பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் 70 வயது தமிழர்!!

70 வயது தமிழர்

தமிழகத்தைச் சேர்ந்த 70 வயதான நபர் ஒருவர், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற 70 வயது முதியவரே இவ்வாறு கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இது உண்மையா?அல்லது நகைச்சுவையா? என்று பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், சிந்துவைக் க டத்திச் சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த வாராந்திர கூட்டங்களின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மலைச்சாமி, ஆட்சியரிடம் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் தன்னுடைய புகைப்படத்துடன், அவரை திருமணம் செய்து கொள்ள தனக்கு இருக்கும் ஆர்வத்தை வலியுறுத்தும் கடிதத்தை அளித்துள்ளார்.

அவர் அந்த மனுவில் தான்(மலைச்சாமி) ஏப்ரல் 4, 2004 அன்று பிறந்த 16 வயது சிறுவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவின் விளையாட்டு வளர்ச்சியால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், இப்போது அவர் தனது வாழ்க்கைத் துணையாக மாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

27 வயதான மனைவியின் ச டலத்தை பார்த்து கதறி அழுத கணவன் : விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

கதறி அழுத கணவன்

தமிழகத்தில் மனைவியை சமையலறையில் வைத்து கொ லை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் வசமாக சிக்கியுள்ளார். பொன்னேரியை சேர்ந்த தம்பதி திரேச்குமார் – கோமதி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திரேச்குமார் ஆந்திராவில் பணிபுரியும் நிலையில் குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திரேச்குமார் கடைக்கு போய் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்க சொன்னார். கோழிக்கறியை எடுத்து கொண்டு கோமதி சமையலறைக்கு சென்ற நிலையில் குழந்தையை கவனித்து கொள்ளுமாறு கணவனிடம் சொன்னார்.

அதற்கு திரேச்குமார் மறுத்ததோடு இது தொடர்பாக மனைவியுடன் ச ண்டை போட்டார். இதையடுத்து குழந்தையையும் கவனித்து கொண்டு எப்படி, சமையலும் செய்வது என்று கோமதி கேட்க, திரேச்குமார் ஆத்திரமடைந்தார்.

அதனால் சரமாரியாக கோமதியை தா க்கியதுடன், கீழே கிடந்த ஒயரை எடுத்து கோமதியின் கழுத்தை சுற்றி இ றுக்கி கொ ன்றார். பின்னர் கோமதி தூ க்கிட்டு த ற்கொ லை செய்ததாக மாமியார் வீட்டுக்கு தகவல் சொன்னார்.

அ திர்ச்சியடைந்த அவர்கள், மகளின் ச டலத்தை கண்டு கதறி அழுதனர். திரேச்குமாரும் ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். இதனால் திரேச்குமார் மீது சந்தேகம் வராத நிலையில், கோமதியின் உறவினர்களில் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து, பொலிசாரின் உதவியுடன் கோமதியின் உ டல் பி ரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது. அதன் முடிவில் கோமதி கொ ல்லப்பட்டது தெரிந்தது, இதையடுத்து திரேச்குமாரிடம் நடத்திய விசாரணையில் மனைவியை கொ லை செய்ததை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்தனர்.

பெற்றோர் பிடிவாதம் : மலை உச்சியிலிருந்து குதித்த காதல் ஜோடி!!

காதல் ஜோடி

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம் காதல் ஜோடிகள் த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரும் ஆம்பூர் நகரைச் சேர்ந்த நீலாம்பரி என்பவரும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் போது காதலித்துள்ளனர்.

இருவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இளம் காதல் ஜோடி, போளூர் சம்பத்கிரி மலையிலிருந்து குதித்து த ற்கொ லைக்கு முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் சிக்கிய காதல் ஜோடியை சிறுகாயங்களுடன் மீட்ட பொதுமக்கள், த ற்கொ லை முயற்சியிலிருந்து தடுத்து நிறுத்தினர்.

