இலங்கை மக்களுக்கு அ வசர எ ச்சரிக்கை : உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!!

அ வசர எ ச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோ ய் தீ விரமடைந்து வரும் நிலையில், நோ ய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகுமாறு அவசர எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் காலம் தாழ்த்தாமல் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய தொற்று நோ ய்கள் த டுப்பு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு நோ யாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44,193 டெங்கு நோ யாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான (8,982) டெங்கு நோ யாளர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சுத்திகரிப்பதற்கு பொதுமக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எ திர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்க வேண்டாம் என அண்மையில் இலங்கை மக்களுக்கு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

டெங்கு நோ யின் முதற்கட்ட அறிகுறியான, காய்ச்சல் வந்த நோயாளர்கள் சிலர், இதனை சாதாரண காய்ச்சல் என எண்ணி ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எ திர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் போன்ற சில மருந்துகளை உட்கொண்டுள்ளனர்.

இதனால் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த நோ யாளர்களின் நிலைமை தீவிரமடைந்துள்ளதுடன், அதில் சிலர் உ யிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அவசர எ ச்சரிக்கை அறிக்கையில்,

அஸ்பிரின் (Aspirin), புருபன் (Ibuprofen), டைக்கிலோபெனாக் சோடியம் (Diclofenac sodium), மெபனமிக் அசிட் (Mefenamic acid) மற்றும் இந்த வகையை சேர்ந்த வேறு ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எ திர்ப்பு மருந்துகள், ஸ்ரிரொயிட் வகையை சேர்ந்த மருந்துகளான பிறெட்னிசலோன் (Prednisolone), மீதைல் பிறெட்னிசலோன் (Methylprednisolone) மற்றும் டெக்ஸாமெத்தசோன் (Dexamethasone) ஆகிய மருந்துகளை காய்ச்சல் வந்தவர்கள் உட்கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நோ யாளர்கள் வைத்தியர்களின் பரிந்துரைகள் இன்றி இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற விபத்து : மூவர் காயம்!!

விபத்து

திருகோணமலை – நொச்சிகுளம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையே இவ்விபத்திற்கான காரணம் எனவும், இதன்போது மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை, பிரதான வீதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

அந்தவகையில் இம்மாதம் திருகோணமலையில் 13 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதிகளவிலான விபத்துக்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறி சென்றமையினாலேயே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

வவுனியாவில் மணல் ஏற்றி வந்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம்

வவுனியா மடுகந்தை பகுதியில் இன்று (08.09) அதிகாலை டிப்பர் வாகனம் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெப்பற்றிகொல்லாவ யானுஓயா பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் மடுகந்தை பகுதியில் (மடுகந்தை தேசிய பாடசாலைக்கு அண்மையில்) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சாரதியின் தூக்கம் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளைஞரை காதலித்து கரம் பிடிக்க போகும் திருநங்கை : இங்கு இதுவே முதல் முறை!!

திருநங்கை கவிஞர் விஜய ராஜமல்லிகா

கேரளாவைச் சேர்ந்த திருநங்கை கவிஞர் விஜய ராஜமல்லிகா, தனது காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் கவிஞர் விஜய ராஜமல்லிகா. திருநங்கையான இவர் திருச்சூர் நகர காவல் நிலையத்தில், தன்னார்வலராக பணியாற்றி வருகிறார்.

இவர் எழுதிய தெய்வத்தின்டே மக்கள் என்ற கவிதைத் தொகுப்பு கேரளாவில் பலரால் கவனிக்கப்பட்டது. அதன் பின் இந்த தொகுப்பு சென்னை பல்கலைக்கழகத்தில், முதுகலை மலையாள இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவரின் அடுத்தடுத்த கவிதை தொகுப்பளான ஆண் நதி, இவரது சுயசரிதை, மல்லிகா வசந்தம் ஆகியவை விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய் ராஜமல்லிகாவும், திருச்சூர் அருகிலுள்ள மண்ணுதியை சேர்ந்த ஜாஸிமும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ஜாஸிம் குடும்பத்தினர் எ திர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போது விஜய ராஜமல்லிகாவும், ஜாஷிமும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமணம் வரும் சனிக்கிழமை நடக்க இருக்கிறது. கேரளாவில், திருநங்கை கவிஞர் ஒருவர் திருமணம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் அறையில் ஒரே க யிற்றில் தூ க்கில் தொ ங்கிய இளம்காதல் ஜோடி!!

