கொழும்பில் ஏற்பட்ட கடும் மோ தல் – ஒருவர் ப லி – நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

கடும் மோ தல்

கொழும்பில் நேற்றிரவு ஏற்பட்ட மோ தல் காரணமாக ஒருவர் ப லியானதுடன் மேலும் ஒருவர் கா யமடைந்துள்ளார். கல்கிஸ்ஸ – சில்வெஸ்ரர் வீதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலின் போது க த்திக்கு த்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான மகேஷ் உதய குமார என்பவர் கூரிய ஆ யுதத்தால் தா க்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோ தலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கா யமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா க்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய கல்கிஸ்ஸ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் யானைகள் அட்டகாசம் : 50க்கு மேற்பட்ட தென்னைகள் நாசம்!!

யானைகள் அ ட்டகாசம்

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் யானைகளின் அ ட்டகாசத்தால் தென்னந்தோட்டங்கள் பல நா சமாகியுள்ளது.

வவுனியா செட்டிக்களம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகத்தான்குளம் பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் அப்பகுதியிலுள்ள பல தென்னந்தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை அழித்து நசமாக்கியுள்ளது.

குறித்த யானைகளின் அட்டகாசத்தால் ஐம்பதுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதுடன், தென்னந்தோட்ட செய்கையில் ஈடுபட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி வரும் யானைகளினால் தமது தென்னந்தோட்டம் மட்டுமன்றி வாழ்வாதார பயிர்செய்கை நடவடிக்கைகளும் அ ழிக்கப்படுவதாக தெரிவிக்கும் அம் மக்கள், யானைகளினால் தாம் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் வாடிக்கையாளரால் வர்த்தகருக்கு நேர்ந்த கதி!!

வர்த்தகருக்கு நேர்ந்த கதி

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு வாடிக்கையாளரினால் அவமரியாதை ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தக நிலையத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று மின்சார அடுப்பு ஒன்றினை கொள்ளவனவு செய்துள்ளார்.

குறித்த அடுப்பினை வாடிக்கையாளர் வீட்டிற்கு எடுத்துச்சென்று பயன்படுத்திய பின்னர் மீண்டும் அதனை வர்த்தக நிலையத்திற்கு எடுத்துச்சென்று இதனை மாற்றி இதற்கான பணத்தினை மீளத்தருமாறு கோரியுள்ளார்.

இதன் போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் நீங்கள் குறித்த மின்சார அடுப்பினை உபயோகித்துள்ளீர்கள் மின்சார அடுப்பில் எதேனும் குறைகள் உள்ளனவா அல்லது இதற்கு பதிலான வேறு மின்சார அடுப்பினை தரவா என கேட்டுள்ளார். இதற்கு வாடிக்கையாளர் மின்சார அடுப்பு பிடிக்கவில்லை எனவே பணத்தினை மீளத்தருமாறு கோரியுள்ளார்.

இதன் போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு வர்த்தக நிலையத்தினை விட்டு வெளியேறிய வாடிக்கையாளர் குறித்த வர்த்தக நிலையம் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், பொருளுக்கு பொருள் மாற்றம் செய்து நாங்கள் வாடிக்கையாளருக்கு வழங்குகின்றோம். பாவித்த பொருளை மீளப்பெற்றுக்கொண்டு எவ்வாறு பணத்தினை வழங்க முடியும்.

வாடிக்கையாளர் மின்சார அடுப்பினை பாவித்துவிட்டு பணத்தினை மீளத்தருமாறு கோருவது தவறு. மின்சார அடுப்பில் பிழைகள் இருந்தால் உத்தரவாதச் சான்றிதழ் மூலம் நாங்கள் மாற்றி வழங்குவதற்கு தயார் என தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக வாடிக்கையாளர் கருத்து தெரிவிக்கையில்,

மின்சார அடுப்பானது பாவனைக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து காணப்பட்டது. மின்சார அடுப்பை வர்ததக நிலையத்தில் திருப்பி கொடுத்தபோது வர்த்தக நிலையத்தினர் திரும்பபெற மறுத்தனர். அப்பணத்திற்கு பதிலாக வேறு பொருட்கள் வாங்குமாறு வற்புறுத்தியதுடன் தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களினால் பேசியுள்ளார்கள் என தெரிவித்தார்.

