சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதியோர் சங்க உறுப்பினர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இன்று (12.09.2019) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.
மாவட்ட சமூக சேவை அலுவலகர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் கிடுகு பின்னுதல், வேகநடை, சங்கீதக்கதிரை, கூடைக்குள் பந்துபோடுதல் என பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன.
இப் போட்டிகளை விளையாட்டு உத்தியோகத்தர் பிந்துசன் வழிநடாத்தியதுடன் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தரூபன் ஒழுங்கைப்பாளராக இருந்தார்.
இன்று போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எதிர்வரும் 19.09.2019 வியாழன் நடைபெறவுள்ள மாவட்ட மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இம்முறை மாகாண மட்ட முதியோர் தின விழா வவுனியாவில் 18.10.2019 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(12.09.2019) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – வான் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிந்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வந்து கொண்டிருந்த வான் மோட்டார் சைக்கினை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து வாகனத்தினை அப்புறப்படுத்தியதுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக இரு வாகனத்தினையும் போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
வவுனியா மருத்துவமனையில் மறுசீரமைப்பு செய்யபட்ட குழந்தை பராமரிப்பு நிலையம் இன்றையதினம் (12.09.2019) திறந்து வைக்கபட்டது.
மருத்துவமனை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் 7.95 மில்லியன் நிதியில், இலங்கை கடற்படையினரால் குறித்த கட்டடம் மறுசீரமைப்பு செய்யபட்டது.
மருத்துவமனைப் பணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர் தி.திரேஸ்குமார், மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா, பூவரசன்குளம், கந்தன்குளம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணையை மூடுமாறு கோரி நேற்று (11.08.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது கள்ளுத் தவறணைக்கு முன்பாக சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
வவுனியா, பூவரசன்குளம், கந்தன்குளம் சந்திப் பகுதியில் கள்ளுத் தவறணை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் பேரூந்துக்கு காத்து இருப்பவர்களும், அவ் வீதி வழியாக பயணிக்கும் பாடசாலை மாணவிகள் உட்பட பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், குறித்த பகுதியில் சமய வழிபாட்டு தளம் ஒன்றும் காணப்படுகின்றது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் கள்ளுத் தவறணை அமைக்கப்பட்டுள்ளமை கிராமத்தின் காலாசாரத்தை பாதித்துள்ளதுடன், விரும்பத்தாகாத அசம்பாவிதங்கள் ஏற்பட வழிவகுக்கும் எனவும் தெரிவித்த கிராம மக்கள், வறுமையான தமது கிராமத்திற்கு கள்ளுத் தவறைணையை திறந்து மக்களை அழிக்காதீர்கள் எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ‘பனையை தென்னை வள அபிவிருத்தி சங்கத்திற்கும் உற்பத்திப் பொருட்களுக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல’ மாற்றிடத்தை தெரிவு செய், கள்ளுக் கடையை அகற்ற கால அவகாசம் வேண்டாம், வேண்டாம் கள்ளுக் கடை, வேண்டும் நூலகம், கந்தன்குளம் சந்தியை கள்ளுத்தவறணை சந்தி ஆக்காதே’ உள்ளிட்ட பல்வேறு வாசங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் சென்று கலந்துரையாடியதுடன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியூடாக கலந்துரையாடி தற்காலிகமாக கள்ளுதவறைணை முடிவதற்குரிய நடவடிக்கையினை எடுத்தமையினையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது. குறித்த போ ராட்டத்தில் கந்தன்குளம் மக்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 1 வயது ஜெயராசா கனிஸ்டன் என்ற பாடசாலை மாணவனை காணவில்லை என மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.
பூந்தோட்டம் காந்திநகர் பகுதியிலிருந்து மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அப்பம்மா வீட்டுற்கு செல்வதாக தெரிவித்து கடந்த 07.09.2019 அன்று மதியம் துவிச்சக்கரவண்டியில் குறித்த சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இரவு நேரமாகியும் சிறுவன் அப்பம்மா வீட்டிற்கு செல்லவில்லை. இதனையடுத்து அயவலர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் பெற்றோர்கள் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அது பயனளிக்கவில்லை
அதன் பின்னர் நேற்று முன்தினம் (10.09.2019) மகனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.