இளம்காதல் ஜோடி

சண்டிகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்காதல் ஜோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாக செயல்பட்டு வரும் சண்டிகர் நகரத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை இளம்காதல் ஜோடி ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னவ் மற்றும் அமேதியைச் சேர்ந்த அர்ச்சனா (17) மற்றும் விஜய் குமார் (21) என்கிற காதல் ஜோடி வெள்ளிக்கிழமையன்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இன்று காலை உணவு கொடுப்பதற்காக ஹோட்டல் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில், மாற்று சாவியை கொண்டு கதவை திறந்துள்ளனர்.

அப்போது காதல் ஜோடி இருவரும் தூ க்கில் ச டலமாக தொ ங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

17 வயதில் திருமணம் : வாடகை தாயாக மாறியது ஏன்? இளம் பெண் உருக்கம்!!

இளம் பெண் உருக்கம்

இந்தியாவில் வாடகை தாய் முறையை இந்திய அரசு ஒழிக்க புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த தடை மசோதா கூறித்து அவர்கள் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளனர்.

டெல்லியில் வாடகைதாய் தங்கியிருக்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பிரபல தமிழ் ஊடகமான பிபிசி அங்கிருக்கும் தாய்மார்களிடம் பேட்டி எடுத்துள்ளது. அதில் ஜோதி என்ற வாடகைதாய் கூறுகையில், 17 வயதில் எனக்கு திருமணம் ஆனது. வேலை பற்றி என் கணவர் பொய் சொல்லிவிட்டார்.

அவர் ம துவுக்கு அடிமையானவர் என்பது திருமணத்திற்கு பின்பு தான் எனக்கு தெரியவந்தது. வேலையில்லாத அவர் என்னை தா க்க தொடங்கினார். இதனால் அவரை விட்டு விட்டு வந்த நான், வாடகை தாயாக உள்ளேன். என்னுடைய குழந்தைகள் சிறிய குழந்தைகளாக இருப்பதால், இதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை என்று கூறியுள்ளார்.

இந்த விடுதியை ஜோதி இணையதளம் மூலம் கணடுபிடித்துள்ளார். மகப்பேரு காலத்தில் மட்டும் இவர் தங்கியிருப்பார், அப்போது இவர் உண்ணும், உணவுகள், மாத்திரைகள் கண்காணிக்கப்படும். குழந்தை பிறந்த பின்னர் வாடகை தாய்கள் பலர் அந்த குழந்தையின் புகைப்படத்தை கேட்பார்கள், அந்த புகைப்படம் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க விரும்புகின்றனர்.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டால், அடுத்து அந்த குழந்தையை கொடுக்க மனமில்லாமல் போய்விடும். எனவே குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அந்த குழந்தையை நான் பார்க்க விரும்புவதில்லை என்று ஜோதி கூறியுள்ளார்.

மேலும் ஒரு வாடகை தாயான ராஜ்குமாரி கூறுகையில், நான் என்ன செய்ய முடியும்? என்னுடைய சிறுநீரகத்தை விற்க வேண்டுமா? போதிய வேலை இல்லை. எந்த இடத்திலும் வேலை செய்வது, பெண்களுக்கு எளிதல்ல, வாடகை தாயாக இருப்பதால், வீட்டிலோ, விடுதியிலோ தங்கி, உங்கள் குடும்பத்தின் கஷ்டத்தை போக்க முடியும்.

முன்பெல்லாம் வாடகை தாயை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இப்போது அதன் தேவை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. வணீகரீதியான வாடகை தாய் முறை தடை செய்யப்படும் முன், குழந்தை பெற வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு உதவ போதியா வாடகை தாய்மார்கள் இல்லை என்பதே உண்மை, இதற்கு தடை வந்தால், சட்டபூர்வமாக்குவதற்கு சண்டை வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டால், வணீக ரீதியில் நடைபெறும் வாடகை தாய் முடிவுக்கு வரும்.

