வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய வருடந்த மஹோற்வம்!!

வருடந்த மஹோற்வ விஞ்ஞாபனம்

வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய வருடந்த மஹோற்வ விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் கடந்த 04.09.2019 அன்று ஆரம்பமானது.

மஹோற்வ பெருவிழாவில் இன்று(10.09.2019) வேட்டைத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.


நாளை மறுதினம்(12.09.2019) தேர்த் திருவிழா நடைபெறவுள்ளதுடன் 13.09.2019 அன்று தீர்த்தோற்சவம் நடைபெற்று 15.09.2019 அன்று வைரவர் சாந்தியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

இம் மஹோற்வ பெருவிழாவில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் குறைப்பு!!

எரிபொருளின் விலைகள் குறைப்பு

எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லீற்றர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் எரிபொருள் விலையை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றர் 2 ரூபாவினாலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 2 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் 2 ரூபாவினால் குறைவடையவுள்ளது. எனினும் ஒக்டேல் டீசல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

வவுனியாவில் 232 பாடசாலை மாணவர்களின் பசிக்கு பால் வார்த்த ”ஈலிங்” அம்மன்!!

பாடசாலை மாணவர்களின் பசிக்கு..

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தாயக உறவுகளுக்கு பல வருடங்களாக ஆற்றி வரும் சமூக பணிகளில் ஒரு கட்டமாக, வறிய மாணவர்களின் காலை ஆகாரத்திற்கு நிகராக ஒரு கப் பசும் பால் வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் இன்று (10.09.2019) முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக தம்பனைசோலை கேதீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 60 மாணவர்களுக்கும் வவுனியா இராசேந்திரன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 172 மாணவர்களுக்கும் போசாக்கை மேம்படுத்த பசும் பால் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச் செயற்றிடத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தம்பனைசோலை கேதீஸ்வர வித்தியாலயத்தில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் கோமதி சத்தியகுமார் தலைமையில் இன்று (10.09.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் விருட்சம் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆரம்ப நிகழ்வில் லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர் கருணைலிங்கம் மற்றும் துணைவியார் ஆனந்தி, அறங்காவற் சபை உறுப்பினர் ச.ஸ்ரீரங்கன் மற்றும் அவரது துணைவியார் மனோகரி உட்பட லண்டனிலிருந்து வருகை தந்த ஆலய உறுப்பினர்கள் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

வருடாந்த அலங்கார உற்சவம்

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார பெருவிழா கடந்த (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

10ம் நாளான இன்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றதுடன் மகாறம்பைக்குளம் புளியடி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்காவடி, செடில்காவடி, பாற்செம்பு, தீச்சட்டி போன்றன பிரதான வீதியூடாக ஆலயத்தினை வந்தடைந்தது.

11ம் நாளான நாளையதினம் (11.09.2019) அம்பாள் கிராம வலம் வரவுள்ளதுடன் 12நாளான (12.09.2019) வைரவர் பூஜையுடன் விழா சிறப்புற இனிதே நிறைவுறவுள்ளது.

வவுனியாவில் தென்னை மரத்தில் தீ : விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்புப் பிரிவு!!

தென்னை மரத்தில் தீ

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்புக்குள் இருந்த தென்னை மரமொன்றில் திடீரென தீப்பிடித்தது. நகரசபை தீயணைப்படையினர் விரைந்து செயற்பட்டமையால் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளது.

இன்று (10.09.2019) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தொடர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குப்பைகளுக்கு நெருப்பு வைத்துள்ளனர்.

இதன்போது குறித்த நெருப்பு பற்றி எரிந்த போது அருகில் இருந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயை அணைக்க வீட்டு உரிமையாளர் முயற்சித்த போதும் அது பயனளிக்காமையால் உடனடியாக நகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தினர்.

விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட இருந்த அனர்த்தம் தடுக்கப்பட்டது.

