திருகோணமலை – கந்தளாய், சேருவில பிரதான வீதியில் காருடன், வானொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த மூவரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கந்தளாயில் இருந்து மூதூருக்கு சென்ற காரும், சேருவில பகுதியிருந்து குருணாகலைக்கு சென்ற வானுமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளன.
அதிக நித்திரையும், வேகமுமே குறித்த விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் வவுனியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளது.
கொழும்பு சுகதாச விளையாட்டு மைதானத்தில் செப்டெம்பர் 02,03,04 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற 5 ஆயிரம் மீற்றர் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகாவித்தியாலய மாணவன் கெ.நிசோபன் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதுடன்,
5 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்கு பற்றிய ஸ்ரீநகர் ஜெ.தனுசிகா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கங்களை வென்றவர்கள் பயிற்றுவிப்பாளர் கே.நவநீதனின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் நடைபெறும் 2019ஆம் ஆண்டுக்கான அழகு ராணியை தெரிவு செய்யும் இறுதி போட்டிக்கு இலங்கையை சேர்ந்த 20 வயதான சேவ்மி தாருகா பெர்னாண்டோ என்ற யுவதி தகுதி பெற்றுள்ளார்.
இந்த போட்டி இத்தாலியின் வந்தோ மாகாணத்தின் யேசோலோ நகரில் இன்று நடைபெறுகிறது. இத்தாலியின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த 80 யுவதிகள் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வேந்தோ மாகாணத்தின் பாதோவா மாவட்டத்தின் கம்போசம்பியோரோ கிராமத்தில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருகா பெர்னாண்டோவும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இலக்கம் 67 இன் கீழ் அவர் போட்டியிடுகிறார். இத்தாலியின் பிரதான தொலைக்காட்சியான ராய் 1 மூலம் இந்த நிகழ்ச்சி இன்றிரவு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
இத்தாலியில் வசிக்கும் அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கங்களை கொண்டுள்ளவர்கள், தாம் விரும்பிய போட்டியாளருக்கு வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் படத்திற்கு விளக்குமாற்றால் அடித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆ ர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 930 ஆவது நாளாக போ ராட்டத்தில் ஈடுபட்டுவரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களே குறித்த ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உ யிருடன் இல்லை. இனி சர்வதேச விசாரணையும் இல்லை. உள்நாட்டு விசாரணையும் இல்லை. தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் வவுனியாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்தை வன்மையாக கண்டித்த கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வரதாராஜபெருமாளின் படத்தினை ‘தமிழர் இ ரத்தம் குடிக்கும் ஒட்டுக்குழு வரதர்’ என குறிப்பிட்டு காட்சிப்படுத்தி, அவருக்கு எதிரான கோசங்களை எழுப்பி ஆ ர்ப்பாட்டம் செய்ததுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரின் படத்திற்கு சாணி தண்ணீரில் விளக்குமாற்றை தோய்த்து அடித்து தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் முன்னாள் முதலமைச்சரை திட்டியும் தீர்த்தனர்.
இதன் கருத்து தெரிவித்த கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகள் கா ணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசாங்கம் பொறுக்கு கூற வேண்டும். எமது பிள்ளைகள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போ ராட்ட களத்தில் நாம் தினமும் செ த்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலையில் எமது பிள்ளைகள் கா ணாமல் போனபோது அரசுடனும், இந்தியாவுடனும் இணைந்து ஒழித்திருந்த ஒட்டுக்குழு வரதர் தற்போது எமது பிள்ளைகளை இல்லை எனக் கூற என்ன அருகதை இருக்கிறது.
