற்போது ஹொட்டல் ஒன்றில் செஃப் ஆக பணியாற்றி வருகிறார். Lawrence திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மிகப்பெரும் அதிசயம் : இன்று முதல் மக்களின் பாவனைக்காக!!

ஆசியாவின் மிகப்பெரும் அதிசயம்

தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

தாமரை கோபுரம் தொடர்பான முத்திரை வெளியிட்டு வைக்கும் வைபவம் தற்போது இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

350 மீற்றர் உயரமாக இந்த கோபுரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சீன உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தில் பல வியப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு : கடைசியாக கிடைத்த தீர்வு!!

சாத்தான் கொம்பு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார்.

சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளது.

ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை Sagar’s Bhagyoday Tirth மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ஷியாம் லால் ஒரு Sebaceous Horn நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் Vishal Gajbhiye கூறினார். இந்த அரிய சம்பவம் சர்வதேச அறுவை சிகிச்சை இதழில் வெளியிட அனுப்பப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

40 வருடங்களாக கண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர் : இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

கண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர்

இந்தியாவில் 40 ஆண்டுகளாக கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வரும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்தவர் தயாராம் சாஹூ(60). இவர் சிறு வயதில் இருந்தே கண்ணாடி துண்டுகள் சாப்பிடுவடை பழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது 40 வயதாகும் இவர் இப்போது வரை கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வருகிறார். இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்று கேட்டால், அவர் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சாதரணமாக சிரித்து கொண்டே கூறுகிறார்

இது குறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் எதையாவது செய்ய வேண்டும் என்று கண்ணாடித் துண்டுகளை வாயில் போட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

ஆனால் அதுவே காலப்போக்கில் பழகிவிட்டது. இப்போது விடமுடியவில்லை. இது உண்மையிலேயே உடலுக்கு ஆபத்தான ஒன்று. யாரும் இதை பின்பற்ற வேண்டாம். இதைச் சாப்பிடுவதால் எனக்கு இதுவரை பாதிப்பில்லை என்றாலும் பற்கள் பாதிப்படைந் துள்ளன.

எனது குடும்பத்தினருக்கும் இது தெரியும். திருமணமான புதிதில், என் மனைவி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள், கடந்த 40, 45 வருடங்களாக இதை சாப்பிட்டு வருகிறேன். இப்போது குறைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இவர் கண்ணாடி துண்டுகள் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது