கனடாவில் கணவனால் கொ லை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இ றந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார். ஆம் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை க த்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெ ட்டிக் கொ ல்லப்பட்டார்.
அப்போது க த்தியால் வெ ட்டப்பட்டு இர த்தம் சொ ட்டச் சொட்ட க தறிக்கொண்டே அவர் ஓடியபோது, அவரது க தறல் அவசர உதவி மையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர் போகும் வரை தர்ஷிகா எழுப்பிய ம ரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருக்கிறது.
அத்துடன் எட்டு வயது குழந்தை ஒன்று அந்த கோ ர தா க்குதலை கண்ணால் பார்த்திருக்கிறது.
இதற்கிடையில் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி மனைவியை ஓட ஓட வெ ட்டி, அவர் கீழே விழுந்தபின்னரும், உ டல் அடங்கும்வரை கு த்திக் கொ லை செய்த சசிகரனுக்கும் ஒரு சட்டத்தரணி கிடைத்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு மனைவியை அடித்தபோது, சசிகரன் சார்பில் ஆஜரான Mitch Engel என்னும் அதே சட்டத்தரணிதான்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சசிகரன் ஒருமுறை நீதிமன்றத்தை தன் கண்களால் சுற்றிப்பார்த்ததுதான், அதற்கு பிறகு அவரது கண்கள் தரையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தன. மீண்டும் அவர் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த நபர் இன்று தண்டவாளத்தில் நித்திரை கொண்டிருந்த வேளை புகையிரதத்தில் சிக்குண்டுள்ளார்.
உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் இவர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர்ழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போ லி கடவுச்சீட்டு பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒஸ்ரியா ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்தமையை குறித்த பெண் ஒப்புக்கொண்டமையினால் மினுவங்கொடை நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அ பராதம் விதித்துள்ளது.
தொடுவாவே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கே இந்த அ பராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டு போ லி கடவுச்சீட்டு உட்பட விமான டிக்கட்களை பயன்படுத்தி ச ந்தேக நபரான பெண் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஒஸ்ரியா சென்று அங்கிருந்து இத்தாலி செல்ல முயற்சித்துள்ளார்.
எனினும் ஒஸ்ரியா விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு க டத்தப்பட்டுள்ளார். நாடு க டத்தப்பட்டவர் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவருக்கு எதிராக தா க்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் அவர் கு ற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொ ள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா – செக்கட்டிபுலவு, பூவரசங்குளம் பகுதியில் நேற்று இரவு குறித்த இருவரை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது,
சந்தேகநபர்களிடம் இருந்து கொ ள்ளையிடப்பட்டதாக கருதப்படும் பொருட்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறு கொ ள்ளைச் சம்பவம் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் உடனடியாக முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண இளைஞர்களை மீண்டும் அ ச்சுறுத்தும் புதிய கெமி வா ள்வ ட்டுக் குழுவினால், தா க்கப்படும், பல இளைஞர்கள் தொடர்பாக பொலிஸார் எந்தவித கரிசனையும் இன்றி வாள்வெட்டுக் குழுவிற்கு துணை போவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரை கெமி குழுவினர் கடத்திச் சென்று, தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன், இளைஞரை அ டித்துச் சி த்திரவதை செய்து, குறித்த காணொளி மற்றும் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், நிலை குலைந்துபோன இளைஞரின் குடும்பத்தினரை ஜெயந்த என்ற இளைஞர் அ ச்சுறுத்தியதுடன், க டத்திச் செல்லப்பட்டு சி த்திரவதை செய்த இளைஞரின் தாயாரின் கழுத்தில் வாள் வைத்து அ ச்சுறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