யாழ் நோக்கி சுற்றுலா சென்ற வேன் கோர விபத்து : 8 பேர் வைத்தியசாலையில்!!

கோர விபத்து

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணி அளவில் 458 ஹொரணை, மத்துகம வீதியின் மத்துகம நகருக்கு அருகில் கிரிகெட்டிய பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனின் பயணித்த 8 பேர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், மத்துகம வேத்தேவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி தெனியாய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய சுற்றுலா சென்ற சிலரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு கா யமடைந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வேன் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், மத்துகம பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் புத்தரின் உருவம் பொறித்த புடவை : உண்மை என்னவென்று தெரியுமா?

புத்தரின் உருவம் பொறித்த புடவை

இந்தியாவில் மிக பிரபல்யமான கலம்காரி புடவை வகைகளில் வரையப்படும் உருவங்கள் புத்த பெருமானுடையது அல்லவென தெரியவந்துள்ளது. அண்மைக்காலங்களாக இலங்கையில் இதுபோன்ற புத்தரினுடைய முகத்தை ஒத்த உடையணித்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வழிபடும் மஹவீர் ஜயந்தி எனும் தெய்வ சிலையின் முகம்தான் அது என்றும் கூறப்படுகின்றது.

குறித்த புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கான வர்ணங்கள் இயற்கைப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுடன் இந்த புடவைகள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதியில் நெய்யப்படுகின்றன.

இது அப்பகுதியின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வகைப் புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கு நிறம் பூசுவதற்கு தனியான வகைப் பேனை பயன்படுத்தப்படுகின்றது.

மாற்று முறைகளிலும் நிறம் பூசப்படுவதுடன் மேற்படி நிறங்கள் எல்லாம் கலம் எனவும் அவற்றை பூசுபவர்களை காரி எனவும் அழைப்பது வழமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

அதேபோல் அப்பகுதியில் இந்து தர்மத்தை பின்பற்றுவோர் அதிகம் வாழ்வதால் விஷ்ணுவின் தச அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் புத்தப் பெருமான் என நம்பப்படுவதால் இலங்கையில் புத்தருக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் மேற்படி பிரதேசத்தில் வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் ஓடஓட கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செய்யப்பட்ட நபர்!!

நபர் ஒருவர்..

குருணாகலில் நபர் ஒருவர் ஓட ஓட து ரத்திச் சென்று கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொல்கஹவெல பகுதியில் ம துபான விருந்து ஒன்றின் போது சி கரெட் வழங்காமையினால் நபர் ஒருவர் வெட் டிக்கொ லை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விருந்தின் போது சி கரெட் பு கைத்துக் கொண்டிருந்த நபரிடம் சி கரெட்டை தருமாறு மற்றுமொருவர் கேட்டுள்ளார். எனினும் அதனை வழங்காமையினால் கோ பமடைந்த நபர் க த்தியால் வெட்டிக் கொ லை செய்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 600 மீற்றர் தூரம் துரத்திச் சென்று வெ ட்டிக் கொ லை செய்துள்ளார். கொ லை செய்யப்பட்டவர் பொல்கஹவெல, திவுல்கும்புர கிராமத்தை சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சி கரெட்டிற்காக ஆரம்பத்தில் ஏற்பட்ட வா ய்த்தகராறு மோ தலாக மாறியமையினால் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் ந ஞ்சரு ந்தி த ற்கொ லை செய்வோம் : சுகாதாரத் தொண்டர்கள்!!

சுகாதாரத் தொண்டர்கள்

வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையினால் நேர்முகத் தேர்விற்குட்படுத்திய சுகாதார தொண்டர்களில் 65 பெயரை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்பெயர் விபரப்பட்டியலில் சுகாதாரத் தொண்டர்களாக சேவை மேற்கொண்டு 100 நாட்கள் போராட்டம் நடத்திய 20பேரின் பெயர் விபரங்கள் வெளிவரவில்லை, தொடர்ச்சியாக தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் நியமனத்திற்காக போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டும் தமது பெயர் விபரங்கள் வெளிவரவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாங்கள் மிகவும் மன அ ழுத்ததிற்குட்பட்டுள்ளதாகவும் குடும்ப சுமை காரணமாக தாங்கள் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற யு த்தக் காலத்திலிருந்து தற்காலிகமாக சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 120 பேர் தமது பதிவினை மேற்கொண்டு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் தொடர் போ ராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது நிரந்தர நியமனத்தினைக் கோரியிருந்தனர்.