4 ஆண்டுகள் குப்பை அள்ளிய சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் நான்கு ஆண்டுகள் குப்பை அள்ளி தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

அதுமட்டுமின்றி அப்போது இருந்த அவுஸ்திரேலியா அணி போன்று உலகில் எந்த கிரிக்கெட் அணியும் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த மேக்ஸ் என்ற சிறுவன், இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்ததால், அவருக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் அதிகமாகிவிட்டது.

இதனால் அவுஸ்திரேலியா அணி விளையாடும் போட்டி, அதிலும் குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதால், அந்த போட்டியை காண வேண்டும் என்று தன்னுடைய அப்பாவிடம் கூறியுள்ளான். ஆனால், அவர் அப்பாவோ 1500 டொலர் சம்பாதித்து கொடுத்தால், உன்னை நிச்சயமாக இங்கிலாந்திற்கே அழைத்துச் சென்று கிரிக்கெட் போட்டியை காண வைப்பேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சிறுவன் உடனடியாக தன் அம்மாவிடம் இது குறித்து ஆலோசித்துள்ளான். அதன் படி வார இறுதி நாட்களில் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் வீடுகளின் குப்பையை எடுத்து செல்ல அவர்களுக்கு உதவுவது என்று முடிவு செய்துள்ளான்.

அதன் படி ஒரு வீட்டிற்கு ஒரு டொலர் வீதம் வாங்கியுள்ளான். இப்படி சுமார் நான்கு ஆண்டுகள் கழிந்துவுட்ட நிலையில், சிறுவன் மேக்ஸ் இப்போது 1500 டொலர் சம்பாதித்துவிட்டான். இதனால் நான் சொன்னதை மகன் செய்துவிட்டான் என்றவுடன், அவர் அப்பா குடும்பத்தினருடன் இங்கிலாந்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

அதன் படி தற்போது நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியை பார்க்க குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதை அறிந்த அவுஸ்திரேலியா வீரர்கள், நமக்கு இப்படி ஒரு ரசிகனா என்று அறிந்து சிறுவனை அழைத்து சிறப்பு அந்தஸ்து கொடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டீவ் வாக் மற்றும் அவுஸ்திரேலியா அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோருடன் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு சிறுவனுக்கு கிடைத்தது. அதை புகைப்படமாக எடுத்து ஸ்டீவ் வாக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதோடு மட்டுமின்றி, அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான திட்டம் குறித்து வைக்கும் குறிப்பு புத்தகத்தை அவனிடம் அளித்து என்ன திட்டம் என்பதை பார்க்க வைத்தார். இதை அவுஸ்திரேலியா வீரர்கள் கூட அதை பார்க்க முடியாது எனும் நிலையில் மேக்ஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.


மேக்ஸிற்கு அவுஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாட் கம்மின்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதால், அவர்களுடன் பேசும் வாய்ப்பும் சிறுவனுக்கு கிடைத்துள்ளது, அவர்கள் போட்டிக்கு முன்னர் எப்படி தயாராகின்றனர் என்பதையும் மேக்ஸ் பார்த்துள்ளான்.

நான்கு ஆண்டுகள் உழைத்து போட்டியை பார்க்க ஆசைப்பட்ட மேக்ஸ், அதையும் தாண்டி அவுஸ்திரேலியா அணியுடன் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றது உண்மையில் நெகிழ்வான சம்பவம் என்று இணையவாசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் நிகழ்வு இன்று (07.09) வவுனியாபுகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 16.09.2019 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

16 வயது சிறுமி பரிதாப ம ரணம்!!

16 வயது சிறுமி..

காரைதீவில் வீடொன்றில் இன்று ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக சிறுமி ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை முதலில் அவதானித்த குறித்த சிறுமியின் சகோதரர் அயலவர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை உ யிரிழந்தவர், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்த 16 வயதுடைய நடேஸ்வரராஜன் அக்ஸயா எனத் தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயது சி றுமியை பா லியல் து ஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!!

இளைஞன் கைது

திருகோணமலை – மொரவெவ பகுதியில் 15 வயது சி றுமியை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சி றுமியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து இளைஞன் பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, சி றுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய என தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை பலி!!

விபத்து

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்தில் வைத்து குறித்தநபர் வாகன சாரதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய அந்நபர், வாகனத்தின் சில்லில் சிக்குண்டமையினால் உ யிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

இந்நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். உ யிரிழந்தவர் முரசுமோட்டை, ஐயன்கோவிலடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அல்வின் அனுரா என்பவர் எனத் தெரியவந்துள்ளது.

