வவுனியா சி றைச்சாலைக்கு ஐஸ் போ தைப்பொ ருளை எடுத்துச்சென்ற பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் இன்று (31.08.2019) மதியம் 1 மணியளவில் கைது செய்துள்ளனர்.
போ தைப்பொ ருளை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் கணவர் வவுனியா சி றைச்சாலையில் சி றைவாசம் அனுபவித்து வருகின்றார். இந்த நிலையில் சி றைச்சாலையிலுள்ள கணவரை பார்வையிடுவதற்காக இன்று மதியம் குறித்த பெண் சி றைச்சாலைக்கு சென்றுள்ளார்.
சி றைச்சாலைக்கு சென்ற சமயத்தில் ஆடையினுள் 4கிராம் ஐஸ் போ தைப்பொ ருளை வைத்து கணவருக்கு வழங்க முற்பட்ட சமயத்தில் சி றைச்சாலை பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா போ தைப்பொ ருள் த டுப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா போ தைப் பொருள் தடுப்பு பொலிஸார் குறித்த பெண்ணையும் போ தைப்பொரு ளையும் இன்று மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய சமயத்தில் குறித்த பெண்ணை இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் இளம் புதுமணத்தம்பதி உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சாம்பாளையம் பிரப்நகர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவருக்கும் மஞ்சுளா (19) என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
மஞ்சுளா ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவரது கணவர் பிரகாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் அவர்களது உறவினர் செம்பருத்தி என்ற பெண் என 3 பேர் ஒரு பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிரில் வேன் வந்தது. இதில் எதிர்பாராத விதமாக வேனும் – பைக்கும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ், மஞ்சுளா பரிதாபமாக இ றந்தனர். செம்பருத்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
திருமண வாழ்க்கையை தொடங்கிய மூன்று மாதத்தில் இளம் தம்பதி உ யிரிழந்தது அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை அவரது நண்பர்களே கொ ன்று புதைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்நல்லாத்துரை ஏரிக்கரையில் கடந்த 27 ஆம் திகதி இளைஞர் ஒருவரின் ச டலம் பு தைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசாருக்கு, கொ லை செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த நிலையில் ர த்தத் துளிகள் சிந்தியபடி ஒருவரை ஏரிக்கரையின் முட்புதர் அருகே இ ழுத்துச் சென்றதற்கான தடயங்கள் காணப்பட்டன.
இதனையடுத்து அந்தப் பகுதியில் தேடிய பொலிசார், தோண்டப்பட்ட குழியில் பாதி மணல் மூடப்பட்ட நிலையில் ஒருவர் பு தைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அந்த உடல் முழுவதும் ர த்தக் கா யங்கள் இருந்தன. இதனால் அவர் கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதினர். முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் மகேஷ்குமார் எனவும் வயது 20 எனவும் தெரியவந்தது.
மட்டுமின்றி மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்த பொலிசார் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பில் மேலும் விசாரித்த பொலிசாருக்கு அ திர்ச்சி தகவல் காத்திருந்தது.
நண்பர்களே மகேஷ்குமாரைக் கொ லை செய்து ஏரிக்கரையில் கு ழிதோண்டி பு தைத்ததாக தெரியவந்தது. வேலை ஏதும் இல்லாத மகேஷ்குமார் அப்பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. அதே பெண்ணை மகேஷ்குமாரின் நண்பரும் காதலித்துள்ளார்.
இதில் ஆ த்திரமடைந்த மகேஷ்குமாரின் நண்பர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மகேஷ்குமாரைக் கொ லை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 27 ஆம் திகதி அந்த நண்பர் ஏரிக்கரையில் ம து அருந்தலாம் என மகேஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளார்.
ம து போ தையில் இருந்த அவரிடம், அந்த பெண்ணை மறக்க வேண்டும் எனவும், காதலை கைவிட வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மகேஷ்குமாரை அவரின் நண்பர்கள் அ டித்துக் கொ லை செய்து ச டலத்தை ஏரிக்கரையில் பு தைக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிலர் அதைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தற்போது இந்த கொ லை வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். இருப்பினும், மகேஷ்குமாரின் கொ லையானது காதல் விவகாரம் என்பதை பொலிசாரால் உறுதி செய்யமுடியவில்லை. சரணடைந்துள்ள 5 இளைஞர்களை விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோ தனைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் இன்று (31.08.2019) இடம்பெற்றன.
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தலைமையில் இச் சோதனை நடவடிக்கைகள் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றன.
