அண்ணன் உ யிரிழந்தது தெரியாமல் திருமணம் செய்து கொண்ட தங்கை : கண்ணீருடன் மூடிமறைத்த உறவினர்கள்!!

திருமணம் செய்து கொண்ட தங்கை..

தமிழகத்தில் தங்கை திருமணத்துக்காக சென்று கொண்டிருந்த அண்ணன் சாலை விபத்தில் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சின்னமணலி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (65). இவருக்கு மஞ்சுநாதன் (43) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். மஞ்சுநாதன் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில் அபிராமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமணத்திற்காக ஒரு காரில் சரஸ்வதி, மஞ்சு நாதன், முகிலன் ஆகியோர் அதிகாலையில் புறப்பட்டனர். காரை அதே ஊரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் ஓட்டினார். காரானது காலை சுமார் 6 மணிக்கு ஆத்தூர், அப்பம்மசமுத்திரம் என்ற இடத்தில் சென்ற போது அங்கிருந்த பாலத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் கார் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில், மணப்பெண்ணின் சகோதரர் மஞ்சுநாதன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இ றந்தார்.

பின்னால் உள்ள இருக்கையில் இருந்த இவரது தாய் சரஸ்வதி உறவினர் முகிலன், ஓட்டுனர் ஆனந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சரஸ்வதிக்கு 2 கால்களும் முறிந்தன. 3 பேரும் வலியால் கதறினர். அவர்களை, அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


இதற்கிடையே மஞ்சுநாதன் சடலத்தை பார்த்து கதறி அழுத உறவினர்கள் விபத்து குறித்து அபிராமியிடம் தெரிவிக்க வேண்டாம், திருமணம் தடைபடாமல் நடக்கட்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து சோகத்துடன் புறப்பட்டு திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர். பின்னர் அபிராமிக்கு எந்த தகவலையும் சொல்லாமல், கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. இதன் பிறகு தான் அண்ணன் இ றந்த விடயம் அவரிடம் சொல்லப்பட்டது

தொடர்ச்சியாக 7 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய 19 வயது இளைஞர் பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வனபர்தி(19). இவர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி வனபர்திக்கு ஒரு கை மற்றும் கால் இயங்கவில்லை என்று கூறி, அவரது தாய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு வனபர்தியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘மூளையில் செல்லும் ரத்தம் தடைபட்டதால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் தான் வனபர்தி வீடியோ கேமில் மூழ்கியிருந்ததை அவரது தாயார் தெரிவித்தார்.

அதன் பின்னர், இளைஞரின் முழு கவனமும் வீடியோ கேமில் இருந்ததால், முறையான உணவையோ, தண்ணீரையோ அவர் எடுத்துக்கொள்ளவில்லை. அத்துடன் தூக்கமும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இளைஞரின் தாயார் கூறுகையில், ‘இரவு 9 மணிக்கு பப்ஜி விளையாட்டை ஆடத் தொடங்கினால், அதிகாலை 4 மணிவரை விளையாடிக் கொண்டிருப்பான். காலையில் செய்தித்தாள் போடுகின்ற பகுதிநேர வேலை இருப்பதால் மட்டுமே, கேமை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிடுவான்.

கல்லூரியில் இருக்கும்போது கூட, நேரம் கிடைத்தால் Log on செய்து விளையாடத் தொடங்கிவிடுவான். எங்கள் கிராமத்தில் பொழுது சாய்ந்ததும் அனைவரும் உறங்கிவிடுவார்கள். ஆனால், வனபர்தி மட்டும் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பான்.

அவனுக்கு உணவு மீதான ஆர்வமும் முழுமையாக குறைந்துவிட்டது. விடுமுறை நாட்களில் எல்லாம் ஒருநாள் முழுவதும் வீடியோ கேம் ஆடிக் கொண்டிருப்பான்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வனபர்தி உறவினர்களும், அவர் தினமும் 7 முதல் 8 மணிநேரம் வரை கேம் விளையாடியதால், 4 கிலோ அளவுக்கு உடல் எடை குறைந்துவிட்டது என்று தெரிவித்தனர். குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் ச டலமாக கிடந்த அழகான குடும்பம் : கடிதம் சிக்கியது!!

அழகான குடும்பம்

இந்தியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொ லை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் Amalapuram நகரை சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் ராஜூ (48). இவர் மனைவி லஷ்மிதேவி (45). இவர்கள் மகன் கிருஷ்ணா சந்தீப் (25).


