வவுனியாவில் அடைக்கலம் கோரிய முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த வவுனியா சாயி இல்லம்!!

அடைக்கலம் கொடுக்க மறுத்த சாயி இல்லம்

அடைக்கலம் கோரிச் சென்ற பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு வவுனியா, சாயி பராமரிப்பு இல்லம் அடைக்கலம் கொடுக்காது திருப்பி அனுப்பியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தறை, கம்புறுபிட்டிய என்னும் இடத்தைச் சேர்ந்த பிரேமதாச என்ற 80 வயதுடைய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மாத்தறையில் இருந்து வவுனியா வருகை தந்து பேரூந்து நிலையத்தில் இறங்கி ஏ9 வீதியில் உள்ள பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்து இருந்ததுடன், அருகில் இருந்த உணவகம் ஒன்றில் உணவு கேட்டு பெற்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த முதியவருடன் உரையாடிய உணவக உரிமையாளர் அவர் அடைக்கலம் இல்லாது தனிமையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை அறிந்து ஊடகவியலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் முதியவரின் நிலமையை கேட்டறிந்த பின் வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர்கள் குறித்த முதியவரை வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள சாயி சிறுவர், முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை தங்க வைக்க சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி மற்றும் ஊடகவியலாளர்கள் கோரிய போதும் உங்களுக்கு ஏன் இந்த வேலை எனக் கூறி அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் கோவில்குளம், சிவன் முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க அனுமதி பெற்றதுடன் ஊடகவியலாளர்களும், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் ஆகியோர் முதியோர் இல்லத்தில் குறித்த முதியவரை கொண்டு சென்றுவிட்டுள்ளனர்.

வவுனியா பண்டாரிகுளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : வேடிக்கை பார்த்த பொலிஸார்!!

வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம்

வவுனியா பண்டாரிகுளம் முனியப்பர் கோவில் சந்தியடியில் மோட்டார் சைக்கிலில் வாளுடன் வந்த இளைஞர்கள் வர்த்தக நிலையத்தின் மீது தா க்குதல் மேற்கொண்டதுடன் அங்கிருந்த பொதுமகன் மீதும் தா க்குதல் மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர். இன்று (15.09) மதியம் 3 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பண்டாரிகுளம் முனியப்பர் கோவில் சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றிக்கு விளம்பரப்பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களிடம் அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிலில் வருகை தந்த இளைஞர் ஒருவர் என்ன வர்த்தக நிலையம் இது என வினவிய பின்னர் வர்த்தக நிலையத்தின் விளம்பரப் பலகையினை சேதப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு குறித்த இளைஞன் வாள் மற்றும் கோடரியுடன் பல இளைஞர்களை அழைத்து வந்து முனியப்பர் சந்தியடியில் அட்டகாசம் செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்களை தடுப்பதற்கு வந்த பொதுமகன் ஒருவர் மீதும் தா க்குதல் மேற்கொண்ட நிலையில் பொதுமகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பண்டாரிகுளம் காவல் அரண் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தில் குழப்பம் விளைவித்த இளைஞர்களை அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பணித்ததுடன் ம துபோ தையில் நின்ற ஒர் இளைஞனை பொலிஸார் பண்டாரிக்குளம் காவல் அரனுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாளுடன் வந்த இளைஞரை பொலிசார் கைது செய்யவில்லை எனவும், பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தா க்குதல்: பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு!!

வவுனியாவில் இளைஞன் மீது..

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது பொலிசார் தா க்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வன்னிப் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் ம துபான நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் நேற்று மதியம் இளைஞன் ஒருவர் பயணித்துள்ளார். எதிர் திசையில் பொலிசார் வாகனத்தில் வந்துள்ளனர்.