அவரது மகள், மனைவி கா ணாமல் போயிருந்தால் இப்படி சொல்லியிருப்பாரா? என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், தமது போ ராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க கோரினர். இவ் ஆ ர்ப்பாட்டத்தில் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் வவுனியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளது.கொழும்பு சுகதாச விழையாட்டு மைதானத்தில் செப்டெம்பர் 02,03,04 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற 5 ஆயிரம் மீற்றர் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் கெ.நிசோபன் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதுடன், 5 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்கு பற்றிய சிறிநகர் ஜெ.தனுசிகா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.பதக்கங்களை வென்றவர்கள் பயிற்றுவிப்பாளர் கே.நவநீதனின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனகந்த பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் சி க்குண்டு நபர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உ யிரிழந்த நபர் இன்று காலை பெக்கோ இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இயந்திரத்தின் ஒரு பகுதி குறித்த நபர் மீது வி ழுந்த நிலையில் அவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இன்று அம்பலாங்கொடை, தல்கஸ்வெல, வீரபான, மொரவக்க, வீரவில மற்றும் யோதகண்டிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் பிரபல ரேஸிங் ஜாம்பவானான திலந்த மலகமுவவின் இன்ஸ்டாகிராம் கணக்கு (dilantha.malagamuwa) ஹே க் செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார். தனது கணக்கு முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்றைய தினமே தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு (டி.ஆர்.சி) முறைப்பாடு அளித்தேன் என கூறியுள்ளார்.
அத்துடன், தனது கணக்கு ஹே க் செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் எனக்கு தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்கி உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்விளான் ,துணுக்காய் பகுதியை சேர்ந்த தம்பிமுத்து சுரேஷ்குமார்(44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றும் அனுமதி பெற்ற குறித்த குடும்பஸ்தர் நேற்று பிற்பகல் பாலியாற்றுப் பகுதியில் மணல் ஏற்றிய பின்னர் உழவு இயந்திரத்தை முன்னோக்கி செலுத்த முற்பட்டவேளை உழவு இயந்திரம் தடம்புரன்டு இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நான்கு கைவிரல்கள் உடைந்து போன நிலையில், பாதிக்கப்பட்ட நபருக்கு வெற்றிகரமான முறையில் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அனைத்து விரல்களையும் பொருத்தி, கண்டி போதனா வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அமில சஷங்க உட்பட மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
பயிர்களை அரைக்கும் மின் இயந்திரத்தில் கைவிரல்கள் சிக்கிய நிலையில், காயமடைந்த நபர், இயந்திரத்துடன் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குரணை தெரம்புகஹாவத்தை பிரதேசத்தை சேர்ந்த காயமடைந்த நபருக்கு விசேட மருத்துவக்குழுவில் 5 மணி நேரம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு விரல்களை பொருத்தியுள்ளனர்.
மொஹமட் பைசால் என்ற இந்த நபர் வைத்தியசாலையின் 22வது விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அவர் தற்போது ஆரோக்கியமாக இருக்கின்றார். வடை விற்பனை செய்யும் பைசால், வடை சுடுவதற்கு தேவையான பருப்பை அரைப்பதற்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்.
இயந்திரத்தை சுத்தப்படுத்தும் போதும் இயந்திரம் திடீரென இயங்கியுள்ளதுடன் கைவிரல்கள் இயந்திரத்தில் சிக்கியுள்ளதாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரத்நாயக்க கூறியுள்ளார்.
விரல்களில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தன. இரண்டு விரல் உடைந்து காணப்பட்டன. இரத்த நாளங்களுக்கு அதிகமான சேதம் ஏற்படவில்லை என்பதால், சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கயாமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது, கைவிரல்கள் சிக்கிய இயந்திரத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த இயந்திரத்தின் இரும்புகளை வெட்டி அகற்ற முடியாத நிலைமை ஏற்பட்டதால், கண்டி மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினரிடம் இருந்து விசேட இயந்திரம் ஒன்றை வரவழைத்து இரும்பு பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
நீரில் மிதக்கும் பொருட்கள், அமிழும் பொருட்கள், அமிழ்ந்து மிதக்கும் பொருட்கள் என சிறு வயதிலேயே பல பொருட்கள் தொடர்பில் அனைவரும் கற்றுள்ளோம்.