இவர்கள் மூன்று பேரும் கடந்த மாதம் 30ஆம் திகதி வீட்டில் ச டலமாக கிடந்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவர்கள் ச டலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக மூவரும் தற்கொ லை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததால் இம்முடிவை அவர்கள் எடுத்தது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணா கைப்பட எழுதிவைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் பிரசாத் என்பவர் தனது மூன்று நண்பர்களோடு சேர்ந்து என் தந்தையை சந்தித்தார்.

பின்னர் தன்னிடம் Rice Pulling Vessel என்னும் மந்திர பொருள் உள்ளது, இதை வீட்டில் வைத்தால் பணம் அதிகளவில் பெருகி மிக பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என கூறினார். இதை நம்பி என் தந்தை ரூ 5 கோடியை பிரசாத்திடம் இழந்தார் என எழுதப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் பிரசாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

யாழில் மாவை சேனாதிராஜா நேரில் சென்ற போ ராட்டக்களத்தில் த ற்கொ லை முயற்சி!!

போ ராட்டக்களத்தில்..

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி யாழில் போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் ப தற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். சாவகச்சேரி நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவுள்ள கேட்போர் கூடத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் குறித்த போ ராட்டம் தொடர்ந்து வருகிறது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் போ ராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே ம ண்ணெண்ணெய் ஊற்றி தீ மூ ட்டிக் கொள்ள முயற்சிக்கப்பட்ட நிலையில் ப தற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்? திணறும் கடற்படை!!

சிலாபத்தை அண்டிய கடற்பரப்பில் ம ர்மான பொருள் ஒன்று மிதந்து வந்ததாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தலம் – பெரியபாடு கடலில் கடல் எல்லையை குறிக்கும் மிதவைக்கு சமமான உபகரணம் ஒன்றே இவ்வாறு மிதந்து வந்துள்ளது.

10 அடி உயரமான இந்த ம ர்மபொருள் 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையை கொண்டுள்ளது. அதன் கீழ் பகுதி பைபர் அல்லது வேறு பொருளினால் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் மேல் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் அதிக கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த உபகரணம், கடலில் அடித்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடற்படையினர் இணைந்து வெளியே கொண்டுவர முயற்சித்த போதிலும், அதிகளவிலான நிறை காரணமாக அதனை கடற்கரைக்கு கொண்டுவர முடியவில்லை.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது மிதவையாக அல்லது கடலின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதிக தொழில்நுட்பத்தினால் இந்த ம ர்மபொருள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காதலன் கண்முன்னே வீடியோ காலில் த ற்கொ லை செய்துகொண்ட காதலி!!

காதலன் கண்முன்னே..

ஆந்திர மாநிலத்தில் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதே காதலன் கண்முன் காதலி த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாக்கிய லட்சுமி என்கிற மாணவி தொழிற் பயிற்சி கல்லூரியில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.


கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் பாக்கிய லட்சுமி, நேற்றைக்கு முன்தினம் தன்னுடைய காதலனுடன் வீடியோ கோலில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், காதலனின் கண்முன்னே தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதற்கிடையில் கல்லூரி முடிந்து அறைக்கு திரும்பிய மாணவிகள், பாக்கியலட்சுமி தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், பாக்கிய லட்சுமியின் செல்போனை ஆராய்ந்த போது, அவர் கடைசியாக காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பாக்கிய லட்சுமியின் உ டலை பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் த ற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியும் ஒரு பாசமா?.. திருமணமான மகளின் பிரிவை தாங்காமல் தந்தை எடுத்த வி பரீத முடிவு!!

இப்படியும் ஒரு பாசமா?.

மதுரையில் திருமணம் செய்துகொடுத்த மகளின் பிரிவை தாங்க முடியாமல், தந்தை வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் தன்னுடைய மகள் பாத்திமாபீவி மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்துள்ளார். இவரது மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. மகள் தன்னைவிட்டு பி ரிந்து கணவரின் வீட்டிற்கு சென்றதால் அதனை தா ங்க முடியாமல் சையதும், அவருடைய மனைவியும் அ ழுதுகொண்டே இருந்துள்ளனர்.