பொலிஸ் நிலையங்களை ப ரிசோதித்தல், பொலிஸாரின் உடைகளை ப ரிசோதித்தல், மோப்ப நாயைப் ப ரிசோதித்தல், பொலிஸாரின் பாவனையிலுள்ள ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதிக்கப்பட்டன.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்திலுள்ள மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.திஸ்ஸாலாத சில்வா, உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.பிரசன்ன வெலிகல, வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட வவுனியா பிராந்தியப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வவுனியா காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்பவரை கா ணவில்லை என அவரது கணவர் கடந்த 28ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதையடுத்து குறித்த பெண் தொடர்பாக பொலிஸாருக்கு பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை பொலிஸார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வி சாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் வவுனியா சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் குடும்பத்தினருக்கும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
பெண்ணிடம் விசாரணைகள் முடிவுரும் வரையும் எவ்வித தகவலையும் வெளியிட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் தமிழர் தெருவிழாவில் இவ்வாண்டு சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் வரை கலந்து கொண்டிருக்கிறார்கள் என அறிய வருகிறது.
தமிழர்கள் வாழும் நாடுகளில் நடத்தப்படும் தமிழ் விழாக்களில் குறிப்பிடத்தக்கதாகக் காணப்படும் ‘தமிழர் தெருவிழா’ இவ்வாண்டு 5வது முறையாக கடந்த சனி, ஞாயிறு (2019 ஆகஸ்ட் 24, 25) மார்க்கம் வீதியில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழர் தெருவிழாவினை இவ்வாண்டும் ரொறன்ரோ மேயர் ஜோன் ரோறி உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கனடிய தமிழர் பேரவையின் தலைவரான சிவன் இளங்கோ அவரவேற்புரை நிகழ்த்தினார்.
ஒன்ராறியோ மாகாண நிதியமைச்சர் ரொட் பிலிப்ஸ் அவர்களுடன் போக்குவரத்து அமைச்சர் கரோலின் மல்ரோனி அவர்களும் ஒன்ராறியோ மாகாண அரச பிரதிநிதிகளாக விழாவிற்கு வந்து சிறப்பித்தனர்.
மேலும், கனடாவின் மத்திய ஒன்ராறியோ மாநில அரசாங்கப் பிரதிநிதிகளும் லிபரல், கொன்சவேடிவ், என்டிபி உட்பட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் சமூகத் தொண்டர்களும் வருகை தந்து தமிழ் மக்களுடன் இணைந்து தமிழர் தெருவிழாவினை உற்சாகமாகக் கொண்டாடியதும் காணக்கூடியதாக இருந்தது.
விழா நடைபெற்ற வீதிப்பகுதி இரு தினங்களும் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்பட்டு தமிழர் பெருமையைப் பறைசாற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் திறந்த வெளியில் அரங்கேறின.
குறிப்பாக விதவிதமான உணவு வகைகள், பழவகைகள், குளிர்பண்டங்கள் ஒருபுறமாகவும் மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள், வர்த்தக அங்காடிகள், சிறுவர்க்கான பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பன மறுபுறமாகவும் கிட்டி தமிழ்மக்களை மட்டுமல்லாது கனடாவின் பிற இனத்தவர்களையும் மகிழ்வூட்டிக் கொண்டிருந்தன.
பல்கலாச்சார நிகழ்வு நேரத்தின்போது எகிப்து, மெக்சிகோ, கொரியா, சீனா நாட்டுக் கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளைத் தந்து பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர்.
இருதினங்களும் கனடாவின் தமிழ் கலைஞர்களுடன் இலங்கை இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களுமாக சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மேடைக் கலைஞர்கள் தெருவிழாவினைச் சிறப்பித்தனர்.
கனடாவின் பாடகர்களான சின்மயி, நவ்47 மற்றும் தீபிகா மகாதேவனுடன் இன்னும் பலரும் வண்ணமயமாக ஒளிர்ந்த மேடையில் தோன்றி பாடல்களைப் பாடி மெய்மறக்கச் செய்தனர்.
இவர்களுடன் தமிழகத்திலிருந்து வருகை தந்த சுப்பர்சிங்கர் பாடகர் திவாகர், வி.எம்.மகாலிங்கம் ஆகிய இருவரும் சிறப்புப் பாடகர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும் முதன்முறையாக தாயகத்திலிருந்தும் ஒரு பாடகர் தெருவிழாவில் பாடுவதற்கு இம்முறை அழைக்கப்பட்டிருந்தார். வவுனியாவிலிருந்து வருகை தந்த இளம் பாடகர் ஜெயந்தன் கந்தப்பு துள்ளிசையாக பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.
பாடல்களுக்கு மெகா ரியூனேர்ஸ், அக்னி இசைக்குழுக்கள் பின்னணி இசை வழங்கின. இவ்வாண்டிற்கான விழாவில் சிறப்புறக் குறிப்பிடத்தக்க விதமாக பல நிகழ்வுகள் அமைந்திருந்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.
கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து இன்றைய காலகட்டம்வரை தமிழர் வரலாற்றின் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த கண்காட்சி அதனைக் காணவந்த பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது.
யுத்த காலத்தின்போது ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கணிக்கும் விபரத் தொகுப்பு ஒன்றைப் பூரணப்படுத்தும் விபரச் சேகரிப்பு நிலையமும் தெருவிழாவின்போது ஏராளமான பார்வையாளர்களைப் பங்காளர்களாக்கியது.
“ப டுகொ லை செய்யப்பட்டவர்களைக் கணக்கெடுத்தல்” என்ற தலைப்பிலான விபரச் சேகரிப்புத் திட்டத்தை அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் HRDAG என்ற மனித உரிமைகள் அமைப்பு தெருவிழாவிற்கு வந்து நடத்தியிருந்தது.
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் திட்டத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் அமைந்த அலங்கார வண்டி ஊர்வலமும், கண்காட்சியும் தமிழ் ஆர்வலர்களைப் பரவசப்படுத்தியது.
இளைய தலைமுறையினருக்காக பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதையொட்டி அதே இளைய தலைமுறையினருக்காக பல்வேறு போட்டிகளும் தெருவிழாவின்போது நடத்தப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டது.
உலகளாவிய நிலையில் வாழும் பல்வேறு தமிழ்க் கல்விமான்களும் தமிழ் ஆர்வலர்களும் இவ்வகைக் கண்காட்சிகள் குறித்தும் தெருவிழா பற்றியும் தமது பலத்த பாராட்டுக்களை விழா அமைப்பாளர்களான கனடியத் தமிழர் பேரவைக்கு தெரிவித்து வருகின்றனர்.
பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில். இங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், FITS AIR நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தனியார்துறை விமான நிறுவனமான FITS AIR நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட, பிட்ஸ் எயர் நிறுவனத்தின் 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 விமானம், காலை 9.10 மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது.
முன்னர், எக்ஸ்போ எயர் என்ற பெயரில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்ட நிறுவனமே தற்போது, FITS AIR நிறுவனம், என்ற பெயரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைகளையும், வெளிநாடுகளுக்கான சரக்கு விமான சேவைகளையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், FITS AIR நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைதீவில் இன்றையதினம் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன. இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த நமசிவாயம் என்ற மீனவரொருவருக்கு 10 ஆயிரம் கிலோ கிராம் பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன.
அண்மைக்காலமாக 1 கிலோ கிராம் மீன் 350 ரூபாவிற்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் கடலோரத்தில் மீன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன் ஊருக்குள் மீன் விற்பனை செய்பவர்கள் ஒரு கிலோ கிராம் மீன் 150 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன் காரணமாக கடற்கரையை நோக்கி பெருமளவான பொதுமக்கள் விரைந்துள்ளதுடன் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வலையில் இருந்து தவறிய மீன்களை மாத்திரம் எடுத்து ஒரு லட்சம் ரூபாவுக்கும் ஒரு பொதுமகன் விற்பனை செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
கிரக்கெட் சுற்றுத்தொடருக்காக இலங்கை வந்த நியூசிலாந்து அணி பல்லேகல மைதானம் நோக்கி செல்லும் போது சிரமம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. அவர்கள் பயணித்த பேருந்து ஒன்று திடீரென தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகி உள்ளது.
இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின்னர் கண்டி நொக்கி செல்லும் போது அவர்கள் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். பேருந்து, மலைப்பகுதி பிரதேசத்தில் தொழில்நுட்ப கோளாரிற்குள்ளாகியுள்ளது. நடுவீதியில் பயணிக்க முடியாமல் தடுமாறியுள்ளனர்.
இதன் போது அவ்வழியாக வந்த அம்பியுலன்ஸ் மற்றும் சிறிய வேன் ஒன்றின் உதவியுடன் நியூசிலாந்து அணியினர் கண்டி நோக்கி சென்றுள்ளனர். இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான காணொளி ஒன்றை தங்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த கொ ள்ளையர்கள் பெருந்தொகை நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நவாலி கொத்துக்கட்டி பகுதியில் நடைபெற்ற திருமண காணொளியுடன் வந்த கொ ள்ளையர்கள் அதில் அணிந்திருந்த நகைகளை தருமாறு மி ரட்டியுள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி மணமகளின் தாலி உட்பட பெண்கள் அணிந்திருந்த நகைகள் ஒவ்வொன்றாக கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்த கொ ள்ளை கும்பல் ஒருவரை கட்டிவைத்துவிட்டு வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்துள்ளனர்.