அந்த வகையில் பெரும்பாலான உலோகப் பொருட்களும், கற்களும் நீரில் அமிலும் என அறிந்துள்ளோம். ஆனால் இலங்கையில் மிதக்கும் அதிசய கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, மீகஹகிவுல – தல்தென ஶ்ரீ போதிராஜாராம விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பதுலு ஓயாவில் சுமார் இரண்டு கிலோகிராம் நிறையுடைய இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லானது மீகஹகிவுல – தல்தென ஶ்ரீ போதிராஜாராம விகாரை அருகிலுள்ள குட்டையில் போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விசித்திர கல்லை பார்ப்பதற்காக இன்று காலை முதல் பெருந்திரளான மக்கள் விகாரையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
மேலும் இந்த கல் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கான முழு ஒத்துழைப்பையம் வழங்க தயார் என தல்தென ஶ்ரீ போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வண. தல்தென தம்மவங்ச தெரிவித்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட இ ரத்த கசிவினால் கோமா நிலைக்கு சென்ற தாய் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயதான கெய்ட்லின் ஸ்டப்ஸ் 32 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
அவரது மூளையில் ஏராளமான தொ ற்றுநோய்களும், மூளையில் தொடர்ந்து வரும் இரத்தப்போக்குகள் காரணமாக அவற்றிற்கு எதிராக போ ராடி வருகிறார். மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆ பத்தான நிலையில் அவர் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அ றுவை சிகிச்சையில் க்வின் என்கிற அழகிய குழந்தை பிறந்தது.
க்வின் தனது வாழ்க்கையின் முதல் மூன்று வாரங்களை என்.என்.ஐ.சி.யுவில் கழித்தார். அதே நேரத்தில் அவரது தாயார் ஐ.சி.யுவில் தனது வாழ்க்கைக்காக போ ராடிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்காலம் குறித்து தன்னுடைய நம்பிக்கையினை இழந்த அவருடைய கணவர் ஜொனாதன் வெல்ஷ், உதவிகேட்டு ஆன்லைனில் நிதி திரட்டி வருகிறார்.
ஜேர்மனியின் Ludwigsburg நகரில் குடியிருக்கும் பச்சிளம் குழந்தைக்கு உலகின் மிக அதிக விலை கொண்ட மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். Ludwigsburg நகரில் குடியிருக்கும் மெரினா மாண்டல் என்பவரின் ஒரு வயது பச்சிளம் குழந்தைக்கே அங்குள்ள மருத்துவர்கள் உலகின் மிக அதிக விலை கொண்ட மருந்தை பரிந்துரைத்துள்ளனர்.
குழந்தை மைக்கேல் பிறந்து 6 வாரமாக இருக்கும் போது திடீரென்று அவரது உடல் சலனமற்று போயுள்ளது. கை கால்கள் மரத்து போயுள்ளது, மட்டுமின்றி, குழந்தை அழுவதற்கு கூட பிரயாசைப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் அதிர்ந்துபோன மெரினா உடனடியாக பிள்ளையை அள்ளிக்கொண்டு மருத்துவமனை விரைந்துள்ளார். மருத்துவமனையில், இரு நாட்கள் மேற்கொண்ட சிகிச்சைக்கு பின்னர், குழைந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
spinal muscular atrophy எனப்படும் மிக மோசமான பரம்பரை நோய்களில் இது ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில், பிறந்த பிள்ளைகள் தங்கள் இரண்டாவது பிறந்தநாளை தாண்டுவதில்லை எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நோயை படிப்படியாக குணப்படுத்த அவர்கள் Zolgensma என்ற மருந்தை பரிந்துரை செய்துள்ளனர். இந்த மருந்தானது உலகில் தற்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மேலும் சிகிச்சைக்காக 2.1 மில்லியன் டொலர் அளவுக்கு தொகையை செலவிட அந்த குடும்பத்தாலும் முடியாத நிலை.