மகளுக்கு 29 வயசாகி விட்டதே என திருமணத்துக்கு நிச்சயம் செய்த பெற்றோர் : காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

சென்னையில் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம் பெண் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். கோயம்பேட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60). இவரது மகள் பிரியங்கா (29). பட்டப்படிப்பு முடித்தவர். நேற்று முன்தினம் இரவு அறைக்குள் சென்ற பிரியங்கா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது பிரியங்கா தூ க்குப்போட்ட நிலையில் இ றந்து கிடந்ததை கண்டு அ திர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரியங்காவின் உ டலை மீட்டு, பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பிரியங்காவிற்கு 29 வயதாகிவிட்டதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளையை பார்த்து உள்ளனர்.

வரும் 9ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் பிரியங்காவிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்துவந்த பிரியங்கா த ற்கொ லை செய்துகொண்டதாக தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் த ற்கொ லைக்கு வேறு காரணம் இருக்கிறதா என விசாரித்து வருகிறார்கள்.

நீண்ட 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுக்காத இளம் தந்தை : மகன் இ றப்பதை வீடியோ அழைப்பில் பார்த்து அதிர்ச்சி!!

இளம் தந்தை

அமெரிக்காவில் கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாத இளம் தந்தை ஒருவர், தமது 8 வயது மகனை ப றிகொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வரும் Storment என்ற இளம் தந்தையே, தற்போது பணியை விடவும் குடும்பமே முக்கியம் என இளம் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு புதிதாக நிறுவனம் ஒன்றை துவங்கிய Storment அதன் பின்னர் வேலை என்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வந்துள்ளார். இந்த 8 ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூட ஒரு வாரத்திற்கும் அதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டதில்லை என்று கூறப்படுகிறது.

Storment மற்றும் ஜெசிகா பிராண்டஸ் தம்பதிக்கு 8 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு சிறு வயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. வேலைப் பழு காரணமாக தமது பிள்ளைகளிடம் பேசுவதோ மனைவியிடம் பேசுவதற்கோ நேரம் ஒதுக்காமல் வேலை வேலை என்றே பரபரப்பாக இயங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் காலையில், தமது மகன்களின் அறைக்கு சென்று வழக்கமாக பார்வையிட்டு செல்பவர் சம்பவத்தன்று, வேலை நிமித்தம் வீடியோ அழைப்பு ஒன்றில் மும்முரமாகியுள்ளார்.

இதனிடையே இரட்டை பிள்ளைகளில் ஒருவரான வில்லி Storment வலிப்பு நோய் காரணமாக ம ரணமடைந்துள்ளார். ஒரு அரை மணி நேரம் முன்னதாக தமது மகனின் அறைக்கு சென்று பார்த்திருந்தால் தற்போது இந்த நிலை தமக்கு ஏற்பட்டிருக்காது என அவர் வருந்தியுள்ளார்.

கனடாவில் இரு தமிழ் இளைஞர்கள் அதிரடியாகக் கைது!!

தமிழ் இளைஞர்கள் கைது

கனடாவின் ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், து ப்பாக்கியை காட்டி மி ரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக்கொண்டிருந்த போது,

உணவகத்தினுள் நுளைந்த இருவர் குறித்த இந்த நபருடனும் வரிசையில் காத்திருந்த பிறிதொருவருடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது

இந்த மு ரண்பாட்டின் போது, வெளியே இருந்து வந்த இருவரில் ஒருவர் தனது மேற்சட்டையை உயர்த்தி மறைத்து வைத்திருந்த கைத்து ப்பாக்கியைக் காண்பித்ததாகவும், மோ தல் தீவிரமடைந்த வேளையில் ஒருவர் அடித்து நிலத்தில் வீ ழ்த்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட இருவர் து ப்பாக்கிச் சூட்டுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவர்கள் சந்தேக நபர்களால் துரத்திச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்தேக நபர்களில் ஒருவர் தப்பியோடியோர் மீது து ப்பாக்கியை நீட்டியதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்தப் பகுதி ஒழுங்கை ஒன்றினூடாக ஓடிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன் இரண்டு கைத்து ப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த யாழ். இளைஞன்!!

யாழ். இளைஞன்..

அவுஸ்திரேலியாவில் ம ர்மமான முறையில் தமிழ் இளைஞன் உ யிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தங்கியிருந்த அறையில் அவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உ யிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரரன், அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது ச டலத்தை அடையாளம் காண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இஞைனின் ம ரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர். எனினும் அது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உ யிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

தனது காதல் கதையை வெளியிட்ட நாமல் ராஜபக்ச!!

