கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன் : பயங்கர ஆ யுதங்களுடன் த லைமறைவு!!

தமிழ் இளைஞன்

கனடாவில் ஆ பத்தான நபராக தமிழ் இளைஞன் ஒருவர் பட்டியலிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரை ரொரன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர்.

கனடாவில் மிகவும் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள குறித்த நபரை கண்டால் தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். அவர் வ ன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை கண்டால் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம். உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆ யுதங்களை மறைத்து எடுத்து சென்றமை, து ப்பாக்கியை காட்டியமை, பொது மக்களின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருந்தமை, து ப்பாக்கிகளை விடுவித்தமை மற்றும் தடை செய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அவர் தேடப்பட்டு வருகின்றார்.

ஜெய்சன் ஜெயகாந்தன் 5.8 அடி உயரும் கறுப்பு நிற தலைமுடி மற்றும் பலுப்பு நிற கண்களை கொண்டுள்ளார். இடது தோள்பட்டையில் தேவதை உருவம் ஒன்றை பச்சை குத்தியுள்ளார். இடது கையில் வட்டம் போன்ற அடையாளம் உள்ளதாக பொலிஸார் அவரை அடையாளப்படுத்தியுள்ளனர்.

இலங்கை முழுவதும் பரவும் ஆபத்து : நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை முழுவதும் தொழு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வருடத்திற்கு 1700 – 2000 தொழுநோயாளர் அடையாளம் காணப்படுகின்றர்.

அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் கிறிஷாந்த தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் உள்ள பிரதேசங்களில் இந்த நோயளர்கள் அடையாளம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

யாராவது ஒருவரின் உடலில் தழும்புகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவ்வாறு சிகிச்சை பெற்றால் மாத்திரமே உடனடியாக குணப்படுத்த முடியும்.

உடலில் சந்தேகத்திற்கிடமான அடையாளம் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவி ம ரணம் : இருவர் கைது!!

இருவர் கைது

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உ யிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் டென்டன்ஓங் பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monash பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே இந்த விபத்தில் உ யிரிழந்திருந்தார். மாணவியை மோதி விபத்துக்குள்ளாக்கியதுடன், அந்த இடத்திலிருந்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

குறித்த மாணவியை வீதியை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் கறுப்பு நிறத்திலான காரொன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த வாகனம் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரின் புகைப்படங்களை அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை டென்டன்ஓங் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில், நள்ளிரவில் அ ட்டகாசம் செய்த கெமி வா ள்வெட்டுக் குழு!!

நள்ளிரவில் அ ட்டகாசம்

யாழ்ப்பாணம், பாசையூர் மற்றும் ஈச்சமோட்டைப் பகுதியில் கெமு என்ற வா ள்வெ ட்டுக் குழுவினர் நேற்று இரவு வீடுகளிற்குள் புகுந்து அ ட்டகாசம் செய்ததுடன் இளைஞர் ஒருவரையும் வெ ட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்க தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, சிங்கள மொழியில் உரையாடிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாசையூர் பகுதியைச் சேர்ந்த கெமி என்ற வா ள்வெட்டுக்குழுவினர் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை வா ளால் வெ ட்டிச் சேதப்படுத்தியுள்ளனர்.

அந்த வீட்டில் 6 பெண்கள் உட்பட 1 சிறுவனும் இருந்துள்ளார். என்ன காரணத்திற்காக என்று தெரியாமல் இருந்த வீட்டிற்காரர்கள் 1.30 மணியளவில் 119 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்க பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போது, பொலிஸார் சிங்களத்தில் கதைத்துவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளனர்.

அதேநேரம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டிற்குச் சென்ற போது, அங்கு ஏன் இரவு அறிவிக்கவில்லை என்று கேட்டதுடன், முறைப்பாட்டாளர்களின் முறைப்பாட்டிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பதாகவும், பொலிஸ் இதுவரையில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிடவில்லை என்றும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாசையூர் பகுதியில் தற்போது உருவாகியுள்ள இந்த கெமி வா ள்வெட்டுக் குழு அதேநேரம், இளைஞர் ஒருவரையும் வா ளால் வெ ட்டியுள்ளது. வா ள்வெ ட்டிற்கு இலக்காகிய இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக உருவாகியுள்ள இந்த கெமி குழு க ஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், இந்த குழுவிற்கும் பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதனால், பொலிஸார் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறான வா ள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர், ஒருவரின் உயிர் பிரிந்ததன் பின்னரே பொலிஸார் நடவடிக்கை எடுக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், முறைப்பாட்டிகுரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்குவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த மாப்பிள்ளைக்கு தேடிய மணமகள் : குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பம்!!

வெளிநாட்டிலிருந்து வந்த மாப்பிள்ளை..