வீட்டை விட்டு குறித்த சிறுவன் வெளியேறிய சமயத்தில் நாவற் கலர் சேட் மற்றும் கறுப்பு ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும் அவரை பற்றி தகவல் எதேனும் அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழேயுள்ள இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் மக்கள் எஎழுச்சிப் பேரணிக்கு மக்களை அணிதிரட்டும் முகமாக விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரை அண்டிய பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், சனநடமாட்டம் உள்ள பகுதிகள் அத்துடன் செட்டிகுளம் பகுதிகளிலும் இப் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்மக்கள் கூட்டணியினரால் இன்று காலை 9மணியிலிருந்து மாலை 3.30 மணி வரையும் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் , தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மகாகவி பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இன்று (11.09.2019) காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே.ராஜலிங்கம், பா.பிரசன்னா, க.சுமந்திரன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று (11.09.2019) மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தினுள் கவனயீர்ப்புப் போ ராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
விரைவில் வடகிழக்கில் பாரிய வைத்தியர் பற்றாக்குறை? , வடகிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, வைத்தியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம், எதிர்காலத்தில் வடகிழக்கில் வைத்தியர்கள் தட்டுப்பாடு உறுதி,
ராஜிதவின் அரசியல் காய்நகர்த்தலில் அப்பாவி நோயாளிகள் ப லியா? என பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு 20க்கும் மேற்ப்பட்ட வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் 12 மணி தொடக்கம் 1 மணி வரையிலான உணவு நேரத்தில் குறித்த போ ராட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் வாளுடன் புகுந்து தா க்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். இன்று (11.09.2019) புதன்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டிலிலுள்ள ஒருவருக்கும் தா க்குதல் மேற்கொள்ள முயற்சித்த இளைஞர்களுக்குமிடையே இன்று காலை வீதியில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் இருவரும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வாளுடன் வருகை தந்த மூன்று இளைஞர்கள் வீட்டாரை வெளியே வரவழைத்து தா க்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் இவ் தா க்குதல் சம்பவம் அயவர்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
தா க்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அயலவர்களும் கிராம இளைஞர்களும் இணைந்து மடக்கிப்பிடித்து வீட்டுக்குள் அடைத்து வைத்து 119 பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதராத நிலையில் கிராம பொது அமைப்புக்கள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கத்திற்கு வந்து இளைஞர்கள் கொண்டு வந்த வாளை பொது அமைப்புக்கள் தம்வசப்படுத்தியுள்ளனர்.
இனிமேல் எவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயலவர்கள் முன்னிலையில் குறித்த மூன்று இளைஞர்களும் தெரிவித்தமையினையடுத்து அவர்கள் பொதுமக்களினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிசாரால் விசேட தேடுதல் வேட்டை இன்று (11.09.2019) நடைபெற்றது.
வவுனியா பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வெடிபொருட்கள் ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மோப்ப நாயின் உதவியுடன் வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிகளில் கடும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, நோயாளர்களின் விடுதிகள், விபத்துப்பிரிவு, மலசலகூடம், உணவகம், அதிகாரிகளின் அறைகள் அமைந்துள்ள பகுதிகளில் கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வைத்தியசாலையின் நுழைவாயில் பகுதியில் பொலிசார் பொதிகளை கடும் சோதனையின் பின்னர் அனுமதித்திருந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் எவ்வித வெடிபொருள்களும் பொலிஸாரினால் மீட்கப்படவில்லை.
கனடாவில் இலங்கையரான ஷர்மினி ஆனந்தவேல் கொ ல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பொலிசாரால் உண்மையான கு ற்றவாளியை கைது செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.