நாமல் ராஜபக்ச – லிமினி வீரசிங்க

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது காதல் தொடர்பான கதையை பத்திரிகை ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச அவரது காதலியான லிமினி வீரசிங்க என்ற பெண்ணை இந்த மாதம் 17ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தனது காதல் பற்றி மேலும் தெரிவித்துள்ள நாமல்,

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த மரத்தன் போட்டி ஒன்றில் இருந்தே எங்களது காதல் கதை ஆரம்பமாகியது. நாங்கள் இருவரும் விரும்பிய பின்னர், எமது பெற்றோரின் ஆசிர்வாதத்தை எதிர்பார்த்தோம்.

இதனடிப்படையில், ஒரு வருடத்திற்கு முன்னர் எமது தொடர்பு குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தினோம்.

லிமினியின் பெற்றோரும், எனது பெற்றோரும் எமது காதலை ஏற்றுக்கொண்டு ஆசிர்வாதம் செய்தனர். இது எமக்கு பெரிய பலத்தை கொடுத்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போதே எமது காதல் தொடர்பாக பலரும் கவனம் செலுத்தியிருந்தனர்.

இதன் பின் யோஷித்த ராஜபக்சவின் பதிவு திருமணத்தின் போது, நாங்கள் காதலர்கள் என பலர் அடையாளம் கண்டு கொண்டனர்.

எமது நெருங்கிய குடும்ப உறவினர்களுடன் லிமினியும் திருமணத்தில் கலந்து கொண்டார். இதுதான் எங்களது காதல் கதை என்பதுடன், மக்கள் அறிந்து கொண்ட விதம் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!!

அம்மாச்சி உணவகம்

வவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

அம்மாச்சி உணவகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வையின் அடிப்படையில் அம்மாச்சி உணவகத்தில் சில சுகாதார சீர் கேடுகள் நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறும் அம்மாச்சி உணவக நிர்வாகத்தினருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையிலும் அம்மாச்சி உணவகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டும் அம்மாச்சி உணவகம் நேற்று (09.09.2019) முதல் எதிர்வரும் (15.09.2019)ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் வீதியில் பாடசாலை மாணவனை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : இருவர் படுகாயம்!!

விபத்து

வவுனியா மன்னார் வீதியில் இன்று (10.09.2019) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மன்னார் வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் பட்டாணிச்சூர் பகுதியில் வீதியில் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் துவிக்கரவண்டியினை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவனும் மோட்டார் சைக்கிளை செலுத்திய 28 வயதுடைய இளைஞனும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்னை வீட்டில் அடைத்து வைத்து.. பயமாக உள்ளது : திருமணமான 4 நாட்களில் கதறிய பெண்!!

கதறிய பெண்

தமிழகத்தில் திருமணமான நான்கு நாட்களில் புதுப்பெண் கண்ணீருடன் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வினி. இவரும் பிரதீப்குமார் என்பவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

காதலன் தாழ்ந்த சாதி என கூறி காதலுக்கு அஸ்வினி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளையை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதனால் அ திர்ச்சியடைந்த அஸ்வினி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 4ஆம் திகதி பிரதீப்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணமான நான்கு நாட்களில் காவல் நிலையத்துக்கு வந்த தம்பதி தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நேற்று புகார் கொடுத்துள்ளனர்.

புதுப்பெண் அஸ்வினி கூறுகையில், பிரதீப்குமாரை அவமானப்படுத்தி என் பெற்றோர் மிரட்டல் விடுக்கிறார்கள். என் தந்தையின் நண்பரான தி.மு.க பிரமுகர் சி.ஜி.ஆனந்தன் கூலிப்படையை ஏவி எங்களை ஆணவக் கொ லை செய்யப் பார்க்கிறார்.

என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தபோது பெல்டால் அ டித்து து ன்புறுத்தியதோடு ஒருவேளை சாப்பாடு தான் கொடுத்தனர். எங்களின் நண்பர்கள் சிலரை இப்போது பிடித்து கட்டிவைத்துத் தா க்குகிறார்கள்.