இதனால் பெரும் சோ கத்தில் மூ ழ்கியிருந்த சையது, கடந்த மாதம் 26ம் திகதியன்று வி ஷம் கு டித்துள்ளார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர், சு யநி னைவில்லாமல் கிடந்த சையதை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சையது சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் த ற்கொ லை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம் : வசதியான வீட்டில் பிறந்தும் இது தான் நடந்தது என வேதனை!!

ரனு மண்டல்

இந்தியாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், இப்போது பாலிவுட்டில் கலக்கி வரும் நிலையில், அவர் நான் வசதியான வீட்டில் தான் பிறந்தேன் என்பதை வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் சமீபத்தில் பாடினார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய்சிலிர்த்துப்போன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பொன்றை வழங்கியது. அந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

ரனு மண்டலுக்கு 55 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான வீடு ஒன்றை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்துள்ளதாகவும், மேலும் அவர் அடுத்ததாக நடித்துவரும் தபங் 3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலை ரனுமண்டல் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் தான் சாலையோரத்தில் எல்லாம் பிறக்கவில்லை என்றும், நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்தான் என்றும் கூறியுள்ளார்.


தன் விதி காரணமாக 6 மாத குழந்தையாக இருக்கும்போதே குடும்பத்தை விட்டு பிரிய நேர்ந்ததாகக் கூறிய ரணு தனக்கு திருமணமான பிறகு மேற்குவங்கத்தில் இருந்து மும்பைக்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் தனது கணவர் நடிகர் பெரோஸ் கான் வீட்டில் சமையல்காரராகப் பணியாற்றி வந்தார். அவரது மகன் பர்தீன் கல்லூரி பயின்ற காலத்தில், தங்களையும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சொந்த வீடு இருந்ததாகவும், ஆனால் தனிமையில் தன்னால் அங்கு இருக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக பாடவில்லை என்றும், தனக்கு பாடுவது பிடிக்கும் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடி வந்தேன், தனக்கு தற்போது பாடக் கிடைத்துள்ள வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் 5 முதல் 6 பாடல்கள் வரை தான் பாடியிருப்பதாக கூறியுள்ளார்.

யாழில் ராஜகோபுரத்தில் வைக்கப்பட்ட காந்தியின் சிலையால் பெரும் சர்ச்சை!!

காந்தியின் சிலை

யாழ். வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் இராஜகோபுரத்தில், மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இராஜகோபுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

எனினும், இந்த விடயம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. காந்தியை ஆலய இராஜ கோபுரத்தில் வைப்பது சரியாயின், காந்தியிலும் பார்க்க தியாகி திலீபன் எந்த வகையில் குறைந்துபோய்விட்டார்? என தமிழின் பற்றாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து வெளியிடுகையில்,

“ஆலயங்கள் என்பது ஆண்டவன் குடியிருக்கின்ற அழகான இடம். அதாவது ஆன்மாக்கள் லயிகின்ற இடம் என்பதனால் தான் அதனை ஆலயம் என்கின்றோம்.

அங்கு மனிதர்கள்சென்று வணங்கலாமே தவிர ஆண்டவனின் விதானமாக இருக்ககூடிய இராஜ கோபுரத்தில் அமரக்கூடாது. இது அனைவருக்குமே தெரிந்த விடயம் தான்.

இப்படி இருக்கையில் எம் ஈழத்திற்கோ அல்லது எமது சமுதாயத்திற்கோ சற்றும் பொருந்தாத ஒருவரின் சிலையானது இராஜகோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளமை கண்டிக்கப்படவேண்டிய விடயம்.

மகாத்மா காந்தி இந்தியாவிற்கு வழிகாட்டியவராக அகிம்க்ஷா வாதியாக இருக்கலாம், ஆனால் ஈழத்தமிழரிற்கு? காந்தியை ஆலய இராஜ கோபுரத்தில் வைப்பது சரி எனில், காந்தியிலும் பார்க்க தியாகி திலீபன் எந்த வகையில் குறைந்துபோய்விட்டார்?

தன்னுடலை தன்மக்களிற்காய் உண்ணா நோன்பிருந்து ஆகுதியாகிய திலீபனிற்கு என்ன செய்யப்போகின்றது நம் தமிழ் சமூகம்? அதுமட்டுமா, எம் விடியலுக்காய் எத்தனை எத்தனை உயிர்களை நாம் பலிகொடுத்துள்ளோம்.

