யாழில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோ தல் – மூவர் மீது வா ள்வெட்டு!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோ தல் காரணமாக காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 3 போ் மீது வா ள்வெட்டு தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் வா ய்த்தர்க்கம் முற்றியமையினால் வ ன்முறையாக மாறியது. இரு குழுக்களும் இன்று காலை கத்திகள், வா ள்களுடன் கடும் தா க்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 3 இளைஞா்கள் வா ள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனா்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் கடைகளை வைத்திருப்போருக்கு இடையில் நீண்டகாலமாக மு ரண்பாடுகள் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூங்காவில் ச டலமாக கிடந்த இளம்காதல் ஜோடி!!

டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் இளம்காதல் ஜோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று மாலை 5.30 மணியளவில், இளம்காதல் ஜோடி எந்த அசைவும் இல்லாமல் நீண்ட நேரம் தரையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது அவர்கள் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நேரில் பார்த்த ஒருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, நீண்ட நேரமாக அந்த காதல் ஜோடி, பூங்காவில் வலம்வந்துள்ளனர். அதன்பிறகு தரையில் படுத்து கிடந்ததால் உறங்குவதாகவே நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், இருவரின் உ டல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். இருவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இளைஞனின் பெயர் விபின், பெண்ணின் பெயர் சரோஜ்.

வியாழக்கிழமையன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். விபின் தன்னுடைய மகளை க டத்திவிட்டதாக சரோஜின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதேபோல மகனை கா ணவில்லை என விபின் பெற்றோரும் புகார் கொடுத்துள்ளனர்.

இருவரும் வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்துகொண்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகித்துள்ளோம். விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

இறந்த தந்தையின் ச டலம் முன் திருமணம் செய்துகொண்ட மகன்!!

இ றந்த தன்னுடைய தந்தையின் முன் மகன் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் திகதியன்று ஆசிரியராக பணிபுரிந்து வரும் அலெக்ஸ்சாண்டர் என்பவர், நிச்சயிக்கப்பட்ட திருமண திகதிக்கு முன்பாகவே தன்னுடைய தந்தை இறந்ததால், அவருடைய ச டலத்திற்கு முன்பே காதலி ஜெகதீஸ்வரியை மணமுடித்தார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தளம் முழுவதும் வைரலாக பரவி தம்பதியினருக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் வாழ்த்து மழை குவிந்தது.

இந்த நிலையில் இ றந்த தன்னுடைய தந்தையின் சடலத்திற்கு முன், உறவினர்களை அனைவரும் சூழ்ந்திருக்க பேராசிரியர் ராமசாமி தலைமையில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார்.

நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை நேரில் பார்த்துகொண்டிருந்த பலரும் அங்கு அழ ஆரம்பித்துவிட்டனர். இந்த வீடியோ காட்சியும் தற்போது இணையதளங்களில் வெளியாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

வவுனியாவில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் கண்டுபிடிப்பு!!

மாணவன் கண்டுபிடிப்பு

கடந்த 6 நாட்களாக கா ணாமல் போயிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக இன்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன் கா ணாமல் போயுள்ளார்.

இவரை அவரது உறவினர்கள் தேடியும் கிடைக்காத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து நேற்று இரவு வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள மாணவனின் நண்பன் ஒருவரின் வீட்டில் குறித்த மாணவன் நிற்பதாக, நண்பனின் சகோதரனால் மாணவனின் சகோதரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அங்கு சென்ற பெற்றோரும், உறவினர்களும் மாணவனை அழைத்து வந்ததுடன், வவுனியா பெலிஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நண்பனின் வீட்டிற்கு கரம்போட் விளையாடுவதற்காகவே தான் சென்றதாக பொலிஸாரிடம் அம்மாணவன் கூறியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பூந்தோட்டம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய ஜெயராசா கனிஸ்டன் என்ற பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயலும் மாணவனே இவ்வாறு காணமால் போயிருந்தார்.

மகளின் பொய்யான முறைப்பாட்டால் 8 ஆண்டுகள் சிறையில் கஷ்டங்களை அனுபவித்த தந்தை!!

பொய்யான முறைப்பாட்டால்..

பண்டாரகம, குங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் தனது மகளை து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவரை பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் நேற்று வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்துள்ளார்.

கொந்துராகே மகிந்த பெரேரா என்ற நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு தனது தந்தை தன்னை து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாகியதாக கூறி, அப்போது 14 வயதான மகள், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

தனது தந்தை ம துபா னம் அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் தாக்கி தொ ந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற, பாட்டனார் கூறிய யோசனையை கேட்டு மகள் பொய்யான முறைப்பாட்டை செய்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

முறைப்பாடு செய்த யுவதியின் பாட்டனார் ம ரணமடைந்து விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. மகளின் பொய்யான முறைப்பாட்டால், தந்தை 8 ஆண்டுகள் சிறையில் கஷ்டங்களை அனுபவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் முன்னாள் கணவனால் நடுவீதியில் வெட்டிக் கொ லை செய்யப்பட்ட தர்ஷிகா!!

