வவுனியாவில் வலயக்கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!!

வவுனியாவில்..

தமது பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளிற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்து வவுனியா மகாகச்சகொடிய, மருதமடு, அலகல்லை போன்ற பகுதிகளில் வசிக்கும் பெற்றோர்கள் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டிருந்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த பெற்றோர்கள்..

“தமது பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாகுறை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தரம் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றது.

ஆசிரியர் நியமனங்களின் போது அனைத்து வசதிகளும் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளிற்கே முக்கியத்துவம் அளிக்கபடுகின்றது. அப்படியாயின் எமது பிள்ளைகள் எந்தவகையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

நாம் வீதி கேட்கவில்லை, வீடு கேட்கவில்லை, ஆனால் எமது பிள்ளைகளுக்கு பெறுமதியான கல்வி வேண்டும். அதனையே கேட்கிறோம். எனவே மிக விரைவாக எமது பாடசாலைகளிற்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து தேசிய கல்வியற்கல்லூரிகளிற்கு தெரிவு செய்யபட்டு வெளியேறும் சிங்கள ஆசிரியர்களை வவுனியாவில் அமைந்துள்ள சிங்கள பாடசாலைகளிற்கே நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக வவுனியா வலயக்கல்வி அதிகாரி மு.இராதாகிருஸ்ணனிடம் கலந்துரையாடிய அவர்கள் மழையையும் பொருட்படுத்தாது வலயகல்வி பணிமனை முன்பாக நீண்ட நேரம் குழுமியிருந்தனர்.

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணனிடம் வினவியபோது, “அவர்களது கோரிக்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி திணைக்களத்திற்கு தெரியப்படுத்தவுள்ளேன்.

அத்துடன் மிகவிரைவில் தற்காலிகமாக அவர்களிற்கு ஏதாவது தீர்வினை வழங்கமுடியுமா என்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக” அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து

மட்டக்களப்பு – மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பெரியகல்லாறு, காளிகோவில் வீதியை சேர்ந்த ஜெ.கேதுசன் (13வயது )என்னும் சிறுவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிசிக்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் மரணம் காரணமாக பெரியகல்லாறு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

மாணவனின் அபூர்வ கண்டுபிடிப்பு : ஜனாதிபதி மைத்திரி கொடுத்த பரிசு!!

அபூர்வ கண்டுபிடிப்பு

இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.

ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் தயாரித்துள்ளார். அதற்கு “Walking charger” என பெயரிட்டுள்ளார்.

திருகோணமலை, தன்தலாவ மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வரும் சத்துர மதுமால் என்ற மாணவன் இதனை தயாரித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி ஐந்து இலட்சம் பரிசு வழங்கியுள்ளார். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை சத்துர மதுமால் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட யானை தாக்கிய விமானப்படை வீரர்!!

விமானப்படை வீரர்

பதவியா பகுதியில் குடிமனைக்குள் புகுந்த யானை தாக்கியதில் விமானப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம், பதவியா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கடமைக்கு செல்வதற்காக காலை புறப்பட்ட விமானப்படை வீரர் ஒருவரை அப்பகுதி குடிமனைக்குள் புகுந்து நின்ற யானை தாக்கியுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த குறித்த விமானப்படை வீரரை அப்பகுதி மக்கள் மீட்டு நோயாளர் காவு வண்டியில் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் 40 வயதுடைய விமானப்படை வீரரே படுகாயமடைந்தவராவார்.

வவுனியா பாடசாலைகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டம்!!

விழிப்புணர்வு செயற்றிட்டம்

முதியோரின் விழுமியங்கள் மாணவரை நம்பிக்கை உள்ளவராக வளர்க்கும் விழிப்புணர்வு செயற்றிடம் வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் பூலோகசிங்கம் தலைமையில் இன்று காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.

இதில் மாணவர்களின் பல்வேறு ஆக்க இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றன. சிறப்பு நிகழ்வாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோர் மாண்பு பற்றி உரை நிகழ்த்தினார்.

ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடன் சான்றோன் ஆக்குதல் தந்தை கடன் என்ற வாசகத்திற்கிணங்க தாய் தந்தையரை மதிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்து பின்பற்றும் பிள்ளை சமூகத்தையும் மதிக்கக்கற்றுக்கொள்ளும் நல்ல பிரஜையாக வளர்வார்கள்.

