பெற்ற தாயை கொ ன்று மூளையை வறுத்து சாப்பிட தயாரான மகன்!!

மூளையை சாப்பிட தயாரான மகன்

இந்தியாவில் ம து குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை கொ லை செய்து அவர் மூளையை சாப்பிட முயன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்கார் அருகே உள்ள கிராமம் போடால்டா. இங்கு சிதாராம் ஓராயான் என்பவர் வசித்து வந்துள்ளார். போ தைக்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் போகாமல் தினமும் ம து கு டிப்பதற்கு பணம் கேட்டு தன்னுடைய அம்மாவை தொந்தரவு செய்து வருவது வாடிக்கை.

இப்படித்தான் சம்பவத்தன்றும் ம து குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். கையில் பணம் இல்லை என்று அம்மா சொன்னதால், ஆ த்திரம் அடைந்த சிதாராம் அவரை அ டித்து உ தைத்துள்ளார்.

பின்னர் மண்டையிலேயே கம்பியை வைத்து அடித்து நொறுக்கி உள்ளார். பிறகு தாயின் மண்டைக்குள் இருந்து மூளையை தனியாக வெளியே எடுத்து, அதனை வறுத்து சமைத்து சாப்பிட முயன்றுள்ளார்.

இதை பார்த்த அவரது அண்ணி அங்கு வந்து பதறிபோய் சத்தம் போடவும், சிதாராம் அங்கிருந்து ஓடிவிட்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் எண்ணெய் சட்டியில் தாயின் மூளையை வறுத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ந்து போய்விட்டனர். இதையடுத்து தப்பி ஓடிய சிதாராமை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சவுதி கூட்டுப்படைகள் கொ லைவெறி தா க்குதல் : கொத்தாக கொ ல்லப்பட்ட 100 பேர்!!

தா க்குதல்

ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா கூட்டுப்படைகள் முன்னெடுத்த வான்வழி தா க்குதலில் 100 பேர் கொ ல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டின் தலைநகரான சனா நகரின் அருகாமையில் அமைந்துள்ள சில பகுதிகள் மற்றும் துறைமுக நகரமான ஏடனில் முக்கிய இடங்களை ஆ க்கிரமித்துள்ள ஹவுத்தி போ ராளிகள் மற்றும் பல்வேறு பு ரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆ யுதப் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்டைநாடான சவுதி அரேபியாவின் உதவியுடன் பு ரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம் தா க்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி போ ராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தா க்குதலில் 100-கும் அதிகமானோர் கொ ல்லப்பட்டதாக செஞ்சிலுவை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் சனாவில் இருந்து சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தாமர் என்ற பகுதியில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இவர்களுடன் போ ரிட்டு பிடிபடும் அரசுப்படையினரை கைது செய்து அடைத்து வைப்பதற்காக இங்குள்ள பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றை சிறைச்சாலையாக ஹவுத்திகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிறைச்சாலையை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று வான்வழி தா க்குதல் முன்னெடுத்துள்ளனர்.

ஏமனில் இந்த ஆண்டு இதுவரை சவுதி கூட்டுப்படைகளால் முன்னெடுக்கப்படும் மிக மோசமான தா க்குதல் இது என சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தா க்குதலில் சுமார் 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் ப லி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஏமன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  ஓராண்டுக்கு முன்னர் பாடசாலை பேருந்து மீது சவுதி அரேபியா முன்னெடுத்த வான்வழி தா க்குதலில் 40 மாணாக்கர்கள் கொத்தாக கொ ல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியின் ஆசையை நிறைவெற்ற கணவன் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு!!

குவியும் பாராட்டு

இந்தியாவில் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்ற மனைவியின் ஆசையை, கணவர் தன்னுடைய ஓய்வு நாளில் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்த் மீனா. ஆசிரியரான இவர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர், ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த கிராமமான மலவாலி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்தார்.

இதற்காக தனியார் ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தினார். அதில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஏறினார். ஹெலிக்பாடரில் ஏறிய அடுத்த18 நிமிடத்திலேயே தனது கிராமத்துக்கு வந்துவிட்டார் .

ஏன் இந்த திடீர் ஏற்பாடு? என்று ரமேஷ் சந்திடம் கேட்ட போது, ஒரு நாள், ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்றால் எவ்வளவு ஆகும் என்று என் மனைவி கேட்டார்.

அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன் படி ஜெய்ப்பூர்ல இருந்து எங்க கிராமத்துக்குப் போக 3.70 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொன்னார்கள். அதன் பின் பணத்தை கொடுத்தேன்.

இது தொடர் பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிச்சு அனுமதி வாங்கினேன். 18 நிமிஷம் பறந்து ஊருக்கு வந்தோம். எங்க ரெண்டு பேருக்குமே இது புது அனுபவமா இருந்தது, இதை விட என்ன மகிழ்ச்சி வேண்டும் என்று கூறி முடித்தார். இவர்கள் ஹெலிகாப்டரில் வருவதைப் பார்க்க அந்த கிராமத்தினர் ஏராளமாக கூடியிருந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ஈரோஸ் கலந்துரையாடல்!!