பொலிசாரின் வாகனம் செல்வதற்கு இடம்விட்ட பின்னர் குறித்த இளைஞன் அப்பகுதியில் இருந்த ம துபானசாலைக்குள் சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞனை பின்தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் ம துபான நிலையத்திற்குள் சென்ற குறித்த இளைஞனை தாக்கியதுடன், நீதிமன்ற பிடியாணை இருப்பதாக தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற குறித்த இளைஞனின் மனைவி ஏன் கணவரை கைது செய்தீர்கள் என விசாரித்த போது பிடியாணை இல்லை. சந்தேகத்தில் பிடித்தோம். விடுவிப்போம் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும் ம துபோ தையில் குழப்பம் விளைவித்ததாக குறித்த இளைஞன் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்து விட்டு இரவு விடுவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த ம துபான நிலையத்தில் வைத்து பொலிசார் இளைஞன் மீது தாக்கும் சீசீடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் குறித்த பொலிசாருக்கு எதிராக பாதிக்கப்பட்ட இளைஞன் முறைப்பாடு செய்துள்ளார்.

மகள் வயது பெண்ணுடன் திருமணம் : தொடர் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!!

சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தது குறித்த தொடர் சர்ச்சைக்கு, நடிகர் மிலிந்த் சோமன் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன்(53). பிரபல நடிகரும்-மொடலுமான இவர், தனது மனைவியும், பிரெஞ்ச் நடிகையுமான Mylene Jampanoi-வை கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன்பின்னர் கடந்த ஆண்டு, விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் 27 என்பதால், சமூக வலைதளங்களில் இவர்களது திருமணம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

அதிலிருந்து தொடர் சர்ச்சைக்கு மிலிந்த் ஆளானார். இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்த தொடர் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.

மிலிந்த் சோமன் தனது காதல் திருமணம் குறித்து கூறுகையில், ‘பொதுவாக சமூகம் காதலிப்பவர்களுக்கு சாதி, மதம், பாலினம், நாடு என பல காரணங்களை கூறி தடைகளை உருவாக்கும்.

ஒருவர் தங்களுக்கு பொருத்தமான ஒரு உறவை தேர்வு செய்வதற்கு அவரவருக்கு உரிமையும், சுதந்திரமும் உண்டு. அது அவரவர் உள்ளங்களில் ஏற்படும் உணர்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

இதில் சமூகம் தங்களது கருத்துக்களை கூறுவது சரியல்ல. இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு அன்பை பரிமாறிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது தான் அவசியமானது’ என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இலங்கையை சேர்ந்த நடிகை சுஜாதா : கவனிக்கப்படாத அவரின் கண்ணீர் கதை!!

கண்ணீர் கதை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சுஜாதா. இலங்கையின் காலியில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார். இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சினிமா மீது அவர் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன.

1971-ம் ஆண்டு தபஷ்வினி என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சுஜாதா எர்ணாகுளம் ஜங்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கே.பாலசந்தர் அவரை பார்த்தார். சுஜாதாவின் நடிப்பு, பாலசந்தரைக் கவர்ந்த நிலையில் அவரின் அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சுஜாதா.

தமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்பமுடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பின்னர் பல திரைப்படங்களில் நடித்த சுஜாதா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

சிவாஜி கணேசன், முத்துராமன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார். திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும் ஏன் அவரை சந்திப்பதுமே பெரிய சவாலாக இருந்தது.

அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை. இருப்பினும், சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.

சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த வரலாறு. பின்னர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர், 2011-ம் ஆண்டு காலமானார்.

அப்போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால் சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா கதையாகவே முடிந்துவிட்டது தான் பெரும் சோகம்.

அடுத்த 24 மணித்தியாலத்திற்கு வடமாகாணத்தில் கடும் மழை!!

கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறானது மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தென்படுவதாகவும், அத்துடன் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

சடலம் மீட்பு

திருகோணமலை – கந்தளாய், போட்டங்காடு வறாகெலே பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருகுலைந்த நிலையில் காணப்படுவதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு!!

சோமசுந்தரம் வினோஜ்குமார்

யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயின்று வரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தி வருகின்றது.

இவ்வருடத்துக்கான தேசிய மட்ட கண்டுபிடிப்புப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலைப் பிரிவு பல்கலைக்கழக மற்றும் மூன்றாம் கல்வி நிலையங்கள் வர்த்தக பிரிவு மற்றும் திறந்த பிரிவு என நான்கு பிரதான பிரிவுகளையும் பதினான்கு தொழில்நுட்ப பிரிவுகளையும் கொண்டதாக நடைபெறவுள்ளது.