நாளுக்கு நாள் தமது பிள்ளையின் நிலை பரிதாபமாக மாறி வருவதாகவும், உடம்பின் ஒவ்வொரு பாகமாக செயலிழந்து வருவதாகவும் மெரினா கண்கலங்கியுள்ளார். தற்போது சிகிச்சைக்கான 2.1 மில்லியன் டொலர் நிதியை திரட்டி வந்தாலும், குறிப்பிட்ட கால அளவுக்குள் சேகரிக்க முடியுமா என்ற சந்தேகவும் அவருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் பிரபலங்கள் பலர் உதவிக்கு வந்ததுடன் சில வாரங்களில் அந்த தொகை வசூலானது. மட்டுமின்றி, இவர்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனம் ஒன்று, குழந்தை மைக்கேலின் மருத்துவ செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் காக்கை குஞ்சு ஒன்றை இளைஞர் கொ ன்றுவிட்டதாக எண்ணும் காக்கைகள் அவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளாக தா க்குதல் நடத்தி வருகின்றன. மத்தியபிரதேசம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா கேவத். இவர் கடந்த 3 ஆண்டுகளாக காக்கைகளில் தா க்குதலுக்கு ஆளாகி வருகிறார்.
வெளியில் சென்றாலே தன்னை பாதுகாத்து கொள்ள குச்சியுடன் செல்கிறார் சிவா. இதற்கு காரணம், 3 ஆண்டுகளுக்கு முன் வலையில் சிக்கிய காக்கை குஞ்சு ஒன்றை சிவா காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவர் கையில் இருக்கும் போதே காக்கைக் குஞ்சு இ றந்துவிட்டது. இதனைக் கண்ட காகங்கள், குஞ்சின் இ றப்புக்கு காரணம் சிவா தான் என நினைத்து அவர் மீது தா க்குதல் நடத்த தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதல் 3 வருடங்களாக தொடர்வது தான் ஆச்சரியம்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவா, நான் அதன் குஞ்சை கொ ன்றுவிட்டதாக காக்கைகள் நினைத்துவிட்டன. ஆனால் நான் காப்பாற்றவே நினைத்தேன்’ என கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பறவைகள் ஆய்வாளர்கள், காக்கைகள் ஆட்களை நினைவில் வைத்திருக்கும் அறிவுத்திறன் கொண்டவை. அதனிடம் தவறாக நடந்துகொண்டால் நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கும் என கூறியுள்ளனர்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் தமது மனைவியுடன் மொபைலில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கி ப லியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் 28 வயதான தம்பா பைராகி. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். பணி நிமித்தமாக தம்பா ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளியன்று மனைவியுடன் மொபைலில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அவரது மொபைலில் மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தம்பா சம்பவயிடத்திலேயே ம ரணமடைந்ததாக கூறப்படுகிறது. தம்பாவுக்கு மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த விதவை தாயின் மகளுக்கு சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதை நேரில் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பொன்னான வாய்ப்பு அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தா – தேஜேஸ்வரி தம்பதிக்கு காஞ்சனா பாலா ஸ்ரீ வாசவி மற்றும் இன்னொரு பெண் பிள்ளை என இரண்டு மகள்கள் உள்ளனர்.
கோவிந்தா ஆறு வருடங்களுக்கு முன்னர் உ யிரிழந்துவிட்டார். வாசவி ஆந்திர மாடல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ தொடர்பான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட வாசவி அதில் திறமையாக பதிலளித்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து வரும் 7ஆம் திகதி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையிடத்தில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து நேரில் பார்க்கும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவில் மொத்தமே 60 மாணவ, மாணவிகள் மட்டுமே இதை நேரில் பார்க்கவுள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வாசவி மட்டுமே தேர்வாகியுள்ளார்.
இதற்காக இஸ்ரோ வாசவிக்கு விமான டிக்கெட்டை அனுப்ப முன் வந்த போதும் தான் ரயிலில் வரவே விரும்புவதாக தெரிவித்துள்ளார், இதை தொடர்ந்து ஏசி ரயில் டிக்கெட் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வாசவி கூறுகையில், எனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கு நன்றி, என் தாய்க்கு விதவைகளுக்கான ஓய்வூதியம் மாதம் 2,250 ரூபாய் கிடைக்கும். அதில் தான் எங்கள் குடும்பம் நடக்கிறது. மேலும் பணம் தேவைப்பட்டால் தினக்கூலி வேலைக்கு அவர் செல்வார், எனக்கு வருங்காலத்தில் பொறியாளர் ஆக வேண்டும் என்பதே விருப்பம் என கூறியுள்ளார்.