இலங்கையில் உள்நாட்டு போர் காலத்தில், கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஷர்மினி ஆனந்தவேல் குடும்பத்தினர். அப்போது வெறும் 15 வயதேயான ஷர்மினி ஆனந்தவேல், கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம், புதிதாக வேலையில் சேர்வதற்காக வடக்கு ரொரன்ரோவில் உள்ள தங்களது குடியிருப்பில் இருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால் சுமார் நான்கு மாதங்களுக்கு பின்னர், பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஷர்மினி ஆனந்தவேலின் எ லும்புகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. சம்பவம் நடந்து 20 ஆண்டுகளாகியும் இதுவரை ஷர்மின்யின் மர்ம ம ரணம் தொடர்பில் கனேடிய பொலிசாரால் எவர் மீதும் வழக்குப் பதிய முடியவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், சம்பவம் நடந்த அன்றே பொலிசாருக்கு, ஷர்மினியின் அயலாரான 23 வயது இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும், அவரை அழைத்து விசாரித்ததாகவும், அவர் தொடர்புடைய நபர்களை விசாரித்ததாகவும் கூறும் பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில், தற்போதும் அவரை விசாரணை கைதியாக சிறையில் அடைத்துள்ளது.
ஆனால் ஷர்மினியின் கொ லை வழக்கு தொடர்பாக இல்லை என கூறப்படுகிறது. ஷர்மினி தமது இரு சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் ரொரன்ரோவில் உள்ள Don Mills பகுதியில் குடியிருந்து வந்துள்ளார். கல்வியில் சிறந்து விளங்கிய ஷர்மினி, அனைவருக்கும் செல்லப் பிள்ளையாகவும் திகழ்ந்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி பகல் 9 மணிக்கு குடியிருப்பில் இருந்து வெளியேறிய ஷர்மினியை பகல் 10.30 மணிக்கும் 11.45 மணிக்கும் நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் சாட்சியம் அளித்துள்ளனர்.
ஷர்மினிக்கு வேலை வழங்கியதாக கூறப்படும் Metro Search Unit நிறுவனம் போலியானது என பின்னர் விசாரணையில் அம்பலமானது. ஷர்மினி மா யமான தகவல் பொலிசாருக்கு புகாராக கிடைத்ததும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது மட்டுமின்றி, தன்னார்வலர் பலர் இந்த வழக்கு தொடர்பில் களமிறங்கினர். இந்த நிலையிலேயே பொலிசாரின் கவனம் ஷர்மினியின் அதே குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கும் Stanley Tippett மீது திரும்பியது.
Stanley Tippett தமது 16-வது வயதில் பாடசாலையில் ஆசிரியரின் மேஜைக்கு நெருப்பு வைத்த வழக்கில் பொலிசாரிடம் சிக்கியவர். மட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு வழக்கில் பொலிசார் அவரை விசாரணை செய்தும் வந்துள்ளனர்.
ஷர்மினியின் சிதைந்த உ டல் பாகங்கள் பொலிசாரால் மீட்கப்பட்ட பின்னரும், குற்றவாளியின் டி.என்.ஏ எதையும் பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, ஷர்மினி விவகாரம் தொடர்பில் Stanley Tippett இடம் பொலிசார் பலமுறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை அதிகாரிகளில் ஒருவரின் கருத்துப்படி, ஷர்மினி தமக்கும் Stanley Tippett-கும் இடையே இருந்த அந்த ம ர்மமான உறவு குறித்து இதுவரை எவரிடமும் விவாதித்ததில்லை.
மட்டுமின்றி, வேலை வாங்கித் தருவதாக கூறி, ஷர்மினியை Stanley Tippett பயன்படுத்தி இருக்கலாம் எனவும் அவர் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஷர்மினியின் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்ட வேலை உறுதி கடிதமானது ஸ்டான்லி வழங்கிய போலி நிறுவனத்தின் கடிதம் எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஷர்மினியை ஸ்டான்லி கொ லை செய்தாரா என்பது தொடர்பில் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அந்த பொலிஸ் அதிகாரியின் சந்தேகங்கள் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத குழந்தையை நள்ளிரவில் க டத்த முயன்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோளிங்கர் ரயில் நிலைய வளாகத்தில், தண்டவாள பணிகளுக்காக ஆந்திராவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் துர்காபிரசாத் என்பவரின் 5 மாத குழந்தை ரிஷிகவந்தாவை ம ர்ம நபர் ஒருவர் தூ க்கி உள்ளார். அப்போது குழந்தை அழுததால், அவரது மனைவி எழுந்ததும் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து மர்ம நபரை துரத்திச் சென்ற தொழிலாளர்கள், புதருக்குள் பதுங்கிய அவரை பிடித்து கம்பத்தில் க ட்டிவைத்து அ டித்ததுடன், ரயில்வே பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், குழந்தையை க டத்த மு யன்றவர் அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த தினேஷ் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த பொலிஸார் ,காட்பாடி ரயில்வே காவல் நிலையம் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரொக்கட் ஒன்றை தயாரித்த கிஹான் ஹெட்டிஆரச்சி என்ற மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவீன கணனி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார்.