தென்னிலங்கை கிராமம் ஒன்றில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட மணமகள் தேவை விளம்பரத்தால் குடும்பத்திற்கு கு ழப்பம் ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இளைஞன் செய்த விளம்பரத்தை பார்த்த அவரது சித்தி தவறுதலாக அதற்கு விண்ணப்பித்துள்ளார். வெளிநாட்டில் தொழில் செய்துவிட்டு இலங்கை வந்த அவர் தாயாரின் கோரிக்கைக்கு அமைய பத்திரிகையில் மணமகள் தேவை விளம்பரம் ஒன்றை செய்துள்ளார்.

விளம்பரம் பதிவிட்டு சில நாட்களில் அதற்கு பதில் வந்துள்ளது. அதில் இருந்த விண்ணப்பத்தை பார்த்த இளைஞன், இந்த பெண் எனக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சீதனமும் பெரிய அளவில் கிடைக்கும். எங்கள் பிரதேசம் என்பதனால் சிக்கல் ஏற்படாதென கூறியுள்ளார்.

பின்னர் ஆராய்ந்த போது, அது இளைஞனின் சித்தி என தெரியவந்து. அதன் பின்னர் அவர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் கு ண்டுவெ டிப்பு : நடந்தது என்ன?

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று பிற்பகல் கு ண்டுவெ டிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணி ஒன்றில் உரிமையாளரினால் தீ முட்டப்பட்ட போது வெ டிகுண் டொன்று வெ டித்துச் சி தறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் காட்டு யானை தா க்கி பெண் ப லி!!

காட்டுயானை..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உலுக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.09.2019) காட்டு யானையின் தா க்குதலுக்குள்ளாகி பெண் ஒருவர் ப லியாகியுள்ளார்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இப் பெண் யானையின் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே சென்று பார்வையிட்ட சமயத்தில் யானையின் தா க்குதலுக்குள்ளாகி உ யிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 58 வயதுடைய பெண் ஒருவரே உ யிரிழந்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ச டலம் பி ரேத பரிசோதனைகளுக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!

கண் மருத்துவமனை

வவுனியாவில் கண் மருத்துவமனைக்கு இன்று (04.09.2019) அடிக்கல் நாட்டி வைத்தார் தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் ஆனந்தி கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இலண்டனை சேர்ந்த வேலாயுதம் சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்வில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார்.

கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, பிரதேச செயலாளர் க.உதயராசா, வவுனியா நகரசபையின் உப நகரபிதா கு.குமாரசிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் மகளை பா லியல் துஸ் பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார் : மூவர் காயம்!!

மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார்

வவுனியாவில் நேற்று அதிகாலை தனது மூத்த மகளின் கணவன் தனது இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பா லியல் துஸ் பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நிலையில் மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சாந்தசோலையில் வசித்துவரும் தந்தை ஒருவர் தனது மூத்த மகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்குள் பல்வேறு பொருளாதாரப் பி ரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன், குடும்ப வன் முறைகளும் இடம்பெற்று வந்துள்ளது. குடும்ப வ ன்முறைகள் அதிகரித்ததையடுத்து திருமணமான குடும்பத்தினரை மாமனார் வீட்டிலிருந்து தனியாக வசிக்குமாறு கோரி அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் தமது குடும்பத்தினருடன் வெளியேறிய மருமகன் தனது உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து சீதனம் மற்றும் வீட்டைத்தருமாறு கோரி மனைவியைத் து ன்புறுத்தியதுடன், தாயின் வீட்டிலுள்ள கால்நடைகளை விற்பனை செய்து பணம் வாங்கித்தருமாறும் மனைவியிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவி கணவனின் கொ டுமைகள் தாங்க முடியாமல் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். விசாரணை மேற்கொண்ட பொலிசார் கணவனை அழைத்து சமரசம் செய்ய முயற்சித்துள்ளதுடன் குடும்பச் ச ண்டைகள் இன்றி வசிக்குமாறு கோரி நேற்று முன்தினம் மாலை கணவனையும் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் பெண் தனது மூன்று வயது மகனுடன் தனது தாயாரின் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை தெரிவித்து ஆறுதல் அடைந்துள்ளார்.  நேற்று அதிகாலை 1 மணியளவில் ம துபோ தையில் மனைவி இருக்கும் சாந்தசோலை மாமனாரின் வீட்டிற்குள் அ த்துமீறி உள் நுழைந்து மாமியார் மீது தலைக்கவசத்தினால் தா க்குதல் நடாத்தியுள்ளார்.

இதனைத்தடுத்த இளைய மகள் மீதும் தா க்குதல் நடத்தியதுடன், தடுக்கச் சென்ற மாமனாரின் மீதும் தா க்கியுள்ளார். இளைய மகளை பா லியல் துஸ் பிரயோகம் செய்ய முயற்சித்து அவரது ஆடைகளை கிழித்து நகத்தால் கீற ல்களை ஏற்படுத்தியபோது சம்பவத்தை உணர்ந்த மாமனார் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த மிளகாய்த் தூளை அள்ளி மருமகனின் முகத்தில் வீசியுள்ளார்.