அத்துடன் நீலாம்பரியை அவர்கள் குண்டுகட்டாக தங்களின் தோள்களில் சுமந்து மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். இதனால், உ யிரை மாய்த்து கொள்ளவிருந்த காதல் ஜோடி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தகவலறிந்த போளூர் பொலிசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதல் ஜோடி த ற்கொ லை க்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் விபத்தில் சிக்கிய திருமண ஜோடி : சோகத்தில் குடும்பத்தினர்!!

விபத்தில் சிக்கிய திருமண ஜோடி

இன்றைய தினம் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் நாளைய தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற இருந்த நிலையில், இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றுள்ளனர்.

இருவரும் குருமன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மணப்பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், துணைவனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண்ணும் சிறு காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

80 ஆயிரம் ரூபாய் அபராதம்

பலங்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதி பத்திரம், வரி செலுத்திய சான்றிதழ் மற்றும் வாகன அனுமதி பத்திரம் இன்மை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பலங்கொட நீதவான் ஜயருவன் திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் அவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பலங்கொட கல்தொட்டை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இளைஞனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயம்!!

அவுஸ்திரேலியா – சிட்னி Strathfield பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாகவும், அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சக்திவேல் லோகநாதன்(28) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சக்திவேல் லோகநாதன் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை (15.09.2019) பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திலுள்ள CCTV-யில் grey jacket, கருநீல tracksuit pants மற்றும் கருநீல ரீ-ஷேர்ட்டுடன் அவரது தோற்றம் பதிவாகியுள்ளது.

இந்தியப்பின்னணி கொண்ட சக்திவேல் லோகநாதன் IT துறையில் பணிபுரிபவர் என்றும் Wollongong பகுதிக்கு அவர் ஏன் சென்றார் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர் தனது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தவில்லை என்றும் எவ்வித தொடர்பாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் Crimestoppers-ஐ 1800 333 000 என்ற இலக்கத்திலோ அல்லது https://nsw.crimestoppers.com.au/ என்ற இணையத்தளத்திலோ தொடர்புகொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் காவல்துறை கோரியுள்ளது.

சவூதியின் எரிபொருள் வயல் மீது தா க்குதல் : இலங்கைக்கு ஏற்பட போகும் பாதிப்பு!!

இலங்கைக்கு ஏற்பட போகும் பாதிப்பு

சவூதியின் மசகு எண்ணெய் விலை உயர்த்தப்பட்டால் இலங்கைக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சவூதியின் எரிபொருள் வயல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தா க்குதலை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இலங்கை, சிங்கப்பூரில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்தாலும் மத்திய கிழக்கில் இருந்தே அதிக மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

எனினும் சவூதியில் எரிபொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த தா க்குதலுக்கு யேமனின் ஹுதி தீவிரவாதிகள் உரிமைக்கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் க டத்தப்பட்ட இரட்டை சிறுமிகள் : CCTV காட்சிகள்!!

இரட்டை சிறுமிகள்

கொழும்பில் கா ணாமல் போன இரட்டை சகோதரிகள் க டத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஹிக்கடுவ இரட்டை சிறுமிகள் இருவர் கொழும்பு சென்ற நிலையில் கா ணாமல் போயுள்ளனர்.

ஹிக்கடுவ பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி மற்றும் சித்மி என்ற 14 வயது இரட்டை சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். சிறுமிகளின் பெற்றோர் சட்டரீதியாக பிரிந்துள்ள நிலையில், தந்தை ஹிக்கடுவ பிரதேசத்திலும் தாய் பன்னல பிரதேசத்திலும் வசித்து வருகின்றனர்.