அகில இலங்கை ரீதியான இப் போட்டிக்கு மாகாண மட்டப் போட்டிகளிலிருந்து கண்டுபிடிப்பாளர்களை தெரிவு செய்து தேசிய மட்டப் போட்டிகள் நடைபெறும்.

தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெறும் ஆக்கங்களிலிருந்து மிகச் சிறந்த கண்டுபிடிப்புக்களை சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.

மேலும் அவர்களது கண்டுபிடிப்புக்களை வணிக மயப்படுத்துவதற்குரிய மானியங்கள் மற்றும் உதவிகளை வழங்குதலே இப் போட்டியின் பிரதான நோக்கமாகும்.

கிழக்கு மாகாண மட்டப் போட்டி கடந்த மே மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் நடைபெற்றது. அதில் சோமசுந்தரம் வினோஜ்குமார் பதின்மூன்று கண்டுபிடிப்புக்களை போட்டிக்காக காட்சிப்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி பிரச்சாரம்!!

எழுக தமிழ்

எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வுப் பேரணி ஒன்று நேற்று (14.09.2019) வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்பட்டது.

ஓமந்தை, கனகராயன்குளம், புளியங்குளம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் இப் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினரால் காலை 10 மணியிலிருந்து 2.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தியாகராசா வவுனியா வடக்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் , தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பெண்ணொருவர் தொடர்பான நகைச்சுவை பேச்சு : கொ லையில் முடிந்த பரிதாபம்!!

பரிதாபம்

தலாத்துஓய பொலிஸ் பிரிவின் மைலபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கத்தியால் குத்தி கொ லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் தொடர்பில் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கு இடையில் மோ தல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது மரக்கறி கடையில் இருந்த க த்தியை எடுத்து கு த்தி கொ லை செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் க த்திக் கு த்துக்கு உள்ளானவரை காப்பாற்ற முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்தவர் 38 வயதான திருமணமான கே.பீ.வீரசூரிய என்ற திருமணமானவர் என பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

க த்திக்குத்து தா க்குதல் மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பலாலி விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படுகின்றது!!

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்திருந்து தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மானிப்பாய் தர்ஷிகாவுக்கு கனடாவில் நடந்த கொ டூரங்களும் கொ லையும்!!

மானிப்பாய் தர்ஷிகா..

கனடாவில் கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த தர்ஷிகா என்பவர் அவரின் முன்னாள் கணவனினால் நடுவீதியில் வைத்து கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டார்.

அதிகளவான புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கனடாவில் இந்த கொ டூர கொ லை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் வைத்து சசிகரனை திருமணம் செய்து கொண்ட தர்ஷிகாவின் வாழ்வில் ஆரம்பம் முதலே மு ரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

2017ஆம் ஆண்டு February மாதம் 27ஆம் திகதி கனடாவை வந்தடைந்தார் தர்ஷிகா. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சசிகரனின் பெற்றோரின் வீட்டில் வாழ்ந்தனர். ஆனாலும் இருவருக்கும் இடையில் அமைதியான வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை. கனடாவுக்கு புலம்பெயர்ந்த சில மாதங்களிலேயே தர்ஷிகா பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

சசிகரனால் தர்ஷிகா பல முறை தா க்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டு த ண்டனையும் அனுபவித்துள்ளார். பிணையில் விடுதலை செய்யப்பட்ட சகிகரன் “தர்ஷிகாவுடன் நேரடியாகவோ – மறைமுகமாகவோ தொடர்பை ஏற்படுத்த முனையக்கூடாது” என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும் பிணை நிபந்தனைகளை சசிகரன் பின்பற்றவில்லை என்பதைத்தான் அவரது நீதிமன்றக் கோப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன. சசிகரன் மீது இரண்டு தா க்குதல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன. தர்ஷிகா, உடல் ரீதியாக மாத்திரமல்ல மன ரீதியாகவும் பல து ன்பங்களை எதிர்கொண்டார். அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தர்ஷிகா தனது குடும்பத்துடன் தொடர்புகளை பேணுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் வாழும் பெற்றோருடன் தொலைபேசியில் பேசுவதற்குக் கூட அவருக்கு அனுமதி இருக்கவில்லை. கொ லை செய்யப்பட்டபோது தர்ஷிகா, சசிகரனிடமிருந்து பிரிந்திருந்தார்.

