அமெரிக்கவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனை அவனுடைய சகோதரி தேற்றும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 4 வயது பெக்கெட் பர்க் என்கிற சிறுவன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு கீமோதெரபி உள்ளிட்ட பிற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்ததால் பல மாதங்கள் மருத்துவமனையிலே கழிக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த சிறுவனை, அவனை விட 14 மாதம் மட்டுமே வயதில் மூத்த சகோதரி ஆப்ரி அதிக அக்கறையுடன் கவனித்து வருகிறார். இதனை புகைப்படமாக எடுத்துள்ள அவர்களுடைய தாய் கைட்லின் (28) மற்றும் அப்பா மத்தேயு ஆகியோர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவருடைய தாய் கூறுகையில், என்னுடைய குழந்தைகள் இருவரும் அதிக பாசத்துடன் இருப்பதை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயத்தில் என்னுடைய மகனை நினைத்தால் பெரும் வருத்தமாகவும் இருக்கிறது.
என்னுடைய மகனை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் சோபாவில் அமர வைப்பது வரை என்னுடைய மகள் தான் கவனித்து வருகிறார் என கூறியுள்ளார்
ம துபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த இளம்பெண் ஒருவர், அடிக்கடி கழிவறைக்கு செல்வதைக் கண்ட ம துபான விடுதி பாதுகாவலர்கள், அவரைப் பிடித்து மோசமான கேள்விகள் கேட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவியான Amber Davies (21), Birminghamஇலுள்ள பிரபல ம துபான விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். அவர் அடிக்கடி கழிவறைக்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகம் அடைந்த விடுதியின் பாதுகாவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி, போ தைப்பொ ருள் உட்கொள்வதற்காக அடிக்கடி கழிவறைக்கு செல்கிறாயா? அல்லது யாருடனாவது பா லுறவு கொள்ளச் செல்கிறாயா என்று கேட்டுள்ளார்கள்.
அவருடன் வந்த அவரது காதலரையும் தனியாக அழைத்து விசாரித்துள்ளார்கள் அந்த பாதுகாவலர்கள். பின்னர்தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது. மொடலான Amberக்கு ஒரு பெரும் பிரச்னை.
அதாவது, குடலில் ஏற்பட்டுள்ள ஒரு பி ரச்சினை காரணமாக, Amber உடலில் உருவாகும் கழிவுப்பொருட்களை அவரால் இயற்கையாக வெளியேற்ற முடியாது. அவை, அவர் அடிவயிற்றில் பொருத்தியுள்ள ஒரு பைக்குள் சேரும். ஒரு நாளைக்கு 5 முறையாவது அவர் கழிவறைக்கு சென்று அந்த பையை சுத்தம் செய்து வரவேண்டும்.
அப்படி சுத்தம் செய்யப்போகும்போதுதான், விடுதியின் பாதுகாவலர்கள் அவருடன் அவரது காதலரும் உதவிக்காக உடன் செல்வதைக் கண்டு, இருவரும் பா லுறவு கொள்வதற்காக அடிக்கடி செல்வதாக தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். உண்மை தெரியவரவும், ம துபான விடுதி சார்பில் Amberஇடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனுப்பிரியா லக்ரா என்பவர் பெற்றுள்ளார்.
மால்கங்கிரி மாவட்டத்த சேர்ந்த அனுப்ரியா விமானியாக வேண்டும் என்ற கனவால், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தினார். பின்னர் விமானிகளுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 2012ம் ஆண்டு புவனேஷ்வரில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.
7 ஆண்டுகால பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள அனுப்ரியா, தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்றில், இணை விமானியாக பணியில் சேர்ந்துள்ளார். வெகுவிரையில் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கவிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநில காவல்துறையில் ஹவில்தாராக பணிபுரியும் மரினியாஸ் லக்ராவின் மகளான அனுப்ரியா, விமானியாக வேண்டும் என்ற தனது கனவை எட்டிப்பிடித்ததோடு, பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதனிடையே சாதனை பெண்ணான அனுப்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதோடு பல்வேறு தரப்பினரும் அனுப்பிரியாவை பாராட்டி வருகின்றனர்.
பழனியில் இருந்து கேரளா செல்லும் வழியில் தாயின் கவனக்குறைவால் காரில் இருந்து நடுக்காட்டில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பழனியில் மொட்டை போடுவதற்காக வருகை தந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.
மலைப்பாதையில் கார் சென்றுகொண்டிருந்த போது அனைவரும் அயர்ந்து உறங்கி விட்டனர். அந்த சமயத்தில் தாயின் மடியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கோகிலா, திடீரென ஜன்னல் வழியே தவறி வெளியில் விழுந்துள்ளது.