பிள்ளைகள் நம்பிக்கையுள்ளவராக மாற வேண்டுமானால் மூத்தோர் வாழ்க்கை முறையையும் மூத்தோரின் சிந்தனைகளையும் தேடி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாளைய சமூகத்தின் சிற்பிகளாக விளங்க இருக்கும் மாணவர்கள் தம்மை பற்றிய உயர்ந்த எண்ணங்களைக்கொண்டிருக்க வேண்டும். வானளாவ நினைத்தால் தான் நாம் பனை அளவாவது உயர முடியும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு வாழப்பழக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் முதியோர் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் தொடர்ச்சியாக வலயக் கல்விப்பணிமனையுடன் இணைந்து மாவட்ட சமூக சேவை அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

36 மணி நேரத்தில் 80 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் ஆபத்து : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

உலகில் 80 மில்லியன் மக்களை 36 மணி நேரத்தில் ம ரணத்திற்கு உள்ளாக்கக் கூடிய காய்ச்சல் நோய் தொற்று மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“ஸ்பெனிஷ் ஃபுளு” என பெயரிடப்பட்டுள்ள காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பரவியதுடன் உலகில் மூன்று பேரில் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த வைரஸ் பரவினால், அதனால், பெரிய ஆபத்து ஏற்படும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரின் தலைமையிலான நிபுணர்களின் “உலக தயார் நிலை கண்காணிப்பு குழு” மூலம் இது சம்பந்தமான உலக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்த விசேட அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையில் இந்த ஆபத்து பற்றி கூறியுள்ளனர்.

மிக வேகமாக பரவும் ஆபத்துள்ள இந்த “ஸ்பெனிஷ் ஃபுளு” வைரஸ் மூலம் உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் மரணிக்க செய்யவும் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் தேசிய பாதுகாப்பை சிறிய காலத்திற்கு ஸ்தம்பிக்க செய்ய முடியும் எனவும் தெரியவருகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் ஒபேலா வைரஸ் நோயை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மூலம் “ஸ்பெனிஷ் ஃபுளு” பரவலை தடுக்க முடியாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த “ஸ்பெனிஷ் ஃபுளு” வைரஸ் குறித்து இதற்கு முன்னர் விடுத்த எச்சரிக்கையை உலக தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நோர்வே பிரதமரும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளருமான கலாநிதி Bro Harlem Brundtland மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் செயலாளர் Alhadj As Sy உள்ளிட்ட நிபுணர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு இன்ப அதிர்ச்சி!!

இன்ப அ திர்ச்சி

அரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணி புரிந்த தற்காலிக, நாள் சம்பள, ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச நிர்வாக 25/2014 மற்றும் 25/2014/01 ஆகி சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை பூர்த்தி செய்ய முடியாமல் போனதன் காரணமாக நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொள்ளமுடியாத ஊழியர்களுக்கு குறித்த நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்ட பின்னர் தேவையின் அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்ப தரங்களுக்கு உட்பட்ட பதவிகளுக்கு தற்காலிக, நாள் சம்பளம், ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன, நிவாரண அடிப்படையில் இணைக்கப்பட்டு 2019.09.01 தினத்தன்று 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யும் நிலையில் அவர்களை நிரந்தரமாக்கி, ஓய்வூதியத்துடன் நியமனம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

சமையல் எரிவாயு மற்றும் பால் மாவின் விலைகளில் திடீர் மாற்றம்!!

எரிவாயு மற்றும் பால் மா

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக வாழ்க்கை செலவுக் குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளது. அதே வேளை 400 கிரம் பால் மாவின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் திகதி சற்று முன்னர் வெளியிடப்பட்டது!!

ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என சற்று முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கோர விபத்தில் இருவர் பலி : மூவர் படுகாயம்!!

கோர விபத்தில்..

அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹபரனையில் வேன் ஒன்றும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரனையில் வேன் ஒன்றும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை மற்றும் ஹபரனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஒரு மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் படுகாயம்!!

8 பேர் படுகாயம்

வவுனியாவில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரையான ஒரு மணி நேரத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்து சம்பங்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் தாய், மகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன், மகாறம்பைகுளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவரொருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் குருமன்காடு பகுதியிலும் மோட்டார் சைக்கிள் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த விபத்துகளில் மொத்தமாக 8 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை வவுனியாவில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 34 வயதுடைய இளைஞரொருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வைத்தியர்கள் : மக்கள் அவதி!!