அப்போ ராட்டம் 100நாட்களை அடைந்ததும் வடமாகாண சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து போ ராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு தொடர்ச்சியாக தமது நியமனத்திற்கான போ ராட்டங்களை ஆக்கங்கே மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சேவைக்காலம் கல்வித்தகமை அடிப்படையில் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டு நேர்முகத் தேர்வு வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று 65பேரின் பெயர் விபரங்கள் உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பெயர் விபரங்களில் போ ராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 20பேரை புறக்கணித்துள்ளதாகவும் தமக்கான இணைத்துக்கொள்வதற்காக தகமைகள் இருந்தும் உள்வாங்கப்படவில்லை.

தொடர்ச்சியாக தமக்கான நியமனத்தில் புறக்கணித்து வருவதாகவும் இவ்வாறான சூழ்நிலைகளினால் குடும்ப நிலைமையில் தாங்கள் அனைவரும் ந ஞ்சருந்தி த ற்கொ லை செய்துகொள்வதைத்தவிர தமக்கான மாற்று வழிகள் இல்லை என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் டக்ளஸ் சந்திப்பு!!

டக்ளஸ் சந்திப்பு

வவுனியாவில் இயங்கி வரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள், எதிர்வரும் தேர்தலில் செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், கட்சி உறுப்பிர்களுக்கிடையிலும் கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றிருந்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், ஈ.பி.டி.பி யின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தன

ஆசியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ள அதிசயம் : விரைவில் மலரப்போகும் தாமரை!!

ஆசியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ள அதிசயம்

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் மிகவும் உயர்ந்த கட்டடமாக இது வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகளை கொண்ட கோபுரத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்ய காத்திருக்கிறது.

தாமரை கோபுரத்தில் 50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கான வசதி, 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி, 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும், திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம், அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

90 மாடிகளை கொண்ட இந்த கோபுரத்தின் உச்சிக்கு வெறும் இரண்டு நிமிடங்களில் லிப்ட் மூலம் செல்ல முடியும் என்பது சிறப்பம்சம். 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும் கோபுரத்தை அமைக்க 104 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

பல அதிசயங்களை உள்ளடங்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான கட்டடத்தொகுதியாக அமையவுள்ளது.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் செல்கள் மீட்பு : மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகம்!!

செல்கள் மீட்பு

வவுனியா – கனகராயன்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் செல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளம், பழைய கண்டி வீதி பகுதியிலுள்ள தனியார் வெற்று காணியொன்றிற்குள் இருந்தே நேற்று (02.09.2019) மாலை இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள ஒருவர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்கு சென்ற போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் செல்கள் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 15 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றை மீட்டுள்ளனர். அத்துடன் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பகுதியில் வெற்று மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.

அப்பகுதியில் காணப்படும் வெடிபொருளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காகவும் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரானுவத்தினரை அழைத்து குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவதற்காக வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்காக கனகராயன்குளம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் குறித்த பகுதியில் பச்சை நிற உரப்பையினுள் மண்கள் நிரப்பி முகாம் அமைத்தமைக்குரிய தடயங்கள் காணப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

குழந்தையுடன் சேர்த்து பொம்மை கால்களிலும் கட்டுபோட்ட மருத்துவர்கள் : ஏன் தெரியுமா?

பொம்மை கால்களிலும் கட்டு..

டெல்லியில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த, 11 மாத பெண் குழந்தைக்கு நூதனமுறையை கையாண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

ஜிக்ரா மாலிக் என்ற அந்த குழந்தை வீட்டில் மெத்தையில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் டெல்லியிலுள்ள லோக்நாயக் மருத்துமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அந்த குழந்தையின் இடது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த குழந்தை ஒரு இடத்தில் இருக்காமல், மருத்துவர்களை படாதபாடு படுத்தியது.