ஆவா குழுவினர் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களை நிகழ்த்திய போது, ஆவா குழுவை கைது செய்தோம் என கூறும் பொலிஸார், கெமி வாள்வெட்டுக்குழுவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்கு துணை போகின்றதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கெமி குழுவினரால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அ ச்சுறுத்தல் விடுத்த போதிலும், அந்த குடும்பங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் பொலிஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, கெமி குழுவிற்கு ஆதரவு வழங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட அரியாலை மற்றும் பாசையூர் பகுதிகளில் புதிதாக உருவெடுத்துள்ள கெமி குழுவின் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் பாசையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்வதற்கு தயங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை அ ச்சுறுத்தும், இந்த வாள்வெட்டுச் சம்பவங்களினால், இளைஞர்கள் பயத்துடன் வாழ்வதுடன், வெளிநாட்டிற்கு தப்பி ஓடும் நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன. யு த்தம் உள்ளிட்ட பல்வேறு இழப்புக்களுக்கு முகம் கொடுத்த இளைஞர்கள் இன்று வாள்வெட்டுக் குழுக்களுக்கு பயந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவரை சி த்திரவதை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் அளவிற்கு, வாள்வெட்டுக் குழுக்களுக்கு தைரியத்தையும், துணிச்சலையும் பொலிஸார் வழங்குவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
பொலிஸாருக்கு குறிப்பிட்ட வாள்வெட்டுக் குழுவினர் சலுகைகளை செய்வதனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காது, வாள்வெட்டுக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதனால் தான், இந்த வாள்வெட்டுக் குழுக்களின் அ ட்டகாசம் தலைக்கேறியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, தற்போது முளைத்துள்ள கெமி வாள்வெட்டுக் குழு தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, வாள்வெட்டுக் குழுக்களிடம் இருந்து தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு, மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தை இழந்த கை ஒன்றுக்காக செயற்கை கையை தயாரித்துள்ளார். எஸ்.துஷ்யந்தன் என்ற இந்த இளைஞர் பல்கலைக்கழக மாணவர். நீண்ட நாள் ஆராய்ச்சிக்கு பின்னர் தனது தந்தைக்காக செயற்கை கை ஒன்றை தயாரித்து பொருத்தியுள்ளார்.
கணபதிப்பிள்ளை பத்மநாதன் என்ற இந்த இளைஞனின் தந்தையின் ஒரு கை 10 ஆண்டுகளுக்கு முன்னர் உழவு இயந்திரத்தில் சிக்கியதுடன் படுகாயம் ஏற்பட்டது. சத்திர சிகிச்சை மூலம் அவரது கை வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சையில் வெட்டி அகற்றப்பட்ட தனது தந்தைக்கு செயற்கை கையை பொருத்த முயற்சித்த போது, அதற்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால், செயற்கை கையை பொருத்துவது பத்மநாதன் குடும்பத்திற்கு கனவாக மாறி போனது.
இதன் காரணமாக பத்மநாதனின் மகன் துஷ்யந்தன் அன்று முதல் எப்படியாவது தனது தந்தைக்கு செயற்கை கை தயாரிப்பது என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கு அமைய 10 ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர், அவர் தனது தந்தைக்காக செயற்கை கையை தயாரித்து பொருத்தியுள்ளார். தந்தைக்காக செயற்கை கையை தயாரித்த இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேர் கழிவகற்றல் கிடங்கு ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வி சவாயு தாக்கி கடந்த 25.04.2019 அன்று ம ரணமடைந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இன்று (19.09.2019) வவுனியா நகரசபை அமர்வின் போது நஸ்டஈடு வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள மாடு வெ ட்டும் கொள்கலன் பகுதியில் மாட்டின் கழிவுகள் கொட்டப்படும் கிடங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நகரசபை தொழிலாளர்களில் நால்வர் குறித்த கிடங்கிலிருந்து தா க்கிய வி சவாயு காரணமாக ம ரணமடைந்திருந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு நஸ்டஈடு வழங்க வேண்டுமென சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு சபையின் தீர்மானம் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