தர்ஷிகா

கனடா ஸ்காபரோவில் நேற்று முன்தினம் மாலை இலக்கு வைக்கப்பட்டு கொ டூரமாகக் கத்தியால் கு த்திக் கொ ல்லப்பட்ட பெண் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக் கொ லை தொடர்பில் அவரது முன்னாள் கணவரான 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொ லை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்சிகாவை க த்தியால் வெ ட்டிச் சரித்து விட்டு, காரில் ஏறி கொ லையாளி தப்பி சென்றுள்ளர்.

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தர்சிகாவை கத்தியால் வெ ட்டிச் சரித்து விட்டு, கொ லையாளி தப்பிச் செல்வதாக பொலிஸாருக்கு பலரும் தகவல் வழங்கியுள்ளனர். தீவிரமாக செயற்பட்ட பொலிஸார் மார்க்கம் பகுதியில் சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சசிகரன்- தர்ஷிகா ஜோடி 2015இல் திருமணம் செய்தார்கள். தர்ஷிகாவை வீட்டு வ ன்முறைக்குள்ளாக்கி வந்த நிலையில் 2017இல் இருவரும் பிரிந்தனர்.

2017இல் எதிர்கொண்ட இரண்டு வ ன்முறை சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து சசிகரன் 2019 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்த போதும், பிணை மீ றல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் 29 நாட்கள் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

சசிதரனின் தா க்குதலில் நிலைகுலைந்த தர்ஷிகா 911 என்ற அவசர இலக்கத்தை அழுத்தி உதவிகோர முயன்றபோதும், அவரது அலறல் சத்தம்தான் பதிவாகியதாகவும், அந்த சத்தமும் வழக்கில் சாட்சியாக இணைக்கப்படுவதாகவும் பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வவுனியாவில் நீண்ட வறட்சியின் பின் கடும் மழை!!

கடும் மழை

நீண்ட வறட்சியின் பின் வவுனியாவில் இன்று (13.09) மாலை கடும் மழை பெய்தது. நாட்டில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களது இயல்பு நிலை பாதிப்படைந்திருந்தது.

திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் : சிசிரீவியால் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி!!

மோசமான சம்பவம்

கிளிநொச்சியில் திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் கடந்த ஜுன் மாதம் ஐந்தாம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஜுன் மாதம் ஒன்பதாம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கமரா பதிவுகளை ஜுன் மாதம் 28ஆம் திகதி பார்வையிட்டு அதனை அடிப்படையாக வைத்து சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது சந்தேகநபர் விளக்கமறிலயில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன் தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே சந்தேகநபரை கடும் நிபந்தனையுடன் கூடிய, கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளிலும் 25,000 ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகநபருக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்க தவறுவதாகவும் கடந்த தவணைகளில் முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் மேலும் இருவரை கைது செய்யவுள்ளதாக குறிப்பிட்டாலும் குறித்த இரு சந்தேகநபர்களையும் இதுவரை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை எனவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கியினால் நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.7 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 7 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 225 ரூபா 69 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 201 ரூபா 81 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 184 ரூபா 55 சதம்

கனடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 16 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 44 சதம். விற்பனை பெறுமதி 126 ரூபா 40 சதம்.

வவுனியாவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

இரதோற்சவம்

வவுனியா, ஈச்சங்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.

வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் கந்த கணேசதாஸக் குருக்கள் தலைமையில் முதன் முறையாக இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றது.

அந்தணச் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி விசேட அபிடேக தீபராதனைகளை நிகழ்த்த, விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து வெளிவீதியில் தேரில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை பக்த அடியார்கள் அரோகரா கோசத்துடன் ஆண்களும், பெண்களுமாக வடம் பிடித்து தேரில் இழுத்துச் சென்றனர்.

குறித்த ஆலயத்தில் முதன்முறையாக இடம்பெற்ற இரத்தோற்சவத்தின் போது மழை பெய்தமையால் மகிழ்ச்சியடைந்த பக்த அடியார்கள் தேவார திருவாசங்களை ஓதியும், கற்பூரச் சட்டிகளை ஏந்தியும் விநாயகப் பெருமானை வழிபட்டனர். விநாயகப் பெருமானும் அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

இதேவேளை, நீண்ட வறட்சிக்கு பின்னர் இதன்போது வவுனியாவில் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற சுபஸ்ரீ கனவு நிறைவேறவேயில்லை : ஒரே மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர்!!

சுபஸ்ரீ

சென்னையில் அந்நியாயமாக இளம்பெண் சுபஸ்ரீ உ யிரிழந்த நிலையில் அது குறித்து அவர் தந்தை கண்ணீருடன் பேசியுள்ளார். கனடாவுக்கு செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் தனியாக வந்து கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது சாலையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பதாகை சரிந்து விழுந்தது.

இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லொறி ஏறி இறங்கியதில் அவர் உடல் ந சுங்கி உ யிரிழந்தார். இதையடுத்து தங்களின் ஒரே மகளை ப றிகொடுத்து விட்டு சுபஸ்ரீயின் பெற்றோர் கதறி துடித்து வருகின்றனர்.