சிறுமிகள் கா ணாமல் போவதற்கு முன்னர் தனது தந்தையின் அண்ணன் வீட்டில் இருந்துள்ளனர். எனினும் காலை தேடும் போது அவர்கள் வீட்டில் இல்லாமையினால் பெரியப்பா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இருவரையும் பெரியப்பா எச்சரித்தமையினால் அவர்கள் இவ்வாறு வீட்டில் இருந்து சென்றிருக்கலாம் என சந்தேகித்த நிலையில் வீதியில் உள்ள சிசிடீவி கமராவை சோதனையிட்ட போது அவர்கள் கொழும்பு நோக்கி செல்லும் பேருந்தில் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்காமல் போயுள்ளது. அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் தாம் அங்கிருந்து செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் கொழும்பு கோட்டையிலுள்ள சிசிடீவி கட்டமைப்பை சோதனையிட்ட போது, கோட்டை ரயில் நிலைய பகுதியில் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

அதன் பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிய சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் க டத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் சிறுமிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து

அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதான வீதியில் இரு மோட்டார்சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் படுகாயமடைந்த இருவர் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் அதே திசையில் சென்ற மற்றுமொரு மோட்டார்சைக்கிளை கடந்து திடீரென சமிக்ஞை விளக்கின்றி வளைவொன்றில் திருப்ப முற்பட்டுள்ளது.

இதனால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயம்!!

விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயம்

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி தாயும், மகளும் மோட்டர் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அதே வழியில் வேகமாக வந்த பிறிதொரு மோட்டார் சைக்கிள் குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா சாயி இல்லம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக்கு சாயி இல்லம் விளக்கம்!!

சட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இல்லத்தில் இணைக்க முடியும் என வவுனியா, கூமாங்குளம் சாயி முதியோர் இல்லம் தெரிவித்துள்ளது.

கடந்த 14.09.2019 அன்று இரவு அடைக்கலம் கோரிச் சென்ற முதியவர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்காது திருப்பி அனுப்பியமை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாயி இல்ல நிர்வாகம் இவ்வாறு தெரிவித்தது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சட்டதிட்டங்களுக்கு அமையவே நாம் முதியவரை எமது இல்லத்தில் இணைக்க முடியும். மனிதாபிமானம் வேறு. சட்டம் வேறு. இங்கு வேலை செய்பவர்களில் பலர் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களாகவும் இருப்பதால் சட்டத்திற்கு அமையவே செயற்பட முடியும்.

குறித்த தினத்தில் முதியவரை எமது இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அங்கு நின்ற எமது இல்லத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் ஏதாவது தவறாக இருந்திருக்கலாம். ஆனால் இணைக்காமல் விட்டது சரியானதே.

நாம் ஏற்கனவே சிறுவர் இல்லம் நடாத்திய போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டோம். முதியோர் இல்லத்திலும் அவ்வாறான பிரச்சனைகள் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையிலேயே செயற்படுகின்றோம்.

நாம் தற்போது தான் முதியோர் இல்லமாக மாற்றியிருக்கின்றோம். 5 முதியவர்கள் தான் இருக்கிறார்கள். 50 பேர் வரை இணைக்கவுள்ளோம். ஆனால் எம்மிடம் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி அதன்படி முதியவரை அழைத்து வந்தால் அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி, பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

திருமணத்தன்று மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!!

தந்தை கொடுத்த அதிர்ச்சி

மகளின் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் அவரின் தந்தை அதிகாலை உ யிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் மாகடுவாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனது இளைய மகளின் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாள் இரவு உறவினர்களின் உதவியுடன் வீட்டை அலங்கரிக்கும் பணிகளில் குறித்த தந்தை ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அன்றிரவு 10 மணியளவில் அனைவரும் தேநீர் அருந்தியுள்ளனர். பின் குறித்த நபருக்கு லேசாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை மோசமானதை தொடர்ந்து, அங்கிருந்து நிகவெரடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை அவர் உ யிரிழந்துள்ளார்.

நேற்று முற்பகல் நிகவெரடிய வைத்தியசாலையில் பி ரேத பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன் பரிசோதனை அறிக்கையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுர நிர்மாணத்தில் 200 கோடி ரூபாய் காணாமல் போனது உண்மையா?

தாமரை கோபுர நிர்மாணத்தில்..

தாமரை கோபுரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் 200 கோடி ரூபாய் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி கூறியது உண்மை என்றால், அது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

200 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருக்குமாயின் அது சம்பந்தமாக தகவல்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்துனில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கூறியதற்கு அமைய 2012 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பணம் செலுத்தப்பட்ட நிறுவனத்தை காணவில்லை. பணம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிறுவனம் வழங்கிய முகவரியில் அப்படியான வீதியே சீனாவில் இல்லை.