உள்ளூராட்சி திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்ட நிலையில் இன்று இடம்பெற்ற சபை அமர்வின் போது கடமையின் உ யிரிழந்த நான்கு நகரசபை சுகாதார ஊழியர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடாக சபையின் முன்னிலையில் தலா ரூபா 1,50,000 வீதம் காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இக் காசோலையினை நகரசபை தலைவர், உபதலைவர், நகரசபை உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா குருமன்காடு , மன்னார் வீதி , வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் , கல்வி நிலையங்கள் , தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றிக்கு முன்பாகவும் ,
கால்வாய்களுக்குள்ளும் , நகரையண்டிய பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (19.09) காலை தொடக்கம் இராணுவத்தினர் கடும் சேதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் சிருடையிலும், சிவில் உடையிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
மெனிக்பாம் சிவானந்தா வீதியை மறித்து வீதித்தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினர் அவ்வீதியால் செல்லும் வாகனங்கள், பொதுமக்களை துருவித் துருவி விசாரணை செய்து வருவதுடன் பொது மக்களின் பொருட்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிக்குளம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கிராமத்தை அண்டிய காட்டுபகுதியில் சிவில் உடையிலும், இராணுவ சீருடையிலும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் கடுமையான பாதுகாப்பு பணியில் இடுபட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் பொது மக்களை பல மணிநேரம் வீதியில் தடுத்து வைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களின் பொதிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.
செட்டிக்குளத்தில் அமைந்துள்ள கஜசிங்கபுர இராணுவ முகாம் படைப்பிரிவின், மெனிக்பாம் இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற இராணுவத்தினரே இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மெனிக்பாம் கிராமத்து மக்கள்,
வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் அன்றாட பாவனைக்கு உட்படுத்தும் கைபேசி உட்பட தலைக்கவசம் வரையில் பொருட்களை சோதனையிடுவதுடன் பல மணிநேரமாக தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்டுவரும் இராணுவத்தினரின் நடவடிக்கை காரணமாக பெண்கள் குழந்தைகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
அத்துடன் செட்டிக்குளம் பிரதேசத்தில் மூவின மக்களும் வாழ்ந்து வரும் நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் கிராமம் மாத்திரமே சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கிராமத்தில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியில் வர அஞ்சுவதாக கிரம வாசிகள் தெரிவித்தனர்.
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் கடந்த மூன்று நாட்களாக தொடர் பணிப்புறக்கணிப்பு போ ராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30 , 2016.02 அரச நிர்வாக சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி அகில இ.போ.ச ஊழியர்களினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்சங்க போ ராட்டத்திற்கு செப்டம்பர் மாதம் 4ம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சம்பளப் போ ராட்டம் ஒராண்டு நிறைவுபெற்றும் புதிய சம்பளம் ரூபா 2500 வழங்கப்படவில்லை. எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்த போ ராட்டத்தில் அகில இலங்கை ரீதியிலுள்ள இ.போ.ச ஊழியர்கள் கடந்த (16.09.2019) காலை ஆரம்பித்த தொடர் வேலை நிறுத்த போ ராட்டம் மூன்றாவது நாளான நேற்று (18.09.2019) மாலையுடன் நிறைவுக்கு வந்தது.
இ.போ.ச ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அரசாங்கம் ஏற்று விரைவில் தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டமையினையடுத்து வேலை நிறுத்த போ ராட்டம் கைவிடப்பட்டது.
கோரிக்கையினை அரசாங்கம் ஏற்றுள்ளமையினையடுத்து இ.போ.ச வவுனியா சாலையில் நேற்று மாலை ஊழியர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள். தற்போது வவுனியாவில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்துகள் இணைந்து பொதுமக்களுக்கு சேவையினை வழங்கி வருகின்றன.
