இலங்கையில் பல மில்லியன் ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய குளம்!!

அதிசய குளம்

பலங்கொட பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க சுண்ணாம்பு குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரக்வக்க காட்டுப் பகுதியில் இந்த குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளத்தினை பார்வையிடக் கூடிய வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரையில் எவரும் அங்கு செல்ல கூடாது என பாதுகாப்புத் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறி காட்டுக்குள் நுழைவோரை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுண்ணாப்பு குளம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதனை பார்வையிட பெருமளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும் அனுமதியின்றி நுழைவதனால் பாரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் முழுவதும் சுண்ணாம்பு கற்கள் உள்ளதாகவும், அந்த பகுதிகளில் மேலும் சில சுண்ணாம்பு குளங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. அனுமதியின்றி அங்கு நுழைந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சமூக வலைத்தளங்ளில் வெளியிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக மில்லியன் கணக்கான வருடங்கள் பழமையானதென கருதப்படும் இந்த சுண்ணாம்பு குளத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சஜித்துடன் கூட்டமைப்பு இரகசிய சந்திப்பு!!

இரகசிய சந்திப்பு

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்தின, யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்தப்பு எதற்காக நடைபெற்றது எனவும், என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படதெனவும் இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா!!

கற்றல் வள நிலைய திறப்புவிழா

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 17 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலைய திறப்புவிழா இன்று (09.09.2019) காலை 8 மணியளவில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் தியாகசோதி யுவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் கட்டிடத்தினையும் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் மற்றும் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தொழிநுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!

தொழிநுட்ப ஆய்வுகூடம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூடம் இன்று (09.09.2019) காலை 10.30 மணியளவில் பாடசாலையின் முதல்வர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

தொழிநுட்ப ஆய்வுகூடத்தினை அதிபருடன் இணைந்து பிரதம விருந்தினரும் சிறப்பு விருந்தினரும் திறந்து வைத்ததுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மற்றும் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து இராதகிருஷ்ணன் மற்றும் வலயக்கல்வி பணிமணை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி : ஒருவர் படுகாயம்!!

விபத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (09.09.2019) மதியம் 1.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி மோட்டார் சைக்கில் பயணித்துகொண்டிருந்த சமயத்தில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன விற்பனை நிலையத்திற்கு முன்பாக வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வண்டி வீதிக்கு ஏற முற்பட்டது. இதன் போது முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 45 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வீரர்கள் முதல் முறையாக ஆணழகன் போட்டியில் சாதனை!!

ஆணழகன் போட்டியில் சாதனை

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாகாண விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7ம், 8ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் பதக்கங்களை வெற்றிபெற்றுள்ளனர்.

குறித்த விளையாட்டு நிகழ்வில் ஆணழகன் போட்டியில் முதல் முறையாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து (Body Building) 50-55 எடைப் பிரிவில் பிரதீபன் வெள்ளிப் பதக்கம்,

55 -60 kg எடைப் பிரிவில் ஸ்ரீவீரகன் வெண்கல பதக்கம் பெற்று மாவட்டங்களின் அடிப்படையில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் உ யிருக்கு போ ராடிய தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய இராணுவத்தினர்!!

காப்பாற்றிய இராணுவத்தினர்..

கிளிநொச்சியில் சேற்றில் புதையுண்ட நிலையில் உயிருக்கு போ ராடிய மூன்று பேரை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் பூநகாி- அரசபுறக்குளத்தில் நீராட சென்றிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்னளர்.

பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்து!!

மலேரியா..

இலங்கையில் மலேரியா நோய் வேகமாக பரவும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் தம்பதிவ யாத்திரைக்கு சென்று நாடு திரும்புவோரினால் மலேரியா நோய்த் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தம்பதிவ சென்று மீண்டும் இலங்கைக்கு திரும்பியவர்களில் 5 பேர் கண்டி உட்பட பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பினால் 2016ஆம் ஆண்டு, மலேரியா முழுமையாக அகற்றப்பட்ட நாடாக இலங்கை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டிய தகவலுக்கமைய மலேரியா பாரியளவு அதிகரித்த நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு வருடாந்தம் 5 இலட்சம் பேர் சென்று வருகின்றனர். இதன் காரணமாக இலங்கையில் மலேரியா வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர் A.P.D.ஹேரத் தெரிவித்துள்ளார்.

தம்பதிவ சென்று மீண்டும் இலங்கை வந்தவர்கள் அல்லது மலேரியா தொற்றுள்ள நாடுகளுக்கு சென்று இலங்கை திரும்புவோருக்கு இரத்த பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய கும்பல்!!

யாழில்..