தர்ஷிகா அரசாங்கம் மீதோ – ஏனையவர்கள் மீதோ சாராமல் தனது வாழ்வை நகர்த்த இறுதிவரை முயன்றவர். Dollarama அங்காடியில் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்த தர்ஷிகா, தனது சக தொழிலாளர்களின் அளவற்ற அன்பையும் மரியாதையும் பெற்றிருந்தார்.

கணவனின் தொடர் வ ன்முறைகளின் எதிரொலியாக கடந்த சில வாரங்களாக விவாகரத்துப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்திலும் தர்ஷிகா இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத சசிகரன் கடந்த 11ஆம் திகதி Dollaramaவில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் தர்ஷிகாவை கொ டூரமாக க த்தியால் கு த்தியுள்ளார்.

சகிகரனினால் கொ டூரமாக க த்திக்குத்து நடத்தப்பட்ட போதும் தன்னுயிரை காப்பாற்றும் நோக்கில் தனது வாடகை வீட்டை நோக்கி ஓடிச்சென்ற தர்ஷிகா – வெ ட்டுக் க த்தியால் பலமுறை வெ ட்டப்பட்டு – அநாதைபோல் யாரோ ஒருவரின் வீட்டின் முன் வீழ்ந்து ம ரணமடைந்தார்.

நடுத்தெருவில் திட்டமிட்டு கொ லை செய்த சசிகரன், ரொரன்ரோ பொலிஸாரின் 42 ஆவது பிரிவு காவல் நிவையத்தில் – 45 நிமிடங்களின் பின்னர் – சரணடைந்துள்ளார். அந்தப் பொழுதில் அவர் கு டிபோ தையில் இருந்துள்ளார் – மேலும் பொலிஸ் அதிகாரி ஒருவரை தா க்க முனைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வறுமையின் கொடூரம் : பெற்ற பிள்ளைகளை பௌத்த தேரரிடம் ஒப்படைத்த தந்தை!!

வறுமையின் கொடூரம்

வவுனியாவில் வசித்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளையும் குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குடும்பத்தலைவியான தாயார் பொலிஸ் நிலையத்தில் தனது இரண்டு பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டபோது பௌத்த தேரரிடமிருந்து இரு பிள்ளைகளையும் அழைத்து வருமாறு தாய், தந்தை இருவருக்கும் பொலிசாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் வசித்து வரும் குடும்பம் ஒன்று வறுமை காரணமாக தமது பிள்ளைகளை வளர்த்து எடுப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் அந்த குடும்பத்தலைவர் தனது 6 மற்றும் 7வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு மனைவியிடம் உறவினர்கள் வீட்டிற்குச் செல்வதாக தெரிவித்துவிட்டு

பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் தனது நிலைமைகளைத் தெரிவித்து தனது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வவுனியா சென்று நடந்த சம்பவத்தை தனது மனைவியிடம் நேற்று முன்தினம் இரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை கிராமத்திலுள்ள பெண் சமூக ஆர்வலர் ஒருவரிடம் சென்ற குறித்த தாயார் கணவனின் செயற்பாட்டினைத் தெரிவித்து தனது நிலைமைகளைத் தெரிவித்துள்ளதுடன் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி அழுது புலம்பியுள்ளார்.

இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளச் சென்போது மாமடுவ பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் தாயிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து தந்தையை அழைத்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் பௌத்த தேரருடன் தொடர்பினை ஏற்படுத்தி ஒப்படைக்கப்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளையும் தாய், தந்தை ஆகிய இருவரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதுடன் தாய் தந்தை இருவரும் அங்கு சென்று இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வருமாறு பொலிசாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இளைஞனை தாக்கிய பொலிசார்!!

போக்குவரத்து பொலிசாரின்..

வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப்பகுதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக நேற்று இரவு 9 மணியளவில் போக்குவரத்து பொலிசார் கடமையில் நின்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஏ9 வீதியால் வவுனியா நகரப்பகுதி நோக்கி வந்த முச்சக்கர வண்டி ஒன்றை போக்குரத்து பொலிசார் மறித்து ஆவணங்களை பரிசீலித்தபோது குறித்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் இருந்தவர்களில் ஒருவர் ம துபோ தையில் போக்குவரத்து பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தா க்குதல் நடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த இளைஞரை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, போக்குவரத்து பொலிசாரும் குறித்த இளைஞரும் வீதியில் கட்டிப் பிடித்து இழுபட்டனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு மேலதிக போக்குவரத்து பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், சுமார் 10 இற்கும் மேற்பட்ட பொலிசார் இணைந்து குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து விலங்கிட்டு கைதுசெய்து கொண்டுசென்றனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் சுமார் அரைமணி நேரமாக பதற்ற நிலை காணப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் இடையிடையே பாதிப்படைந்தது. இதேவேளை, முச்சக்கர வண்டியில் பயணித்த தம் மீது பொலிசார் வேண்டுமென்றே தா க்குதல் நடத்தியதாக குறித்த இளைஞனருடன் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் தெரிவித்தார்.

வவுனியாவில் வரும் திங்கட்கிழமை கடையடைப்பா? வர்த்தக நலன்புரி சங்கம் அதிரடி அறிவிப்பு!!

எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையை நிராகரிப்பதாக வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா வர்த்தக நலன்புரி சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘எழுக தமிழ்’ நிகழ்வு சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றோம். ஆனால் ‘எழுக தமிழ்’ நிகழ்வை முன்னிறுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாதவகையில் செயற்படவேண்டும்.

யாழ் நகரில் நடைபெறும் கூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டுமாறு கோரிக்கை விடுவது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.

வர்த்தகர்கள் பல வழிகளில் பல சிரமங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை யாரும் புரிந்துகொள்வதில்லை.

கடையடைப்பு செய்வதால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சிரமப்படவேண்டிய நிலை ஏற்படும்.

‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு சகல மக்களும் உணவுடன் வருகைதந்து கலந்து கொள்ளுமாறு கோருவது நியாயமானது. ஆனால் கடையடைப்பு செய்யுமாறு கோருவது முறையற்றது.

ஏற்கனவே இரண்டு ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள் நடைபெற்ற போது கடையடைப்போ, ஹர்த்தாலோ நடைபெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படாமல், குறிப்பிட்ட ஒரு சில கட்சிகள் அரசியல் வளர்க்க பொது மக்களை பயன்படுத்துவதை அனைவரும் நிறுத்தவேண்டும்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மக்களின் விருப்பத்தையும், கருத்துக்களையும் கணக்கிலெடுக்காமல் தனது தனிப்பட்ட விருப்பப்படி பொருத்தமற்ற இடத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அமைத்தது வவுனியா மாவட்ட மக்களுக்கு செய்த பெரிய துரோகமாகும்.

அதேபோல் புதிய பேருந்து நிலைய மாற்றம் தொடர்பாகவும் வவுனியா மாவட்ட மக்களினதும் வர்த்தகர்களினதும் நலன்களை கருத்திற்கொள்ளாமல் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டமையானது வவுனியா மக்களுக்கு செய்த மிகப்பெரிய பாதிப்பான செயற்பாடாகும்.

ஆகையால் அவரது இணைத் தலைமையுடன் நடைபெறும் செயற்பாட்டிற்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்கமுடியவில்லை.

யு த்தம் நடைபெற்ற காலங்களிலும் மற்ற காலங்களிலும் அனைவரினதும் வேண்டுகோள்களின் போதும் ஹர்த்தால் கடையடைப்பு கோரிக்கைகளுக்கு வவுனியா வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி வந்திருக்கின்றார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகையால் 16.09.2019 திங்கட்கிழமை அன்று நடைபெறும் ‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு கடையடைப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வீதிகள் புனரமைப்பு!!

வீதிகள் புனரமைப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட்டார உறுப்பினர்கள் சபையில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக வருடாந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் உக்கிளாங்குளம், கூமாங்குளம், தோணிக்கல், எல்லப்பர் மருதங்குளம் ஆகிய கிராமங்களின் வீதிகளின் புனரமைப்பே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் மற்றும் வட்டார உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர்.