வவுனியா நகசபை பூங்கா வீதியில் அமைந்துள்ள புகையிரத பாதுகாப்பு கடவை இன்று (19.09.2019) காலை சுமார் 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தமையினால் அவ்வீதியூடாக பயணித்த பொதுமக்கள் மற்றும் வாகனசாரதிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
குறித்த ரயில்வே பாதுகாப்பு கடவைக்கு அருகே 100 மீற்றர் தொலைவில் (வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே) காணப்படும் ரயில்வே பாதுகாப்பு கடவை திறக்கப்பட்டிருந்த போதிலும் இப் பாதுகாப்பு கடவை சுமார் 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு கடவையில் கடமையாற்றும் ஊழியரிடம் வினவிய போது, எனது கட்டுப்பாட்டு அறைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்றும் சில நிமிடங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ள ரயில் வருகை தரவுள்ளது. இதன் காரணமாகவே 15 நிமிடங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கடவையினை மூடியதாக தெரிவித்தார்.
குறித்த பாதை 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தமையினால் அவ் வழியூடாக பயணித்த பல வாகனங்கள் மாற்றுப்பாதையூடாக தங்களது பயணத்தினை தொடர்ந்தனர்.
அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் சிகிரியாவில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலான நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மத்திய கலாச்சார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிஷாந்த தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
அந்தவகையில் எதிர்வரும் 27ஆம் திகதி சிகிரியாவை அதிகாலை ஐந்து மணிக்கே திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிதுரங்கல பகுதிக்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்வையிட செல்கின்றனர்.
இதனை அடிப்படையாக வைத்தே சுற்றுலா பயணிகளுக்கு சூரிய உதயத்தை பார்வையிட சந்தரப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலான மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழமையாக சிகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டு விநியோகமானது காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் இடம்பெறும். இவ்வாறான நிலையில் உலக சுற்றுலா தினமான எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் சிகிரியாவிலிருந்து சூரிய உதயத்தை பார்வையிடும் வாய்ப்பை சுற்றுலாப் பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சென்ற நிலையில் காணாமல் போன இரட்டை சகோதரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் உறவினர் ஒருவர் எச்சரித்தமையினால் கோபமடைந்து வீட்டை சென்ற சிறுமிகள் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த இருவரும் மாவனெல்ல வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகள் இருவரும் தற்போது வைத்திய பரிசோதனைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி மற்றும் சித்மி என்ற 14 வயது இரட்டை சிறுமிகளே காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பகுதியில் வசித்து வரும் திலீபன் சாந்தினி தம்பதிகளின் மூன்றாவது மகள் இனுஷா இதய நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். இக்குழந்தையின் தந்தையார் முன்னாள் போராளி தாயாரின் சகோதரி மாவீரா் ஆவார்.
இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் கொழும்புக்கு ஒவ்வொரு வாரமும் சென்று சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
தற்போது அவசரமாக இதயத்தில் சந்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியார்கள் தெரிவித்தள்ளனார் கொழும்பில் ஒரு மாதம் தாங்கியிருந்து சந்திரசிகிச்சை செய்ய வேண்டும்.
ஆனால் தந்தையார் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகின்றார் இவர்களினால் வாரம் ஒரு முறை கொழும்பு சென்று சிகிச்சை பெறுவது என்பது கடினமான விடயமாகும்.
அத்துடன் ஒரு மாதம் தாங்கி நின்று பிள்ளையின் சந்திரசிகிச்சை செய்ய பணவசதி இன்றி கஷ்டப்படுகின்றார்கள் பிள்ளையின் உயிரைக் காக்கவும் இவர்களின் குடும்பநிலையை கருத்தில் கொண்டு உதவி செய்ய முன்வருங்கள்.
இந்து சமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்ததை உணர்த்தும் விதமாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இம்மாதம் 1 ஆம் திகதி முதல் 30ம் திகதி வரை நாடு முழுவதும் இந்து சமய அறநெறி கல்வி கொடிதினத்தை அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் குறித்த நிகழ்வு நேற்று (18.09) வவுனியா மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றபட்டு, அறநெறி கீதம் இசைக்கபட்டு ஆரம்பமான குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறநெறி கொடிகள் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட வவுனியா மாவட்டசெயலர் எம்.கனீபா அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.
நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.