நாங்கள் அந்தக் கு ம்பலின் கண்ணில் பட்டால் கண்டிப்பாகக் கொ லை செய்துவிடுவார்கள் என பயமாக உள்ளது என கூறியுள்ளார். இதனிடையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய சி.ஜி.ஆனந்தன், பிரதீப்குமார் ஏற்கெனவே நான்கைந்து பழக்கம் வைத்துள்ளான். அஸ்வினியை பேசி மயக்கி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளான்.

இது குறித்து அஸ்வினி பெற்றோர் என்னிடம் கூறியதையடுத்து அவரை கண்டுப்பிடித்து கொடுங்கள் என பொலிஸ் புகார் கொடுத்தோம், என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என கூறியுள்ளார்.

சொந்த மகளை தலை து ண்டித்து கொ லை செய்த குடும்பம் : அதிர வைக்கும் சம்பவம்!!

அதிர வைக்கும் சம்பவம்

அரியானா மாநிலத்தில் தன்னுடைய சொந்த மகளை பெற்றோரே த லை து ண்டித்து கொ லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள கோஹானா கிராமத்தை சேர்ந்த ரித்து என்கிற 28 வயது இளம்பெண் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, வீட்டின் எதிர்ப்பையும் மீறி அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இருந்தாலும் கூட தன்னுடைய சகோதரியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சனிக்கிழமையன்று ரித்து தனக்கு உடல்நிலை சரியில்லை என சகோதரியிடம் கூறியுள்ளார். உள்ளூர் மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ளலாம் என அவர் கூறியதால், அதனை நம்பி ரித்து கணவருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை முடிந்த பின்னர் வீட்டில் இருக்கும் பெற்றோரை சந்திக்க வருமாறு ரித்துவின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார். அதனை ஏற்று ரித்துவும் தன்னுடைய தாய் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

ஆனால் அர்ஜுன் அவர்களுடன் வீட்டிற்கு செல்லவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த குடும்பத்தினர், ரித்துவை த லை து ண்டித்து கொ லை செய்துள்ளனர். மேலும் அர்ஜுனையும் கொ லை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அர்ஜுன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், ரித்துவின் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரர் உட்பட ஆறு நபர்கள் மீது பிரிவு 302 (கொ லை) மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்- மனைவி அடுத்தடுத்து த ற்கொ லை : அனாதையான குழந்தைகள்!!

அனாதையான குழந்தைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப த கராறு காரணமாக கணவன் – மனைவி அடுத்தடுத்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (45) – வனிதா (35) தம்பதியினர். இவர்களுக்கு களஞ்சியம் (17) என்கிற மகனும், ஐஸ்வர்யா (16) என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே அருகாமையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2, பிளஸ்-1 படித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகவே தம்பதியினருக்குள் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வனிதா கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்து இருவீட்டின் உறவினர்களும் முருகானந்தத்துடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையில் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த முருகானந்தம் திடீரென விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவருடைய மனைவியும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள்ளாக இருவரும் பரிதாபமாக உ யிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முருகானந்தத்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 நிமிடங்களில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி!!

4 நிமிடங்களில்..

பிரித்தானியாவில் கருவுறுதல் முரண்பாடுகளை மீறிய ஒரு தம்பதியினருக்கு 4 நிமிடங்களுக்குள் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்கிற பெண்ணுக்கு இளம் வயதிலேயே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டதால், ஹார்மோன்களை தூண்டுவதற்காக ஊசிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இருந்தாலும் கூட அவருக்கு கருவுறுதல் சாத்தியமாகததால், ஐ.வி.எஃப்-ஐப் முறையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமடைந்த சியரா 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது ஆகஸ்டு 23ம் திகதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சியாரா – ஷேன் மாகி தம்பதியினருக்கு காலை 9.19 மணி முதல் காலை 9.23 மணி வரை டப்ளினில் உள்ள கூம்பே மருத்துவமனையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை அறுவை சிகிச்சை முறையில் பிறந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சியாரா, தனது வாழ்க்கை திடீரென்று மிகவும் பரபரப்பாகிவிட்டது என கூறியுள்ளார்.