தற்போதைய அரசாங்கத்தின் மிக சிறிய தவறுகளுக்காக கூட ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணை குழுக்களை நியமிக்க அவசரம் காட்டும் ஜனாதிபதி இது சம்பந்தமாக ஏன் இன்னும் அமைதியாக இருந்து வருகிறார்?

200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதை அறிய விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்து, உண்மையை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் துஷார இந்துனில் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாணவன் செயற்கை கை ஒன்றை உருவாக்கி சாதனை : குவியும் வாழ்த்துக்கள்!!

முல்லைத்தீவு மாணவன் சாதனை

முள்ளிவாய்க்கால் போா் அவல பகுதிக்குள் வாழ்ந்த முல்லைத்தீவு- மல்லாவியை சோ்ந்த பல்கலைக் கழக மாணவன் ஒருவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை புாிந்துள்ளான்.

மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இம் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்.

2009 சனவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொ ல்லப்பட்டனர்.

அன்றைய நாள் இவரின் தந்தை மற்றும் ஏனையோரை உடையார்கட்டு மருந்தகத்தில் இயங்கி வந்த நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு உழவு இயந்திரம் மூலம் கொண்டு வரும்போது அவ்விடத்தில் நின்ற நான் (சுரேன்) இப்புகைப்படத்தினை எடுத்திருந்தேன். (துசாபனின் தந்தையை உழவுஇயந்திரத்தில் இருந்து இறக்கும் காட்சி) போரின் போது கண் முன்னே கண்ட அவல காட்சிகள்.

துசாபனின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. மே 16 2009 வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்து வந்திருந்த துசாபன், போர்க்காலப்பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கைகளை உருவாக்கும் முயற்சியில் தனது நேரத்தினை கடந்த ஆண்டுகளில் செலவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் அதில் வெற்றியும் கண்டுள்ளார். தனது கல்வி முறுவுறும் நேரத்தில் கைகளை இழந்தவர்களுக்கு சென்றடையும் வகையில் செய்து கொடுக்க இருப்பதாகவும் மிகக்குறைந்த விலையில் எவ்வாறு செய்ய முடியும் என்று தற்பொழுது ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரது முயற்சியை பாராட்ட விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

மாணவிகளை து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய மற்றுமொரு ஆசிரியர் கைது!!

ஆசிரியர் கைது

பாணந்துறை சிலுவை சந்தி பகுதியில் பகுதி நேர ஆசிரியரின் வீட்டுக்கு ஆங்கிலம் கற்க சென்ற இரண்டு மாணவிகள் து ஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியரை தாம் கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாணவிகள் நேற்று முற்பகல், சந்தேக நபரான ஆசிரியரிடம் இரண்டு மணி நேரம் ஆங்கிலம் கற்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள இந்த மாணவிகள், ஆசிரியரின் வீட்டுக்கு சென்ற போது, அங்கு அவர் மட்டுமே இருந்துள்ளார். சந்தேக நபர் தனது மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

மனைவி வீட்டில் இல்லாததால், தேனீர் தயாரிக்க முடியுமா எனக் கேட்டு, சந்தேக நபர் தந்திரமான முறையில் தம்மை து ஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் தமது பெற்றோரிடம் சம்பவம் பற்றி கூறியதுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்தே பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம் : அமைச்சரவையில் முக்கிய அறிவிப்பு!!

யாழ் பாலாலி..

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது யாழ். பாலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி.) ஒன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த அமைச்சரவை பத்திரத்தை சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தாக்கல் செய்திருந்தார். இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய விமான சேவைகள் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பாலாலி விமான நிலையத்திற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டாலும் அரசின் உதவிகள் மிக விரைவாக கிடைப்பது எமது பகுதிக்கு கிடைத் பெரும் வரப்பிரசாதம் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.