வவுனியாவை இலங்கையின் தலைநகராக மாற்றவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்!!

ஜனாதிபதி வேட்பாளர்

வவுனியா நகரை, இலங்கையின் தலைநகராகமாக்கும் நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாக இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யு த்தக் காலத்தில் தான் வவுனியா நகரில் பணியாற்றியிருந்தேன். இந்நிலையில், வவுனியாவிலுள்ள தமிழ் மக்களை தான் ஆதரிக்கின்றேன்.

இலங்கையில் அனைத்து வளங்களையும் கொண்ட வவுனியாவை, நாட்டின் தலைநகரமாக்குவதே சிறந்தது. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில், வவுனியாவை நிச்சயமாக தலைநகரமாக்குவேன்.

அத்துடன், இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை, அவர்களின் எண்ணப்பாட்டிற்கு அமைவாகவே தான் நிறைவேற்ற தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக குப்பை ராணி!!

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் பயிற்சி பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானியான கலாநிதி அஜந்தா பெரேரா, இலங்கையில் முறையான கழிவு முகாமைத்துவத்துக்காக போ ராடி வருகிறார். குப்பை சேகரிப்பாளர்களுடனான அவரது பணிக்காக, அவர் “குப்பை ராணி” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார். கடைசியாக, 1999ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருந்தார்.

அதன் பின்னர் 2019 நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அஜந்தா போட்டியிடவுள்ளமை 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பெண் வேட்பாளர் களம் இறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தையில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் : பெண் ஒருவர் பொலிசில் முறைப்பாடு!!

பெண் ஒருவர் பொலிசில் மு றைப்பாடு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் போ ராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது முன்னர் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இருந்த தமது காணி வேலி அகற்றப்பட்டதாக பெண் ஒருவர் ஓமந்தைப் பொலிசில் மு றைப்பாடு செய்திருந்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த மு றைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் போ ராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்களை அழைத்த பொலிசார் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இருந்தனர்.

இதன்போது இரு பகுதியினரும் பின்னர் சமாதானமாக சென்று விட்டனர். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போது போ ராட்டமானது ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் வந்தடைந்த போது, அங்கு வைத்தே தமது பிள்ளைகளை ஒப்படைத்ததாக அப்பகுதியில் இருந்த காணி வேலியை அகற்றிய ஆ ர்ப்பாட்டக்காரர்கள் உட்சென்று ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொ ன்று சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் உ டல்!!

பெண்ணின் உ டல்

தமிழ்நாட்டில் ம னைவியை கொ லை செய்து ச டலத்தை மூ ட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய கணவரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல்.

கூலி வேலை செய்துவரும் இவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி கவுசல்யா மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கவுசல்யாவை கா ணவில்லை என்று பொள்ளாச்சி காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய பொலிசார் கவுசல்யாவை தீ விரமாக தே டிவந்தனர். விசாரணையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வே றுபாடுகள் இருந்ததாகவும் அடிக்கடி இருவருக்கும் இடையே ச ண்டை ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சக்திவேல் மீது ச ந்தேகம் அடைந்த பொலிசார் அவரை கைது செய்து வி சாரணை நடத்தினர். அப்போது கவுசல்யா மீது ஏற்பட்ட ச ந்தேகத்தால் கடந்த யூலை 26 ஆம் திகதி அவரை கொ லை செய்து சா க்கில் கட்டி கி ணற்றில் வீசியதாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து கவுசல்யாவின் உ டலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து மேலும் சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் அண்ணனுக்கு தம்பி செய்த து ரோகம் : இறுதியில் நடந்த வி பரீதம்!!

அண்ணனுக்கு தம்பி செய்த து ரோகம்

தனது சகோதரன் இரண்டரை கோடி ரூபாய் மோ சடி செய்ததால் மனைஉ ளைச்சலுக்கு உள்ளாகி நபரொருவா் வி ஷம் அ ருந்தி தற்கொ லைக்கு முயற்சித்துள்ளாா். யாழ்ப்பாணம் – சாவகச்சோி பகுதியை சோ்ந்த நபரே இவ்வாறு வி ஷம் அ ருந்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபா், 12 வருடங்களுக்கு முன்னா் இங்கிலாந்திற்கு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில், தனது சொந்த ஊரான சாவகச்சோி – அருக்கல்மடத்தில் வீடொன்றை நிா்மாணிக்க ஆசை கொண்டுள்ளாா். இது தொடா்பில் தனது இளைய சகோதரரிடம் கூறி வீட்டை நிா்மாணிக்கும் பணியை அவாிடம் ஒப்படைத்துள்ளாா்.

தனது சகோதரனுக்கும் வீடு சொந்தமாக இல்லாததால் அவருக்கும் வீடு ஒன்றை நிா்மாணித்துக்கொள்ளுமாறு மூத்த சகோதரர் இங்கிலாந்திலிருந்து அவ்வப்போது பணம் அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில் இளைய சகோதரா், நிா்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளின் புகைப்படங்களை மூத்த சகோதரருக்கு அனுப்பி வீட்டின் நிா்மாண பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். எனவே மூத்த சகோதரா் தனது மனைவி, பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளாா்.