யாழ். மாவட்டத்தில் உள்ள நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்றை சேர்ந்த நால்வர், வீட்டிலிருந்தவர்களை அ ச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாள்களைக் காண்பித்து குறித்த வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி வீட்டிலிருந்த பொருட்கள், தளபாடங்களை சேதப்படுத்தி சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தா க்கியதில் மாணவர் உ யிரிழப்பு : ஆ த்திரத்தில் பள்ளியைக் கொ ளுத்திய மாணவர்கள்!!

ஆசிரியர் தா க்கியதில்..

பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியர் தா க்கியதில் மாணவர் உ யிரிழந்ததைத் தொடர்ந்து சக பள்ளி மாணவர்கள் பள்ளியை தீ யிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஹாஃபிஸ் ஹுனாயின் பிலால் என்ற மாணவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை அன்று, அவரது ஆசிரியர் முகமது காம்ரான் என்பவர் ஹூனாயின் பிலால் பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்று கூறி, மாணவரை க டுமையாக தா க்கியதாக கூறப்படுகிறது.

பிலாலை சு வற்றில் பலமுறை மோ தி மோ சமாக கா யப்படுத்தியுள்ளார் ஆசிரியர் முகமது காம்ரான். இதனால் நிலைகுலைந்து விழுந்த பிலால் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் பாதி வழியிலேயே ஹுனாயின் பிலால் உ யிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தினால் பள்ளி மாணவர்கள் கொ ந்தளிப்படைந்தனர். அதன் பின்னர் ஆசிரியருக்கு எதிராக கண்டன ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஒரு கட்டத்தில் பள்ளிக்குள் பெ ட்ரோல் கு ண்டுகளை வீ சினர்.

இதில் பள்ளி முழுவதும் தீ ப்பிடித்து எ ரியத்தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சில மணிநேர போ ராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் உ யிரிழந்த மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் காம்ரான் மீது வழக்குப்பதிவு செய்து பள்ளியின் முதல்வரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயின் சேலையை பள்ளிக்கு மறைத்து எடுத்து வந்த மாணவி செய்த விபரீத செயல்!!

மாணவி செய்த விபரீத செயல்

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி வகுப்பறையிலேயே தூ க்குப் போட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அர்ச்சனா(16) அதே பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவி அர்ச்சனா, நேற்று காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு சென்றுள்ளார். மற்ற மாணவிகள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு அவர் சென்றதால், வகுப்பறையிலேயே சே லையால் அங்கிருந்த மி ன்விசிறியில் தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதனைக் கண்டு அ திர்ச்சியடைந்த சக மாணவிகள், உடனடியாக பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மாணவியின் ச டலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு வந்து பள்ளி நிர்வாகத்தை குற்றம்சாட்டி ச டலத்தை எடுத்துச்செல்ல விடாமல் பொலிசாருடன் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவியின் பெற்றோருடன் பொலிசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் நடந்த முதற்கட்ட விசாரணையில், மாணவி அர்ச்சனா வீட்டில் இருந்து வரும்போதே தற்கொலை முடிவுடன், தனது தாயாரின் சேலையை புத்தகப்பையில் மறைத்து எடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சோக சம்பவத்தால் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி தற்கொலை குறித்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவல்களில், அர்ச்சனா அதே பகுதியில் உள்ள ஒரு இளைஞருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த விடயம் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மனவேதனையில் இருந்த மாணவி அர்ச்சனா, ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமலும், யாருடனும் பேசாமலும் இருந்துள்ளார். இந்நிலையில் தான், பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி இருப்பதாகவும் அதற்காக சேலை வேண்டும் என்றும் தனது தாயிடம் கேட்டு வாங்கி சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு முன்பே சென்ற அவர், வகுப்பறையில் தூக்குப்போட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சக தோழிகளிடமும் பொலிசார் நடத்தி வருகின்றனர்.

திருமணமான 5 நாளில் நடந்த துயர சம்பவம் : மனைவியை கட்டிப்பிடித்து கதறி அழுத கணவன்!!

கதறி அழுத கணவன்

தமிழகத்தில் திருமணமாகி ஐந்து நாட்களே ஆன நிலையில், மனைவி விபத்தில் இ றந்ததால், கணவன் அவரை கட்டிப் பிடித்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. வாணியம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் திவ்யா(24) என்ற பெண்ணிற்கும் கடந்த 1-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை புதுமணத் தம்பதி இரு சக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்கு சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அதன் பின் மாலை நேரத்தில் மலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அப்போது 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, கார் ஒன்று எதிரே வேகமாக வந்ததால், இதைக் கண்ட மணிகண்டன் நிலைதடுமாறி, இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.