இவரது ச டலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்து தனியார் பேருந்து!!

தனியார் பேருந்து

வவுனியா பம்பைமடு பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிவருகையில்,

இன்று காலை 10.15 மணியளவில் செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து பம்பைமடு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பேருந்தின் எஞ்சின் பகுதியில் தீப்பிடித்துள்ளது என தெரியவருகிறது. பேருந்தில் பயணித்த பயணிகள் எவ்வித காயங்கள் இன்றி தெய்வாதீனமாக தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் பெண்களிடம் சூட்சுமமான முறையில் திருடன்!!

ஆலயத்தில் பக்தியோடு வழிபாடுகளில் ஈடுபடுவது போன்று பாசாங்கு செய்து விட்டு இளம் பெண்ணின் கைப் பையை இளைஞர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.

இச் சம்பவம் கொழும்பு வெள்ளவத்தை மல்லிகா வீதியில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்குள் பக்தர்களுடன் பக்கதராக நுழைந்த நபர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து வெளியேறும் போது ஆலயத்தில் இருந்த பிறிதொருவரின் கைப்பையையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் ஆலயத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த கைப் பையினுள் நகை, பணம். மற்றும் குறித்த பெண்ணின் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியாவில் போக்குவரத்து சபை சாலையின் உள்ளக வீதி அமைச்சர் றிசாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு!!

போக்குவரத்து சபை சாலையின் உள்ளக வீதி

அமைச்சர் றிசாட் பதியுதீனின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீட்டின் மூலம் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் உள்ளக வீதி அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் உள்ளக வீதிகள் நீண்டகாலமாக திருத்தப்படாது குன்றும், குழியுமாக மண் வீதியாக காணப்பட்டது.

இதனை திருத்தி புதிதாக தார் வீதி அமைத்து தருமாறு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினரால் தொடர்ச்சியாக கோரப்பட்டு வந்தது.

இந்நிலையில் சாலை முகாமையாளர் எச்.சாஹீரின் கோரிக்கைக்கு அமைவாக வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் றிசாட் பதியுதீனால் குறித்த சாலையின் உள்ளக வீதி அமைப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைக்காக 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

குறித்த நிதியின் கீழ் சாலையின் உள்ளக வீதி புனரமைப்பு மற்றும் வீதி நிர்மாண நடவடிக்கையை அமைச்சரின் வவுனியா நகர இணைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.எம். லரீப் ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சாலை முகாமையாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சாரதிகள், நடத்துனர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கோதுமை மா மற்றும் பாணின் விலை அதிகரிப்பு : விபரம் உள்ளே!!

விலை அதிகரிப்பு

பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபாய் 50 சதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை முகவரிடம் உத்தியோபூர்வமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்பில் நாம் இலங்கையில் உள்ள பிரிமா நிறுவனத்திடம் வினவிய போது,

இப்போதைய சூழ்நிலையில் பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் கட்டாயத்தில் தாம் இருப்பதாக தெரிவித்தனர். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி பெறாமல் இவ்விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாணின் விலை ரூ .2 வினால் உயர்த்தப்படுவதாக இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை ரூ .5.50 ஆக உயர்த்துவதாக ப்ரிமா நிறுவனம் அறிவித்திருந்தது. இதனையடுத்தே பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானைகளுக்குள் ஏற்பட்ட காதல் பிரச்சனை : கடும் மோ தலில் யானை பலி!!

யானைகளுக்குள் ஏற்பட்ட காதல் பி ரச்சனை

கலாவெவ தேசிய வனவிலங்கு பூங்காவில் யானை ஒன்றின் தா க்குதலில் மற்றொரு யானை உ யிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உ யிரிழந்த யானையின் உ டல் வனவிங்கு பூங்காவின் சியம்பலாபிட்டிய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு யானையின் தா க்குதலினால் இந்த யானை உ யிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஒரு யானை மற்றைய யானை மிகவும் கொ டூரமான முறையில் தா க்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெண் யானையின் மீது குறித்த இரண்டு யானைகளுக்கு ஏற்பட்ட காதலினால் இந்த மோ தல் ஏற்பட்டுள்ளதாகவும், மோ தலின் முடிவில் யானை உ யிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.