பொதுஜன பெரமுன – ஈரோஸ் கலந்துரையாடல்

நடைபெறவுள்ள 8 வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஈரோஸ் (ஈழவர் ஜனநாயக முன்னணி) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவுக்கு சார்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பது, கோட்டபாயவுக்கு தமிழ் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொள்ளல், இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, இந்திக்க அனுரத்த, சப்பிரகமுகா மாகாண முதலமைச்சர் மகேபால ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸவின் இணைப்பாளர் தேவப்பிரிய அபயசிங்க, ஈரோஸ் கட்சியின் தலைவர் துஸ்யந்தன்,

கட்சியின் செயலாளர் வே.நகுலேஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பரினர் சசிதரன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன், ஈழவர் ஜனநாயக கட்சியின் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என விசேட வழிபாடுகள்!!

விசேட வழிபாடுகள்

தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என விசேட பூஜை வழிபாடுகள் வவுனியா இந்து, பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு குறித்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

அந்தவகையில் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயம், குருமன்காடு காளி கோவில், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம், வவுனியா சகர பௌத்த விகாரை, வவுனியா பள்ளிவாசல் என்பவற்றில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆசிவேண்டியும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற இறைவனின் ஆசி வேண்டியும் விசேட ஆராதனைகளும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இதில் வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வவுனியா தமிழ்ச் சங்கத்தின் சிந்தனை அரங்கம்!!

சிந்தனை அரங்கம்

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் சிந்தனை அரங்கம் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் இன்று (01.09.2019) காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை நடைபெற்றது.

சேதன விவசாயம் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இவ் அரங்கினை தமிழருவி த.சிவகுமாரன் தலைமையேற்று நடாத்தியிருந்தார்.

ஆதி விநாயகர் ஆலய பரிபாலனசபை பொருளாளர் பாலசுப்பிரமணியம் செல்வஉதயம் அவர்கள் மங்கள விளக்கேற்றி வைத்ததுடன் அரங்கம் இனிதே ஆரம்பமாகியது.

அரங்கின் தொடக்கவுரையினை வவுனியா விவசாயத்திணைக்கள விதை மற்றும் நடுகைப்பொருட்கள் பிரதி விவசாயப்பணிப்பணிப்பாளர் தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் நடாத்தியிருந்ததுடன் சித்தனையுரைகளை பாஸ்கரமூர்த்தி நேசராஜா, ஆறுமுகம் பிரபாகரன், முத்தையா நந்தகுமார், சிவசுப்பிரமணியம் பத்மநாதன் நடாத்தியிருந்தனர்.

இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார், வர்த்தகர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

  

கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்தில்..

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். இன்று அதிகாலை கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த லொறியும் சிறிய கன்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, கன்டர் வாகனத்தின் சாரதி ஓட்டமாவடியைச் சேர்ந்த 41 வயதான இஸ்மாயில் நூர்ஜான் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனத்தில் பயணம்செய்த ஓட்டமாவடியைச் சேர்ந்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அரசிடம் ஆதரவு நாடியிருக்கும் ஈழத்து சிறுமி!!

தனுஜா ஜெயக்குமார்

இந்தியாவில் உள்ள ஈழத்து சிறுமிக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி வழங்க இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஜா ஜெயக்குமார் எனும் குறித்த சிறுமி தமது தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

சிறந்த நீச்சல் வீராங்கனையாக விளங்கி வரும் இவர், அண்மையில் பூனேவில் நடந்த அகில இந்திய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவில் அக்டோபர் 21ஆம் திகதி நடக்கவிருக்கும் உலக நீச்சல் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

ஈழத்து அகதியான இவருக்கு உரிய கடவுச்சீட்டு வழங்க இந்திய அரசு மறுக்கிறது. அத்துடன் இந்த சிறுமி தமிழ் அகதியாக இருப்பதால் இலங்கை அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. இதன் காரணமாக குறித்த சிறுமி தமது உதவியை நாடியுள்ளார். இந்த சிறுமியின் கனவை நனவாக்க நல் உள்ளங்கள் உதவ முன்வர முடியும்.

வவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த பெரும்பான்மை இன தம்பதிகள்!!

தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம்

அனுராதபுரத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம்.ரத்நாயக்க மற்றும் கஜசானி பூர்னிமா ஆகிய இருவரும் தமிழ் இந்து முறைப்படி திருமணம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

குறித்த தம்பதியினர் வவுனியா, குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ திவாகரக்குருக்கள் தலைமையில் மந்திரங்கள் இடம்பெற்று, இந்து முறைப்படி தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வை கேள்வியுற்ற வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் இருவர் இவ்வாறு தமிழர் கலாசாரத்தின் படி வேட்டி, சேலை அணிந்து ஆலய மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்தமை பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

வவுனியாவில் நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு வீட்டு கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா – ஓமந்தை பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளமான முதலையால் நேற்று இரவு அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வீட்டிலிருந்த நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு நபரொருவர் கதவை திறந்து பார்த்த போது வீட்டு முற்றத்தில் 5 அடி நீளமான முதலையொன்று காணப்பட்டுள்ளது.