அதற்கு அங்கிருந்த தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதால், இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் திவ்யா அங்கிருந்த சுவற்றின் மேல் பலமாக மோதியதால், சில வினாடிகளிலே உ யிரிழந்தார்.

மனைவி கண்முன் உ யிரிழந்ததைக் கண்ட மணிகண்ட, காயத்தோடு எழுந்து வந்து திவ்யாவை கட்டிப்பிடித்து உனக்கு பதில் என் உ யிர் போயிருக்க கூடாதா கதறி அழுதார். இதைக் கணட அங்கிருந்த பொதுமக்கள் கண்கலங்கினர்.

எவ்வளவு கூறியும், திவ்யாவை மணிகண்டன் விடவே இல்லை, கட்டிப்பிடித்து அழது கொண்டிருந்தார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், திவ்யாவின் உ டலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4 மாதத்தில் சொல்லாமல் கொள்ளாமல் மாயமான கணவன் : வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

புதுப்பெண்

வடமாநிலத்தை சேர்ந்த புதுப்பெண் தமிழகத்தில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம் பிரகினாஸ்தாய்தலா பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி ஷர்மாமண்டல் (28).

இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த சடையகவுண்டன்புதூரில் இயங்கி வரும் தனியார் கொசுவலை நிறுவனத்தில் தங்கி அங்கேயே தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளனர்.

இதனிடையே சம்சுதீன் மனைவியிடம் எதுவும் சொல்லாமல் சொந்த மாநிலமான மேற்குவங்கத்திற்குச் சென்றாராம். இதனால் வி ரக்தியில் இருந்த ஷர்மாமண்டல் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புன்னகை அரசி பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!!

இலங்கை யுவதி

இத்தாலியின் வேனிஸ் ஜெஸ்சோலோவில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் இத்தாலி அழகு ராணி போட்டியில் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருக பெர்னாண்டோ என்ற யுவதி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

அழகு ராணி போட்டியில் இத்தாலியை சேர்ந்த கோரோலினா ஸ்டாமரே வெற்றி பெற்றடன் செரினா பெட்ராலி என்ற யுவதி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சேவ்மி தாருகா பெர்னாண்டோ புன்னகை அரசி என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். 20 வயதான சேவ்மி தாருகாவின் பெற்றோர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறியுள்ளனர்.

இத்தாலியின் பாதுவா நகரில் பிறந்த சேவ்மி அழகியல் படிப்பில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளதுடன், மாடலாக தொழில் புரிந்து வருகிறார். மிஸ் இத்தாலி அழகி ராணி போட்டியின் இறுதி சுற்று தெரிவான இவர், Veneto மாநிலத்தின் அழகு ராணி போட்டியில் வென்றுள்ளார்.

மாகாண ரீதியாக கலந்து கொண்ட 187 போட்டியாளர்களில் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 80 போட்டியாளர்களில் சேவ்மி தாருகாவும் இடம்பிடித்ததுடன், கடந்த வெள்ளிக் கிழமை இரவு நடந்த இறுதி போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

வவுனியாவில் வ ன்முறையாக மாறிய குடும்ப மோ தல் : பலர் மீது வா ள்வெட்டுத் தாக்குதல்!!

வவுனியாவில்..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வா ள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கர் வளவை சேர்ந்த இருதரப்பிற்கும் இடையில் நேற்றுமுந்தினம் சிறு மு ரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்சியாக நேற்றிரவு வீடொன்றிற்குள் நுளைந்த இளைஞர் கு ழுவினர் அங்கிருந்தவர்கள் மீது வா ளால் தா க்கியதுடன், மான்கொ ம்பினாலும் தா க்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், வீட்டில் நிறுத்தபட்டிருந்த முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியது.

இதேவளை அதே சம்பவத்தில் காயமடைந்ததாக தெரிவித்து மற்றொரு பெண் உட்பட மூவருமாக மொத்தம் 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்னர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கபடும் ம துபோ தையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை ஓமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் உடைந்து வீழ்ந்த கோத்தபாயவின் உருவம் : கடும் அதிருப்தியில் மக்கள்!!

கோத்தபாயவின் உருவம்

கொழும்பின் புறநகர் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மஹிந்த மற்றும் கோத்தபாயவின் பதாதை உடைந்து விழுந்துள்ளது.

மஹரகம பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த பதாதையே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவை வரவேற்கிறோம் என கூறி புதிதாக அமைக்கப்பட்ருந்த பதாதையே இன்று காலை உடைந்து விழுந்துள்ளது.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோத்தபாய, தான் சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சாரம் ஒன்றையே மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் சூழல் மற்றும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாதைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.