மக்கள் அவதி

பல கோரிக்கைகளை முன் வைத்து வைத்தியர்கள் இன்று காலை 8 மணிமுதல் ஆரம்பித்துள்ள 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வவுனியாவில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்து காணப்பட்டமையினால் அப்பிரிவு வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதனால் வவுனியாவில் பல பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காகவும், அதிகாலை நான்கு மணி முதல் கிளினிக்களுக்காகவும், வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள், வைத்தியர்கள் எவரும் பணிக்கு சமுகம் தராமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதனால் தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் செயற்படுவதாகவும் ஏனைய பிரிவுகள் வைத்தியர்கள் இன்றி செயற்படுவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வவுனியாவில் இ.போ.ச சபையினர் டயரினை எரித்து போராட்டம்!!

இலங்கை போக்குவரத்து சபையினர்..

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் (18.09.2019) தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் போது அரசாங்கத்திற்கு எதிர்பினை வெளிப்படுத்தும் முகமாக இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (18.09) காலை சாலைக்கு முன்பாக டயரினை எரித்து சுமார் 30 நிமிடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30, 2016.02 அரச நிர்வாக சம்பள சுற்றறிக்கையின்படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி அகில இ.போ.ச ஊழியர்களினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்சங்க போராட்டத்திற்கு செப்டம்பர் மாதம் 4ம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சம்பளப் போராட்டம் ஒராண்டு நிறைவுபெற்றும் புதிய சம்பளம் ரூபா 2500 வழங்கப்படவில்லை எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அகில இலங்கை ரீதியிலுள்ள இ.போ.ச ஊழியர்கள் நேற்று முன்தினம் (16.09.2019) காலை ஆரம்பித்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவதுத நாளாகவும் இன்றும் தொடர்கின்றது.

இதனால் தூர இடங்களில் இருந்தும் கிராம பகுதிகளில் இருந்தும் வவுனியா நகருக்கு வந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடவுளின் படத்திலிருந்து திருநீறு கொட்டும் அதிசயம்!!

திருநீறு கொட்டும் அதிசயம்

வவுனியா உக்குளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த அதிசயத்தை பார்வையிட பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

உக்குளாங்குளம் குட்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் குறித்த வீட்டிற்கு இன்று காலையில் ஊடகவியலாளர்கள் சென்றபோது அங்கிருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு வீசப்பட்டது போன்று காட்சியளித்ததுடன் படத்தின் கீழும் திருநீறு காணப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், தாம் 10 வருடங்களாக பாபாவை வணங்கி வருவதாகவும் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமது மகளின் வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெற்ற நிலையில் தற்போது அவரது வவுனியா வீட்டிலும் இவ்வாறு அதிசம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மலேசியாவில் இலங்கையர்கள் மீது பொ லிஸார் து ப்பாக்கிச்சூ டு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

மலேசியாவில்..

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் ரவாங் – பத்து ஆராங்கில், பொலிஸாருக்கும் ஏனைய மூன்று பேருக்கும் இடையில் நடந்த து ப்பாக்கிச்சூ ட்டு சம்பவம் குறித்த முழு விசாரணையைத் தொடங்குமாறு, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி.இராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசிய அரசாங்கத்திடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சம்பவம் குறித்த பொலிஸாரின் பதிவுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள ச ர்ச்சை காரணமாகவே இராமசாமி இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த பிரித்தானியாவில் வசித்து வந்த, ஜனார்த்தனன் விஜயரத்னம், அவரது மைத்துனர் தவச்செல்வன் மற்றும் மகேந்திரன் சந்திரசேகரன் ஆகிய மூன்று பேர் பயணித்த ஒரு காரை, பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ்சில் என்ற இடத்தில் பொலிஸார் நிறுத்த உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர்கள் அந்த உத்தரவைப் புறக்கணித்ததால் சுமார் 7 கி.மீ, அந்தக் காரைத் துரத்திச் சென்றதாகவும் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த நபர்கள் கொ ள்ளையர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார், துரத்தும்போது அவர்களில் இருவர் அதிகாரிகள் மீது து ப்பாக்கி பி ரயோகம் மேற்கொண்டதாகவும், தற்காப்புக்காகவே பொலிஸார் திருப்பி சு ட்டதாகவும் கூறியுள்ளனர்.