கண்ணில் பட்ட மிளகாய்த்தூளின் எரிவு தாங்கமுடியாமல் மருமகன் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தபோது அயலவர்கள் சிலரும் மருமகன் மீது தா க்குதல் மேற்கொண்டுள்ளனர். தலையில் காயமடைந்த மருமகன் பொலிசாருக்கு தகவல் வழங்க முயன்றபோது அருகிலுள்ள காணியில் ஓடி ஒழித்துக்கொண்டுள்ளார். நேற்று காலை காயமடைந்த மருகனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பொலிசாரின் அவசர 119 அழைப்பிற்கு தெரியப்படுத்தி அதன் பின்னர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அயலவர்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டு தாய், மகள் காயமடைந்த நிலைமைகளை தெரிவித்தபோதும், 2.45 மணியளவில் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதுடன்,

பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துச் சென்று முறைப்பாடுகளையும் யுவதி அணிந்திருந்த கிழிந்துபோன உடையையும் சாட்சியாக எடுத்துக்கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் தாயையும் மகளையும் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்!!

வருடாந்த மகோற்சவம்

வவுனியா வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த விகாரி வருட மகோற்சவ பெருவிழா இன்று (04.09.2019) (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

மேற்படி உற்சவத்தில் தேர்த்திருவிழா 12.09.2019 வியாழக்கிழமையும், தீர்த்தத் திருவிழா 13.09.2019 வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

இவ் உற்சவங்களில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பித்து விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.

வவுனியாவில் விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று , மகிழூந்து ஒன்றை முந்திச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையும் முறையற்ற விதத்தில் முந்திச் செல்ல முற்பட்டபோது, குறித்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் 30, 25 வயதுடைய கணவன் மனைவி ஆகிய இருவருமே காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் திருட்டு : ஒரே இரவில் திருடர்கள் கைவரிசை!!

திருடர்கள் கைவரிசை

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவம் நேற்று முன்தினம் (02.09.2019) இரவு இடம் பெற்றுள்ளது.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சமணங்குளம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும். சிதம்பரநகர் பகுதியில் ஒரு துவிச்சக்கரவண்டியும் திருடர்களால் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

சிதம்பரபுரம் பகுதியில் இரு வேறு வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர்கள் மோட்டார் சைக்கிளின் திறப்புகள் இல்லாத நிலையில் மோட்டார் வண்டிகளை சேதப்படுத்தி குளத்து வெளியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சமணங்குளம் பகுதியில் ஆசிரியை ஒருவரின் மோட்டார் வண்டியானது திறப்புடன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவ்வண்டியானது திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரநகர் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றும் திருடப்பட்டுள்ளது.

இத் தொடர் திருட்டுச்சம்பவம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் புளொட் இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிலையம்!!

தாகசாந்தி நிலையம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ),

திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் இருபதாவது நினைவுதினம் புளொட் மற்றும் அதன் அரசியல் பிரிவான டிபிஎல்எப் தோழர்கள் ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகிறது.

மாணிக்கதாசனின் நினைவாக, இன்று (03.09.2019) அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளம் வீதியில் உள்ள “புளொட்” செயலதிபர் மற்றும் இராணுவத்தளபதி மாணிக்கதாசன் ஆகியோரின் சமாதிக்கு முன்னிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் உதவி சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கைப் பெண்!!

இலங்கைப் பெண்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கைப் பெண் ஒருவர் அமெரிக்காவின் மினசோட்டா பிராந்தியத்தில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதவியில் மினசோட்டா பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கை பெண் போட்டியிடுகிறார்.

கம்பஹா, மாதெல்கமுவ, பட்டபொத்த பிரதேசத்தை சேர்ந்த நிலுஷி ரணவீர என்பவரே நியமிக்கப்பட்டுள்ளார். கம்பஹா ஸ்ரீ குருச வித்தியாலயத்தில் கற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பிரிவில் இணைந்து 2005ஆம் ஆண்டு பட்டம் பெற்று அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவிற்கு சென்றவர் 2006ஆம் ஆண்டு மினசோட்டா பிராந்தியத்தின் ஹெம்லின் பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் அரச நீதிபதியின் கீழ் குற்ற சட்டத்தின் கீழ் கற்ற நிலுஷி கடந்த 23ஆம் திகதி மினசோட்ட பிராந்தியத்தில் உதவி சட்டதரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கும் இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசசாங்க ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.

எனினும் இராணுவத்தினர் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. இந்த வருட நிறைவுக்கு முன்னர் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ரயில் சேவை?

ரயில் சேவை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாங்கொடை வரையில் புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும்பு நகருக்கு வராமல், ரயிலில் வியாங்கொடை ஊடாக கண்டி, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு செல்ல முடியும்.

இவ்வாறான ரயில் பாதையொன்றை அமைக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.