யாராவது நினைத்துப்பார்த்தீர்களா? உண்மையாய் நமக்காக உதிரம் சிந்தியவர்களை நினைவு கூரக்கூட உரிமை இல்லாதவர்களாகி நாம் அல்லல் படுகின்றோம்.

எத்தனை எத்தனை காந்தியவாதிகள் நமக்காய் நம் நாட்டில்… அன்னை பூபதி தன் தள்ளாத வயதில் யாருக்காக போராடி உயிர் நீத்தார். அவருக்கு என்ன செய்திருக்கின்றோம் நாம்? ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள் உறவுகளே.

இன்றும் எத்தனையோ தாய்மாரின் கண்ணீர் அடுபங்கரையருகில் தம் பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து கண்ணீர்விட்டுகொண்டு இருக்கின்றார்கள்.

எத்தனை பேரிற்கு தெரியும் அவர்களின் கண்ணீர்? ஊமையின் பாக்ஷைகளாய் ஒவ்வொரு நொடியும் உருகிப்போய்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள்.

மகாத்மா யாழ்ப்பாணத்திற்கு வந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. அவை வெறும் கட்டுக்கதைகளே. வரலாறுகளை நாம் படிக்கவில்லையா? இல்லை நாம் வாழ்ந்த வரலாறுகளை மறந்து போய்விட்டோமா?

காந்தியை மதியுங்கள் அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் ஆலய இராஜகோபுரத்தில் ஏற்றி அல்ல… அதற்கென்று இடங்கள் இருக்கின்றன. எங்களிற்காக எதுவுமே செய்யாத காந்தியை ஆலய இராஜகோபுரத்தில் ஏற்றுகின்றீர்கள் என்றால்,

நமக்காய் உயிர்நீத்த ஆயிரமாயிரம் உயிர்களிற்கு வீட்டிற்கொரு இராஜகோபுரம் அல்லவா கட்டி வணங்கவேண்டும்.” என கூறியுள்ளார்கள்.

-தமிழ்வின்-

ஓடுபாதையில் ஒன்றுடன் ஒன்று திடீரென மோதிக்கொண்ட பயணிகள் விமானம்!!

மோதிக்கொண்ட பயணிகள் விமானம்

ரஷ்யாவில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று திடீரென மோதிக்கொண்டதை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள முன்னணி சர்வதேச விமான நிலையமான ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் ஏரோஃப்ளோட் விமானம் பெய்ஜிங்கிற்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

அந்த சமயத்தில் டிராக்டரால் இழுத்து செல்லப்பட்ட பயணிகள் இல்லாத போயிங் 777 விமானத்தின் இறக்கையின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயம் அல்லது உ யிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் நடைபெற்ற உடனே விமானத்தில் இருந்த 229 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்ன நடந்தது என்பதை அறிய இரண்டு விமானங்களையும் பரிசோதித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி ஶ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பயணத்தை ஆரம்பிக்கிறது!

ஶ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

கொழும்பில் இருந்து வவுனியா வரை வந்த வவுனியா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று (05.09) முதல் காங்கேசன்துரை வரை “ஸ்ரீ தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆக தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 மணி வந்தடைந்து காங்கேசந்துறைக்கு இரவு 10.16க்கு குறித்த ரயில் செல்லவுள்ளது. பொல்ஹாவெல, குருநாகல், மஹோ, கல்கமுவ, தம்புத்தேகம, அனுராதபுரம் புதிய நகரம், அனுராதபுரம், மதவாச்சி,வவுனியா, அறிவியல் நகர், கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஆகிய இடங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

காங்கேசன்துறையில் இருந்து காலை 3.45 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு காலை 10.24 க்கு சென்றடையவுள்ளது.

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி, அறிவியல் நகர், வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் அனுராதபுர புதிய நகரம், தம்புத்தேகம, கல்கமுவ, மஹோ,குருநாகல், பொல்ஹாவெல, மருதானை, கோட்டை ஆகிய இடங்களில் நிறுத்தப்படவுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ் 13 பவர் ரயில் மூலம் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

அத்துடன், சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கான இரு புதிய ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்ரீ தேவி சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதங்கள் 7 ஆக உயரும். வடபகுதி மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்தே நிரந்தர சேவைகளாக இவை அமையவுள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாடு சென்ற தமிழ் இளைஞனுக்கு நடந்தது என்ன?