இது குறித்த நிகழ்வு நேற்று (10.09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
ரொக்கட் ஒன்றை உருவாக்கிய கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கிஹான் ஹெட்டிஆரச்சி என்ற மாணவனின் எதிர்கால ஆக்க நடவடிக்கைகளுக்காக நவீன லெப்டொப் கணனி ஒன்றை ஜனாதிபதி அன்பளிப்பு செய்தார்.
பதுளையை அண்மித்த பிரதேசம் ஒன்றில் ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மீகஹகிவுல, பிட்டமாருவ பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்துள்ளது.
சுமார் அரை மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சில பிரதேசங்களில் தேசிக்காய் அளவில் பாரிய ஆழங்கட்டிகள் விழுந்துள்ளன.
இந்த மழை காரணமாக இறப்பர் மரணங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மீகஹகிவுல மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் பல மாதங்களின் பின்னர் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக த ற்கொ லைக்கு முயன்ற இளைஞன் இன்று உ யிரோடு இருப்பது அவருடைய அதிர்ஷ்டமே, இதற்கு காரணம் இலங்கை-பிரித்தானியா கூட்டு திட்டமே என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் திகதி சர்வதேச த ற்கொ லை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு த ற்கொ லை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வருடத்துக்கு 8,00,000 பேர் த ற்கொ லை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒரு த ற்கொ லை நிகழ்கிறது. தூ க்கு போட்டு கொள்வது, வி ஷம் அ ருந்துவது, தீ யிட்டு கொ ளுத்திகொள்வது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறன.
இதில் 150,000 பேர் வி ஷம் அருந்தி த ற்கொ லை செய்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த புஷ்பகுமார என்பவர் த ற்கொ லைக்கு முயன்ற நிலையில், அவர் இலங்கை-பிரித்தானியா கூட்டுத் திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்கி காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் 93,000 பேர் இலங்கையில் தற்போது உ யிரோடு உள்ளனர்.
அதில் புஷ்பகுமாரவும் ஒருவர். தற்போது 24 வயதாகும் இவர் இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவரின் மாத வருமானம் குடும்பத்திற்கே போதுமான அளவில் இருந்துள்ளது.
இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். இரவு நேரங்களில் யானைகள் வயல்களுக்குள் புகுந்து நாசமாக்கிவிடும், அதிலிருந்து காப்பது என்னுடைய வேலையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தின் வறுகையை காரணம் காட்டி திருமணம் செய்யவிருந்த பெண், என்னை விலகிச் சென்றுவிட்டார், இதனால் மிகுந்த வேதனையில் இருந்த நான் நான் பூ ச்சி கொ ல்லி மருந்தை கு டித்துவிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
பண்பு அறிவு வலு நிறைந்த பிள்ளைகள் சமூகம் ஒன்றை நாட்டிற்கு உருவாக்கும் நோக்கில் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட,
‘அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ தேசிய வேலைத் திட்டமானது செயற்றிட்ட பணிப்பாளரான கந்தையா பத்மானந்தன் அவர்களது முகாமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் என்பன உள்ளடங்குவதுடன் அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி, வகுப்பறைகள், ஆரம்பக் கற்றல் வள நிலையங்கள், தொழினுட்ப ஆய்வுகூடங்கள், நவீன வகுப்பறைகள், குடிநீர் வசதிகள், மின்சார வசதி, மலசல கூட வசதிகள் போன்ற பல்வேறு வகையான நிர்மாணிப்பு மற்றும் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த 500 செயற்றிட்டங்கள் நேற்றையதினம் (09.09.2019) முதல் மாணவர்களுக்கு உரித்தளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.