இதனை கவனிக்காமல் காரில் இருந்தவர்களும் வேகமாக சென்றுகொண்டிருந்துள்ளனர். சாலையில் விழுந்த குழந்தை தவழ்ந்து அங்கிருந்து வேலி அருகே சென்றுள்ளது. சிசிடிவியில் இதனை பார்த்த வனத்துறை ஊழியர் கைலாசம் உடனடியாக பொலிஸாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், காயத்துடன் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதற்கிடையில் 40 கிமீ தூரத்தில் உள்ள வீட்டை அடைந்ததும் தம்பதியினர் குழந்தையை காணவில்லை என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளும் போது, குழந்தை வனத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோடை வெயிலின் போது பிரான்சில் 1,435 பேர் உ யிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சுகாதர அமைச்சர் இதனை கூறியுள்ளார். அனல்காற்று வீசியதன் காரணமாக 75 வயதுக்கு மேற்பட்ட பலர் இவ்வாறு உ யிரிழந்ததாக அவர் கூறியுள்ளார்.
உள்நாட்ட வானொலி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோடை காலமான கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் நிலவியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
குறிப்பாக பிரான்சில் கடும் வெப்பம் நிலவிய நிலையில், அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. பலரும் நோய்வாய் பட்டநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, கோடை வெயிலின் போது பிரான்சில் 1,435 பேர் உ யிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானது. எனினும் கோடை வெயிலினால் ஏற்பட்ட உ யிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது.
தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளன. இந்நிலையில், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவேண்டும்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியதாகவே தான் கருத்து வெளியிட்டிருந்தேன்.
இந்த நிலையில், இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ப யங்கரவாதத் தா க்குதல் சம்பவத்தின் பின்னர், நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்துடனான ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணமாகும். இந்த நிலையில், இலங்கையின் பாதுகாப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, “தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்திருந்தேன். இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று கருத்து வெளியிட்டிருந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிலேயே முத்தையா முரளிதரன் மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் உ யிரிழந்த மாணவி செல்வி.நடேஸ்வரராஜன் அக்ஸயாவின் இறுதிக் கிரியைகள் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
காரைதீவு 10ம் பிரிவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளன. அதனையடுத்து சடலம் காரைதீவு மத்திய வீதி ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு காரைதீவு இந்து மயானத்தில் இறை வழிபாட்டுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி அக்ஸயா திடிரென எ ரிந்த நிலையில் தரையில் வீழ்ந்து உ யிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய இயந்திர முறையில் கடவுச்சீட்டு வழங்கும் முறை அமுல்படுத்தவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் கண்களை ஸ்கேன் செய்யும் புதிய நடைமுறை அமுலாகவுள்ளது.
புதிய நடைமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமுலாகும் என, திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தேவையான இயந்திரங்கள் உரிய நேரத்தில் பெறப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கு ற்றவாளிகளை இலகுவாக இனம் காணும் வகையில் இந்த நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது. இதற்காக விசேட இயந்திரங்கள் தருவிக்கப்படவுள்ளன. பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
“பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும்.” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல. நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன். நான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே பிரபலமானவன். கிரிக்கெட் விளையாட்டில் நான் முடிந்தவரை செய்வேன். பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல.
பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும். எனினும் ஆட்சியென்பது நிர்வாகம் ஆகும். நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன்.” என கூறியுள்ளார். இதேவேளை, இந்த ஊடக சந்திப்பின் போது முத்தையா முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலும் மாலிங்க பேசியிருந்தார்,
“எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும். கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும். அது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும். வியத்மக குறித்து நீங்கள் கூறும் வரை எனக்கு என்னவென்று தெரியாது. முரளி சேர்ந்திருந்தால் அது தனிப்பிட்ட விருப்பமாக இருக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் – புத்தூர், நவக்கரி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நவக்கிரி,புத்தூர் பகுதியினை சேர்ந்த கந்தையா சிவபாலன் வயது (70) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்த முதியவர் நேற்று இரவு வீதியோரமாக நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் பக்க திசையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவரை சடுதியாக மோதி தள்ளியுள்ளது.
இதன்போது காயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.