இந்நிலையில் இளைய சகோதரா் த லைமறைவாகியுள்ளதோடு, பின்னா் அது தொடா்பில் சில நாட்கள் ஆராய்ந்த வேளை, எந்த ஒரு வீட்டையும் நிா்மாணிக்காது தமது இளைய சகோதரா் ப ணத்தை மோ சடி செய்துள்ளமை தொியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ம ன உ ளைச்சலால் அவா் வி ஷம் அ ருந்தி தற்கொ லைக்கு மு யற்சித்துள்ளாா்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை!!

இரு பிள்ளைகளின் தாயை கா ணவில்லை

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வவுனியா காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்பவரை கா ணவில்லை என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கணவரின் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்கு செல்லுவதாக தெரிவித்து கடந்த 27ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் அவரது நண்பியுடன் மோட்டார் சைக்கிலில் வவுனியா பேரூந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அன்றையதினம் மாலையாகியும் குறித்த பெண் யாழ்ப்பாணம் செல்லவில்லை அவரது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டது. அவரை தேடும் முயற்சியில் பெண்ணின் உறவினர்கள் மேற்கொண்டிருந்த போதிலும் அது பயணளிக்கவில்லை அதன் பின்னர் கணவர் 28ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பெண் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தாகவும் அவர் தொடர்பான தகவல்களை அறிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கிழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். தாயை தேடி அவரது இரு பிள்ளைகளும் தினசரி அழுவதாக பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு

077 – 8364865
076 – 6662847
077 – 9361797

வவுனியாவில் கா ணாமலாக்கப்பட்டோர் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போ ராட்டம்!!

மாபெரும் போ ராட்டம்

கா ணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மா பெரும் போ ராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கா ணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த போ ராட்டம் இன்று (30.08.2019) காலை ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர், ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பே ரணி ஓமந்தை இறம்பைக்குளம் வரை சென்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், அரசு நீதியை தர வேண்டும் ஓ.எம்.பி வேண்டாம், இராணு வத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே எனவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது கா ணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பொ லிஸாரிடம் ச ண்டித்த னம் செய்த பெண் பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்தும் வி ளக்கமறியலில்!!

பெண் பிரதேச சபை உறுப்பினர்

ஐக்கிய தேசியக் க ட்சியின் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் வி ளக்கமறியலில் வைக்குமாறு மாரவில மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான தெம்மியசிறி பெரேரா இன்று உ த்தரவிட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி லுனுவில சிறிகம்பள சினோர் சந்திப் பகுதியில் க டமையில் ஈ டுபட்டிருந்த வென்னப்புவை பொ லிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொ லிஸாரை தி ட்டி, கடமையை செய்யவிடாது த டுத்த சம்பவம் தொடர்பாக இவர்கள் இருவரும் கை து செய்யப்பட்டு வி ளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் க ட்சியின் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினரான சிறிகம்பள தும்மோதர பிரதேசத்தை சேர்ந்த வர்ணகுலசூரிய துலக்ஷி சமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது மூத்த சகோதரியான வர்ணகுலசூரிய சுபுனி துலாஞ்சலி பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினரின் தந்தையான வர்ணகுலசூரிய அசோக் பெர்னாண்டோ மற்றுமொரு சகோதரியான வர்ணகுலசூரிய நிமாஷா நவாஞ்சலி பெர்னாண்டோ ஆகியோர் தலா மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான உறு திப்பி ணையில் வி டுதலை செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவை பொலிஸார் வ ழக்கை நெ றிப்படுத்தி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவி பரிதாபமாக ப லி!!

நிசாலி பெரேரா

அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே உ யிரிழந்துள்ளதாக Monash பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

கறுப்பு நிறத்திலான வாகனம் ஒன்றே மாணவி மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கமாரவின் உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொது மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

குறித்த இரு மாகாணங்களிலும் போலி நாணயத்தாள்களின் புழக்கமானது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின் புழக்கமே அதிகமாக உள்ளதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் செயற்படுவார்களாக இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்பண நிகழ்வு!!

இணையத்தள அங்குரார்பணம்

தாமாக தகவல்களை வெளிப்படுத்துவதன் ஊடாக தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவோம் எனும் தொனிபொருளில் வவுனியா நகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக ரான்ஸ்பெரன்சி இன்ரநெசல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோக ஒபேசேகர கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக சட்டதரணி மங்களா சங்கர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம், நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, செயலாளர் இ.தயாபரன், ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த இணையத்தளம் ரான்பெரன்ஸ்சி இன்ரர் நெசனல் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் ஆரம்பிக்கபட்டுள்ளதுடன், இதன் மூலம் வடமாகாணத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களில் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கொண்ட முதலாவது மன்றமாக வவுனியா நகரசபை திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவை நடத்த போட்டிபோடும் நிறுவனங்கள்!!