இதனால் எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பினர். அப்போது அந்த குழந்தையின் தாயாரான ஃபரீன், ஒரு புதிய யோசனையை தெரிவித்தார்.

அதன்படி, குழந்தை ஜிக்ராவுக்கு மிகவும் பிடித்தமான பாரி என்ற பெயர் கொண்ட பொம்மையை மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். முதலில் அந்த பொம்மை பாரிக்கு சிகிச்சை அளிப்பது போல் மருத்துவர்கள் காலில் கட்டு போட்டனர்.

அதனைப் பார்த்த குழந்தை ஜிக்ராவும், தனக்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டு சிகிச்சை அளிக்க ஒப்புக் கொண்டாள். இந்த யோசனை நன்றாக வேலை செய்தது என்று மருத்துவர் அஜய்குப்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தை ஜிக்ராவுடன் பொம்மையான பாரியும் நோயாளியாக மாறியுள்ளது.

அவள் வ லியால் து டிப்பதை தாங்கிகொள்ள முடியவில்லை : மனைவியை கொ ன்றுவிட்டு தற்கொ லை செய்த கணவன்!!

இந்தியாவில் மனைவியை கொ ன்றுவிட்டு கணவர் த ற்கொ லை செய்த நிலையில் வீட்டில் இருந்து உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர், கணேஷ். மென்பொருள் பொறியாளரான இவருக்குத் திருமணமாகி விருஷாலி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் கணேஷ் தம்பியின் செல்போனுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு மெசேஜ் வந்துள்ளது. நாங்கள், எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம் என அதில் இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் பதறியடித்து கொண்டு கணேஷ் வீட்டுக்கு சென்ற நிலையில் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, கணேஷ் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக கிடந்தார். அவரது மனைவி பலத்த கா யங்களுடன் அதிக ர த்தம் வெளியேறி ச டலமாகக் கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் இருவரின் ச டலத்தையும் மீட்டு, பி ரேதப் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணேஷ் சகோதரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணேஷின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அதற்கான சிகிச்சைகள் எடுத்துவந்தார் என்றும் தெரியவந்தது. இதனிடையில் கணேஷ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றினர்.

அதில், விருஷாலியை அதிகமாக நேசித்தேன். கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் வ லியையும் க தறல்களையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், சு த்தியலால் மனைவியின் த லையில் அ டித்து கொ லை செய்துள்ளார் கணேஷ். பின்னர் தானும் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

ரத்த கா யங்களுடன் வீட்டில் ச டலமாக கிடந்த பிரபல நடிகர் தீபக்கின் தந்தை!!

தீபக்கின் தந்தை

பிரபிரபல நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் ம ர்மமான முறையில் இ றந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக திமி தா, முன் தினம் பார்த்தேனே, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தீபக் தினகர். இவர் திருமதி செல்வம், தென்றல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதோடு தொகுப்பாளராகவும் மக்களிடையே பிரபலமானவராக இருந்து வருகிறார்.

தீபக் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் தந்தை விட்டர் திகார் ராவ் மற்றும் தாய் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் விட்டலின் மனைவி கடந்த 26 -ஆம் திகதி கும்பகோணத்துக்கு சென்றார்.

இதனால் விட்டல் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், விட்டல் மனைவி கும்பகோணத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில், விட்டல் ர த்தக் கா யங்களுடன் இ றந்து கிடப்பதைப் பார்த்து அ திர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, விட்டல் திகார் ராவ் இ றந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நடிகையின் வயிற்றை பார்த்து கிண்டல் செய்த ரசிகர்கள் : நடிகை கொடுத்த சரியான பதிலடி!!

கிண்டல் செய்த ரசிகர்கள்

பிரபல திரைப்பட நடிகையின் வயிற்றில் ஏதோ கோடு, கோடாக இருக்கிறதே என்று கிண்டல் செய்த நபர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் போன்றே இருக்கிறார் என்று பலராலும் கூறப்பட்டவர் தான் நடிகை ஜரீன் கான். இவர் சல்மான் கானின் வீர் திரைப்படம் மூலம் அறிமுகமாகினார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வயிறு தெரியும்படி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திருந்தார். அதைக் கண்ட இணையவாசிகள், அது என்ன உங்களின் வயிற்றில் கோடு, கோடாக உள்ளது. வயிறை பார்த்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது.