ச ட்டவிரோ தமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவரை இராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு தெரிவித்தார். தகவல் அறிவும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2010ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு ஆடி மாதம் வரையிலான காலப்பகுதியில் வவுனியா அரசினர் விதை உற்பத்தி பன்ணைக்கு வருடாந்த முற்பணக்கணக்குகள் மூலம் செலவு செய்யப்பட்ட பணத்தின் பெறுமதி, பண்ணை மூலம் பெறப்பட்ட பணம், வருடாந்தம் பெறப்பட்ட வருமானத்தின் முற்பணக்கணக்கின் மூலம் வைப்பிடப்பட்ட பணம் வருடாந்த லாபம் அல்லது நஸ்டம் ,
2010ம் ஆண்டிலிருந்து 2019 ஆடி மாதம் வரை அரசினர் விதை உற்பத்தி பண்ணையில் நெற் செய்கை பண்ணப்பட்ட விஸ்தீரணம் இன ரீதியாக அறுவடை செய்யப்பட்ட விஸ்தீரணம் பெறப்பட்ட ஈரநிறை,பெறப்பட்ட விதை நெல் அளவு, சராசரி விளைச்சல் பயிரழிவு விஸ்தீரணம்,
இவ்வருட ஆரம்பத்திலிருந்து 6 மாத காலப்பகுதி காலத்தில் அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற உற்பத்தி தொடர்பான நடவடிக்கையும் அதில் ஈட்டிய வருமானம் தொடர்பாகவும்,
இவ்வருட ஆரம்பத்திலிருந்து 6மாத காலப்பகுதிக்குள் அரச விதை உற்பத்திப்பண்ணைக்கு உற்பத்தி பொருட்டு கொள்வனவு செய்யப்பட்ட ரூபா.500க்கு மேற்பட்ட கொள்வனவு சிட்டைகள் தொடர்பாக கடந்த 29.07.2019 தொடக்கம் ஆரம்ப கட்ட புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்றுகின்றன.
எனவே 2016ம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச்சட்டம் சரம் 4 இற்கு அமைவாக புலனாய்வு விசாரணைகள் முடிவுறும் வரையில் கோரப்பட்ட தகவலுக்கான பதிலை வழங்க முடியாது என வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு மேலும் தெரிவித்திருந்தார்.
அவர் அவ்வாறு தெரிவித்திருந்த போதிலும் தகவல் அறிவும் உரிமைச்சட்டம் பிரிவு 04 இல் “இச்சட்டமானது வேறு சட்டங்களுடன் முரண்படுமாயின் இச்சட்டமானது மேலோங்கி நிற்கும்” என்பதேயே குறிப்பிடுகின்றது. எனவே வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் தகவலை வழங்க மறுக்க முடியாது.
குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாவிற்கு தவறாக வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் தகவல் வழங்கியுள்ளமையினால் அவர் மீது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேல்முறையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் கிராமத்தில் இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களுமாக 100 குடும்பங்கள் இக்கிராமத்தில் 2001ம் ஆண்டிலிருந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். அத்துடன் அவர்களுக்கிடையே எவ்வித சமய வேறுபாடோ அல்லது மதத்துவேசமோ இருந்தது இல்லை.
அக்கிராமத்தில் புதிதாக குடியேறிய குடும்பம் ஒன்று அவர்களின் குடியிருப்புக்காக வழங்கப்பட்ட காணியில் கிறிஸ்தவ சபை ஒன்றினை அமைத்து மற்ற சமயங்களை தவறான முறையில் பேசியும் அக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு வேதனையளிக்கும் முறையில் நடந்து கொள்கின்றனர் என தெரிவித்து அக் கிராம மக்கள் பல்வேறு தரப்பினருக்கு மகஜர் மற்றும் முறைபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களினால் பல்வேறு இடங்களுக்கு வழங்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது கிராமத்தில் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். இங்கு கிறிஸ்தவ சபையை சேர்ந்த11 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 09 குடும்பங்கள் துடரிக்குளத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருகின்றனர். மிகுதி 3 குடும்பங்கள் எமது கங்கன்குளம் கிராமத்தில் அத்துமீறி சபை ஒன்றினை அமைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் செயல் இங்கு வசிக்கும் எங்களுக்கு மிக வேதனையாகவுள்ளது. இவர்கள் பகல் மற்றும் இரவு வேளைகளிலும் சத்தமிடுவதினால் எமது கிராமத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் நடந்தாலும் எமக்கு தெரிவதில்லை. எனவே இவ் ஆலயத்தினை வேறு இடத்திற்கு மாற்றமாறும்,
இச் சபைக்கு வேறு கிராமத்திலிருந்தே மக்கள் வருகின்றனர். அவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுவதும் சத்தம் இடுவது எமது கிராமத்திற்கு அமைதியை சீர்குழைப்பது போல் உள்ளது. அத்துடன் புதிய சபை ஒன்றை அமைத்து சட்டவிரோதமாக இருப்பினும் இவர்களுக்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
எனவே சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றி இச்சபையின் செயற்பாடுகளையும் நிறுத்தி எமது கிராமத்தின் அமைதியினை மீண்டும் பெற்றுத்தருமாறு அனைத்து அதிகாரிகள் மற்றும் இவ்விடயம் சார்ந்த அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் சபை விடயம் பிணக்கு மற்றும் தவறு மத்தியஸ்த சபைக்கு சென்ற சமயத்தில், செட்டிக்குளம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடியதன் பிரகாரமும் மத்தியஸ்த சபையின் கருத்தாய்வின் படியும் மத வழிபாட்டினை தடை செய்ய முடியாது என்றும் ஆனால் பாரிய சமூக பிரச்சனை உருவாகாத வண்ணம் ஊரோடு இணங்கி வாழ வேண்டும் என்ற நியதியின்படி கங்கன்குளத்தில் வசிப்பவர்கள் மட்டும் தற்போது இவ் வளவுக்குள் ஆராதனையில் ஈடுபட இணக்கம் காணப்படுபட்டுள்ளது.