முதலையை விரட்ட அப்பகுதி மக்கள் முயன்ற போது முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் இன்று காலை முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ப லியான இலங்கையைச் சேர்ந்த மாணவி : 700 மீற்றர் தொலைவில் இருந்த வாகனம்!!

இலங்கையைச் சேர்ந்த மாணவி

அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவியொருவர் உ யிரிழந்த சம்பவம் தொடர்பான சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் குறித்த மாணவி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வாகனமானது விபத்து நடந்த இடத்திலிருந்து 700 மீற்றர் தொலைவில் உள்ள தேவாலயத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிங்டன் பகுதியில் உள்ள வீதிக்கடவையில் குறித்த மாணவி பாதையை கடந்தவேளை வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும். அல்லது www.crimestoppersvic.com.au என்ற பக்கத்தில் இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், உ யிரிழந்த மாணவி இலங்கையை சேர்ந்த நிசாலி பெரேரா (20 வயது) எனவும், அவர் அவுஸ்ரேலியாவின் Monash பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம்!!

தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம்

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று (01.09.2019) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரப்பட்டதுடன் அடிகளாரின் தமிழ் சேவை தொடர்பில் தமிழ் மணி அகளங்கன் கருத்துரையையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி , வவுனியா நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராசா, வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார், தமிழருவி சிவகுமார், சமூக ஆர்வளர்கள், நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் உள்ளதா : மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?

புதிய வாக்காளர்களை உள்ளடக்கிய புதிய வாக்காளர் இடாப்பு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. 2019 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலுள்ள உங்கள் தகவல்கள் சரியாக உள்ளதா என்பது தொடர்பில் சரி பார்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய வாக்காளர் இடாப்பு நாடு முழுவதும் உள்ள கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சரிப்பார்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்ப்ட்டுள்ளது.

எப்படியிருப்பினும் தேர்தல் செயலக அலுவலகத்தில் உள்ள இணையத்தளத்தில் இதுவரையில் வாக்காளர்களின் தரவுகள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் பெயர் விபரங்களை பரிசோதித்துப் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.

 

நாய்க்கு இருக்கும் அன்பு : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

நாய்க்கு இருக்கும் அன்பு

அனுராதபுரத்தில் அன்பு, பாசம், இரக்கம் மிருகங்கள் மத்தியில் உள்ளதை புலப்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சங்கமித்த மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் நாய் ஒன்றின் அன்பு பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. ஜயமுனி பிரேமாஞ்சலி டி சில்வா என்ற பெண், நாய் மற்றும் பூனை ஒன்றையும் வளர்த்து வருகிறார்.

ராணி என பெயரிடப்பட்டுள்ள நாய், தனது பாலை பூனைக்கு கொடுத்து பாசமாக பாதுகாத்து வருகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையர்களை அடையாளம் காண புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை

அனைத்து இலங்கையர்களினதும் கைரேகை அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு கிடைக்கும் அடையாளம் தெரியாத ச டலங்களை இனம் காண, கைரேகை உதவியாக இருக்கும் என கொழும்பு பிரதான சட்ட வைத்தியர் அஜித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பி ரேத அறைக்கு வருடத்திற்கு 150 அடையாளம் காண முடியாத ச டலங்கள் கிடைக்கின்றன. அவற்றினை அடையாளம் காண்பது சிக்கலாகியுள்ளதாக சட்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

பி ரேத பரிசோதனையில் அடையாளம் காண முடியாத சடலங்களுக்கு அரச செலவில் இறுதி சடங்கு நடத்தப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் வாகன விபத்துக்களில் உ யிரிழப்போரின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை ஏற்படுகிறது.

இவ்வாறான குழப்பமான நிலையை தவிர்ப்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்களை பெறுவதன் மூலம் தீர்வு காண முடியும் என சட்ட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகத்தை மறைத்தவாறு ஆடை அணிந்திருந்த 4 பெண்களுக்கு நேர்ந்த கதி!!

முகத்தை மறைத்தவாறு ஆடை

அவசரகால சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முகத்தை மூடியவாறு ஆடை அணிந்திருந்த நான்கு பெண்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். இச் சம்பவம் அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளது.

வர்த்தகர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே வான் படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர். இதன்பின்னர் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தலையீட்டின் மூலம் அவர்கள் நான்கு பேரும் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், முகத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பில் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இல்லாவிட்டாலும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, சமூகத்தலைவர்கள் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.