வீடியோவில் பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை தருமாறு க த்தி முனையில் மி ரட்டியுள்ளனர். கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரை கொ ள்ளையர்கள் வா ளால் வெ ட்டியதுடன் தா க்குதலையும் நடத்தியுள்ளனர். இதனால் அ ச்சமடைந்த பெண்ணொருவர் சகல நகைகளையும் எடுத்து தருவதாக கூறியுள்ளார்.
கொ ள்ளையர்கள் ஒவ்வொரு இடமாகத் தேடி, அனைத்து நகைகளையும் கொ ள்ளையிட்டுள்ளனர். கொ ள்ளையர்களின் செயல் தொடர்பில் திருமண வீட்டின் மணமகள் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகல் (SMS) மூலம் அயல் வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரும் ஏனையவர்களுக்கு அந்த தகவலை அனுப்பியுள்ளார்.
இதனை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்காரரையும் க த்தியால் வெ ட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. வீட்டில் இருந்தவர்களின் 60பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும் கைப்பைகளும் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் ஏற்பட்ட த கராறில் மகன் தா க்கியத்தில் 54 வயதான தந்தை உ யிரிழந்துள்ளதாக புத்தளம், பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. ஆடிகாமம் பெரியமடு பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீரியாகம கங்கானம்லாகே தர்மசிறி என்பவரே சம்பவத்தில் ப லியாகியுள்ளார்.
கொ லை சம்பவம் தொடர்பாக அவரது 31 வயதான மகனை பொலிஸார் கை து செய்துள்ளனர்.
சந்தேக நபரான மகன் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டதுடன் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
நேற்றிரவு தந்தைக்கும் மகனுக்கு வா க்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அப்போது கோ பமடைந்த மகன் தனது இ டைப்பட்டியை பயன்படுத்தி தந்தையை கொ டூரமாக தா க்கியுள்ளார். தா க்குதலில் கீழே வி ழுந்த தந்தை அந்த இடத்திலேயே உ யிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆனமடுவை நீதிமன்றத்தின் நீதவான் விசாரணைகளின் பின்னர், ச டலம் பி ரேதப் பரிசோதனைக்காக இன்று சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன தில்ஷான் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.
திலகரட்ன தில்ஷான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் களுத்துறை அல்லது காலி மாவட்டத்தில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
தில்ஷான் சில மாதங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஸ்ரீங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்திருத்தம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு மக்கள் வங்கியை விற்பனை செய்யும் சூழ்ச்சியைத் தோற்கடிப்போம் என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இச் சுவரொட்டியின் கீழ் பகுதியில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் என உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் தமிழ் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம் பதிக்கும் சரித்திர பாராட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் இந்த பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
கொழும்பு – நெலும் பொக்குண (தாமரைத் தடாகம்) அரங்கில் நடைபெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான பல்வேறு துறைசார்ந்த தமிழ் கலைஞர்கள் பங்குபற்ற உள்ளதுடன் விருது வழங்கி கௌரவிக்கப்படவும் உள்ளனர்.
குறித்த விசேட நிகழ்வுக்காக கருப்பாடலும் (Theme Song) உருவாக்கப்பட்டுள்ளதுடன், இப்பாடலை இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 30 பாடகர்கள் இணைந்து பாடியுள்ள நிலையில்,
இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் தென்னிந்திய திரைப்பட இசையைப்பாளருமான இலங்கை மண் பெற்றெடுத்த கலைஞன் சுருதி பிரபா இதற்கு இசையமைத்தது விசேட அமிசமாகும்.
இலங்கையிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் விடைத்தாள் மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்படும் 11 பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரி, பம்பலபிட்டி இந்துக் கல்லூரி, களுத்துறை ஞானோதய கல்லூரி, இரத்தினபுரி இந்துக் கல்லூரி, குருநாகல் புனித அன்னம்மாள் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் மற்றும் சீதாதேவி கல்லூரிக்கும், காலி விஹாரமஹாதேவி, வித்தியாலோக்க கல்லூரிகள், பதுளை, ஊவா கல்லூரி என்பன எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் 750க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இலவச சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா, செட்டிக்குளம், நெடுங்கேனி போன்ற பகுதிகளில் வசித்து வரும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 750 இளைஞர் யுவதிகளுக்கு மருத்துவ சான்றிதழ், சாரதி பயிற்சி என்பனவற்றை முற்றிலிலும் இலவசமாக பெற்றுக்கொடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இன்றையதினம் (31.08.2019) வவுனியா மாவட்ட செயலகத்தில் மருத்துவ சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வர்த்தக கைத்தொழில், நீண்டகால அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சினுடாக ஒதுக்கப்பட்ட 11.25 மில்லியன் ரூபா நிதியில் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இச் செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நகர இணைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி, வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். லறீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.