இது குறித்து கண்ணீருடன் பேசிய சுபஸ்ரீயின் தந்தை ரவி, பி.டெக் படித்து முடித்துள்ள என் மகள் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டும் என ஆசையாக இருந்தாள். ஆனால் பதாகைகள் வைக்கும் கலாசாரத்தால் என் ஒரே மகள் எமனுக்கு ப லியாகிவிட்டாள், இதனால் அவர் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது.

இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது. பதாகை கலாச்சாரத்தால் உ யிரிழந்தது என் மகளே கடைசியாக இருக்கட்டும். இதை தடுக்க பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு : கண்காணிக்கப்படும் உங்கள் செயற்பாடுகள்!!

பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துளளது. இந்தக் கோரிக்கையை இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திடம், ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிரான பல்வேறு கருத்து மோதல்கள் சமூக வலைத்தளங்களில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பெருமளவு போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் உருவாக்கியுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் தேர்தல் காலத்தில் போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் டுவிட்டர் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் வெளியிடப்படும் வன்முறை கருத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக சமூக வலைத்தளங்கள் தீவிரகமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு கவலையான தகவல்!!

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு..

இலங்கையில் சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஜப்பானின் யென் பெறுமதி அதிகரித்துள்ளது. இதனால் சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் விற்பனையில் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய சொகுசு வாகன வரி விதிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 35 இலட்சம் ரூபாவிற்கும் அதிக விலையில், 2300 இயந்திர திறன் கொண்ட வாகனம் மற்றும் 1800 திறன் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் 5 – 25 இலட்சம் ரூபாய் மேலதிக வரி செலுத்த நேரிடும்.

வாகன விற்பனை வீழ்ச்சிக்கு இந்த நிலைமை மேலும் அதிகமாக தாக்கம் செலுத்தும். உயிர்த்த ஞாயிறு தா க்குதலின் பின்னர் பூஜ்ஜிய வீதமாக வாகன விற்பனை வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் 20 வீதத்தில் அதன் விற்பனை அதிகரித்து. இந்நிலையில் இவ்வாறான நிலைமை மேலும் விற்பனை வீழ்ச்சியடைய செய்யும்.

இயந்திர திறன் 650, 800 மற்றும் 1000 பிரிவுகளில் உள்ள வாகனங்ளின் விலை 1.5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவுள்ளது. இதனால் சிறிய அளவிலான வாகனங்களின் விலை 26 லட்சம் ரூபாவில் இருந்து 27.5 இலட்சத்திற்கு அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு ஒன்றில் க ணவனை கொ டூரமாக வெ ட்டிய இலங்கைப் பெண்!!

வெளிநாடு ஒன்றில்..

மலேசியாவில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை, இலங்கை சேர்ந்த ம னைவி கொ டூரமாக க த்தியால் வெ ட்டியுள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் அவர்களின் வாடகை வீட்டில் இடம்பெற்றுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் தா க்கு தலால் இலங்கையை சேர்ந்த நபரே ப டுகா யம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு ப யன்படுத்தப்பட்ட க த்தியை பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

ப லத்த கா யங் களுக்குள்ளான நபரின் மனைவியை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அவரும் இலங்கை பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கா யங்களு க்குள்ள கணவன் மிகவும் ஆ பத்தான நிலையில் Raja Permaisuri Bainun வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். த ண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் உள்நாட்டு வ ன்முறைச் சட்டம் 1994 இன் பிரிவு 18 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு வாழ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

கொழும்பில்..

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தினால் பல்வேறு நன்மைகள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் கொழும்பு 1, 2 மற்றும் 3 பகுதிகளில் உள்ள காணி மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

துறைமுக நகரத்தில் சேவை மற்றும் தொழில் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் வருபவர்கள் தங்குவதற்காக தேவைப்படும் வசதி காரணமாக இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவ்வாறு வருபவர்களுக்கு தங்குமிட வசதி வழங்குவதன் மூலம் தாம் இலாபத்தை ஈட்ட முடியும் என அந்த பகுதியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் தங்களின் வருமானம் அதிகரிக்கும் என குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு வாழ்வளித்த சிறீ சபாரத்தினம் அறக்கட்டளை!!

வவுனியா சிறைச்சாலையில்..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிலுள்ள கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினால் முக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது.  இந் நிகழ்வு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று (12.09.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

சிறைக்கைதிகளின் வாரத்தினை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையிலுள்ள கண்பார்வை குறைபாடுள்ள 30 சிறைக்கைதிகளுக்கு மூக்குகண்ணாடி வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு (பாடசாலை மாணவர்கள்) பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சிறு குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் சிறையிலுள்ள இரு சிறைக்கைதிகளின் தண்டப்பணத்தினையும் சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினர் செலுத்தி அவர்களையும் விடுதலை செய்துள்ளனர்.

ஊடகங்களுக்கு சிறைச்சாலையினுள் அனுமதி மறுக்கப்பட்டமையினால் சிறைச்சாலை வாயிலுக்கு முன்பாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் மூக்குக்கண்ணாடிகள் கையளிக்கப்பட்டதுடன் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகளுக்கு கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினர் மற்றும் சிறைச்சாலை நலன்புரி சங்க உறுப்பினர், நகரசபை உறுப்பினர், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பௌத்த மதகுரு, சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.