இளைஞனுக்கு நடந்தது என்ன?

வெளிநாடு ஒன்றுக்கு சென்ற தமிழ் இளைஞனை காணவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தம்பிமுத்து சாந்தகுமாரன் இளைஞனே காணாமல் போயுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில், அவர் காணாமல் போயுள்ளார் என பணியகம் தெரிவித்துள்ளது. சாந்தகுமாரன் தொடர்பான தகவல் தெரிந்தால் பணியகத்திற்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொலைபேசி இலக்கமான 011-2864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும். பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற போதும் இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பணியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏ9 வீதியில் கோர விபத்து : மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டாளர் ஸ்தலத்திலேயே பலி!!

கோர விபத்து

முல்லைத்தீவில், மாங்குளம் பொலிஸ் பிரிவின் முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே ப லியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.40 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வீதிக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காரை செலுத்திய சாரதியே சம்பவ இடத்தில் உ யிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தராஜபக்சவின் செயற்பாட்டாளராக இருந்த தீபன் என அழைக்கப்படும் லண்டன் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் ச டலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் சாரதி தவிர்ந்து வேறு எவரும் பயணித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலச் சுறா!!

திமிங்கிலச் சுறா

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் திமிங்கிலச் சுறாவொன்று உயிருக்குப் போராடிய நிலையில் நேற்று கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கலச் சுறா மீன் அப்பகுதி மீனவர்களின் பெரும் முயற்சியின் மூலம் மீண்டும் ஆழ்கடலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இது போன்ற திமிங்கலச் சுறா மீன்கள் கரை ஒதுங்குவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்கிளாய் மற்றும் முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் புள்ளிசுறாவொன்று கரை ஒதுங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது முறையாக முள்ளிவாய்க்கால் கடற்கரையில் திமிங்கிலச் சுறாவொன்று கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் புதிதாக திருமணம் செய்த தம்பதிக்கு நடந்த சோகம்!!

தம்பதிக்கு நடந்த சோகம்

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்ட இளைஞன் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார்.

கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தாமல் 5 பேருடன் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதான இளம் குடும்பஸ்தர் உ யிரிழந்துள்ளார்.

கடலுக்கு சென்ற இளைஞன், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை கடலில் மிதந்த நிலையில் அவரது ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞனின் மனைவியும் குறித்த சந்தர்ப்பத்தில் இணைந்திருந்த போதிலும் அவர் ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார். களனி டயர் தொழிற்சாலையில் இயந்திர செயற்பாட்டாளரான, தினுஷ ஜயங்க சுரேந்திர என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக் விருந்தில் இளைஞர், யுவதிகள் செய்த அட்டகாசம்!!

பேஸ்புக் விருந்தில்..

பாணந்துறை தல்பிட்டிய சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நடந்த பேஸ்புக் விருந்தொன்றை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்த ஹொரணை மதுவரி திணைக்கள அலுவலக அதிகாரிகள் க ஞ்சா, கேரளா க ஞ்சா ஆகியவற்றுடன் 11 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

சன்டே செஷன் என பெயரிடப்பட்டிருந்த இந்த இரவு நேர விருந்தில் 150க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துக்கொண்டிருந்ததாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்கில் வெளியிப்பட்ட விளம்பரத்திற்கு அமைய இளைஞர், யுவதிகள் இந்த விருந்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

மாலை 6 மணி முதல் 12 மணி வரையான காலத்திற்கு இளைஞர்களிடம் 20 ஆயிரம் ரூபாயும் யுவதிகளிடம் ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மதுவரி திணைக்கள அதிகாரிகள் 5 நபர்களை விருந்துக்கு அனுப்பி வைத்து, இரகசிய தகவலுக்கு அமைய விருந்து நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

ஹோட்டலில் ஒதுக்கு புறமான பகுதியில் குறைந்த விளக்கு வெளிச்சத்தில் இசையுடன் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது. விருந்தில் கலந்துக்கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் போ தைப் பொருட்களை பயன்படுத்தி போ தையில் இருந்துள்ளனர்.

எனினும் அவர்களிடம் இருந்து போ தைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதுடன் எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக ஹொரணை மதுவரி திணைக்கள அலுவலக பொறுப்பதிகாரி பிரேமஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், பாணந்துறை, களுத்துறை, மொறட்டுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.