எனினும் தற்போதும் இச் சபைக்கு வேறு கிராமத்திலிருந்தே மக்கள் வருவதாகவும் கிராமத்தின் அமைதியினை சீர்குழைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். உடனடியாக இச் சபை கட்டடிடத்தினை அகற்றுமாறும் அகற்றாத பட்சத்தில் பொலிஸ் மூலம் அகற்றப்படும் என கிராம சேவையாளர் தெரிவித்திருந்த போதிலும் சபை கட்டிடம் அகற்றப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக கங்கங்குளம் கிராம சேவையாளரிடம் வினவிய போது, நான் குறித்த கிராம சேவையாளர் பிரிவினை கடமையேற்று 5 மாதங்களே ஆகின்றன. இவ்விடயம் தொடர்பாக நான் அறிந்துள்ளேன்.இவ்விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் உத்தரவினை பெற்று தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியுமென தெரிவித்தார்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம், இராசேந்திரகுளம் பகுதிகளை சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு இன்று (09.09.2019) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த 5000 ரூபா ஒய்வூதிய உதவிப் பணத்தில் தங்களது வாழ்க்கையினை நாடாத்தி வரும் இரு குடும்பத்தினர் உட்பட நான்கு குடும்பத்தினருக்கு இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
உதவி வழங்கி வைக்கப்பட்ட சமயத்தில் பிள்ளைகளின்றி தனிமையில் வாழும் குறித்த தாய், தந்தைகள் கண்ணீர் மல்கி கிராம சேவையாளர் உட்பட ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா சிவகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தமை அங்கிருந்த அனைவரது மனங்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
ஊடகவியலாளர் பா.கதீஷனின் வேண்டுகோளிக்கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த நடராஜா சிவகுமாரின் நிதியில் ஒர் குடும்பத்தினருக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றும் சிறு பணம் வீதம் (மொத்தமாக ரூபா20000 மற்றும் சிறு தொகை பணம்) நான்கு குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தில் ஊடகவியலாளர் பா.கதீஷன், இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் ப.பிரதீப், ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த நடராஜா சிவகுமார் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நடராஜா சிவகுமார் மாதாந்தம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறான பல உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பண்பு, அறிவு, வலு நிறைந்த பிள்ளைகள் சமூகம் ஒன்றை நாட்டுக்கு உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதி ,ஆசிரியர் விடுதி, என்பன இன்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் திரு.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதியினை நாடா வெட்டித் திறந்துவைத்தார்.
இந் நிகழ்வில் தொழினுட்ப உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆங்கில மொழி நாடகப் போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஜோன்கீல்ஸ் நிறுவனம் மாணவர்களின் ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யும் நோக்கில் வடமாகாணத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விசேட கல்வி செயற்திட்டம் ஓன்றை முன்னெடுத்துள்ளது.
குறித்த மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழியிலான நாடகப் போட்டியை நடத்தியது. இதில் வடமாகாணத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகள் பங்குபற்றின.
குறித்த போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றதுடன், நடைபெற்ற நாடகங்களில் சிறந்த நடிகராகவும் அல் இக்பால் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ரி.எம்.சபீக் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக் கேடயத்தை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.