இப்படி ஒரு வயிறை வைத்துக் கொண்டு அது தெரியுமம்படி புகைப்படம் வெளியிடலாமா? பாலிவுட் நடிகையாக இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு மோசமான வயிறா என்று மோசமாக விமர்சித்தனர். சிலரோ ஜரீன் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. வயிற்றுக்கு மேக்கப் போட்டு அழகாக காட்டாமல் உள்ளதை உள்ளபடி பெருமையாக காட்டியுள்ளீர்கள் என்றும் பாராட்டினர்.

நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த ஜரீன் கான் கூறியதாவது, என் வயிறு ஏன் அப்படி இருக்கிறது என்று வியப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும. 50 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த ஒருவரின் வயிறு இப்படித் தான் இருக்கும். போட்டோஷாப் செய்யவில்லை என்றால் வயிறு இப்படி தான் தெரியும்.

எப்போதும் உண்மையாக இருக்க விரும்புபவள் நான். அதனால் என் வயிறை நினைத்து நான் வெட்கப்படவில்லை. எனவே, என்னை கிண்டல் செய்வது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.

2 நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடு : மாயமான பெண் மருத்துவர் : பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!

2 நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடு

சென்னையில் இரண்டு நாட்களாக மாயமாகியிருந்த பெண் மருத்துவர் தன்னுடைய காதல் கணவருடன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

சென்னையை சேர்ந்த இளங்கோ-ஆண்டாள் தம்பதியினருக்கு சுபாஷினி என்கிற மகள் இருக்கிறார். ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு புதுவையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அப்பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சுபாஷினிக்கு வீட்டில் திருமணம் செய்வதற்கான வேலைகளில் அவருடைய பெற்றோர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் இதற்கு சுபாஷினி மறுப்பு கூறியதாக தெரிகிறது. 2 தினங்களுக்கு முன் சுபாஷினிக்கு அவருடைய தாய் ஆண்டாள் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ளது.

இதனையடுத்து மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து, பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த சக ஊழியர்கள், சுபாஷினி மருத்துவமனைக்கு இரண்டு நாட்களாக வரவில்லை எனக்கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து விட்டு, பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுபாஷினி, தனது காதல் கணவரான அகிலனுடன் ஆஜரானார். நானும், அகிலனும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம்.

இதுபற்றி கடந்த 24-ந் தேதி எங்களது பெற்றோரிடம் தெரிவித்தோம். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே கடந்த 28-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என நீதிபதியிடம் கூறியுள்ளனர்.

இதனை கேட்டறிந்த நீதிபதி இருவரையும் கோரிமேடு பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கு சென்றதும், சுபாஷினி, தான் அகிலனுடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட பொலிஸார் அவருடைய காதல் கணவருடன் அனுப்பி வைத்து வழக்கை முடித்து வைத்தனர்.

தாயின் கண்முன்னே நடந்த கொ டூரம் : நொடியில் ப றிபோன மகனின் உ யிர்!!

தாயின் கண்முன்னே நடந்த கொ டூரம்

சென்னையில் தாயின் கண்முன்னே லொறியில் அடிபட்டு மகன் உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சையத் என்பவரின் மனைவி நஸ்ரின். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய 4 வயது மகன் முகமது உவைஸ் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நஸ்ரின் தினமும் அலுவலகத்திற்கு செல்லும்போது முகமதுவை, இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் இறக்கிவிடுவார்.

இந்த நிலையில் வழக்கம் போல மகனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நஸ்ரின் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லொறி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நஸ்ரின் லேசான காயங்களுடன் உ யிர்தப்பி விட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய மகனின் தலை மீது லொறியின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது உ யிரிழந்துள்ளான்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த நஸ்ரின் க தறி அழ ஆரம்பித்துள்ளார். அதே சமயம் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற லொறி ஓட்டுநரை சுற்றி இருந்த மக்கள் மடக்கி பிடித்து த ர்மஅ டி கொடுத்துள்ளனர். இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், லொறி ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.