பலாலி விமான நிலையம்

 

பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் உபாலி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பலாலி விமான நிலையம் வரும் ஒக்ரோபர் 15ம் திகதி திறக்கப்பட்ட பின்னர், ஐந்து உள்நாட்டு விமான நிறுவனங்கள், சேவையை ஆரம்பிக்க இணங்கியுள்ளன.

அத்துடன் இரண்டு இந்திய நிறுவனங்களும் விமான சேவைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விமான சேவைகள் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்தே மேற்கொள்ளப்படும். பலாலிக்கு பயணத்தை மேற்கொள்ளும், ஐந்து உள்நாட்டு விமான நிறுவனங்கள், மத்தல விமான நிலையம் மற்றும் வேறு சில பிராந்திய விமான நிலையங்களுக்கான சேவைகளையும் நடத்தவுள்ளன.

இந்த நிறுவனங்கள் 90க்கு குறைவான ஆசனங்களைக் கொண்ட விமானங்களை குத்தகைக்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தைப் பயன்படுத்தும் வசதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர், பலாலி- இரத்மலானை இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், பெரும்பாலான நிறுவனங்கள் அதிலிருந்து விலகிக் கொண்டன. விமானப்படையின் ஹெரலி ருவர்ஸ் நிறுவனம் மாத்திரம் நீண்டகாலமாக சேவையை நடத்தி வருகிறது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதுபற்றி ஆய்வு செய்து, விமானங்களில் தேவையான எண்ணிக்கையான ஆசனங்கள் நிரம்பவில்லை என்றால், விமான நிறுவனங்களுக்கு வணிக நிதி வழங்க முடிவு செய்துள்ளது. நிரம்பாத ஆசனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை பணம் செலுத்தும். இதனால் உள்நாட்டு விமான சேவைகள் இயங்குவது சாத்தியமாக இருக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

நல்லூரானை தரிசிக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

பரிதாப நிலை

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகைத்தந்து தேர் திருவிழாவை சிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், தேர்திருவிழாவை காணவந்த இருபது பேரின் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட உடமைகளும் இதன் போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஆலயத்தின் வெளிவீதியில் வைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆலயத்தின் வெளிவீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு கெமராக்கள் இருந்த நிலையில், நூற்றுக்கணக்கான பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நகையினை பறிகொடுத்த பலர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் ஒரு சிலர் முறைப்பாடு செய்யவில்லை என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட தமிழ் தம்பதியினர் : இறுதி நேர திக் திக் நிமிடங்கள்!!

தமிழ் தம்பதியினர்

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடுக டத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் தடை உத்தரவை பிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெல்பேர்னில் சுமார் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களும், அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த குடும்பம் பலரது எதிர்ப்பையும் மீறி விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் விமான நிலையம் ஊடாக இடம்பெற்ற இந்நாடு க டத்தலைத் தடுப்பதற்கு அகதிகள் செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த குடும்பத்தை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டுள்ளது.

நடேசலிங்கம் பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று அதிகாலை 2 (உள்ளூர்) மணியளவில் குறித்த விமானம் டார்வினை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றதாக, விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் இது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச்சென்றனர், அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள் அங்கு மிகவும் மனதை தொடும் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக குப்பை ராணி!!

கலாநிதி அஜந்தா பெரேரா

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் பயிற்சி பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானியான கலாநிதி அஜந்தா பெரேரா, இலங்கையில் முறையான கழிவு முகாமைத்துவத்துக்காக போராடி வருகிறார். குப்பை சேகரிப்பாளர்களுடனான அவரது பணிக்காக, அவர் “குப்பை ராணி” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார். கடைசியாக, 1999ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருந்தார்.

அதன் பின்னர் 2019 நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அஜந்தா போட்டியிடவுள்ளமை 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பெண் வேட்பாளர் களம் இறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் கவினின் தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை!!

கவினின் தாய்

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கவின் தாயார் பண மோ சடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே கே நகர் ஐ சேர்ந்த கவினின் தாயாரான ராஜலட்சுமியும் மற்றும் அவரது மருமகள் ராணியும், அருணகிரி மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் இணைந்து சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் மொத்தத்தில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால் இந்த சீட்டு கம்பெனியில் பணத்தை கட்டி வந்த யாருக்கும் பணத்தை திருப்பித் தராததால் இந்த கம்பெனியை நடத்தி வந்த கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி அருணகிரி சொர்ண ராஜன் ஆகியோர் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் பாதிக்கப்பட்ட 34 நபர்களுக்கு 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இ றந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோ சடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.

எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்து முரண்பாட்டின் விபரீதம்!!

வி பரீதம்

வத்தளை – பலகல பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் கூ ரிய ஆ யுதம் ஒன்றினால் தா க்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இருவருக்கு இடையில் இடம்பெற்றுள்ள கருத்து மு ரண்பாடு ஒன்றினை தொடர்ந்து கொ லை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளை பிரதேசத்தினை சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ள நிலையில் தா க்குதலை மேற்கொண்ட நபர் பிரதேசத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.