இவர்களுடன் இருந்த, ஜனார்த்தனனின் மனைவி, மோகனாம்பாள் கோவிந்தசாமி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் பொலிஸ் தலைவர் நூர் அஸாம் ஜமாலுட்டின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மோகனாம்பாளின் நிலை குறித்து, தகவல்களை வழங்க பொலிஸார் மறுக்கின்றனர் என குடும்பத்தினரின் சட்டத்தரணி சிவாநந்தன் இராகவா குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸார் தங்கள் சம்பவப் பதிவில் உறுதியாக இருக்கும்போது, இ றந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேறு கதை இருக்கக்கூடும் என முதலமைச்சர் இராமசாமி தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தங்கள் நிகழ்ச்சிகளின் பதிவில் பழையக் கதை ஒன்றை மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். ரவாங்கில் நடந்த து ப்பாக்கிச்சூ ட்டில் என்ன நடந்தது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

சந்தேகத்திற்குரிய கொ ள்ளையர்களைப் பொலிஸாரின் துப்பாக்கிச்சூ ட்டில் ம ரணமடையச் செய்த பல சம்பவங்கள், பொலிஸாரின் சாட்சியங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல.

இதுவரை பொலிஸாரின் து ப்பாக்கிச்சூ ட்டில் பொதுமக்கள் இ றந்த வழக்குகளில், பொலிஸாரை பொறுப்பேற்கச் செய்வது மற்றும் து ப்பாக்கிச்சூ டு நியாயமானதா என்பதைத் தீர்மானிப்பது போன்ற எந்தவொரு தீவிர விசாரணையும் நடத்தப்படவில்லை.

உயர்மட்ட பொலிஸ் அதிகாரி அப்துல் ஹமீத் படோர் உத்தரவாதம் அளித்தபோதும், பொலிஸ் நடவடிக்கைகளில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை

தடுப்புக் காவல் ம ரணங்கள், பொலிஸ் து ப்பாக்கிச்சூட் டின் விளைவாக ஏற்படும் ம ரணங்கள் மற்றும் சீருடை அணிந்த நபர்களிடமிருந்து வெளிப்படும் பிற முறைகேடுகள் அனைத்தும் பொது மக்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது.

இதனால், பத்து ஆராங் கொ லை முதல் சம்பவம் அல்ல, நிச்சயமாக அது கடைசியாகவும் இருக்காது. இங்கு முக்கியமானது என்னவென்றால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் முழு விசாரணையைத் தொடங்க வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர் சு ட்டுக்கொ ல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவல்களை வழங்க பொலிஸார் மறுப்பதாகவும் அவரது மனைவி கா ணாமல்போயுள்ளதாகவும் சட்டத்தரணி சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனார்த்தனம் விஜயரத்னம் மற்றும் அவரது மனைவி மோகனாம்மாள் கோவிந்தசாமி ஆகியோர் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர்.

இரண்டு வாரங்கள் மலேசியாவில் தங்கியிருக்க வந்தவர்கள் என்பதுடன், வீட்டை உடைத்து திருடும் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி அவர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். கடந்த 14ஆம் திகதி அதிகாலை நடந்த து ப்பாக்கி பி ரயோகத்தில் ஜனார்த்தனன் விஜயரத்னம் கொ ல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!!

தொடரும் இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் (18.09.2019) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்.

இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30 , 2016.02 அரச நிர்வாக சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி அகில இ.போ.ச ஊழியர்களினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்சங்க போராட்டத்திற்கு செப்டேம்பர் மாதம் 4ம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சம்பளப் போராட்டம் ஒராண்டு நிறைவுபெற்றும் புதிய சம்பளம் ரூபா 2500 வழங்கப்படவில்லை எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அகில இலங்கை ரீதியிலுள்ள இ.போ.ச ஊழியர்கள் நேற்று முன்தினம் (16.09.2019) காலை ஆரம்பித்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவதுத நாளாகவும் இன்றும் தொடர்கின்றது.

இதற்கு ஆதரவு வழங்கும் ரீதியில் வவுனியா சாலை ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தூர இடங்களில் இருந்தும் கிராம பகுதிகளில் இருந்தும் வவுனியா நகருக்கு வந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.